Saturday, November 10, 2007

அழகிய(??) தமிழ்(!!) மகன்???

குடும்பத்தோட கடைசியா நான் தியேட்டரில் பார்த்த படம் பிதாமகன். இந்த வருட தீபாவளிக்கு எப்படியும் எல்லாரும் ஒன்னா ஒரு படம் பார்த்திடணும்ன்னு எங்கண்ணா கங்கணம் கட்டிக்கிட்டு திரிஞ்சாரு. அவர் ஒரு தடவை முடிவு பண்ணிட்டார்ன்னா அவர் பேச்சை அவரே கேட்க மாட்டாராம்! என்ன கொடுமை சரவணா இது!!

சரி, என்ன படத்துக்கு போகலாம்ன்னு நாங்க லிஸ்ட் போட ஆரம்பிச்சிட்டோம். ஆப்ஷன்ல மூனு படம் செலக்ட் ஆச்சு: வேல், அழகிய தமிழ் மகன், கண்ணாமூச்சி ஏனடா. அப்பா உடனே, சூர்யா நல்லா நடிப்பான்ல. அந்த பொண்ணு அசின் கூட நல்லா கியூட்டா நடிக்குதுன்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள அம்மா ஒரு லுக்கு விட்டாங்க பாருங்க. அப்பா அடங்கி போயிட்டாரு. அப்போ டீவில அழகு குட்டி செல்லம்ன்னு பிருத்திவிராஜ் ஆடிக்கொண்டிருந்தார். அப்பா, இவரோட படம் கூட ஒன்னு ரிலீஸ் ஆகுதுப்பா. சத்தியராஜ், ராதிகா கூட நடிக்கிறாங்கன்னு நான் சொன்னதும் அவங்க அவங்களுக்கு தெரிஞ்ச 2 ஓல்ட் ஜெனெரேஷன் ஆர்ட்டிஸ்ட் நடிக்கிறதை கேள்விப்பட்டதும் ஓக்கேன்னு சொல்லிட்டாங்க. அண்ணன் வந்தாரு. அழகிய தமிழ் மகனுக்குதான் போகணும்ன்னு ஒரே அடம்.

சரி, சிங்கம் சிங்கிளா கொண்டாடுற கடைசி தீபாவளி. இன்னும் கொஞ்ச நாள்ல மஞ்ச தண்ணி தெளிச்சு பலி கெடா கொடுக்கப்போறதுக்கு முன்னே ஆசையை நிறைவேற்றி வைக்கலாம்ன்னு ஓகே சொல்லிட்டாங்க. விஜய் படமா? அதே மசாலா கதைதானே! என்ன பண்றதுன்னு நான் யோசிக்க, சரி, ஒரு பதிவெழுத ஐடியா கிடைச்சாச்சுன்னு நானே என்னை சமாதான படுத்திக்கிட்டேங்க. அப்பா செலவுல (டிக்கேட் பணம் அப்பாதேனே போடபோறார்) சூனியம்ன்னு தெரிஞ்சும் படவிமர்சனம் எழுதி பல மாதங்கள் ஆச்சேன்னு ஓகே சொல்லிட்டேன்.

படம் ஆரம்பிக்கும்போதே டாக்டர் விஜய்ன்னு வரும்போது பின்னால விசில் பறக்குது! நான் தலையில அடிச்சுக்கிட்டேன். (டாக்டர் பட்டம் இப்படி ச்சீப்பா போச்சே!) படம் ஆரம்பிச்சதும், ஒரு சண்டை, அதை தொடர்ந்து ஒரு பாட்டு, ஹீரோயின் இண்ட்ரோ, ஹீரோயினோட சின்ன சண்டை, அதுக்கப்புறம் காதல் டூயட், அப்புறம் ஹீரோவோட தனி ட்ராக் = கதை(??), சண்டை, சுபம்ன்னு எல்லா விஜய் படம் போலவே இதுவும் அமைஞ்சிருக்கு. நடுநடுவில் குத்துப்பாட்டு. வித்தியாசம் என்னன்னா மற்ற படத்துல ஹீரோ விஜய், வில்லை இன்னொருத்தர். ஆனால் இதில், ஹீரோ = விஜய், வில்லன் = விஜய்.

படம் ஆரம்பிக்கும்போதே காட்டாறு அக்காவை வம்பிழுக்கிற மாதிரி ஒரு பஞ்ச் டயலோக். அடுத்த காட்சியிலேயே நம்ம கவிதாயினி தமிழ் M.Aக்கு போட்டியா ஒரு கவிதை:

"நீயும் நானும் ஒன்னு
காந்தி பிறந்த மண்ணு
டீக்கடையில நின்னு
தின்னு பாரு பன்னு.. "

இதுக்கு க(கா)விதை போட்டியில முதல் பரிசு. என்ன கொடுமை கவிதாயினி இது!!

படம் முழுதும் பஞ்ச் டயலோக் பறக்குது. “எவ்வ்வ்வ்வளவோ செஞ்சிட்டோம்.. இது கூட செய்ய மாட்டோமா என்ன”, “அடடடடடே”, “நான் போக்கிரிடா”ன்னு மார் தட்டி பெருமை பட்டுகொள்கிறார் கதாநாயகன். படம் முழுதும் ஆங்காங்கே இவர் மாலையுடந்தான் திரிகிறார். மாலை மற்றும் புகழ் மேல் என்ன ஈர்ப்போ தெரியவில்லை..

ரஹ்மான் பாடல்களை அருமையாக கம்போஸ் பண்ணியிருக்கிறார். ஆனால், படத்தில் ஒவ்வொரு பாடல்களும் கஷ்டப்பட்டு திணிக்கப்பட்டதுபோல கதைக்கும் பாடல்களுக்கும் சம்பந்தமே இல்லாமல் வருகிறது. ஒட்டவே இல்லை! என்ன கொடுமை ரஹ்மான் இது!!

பல காட்சிகளில் விஜயின் நடிப்பு மற்ற நடிகர்களை ஞாபகப்படுத்துகிறது. இரட்டை வேடத்தில் விஜய் என்று அறிவிக்கும்போது, ஏதாவது வித்தியாசம் இருக்குமோ (இல்லைன்னு தெரிஞ்சும்) என்று எதிர்ப்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம்! அதே கிறுக்குத்தன நடிப்புதான் இதிலேயும்!

ஷ்ரேயா.. என்னத்த சொல்றது!!! திருவிளையாடல் ஆரம்பம் ஷ்ரேயா, சிவாஜி ஷ்ரேயா, அழகிய தமிழ் மகன் ஷ்ரேயா.. இதில் குறைந்த பட்சம் அஞ்சு வித்தியாசம் கூட கண்டுபிடிக்க முடியுமா என்னாலன்னு எனக்கே தெரியலை. அதே கதாப்பாத்திரம், அதே ஸ்டைல், அதே மாதிரி உடைகள்!

தேவையே இல்லாத ஒரு கதாப்பாத்திரம்.. நமிதாவுடையது.. எதுக்கு வந்தார்ன்னே தெரியவில்லை! அந்த அளவு அவருடைய கேரக்டர் படத்துல ஸ்ட்ரோங்கா(!!) இருக்கு! சின்ன வயசுல போடாமல் விட்ட உடையெல்லாம் இப்போ அணிந்தே தீருவேன்னு சபதம் எடுத்துட்டார் போல.. அவர் ஆசையெல்லாம் நிறைவேற்றிகொண்டார்..

ஆங்.. நமிதா கேரக்டரை பத்தி சொல்லும்போது இன்னொரு கேரக்டர் ஞாபகம் வருது. ஷாகிலா! எதுக்கு இவர் வரணும்? அவசியம் என்ன? கடைசி வரைக்கும் எனக்கு விடை கிடைக்கலைங்க. உங்கள் யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்கப்பா..

கதாப்பாத்திரங்கள்தான் சொதப்பிடுச்சு. கதையாவது.... (சாரி.. டாக்டர் விஜய் படத்துல கதையெல்லாம் எதிர்ப்பார்க்கலாமா? ) ரசிக்கும்படியாக இருக்குமான்னு பார்த்தாலும் நீங்க ஏமாந்துதான் போவீர்கள் என்று இப்போதே எச்சரிக்கை கொடுத்துவிடுகிறேன். வீட்டுல ஓட்டையடைக்கிறதுக்கு சுண்ணாம்பு உபயோகிப்பாங்க. அந்த மாதிரி 2 டின் உபயோகிச்சாலும் எல்லா ஓட்டையும் அடைக்க முடியாதுங்க.

2 விஜய்க்கும் வித்தியசம் கூட தெரியவில்லை விஜயின் நெருங்கிய நண்பர்களுக்கு. கருமம் இவங்களுக்குதான் தெரியவில்லை.. காதலி ஷ்ரேயாவுக்குமா தெரியவில்லை? சரி, ஓட்டப்பந்தயம் வச்சி யார் ரியல்.. யாரு போலின்னு கண்டுபிடிக்கிறேன்னு ஒரு அறிவுப்பூர்மா முடிவெடுத்தீங்க. அவங்க ஓடும்போதுக்கூடவா உங்களுக்கு வித்தியாசம் தெரியவில்லை?

க்ளைமேக்ஸ் முன்னே நடக்கும் ச்சேஸிங் காட்சியில் ஒன்றைக்கூட நம்புற கரமா இல்லை. மோட்டர்லேயே 360 டிக்ரீ சுற்றுவதும் பாய்ந்து லாரியில் ஏறுவதும்.. என்ன கொடுமை சார் இது!

இப்படி பட பார்க்கும்போது நானே நிறைய கேள்விகளை அடுக்கி வச்சேன். வந்து எழுதுறதுக்குள்ள எல்லா பாய்ண்டைஉம் மறந்துட்டேன். வேணும்ன்னா திரும்ப பார்த்துட்டு அந்த விட்டுப்போனா ஓட்டைகளை எழுதுவோம்.
ஓட்டையிலேயே பெரிய ஓட்டை க்ளைமேக்ஸ் சீன். அது என்னன்னு நீங்களே பர்த்து தெரிஞ்சிக்கோங்க. யாம் பெற்ற துன்பம் இவ்வகையும் பெருக. :-P

படத்தில் எல்லாமே சொதப்பலாக இருந்தாலும் 2 ப்ளஸ் இருக்கு. ஒன்னு ரஹ்மான். இரண்டாவது எடிட்டிங் ஆண்டனி. அவருடைய எடிட்டிங் சூப்பரா வந்திருக்கு. கேளாயோ பாடலில் வரும் க்ராஃபிக்ஸ் அருமையா வந்திருக்கு.

அழகிய தமிழ் மகன் = அழகிய(??) தமிழ்(!!) மகன்???


பி.கு: இது சங்கம் போட்டிக்கு அல்ல. ;-)

63 Comments:

said...

நான் தான் பஸ்ட்டு.. ஹிஹி.. இருங்க படிச்சிட்டு வறேன்..

( என்கிட்ட சொல்லிட்டு போஸ்ட் பண்ணதுக்கு ரொம்ப தேங்க்ஸ் ஆண்ட்டி.. :P )

விஜய் said...

என்னங்க்கா..சொல்லியிருந்தா பாஸ் தந்திருப்போமே...கவுத்துட்டீங்களே...

நமிதா said...

என்னது என் டிரெஸை குறை சொல்லுறீங்க..பெரிய கதை..கதையளவு உடைன்னு சொன்னங்க...நான் தான் ஏமாந்துட்டேன்..

ஷ்ரெயா said...

லிப்ஸ்டிக் கலர் மாத்தியிருக்கேனே..

அஜித் said...

இப்படி அடிக்கடி படம் குடுங்க விஜய்..அப்பத் தான்..ஃபிளாப் குடுக்கும் போது எனக்கும் ஆறுதலா இருக்கும்..

ரஜினி said...

அருமையான படம்..ஆஸ்காருக்கு போக வேண்டிய படம்

சத்யராஜ் said...

இந்த மாதிரி படம் எடுத்த சீக்கிரம் திரைஅரங்கை விட்டு வெளியே வரும்..என்ன பண்ணுறதுன்னு யோசிச்சி வையூங்க..விஜய் தம்பி

ஆண்டனி said...

பரவாயில்லையே..தூங்கமா..என் வேலைய கவணிச்சு பாராட்டிங்களே..

said...

//வந்து எழுதுறதுக்குள்ள எல்லா பாய்ண்டைஉம் மறந்துட்டேன். வேணும்ன்னா திரும்ப பார்த்துட்டு அந்த விட்டுப்போனா ஓட்டைகளை எழுதுவோம்.
ஓட்டையிலேயே பெரிய ஓட்டை க்ளைமேக்ஸ் சீன். //
கவல படாதிங்க அம்மணி.. அம்புட்டு ஓட்டையும் நம்ம கவிதாயினி MA(நன்றி : மை பிரண்ட் அத்தை )மாதிரி அறிவு ஜீவிங்க( ப்ளீஸ் நம்புங்க :P ) வந்து பிரிச்சி மேஞ்சிடுவாங்க.. யூ டேக் ரெஸ்ட்டு.. ATM பாத்து ரொம்ப டயர்டா இருப்பிங்க :)

Anonymous said...

சன் டிவியில் தீபாவளி அன்னைக்கு அழகிய தமிழ் மகன் விஜய் வித்தியாசமாக நடிச்சு இருக்கார்ன்னு ஒரே பில்ட் ஆப்.சன் டிவியில என்ன சொன்னாலும் நம்ப கூடாதுன்னு எனக்கும் தெரியும்.அதுனால் நான் அந்த படம் பார்க்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்.

சந்திரசேகரன் said...

அம்மா, நீ,மலேசியாவிலே இருக்கிறதாலே, தப்பிச்சிடலாமின்னு நினைக்க வேண்டாம். டாக்டர்.விஜய் அவர்களின் ரசிகர்கள் அங்கு நிறைய பேர் இருக்கிறார்கள்.அவர்கள் விஜய் மேல் உள்ள பாசத்தினால், ஏதாவது செய்து விடுவார்கள்..அதாலால், இந்த பதிவை தூக்க வேண்டும்..

உன் நலனுக்காவே சொல்கிறேன்.

கிள்ளான் விஜய் ரசிகர் மன்ற தலைவர் said...

எங்க மேல் உள்ள பிரியத்தினாலே, தலைவர் கலைப்படங்களாகவே தந்து வருகிறார். அவர் மீசை, தாடி கூட மாத்தாமா, கஷ்ட்டப்பட்டு நடிக்கிறார்.
ஒரே மாதிரி கெட்ட்ப் மெயிண்டெயின் பண்ணுறது சுலபமா என்ன.

கி.வி.ர.ம.து.தலைவர் said...

அண்ணா...அண்ணான்னு வசனம் பேசுறது எம்புட்டு கஷ்டம்..கோயம்புத்துகாரவக மாதிரியே எம்புட்டு அழகா பேசுறார்..

விஜய் said...

ரசிகர்களே, உங்களுக்காக நான் பண்ணியிருக்கிற தியாங்களை நிங்க புரிஞ்சிக்கிட்டீங்களே, அதுவே போதும்..

பொது மக்கள் said...

அப்ப, நாங்க எல்லாம் படம் பாக்க வேண்டாம்மா..

விஜய் said...

நான் முதல்மைச்சர் ஆகுற வரைக்குமாவது பாருங்கண்ணா..

உங்களுக்காகத் தானே, காமிராவப் பாத்து வசனம் எல்லாம் பேசுறேன்..

நமிதா said...

எனக்கு இந்தப் படத்திலே ஸ்டிராங்கான ரோல்..

said...

உங்க உருவத்திற்கு எந்தப் பாத்திரம் ஏற்றாலும் ஸ்டிராங்கான ரோலாத் தான் இருக்கும்..

said...

என் செல்லம் நமியயைப் பற்றி சரியாக விமர்சனம் எழுதியுள்ள மை ஃபிரண்டு..நான் இனிமே எழுத மாட்டேன்..போட்டோ எடுக்க மாட்டேன்..மாட்டேன்னு சொல்ல மாட்டேன்..பதிவு ஸ்டைலை மாத்த மாட்டேன்..எல்லரையும் குழப்ப மாட்டேன்..

Dr. விஜய். said...

என் படத்தயும் போயிப் பாத்தீங்களா....
ஐய்யோ பாவம்....

said...

சூப்பரு!!
ரொம்ப நல்ல விமர்சனம்!!
நல்ல நகைச்சுவையாகவும்,சுவையாகவும் எழுதியிருக்கீங்க!

வாழ்த்துக்கள்!! :-)

said...

//
நமிதா said...
என்னது என் டிரெஸை குறை சொல்லுறீங்க..பெரிய கதை..கதையளவு உடைன்னு சொன்னங்க...நான் தான் ஏமாந்துட்டேன்..
//
ஷ்ரெயா said...
லிப்ஸ்டிக் கலர் மாத்தியிருக்கேனே..
//
அஜித் said...
இப்படி அடிக்கடி படம் குடுங்க விஜய்..அப்பத் தான்..ஃபிளாப் குடுக்கும் போது எனக்கும் ஆறுதலா இருக்கும்..
//
ரஜினி said...
அருமையான படம்..ஆஸ்காருக்கு போக வேண்டிய படம்
//
சத்யராஜ் said...
இந்த மாதிரி படம் எடுத்த சீக்கிரம் திரைஅரங்கை விட்டு வெளியே வரும்..என்ன பண்ணுறதுன்னு யோசிச்சி வையூங்க..விஜய் தம்பி
//
ஆண்டனி said...
பரவாயில்லையே..தூங்கமா..என் வேலைய கவணிச்சு பாராட்டிங்களே..
//
சந்திரசேகரன் said...
அம்மா, நீ,மலேசியாவிலே இருக்கிறதாலே, தப்பிச்சிடலாமின்னு நினைக்க வேண்டாம். டாக்டர்.விஜய் அவர்களின் ரசிகர்கள் அங்கு நிறைய பேர் இருக்கிறார்கள்.அவர்கள் விஜய் மேல் உள்ள பாசத்தினால், ஏதாவது செய்து விடுவார்கள்..அதாலால், இந்த பதிவை தூக்க வேண்டும்..

உன் நலனுக்காவே சொல்கிறேன்.
//
கிள்ளான் விஜய் ரசிகர் மன்ற தலைவர் said...
எங்க மேல் உள்ள பிரியத்தினாலே, தலைவர் கலைப்படங்களாகவே தந்து வருகிறார். அவர் மீசை, தாடி கூட மாத்தாமா, கஷ்ட்டப்பட்டு நடிக்கிறார்.
ஒரே மாதிரி கெட்ட்ப் மெயிண்டெயின் பண்ணுறது சுலபமா என்ன.
//
கி.வி.ர.ம.து.தலைவர் said...
அண்ணா...அண்ணான்னு வசனம் பேசுறது எம்புட்டு கஷ்டம்..கோயம்புத்துகாரவக மாதிரியே எம்புட்டு அழகா பேசுறார்..
//
விஜய் said...
ரசிகர்களே, உங்களுக்காக நான் பண்ணியிருக்கிற தியாங்களை நிங்க புரிஞ்சிக்கிட்டீங்களே, அதுவே போதும்..
//
பொது மக்கள் said...
அப்ப, நாங்க எல்லாம் படம் பாக்க வேண்டாம்மா..
//
விஜய் said...
நான் முதல்மைச்சர் ஆகுற வரைக்குமாவது பாருங்கண்ணா..

உங்களுக்காகத் தானே, காமிராவப் பாத்து வசனம் எல்லாம் பேசுறேன்..
//
நமிதா said...
எனக்கு இந்தப் படத்திலே ஸ்டிராங்கான ரோல்..
//
சூப்பர்
கலக்கல் கமெண்ட்ஸ்

said...

நான் இப்பத்தான் கற்றது தமிழ் பாத்துருக்கேன்.. அதனால இன்னும் 10 நாள் கழிச்சுத் தான் இந்தப் படம் பார்ப்பேன்

wxyz said...

///////////////////
சூப்பர்
கலக்கல் கமெண்ட்ஸ்
///////////////////
எல்லாக் கலக்கல் கமெண்ட்ஸையும் விட இது சூப்பர் கமெண்ட்

said...

ஹி ஹி விஜய் படமெல்லாம் நான் சாய்ஸ்ல விட்டுருவேன். அதே மசாலாவத் திரும்பத் திரும்ப அரைக்கிறாரு. கொஞ்சம் கதைய மாத்துனாக்கூட ஒட்ட மாட்டேங்குது. நோ ரிஸ்க்.

எல்லாக் கமெண்ட்டும் போட்டவன் said...

//
சூப்பர்
கலக்கல் கமெண்ட்ஸ்
//
பாராட்டுக்கு நன்றி.
எல்லாக் கமெண்ட்டும் நான் தான் போட்டேன்.

said...

//
எல்லாக் கமெண்ட்டும் போட்டவன் said...
//
சூப்பர்
கலக்கல் கமெண்ட்ஸ்
//
பாராட்டுக்கு நன்றி.
எல்லாக் கமெண்ட்டும் நான் தான் போட்டேன்.
//
தெரியும்
நீ யார்னும் தெரியும்
:-)))))))))

நான் அவர் இல்லை said...

//
தெரியும்
நீ யார்னும் தெரியும்
:-)))))))))
//
நான் அவர் இல்லை.....
:-))))))))))))))))))))))

ஸ்ரீபிரியா said...

Dr.விஜய் இவ்வளவு அருமையாப் படத்துல நடிச்சுருக்காரே....
இது தமிழ் சினிமாவின் 75 வருட சாதனை இல்லையா?

குஸ்பு said...

ரஜினிக்கு ஜோடியா நடிச்ச ஷ்ரேயா இந்தப் படத்துல அவரோட மகன் வயசுல இருக்குற டாக்டர்.விஜய்யுக்கும் ஜோடியா நடிச்சுருக்காரே....
இதத்தான் 75 வருட சாதனைன்னு நாங்க சொல்லுறோம்.

said...

ஆமா அக்கா வீட்ல இவ்வளவு நேரம் என்ன நடந்தது? தமிழ் திரையுலகமே இங்க இருக்கே?

said...

ஆகா தங்காச்சி படம் பாத்துட்டு வரும்போது கூடவே திரையுலகப்பிரமுகர்கள் எல்லாரையும் பட்டிமண்டபம் தீபாவளிக்கு நடத்தலாம் வாங்க என் பதிவுக்குன்னு கூட்டிட்டுவந்தியா.. கலக்குதே பின்னூட்டமெல்லாம்...:)

said...

~பொடியன்~ said...
நான் தான் பஸ்ட்டு.. ஹிஹி.. இருங்க படிச்சிட்டு வறேன்..

( என்கிட்ட சொல்லிட்டு போஸ்ட் பண்ணதுக்கு ரொம்ப தேங்க்ஸ் ஆண்ட்டி.. :P )

அக்கா ஏன் இப்படி ????????

said...

வித்யா கலைவாணி said...
ஆமா அக்கா வீட்ல இவ்வளவு நேரம் என்ன நடந்தது? தமிழ் திரையுலகமே இங்க இருக்கே?

விஜயகாந்த் மட்டும் மிஸ்சிங்....அடடே வந்தாச்சி.....

said...

இது பதிவுக்கு :))

எப்படியும் இந்த படத்தை எல்லாம் பார்க்க தான் போறேன் அதனால அதுக்கு :((

அப்ரா said...

//கோபிநாத் said...இது பதிவுக்கு :)) எப்படியும் இந்த படத்தை எல்லாம் பார்க்க தான் போறேன் அதனால அதுக்கு :((//
மாமா, எங்க பெரியம்மா அவ்வளவு சொல்லியும் கேட்கமான்னீங்கன்னா என்ன செய்றது.

அப்ரா said...

//Baby Pavan said...விஜயகாந்த் மட்டும் மிஸ்சிங்....அடடே வந்தாச்சி.....// அண்ணாச்சி, கரெக்டா சொன்னீங்க
(இராத்திரி சாப்பாடு கிடைக்குமானு தெரியலையே)

மை எனிமி சங்கம் said...

//Dr. விஜய். said...என் படத்தயும் போயிப் பாத்தீங்களா....ஐய்யோ பாவம்....//
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு

said...

இந்த படத்தையாவது தீயேட்டரிலே போயி பார்க்கலாமின்னு நினைச்சேன்..... :)

Never... :)

said...

// Dr. விஜய். said...

என் படத்தயும் போயிப் பாத்தீங்களா....
ஐய்யோ பாவம்....//

ரிப்பீட்டேய்.... :)

said...

தானே பட்டம் வாங்கிய தானைய தலைவர் டாக்டர் விஜய்யை தாக்கும் இந்தப் பதிவினை மிகவும் கடுமையாக எச்சரிக்கையுடன் கண்டிக்கிறேன்...

said...

நச்சுனு நமீதா வை பத்தி சொன்னதுக்காமே படம் பாக்கலாம் போல இருக்கே.. ;)

ரிப்பீட்டோய்ய்ய்ய்ய் said...

/////
மை எனிமி சங்கம் said...
//Dr. விஜய். said...என் படத்தயும் போயிப் பாத்தீங்களா....ஐய்யோ பாவம்....//
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு
/////
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு

said...

//படத்தில் எல்லாமே சொதப்பலாக இருந்தாலும் 2 ப்ளஸ் இருக்கு. ஒன்னு ரஹ்மான். இரண்டாவது எடிட்டிங் ஆண்டனி. //

படம் ஓடுச்சுனா அதுக்கு வேற இரண்டு காரணம்

1. விஜய்
2. ஷ்ரேயா

;)

ஏங்க.. நம்ம ஷ்ரேயா துணி வாங்க காசில்லாம கஷ்டப்பட்டு நடிச்சு இருக்காங்க..என்ன இப்படி சொல்லிட்டீங்க?

said...

//விஜயகாந்த் மட்டும் மிஸ்சிங்....அடடே வந்தாச்சி.....
//

ஹஹா! லேடி விஜயகாந்!னு சொல்லுங்க. இல்லாட்டி மு-லெட்ச்சுமி அக்கா சுவத்துல ஏறி ஒரு உதை வுட்ற போறாங்க. :)))

ஆனது ஆயி போச்சு! ஒரு நமீதா படம் போட்டு இருக்க கூடாதா? பக்த கோடிகள் கன்னத்துல போட்டுகிட்டு இருப்பாங்க இல்ல. :)))

ஸ்ரீபிரியா&குஸ்பு said...

//
முத்துலெட்சுமி said...

ஆகா தங்காச்சி படம் பாத்துட்டு வரும்போது கூடவே திரையுலகப்பிரமுகர்கள் எல்லாரையும் பட்டிமண்டபம் தீபாவளிக்கு நடத்தலாம் வாங்க என் பதிவுக்குன்னு கூட்டிட்டுவந்தியா.. கலக்குதே பின்னூட்டமெல்லாம்...:)
//
முத்துலட்சுமி அக்கா, பாராட்டுக்கு நன்றி!!
எங்கள யாரும் கூப்பிடல... நாங்களாத்தான் வந்தோம்!!

சரத்குமார் said...

//
முத்துலெட்சுமி said...

ஆகா தங்காச்சி படம் பாத்துட்டு வரும்போது கூடவே திரையுலகப்பிரமுகர்கள் எல்லாரையும் பட்டிமண்டபம் தீபாவளிக்கு நடத்தலாம் வாங்க என் பதிவுக்குன்னு கூட்டிட்டுவந்தியா.. கலக்குதே பின்னூட்டமெல்லாம்...:)
//
நான் தான் அவங்கள இங்க அனுப்பினேன் நடிகர் சங்கம் சார்பா கமெண்ட் போடச்சொல்லி..
-சரத் குமார், நடிகர் சங்கத் தலைவர்.

சாலமன் பாப்பையா said...

குஸ்புவும், ஸ்ரீபிரியாவும் அழகாச் சொன்னாங்கல்லயா... அழகிய தமிழ்மகனும், டாக்டர்.விஜயும் தமிழ்த் திரையுலகின் சாதனைன்னு.. அதனால 75வருட தமிழ்த் திரையுலகம் சாதனையே! சாதனையே! என்று தீர்ப்பளிக்கிறேன்!

அத்துடன் தம்பி டாக்டர்.விஜய் அவர்கள் எனக்கு அடுத்த படத்தில் யாருக்காவது அப்பா வேடம் வாங்கித் தருமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்!!
நன்றி!! நன்றி!!!!!

M.G.R.நிகர்நிலைப் பல்கலைக்கழகம் said...

அழகிய தமிழ் மகன் திரைப்படத்தில் சிறந்த கலைச்சேவை புரிந்ததற்காக ஷ்ரேயா, நமீதா ஆகியோருக்கு எங்கள் பல்கலைக்கழகம் சார்பில் அடுத்த வருடம் டாக்டர் பட்டம் வழங்கப்படும்..

said...

ATM mothathil attu alias azhugiya tamil maganaga irundhirukku :P

கம்பவுண்டர் - டாக்டர் விஜய் வெறியன் said...

ஏன் தல அஜீத் மட்டும் தான் ஆஞ்சநேயா. ஜி, ஆழ்வார், பரமசிவன் அப்படின்னு பட்டையக் கிளப்புவாரா.. எங்க தளபதியும் களத்துல்ல குதிச்சுட்டார்ல்ல... எப்படி?

said...

itha kataile shakilavum irukangalanu vijay kude oru kaddathule asanthu poraru kavanichingala?? தலைப்பில் ஒரு சிறு திருத்தம் தேவை. அழுகிய தமிழ் மகன் என்று வைத்திருந்தால் சரியா இருக்கும். (காவிதை பேட்டியை போல்). :) கடைசி ஐந்து நிமிடந்தில் வில்லன் திருந்தும் கதையை எப்போதுதான் விட்டு தொலைக்க போகிறார்களோ தெரியவில்லை. என்ன கருமம் சரவணன் இது.!!!!

said...

Hey, inga NewJerseyla ore tamil padam dhaan diwali kku theatrela vandhirukku, indha movie dhaan.
pogalamnu nenachom, kaapathiteenga.

I read Namitha has done a character role instead of her usual glamour role. neenga ippadi ezhudi irukeenga ?

Hope ur diwali was great !
engalodadhu superaa pochu
Kittu mami

said...

நல்ல விமர்சனம் மை பிரண்ட்.. ஆக மொத்தம் தீபாவளியை நல்லாவே கொண்டாடி இருக்கீங்க போல.. நானும் பார்க்கின்ற ஆவலில் தான் இருந்தேன்..புது டைரக்டர், தரணி அசிஸ்டன்ட் என்பதால்.. ஆனால் அதற்குள்ளாகவே படத்தின் முடிவு தெரிந்து விட்டது.. அம்மாடியோவ்

said...

Neenga romba naala kodumaya anubavikkalaya? Vijay padam parkaratha taan sonnet. ATM la punch Dialague Adigammnnu potturkeengale!! Romba kammmi matha Vijay padatha compare pannrappo. ATM is strictly for Vijay fans..

said...

ஆஹா.. இப்பதேன் "வலைச்சரம்" பாக்கறேன் ஃமைபிரண்டு.. ரொம்ப நன்றிகள்ப்பா.. ஆனாக்கா ஒரு உண்மைய சொல்லட்டுமா..
பதிவுக்கு வர்ரத்துக்கு முன்னாடி உங்க பதிவெல்லாம் அடிக்கடி படிச்சதுனாலத்தேன் ..இப்ப கொஞ்சம் எளிமையா இருக்கு.. நெசமாத்தேன்.. அதுக்கு நாந்தேன் தாங்க்ஸ் சொல்லனுமுங்க..

விஜய் said...

என் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க எனது அடுத்தப் படத்திலே, நிறைய பஞ்சு டயலாக் வைக்கிறேன்...நீங்க எல்லாம்..காதுல பஞ்சு வச்சிக்கோங்க..

தரணி said...

யப்பா ரொம்ப நாள் கழிச்சு படம் எடுக்கிறேன்..அதை கெடுத்துவிட்டுறாதப்பா..இத்தனை படம் ஊத்தி மூடுன பிறகும், நீ தனிபட்ட முறையிலே குதிச்சா படம் ஓடாது, கதை , இயக்கம், நல்லா இருந்தா தான் ஓடுமின்னு புரியலையா....என்ன கொடுமை சந்திரசேகர் சார் இது...

சந்திரசேகர் said...

யோவ்..நீ தான், உலகம் புரியாம இருக்கே...என் மகன் மட்டும் செத்துப் போற மாதிரி நடிச்சா, ரசிகர்கள் தீக்குளிப்பாங்கய்யா...தெரிஞ்சிக்கோ...

மக்கள் said...

நாங்க விஜய் படம்..ஒவ்வொரு தடவையும் பாக்கும் போது தீக்குளிக்கிற மாதிரி தான் உணருறோம்...

விஜய் said...

நீங்க எல்லாரும் அதியசயப்படுகிற மாதிரி அடுத்தப் படத்திலே வித்தியாசமான கதை இருக்கும்..போதுமா...

கவுண்ட மணி said...

டேய்..! இதையே சொல்லி எத்தனை நாள் தான்டா மக்களை ஏமாத்துவீங்க..வித்தியாசமான கதையின்னா, என்னடா...மூனு நாள் தாடிக்கு பதிலா, நாலு நாள் தாடி வச்சிக்கிட்டு வருவான் கதாநாயகன்..இது தானடா நீ சொல்லுற வித்தியாசம்...

விஜய் said...

இதில்லீங்களாண்ணா வித்தியாசம்...எங்க அப்பாரு அப்படித் தானுங்கன்னா சொல்லித் தந்தாரு....சரி போங்க் உங்களுக்காக அஞ்சு நாள் தாடி விடுறேன்..இதுக்கு மேலே கேட்கக்கூடாது...