Saturday, December 01, 2007

மலேசியாவில் போராட்டமும் அதன் காரணங்களும்

உரிமைப்போராட்டம், மலேசியாவில் கலவரம் என்று எங்குப்பார்த்தாலும் (தமிழ்மணத்தில் கூட) அதிருகிறது மலேசியா. இதைபப்ற்றி பலரும் பல வகையாக அலசி ஆராய்ந்துவிட்டார்கள். தினசரி நாளிதழ்களிலும், தொலைதொடர்பு சாதனங்களிலும் கிழித்து நாராய் தொங்க விட்டுட்டார்கள்.. ஒவ்வொன்றையும் படிக்கும்போதும் நான் நேரில் கண்ட காட்சிகளில் சிலவற்றவை மாறுப்பட்ட போதிலும் இதற்கென்று தனியாக ஒரு பதிவெழுதவேண்டும் என்று நினைக்கவில்லை.

இன்று TBCD அண்ணாவின் பதிவையும் கோவி அவர்களின் பதிவையும் படித்த போது, அண்டை நாட்டுக்காரர் அவர் கண்ணோட்டத்தில் எழுதிவிட்டார்.. இங்கே வந்து சில மாதங்கள் குடியேறிய TBCDயும் அவர் கண்ணோட்டத்தில் என்னென்ன தெரிந்ததோ அதைப்பற்றியும் எழுதிவிட்டார். இனி, ஒரு மலேசியராக என் கண்ணோட்டத்தில் சில விஷயங்களை பற்றி இங்கே சொல்ல நினைக்கிறேன். என்னுடைய இந்த பதிவு யாரையும் சாராமல் நடுநிலைவாதியாக எழுதுகிறேன்.

1874-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் ஒவ்வொரு நிலமாய் அவர்களின் ஆட்சியின் உட்படுத்திக்கொண்ட பொழுது அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவைக்காக இந்தியர்களும் சீனர்களும் ஆங்கிலேயர்களால் அழைத்துவரப்பட்டனர் என்று அனைவரும் அறிந்ததே. அப்பொழுதே மலாய், சீன, இந்தியர் ஒன்றுப்பட்டால் போராட்டம் ஆரம்பித்து அவர்களை நாட்டை விட்டு துரத்த இயலும் என்று முன்கூட்டியே உணர்ந்து மூன்று இனத்தவருக்குள்ளும் ஒற்றுமை ஏற்படாதவாறு பார்த்துக்கொண்டனர். எப்படி?

இந்தியர்களை தோட்டப்புறங்களிலும், சீனர்களை ஈயக்குள அருகினுலும், மலாய்காரர்களை கிராமப்புறங்களிலும் தங்கும்படி பார்த்துக்கொண்டனர். மற்ற இனத்தவரிடம் தொடர்பில்லாததால் அவர்கள் இருக்கும் இடமே உலகம் என்று கிணற்று தவளையாகவே இருந்ததும் உண்மைதான்!

இரண்டாம் உலகப்போருக்கு பிறகுதான் சுதந்திரத்தின் முக்கியத்துவமும் அதன் தாக்கமும் உண்ர்ந்தனர். டாத்துக் ஓன் ஜபார் மாலாயாவில் 1947-இல் பார்ட்டி கெசாத்துவான் மெலாயு என்ற கட்சியை ஆரம்பித்து மலாய் இனத்தவர்களை ஒன்று படுத்தினார். பின்னால் துங்கு அப்துல் ரஹ்மான், துன் அப்துல் ரசாக் மற்றும் து ஹுஸ்ஸேன் ஓன் போன்ற தலைவர்கள் சுதந்திர தீயை அதிகப்படுத்தி ஆகஸ்ட் 31 1957-இல் மலாயாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தனர்.

இங்கு அவர்களின் சுத்ந்திர வெற்றியின் மிக முக்கிய ஆயுதம் ஒற்றுமை. மூவினத்தவருடைய பிறந்த ஒற்றுமையே மிக குறுகிய காலத்துலேயே சுதந்திரம் பெற வழி வகுத்தது..

ஆனால் இப்போது?

யாரின் மூலமாக சுதந்திரம் கிட்டியதோ.. அவர்களின் மூலமாகவே சுதந்திரம் கொஞ்சம் கொஞ்சமாக அழியத்தொடங்கியது.

1970-ஆம் ஆண்டுகளில் மலேசியாவின் பொருளாதார நிலை மிகவும் வருத்தப்படும் நிலையில் இருந்தது. ஆய்வுகளில் மலேசிய பொருளாதாரத்தில் பூமிபுத்ரா அல்லாதவர்களின் ஆதிக்கம் தலைத்தோங்கி நிற்பது தெரிந்தது. மலாய்க்காரர்கள் இன்னமும் கிராமப்புறங்களில் சொந்த தொழில்களில் செய்து வறுமை கோட்டின் கீழேதான் இருந்தார்கள். பொருளாதாரத்தை வளர்க்க நினைத்த தலைவர்கள் முதலில் இந்த நிலையை மாற்ற வேண்டும் என நினைத்துதான் பல உரிமைகளை பூமிபுத்ராகாரர்களுக்கு வழங்க தொடங்கினர். ஆனால், அது மற்ற இனத்தவர்களை பாதிக்கும் என நினைத்திருக்க மாட்டார்கள்.. அல்லது நினைக்க மறுத்துவிட்டார்களா?

New Economic Policy (NEP) தான் இந்த திட்டங்கள் செயல்படுத்த ஆரம்பித்த பாலிஸி. இந்த திட்டங்கள் ஒவ்வொன்றாக அமலப்படுத்தப்பட்டபோது பொருளாதார வளர்ச்சியும் கூடவே வளர்ந்தது. மனிதர்களுக்கு எப்போது போதும் எனும் மனம் வந்திருக்கு? வளர்ச்சி அதிகமாக்க வேண்டும் எனத்தானே நினைப்பாங்க? அதேதான் அடுத்து நடந்தது.

நாலாவது பிரதமராக பதவியேற்ற துன் டாக்டர் மஹாதிர் முகமது 1981-இல் ஆட்சிக்கு வந்தார். அவர் திறமைசாலி. நாட்டை முன்னுக்கு கொண்டு வரணும். அனைத்துலக அளவில் மலேசியா பிரசித்து பெற வேண்டும். பல சாதனைகளை மலேசியா செய்ய வேண்டும் என பல திட்டங்களை வகுத்தார். ஆனால் அப்போதைய காலக்கட்டத்தில் அனைத்தையும் குறுகிய காலத்தில் செய்ய முடியாத சூழ்நிலை. அதனால் பல திட்டங்கள் தொலைநோக்கு சிந்தனையுடன் போட்டார். அதில் நலல் வெற்றியும் கண்டார்.

இவரால் மலேசியா பல படிகளை தாண்டி மேலே வந்தது என்று சொன்னால் மிகையாகாது. ஒரு தலைவன் தவறு செய்தாலும், அதையும் தாண்டி பல நன்மைகள் நாட்டு மக்களுக்காக செய்தால் கண்டிப்பாக அந்த தலைவனை மக்கள் போற்றுவார்கள். அதற்க்கு உதாரணம் இவரேதான். 20 வருடங்களுக்கும் மேலாகவே இந்த மண்ணில் பிரதமராக இருந்தவர் இவர்.

நாடும் உயர்ந்தது. நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரமும் உயர்ந்தது. சீனர்கள், மலாய்க்காரர்கள், இந்தியர்கள்.. எல்லாரும் ஒன்றாகத்தான் வாழ்ந்தார்கள். இருந்தும் மலாய்காரர்களின் உரிமைகள் அதிகம். அரசாங்கத்தின் சலுகைகள் அவர்களுக்கு அளவுக்கு மீறியே கிடைத்தது உண்மை. இந்த சலுகைகளை வெட்டவும் முடியாது மஹாதீரினால். அவர் அப்போது அந்த உரிமையின் மேல் கை வைத்திருந்தால், அவர் எப்போதோ பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டிருப்பார். எல்லா நாட்டிலும் இதுதானே நடக்கிறது!!!!

ஆனால், அப்படி இவர் தூக்கப்பட்டிருந்தால் மலேசியாவால் இந்தளவு சாதிக்க முடிந்திருக்காது. இப்போது நடைமுறையில் இருக்கும் பல திட்டங்களின் பிள்ளையார் சுழி போட்டதும் அவரேதான். இவருக்கு பிறகு வந்தவருக்கு மஹாதிர் அளவுக்கு திறமை இல்லை என்றுதான் சொல்லவேண்டும். பிரதமரால் இந்த பிரச்சனையை கவனிக்க முடியவில்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். நம் இனத்தவரின் தலைவர் இருக்கார் அல்லவா? அவர்தானே நம் நலன்களை பராமரிக்க வேண்டும்? நமக்கு ஏதாவது பிரச்சனையென்றால் ஓடி வந்திருக்க வேண்டும்?

மஹாதீராவது 21 வருடங்கள்தான் ஆட்சியில் இருந்தார். ஆனாலும் நம் இந்திய சமூதாயத்தின் தலைவர், மலேசிய இந்திய காங்கிரஸின் (ம.இ.கா) தலைவர் பொதுத்துறை அமைச்சராகவும் தலைவராகவும் 28 வருடக்காலமாக இருக்கிறாரே! அவர் என்ன செய்தார்? இப்படி மாற்றங்கள் நடக்கும்போதே ஏதாவது செய்திருக்க வேண்டும். சரி, அப்போதுதான் முடியவில்லை..

இந்திய மக்களின் நலனில்தான் எவ்வளவு அக்கறை எடுத்துக்கொண்டார்? சரி, நல்லது செய்ய வேனாம்யா.. கெட்டதாவது செய்யாமல் இருக்கலாமே?

அரசாங்கம் ஒன்னும் செய்யவில்லை என்று சொல்வது அபத்தம். பல உதவிகளை நம் சமூதாயத்துக்கு செய்தது. மற்ற தலைவர்களை விட மஹாதீர் காலத்தில் அவர் நிறையவே செய்திருக்கிறார். 10 மில்லியன் ரிங்கிட் டெலிகோம் பங்குகள், 9 லட்சம் ரிங்கிட் எம்.ஏ.எஸ் பங்குகள், 18 லட்சம் ரிங்கிட் எம்.ஐ.எஸ்.சி பங்குகள், 37 லட்சம் ரிங்கிட் டிவி 3 பங்குகள், 55 லட்சம் ரிங்கிட் டெலிகோம் பங்குகள், 1 கோடி 50 லட்சம் ரிங்கிட் எம்.ஆர்.சி.பி பங்குகள் என்று பல வெவ்வேறு காலக்கட்டத்தில் இந்தியர்களுக்காக அரசாங்கம் கொடுத்த பணங்கள் எங்கே போனது? அதை முறையாக கண்காணித்து செயல்பட்டிருந்தாலே பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணிருக்கலாம்.

சரி, அரசாங்கம் கொடுத்த பணமும் போய்விட்டது. மக்கள் சேமிப்பாக மஇகா ஹோல்டிங்ஸ் ஆரம்பித்த சேமிப்பு திட்டத்தில் பல்லாயிரக்கணக்கான இந்திய மக்கள் வாயக்கட்டி வயித்தக்கட்டி சம்பாரித்த பணத்தை போட்டாங்களே? முதலுக்கே மோசம் என்பதுபோல போட்ட பணமும் எங்கே என்று தெரியவில்லை.. கிடைக்க வேண்டிய வட்டி பணமும் கிடைக்க வில்லை. இப்படி அரசாங்கம் கொடுத்தப் பணமும் மக்களிடமிருந்து சுரண்டப்பட்ட பணமும் கட்சிகளும் தலைவர்களுமே முழுங்கியதில் பாமர மக்களுக்கு ஒன்றுமே மிஞ்சவில்லை..

கடந்த வாரம் நடந்த போராட்டத்துக்கும் இதுவே காரணம்.. இவர்கள் தங்களுக்கு உரிமை கிடைக்கவில்லை என்று போராடுகிறர்களே! இதுக்கு உண்மையில் யார் காரணம்? மக்களா? தலைவர்களா? இது ஒரு உரிமை போராட்டம்தான்! ஏன்? இந்திய மக்களின் பிரநிதியிடம் இதே மனுவை கொடுத்தால் என்ன நடவடிக்கை எடுத்திருப்பார்கள்? அவர்களுக்கு அவர்கள் வேலைகளை செய்யவே நேரம் இலலாத போது இந்த மனுவை கவனிக்கவா நேரம் இருக்க போகுது? கிடைக்கிற எல்லா நேரமும் தன் சொந்த அலுவல்களையும் மற்ற கட்சிகளுடன் சண்டைகளும் போடுவதே முழு நேர வேலையாக கொண்டவர்களுக்கு இதை கவனிக்க நேரம் இராது.

சரி, இப்போது இந்த போராட்டத்தை நடத்தியவர்களை பார்ப்போம். இவர்கள் HINDRAF (Hindhu Rights Action Force) என்று ஆரம்பித்திருக்கிறார்கள். HINDRAF எனும் பெயரில் இயங்குவதை விட INDRAF (Indian Rights Action Force) என பெயரில் இயங்கியிருந்துக்கலாம். இது ஒரு இனத்தவரின் போராட்டமாக இல்லாமல், ஒரு மதத்தினரின் போராட்டமாகவே ஆக்கபட்டுள்ளது.

இவர்களின் போராட்டம்தான் என்ன?

1- Discrimination of Indians
2- இந்தியர்களின் வறுமையை ஒழிப்பது
3- தோட்டப்புறத்து இந்தியர்களின் நலனைப் பேணுவது
4- கோவில்கள் இடிப்படுவதை தடுப்பது
5- தமிழ் பள்ளிகளின் நலன்களை பேணுவது

..... இன்றும் நிறைய..
அடுக்கிக்கொண்டே போகலாம். இது எல்லா, மலேசிய இந்தியர்களுக்கும் பொருந்தும். ஆனால், ஏன் இந்துக்களை மட்டும் ஒன்றுக்கூட்டி இந்த போராட்டத்தை நடத்த வேண்டும். கொஞ்ச நஞ்சம் இருக்கும் ஒற்றுமையையும் இது குலைக்க நேரிடும். எந்த ஒரு போராட்டத்துக்கும் முக்கியமான ஒன்று ஒற்றுமை. எந்த மதமும், இனமும் நம்மை விட தாழ்ந்தவர் இல்லை என்ற ஒரு எண்ணம் நமக்கு முதலில் வர வேண்டும். எல்லாரையும் சமமாக மதிக்க வேண்டிய பக்குவம் நமக்கு வர வேண்டும்.

பிறகு, என்ன பண்ண போகிறோம்? ஒரு செயலுக்கு பிறகு என்ன நடக்கும்? அதை எப்படி எதிர்க்கொள்வது? என்பதைப்பற்றியும் பல வழிகளையும் யூகித்து செயல்படுவதே சிறந்தது. அது மற்றவர்களை பாதிக்காத வாறும் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் கடமை.

பேரணியில் எட்டாயிரக்கணக்கான இந்துக்கள் கலந்துக்கொண்டனர். இதில் முதல் தவறு கண்டிப்பாக அரசாங்கத்தை சான்றது. மனு கொடுப்பது மட்டுமே இவர்களின் குறிக்கோள் என்பதும் அதற்கு சட்டப்பூர்வமாக அனுமதி கோறியபோது கொடுத்திருந்தால் எல்லாம் சுபமாக நடந்திருக்கும். பேரணியை அனுமதிக்காததுனால் இந்த குழுவிற்கு அரசாங்கத்தின் மேல் மேலும் கோபங்கள் அனுமதித்தது.

சட்டவிரோதமென்று தெரிந்தும் மக்கள் அந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டது நம் இந்துக்களின் தவறு. கஷ்டங்கள் யாருக்கு? அடியும், ஜெயிலும், ராசாயண தண்ணீரினால் மூச்சடைப்பும், வாந்தியும், இன்னும் பல கஷ்டங்களும் நமக்கே! சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆகியும் கோர்ட் கேஸ் என்று அழைபவர்கள் யார்?

அழகாய் இருந்த பூமியில் கலவரம் என்று அனைத்துலக மேடையில் நம் மலேசிய மானம்தான் கப்பலேறி போய்க்கொண்டிருக்கிறது. இதனால் புதிதாக ஆரம்பிக்கபோகிற பிரச்சனை என்ன தெரியுமா? வெளிநாட்டவர் நம் நாட்டில் முதலீடு செய்ய பயப்படுவர். தன் பங்குகளை திரும்ப பெற்றுக்கொள்வர். நமது பொருளாதாரம் பாதிக்கப்படும். Inflation ஏற்ப்படும். Inflation ஏற்ப்பட்டால் மக்களாகிய நம்மைத்தான் அது பாதிக்கும். 1997-இல் ஏற்ப்பட்ட பொருளாதார நெருக்கடி திரும்ப உதிக்கும்.

இப்படி வரப்போகும் பாதிப்புக்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இதற்கு ஒரே வழி. நம் இனத்தலைவர்கள் இறங்கி வந்து இந்த கோறிக்கைகளை கேட்டு தெளிவு படுத்த வேண்டும். அரசாங்கம் ஒரு ஹாட்லைன் (Hotline) ஆரம்பிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளது. ஆனால், இது நம் இந்திய தலைவர்களிடமே கொடுக்கப்படுவதை கேட்டதும் மனதில் ஒரு அச்சம். திரும்ப வேதாளம் முருங்கை மரம் ஏறி விடுமோ! எவ்வளவு நாள் இது சரியாக பேணப்படும்?

இந்த விவகாரம் பல நாடுகளுக்கு தெரிய வந்தபோது, உதவ முன் வந்தது தமிழ்நாடு. உண்மையில் அந்த உதவி தேவையில்லைதான். உள்நாட்டு பிரச்சனை சுபமாக தீர்த்துவைக்கப்படும் சாத்தியம் இருக்கின்றது. இதில் மற்ற நாடுகள் தலையிடுவது லேசாக புகைந்துக்கொண்டிருப்பதை தீக்காடாக மாற்றக்கூடும்.

தமிழ்நாட்டின் உதவும் மனப்பான்மை போற்றக்கூடியதே! ஆனால், அந்த உதவி தேவைபடாது என்று நல்ல படியாக சொல்லியிருக்கலாம் டத்தோ ஸ்ரீ நஸ்ரி அசீஸ். "Nothing to do with TamilNadu" என்று முகத்தில் அடித்த மாதிரி பேசியது அவரின் தவறு. இரு நாட்டினருக்கும் நல்ல புரிந்துணர்வை இவரின் வார்த்தைகள் புண்பட செய்திருக்கும்.

ஆனால் TBCD சொல்லியபடி:

"இந்த தடைகளையும் மீறி இந்த தலைமுறையினர் சிலர் வளர்ந்திருக்கிறார்கள் என்றால், அது அவர்களின், தனிப்பட்ட கடும் உழைப்பு, முனைப்பு. அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்."

என்ற வரிகள் முற்றிலும் உண்மை. சம்பாதிப்பதுக்கும், சுகமாக வாழ்வதுக்கும் மலேசியா ஒரு சிறந்த நாடு. இங்கே வாழ முடியவில்லை என்று சொன்னால் எந்த நாட்டிலும் வாழ முடியாது..

இதை உணர்ந்தால் எல்லார் வாழ்விலும் ஒளிமயமான எதிர்க்காலத்தை காணலாம்.

36 Comments:

said...

mmhmmm! nadunilaiay analyse panren enru overa majority pakkam saanjaapla theriyudhu! naatu nalanukkaaga oru 8% minority ena makkal eppadiyo poraanganu vidalaam thapillai! athu avanga ishtam. aana antha 8% minortiy makkalum athukku oknu solraapla...

said...

நன்றாக எழுதி இருக்கிறீர்கள். தமிழ் ஆளுங்க தான் தமிழர்களை ஏமாற்றி மிளகாய் அரைத்திருக்கிறார்கள் என்று புரிய வைத்து இருக்கிறீர்கள்.

said...

Irunthaalum unga responsibilitya paaraturen..

tamil vanan said...

hindraf enra talaipu miga sirantathu... slia indian muslim tamil pesurathu illai ,tamilargaludan servatillai , silar tan malaikarar pol ennugirargal,tannai oru indian enru solvatai vida muslim endru solvataye virumbugiraragal.tanaku oru katciyai todangi nammil irunthu pirinthu vittanar{KIMMA}.namathu porattangalil kalanthu kolvatillai.sikkiyargalum pirinThu vittanar....itil indian muslim ,sikh,indian cristian anaivarum tan mathatai marathu tamilukkaga poradiruntahl ...tamil purakanikkapadamal irunturikum ,moli valantal nam samutayamum valantirum...hindraf enra talaipu matra vendum endral anaithu indiargalum ondru inaya vendum ,....nan sonnathu silarai mattum

said...

இனம் சார்ந்த அமைப்புக்களே, தவறு என்று நான் கருதுகிறேன்.

கட்சிகள் மக்களின் பிரதிநிதிகள் தான்.
பணம் எங்கே போயிற்று என்று நீங்கள் கேட்பதை அரசாங்கம் கேட்டியிருக்க வேண்டும்.

அரசாங்கம் தான் இறுதியாக மக்களின் நிலைமைக்கு பொறுப்பேற்க வேண்டும்.

இப்போதும், குறை கேட்க கட்சியயை நியமிப்பது, கால அவகாசம் , தேர்தலுக்கு பின்னர் வருவது போல் இருப்பது ஐயத்தை கிளப்புகிறது..பொறுத்திருந்துப் பார்ப்போம்.

said...

நீங்க ரொம்ப உணர்ச்சிவசப் படற மாதிரி தெரியுது.மலேசிய அரசாங்கம் இந்திய வம்சாவளி மக்களுக்கு வழங்கிய நிதி ஆதார வாய்ப்புகளும் அவைகள் இந்திய வம்சாவளி தலைவர்களாலேயே தவறாகப் பயன்படுத்தப் பட்டிருப்பதும் அயல்நாட்டவர்களுக்கு புதிய தகவல். நன்றி மை ஃப்ரண்ட்.

அரசாங்கத்தை எதிர்த்து போராடுவதற்கு முன் அவர்கள் தலைவர்களை எதிர்த்தே முதலில் போராட வேண்டும் என்கிறிர்கள் போலும். மக்கள் புரிந்த்துக் கொள்ளும் போது இதுவும் நடக்கலாம். ஏன் தான் இந்தத் தலைவர்கள் இப்படி இருக்கிறார்களோ?. :(

//பேரணியில் எட்டாயிரக்கணக்கான இந்துக்கள் கலந்துக்கொண்டனர். இதில் முதல் தவறு கண்டிப்பாக அரசாங்கத்தை சான்றது. மனு கொடுப்பது மட்டுமே இவர்களின் குறிக்கோள் என்பதும் அதற்கு சட்டப்பூர்வமாக அனுமதி கோறியபோது கொடுத்திருந்தால் எல்லாம் சுபமாக நடந்திருக்கும்.//

நல்லாத்தான் சொல்லி இருக்கீங்க.. ஆனா அடுத்து என்ன சொல்லி இருக்கிங்க பாருங்க..அது தான் கொஞ்சம் இடிக்கிது.( இடிச்சா தள்ளி நிக்க வேண்டியது தானேனு சத்யராஜ் மாதிரி சொல்லப் படாது :P )

//சட்டவிரோதமென்று தெரிந்தும் மக்கள் அந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டது நம் இந்துக்களின் தவறு. கஷ்டங்கள் யாருக்கு? அடியும், ஜெயிலும், ராசாயண தண்ணீரினால் மூச்சடைப்பும், வாந்தியும், இன்னும் பல கஷ்டங்களும் நமக்கே! சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆகியும் கோர்ட் கேஸ் என்று அழைபவர்கள் யார்?//

அஹிம்சை வழியில் மணுகொடுப்பது சட்ட விரோதம் என்று அறிவிப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? நாளை ரோட்டில் நடப்பதை சட்ட விரோதம் என்று சொன்னாலோ வேறு ஏதேனும் அடிப்படை உரிமைகள் மறுக்கப் படும் போது அதை எதிர்த்து குரல் கொடுப்பதை சட்ட விரோதம் என்று சொன்னாலோ அரசாங்கத்திற்கு பயந்தும் , மீறினால் அடி உதை ரசாயன புகை கிடைக்கும் என்று பயந்தும் எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ள வேண்டுமா? காந்தி அஹிம்சையில் தான் போராடினார். வெள்ளையர்கள் அதற்கு சிவப்புக் கம்பளமா விரித்தார்கள்? எதிர்க்கத் தான் செய்தார்கள். அதை மீறிப் போராடியதால் தான் சுதந்திரம் கிடைத்தது.

//அழகாய் இருந்த பூமியில் கலவரம் என்று அனைத்துலக மேடையில் நம் மலேசிய மானம்தான் கப்பலேறி போய்க்கொண்டிருக்கிறது. இதனால் புதிதாக ஆரம்பிக்கபோகிற பிரச்சனை என்ன தெரியுமா? வெளிநாட்டவர் நம் நாட்டில் முதலீடு செய்ய பயப்படுவர். தன் பங்குகளை திரும்ப பெற்றுக்கொள்வர். நமது பொருளாதாரம் பாதிக்கப்படும். Inflation ஏற்ப்படும். Inflation ஏற்ப்பட்டால் மக்களாகிய நம்மைத்தான் அது பாதிக்கும். 1997-இல் ஏற்ப்பட்ட பொருளாதார நெருக்கடி திரும்ப உதிக்கும்.//

இது தேவையில்லாத பயம். மிகைபடுத்தி சொல்றிங்க. எந்த நாட்டில் அரசாங்கம் தடை செய்த பேரணியில் கலவரம் நடக்காமல் இருக்கு சொல்லுங்க? அதற்காக தினசரி அங்கெல்லாம் கலவரம் நடந்துகிட்டா இருக்கு? இல்லை அந்த நாடுகளில் எல்லாம் அன்னிய முதலீடுகள் வரமலா இருக்கு?

நீங்கள் இந்திய செய்திகளை படிப்பதில்லையோ? ;) இப்போதெல்லாம் வாரம் ஒரு கலவரமும் தடியடிகளும் நடந்துட்டு தான் இருக்கு. இன்னொரு பக்கம் அன்னிய முதலீடுகள் வந்துட்டே தான் இருக்கு...

//இந்த விவகாரம் பல நாடுகளுக்கு தெரிய வந்தபோது, உதவ முன் வந்தது தமிழ்நாடு. உண்மையில் அந்த உதவி தேவையில்லைதான். //

அஹிம்சை வழியில் மணு கொடுக்கச் சென்ற தமிழர்கள் மீதி கட்டவிழ்த்துவிடப் பட்ட அடக்கு முறையை கண்டிபப்து தேவை இல்லாததா? என்ன சொல்ல வறீங்க மேடம்?..

//உள்நாட்டு பிரச்சனை சுபமாக தீர்த்துவைக்கப்படும் சாத்தியம் இருக்கின்றது. இதில் மற்ற நாடுகள் தலையிடுவது லேசாக புகைந்துக்கொண்டிருப்பதை தீக்காடாக மாற்றக்கூடும்.//

இதுவும் தேவை இல்லாத பயம். கேட்க யாருமே இல்லை என்று உங்கள் அரசாங்கம் உணர்ந்தால் நாளைக்கு இவர்களை என்ன செய்தாலும் கேட்க ஆளில்லை என்று எண்ணி அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப் படும் சாத்தியம் இருக்கு.

நீங்கள் சொல்வதை பார்க்கும் போது, இந்த பேரணி வெற்றியில் முடிந்தால் நமக்கு இணையான தலைவர்கள் உருவாகி விடுவார்களோ என்ற அச்சத்தில் அரசாங்கத்தில் செல்வாக்கான இந்திய வம்சாவளித் தலைவர்களே சூழ்ச்சி செய்து இதை சட்ட விரோதம் என்று அறிவிக்க வைத்துவிட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது... யாரைத் தான் குறை கூறுவதோ..

said...

நல்ல பதிவு மைஃபிரண்ட். எல்லோருக்கும் உரிமைகிடைக்க ஒரே வழி அவரவர்களாக மற்றவர்களின் உரிமைகளைப் பேணும் பக்குவம் வேண்டும். நாம் எந்த அளவிலான உரிமைகளுக்கு உரித்தவர்களோ அந்த அளவினை மிஞ்சி நாம் உரிமைகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. எனவே சிறந்த பண்புகளைக் கற்பிக்கும் கல்வியே இதற்கு ஒரே வழி. பாடத்திட்டங்களில் இன/மத பாகுபாடின்றி அன்பினை வளர்க்கும் பாடங்கள் அதிகமாக அறிமுகப்படுத்தப் படவேண்டும். அடுத்த தலைமுறையினாலாவது அனைவருக்கும் உரிமை கிடைக்கும்.

said...

@Dreamzz:

//naatu nalanukkaaga oru 8% minority ena makkal eppadiyo poraanganu vidalaam thapillai! athu avanga ishtam. aana antha 8% minortiy makkalum athukku oknu solraapla...//

நான் நடப்பத்தைத்தான் சொன்னேன் தினேஷ். :-)

said...

@கோவி.கண்ணன்:

//நன்றாக எழுதி இருக்கிறீர்கள். தமிழ் ஆளுங்க தான் தமிழர்களை ஏமாற்றி மிளகாய் அரைத்திருக்கிறார்கள் என்று புரிய வைத்து இருக்கிறீர்கள்.//

நன்றி கோவி கண்ணன் அண்ணா. ம்ம்.. இப்படித்தான் சில உண்மைகள் வெளி வராமலேயே இருக்கின்றன.

said...

@தமிழ்வானன்:

சரிதான் தமிழ்வானன். ஆனால், அதுக்கு முதலில் ஒற்றுமை வேண்டும். நம் மொழி, நம் இனத்தவர் என்ற ஒற்றுமை இருந்தால் கண்டிப்பாக எல்லாரும் இணைந்து போராட முடியும். :-)

said...

@TBCD:

ம்ம்.. அந்த வருத்தம் எனக்கும் இருக்கு TBCD. :-(

said...

@பொடியன்:

இந்த லிங்க் நான் சொல்வதுக்கு ஒரு சாம்பிள். உங்கள் பின்னூட்டத்துக்கு பிறகு நெட்டில் கண்டெடுத்தது. படித்து பாருங்களேன்:

http://thatstamil.oneindia.in/news/2007/12/01/world-malayaian-tamils-may-choose-prabhakaran.html

அடிக்கடி இப்படி நடக்கும் நாட்டுக்கும் இதுவரை இந்த சம்பவம் நடக்காத நாட்டுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது பொடியன்.

இதே சம்பவம் நீங்கள் சொல்வதுப்போல் இந்தியாவில் நடந்திருந்தால் இந்த அளவுக்கு செய்திதுறை விமர்சித்திருக்காது, இந்த அளவு பேசப்பட்டிருக்கவும் மாட்டாது. ஆனால் மலேசியாவில் நடந்த போது இந்த தாக்கம் எந்த அளவு இரூக்கின்றது என உணரமுடிகின்றதா?

//நீங்கள் சொல்வதை பார்க்கும் போது, இந்த பேரணி வெற்றியில் முடிந்தால் நமக்கு இணையான தலைவர்கள் உருவாகி விடுவார்களோ என்ற அச்சத்தில் அரசாங்கத்தில் செல்வாக்கான இந்திய வம்சாவளித் தலைவர்களே சூழ்ச்சி செய்து இதை சட்ட விரோதம் என்று அறிவிக்க வைத்துவிட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது... //

இதிலும் உண்மைகள் நிறைய இருக்கின்றன. :-|

said...

@மு மாலிக்:

நன்றி.

கல்விதான் முக்கியமான ஆயுதம். அதில் எந்தளவு மாற்றம் ஏற்படுகின்றது என்று பார்ப்போம். :-)

said...

முதலில் காரணங்களை விளக்க வேண்டும் என்ற நோக்கில் நீங்கள் பதிவிட்டதற்கு நன்றி.

அங்கு நடக்கும் பிரச்சனையில் எனக்கு அவ்வளவாக புரிந்து உணர்வு இல்லை. கண்ணன் உள்ளிட்ட பதிவுகள் மூலமாக தான் தெரியும். உங்கள் பதிவின் மூலம் மேலும் சில தகவல்கள் தெரிந்துக் கொண்டேன். அதுக்கும் நன்றி.

அனுமதி கொடுக்க வில்லை என்பதற்காக போராட்டத்தை கைவிடனும் என்பது சிறுப்பிள்ளைத்தனமாக இருக்கிறது.

சரி எனக்கு சில சந்தேகங்கள் அதற்கு மட்டும் உங்கள் பதில்கள் கிடைத்தால் மகிழ்ச்சி.

//தமிழ்நாட்டின் உதவும் மனப்பான்மை போற்றக்கூடியதே!//

ஏது மாதிரியான உதவியை தமிழ்நாடு தருவதாக இருந்தாக சொல்ல முடியுமா?

// ஆனால், அந்த உதவி தேவைபடாது என்று நல்ல படியாக சொல்லியிருக்கலாம் டத்தோ ஸ்ரீ நஸ்ரி அசீஸ். "Nothing to do with TamilNadu" என்று முகத்தில் அடித்த மாதிரி பேசியது அவரின் தவறு.//

எந்த நாட்டிலும் அவர்கள் உள்விவகாரகத்தில் தலையீடும் போது இது போன்ற பதில்கள் வருவது சகஜம் தான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

அமெரிக்கா கூட ஏதோ கருத்து சொல்லியதாக தகவல். அதுக்கு இவரின் பதில் என்னவென்று கூற முடியுமா?

ஒரு உதாரணத்துக்கு மலேசிய பூர்வீக மக்கள் பிற நாட்டில், சீனாவில் என்று வைத்துக் கொள்வோம், அங்கு அவர்களுக்கு அரசாங்காத்தால் பிரச்சனை. இது போல் ஒரூ கலவரத்தில் முடிவடைகிறது என்றால் மலேசிய அரசாங்கம் எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் அமைதியாக இருக்குமா அல்லது தூதரம் மூலம் அங்கு என்ன நடக்கிறது, அந்த பிரச்சனைக்கு முடிந்த அளவு விரைந்து தீர்வு காணுங்கள் என்று சொல்லாமல் இருக்குமா?

அது போல தான் இதுவும். அங்கு இருக்கும் இந்தியர்களில் பெரும்பாலோனோர் தமிழர்கள் என்ற காரணத்தால் தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இந்திய அரசும் அதுக்கு தகுந்தது போல் கருத்து சொல்லியது. இது சாதாரணமாக எல்லா நாட்டிலும் நடக்கும் விசயம் தான்.

said...

மை பிரண்ட்!
பிரஞ்சுத் தொலைக்காட்சி மூச்சும் விடவில்லை. நான் அல்ஜஜிரா மாத்திரம் கூறியதைப் பார்த்தேன். நன்கு எழுதியுள்ளீர்கள்.
நம்மவர்களே பணத்தை ஏப்பம் விட அரசாங்கம் பார்த்துக் கொண்டா? இருந்தது. அல்லது திருடனுடன் சேர்ந்து திருடியதா??
இதே வேளை இவர்கள் தமது கோரிக்கையை மனுவாகக் கொடுக்க வந்த போது வாங்க ஏன் பின் வாங்கியது.
ஆயிரம் தான் நல்லது செய்த பிரதமரானாலும் ஒரு சிறுபான்மை இனத்தை தன் பதவிக்காக தள்ளிவைப்பதையோ, அடக்கி வைப்பதையோ அனுமதிக்க முடியுமா??
20 வருடங்களுக்கு முன் எனக்கு ஒரு பேனை நண்பி மலேசியாவில் இருந்தார். அப்போதே அவர் தங்களைப் புறக்கணிப்பது பற்றி எழுதினார். அது இன்னும் தொடர்கிறது.
மேலும் மலேசிய அதிகாரிகளுக்கு இந்தியர்,தமிழர், இந்துக்கள் என்றால் ஓர் இளக்காரம் இருப்பது போல் உள்ளது.
சில வால் பிடித்து சுயலாபம் பெறும்
நம்மவர்களால் தான் இந்த நிலை என நான் நினைக்கிறேன்.
அடுத்து இந்து என்றில்லாமல்...இந்தியராக அவர்கள் ஒற்றுமைப்படுவது வலுவாக இருக்குமென்பதில் நானும் உடன் படுகிறேன்.
எனினும் நல்ல முடிவு வர வேண்டுமென்பதே என் ஆசை..
மலேசிய தமிழரும் அகதியாக வேண்டாம்.

said...

விவரமா விளக்கங்கள் இருக்கு. நன்றிங்க.

said...

கலக்கிட்டீங்க மைஃப்ரண்ட்,

விவரங்கள் சூபர்ப்.

said...

அப்பிடியா சங்கதி?.ஒன்று சேர்ந்து இந்தியராக நிற்க்கவேண்டிய இடத்தில்,நியாயமான கோரிக்கைகள் கூட , மதத்தின் பேரால் போராட்டமாய் .உலகத்தின் பார்வையில் தவறான இடம் பெற்றுவிட்டதை அறியும் போது கஷ்டமாதேன் இருக்கு.

said...

மலேசியாவில் ஏற்பட்டிருக்கும் போராட்டத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை இங்கே திட்ட சதுரமாக திட்ட முக்கோணமாக (எவ்ளோ நாளைக்குதான் திட்டவட்டமாவே சொல்றது) தெரிவித்துக்கொள்கிறேன்.

said...

நல்ல பதிவு. வேறு ஒரு கோணத்தில் ஒரு மலேசியத் தமிழரின் குரலாக உள்ளது. ஓட்டு வாங்கும் தமிழ் தலைவர்கள் செய்த துரோகம் இதற்கு எப்படி காரணமாகியுள்ளது என்கிற உங்கள் கோணம் அருமை. அதே நேரத்தில் தடை செய்யப்பட்டால் போராடமல் இருக்க முடியாது. இப்பிரச்சனைக்கு பல அமைதி முறை மணுக்கள் தந்தும் தீரவில்லை எனும்போது தெருவில் இறங்குவதுதான் சரி. இருந்தாலும் இனரிதியான உணர்வுகளை மதரீதியாக புரிந்துகொள்வதில் இரண்டு பிரச்சனைகள் அங்கு உள்ளது என நினைக்கிறேன். 1. சாதிய உணர்வு 2. இஸ்லாமிய பெரும்பாண்மையாக இருப்பதால் உருவாகும் ஒரு பாதுகாப்பின்மை.

உங்கள் பார்வைக் கோணம் மற்றும் உணர்வுகள் பாராட்டதக்கது. இனியாவது தமிழின சந்தர்பப்வாத துரோகத் தலைவர்களுக்கு வாக்களிக்கும் முன் தமிழர்கள் யோசிப்பார்களா?

Vinaitheerthan said...

Anbirukuria Sakothari,

Ithu enathu muthal pinootamm. Athai thankalukku ezhuthuvathil perumai adaikiran.

Mika arumaiyana pathivu. malaysia thamizarkalin meethu ennau oru thani eddu padu undu. athurku en undan pirantha sakothari malaysia thamizarai thirumanam seithu kondu angu kudiyeriyathai kooda irukalam.

malaysia thamizhalargalin pirachinai mattrumor tamizh ezha pirachinai agividak koodathu ena en koodambathil ulla annaivarum virumbukindrom. ungal pathivu anatha ennathiruku nambikai uootuvathai irunkindrathu.

yathum oore yavarum kelir ena sonna thamizharkalagiya namkku otthu vazhvathe nanmai paykum.

yevitha pirachinaiyum indri malaysia thamizharkal makizhchiyaga vazha virumbum pallayirakana thamizharkalil oruvan.

anbudan
Vinai

thamizhlil thatachu seiyum vasathi illatha karanthinal angilathil thatachi seiythulen. thayavu seiythu thamizh ezhuthukalil en karthai thangal pathivil veliyidavum.

mattrumoru siru vinnapam. thangal pathivugalum pinnotangalum thangali oru muthirchi pettra sinthani alaraka ennau arimuga paduthi ullana. anal thngal pathivugalil ulla oru nadiganin padangal thangal sinthanikalin thakkathai sattre mattu paduthukindrana ennbathai thangal kavanthiruku kondu vara virumbukindren.

thangal endrum mazhilchiaga iruka virumbukindren.

இரண்டாம் சொக்கன் said...

உள்ளதை உள்ளபடி எழுதியிருக்கிறீர்கள்....

வாழ்த்துக்கள்....

இந்த பிரச்சினை முழுக்க முழுக்க மலேசியாவின் உள நாட்டு விவகாரம் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

அதே நேரத்தில் மலேசியாவில் தமிழர்களின் மீது தாக்குதல் நடைபெறும் போது தமிழகத்தின் பிரதிநிதியான கலைஞர் வாய்மூடி கொண்டிருக்க முடியாது.

தமிழகத்தின் கவலையினை பதிவு செய்ய வேண்டிய நிர்பந்தத்திலேயே கலைஞர் இந்திய பிரதமருக்கு இது குறித்து கடிதம் எழுதினார் என நினைக்கிறேன்.

பத்திரிக்கைகளுக்கு ஒரு நாள் தீனியாய் போய் மறக்கப்பட்டிருக்க வேண்டிய இந்த கடிதம்,மலேசிய அமைச்சரின் சுடுமொழியினால், பிரச்சினைக்கு புதிய நிறம் மற்றும் திருப்பத்தினை தந்து விட்டார் என நினைக்கிறேன்.

இந்திய நாடாளுமன்றமும், பிரதமரும் அதிருப்தி தெரிவித்திருப்பது நிச்சயமாய் மலேசிய அரச வட்டாரங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கிறேன்.

இதன் தொடர்ச்சியாய் இன்றைக்கு மலேசிய பிரதமர், தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாய் நிருபித்தால் பதவி விலகுவதாக அறிவித்திருக்கிறார்

இந்த அறிவிப்பு இந்திய அதிருப்தியின் காரணமாய் விளைந்தது என சொல்வதை காட்டிலும் நாட்டின் வர்த்தக மற்றும் பொருளாதார நலன்களை கருத்தில் கொண்டே அமைந்திருக்குமென நினைக்கிறேன்.

எது எப்படியோ இந்த சூழலிலாவது மலேசியாவில் வாழும் இந்திய வம்சாவழியினர் தங்கள் ஜாதி,இன,மத உணர்வுகளை தள்ளி வைத்து தங்களின் நியாயமான உரிமைகளை பெற முனையவேண்டுமென எதிர்பார்கிறேன்.

said...

உணர்ச்சிகளை மட்டுப்படுத்தி, உண்மையைத் தேட முற்பட்டு இருக்கீங்க மை ஃபிரெண்டு அக்கா!
மிகவும் நல்ல அலசல்!

அரசு வழங்கிய நிதியை இந்திய வம்சாவளி தலைவர்களே தவறாகப் பயன்படுத்தி இருப்பது மிகவும் கண்டனத்துக்கு உரியது!

ஆனால் அதுக்காக வீட்டில் உள்ள ஓட்டைகளை எல்லாம் அடைத்து விட்டு, அப்புறம் தான் ஆற்றில் வரும் வெள்ளத்தை அடைப்பேன் என்று சொல்ல முடியுமா?

இரண்டுமே சம அளவில் நடக்க வேண்டும்!
அரசும் உரிமைகளில் உள்ள நியாய/அநியாயங்களை வெளிப்படையாக அலச முன் வர வேண்டும்!

மாலிக் சொல்வது போல வருங்காலத் திட்டமும் தேவை! அதே சமயம் தற்கால செயல் முறையும் தேவை!
நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து வம்சாவெளித் தலைவர்களுக்கு எவ்வளவு அக்கறை இருக்க முடியும்? அரசுக்கு இன்னும் கூடுதல் பொறுப்பும் அக்கறையும் இருக்கு! அதுக்காகவாவது தீர்வு காண முற்பட வேண்டும்!

//அமெரிக்கா கூட ஏதோ கருத்து சொல்லியதாக தகவல். அதுக்கு இவரின் பதில் என்னவென்று கூற முடியுமா?//

புலி...
அமெரிக்க அரசின் கருத்துக்கு எடுத்தேன் கவிழ்த்தேன்-ன்னு மலேசிய அமைச்சர் பதில் சொல்ல மாட்டார்! கொஞ்சம் பொறுமை காப்பார்! :-)

said...

சில நாட்களாக எந்த சேனல் செய்திகளை கேட்டாலும் இது தான் முதன்மை செய்தி. இந்த பதிவின் மூலம் ஓரளவு புரிதலும் சில தகவல்களும் தெரிய வந்துள்ளன. உன்னோட கருத்துகளை நல்லா தெளிவா சொல்லியிருக்க :)

said...

நன்றாக விளக்கமாக எழுதி இருக்கிறீர்கள்! பல புதிய தகவல்கள் கிடைத்தன.

said...

அங்க என்ன தான் நடக்குது? எப்ப தான் இந்த மலேசிய மாரியாத்தா பதிவு போடும்?னு காத்து இருந்தேன். ரொம்ப நன்றி, உள்ளது உள்ளபடி சொன்னதுக்கு.

நீ அடி கிடி வாங்கினியா? சொல்லு, இங்க ஒரு போராட்டம் பண்ணிடுவோம். :)

said...

"ஆனாலும் நம் இந்திய சமூதாயத்தின் தலைவர், மலேசிய இந்திய காங்கிரஸின் (ம.இ.கா) தலைவர் பொதுத்துறை அமைச்சராகவும் தலைவராகவும் 28 வருடக்காலமாக இருக்கிறாரே! அவர் என்ன செய்தார்? இப்படி மாற்றங்கள் நடக்கும்போதே ஏதாவது செய்திருக்க வேண்டும். சரி, அப்போதுதான் முடியவில்லை..

இந்திய மக்களின் நலனில்தான் எவ்வளவு அக்கறை எடுத்துக்கொண்டார்? சரி, நல்லது செய்ய வேனாம்யா.. கெட்டதாவது செய்யாமல் இருக்கலாமே?"

பல செய்திகளையும் படித்து நானும் புரிந்து கொண்டது இது தான். எங்கே போனாலும் தமிழர்கள் சொந்த மனிதர்களையே ஏமாற்றினால் யார் அவங்களை நம்புவாங்க? நல்ல நடுநிலையான அலசல். தமிழ்நாடு என்ன உதவியைச் செய்யத் தயாராக இருந்தது எனவும் தெளிவு படுத்தி இருக்கலாம். அருமையான கோணத்தில் அலசி இருக்கிறீர்கள். பிரச்னை சீக்கிரம் தீர்ந்து அனைவருக்கும் அமைதி கிடைக்கப் பிரார்த்திக்கிறேன்.

மை பிரண்ட் கொலைவெறிபடை பெங்களூர் said...

//
ambi said...

நீ அடி கிடி வாங்கினியா? சொல்லு, இங்க ஒரு போராட்டம் பண்ணிடுவோம். :)
//
போராட்டம் இல்ல கலவரமே பெங்களூர்ல நடக்கும். 4 விப்ரோ ஸ்டாப் பஸ் எரியும்.
ஸ்டாப் கார் கண்ணாடி எல்லாம் நொருங்கும். அம்பி எப்படி வசதி???

said...

Adade... idhu romba varuthathukuriya vishayam...
Malaysia'vil en ipdi nama makaluku kashtamnu purila....Anmayila, angu vazhum thamizhargal matra naadu kitta edhum poi kekradhu murai ilanu vera oru statement...
Kashta kaalam
Hope u r fine :)

said...

நாகை சிவா,

//எந்த நாட்டிலும் அவர்கள் உள்விவகாரகத்தில் தலையீடும் போது இது போன்ற பதில்கள் வருவது சகஜம் தான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. //
//அங்கு இருக்கும் இந்தியர்களில் பெரும்பாலோனோர் தமிழர்கள் என்ற காரணத்தால் தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இந்திய அரசும் அதுக்கு தகுந்தது போல் கருத்து சொல்லியது. இது சாதாரணமாக எல்லா நாட்டிலும் நடக்கும் விசயம் தான்.//

இல்லையே! கலைஞர் 'நேரடியாக' தலையிடவில்லை. மாறாக பிரதமர் மூலமாக தான் கருத்து தெரிவித்தார். ஆனால் அந்த மந்திரியோ நேரடியாக கலைஞரை அல்லவா தாக்கினார்? அதனால் அவர் கூறிய பதில் கண்டிக்கதக்கதே.

Arasu said...

Dear My Friend,

Thanks for the information. I heard about this incident from the local newspapers. Now I am able to understand the issue clearly from your views. When I was in Singapore (I worked there for 9 years), I felt that Indians are treated there as third class citizens only. Also learned the same thing happening in Malaysia also (I used to come to Malaysia for meetings, I worked for Sime Darby Singapore for four years). I heard from Malaysian Tamils that most of the well to do Malaysian tamilans always sends their kids to overseas for higher education as they felt that kids would not get recognization, if they study in Malaysia.
As you said, unity only can save Indians for any further progress. I totally agree with you.
Hopefully the issue will be sorted out and expecting you people will have better future. You people deserved them.

-Arasu

C.M.HANIFF said...

Malasiavil porattam nadapathu patri arinthen,athu etherkaaga enru sariyaaga teriyavillai, ungal pathivu nalla vilakam alitathu , nanri :)

said...

புதிய கோணங்கள் சிலவற்றைச் சுட்டிக் காட்டிய பதிவு இது...அழகான உங்கள் ஊரில் முழுமையான அமைதி திரும்ப வேண்டும் சீக்கிரம்.

said...

ம்ம்ம்ம்.....நம்மாளுங்க நம்மாளுங்க ஏமாத்துறப்போ அடுத்தவன் ஏமாத்துறதுல என்ன வியப்பு.

தப்பு ரெண்டு பக்கமும் இருக்குறாப்புல தெரியுது. நாங்க வெளியில இருந்து பாக்கைல...சரியான வெவரம் தெரியாது. உள்ளூர்க்காரங்க சொல்றீங்க. தெரிஞ்சிக்கிறோம். 2007 புத்தாண்டில் மலேசியாவில்தான் இருந்தேன். நல்ல வளமாக முன்னேறிக்கொண்டிருக்கும் நாடு என்பது தெளிவாகவே தெரிந்தது. எல்லாரும் நல்லாயிருக்கட்டும்.

said...

vedhanai! :(

said...

நல்ல அலசல்! வாழ்த்துக்கள்!!