Thursday, December 20, 2007

அப்பா

உடம்பெல்லாம் புழு ஊர்வதுப்போல் இருந்தது குமாருக்கு. தன்னை நினைத்து அவனுக்கே வெறுப்பாய் இருந்தது.

'சே! இந்த மனுஷனோட ரத்தமா என் உடம்புல ஓடுது? இப்படிப்பட்ட கீழ்தரமான ஒருத்தருக்கு மகனா பிறக்க நான் முன் ஜென்மத்துல என்ன பாவம் பண்ணேனோ தெரியலையே! ஆண்டவா'

குமாரின் மனதில் பல வாறாக சிந்தனை அலையடித்துக்கொண்டிருந்தது. ஒரு இடத்தில் உட்கார முடியாமல் என்னமோ போல் இருந்தான் மருத்துவமனை ஐ.சி.யூ வாட் வெளியே நின்றிருந்தான்.

"மேடம், இனி இங்கே வச்சு பார்ப்பதுல அர்த்தம் இல்ல. விடியும் வரை உயிரு இருப்பதே பெரிய விஷயம். நீங்க வீட்டுக்கு கொண்டு போறதா இருந்தா சொல்லுங்க. பேப்பர்ல கையெழுத்து போட்டு தர்றேன்" என தன் கையை விரித்தார் டாக்டர் விஜயன்.

தன் முந்தானையால் அடக்கி வைக்க முடியாத அழுகையை மறைக்க வாயை பொத்திக்கொண்டார் காந்திமதியம்மாள். தன் கணவர் தன்னை விட்டு வெகுதூரம் செல்வதை மனம் உணர்ந்தாலும் அதற்கு இடம் கொடுக்க மறுத்தது.

"குமார், இப்ப என்ன பண்றது? டாக்டரே அப்பாவை காப்பாத்த முடியாதுன்னு சொல்லிட்டாரே!" தளுத்தளுத்த குரலில் தன் மகனிடம் கேட்டார் காந்திமதியம்மாள்.

"செத்து போட்டும்.. விடுங்க. இவருக்கு போய் இப்படி அழுவுறியேம்மா!"
மனதில் இருந்த கோபம் வார்த்தைகளாய் வெளியானது குமாருக்கு.

"ஏண்டா.. அதுவும் இந்த நேரத்துல உனக்கு என்ன வந்துச்சு? உங்கப்பா மேலே உனக்கென்ன இப்படி திடீர் வெறுப்பு?"

திடீர் வெறுப்புதான். ரெண்டு மணி நேரத்துக்கு முன்பு வரை அப்பாவின் மேல் தன் உயிரையே வைத்திருந்தவந்தான் குமார். அப்பாதான் தன்னுடைய குரு. அவரைப்போலவே தன் நடை, உடை, ஸ்டைல் எல்லாம் இருக்க வேண்டும் என அவரை பார்த்து பார்த்து செய்தவனாயிற்றே.. அப்பாவுக்கு உடம்பு முடியாமல் போனதை கேள்வி பட்டதும் பதறீப்போய் பட்டணத்திலிருந்து அறக்க பறக்க ஓடி வந்தவன். மூன்றூ நாட்களாய் அப்பாவுக்கு துணையாய் மருத்துவமனையே கதியென்று இங்கேயே விழுந்து கிடப்பவன். அப்பா சீக்கிரம் குணமாக வேண்டும் என நிமிடத்துக்கு ஒரு முறை கடவுளை வேண்டிக்கொண்டிருப்பவன்.. திடீரென என்ன வந்துச்சு இவனுக்கு?

"அம்மா.. அப்பா நம்ம ரெண்டு பேரையும் ஏமாத்திட்டாரம்மா"

"என்னடா சொல்ற?"

"அப்பா நம்ம குடும்ப வக்கீலை அழைத்து வர சொன்னாருன்னு மனோகரன் அங்கிளை கூட்டிட்டு வந்தேன். தாகமா இருக்கு தண்ணீர் எடுத்து வர சொல்லி என்னை அனுப்பிவிட்டார். நான் தண்ணீர் எடுத்து ரூம்க்கு வரும்போதுதான் அந்த விஷயத்தை கேட்டேன்......"

சிறிது நேர மௌனத்துக்கு பிறகு,

"அவர் தன்னோட சொத்துல பாதி யாரோ கார்த்திக்கு எழுதி வச்சிருக்கார். மனோகரன் அங்கிள் இது யாருன்னு கேட்டதுக்கு, அவன் என்னோட இன்னொரு மகன். குமாருக்கு மூத்தவன்ன்னு சொன்னது என் காதில் விழுந்துடுச்சு. அப்பா இப்படி உனக்கும் எனக்கும் பச்சை துரோகம் பண்ணிட்டாரேம்மா!"

"குமார்.."

"அப்பா மேலே நீயும் நானும் எவ்வளோ பாசமா இருந்தோம்.. ஒருத்தருக்கொருத்தர் எவ்வளொ அன்பு வச்சிருந்தோம்.. ஆனால், அவர் யாரோ ஒருத்தன் கார்த்திக் மேலே அன்பு வச்சிருக்கார் பாருங்க.. வெளியே நல்லவன் மாதிரி வேஷம் போட்டுட்டு உள்ளுக்குள்ள பெண் மோகம் இருந்திருக்கு அவருக்கு. உனக்கு துரோகம் பண்ணிட்டாரு.."

"குமா..."

"நீ ஒன்னும் பேசாதம்மா.. அவருக்கு ஒன்னொன்னும் பார்த்து பார்த்து செஞ்சியேம்மா.. அவருக்கு உடம்பு சரியில்லாதபோதேல்லாம் உன்னையும் கவனிக்காமல் அவரையே கண்ணுக்குள்ள வச்சி தாங்கினியே! உனக்கு கண் ஆப்புரேஷன் பண்ணா 2 வாரம் மருத்துவமனையிலேயே தங்கினா அவரை யார் பார்த்துக்குவான்னு சொல்லி நீ இன்னும் அந்த கண் ஆப்புரேஷன் கூட பண்ணாம இருக்கியே! அவருக்காக என்னென்ன தியாகம் பண்ணியிருக்க.. ஆனா, அவர்! யாரோ ஒருத்தியை இத்தனை வருஷமா ஊருக்கு தெரியாமல் வச்சிருக்கார்.. இப்போகூட உனக்கும் எனக்கும் தெரியாமல் மூடி மறைச்சி வக்கீல் மூலமா அவனுக்கு சொத்து எழுதி வச்சி தன் பாவத்தை கழுவ பார்க்கிறார்.. பார்த்தியா?"

"சொத்துதான் உன் பிரச்ச்னையாடா?"

"இல்லம்மா. இந்த எல்லா சொத்தையும் அப்பா அனாதை ஆசிரமத்துக்கு எழுதி வச்சிருந்தா கூட நான் ரொம்ப ரொம்ப பெருமை பட்டிருப்பேன். எனக்கு இந்த சொத்துல இருந்து சல்லி காசு வேணாம்மா.. ஆனா, இந்த மனுஷன் இப்படி ஒரு மிருகமா நடந்திருக்கிட்டாரே! அதான்மா என்னால தாங்கலை. அவரோட பையன் கார்த்திக்கே வந்து இவருக்கு கடைசி காரியங்கள் செய்யட்டும்.. செத்தா கூட இவர் முகத்துல விழிக்க மாட்டேன் நான்!"

"அப்படி சொல்லாதடா.. நீதானடா இவருக்கு இந்த காரியங்கள் செய்ய வேணும். அவரோட ஆத்மா சாந்தியடைய வேணாமாடா?"

"அதுக்குதான் அவரோட செல்ல பிள்ளை கார்த்திக் இருக்கான்ல.. இதைப்பத்தி இதுவரை தெரியாமல் இருந்திருக்கியேம்மா. உனக்கு கொஞ்சம் கூட கோபம் வரலை?"

"கார்த்திக் இப்போ ஜெர்மனில இருக்கான்.. ஒரு இஞ்சினியரிங் கம்பேனில சீனியர் இஞ்சினியரா வேலை செய்யுறான்.. போதுமா? இல்ல இன்னும் வேற தகவல் வேணுமா உனக்கு?"

"அட்ரா சக்கைனானா.. உனக்கு ஏற்கனவே இந்த விவகாரம் தெரியுமா? அதான் இந்த மனுஷனுக்கு தான் செய்யுறது ஒரு தப்புன்னு வருத்தமே தெரியாமல் இருக்காரா? இந்த மாதிரி ஆளுங்களுக்கு கொடுக்கிற தண்டனை, இனி யாரும் தன்னோட கட்டிய மனைவிக்கும் பிள்ளைங்களுக்கும் துரோகம் பண்ண தைரியம் இல்லாதவங்களா ஆக்கணும்!!" கோபத்துக்கு உச்சிக்கே போய் விட்டான் குமார்.

"குமார், நான் சொல்றதை கேளுடா.."

"நான் சொல்றதை நீ கேளும்மா.. கார்த்திக்கை பத்தி இவ்வளோ தெரிஞ்சு வச்சிருக்கல்ல.. கண்டிப்பா அவனோட முகவரியும் உங்கிட்ட இருக்கும். கால் பண்ணி அவனை யும் வன் அம்மாவையும் வந்து எல்லா காரியமும் பண்ண சொல்லு. என் அப்பா எப்பவோ செத்துப்போயிட்டார். நான் கிளம்புறேன்"

"டேய் குமார்.. நான் சொல்றதை கேளுடா. நீ இவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருக்கிறது கார்த்திக்கோட அம்மாக்கிட்டதாண்டா..."

"அம்மா?"

"ஆமாண்டா.. கார்த்திக் எனக்கும் இன்னொருத்தருக்கும் பிறந்தவன். உன் அண்ணன். என்னை விதவை கோலத்தில் பார்த்த உங்கப்பா என்னை மறுமணம் செஞ்சிக்கிடதுமில்லாமல் கார்த்திக்கையும் தன் சொந்த மகனாத்தான் இப்ப வரைக்கும் நினைக்கிறார். ஆனால் இந்த மறுமணத்துல அவனுக்கு சம்மதமில்லாமல் தன் மாமாக்கிட்டதான் வளர்வேன்னு என்னை விட்டு பிரிஞ்சி இருக்கான். அப்பப்போ உங்கப்பாதான் அவனை போய் பார்ப்பார். எவ்வளவுதான் அவமானப்பட்டாலும் கார்த்திக்தான் தன்னோட முதல் மகன்னு நினைக்கும் ஒரு உத்தமர் உங்கப்பா.."

"அம்மா....."

"சாரி மேடம். பேஷண்ட் இறந்துட்டாரு." நர்ஸ் வந்து சொன்ன அந்த வார்த்தையில் இருவரும் திடுக்கிட்டனர்..

குமார் அப்பா என்று கத்தி கதறி அழுதான். மீண்டும் தன்னை நினைத்து அவனுக்கு வெறுப்பாய் இருந்தது. ஒரு உத்தமரை அதுவும் அவர் சாகப்போகும் தருவாயில் இப்படி ஒரு அபாண்ட பழி சுமத்திட்டுமே என மனம் புழுகினான். கண் முன் தன் அப்பா அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தார்... மூச்சில்லாமல்..



பி.கு: நண்பர்களின் வற்புருத்தலின் பேரில் இந்த கதையை சர்வேசனின் நச்சுன்னு ஒரு கதை போட்டிக்கு அனுப்புறேன். :-)

31 Comments:

நாகை சிவா said...

யூ டூ......

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஆயில்யன் said...

//நாகை சிவா said...
யூ டூ......
//

ரிப்பிட்டு!

மனசுல கொஞ்சம் சோகம் இருக்கு அதான் ரிப்பிட்ட இழுக்க முடிலப்பா :(

CVR said...

Interesting story!
நிறைய எழுதுங்க! :-)

கோபிநாத் said...

நல்லாயிருக்கு :))

குட்டிபிசாசு said...

செண்டிமெண்டா போட்டுத்தாக்குரிங்களே!! என்னமோ போங்க!!

Dreamzz said...

avvvv.. alugachi senti kadhai..
nalla thaan irukku :)

Divya said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கிறீங்க,

உரையாடலகளிலேயே கதையின் கருவை உணர்த்தியிருப்பது அருமை!

k4karthik said...

சூப்பரூ..

ரசிகன் said...

மைபிரண்டு,கதை ரொம்பவே நல்லாயிருக்குங்க.. சர்வேஸன் போட்டிக்கு கூட அனுப்பலாமே..

ரசிகன் said...

ஏதோ மனச தொட்ட மாதிரி ஒரு ஃபீலிங். நல்லாயிருங்கப்பூ...

இராம்/Raam said...

சொந்த அடையாளங்களை விட்டு வெளியே வந்து எழுதுறதிலேதான் ஒன்னோட திறமையே வெளியே தெரியும்.... :)


கதை நல்லாயிருக்கு....இன்னும் இது போலே நிறைய எழுது...

TBCD said...

கலக்கல்.......

பல பரிமானங்களில் எழுத ஆரம்பிச்சிட்டீங்க....

இன்னும் உங்கக் கிட்டேயிருந்து நிறைய எதிர்ப் பார்க்கிறேன்.... :))))))

ஜெகதீசன் said...

கதை நல்லா இருக்கு...
இன்னும் நிறைய எழுதுங்க...
:)

Anonymous said...

ரொம்ப நல்லா இருக்கு ஆண்ட்டி :)

SurveySan said...

நல்ல நச்!

ஜி said...

kathai nalla vanthirukuthu.. vaazththukkal :)))

dubukudisciple said...

kathai supera iruku ...
vazhthukal vetri pera

VIKNESHWARAN ADAKKALAM said...

நல்ல கதை... சிறப்பா இருக்கு... வாழ்த்துக்கள்...

Nithi said...

Nalla Irukkuinga

MyFriend said...

@நாகை சிவா:

ஹீஹீஹீ...

-----------------------------------
@ஆயில்யன்:

என்ன இழுவை சின்னதா இருக்குன்னு கேட்கலாம்ன்னு நெனச்சேன். :-)

-----------------------------------
@விஞ்ஞானி சி.வி.ஆர்:

ஏன் இந்த கொல வெறி?? வலையில் சிக்கிய இதயம் மாதிர்ரி தொடர் பதிவெல்லாம் எனக்கு எழுத தெரியாதுங்க..

-----------------------------------
@கோபிநாத்:

வாங்கண்ணே. :-)

-----------------------------------
@குட்டிபிசாசு:

ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்கல்ல.. அதான். ;-)

MyFriend said...

@ட்ரீம்ஸ்:

அழுதுட்டீங்களா? :-P

-----------------------------------
@திவ்யா:

உங்களைப்போல எழுத்தாளர்ங்க கிட்ட வாழ்த்து பெருவதூ பெரீய விஷயம்ங்க. :-)

-----------------------------------
@k4k:

நன்றி. :-)

-----------------------------------
@ரசிகன்:

நன்றிங்க ரசிகன். நீங்க சொன்ன மாதிரி அனுப்பிட்டேன். :-)

MyFriend said...

@இராம்:

//சொந்த அடையாளங்களை விட்டு வெளியே வந்து எழுதுறதிலேதான் ஒன்னோட திறமையே வெளியே தெரியும்.... :)//

என்னமோ சொல்ல வர்றீங்க.. ஆனா, என்னன்னுதான் புரியல.. ம்ம்..

//கதை நல்லாயிருக்கு....இன்னும் இது போலே நிறைய எழுது...//

ஆஹா.. நம்பவே முடியல.. எப்பவும் மொக்கை மொக்கைன்னு சொல்ற ராமண்ணனா நல்லா இருக்குன்னு சொலறது? :-P

-----------------------------------
@TBCD:

//கலக்கல்.......//

நன்றி.

//பல பரிமானங்களில் எழுத ஆரம்பிச்சிட்டீங்க....//

அட.. நெஜமாலுமா? ;-)

//இன்னும் உங்கக் கிட்டேயிருந்து நிறைய எதிர்ப் பார்க்கிறேன்.... :))))))//

இப்படி ஓவரா கனவு காண்பது சரியில்ல.. சொல்லிட்டேன்.. :-P

-----------------------------------
@வேதா:

நன்றி ப்ராபஸர். :-)

-----------------------------------
@ஜெகதீசன்:

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றீ ஜெகதீசன்.

-----------------------------------
@பொடியன் அங்கிள்:

நன்றி ஹை.. ;-)

MyFriend said...

@சர்வேசன்:

நச்.. :-P

-----------------------------------
@ஜி அண்ணாத்தே:

:-) நன்றி

-----------------------------------
@டிடி அக்கா:

நன்றி ஹை

-----------------------------------
@விக்னேஸ்:

நன்றி விக்னேஸ்

-----------------------------------
@நித்யா:

முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நித்யா. :-)

இம்சை அரசி said...

கதை ரொம்ப நல்லா இருக்குடா :)))

நிறைய எழுது... வாழ்த்துக்கள்

மங்களூர் சிவா said...

jUper

kalakkal story

Anonymous said...

Nalla arumaiyaana kathai , nalla suspense , continue :-)

ambi said...

another good one. do write more. :)

Deekshanya said...

Hmm nalla kathai! Nalla eluthi irukinga my friend. puthaandu nalvalthukkal!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கதையை வர்ணனைகள் இல்லாமல் உரையாடல்களில் மட்டுமே நகர்த்துவதும் ஒரு தெறமை தான்!
எத்தினியாவது கதைங்க இது, உங்களுக்கு?

//"சொத்துதான் உன் பிரச்ச்னையாடா?"//
என்று அம்மா கேட்கும் போதே முடிவை ஓரளவு யூகிக்க முடிந்தது!

தொடர்ந்து எழுதுங்க ஃபிரெண்டு! வாழ்த்துக்கள்! :-)

Nithi said...

கதை நல்லாயிருக்குங்க....இன்னும் இது போலே நிறைய எழுதுங்க

Joy said...

Good story...kutti movie parrtha feeling..

tc