Monday, August 11, 2008

நஸ்கா (Nazca) ராட்சச கோடுகள்

உலகத்தில் இன்னும் தீர்வுக்காணாத/ முடியாத பல அதிசயங்களும் மர்மங்களும் ஆச்சர்யங்களும் தினம் தினம் நம்மை பிரமிக்க வைத்துக்கொண்டேதான் இருக்கின்றது. சில மர்மங்களுக்கு இப்படி இருக்குமோ என்று நாமே சில யூகங்களை உண்டாக்கிக்கொண்டு திருப்தியடைந்துக்கொள்கிறோம்.

நஸ்கா ராட்சச கோடுகள் (Nazca Lines) என்பதும் இன்று வரை மர்மங்களில் ஜொலிக்கும் ஒரு விஷயமாகவே இருந்துக்கொண்டிருக்கிறது. இதன் உருவாக்க ரகசியம் பற்றி பல கேள்விகள் எழுந்திருக்கின்றன. எந்த காலக்கட்டத்தில் யாரால் உருவாக்கப்பப்ட்டது? எப்படி இதை செய்தார்கள்? இந்த கோடுகள் உருவாக்கத்தின் பின்னனி மற்றும் நோக்கம்தான் என்ன? ம்ஹூம்.. ஒன்றுமே தெரியாத மர்மம்தான் இது.

பெரு நாட்டின் பம்பா மற்றும் நஸ்கா இடங்களில் இந்த கோடுகளை பார்க்கலாம். பெரு பட்டணத்திலிருந்து ஒரு 400 கிலோமீட்டர் தென்கிழக்கு நோக்கி போக வேண்டும். 450 கிலோமீட்டர் சதுர அளவில் இந்த கோடுகள் அமைந்திருக்கின்றன. அம்மாம்பெரிய கோடுகளா என்கிறீர்களா? ஆமாம். நீங்கள் இந்த இடத்தில் நின்று எங்கே அந்த கோடுகள் என்று தேடினால் கண்டு பிடிக்கவே முடியாது. இந்த கோடுகளையும், சித்திரங்களையும் பார்க்க வேண்டுமானால் உங்களுக்கு ஒரு சாட்டிலைட் அல்லது ஒரு விமானம் தேவைப்படும். கடலிலிருந்து 600 மீட்டர் உயரத்தில் நின்றால் மட்டுமே தெரியும். குறைந்த பட்சம் உங்களுக்கு கூகுல் ஏர்த் (Google Earth) இருந்தாலும் பரவாயில்லை. (ஆனால், தேடிக்கண்டு பிடிக்க உங்களுக்கு பொறுமை மிக அவசியம்).

[பெரு மற்றும் நஸ்கா நகரம்]

இந்த கோடுகள் 1920-ஆம் ஆண்டுகளில்தான் பேசப்பட ஆரம்பித்தது. இந்த காலக்கட்டத்தில்தான் அமேரிக்க கமர்ஷியல் விமானங்கள் நஸ்கா நகரை கடந்து போக ஆரம்பித்தன. அப்போதுதான் பயணிகளும், விமானிகளும் விமானத் தறையிரங்கும் தடங்கள் தெரிவதாக சொல்லியிருக்கின்றனர். ஆளே இல்லாத இடத்தில் யார் விமானத்தடங்களை அமைத்திருப்பார்கள்? இந்த கேள்விக்கு விடை கிடைக்கும்முன்னரே குரங்கு, பல்லி, எட்டுக்கால் பூச்சி என்று மிருகங்களின் ராட்சச ஓவியங்களையும் விமானப் பயணிகள் கண்டுள்ளனர்.

[விமானத் தடமாக தெரிந்த கோடுகள்]

புதுசா ஒன்று ஆச்சர்யம் கொடுக்கும் அளவு இருந்தால் விடுவார்களா நம் விஞ்ஞானிகள்? தொல்பொருள் நிபுணர்கள் கிளம்பிட்டாங்க பெரு நகருக்கு. என்னத்தான் அதிசயம் அங்கு காத்திருக்கு? எப்படி இதெல்லாம் வரைந்தார்கள்? ராட்சச மனிதர்கள், இயந்திரங்கள் கிடைக்குமா? எல்லா கேள்விகளுக்கும் விடைகள் கிடைக்கும் என அதீத நம்பிக்கையில் பெட்டி கட்டி கிளம்பிட்டாங்க.

அவர்களின் ஆராய்ச்சி என்ன சொல்கின்றது என்றால், இந்த கோடுகள் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டது. ஆனாலும் எந்த காலக்கட்டத்தில், எந்த இனத்தவரால், எதுக்காக என்று ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. ஏனென்றால், அந்த கோடுகளில் சிக்கலான ஆனால் நேர்த்தியான வேலைப்பாடுகள் தெரிந்தன. இந்த அளவுக்கு நேர்த்தியாய் செய்ய விஞ்ஞான வளர்ச்சி கண்டிப்பாக அந்த காலக்கட்டத்தில் இருந்திருக்காது. அவ்வளவு நேர்த்தியாகவும் ப்ராட்சச உருவத்திலும் எப்படி செய்ய முடிந்தது? ஆகாயத்திலிருந்து ஒருத்தவர் கவனித்து சொல்லியிருந்தால் கூட இந்த அளவுக்கு பரிப்பூர்ண ஓவியம் வரைவது கஷ்டமே! அப்படியென்றால், இவர்கள் ரோம், மெசோப்போதாமிய மக்களை விட அறிவாளிகளா? ஒரு துறுப்பு சீட்டு கூட கண்ணுக்கு கிடைக்கலையே. எதையும் எழுதி வைத்த மாதிரியும் இல்லையே?

[குரங்கு வடிவில் நஸ்கா கோடுகள்]

ஆனாலும், தொல்பொருள் நிபுணர்கள் இந்த நஸ்கா கோடுகளை கஹூவாச்சி (Cahuachi) என்ற ஆதிவாசிகளின் முன்னோர்கள் வரைந்திருக்கக்கூடும் என நம்புகிறார்கள். இவர்கள் நஸ்கா நகரின் சுற்றுப்புற இடங்களில் இன்னும் வசிக்கின்றனர். ஏன் இவர்கள்? கஹூவாச்சி மக்கள் வசிப்பிடத்தில் பழைய கோட்டையின் ஒரு பகுதி கண்டுப்பிடிக்கப்பட்டிருக்கிறது. இதனைத் தவிர்த்து மம்மிகள் மற்றும் நஸ்கா கோடுகளின் சில படங்களின் கல்சுவடுகள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்த யூகம் தப்பாக இருக்கலாம் என்று நிபுணர்களே சொல்லியிருக்கார்கள். இது கஹூவாச்சி மக்களுக்கு பல நூற்றாண்டுகள் முன்னர் இருந்த ஒரு மக்கள் கூட்டத்தின் வேலைப்பாடுகளாய் இருக்கவே வாய்ப்புகள் அதிகம். ஆனால், அவர்கள் யார்?

பல நூற்றாண்டுகள் முன்னர் உருவான இந்த ஓவியங்கள் / கோடுகள் இன்று வரை அப்படியே இருக்க காரணம் என்ன? நஸ்கா வட்டாரத்தின் இயல்பியலே இதற்கு முக்கிய காரணம். மழை இந்த இடத்தில் பெய்வது மிக மிக குறைவு. வருடத்துக்கு 20 நிமிடங்கள் மட்டுமே. உலகில் மிகக் குறைவான அளவில் மழை பெய்யும் இடங்களில் இதுவும் ஒன்று. நஸ்கா நிலம் கடினமான, கற்பாறைகளால் நிறைந்தவை. தூசு, குப்பை பறவாத நிலம் மற்றும் மிகக் குறைந்த அளவில் மழை; இதுவே வரைந்த கோடுகள் இன்று வரை கொஞ்சம் உருமாற மர்மத்தின் ரகசியம்.


[ராட்சச வௌவால்]

இதை தவிர்த்து ஒவ்வொரு கோடுகளின் முனையிலும் இதனை வரைந்தவர்கள் ஒரு வெளிச்சமான வர்ணங்களின் இன்னொரு அடுக்கை கொடுத்திருக்கின்றனர். அதனால் எவ்வளவு தூரத்திலிருந்து பார்த்தாலும் மிகவும் தெளிவாகவும் பிரகாசமாகவும் தெரியும். பல நூறு வருடங்கள் ஆனாலும் அழியாது.

[ஹும்மிங் பறவை]

[நஸ்கா கோடுகளில் பல ஓவியங்கள் இதில் தெரிகின்றது]

[திமிங்கிலம்]

இதுவரை கண்டுப்பிடிக்கப்பட்ட ஓவியங்கள் / கோடுகள்:

- எட்டுக்கால் பூச்சி (46 மீட்டர் நீளம்)
- குரங்கு (55 மீட்டர் நீளம்)
- ராட்சச வௌவால் (குவானோ பறவை) (280 மீட்டர் நீளம்)
- பல்லி (180 நீளம்)
- ஹும்மிங் பறவை (50 மீட்டர் நீளம்)
- திமிங்கிலம் (65 மீட்டர் நீளம்)
- Pelican (285 மீட்டர் நீளம்)

[நஸ்கா கோடுகளில் கண்டுப்பிடிக்கப்பட்ட ஓவியங்கள்]

References:
http://en.wikipedia.org/wiki/Nazca_lines
http://www.peru-explorer.com/nasca.htm
http://unmuseum.mus.pa.us/nazca.htm

34 Comments:

நிஜமா நல்லவன் said...

ஆச்சரியமான தகவல்.....நன்றி .:: MyFriend ::.

ஆயில்யன் said...

அரிய தகவல்!

மைஃப்ரெண்ட்


படிக்க படிக்க ஆச்சர்யப்படுத்துகிறது :)

VIKNESHWARAN ADAKKALAM said...

சுவாரசியமான பதிவு,ஏற்கனவே தெரிந்திருந்தாலும் தமிழில் மிகவும் விரும்பிப் படித்தேன். மிக்க நன்றி.. வாழ்த்துக்கள்... மேலும் இது போல பல பதிவுகள் கொடுக்க வேண்டும்

scrat said...

சுவாரசியமான விஷயத்தை படிப்பவர் ஆர்வத்தை தூண்டுவது போல் சுருக்கமாக சொல்லியிருக்கிறீர்கள். நல்ல பதிவு. எரிக் வான் டைநிகேனின் "Chariots of Gods" படித்ததுண்டா?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சுவாரசியமா இருந்தது மைப்ரண்ட்.. எனக்கு இது பற்றி தெரியாது ...இப்பத்தான் படிக்கிறேன்.

வெங்கட்ராமன் said...

ஆகா, என்ன மலேசிய நண்பரே.
விக்னேஷ்வரனைப் போல் உங்கள் பக்கமும் வரலாற்று காற்று அடித்து விட்டதா.

ம், பதிவு நன்றாக இருக்கிறது.

இதை நாம் பார்க்கவே, சாட்டிலைட்டோ, விமானமோ தேவைப்படுகிறது.

எப்படி வரைந்தார்கள் என்று நினைத்தால், இப்பவே கண்ண கட்டுதே. . .

ALIF AHAMED said...

சுவாரசியமா இருந்தது மைப்ரண்ட்.. எனக்கு இது பற்றி தெரியாது ...இப்பத்தான் படிக்கிறேன்.
//

ரீப்பீட்டேய்ய்ய்ய்ய்

Anonymous said...

http://www.youtube.com/watch?v=tHwN8_qa2c8


வெடிகுண்டு
முருகேசன் 1

MSK / Saravana said...

நானும் இந்த NAZCA LINES பற்றி சில வருடங்களுக்கு முன்பு படித்திருந்தேன்..
இப்போது நீங்கள் நினைவுபடுத்தியிருக்கிறீர்கள்..
:)

பெருசு said...

//ராட்சச வௌவால்//

அண்ணே, இப்பிடி ஒரு படம்
நாஸ்காவுலே கிடையாது.

தேன்சிட்டு (ஹம்மிங் பறவை)படத்தை வேற கோணத்துல பாத்தா இப்பிடித்தான் வௌவால்
மாதிரி தெரியும்.

நாஸ்கா கோடு மட்டும் இங்க ஆச்சரியமில்லே.

நெறைய ஆச்சரியங்கள் பெரு நாடு முழுசும் கொட்டி கிடக்குது.

Sanjai Gandhi said...

ரொம்ப வியப்பா இருக்கு அனு.. மேலும் தெரிஞ்சிக்க ஆவலா இருக்கு.. சோம்பேறி தனம் பாக்காம இன்னும் எழுதுங்க.வாழ்த்துக்கள்.

Sanjai Gandhi said...

//பெருசு said...

நாஸ்கா கோடு மட்டும் இங்க ஆச்சரியமில்லே.

நெறைய ஆச்சரியங்கள் பெரு நாடு முழுசும் கொட்டி கிடக்குது.//

அந்த ஆச்சர்யங்களை பற்றி விரிவா எழுதுங்க பெரிசு. ரொம்ப புண்ணியமா போவும்.. எழுதிட்டு சுட்டி குடுங்க.

MyFriend said...

@நிஜமா நல்லவன்:

எனக்கும் ஆச்சர்யமான தகவல்தான் இது. :-)

@ஆயில்யன்:

ஆமாம். இதைப்பற்றி கூகுலில் தேடிப்பாருங்க. இன்னும் நிறைய ஆச்சர்யப்படுத்தும். :-)

@விக்னேஷ்வரன்:

ம்ம்.. அட்லாண்டிஸின் மர்மம் பற்றி எழுத சொன்னேனே. அது எப்போ எழுத போறீங்க? ;-)

MyFriend said...

@Scrat:

Chariots of Gods இன்னும் படிக்கவில்லை. ஆனால், இந்த புத்தகத்தின் கருத்தைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கு இந்த மாதிரி மர்மங்கள், ஆச்சர்யங்கள் பற்றி படிக்க பிடிக்கும். அதனாலேயோ என்னவோ இந்த மாதிரி கதைகளை எனக்கு பிடித்த வகையில் சொல்ல முயற்ச்சிக்கலாம். ஆனால், தமிழில் எழுதுவது கொஞ்சம் கஷ்டமே. அதான், இதுவரை இப்படிப்பட்ட தலைப்பில் எதுவும் எழூதியதில்லை. இனி எழுத முயற்சிக்கலாம். ;-)

MyFriend said...

@முத்துக்கா:

ம்ம்.. தெரியாத இடங்களைப்பற்றி சொல்லும்போதுதான் இன்னும் நம்மை பிரமிக்க வைக்கும். உண்மைதானே? இந்த மாதிரி இடங்களையெல்லாம் போய் பார்க்க முடிந்தால் பார்க்கணும்ன்னு ஆசையும் இருக்க்கு எனக்கு. :-)

MyFriend said...

@வெங்கட்ராமன்:

ஆமாம் வெங்கட்.. இபப்டி நல்ல பதிவுகளாய் எழுத சொல்லி கஷ்டப்படுத்துகிறார் விக்னேஷ். :-))))

@மின்னுது மீன்னல்:

நானும் முத்துக்காக்கு போட்ட பின்னூட்டத்தை இங்கே ரிப்பீட்டேய் போட்டுக்குறேன். ;-)

கோபிநாத் said...

\\முத்துலெட்சுமி-கயல்விழி said...

சுவாரசியமா இருந்தது மைப்ரண்ட்.. எனக்கு இது பற்றி தெரியாது ...இப்பத்தான் படிக்கிறேன்.\\

ரீப்பிட்டே ;))

MyFriend said...

@வெடிகுண்டு முருகேசன்:

யூடியூப் சுட்டிக்கு நன்றி. :-)

scrat said...

உண்மை....அனுப்பியிருக்கிறேன்..படியுங்கள்....ஒரு சில இடங்களில் கீதையை கூட மேற்கோள் காட்டியிருக்கிறார் மனிதர்..

ambi said...

//சுவாரசியமா இருந்தது மைப்ரண்ட்.. எனக்கு இது பற்றி தெரியாது ...இப்பத்தான் படிக்கிறேன்.//

வழிமொழிகிறேன். அப்படியே இதை ஒரு தொடர் கட்டுரை மாதிரி (உதாரணமா பெர்முடா ட்ரையாங்கிள் ) எழுதுங்க!

இல்ல, இல்ல டேக் ஆக்க சொல்லலை. :p

கானா பிரபா said...

பீதியை கிளப்பும் ,ஆச்சரிய தகவல்கள் நன்றி

கப்பி | Kappi said...

very informative!! pathivukku nanri!

MyFriend said...

@M. சரவணக்குமார்:

ஞாபகப்படுத்தப்பட்டதுக்கு நன்றி. இதைப்பற்றி மேலத்க தகவல் இருந்தால் எங்களுடன் பகிர்ந்துக்கொள்ளலாமே?

MyFriend said...

@பெருசு:

குவானோ மற்றும் ஹம்மீங்ன்னு இரண்டு பறவைகள் ஓவியங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டிருக்கின்றன. கடைசி படத்தை பாருங்கள் அண்ணா. ஆனால், அது வைவால் என்று நான் சொன்னதுதான் கொஞ்சம் பிழை. மன்னியுங்கள். :-)

ஆமாம் ஆமாம். பெரு நாடு சுற்றி நிறைய அதிசயங்களும் மர்மங்களும் இருக்கின்றன. :-)

MyFriend said...

@சஞ்சய்:

ம்ம்.. அந்த சோம்பேறித்தனம் எனக்கில்லாமல் இருந்திருந்தா இந்த பதிவையே எப்போதோ போட்டிருப்பேனே. :-))) இந்த மாதிரி தகவல்கள் நிறைய எழுத என் சோம்பேறித்தனங்களை இறைவன் போக்குவானாக. ;-)

வாழ்த்துக்களுக்கு நன்றி சஞ்சய். ;-)

MyFriend said...

@Scrat:

உங்கள் ஈ-பூக் கிடைத்தது. இன்னும் படிக்கவில்லை. இந்த வார இறுதியில் கலக்கிடலாம். ;-)

MyFriend said...

@அம்பி:

பெர்முடா ட்ரையங்கள் பற்றி ஏற்கனவே விக்னேஷ் எழுதிவிட்டார். http://vaazkaipayanam.blogspot.com/2008/08/blog-post_05.html

வேற ஏதாவது மர்மங்கள் என்னால எழுத முடியாதுன்னு பார்க்கிறேன். ;-)

MyFriend said...

@கானா பிரபா:

ஆஹா.. உங்களுக்கே பீதியை கிளப்பிடுச்சா? ;-)

@ கப்பி:

நன்றி அறிவுஜீவி சார். ;-)

அணிலன் said...

புத்தகத்தில் உள்ள கருத்தோடு உங்க கற்பனை குதிரையையும் தட்டி விடுவீங்கன்னு ஒரு எதிர்பார்ப்பு ;-)

பின்குறிப்பு: scrat தான் , இப்போது பரபரப்பாக தமிழில்!

Anonymous said...

Came through poovaasam. Thanks for the interesting info! Thinking of Chariots n Eric Vandanican's ET guessings. Cheers for bringing these types of refreshing infos in tamil blogging! (Now i am reading all your blogs in my own time with no hurry at poovaasam!)

With love and wishes
Osai Chella

(could not log in here and hence anony!)

Ramya Ramani said...

News To Me Wonderful thoughtful Post My Friend :)

\\ambi said...
//சுவாரசியமா இருந்தது மைப்ரண்ட்.. எனக்கு இது பற்றி தெரியாது ...இப்பத்தான் படிக்கிறேன்.//

வழிமொழிகிறேன். அப்படியே இதை ஒரு தொடர் கட்டுரை மாதிரி (உதாரணமா பெர்முடா ட்ரையாங்கிள் ) எழுதுங்க!
\\


பெர்முடா ட்ரையாங்கிள் இன்னும் இன்டரெஸ்டிங்கா இருக்குங்க..

Anonymous said...

சுவாரசியமான பதிவு...

Priya said...

interesting nanba..

kaikaragadd said...

Borgata to launch new casino games in March - KTR
ATLANTIC CITY, N.J. 속초 출장마사지 (WJZ) 오래된 토토 사이트 — Borgata Hotel Casino & Spa is making its grand opening 공주 출장안마 on 논산 출장마사지 Saturday, April 1, and it is set to open at Borgata 의왕 출장샵 Hotel