Thursday, December 28, 2006

148. மாய Blackout

இயற்கையில் சீற்றம் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே போகிறது. அதுவும் வருட கடைசியில் பெரிய பெரிய பேரிடர்கள் வருவது இப்போது சகஜமாகியுள்ளது. கடந்த வருடங்களில் டிசம்பரில்தான் நிலநடுக்கமும், சுனாமியும், ஹர்ரிகேனும் வந்தன.

காலம் கலிகாலம். பஞ்ச பூதங்களால் பாதிப்புகள் ஏற்ப்படும்ன்னு சொல்லியிருக்கின்றனர். 2006-இன் கடைசியிலும் நடக்கின்றன பல பேரிடர்கள். கடந்த வாரம் மலேசியாவில் பெய்த அடை மழையினால் வெள்ளம் ஏறிடதை பற்றி சொன்னேன். இப்போது இது ஓய்ந்துவிட்டது.. ஆனாலும் திரும்ப நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று கணித்திருந்த இந்த வேளையில் தாய்வான் நாட்டில் நிலநடுக்கம் நடந்தே விட்டது.

செவ்வாய் இரவு 8.30 மணியளவில் நடந்த இந்த நிலநடுக்கம் ரிச்சர்ட்டில் 7.1-ஐ குறித்திருக்கிறது. இந்த நிலநடுக்கத்தில் APCN2 (ஆசிய பசிஃபிக் கேபல் நெட்வர்க் 2) முற்றிலும் பாதிப்படைந்துள்ளது.

இதனால், இன்டெர்னெட் மற்றும் தொலைதொடர்பு லின்க் பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது. மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, மற்றும் ஹாங் காங் போன்ற நாடுகள் மாய இருட்டு-வெளி (அதாங்க, blackoutன்னு சொல்வாங்களே! நேரடி மாற்றம் செய்துப் பார்த்தேன்)-யில் அவதிப்படுகின்றன என்று சொல்லலாம்.

98% கம்யூனிகேஷன் லின்க் துண்ஸ்டிக்கப்பட்டுவிட்டதால், வலையில் நெரிசல்() ஏற்ப்பட்டுள்ளது. இந்த நாடுகள் வலைசேவை உபயோகிப்பவர்கள், அமேரிக்கா, ஜப்பான், சீனா, தாய்வான், தென்கோரியா மற்றூம் ஐரோப்பிய நாடுகளின் செர்வர்களை தொடைபுக்கொள்ளும்போது சிரமங்களை எதிர்நோக்குவர்.

ஆனாலும், நாம் வலை சேவைகளை அனுபவிக்கலாம். 2.0 மில்லியன் மக்கள் ஒரே பேக்கப் கெர்வரை பிங் பண்ணுவதால் சில தாமதங்கள் ஏற்ப்படும்.

கடல் அடியில் இருக்கும் அந்த லிங்கை சரி 3 வாரங்களுக்கு மேல் ஆகும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இது ஏனென்றால், இந்த நில நடுக்கத்தை அடுத்து தாய்வானை சுற்றி இருக்கும் கடலில் சுனாமி ஏற்ப்படலாம் என்று கணிக்கப்ப்ட்டுள்ளது.

வியட்னாம், மலேசியா, பிலிப்பினா மற்றும் சீனாவில் சுனாமிக்குறிய முன்னேற்ப்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளன.

Wednesday, December 27, 2006

147. இருக்கு ஆனா இல்லை..

பீட்டா இஸ் நோ மோர் பீட்டான்னு எல்லாரும் சொல்றாங்க..

பீட்டா என்பது சோதனை களம் மட்டுமே. சோதனைகள் வெற்றி அடைந்தால் புது பிறப்பாக (version) இது ஒருவெடுக்கும்ன்னு நான் உங்களுக்கு சொல்லனும்ன்னு அவசியம் இல்லை.. ஏனென்றால், பலர் இங்கு கணிணி மேதைகள்தான். உங்களுக்கு இது தெரிந்திருக்கும்.

ஆனால், புது ப்ளாக்கர் உண்மையிலேயே பிரச்சனைகள் இல்லையா? அப்படியென்றால் இது???

நான் இரண்டு நாளாகவே எனது நண்பர்களின் வலைகளில் (பழைய ப்ளாக்கர் உபயோக்கிப்பவர்கள்) கமேண்ட்ஸ் போட முயச்சிக்கிறேன். ஆனால் எனக்கு இந்த error கிடைப்பதுதான் மிச்சம்.


Error
We apologize for the inconvenience, but we are unable to process your request at this time. Our engineers have been notified of this problem and will work to resolve it.

புது ப்ளாக்கரில் நான் போடும் க்மெண்ட்ஸ்களுக்கு எந்த பிரச்சனைகளும் இல்லை. இதுக்கு உங்களில் யாராவது தீர்வு காண முடியுமா?

எனக்கு உதவ முடியுமா?

Monday, December 25, 2006

146. என்னம்மா கண்ணு.. ஆரம்பமாயாச்சு..


நேற்று திருவிளையாடல் ஆரம்பத்தை பார்த்தேன்.

படத்தை பற்றி விமர்சனம் எழுதப்போவதில்லை இம்முறை.. மாறாக ஒரு குட்டி பதிவுதான்.

விஜய், சத்யராஜ் மற்றும் சிம்பு பிரபல நடிகர்களின் சிறந்த படங்களின் ரீமேக் படங்களில் நடிக்க ஆசைன்னு வெளிப்படுத்திய இன்னேரத்தில்... அஜித் ஒரு படி மேலே போய் ரஜினியின் பில்லா படத்தின் ரீமேக் படத்தில் ஒப்பந்தம் ஆகிவிட்டார். ஆனால், இங்கு தனுஷ் சத்தம் இல்லாமலேயே மிஸ்டர் பாரத்தின் ரீமேக்கில் நடித்தே விட்டாருன்னுதான் சொல்லவேண்டும்.

இதை உருதிப்படுத்துவதைப்போல் என்னம்மா கண்ணு ரீமேக் பாடலும் அமைந்திருக்கிறது.

வில்லனிடமிருந்தே பணம் வாங்கி.. அவர் செய்யும் வியாபாரத்தையே துவக்கி.. குறுகிய காலத்தில் அவருக்கே போட்டியாக வந்து.. அவரை நிம்மதியாகவே விடாமல்.. டென்ஷனாக்கி.. கடைசியில் போட்டியின் காரணத்தை அறிந்து திருந்துவதுதான்.. இந்தக் கால மிஸ்டர் பாரத்தாக திரு என்கிற தனுஷ்.

திருவின் விளையாட்டின் ஆரம்பத்தைதான் திருவிளையாடல் ஆரம்பம்ன்னு வைத்திருக்கிறார்கள். இதில் குரு என்கிற பிரகாஷ்ராஜ் சத்யராஜைபோல் கெட்டவர் இல்லை. தன் தங்கையின் மேல் அதிகப்படியான பாசத்தை வைத்திருக்கும் அண்ணன் இவர். இவரின் மேல் தப்பே இல்லை.

ஷ்ரியாவுக்கு பாடல்களில் ஆடுவதும் படத்தின் முதல் பாதியின் காதல் காட்சியில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. பாடல்களை வித்தியாசமாக படம் பிடித்துள்ளனர்.

இக்காலக் கட்டத்தில் வெளியான ஈ மற்றும் வெயில் போன்ற கனமான படங்களின் தாக்கத்திலிருந்து மீள இப்படிப் பட்ட காமெடி படம் நமக்கு நல்ல என்டெர்டைனாக அமையும். நீங்களும் படத்தை பார்த்து ரசியுங்கள்.
மட மடவென்று இரண்டு நாளில் 7 பதிவுகளை போட்டாச்சு. இன்னொரு 7 நாள் ப்ளாக்குக்கு வர முடியாத சூல்நிலை எனக்கு திரும்பவும் வரலாம். அப்படி வரமுடிந்தால், புதிய பதிவு கண்டிப்பாக போடுவேன். இல்லையேல், பதிவுக்கு நீங்களும் நானும் வேய்ட்தான் பண்ணனும்.. என்னை மன்னியுங்கள்.

145. இன்னொரு இயற்கை பேரிடர் இங்கே...

ஒரு வாரமா எந்த பதிவும் போடாத போது என்னமோ நடந்துள்ளது மலேசியாவில்.. நம்ம நாடு மக்கள் சிலர் வெளிநாடுகளில் இருப்பவர்கள் இங்கே நடக்கும் விஷயங்களை பதிவாக போட சொல்லியிருந்தனர். ஆனால் மன்னிக்கவும்!! ஒரு வருத்தப் படும் விஷயம் ஒரு வாரமாக நடந்துள்ளது. ஆனால், இப்போதுதான் அதை பதிவாக போடுகிறேன்.

ஒரு வார காலமாய் தூறும் மழை காரணத்தினால் மலேசியாவில் 6 மாநிலங்களில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்ப்பட்டுள்ளது.

1- ஜோகூர்
அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலம் இதுதான். கிட்ட்த்தட்ட 75 000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் இறந்துள்ளனர். முஉவார், பொன்தியான், குலூவாங், ஜோகூர் பாரு, கோத்தா திங்கி மற்றும் செகாமாட் போன்ற இடங்கள் அதிகமாக பாதிப்புற்றது. 400 துயர் துடைப்பு இல்லங்களுக்கு மக்கள் மாற்றப்பட்டனர். இந்த இடங்களில் வெள்ளம் குறையும் தருவாயில் முவாரில் நிலமை இன்னும் மோசமாகவே இருக்கிறது. இதுக்கு காரணம் செகாமாட் அணையில் தண்ணீர் அபாரகர கட்டத்தில் இருப்பதும், எப்போதும் அதை தாண்டலாம் என்ற அச்சம்தான்.

2- மலாக்கா
ஜோகூரை அடுத்து அதிக பாதிப்பை ஏற்ப்படுத்திய மாநிலம் மலாக்காதான். ஒரு சின்ன மாநிலமாக இருந்தாலும், இதன் பல இடங்களில் தண்ணீர் புகுந்து விளையாடியுள்ளது. 30 மணி நேரமாய் தொடர்ந்து பெய்த அடை மழையால் பாத்து பெரெண்டாம் போன்ற இடங்களில் தண்ணீர் ஏறியதால், வெள்ளத்தின் அபாயத்தை குறைக்க டுரியான் துங்கால் அணை திறக்கப் பட்டும், ஒரு பலணும் கிட்ட வில்லை.

3- பகாங்
ரொம்பின், பெக்கான் மற்றும் குவாந்தான் போன்ற இடங்களும் இந்த வெள்ள அபாயத்திலிருந்து தப்பிக்க வில்லை. துயர் துடைப்பு இல்லங்களும், உதவியாளர்களும் விழிப்புணருடன் இருந்ததால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றினர்.

4- நெகிரி செம்பிலான்
ஜோகூரில் வெள்ளமேறிய அன்றைக்கே நெகிரியிலும் வெள்ளமேறியது.. ஆனாலும் பெரும் பாதிப்பு ஏற்ப்படவில்லை

5&6- திரங்கானு & கிளாந்தான்
குவாலா திரங்கானு மற்றும் குவா மூசாங்கிலும் அடை மழையால் வெள்ளமேறியுளது.

ஒரு வாரமாக போத்துவரக்கு மற்றும் வேலைகள் எல்லாம் முடக்கப்பட்டுள்ளது. ரயில் தண்டவாளங்களும், சாலைகளும் பலத்த சேதமடந்துள்ளது. மக்களின் வீடுகளும் ரொம்பவே அவலை நிலையில் உள்ளன. வெள்ளம் குறையை துவங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தத்தம் வீடுகளுக்கு திரும்புகின்றனர்.

ஆனாலும், மலேசிய மக்களே நீங்கள் இன்னொரு இயற்க்கைப் பேரிடருக்கு இப்பவே ஆயத்தம் ஆகுங்கள். அடுத்த வாரம் இதே சூழல் திரும்பவும் நிகழாம்... அடை மழை பெய்யலாம். மத்திய மாந்லங்கள் இந்த தடவை பாதிப்பு அடையலாம் என்று கணித்திருக்கிறார்கள்.
ஆகவே குவாலா லும்பூர், சிலாங்கூர் மக்கள் இப்பவே முன்னேற்பாடு செய்வது நல்லது.

வருட கடைசியில் உலக முழுவதும் இப்படியொரு பேரிடர் நடப்பது வருத்த்தை அழிக்கிறது. டிசம்பர் 26 நிகழ்வுக்கு பிறகு, தண்ணீரால் மலேசியாவை அதிகம் பாதித்த பேரிடர் இதுதான்.. ஆனாலும் முன்னேற்பாடாக சில செய்து வைத்திருந்த்ததால் பல பல உயிர்களை காப்பாற்ற முடிந்தது..

இவ்வேளையில் சுனாமியில் இறந்த உயிர்களுக்கும், இந்த பேரிடரில் உயிரிழந்த உயிகளுக்கும் நான் அஞ்சலி செலுத்துகிறேன்.

.....................................

144. உள்ளிருந்து அழுவது ஏன்?

இதற்கு முன் பாடல்களின் இசைக்கேட்ப நம் மன நிலை மாறுமென்று சொல்லியிருந்தேன்.

எனக்கும் அதே! அதே!

இன்பம் துன்பம் எல்லாவற்றிற்க்கும் உறுதுணை இந்த இசைதான். அதுவும் தமிழ் பாடல்கள்தான்.. ஆனாலும் நான் முன்பே சொல்லியிருந்தாற்போல், நான் முறையாக இசை பயிலவில்லை.
எல்லாம் நமக்கு கேள்வி ஞானம்தான்..

கவலையிருக்கும்போது நம்மை தேற்றிக்கொள்ள கண்களில் என்ன ஈரமோ, நெஞ்சோடு கலந்திடு பாடல்களை கேட்டு நாம் நம்மில் இருக்கும் பாரத்தை இறக்கி வைத்து கவலையை மறக்கிறோம். அதே நேரத்தில், சில சமயங்களில் நாம் அழுந்தே தீர வேண்டும் என்ற கட்டாயத்திலும் இருப்போம். கவலை மனதில் வைத்துக்கொள்ளாமல் அழுது தீர்த்திடு... இல்லை அது உனக்குள் நாளடைவில் மன அழுத்தத்தை உருவாக்கிவிடும்ன்னு பெரியவர்கள் சொல்ல் நாம் கேட்டிருக்கிறோம் அல்லவா?

அதற்காகவே நான் ஒரு பாடலை கைவசம் வைத்துள்ளேன்.

ஒரு அருமையான படத்திலிருந்து அருமையான பாடல்.. ஓ மனமேன்னு ஹரிஸ் இசையமைக்க இதை பாடியவர் ஹரிஹரன்.

இந்த பாடலை நான் முதன் முதலில் கேட்கும்போதே என் மனதில் ஒரு வித ராசாயண மாற்றம். கண்கள் ஈரமாகுவதை உணர்ந்தேன். ஏனென்று புரியவில்லை..

உடனே ஒன்ஸ் மோர் போட்டேன் இந்த பாடலுக்கு. வரிகளை உற்று கவனித்தேன். புரிந்தது அந்த மாற்றம். அருமையான உண்மையான வரிகள்.. வலிகள்..

இருக்கும் ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு மனிதனுக்கும் பொருந்தும். எனக்கும் பொருந்தியது. அந்த காதல் வரியை தவிர..

//இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து
இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை..
துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து
துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை..
இன்பம் பாதி துன்பமும் பாதி
இரண்டும் வாழ்வில் அங்கம்..//


இது நாம் வாழ்வில் கற்றுக்கொண்ட முதல் பாடம்.. இது நாம் குழந்தையாய் இருக்கும்போதே கற்றுக்கொண்ட பாடம். வாழ்க்கை ஒரு சக்கரம் என்று உணர்த்தும் வரிகள்.

அதுவே கவிதையாக, ஒரு உதாரணமும் கொடுக்கப்பட்டது இப்படி:
//நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால்
நகையாய் மாறும் தங்கம்//


வரிகளுக்கேற்ற அந்த இசையும், ஹரிஹரனின் சிதுவேஷன் குரலும் பாடலுக்கு பலம். இதுவே என்னை கவர்ந்த சோகப் பாடல். என்னை அழவைக்கும் பாடல்.

நீங்களும் கேட்டு அழ, இந்த லிங்க்கை சொடுக்குங்கள்.
http://www.oosai.com/mail_sng_view.cfm?plyid=835

வரிகள் கீழே:

ஓ மனமே.. ஓ மனமே..
உள்ளிருந்து அழுவது யேன்?
ஓ மனமே.. ஓ மனமே..
சில்லு சில்லாய் உடைந்தது யேன்?
மழையை தானே யாசித்தோம்
கண்ணீர் துளிகளை தந்தது யார்?
பூக்கள் தானே யாசித்தோம்
கூலாங் கற்களை எறிந்தது யார்?
(ஓ மனமே..)

மேகத்தை இழுத்து போர்வையாய் விரித்து
வானத்தில் உறங்கிட ஆசையடி..
நம் ஆசை உடைத்து நார் நாராய் கிழித்து
முள்ளுக்குல் எறிந்தது காதலடி..
கனவுக்குள்ளே காதலை தந்தாய்
கனுக்கள் தோரும் முத்தம்
கனவு கலைந்து எழுந்து பார்த்தால்
கைகள் முழுக்க ரத்தம்..
துலைகள் இன்றி நாயனமா?
தோல்விகள் இன்றி பூரனமா?
(ஓ மனமே..)

இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து
இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை..
துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து
துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை..
இன்பம் பாதி துன்பமும் பாதி
இரண்டும் வாழ்வில் அங்கம்..
நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால்
நகையாய் மாறும் தங்கம்
தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி..
வெற்றிக்கு அதுவே யேணியடி..
(ஓ மனமே..)

143. முயற்சி இருந்தால் மார்க்கம் உண்டு..

வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா
தடைக்கல்லும் உனக்கொரு வழிக்கல்லப்பா..


என்று படையப்பாவில் வரும் வரிகள் ஞாபகம் இருக்கிறதா?

ஒவ்வொருவருக்கு தடைகள் வெவ்வேறு வழியில் வருகின்றன. நாம்தான் நம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்.

இதோ இந்த நத்தை அதன் தடைக்கு தீர்வு காணுகிறது என்று பாருங்கள்..

யாராவது உங்களிடம் ஏதாவது செய்ய முடியாது என்று சொன்னால்:

சுற்றும் முற்றும் பாருங்கள்


இருக்கும் ஒவ்வொரு வழியையும் யோசியுங்கள்


அந்த வழியை மேற்கொள்ளுங்கள்


கடவுள் உங்களுக்கு அருளிய எல்லாவற்றையும் உபயோகியுங்கள்


வித்தியாசமாக சிந்தியுங்கள்


கடைசியில் வெற்றி உங்களுக்கே! மற்றவர் சொன்னது தவறு என்று நிரூபியுங்கள்


கடவுள் நம்மால் தாங்கிக்கொள்ள முடியும் தடைகளைதான் தருவார். அதை எதிர்க்கொள்ள நம்மால் கண்டிப்பாக முடியும். முயற்சி இருந்தால் மார்க்கம் உண்டு!

இந்த நண்ணாளில் என்னால் முடிந்த ஒரு சின்ன பங்கு.

142. சிகரம் தொட்ட பெண்மணி இவர்..

நான் படித்ததில் சுட்டது இது. ஒரு வார நாளிதலில் இந்திரா காந்தியைப் பற்றி படித்தேன். சாதித்த சில பெண்களில் இவரும் ஒருவர். இவரைப் பற்றி நான் படித்ததை உங்களிடமும் பகிர்ந்துகொள்கிறேன்.


ஒரு முயல்குட்டி மாதிரி ஆனந்த பவன் மாளிகையில் துள்ளியோடி விளையாடிக்கொண்டிருந்த சிறுமி இந்திராவுக்கு சுதந்திரதாகவும் தேசிய இயக்கியப் பற்றும் இயவதலிலேயே ஏற்பட்டது வியப்பல்ல. காந்தி தொடங்கி தாகூர் வரை அவரது தந்தையின் அத்தனை நண்பர்களோடும் அவருக்கு இளவயதிலேயே அறிமுகமிருந்தது ஒரு பெரிய வரம்.

அவருக்கு சரித்திரப்படியில் ஆர்வம் இருந்தது. எழுத்தாளராக வேண்டும் என்கிற கனவு இருந்தது. ஆனால், அரசியல்வாதியாவோம் அன்றோ, ஆட்சியைப் பிடிப்போம் என்றோ அந்த வயதுகளில் அவரே நினைத்துப் பார்த்ததில்லை. தென்னாப்பிரிக்காவில் அடிமைகளுக்கு வேலையாக காங்கிரசின் தீவிர உறுப்பினராகத் தன்னைப் பதிவு செய்து கொண்டு போராட்டங்களுக்காக வீதியில் இறங்கி விட்டார்.

ஒரு பக்கம் காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினராகத் தீவிரப்பணிகள், மறு பக்கம் தந்தை நேருவின் உதவியாளர் மாதிரியே செயல்பட்டு அரசியல் பணிகள். இன்னொரு பக்கம், இளவயதுத் தோழர் ஃபேரோஸ் காந்தியுடன் தீவிரக்காதல் என்று காலில் சக்கரம் கட்டி கொண்டிருந்த இந்திராவை அப்போது எல்லாருமே வியப்பாகப் பார்த்தார்கள்.

நேரு பழமைவாதி இல்லை. காதல் விரோதியும் இல்லை. ஆனால் அது நிஜமான காதல்தானா என்று அவர் கவலைப்பட்டார். முடிவில் இந்திராவின் காதல்தான் வென்றது. காந்தியடிகள் ஆசியுடன் இந்திரா ஃபெரோஸ் திருமணம் 1941-இல் நடந்தது. அந்தக் கால கட்டத்தில் சீர்திருத்தத் திருமணங்கள் அப்படியொன்றும் அதிகரித்திருக்கவில்லை. அந்தத் திருமணத்தை கண்டித்து நேருவின் ஆனந்தபவன் வீட்டுக்கு நூற்றுக் கணக்கான தந்திகள் வந்தன.

ஒரு மாபெரும் தேசியத் தலைவரின் மகளை மணந்ததன் மூலம் ஃபெரோஸுக்குக் குட்டி குட்டியாக நிறைய தர்மசங்கடங்கள் உண்டாகத் தொடங்கின. அவர் னேஷனல் ஹேரோல்டு என்கிற பத்திரிக்கையில் உத்தியோகம் பார்த்துக்கொண்டிருந்தார். அரசியல் ஆர்வமும் வந்தது. காங்கிரஸ் உறுப்பினர்தான் என்றாலும் சொஷலிசத்தில் மிகத் தீவிரமாக ஆர்வம் காட்டினார். இந்திராவோ, இருபத்தி நாலு மணிநேரமும் தந்தையின் நிழல் மாதிரி கூடவே இருக்க வேண்டியிருந்தது. அதற்காக ஒரு மாப்பிள்ளை எத்தனை காலத்துக்கு தான் மாமனார் வீட்டிலேயே தங்க முடியும்? இங்கேதான் சிக்கல் வரத் தொடங்கியது. ஃபெரோஸ், தனியே ஓர் அறை எடுத்துக்கொண்டு வசிக்கத் தொடங்கினார். இந்திரா தந்தையுடனேயே தங்கினார்.

சுதந்திரத்துக்குப் பிறகு இந்திரா அநேகமாக நேருவுடன் அவர் போன அனைத்து இடங்களுமே வெளிநாடுகள்.இதனால் குடும்ப விரிசல் அதிகரித்தது. நேருவின் மகளாக இருப்பதுதான் தன் பெரிய பாரம் என்று இந்திரா நினைத்த நேரம் அது. ஆனால், தூக்கி தள்ளிவைக்கக் கூடிய பாரமா அது! வேறு யாருக்குக் கிடைக்கும் அப்படியொரு வாய்ப்பு! ஆகவே மிக முக்கியமான தொரு முடிவை அவர் அப்போது எடுக்கவேண்டி இருந்தது. கணவரா? தந்தையா?


தொடரும்..

Sunday, December 24, 2006

141. கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் நண்பர்களே!

வருட இறுதிக்கு வந்தாலே னமக்கெல்லாம் குதூகளம்தான்..
ஏன்?

ஏன் உங்களுக்கு தெரியாதா என்ன?

1- நீண்ட லீவு (ஆனால், எனக்கு இல்லை)
2- கிறிஸ்மஸ் பண்டிகை
3- புது வருட பிறப்பு
4- ஹஜ்ஜி பெருநாள்

எல்லாமே இணைந்து வருவதால், நம்மைச் சுற்றி உள்ளவர்கள் இந்த பண்டிகைகளை கொண்டாடும்போது, நாம் அவர்களுடன் இணைந்து கொண்டாடும்போது வரும் சந்தோஷத்தில் அளவே இல்லை.

எனக்கு மறக்க முடியாத கிறிஸ்மஸ்ன்னு சொன்னால், அது 2002-ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் முதல் நாள் மலாக்கா போர்துகிஸ் செட்டல்மெண்டில் நடந்த கவுண்ட் டவுனில் கலந்து கொண்டதுதான்.

இதற்க்கு முன் இரவு 12 மணிக்கு மேல் வெளியே சென்றிராத நான், நண்பர்களின் வற்புறுத்ததின் பேரில் அந்த இரவு வெளியே சென்றது வீண் ஆகவில்லை.

அவர்களின் கலாச்சாரத்தை.. அவர்களின் கொண்டாட்டத்தை.. அவர்களின் மகிழ்ச்சியை.. அதுவும் போர்த்துகிசியர் கிறிஸ்மஸ் கொண்டாடும் முறையை அறிய முடிந்தது.

இதுனால், உலக மக்களுக்கு நான் என்ன சொல்லபோகிறேன் என்றால்.. ஹ்ம்..ஹ்ம்.. (குரலை சரி செய்துகொண்டு).. கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் நண்பர்களே!!

Merry Christmas to all my friends. Enjoy Your Day!!


Santa Claus, Where is my gift????

140. வேலையிருக்கு.. நேரமில்லை...

ஒரு வார நீண்ட ............................. இடைவேளிக்கு பிறகு இந்த பதிவு.

ஒன்னும் இல்லங்க. ஆபிஸ்ல தலைக்கு மேலே வேலை. நிறைய ப்ராஜெக்ட். எல்லாவற்றையும் 10-ஆம் தேத்க்குள் முடிக்க வேண்டும். ஏனென்றால், என்னுடைய ப்ராக்டிகள் அன்றைக்குதான் முடிவடைகிறது.

ஒரு வாரமாக இங்கவும் அங்கவுமாக திரும்ப கூட நேரமில்லை. ப்ளாக் திறக்கவும் நேரமில்லை. வார இறுதியில் திறக்கலாம்ன்னு நினைத்தாலும் முடியவில்லை. சில சமயங்களில் என் வேலைகளை வீட்டுக்கு கொண்டு வந்தும் அவைகளை கவனிக்கிறேன்.

அடுத்த வாரம் என் பல்கலைக்கழகத்திலிருந்து ஒரு ஆசிரியர் வருவதாக தகவல் வெள்ளிக்கிழமைதான் கிடைத்தது. அப்பப்பா. இரண்டு வாரமா வேலை பழுவில் ரீபோர்ட் எழுத மறந்துவிட்டேன். இதையும் இரண்டு நாளில் முடிக்க வேண்டும்.

நான் ஒன்றும் எழுதாத போதும் சிலர் என் ப்ளாக்கிற்கு வந்து பார்த்தற்க்கும், கமெண்ட்ஸ் போட்டதுக்கும் நன்றி. அடுத்த வாரமும் நான் ஃப்ரீயாய் இருப்பேனா இல்லயான்னு தெரியாது. டைம் கிடைத்தால் எழுதுகிறேன். இல்லையேல் லீவு போடுவதற்க்கு என்னை மன்னியுங்கள்.

இருக்கும் சில நிமிடங்களில் உங்கள் ப்ளாக்குகளையும் விசிட் அடிப்பேன்.

ப்ரேயின் தீசரும் தற்காலிகமாக நிருத்தப்பட்டிருக்கு. விரைவில் இதையும் தொடர்வேன்.

Monday, December 18, 2006

139. ஜூன் போனால் ஜூலை காற்றே.. கண் பார்த்தால் காதல் காற்றே!!

ஜீவாவின் உன்னாலே உன்னாலே பாடல்கள் வெளியீடு கண்டுவிட்டது. நீங்கள் கேட்டுவிட்டீர்களா?

ஜீவா ஒரு ஒளிப்பதிவாளர். ஒளிப்பதிவாளர்கள் இயக்குனராகினால், அவர்களின் படங்கள் செதுக்கி வச்ச சிற்ப்பங்களை போல் இருக்கும்.. காட்சிகள் ஒவ்வொன்றும் ஓவியங்களாக இருக்கும். உதாரண்த்திற்க்கு PC ச்ரிராமின் வானம் வசப்படும், KV ஆனந்தின் கனா கண்டேன். அந்த வரிசையில் ஜீவா.

12B, உள்ளம் கேட்குமே..இரண்டிலுமே வெவ்வேறு கதைகளை கொடுத்தவர்.

12B-இல் ஒரு சில விநாடிகளால் ஒரு மனிதனுக்கு ஏற்ப்பட்ட மாற்றங்களை அழகாக படமாக்கினார். ஆனால், இந்த படம் மக்களிடம் முழுமையாக போய் சேரவில்லை. பலருக்கு இந்த கதை புரியவில்லை. (அ ஆ போல் இரண்டு கேரக்டருக்கும் வெவ்வேறு உடை கொடுத்திருந்தால் படத்தின் கதை சுலபமாக ரீச் ஆகியிருக்கலாம். :-P) ஆனாலும், 2001-ஆம் ஆண்டின் அதிகவிற்ப்பனையான ஆடியோ கேசட்/ சிடி 12Bதான்..

ஒரு இடைவேளைக்கு பிறகு இவரின் இரண்டாவது படைப்பாக வெளியிட்டது உள்ளம் கேட்குமே. இவர் அறிமுகப் படுத்திய ஷாமை இந்த படத்திலும் நடிக்க வைத்தார். அசின், பூஜா மற்றும் ஆர்யாவை அறிமுகப்படுத்தி, லைலாவையும் நடிக்க வைத்தார். ஒரு நட்பின் இலக்கணம்ன்னு கதைக்கரு சொன்னவர், படத்தை வெளியிட ஏனோ தாமதப்படுத்தினார். அசின், பூஜா, ஆர்யா மற்ற படங்களில் பூக் ஆகி, அந்த படங்கள் வெளியாகி இவர்கள் பரப்பாக பேசப் பட்ட நிலையில், இந்த படம் ரிலீஸ் ஆனது. பாடல்கள் ஏற்க்கனவே ரசிகர்களிடம் பெரிய வரவேற்ப்பு பெற்ற நிலையில், படத்தை பார்க்க ஆர்வமும் நிறையவே இருந்தது.

இவர் இவரை காதலிப்பாரோ? இல்லை அவர் இவரை காதலிப்பாரோ? அவர் இவரை வேண்டாம்ன்னு சொல்லிவிடுவாரோ? ஏன் இவர் அழுகிறார்? கதை இப்படி இருக்குமோ?ன்னு படத்தை பார்க்குமுன்னேயே நிரைய கேள்விகளை எழுப்பியது. படம் பார்த்தபோது இப்படியொரு படமா? ஆஹா! அருமை அருமை!ன்னு சொல்லவைத்த படம். நண்பனின் திருமணத்தில் கல்லூரி நண்பர்கள் ஒன்று கூடும்போது பழைய நினைவுகளை ஒவ்வொன்றாக கலைவது அந்த படத்தின் ஹைலய்ட். இதை பார்க்கும்போது நம் நண்பர்களை நினைவு கூர்ந்து நம்மையும் பின்னே எழுத்து செல்கிறது.. ஈன்த படம் ஓரளவு ஓடினாலும், ஹிட் ஆகாதது வருத்தமே! ஆனாலும், நம்மளை போல் இளைஞர்களை இந்த படம் ரொம்பவே கவர்ந்ததென்று சொல்லாம். எனக்கும்தான்..

இவரின் இந்த தச்-தான் என்னையும் கவர்ந்தது. அதனாலேயே இவர் ஜூலை காற்றில் படத்தை இயக்கபோகிறார்ன்னு நியூஸ் வந்ததிலிருந்தே வேய்ட் பண்ணிக்கிட்டு இருக்கேன். தமிழக வரிவிலக்குக்காக இந்த படமும் உன்னாலே உன்னாலேன்னு பெயர் மாற்றம் கண்டது.

படத்தின் நாயகனாக மும்பை மோடல் வினயையும், நாயகிகளாக கஜோலின் தங்கை தனிஷா முகர்ஜியும் சாதாவும் நடிக்கிறார்கள். வினயும் தனிஷாவும் - அசின், ஆர்யா, ஷாமைபோல் பிரபலம் ஆவார்கலா இல்லையான்றது படம் வெளியானபிரகுதான் தெரியும்.. ஆனாலும், ஜீவா இவர்களை அழகாக ஷெதுக்கியிருப்பார்ன்னு நான் நினைக்கிறேன்.

படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியானது.மொத்தம் 6 பாடல்கள்.

1- ஹலோ மிஸ் இம்சையே - GV பிரகாஷ், அனுஷ்கா
பிரகாஷ் வெளி இயக்குனரிடம் பாடிய முதல் பாடல். விருவிருப்பான பாடல்.

2- இளமை உல்லாசம் - கிரீஷ், ஷாலினி
2 நிமிட பாடல்தான். நிறைய வாத்தியங்கள் இல்லாமல் இயற்றிய பாடல். நட்பினை உணர்த்தும் பாடல். ஆனந்தம் (12B), பூ போல்(மின்னலே) ரகம்.

3- ஜூன் போனால் - கிரீஷ், அருண்
படத்தின் ஹைலைக்ட் பாடல். காதலில் நடந்த சில ஊடல்களை நினைத்து பாடிய பாடல். இதை கேட்கும்போது மஞ்சல் வெயில் (வேட்டையாடு விளையாடு) கேட்பதுபோல் எனக்கு தோன்றுகிறது.

4- முதல் நாள் இன்று - கே.கே, மகாலட்சுமி ஐயர்
ராங் டே பசந்தியில் ரூபரூ பாடலை கேட்டதுண்டா? பாடலின் ஆரம்பம் அதேபோலவே இருக்கு. ஆனாலும் இது ஒரு காதல் டூயட். பாடல் முழுதும் கீதாரின் இசையை பிண்ணனிய்ல் கொண்டது.

5- முதல் முதலாக - கார்த்திக், கிரீஷ், ஹரிணி
படத்தின் தீம் பாடல். கார்த்திக் பாடுகிறார் என்றால் சொல்லவே வேண்டாம். பாடல் அருமை. "முதல் முதலாக முதல் முதலாக பரவசமாக பரவசமாக வா வா வா அன்பே.." என்ற வரி பட முழுதும் ஒலிக்கும்ன்னு நினைக்கிறேன்.

6- வைகாசி நிலவே - ஹரிசரண், மதுசிரி
காதல் படத்துக்கு பிறகு ஹரியின் குரலுக்கு பொருத்தமாக அமைந்த பாடல் இது. ஆனாலும், மதுச்ரி வரிகளை தப்பு தப்பாக உச்சரிப்பது வருத்ததை அளிக்கிறது.

ஆகமொத்ததில், உள்ளம் கேட்குமே அளவுக்கு இல்லைன்னாலும், பாடல்கள் ரசிக்கிர வண்ணமே இருக்கிறது மகிழ்ச்சி.

138. பிரேயின் தீசர் 30 (Brain Teaser 30)

KeyBoard is the right answer for yesterday's teaser.

Congrats to:
Jessie, Rajesh, Johnson D.S.,
FruttiTooty, Mr. Bond, C.M. Haniff,
G3, Wonderboy & Naan..

All of you answered it correctly.;-)

Today's one a short one:
Why is Saturday night important to Julius's girl friend?

Friday, December 15, 2006

137. கண்களில் என்ன ஈரமோ??

சிலர் வருத்ததுல இருக்கும்போது, யாராவது வந்து சமாதானம் படுத்தவேண்டும்ன்னு நினைப்பாங்க. மற்றவர்களிடம் தன் சோகங்களை பறிமாறிகொண்டால், தன்னிடம் இருக்கும் பாரம் இறக்கி வைக்கப்படுவதைபோல் உணர்வார்கள்..

ஆனால், எனக்கு என்னுடைய பிரச்சனைகள் / சோகங்களை நானே தாங்கிகொள்ள வேண்டும்ன்னுதான் நினைக்கிறேன். பாடல்கள் / இசைகள் - அதிலிருக்கும் வரிகள் பல பல சமயங்களில் எனக்கு உருதுணையாக இருந்திருக்கு.

அழ வேண்டும்ன்னு நினைக்கிற நேரங்களிக் அழவைக்கும் பாடல்களை கேட்பதும், சிரிக்க வேண்டிய நேரத்தில் சந்தோஷமான பாடல்கள் கேட்பதும், அசைக்ன்மென்ட் கடைசி நாளில் / கடைசி நிமிடங்களில் செய்யும் போது விருவிருப்பான பாடல்களை கேட்பதும், அமைதியான நேரங்களில் மனதை தழுவும் சென்டிமென்ட் பாடல்களை கேட்பது என் வழக்கம்.. இதுக்காகவே ஒரு பெரிய டாதாபேஸ்(database) வச்சிருக்கேன். :-)

நான் கவலையில் இருக்கும்போது எனக்கு ஆறுதல் சொல்வதற்க்காக சில பாடல்கள் கேட்பேன் அதில் "கண்களில் என்ன ஈரமோ"ன்ற பாடலும் ஒன்று. உழவன் என்ற படத்துக்காக பாலசுப்ரமணியமும் சித்ராவும் பாடிய இந்த பாடலுக்கு இசையமத்தவர் ரஹ்மான்தான்.

இந்த பாடலை நீங்கள் இங்கே கேட்கலாம்: http://www.oosai.com/mail_sng_view.cfm?plyid=1100'

கண்களில் என்ன ஈரமோ
நெஞ்சினில் என்ன பாரமோ
கைகளில் அதை வாங்கவா
ஒரு தாயைபோல்
உன்னை தாங்கவா?
(கண்களில்)

பெற்றவள் விட்டு போகலாம்
அன்னை பூமியும் விட்டு போகுமா?
தன்னுயிர் போல காப்பதில்
தாயும் நிலவும் ஒன்னுதான்..
இருக்கும் தாயை காத்திடு
மயக்கம் தீர்ந்து வாழ்ந்திடு
புது கோலம் போடு
விதி வாசலில்
கலக்கம் ஏனையா?
(கண்களில்)

அம்மம்மா இன்று மாறினேன்
அன்புக்கு நன்றி கூறினேன்
உள்ளத்தின் காயம் ஆறவே
உதவியதும் வார்த்தைதான்
நிம்மதி இன்றி வாடினேன்
நின்றிட நிழல் தேடினேன்
திக்கற்று போன வேளையில்
தெரிந்தது என் பாதைகள்
உனது பாடல் கேட்டது
மனதில் பாலை வார்த்தது
புயல் காற்றில் வாடி
நின்ற ஓடம்தான்
கரையை சேர்ந்தது

கண்களில் இல்லை ஈரமே
நெஞ்ஜினில் இல்லை பாரமே
கைகளில் அதை வாங்கினாய்
ஒரு தாயை போல
என்னை தாங்கினாய்..
(கண்களில்)


இந்த பாடலின் இசையே நமது வலியில் பாதியை போக்கிவிடும்.. பலமான இசை இல்லாமல், மிகவும் குறைவான வாத்தியங்களை பயன் படுத்தியிருக்கிறார் ரஹ்மான். அதுவும் 1:28-இலிருந்து 1:43 நிமிடங்கள் வரை வரும் அந்த பியானோ இசை அருமை. (நான் இசையை பற்றி படிக்கவில்லை. ஏதாவது தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும். இது நான் உணர்ந்த விஷயங்கள் மட்டுமே!)

// அம்மம்மா இன்று மாறினேன்
அன்புக்கு நன்றி கூறினேன்
உள்ளத்தின் காயம் ஆறவே
உதவியதும் வார்த்தைதான்
நிம்மதி இன்றி வாடினேன்
நின்றிட நிழல் தேடினேன்
திக்கற்று போன வேளையில்
தெரிந்தது என் பாதைகள்
உனது பாடல் கேட்டது
மனதில் பாலை வார்த்தது
புயல் காற்றில் வாடி
நின்ற ஓடம்தான்
கரையை சேர்ந்தது//


பாலா பாடிய இந்த வரிகள்தான் என்னை வருடிய சில வரிகள்ன்னு சொல்லலாம்.. அம்மம்மா.. அருமை அருமை!! அழுதுகொண்டிருந்தவனும் கூட அழுவதை நிருத்திவிடுவான்.

இந்த பாடலில் நீங்கள் கவனித்தீரானால், முதல் பாதியில் சித்ரா பாலாவுக்கு ஆறுதல் கூறுவார். அந்த ஆறுதலில் அவர் மாறி நான் கவலையை மறந்தேன் என்று இரண்டாம் பாதியில் பாடுவார். ச்ந்தோஷமான ஒரு சூழல் ஒருவாகிவிடும்..

இதே சாயலில் மூன்று வருடத்துக்கு முன் ஒரு பாடல் வெளியானது ஞாபகம் இருக்கிறதா? இதேபோல், அந்த பெண் சமாதானம் படுத்த, இரண்டாம் பாதியில் அந்த ஆண் கவலை தெளிந்து பாடுவார். இதுவும் ஒரு ஹிட் பாடல். எனக்கு மிகவும் கவர்ந்த பாடல்களில் இன்னொன்று. உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?

136. பிரேயின் தீசர் 29 (Brain Teaser 29)

Normally Maths questions are the easy one! Yes. Even yesterday's teaser was answered correctly by:
1- Shankar
2- Rajesh
3- G3
4- C.M. Haniff

According to Shanlar, this is too easy and he wants a difficult one.. Hmm.. Then try this:

Can you find something which has keys that open no locks,
with space but no room, and allows you to enter but not to go in?

Thursday, December 14, 2006

135. சினிமா நியூஸ் 4

கொஞ்ச நாளா சினிமா நியூஸ் எழுதாதனால கை ரொம்ப அறிக்க ஆரம்பிச்சுடுச்சு.. அதான் திரும்பவும் எழுத ஆரம்பிச்சுட்டேன். நீங்கதான் கொஞ்சம் பொருத்துக்கனும். ஹீ ஹீ ஹீ..

"அகர முதல" மாதிரி முதல்ல "அ"ன்னு ஆரம்பிக்குற அசினைப் பற்றி.. போக்கிரி படத்துல குத்தாட்டம் போட்டுகிட்டிருந்த அசினின் காலில் ஆணி குத்தியதில் அம்மணி ஒரே கத்தல்.. இருந்தாலும் அவர் ஆட முயற்ச்சி செய்ய, பிரபுதேவா இது சரி வறாதுன்னு முடிவு செய்து, இதே பாடலில் ஷூட் செய்ய முடிவு செய்து, அசின், விஜய், ராஜு சுந்தரம் மற்றும் ஒளிபதிவாளரை மட்டும் அனுப்பி வைத்திருக்கிறார். பாரினில் ஷூட் செய்தால், க்லோக்ஸ் அப் காட்சிகளை தவிர்க்கலாம், அசினின் வழியையும் மறைக்கலாம்ங்கிறது பிரபுவின் ஐடியா.. அசினின் காலில் ஆணி ஏறியதைப்பற்றி விரிவாக இங்கே படிக்கவும்.

நாளைக்கு சென்னையில் நட்சத்திர திருவிழா. எல்லாம் நட்சத்திரங்களையும் காணலாம். நாளைக்குதானே சோனியா அகர்வால் திருமதி செல்வராகவனாகிறார்!! ஜோவை போல் இவரும் திருமணத்துக்கு பிறகு நடிக்க மாட்டாராம்.. இவர் செல்வாக்கு துணையா போஸ்ட் ப்ரோடக்ஷனில் இணையபோகிறாராம். நல்ல செய்திதான். தனுஷ் அப்பாவான பிறகுதான் அண்ணன் திருமண செய்வது, அவரின் ஜெயிக்க வேண்டும் என்ற வெறியை காட்டுகிறது. திருமணத்துக்கு பிறகு, இன்னும் நல்ல நல்ல படத்தை கொடுத்து முன்னேற நமது வாழ்த்டுக்கள். இவர் இப்போது டைரக்ட் செய்யும் படம் ஒரு தெலுங்கு படம். இதன் பிறகு, இது மாலை நேரத்து மயக்கம் என்ற படத்தை சூர்யாவின் தம்பி கார்தியை வைத்து இயக்கப்போவது நாமெல்லாம் அறிந்ததே!

புதுமணதம்பதிகள் செல்வா-சோனியா


மற்ற செய்திகளுக்கு முன் ஒரு சின்ன இடைவேளை: இது இந்த மாதத்தில் திருமணம் செய்து கொண்ட நடிகர்களின் நிழற்படங்கள்

அருண் தன் மனைவியுடன்

மனோஜ் நந்தனாவுக்கு தாலி கட்டும்போதுரேணுகா மேனன் தன் அமேரிக்கா கணவருடன்காயத்ரி ரகுராம் தன் கணவருடன்


காமெடி வ(வெ)டிவேலு இம்சை அரசன் 23-ஆம் புலிகேசில அசத்தியிருந்தார். பிறகு தேசிய பறவையில் 9 வேடத்தில் நடித்தார். இப்போது திரும்பவும் ஹீரோவாக 4 வேடத்தில் இவர் நடிக்கும் படம் இந்திரலோகத்தில் நா அழகப்பன்". இதுவும் ஒரு காமெடி படம்தான். இதில் இவருக்கு 3 ஜோடி. அனேகமா ஷில்பா ஷெட்டிதான் இவரோட இணைந்து நடிக்கபோகிறார்..

சில நாட்களுக்கு முன் சரிதா செல்வி நாடகத்தில் நடிக்க போவதில்லைன்னு முடிவெடுத்தார். இப்ப அவரே நடிக்கனும்ன்னு நினைச்சகூட அவர் நடிக்க முடியாது.. 500 எபிசோட்லை தொடபோகும் இந்த மெகா சீரியல் டிசம்பர் 29-இல் ஒரு முடிவை நாடுகிறது.. அப்பாடான்னு பெரு மூச்சி விடுவதற்க்குல், ராதிகா சொன்ன அடுத்த வார்த்தை: "புது வருடத்திலிருந்து ரடான் டிவி ஒரு புதிய மெகா தொடருடன் உங்களை சந்திக்கும்"

ஜீவாவுடன் ஹரிஸ் ஜெயராஜ் கைகோர்த்த படங்களின் பாடல்கள் மெகா ஹிட். 12பி, உள்ளம் கேட்குமே.. இரண்டுமே கேட்க கேட்க சலிக்காத பாடல்களை கொடுத்தது. இந்த ஹிட் உன்னாலே உன்னாலே (ஜூலை காற்றில்)-லிலும் தொடரும்ன்னு நினைக்கிறேன். பாடல்கள் இந்த மாதம் வெளியிடப்படுகிறது. இதில் புதுமுகம் வினய் ஹீரோவாக நடிக்க, இரண்டு கதாநாயகிகள் சதா மற்றும் கஜோலின் தங்கை தனிஷா நடிக்கிறார்கள். டான்ஸ் மாஸ்டர் ராஜு சுந்தரமும் இந்த படத்தில் நடிக்கிறார். ஜீவா ஒவ்வொரு படத்திலும் அறிமுகப்படுத்தும் ஹீரோ ஹீரோயின்கள் அவர் அடுத்த படத்தை எடுக்கும் முன் பிரபலமாகிவிடுவர். உதாரணத்திற்கு ஷாம், அசின் மற்றும் ஆர்யா. வினயும் தனிஷாவும் பிரபலமாகுவார்களா?

134. கதயல்ல.. நிஜத்தின் மூன்றாம் பகுதி

கதையல்ல நிஜத்தின் மூன்றாவது பகுதி இது. ஒன்றையும் இரண்டையும் நீங்கள் இங்கே படிக்கலாம்.


அங்கே போனது நான் எனக்கு தேடி கொண்ட ஆப்புன்னு சொன்னேன் அல்லவா?


அன்றிலிருந்து அவர்கள் சேட்டை அதிகம் ஆனது..

அதில் சில இங்கே:

1- மின்சார கண்ணாவில் விஜய் உட்காரும்போது மோனிஷா அவர் நாற்காலியை இழுப்பது நினைவில் இருக்கிறதா? அதேபோல் எனக்கும் செய்தனர் (அப்போது இந்த படம் இன்னும் வெளிவராத காலம்). விஜய் அதை அறிந்து நாற்காலி உள்ளதைபோல் பாசாங்கு செய்வார். ஆனால், நான் கீழே விழுந்தேன்.

2- எழுதும்போது பென்சிலை தட்டிவிடுவது.. என்னால் குறிப்பிட்ட நேரத்தில் எழுதமுடியாமல் போய் ஆசிரியரிடம் திட்டு வாங்கியுள்ளேன்..

3- ஓவிய வகுப்பில் என்னுடைய ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டு வகுப்பு நோட்டிஸ் போர்ட்டில் ஒட்டியிருந்தபோது, என் காதுபட அந்த ஓவியத்தை அசிங்க அசிங்கமாக திட்டியது.. அதை கேட்டு நான் அழுதது..

4- இடைவேளை நேரத்தில் நான் சாப்பிட வாங்கிய பொருளை கீழே தட்டிவிட்டு, எதுவும் தெரியாமல் நடந்துபோனது...

இப்படி பல சம்பவங்கள். மேலே உள்ளது சின்ன சேம்பில் மட்டுமே! ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பதிவு போட வேண்டாமேன்னு சுருக்கியது..
இந்த சேட்டைகள் 3 மாதங்களுக்கு தொடர்ந்தது. இவர்கள் செய்த சேட்டைகள் பலவற்றை நான் மறந்துவிட்டேன்.

அதற்க்கு காரணம் அந்த மூன்றாவது மாதத்தில் நடந்த சில சம்பவங்கள்..

மார்ச் மாதத்தில் எங்களுக்கு செமெஸ்டர் பரிட்சை வந்தது. அந்த வகுப்பில் என்னை மிகவும் துன்புறுத்திய அந்த பெண்தான் முதல் மாணவியாம். என்னை வந்து மிரட்டினாள். அவள்தான் இப்போதும் முதலாக வருவாள் என்று. அப்படி அவள் வந்தால், நான் அந்த வகுப்பை விட்டு வெளியாகனும். இதுதான் அந்த பந்தயம்.

"பந்தயத்துக்கு நான் தயார். நீ தயாரா? அப்படி நீ தோற்றால், நீ என்ன செய்ய போகிறாய்?"ன்னு நான் தைரியமாக கேட்டேன்.

நான் ஜெயிப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு ரொம்பவே இருந்தது. அவள் என்னை விட்டு விலகி விடுவதாகவும், இனி என் விஷயத்தில் தலையிடமாட்டேன்னும் சொன்னாள்.

அப்பாடா.. ஒரு வழியா ஒரு பிரச்சனைக்கு கூடிய சீக்கிரத்தில் நல்ல வழி பிறக்கபோகிறதுன்னு மகிழ்ச்சியா இருந்தேன்..

அதன் பிறகு அந்த பெண் படிப்பதை பார்த்து நானே ஆச்சர்யப்பட்டேன்.. எந்த நேரமும் கயில் புத்தகத்தோடு இருந்தாள். படித்து கொண்டே இருந்தாள். சிலர் என்னை "வாப்பஸ் வாங்கிக்கோ! நீ ஜெயிப்பது கஷ்டம்"ன்னு சொன்னாங்க..

பரிட்சை வாரமும் வந்தது. நான் நன்றாகவே செய்தேன். அவளும் நன்றாகவே செய்திருப்பாள்ன்னு நம்பினேன்.. உள்ளுக்குள்ளே ஒரு சின்ன பயம். .. அவள் ஜெயித்துவிடுவாளோன்னு...

பரிட்சை முடிந்து அன்த சனிக்கிழமை.. ஒரு தாத்தா என் கடைக்கு வந்தார். அவர் தினமும் வருபவர்தான்.. ஆனால், எனக்கு ஆச்சர்யம் என்னவென்றால், அவருடன் வருவது அதே பெண்தான்.
அய்யோடா! இங்கேயுமா?
அவர் என்னை பார்த்து நலம் விசாரிக்கயில் அவளின் முகத்தில் கோபதில் சிவந்தது. அந்த வயோதிகரை ஏசினாள்.

அவர் கூலாக பேசினார்:
"இது யாருன்னு தெரியலையா? தீபாவளிக்கு நம் வீட்டுக்கு வந்தாங்களே! புதுசா இன்கே கடை வச்சிருக்காங்கன்னு நான் உன் கிட்டே சொன்னேனே! அவங்க மகள்தான். அன்னைக்கு வீட்டுக்கு இந்த பிள்ளை வந்தபோது நீ பூலி பண்ணினே! ஆனால், 4 மாதத்துக்கு பிறகும் அதை ஞாபகம் வைத்திருக்கிறாயே!!"

எனக்கு அப்போதுதான் புரிந்தது. இந்த இடத்துக்கு மாறி வந்து நான் போன முதல் வீடு அந்த பெண்ணுடைய வீடுதான். ஆனால், எனக்கோ, அவளுக்கோ.. இரண்டு பேரும் அடையாளம் தெரியாமல் இவ்வளவு நாட்களாக இருந்திருக்கிரோம்.

பெற்றோர்கள் நண்பர்கள்.. பிள்ளைகள் எதிரி!!!

அவள் நடந்ததை தன் வீட்டாரிடம் சொல்லியிருக்காள் போல.. மறுநாள் அவளின் பெற்றோர் என் கடைக்கு வந்தனர்.

எங்களுக்குள் வளர வேண்டிய நட்பு தப்பான வழியில் கொழுந்துவிட்டு எறிவதை தண்ணீர் ஊற்றி அணைக்க அந்த நால்வரும் பேசி, எங்களுக்கு உண்மைகளை எடுத்துறைத்து, சமாதானம் பேசினார்கள்.

எப்படியோ என் மனமும் இறங்கியது. அவள் மனமும் இறங்கியது..
அடுத்த சீன் என்னனு கேட்குறீங்களா? மறுநாள் பள்ளிக்கு ஒன்றாய் சென்றதுதான். எங்களை பார்த்த அவளின் நண்பர்களுக்கு திகைப்பு.. (கண்ணேதிரே தோன்றினாள் படத்துல கரணும் பிரஷாந்தும் ஒன்றாய் பைக்குல போய் இறங்கியதை பார்த்து கரணின் நண்பர்கள் எப்படி திகத்தனரோ, அப்படியேதான்).. (ஆனாலும், அப்போது இந்த படம் வெளிவரவில்லை..)

நீங்கள் திட்டுவது புரியுது. அதனால், மற்றவை இன்னொரு நாளைக்கு.. இன்னொரு பதிவில் தொடரும்...

133. பிரேயின் தீசர் 28 (Brain Teaser 28)

Congratulations to G3, Rajesh & Shankar who answered yesterday's teaser correctly..

It is 18.. How?

18 X 2 = 36, which is perfect square of 6.
18 / 2 = 9, which is perfect square of 3.
18 X 8 = 144, which is perfect square of 12.
18 --> 81, which is perfect square of 9.

It's a good mathematics practice. Even today we will be having a mathematics question:

This certain church has 500 members. They raised 500 dollars from the members. If every man gave 5 dollars,and every woman gave 3 dollars,and every child gave a penny,how many men,how many women,and how many children are there in the church?

You can use calculator if you need.. ;-)

Wednesday, December 13, 2006

132. வந்துட்டாங்கய்யா.. வந்துட்டாங்க!!

ராஜாத்தி ராஜ,
ராஜ மார்த்தாண்ட,
ராஜ கம்பீர,
ராஜ குலத்திலக..
வேட்டைய ராஜா
வர்றார்.. வர்றார்.. வர்றார்..

அந்த "வேட்டைய"ன்ற இடத்தில மலேசியான்னு போட்டுக்குங்க..

அவரு இவருதான்...

அரசரும்.. அரசியும்.. அவரகளது மனுடன்.


மலேசியாவுல 13 மாநிலங்கள் இருக்கு. அதில் 2 மட்டும் பிரிந்து தென்சீன கடலுக்கு வலது பக்கம் இருக்கின்றன..

அங்கே இருப்பவர்கள் ஆதிவாசின்னு சொல்லலாம். அவங்களுடைய கலை கலாச்சாரங்கள் இன்னும் பழைய பழய ஆதிவாச்த்தில் எப்படி இருந்தனரோ.. அப்படியேதான் இருக்கிறாங்க.. (இவர்களை பற்றி மட்டுமே ஒரு பதிவு போடலாம்..) :-))

மீதமுள்ள 10 மாநிலங்களில் உள்ள ஒரு விஷயத்தை பற்றிதான் இன்றைய பதிவு..

இந்த பத்து மாநிலத்தில், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு அரசர்கள் இருப்பார்கள். இவர்கள் சுல்தான் எனப்படுவர்..

இவர்களில் ஒருவர் ஒவ்வொரு ஐந்து வருடத்துக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டு மலேசியா நாட்டின் அரசராக இருப்பார்கள். (இவர்கள் ராஜாவாக இருந்தபோதிலும், நாட்டை ஆளுபவர் பிரதமரும் மந்திரு சபையும்தான்றது இன்னொரு கதை.)

இப்படி ஐந்து வருடத்துக்கு ஒரு முறை ராஜ சபையிலிருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

நான் ஐந்தாம் படிவம் படிக்கும் போது.. அப்போதுதான் Physics தேர்வு எழுதிவிட்டு பரிட்சை ஹாலிலிருந்து வெளியே வந்தேன். என் நண்பன் ஒருவன் "நீங்களெல்லாம் பரிட்சை எழுதிக்கிட்டு இருந்தப்பொ ராஜா இறந்துட்டார். நாளைக்கு யார் யாருக்கு பரிட்சை இருக்கோ, அவங்க பரிட்சையெல்லாம் வேரொரு நாளைக்கு ஒத்தி வைக்குறாங்கன்னு ரேடியோல சொன்னாங்க"ன்னு சொன்னான்.

அப்போ நான் "ஏன் இவர் நேற்றே இறந்திருக்க கூடாது.. இன்னைக்கு பரிட்சை நமக்கு ஒத்தி வச்சிருப்பாங்களே.. இன்னும் டைம் எடுத்து படிச்சிருக்கலாமே"ன்னுதான் தோனிச்சு. (நீங்க என்னை திட்டுவது தெரியுது! என்ன பண்ண? அரசர்ங்கிறது எங்களுக்கு ஒரு பெரிய இஃபெக்ட்-ஆ (effect)இல்லை.. எல்லாமே பிரதமர் ஆட்சிதான்)

மறுநாள் ஊரடங்கு சட்டம் அமலுக்கு வந்தது. வெளியே போகமுடியாது. சரி, டீவி பார்க்கலாமுன்னு டீவியை திறந்தா எல்லா புரோக்ராமும் கேன்சல். அவர் இறந்ததை முன்னிட்டு அவருக்கு இறங்கல் தெரிவிக்க எந்த கேலிக்கை நிகழ்ச்சிகளும் தொலைக்காட்சியில் போட வில்லை.

அப்போதுதான் சிறிது வருத்தப்பட்டேன். "அடடே! இவர் இறந்திருக்ககூடாதே"ன்னு.. இப்போ அதை நினைச்சாலும் சிரிப்புதான் வருது.

அப்போது இறந்த அந்த அரசர் சிலாங்கூர் மாநில சுல்தான். ஒரு மாதத்துக்கு பிறகு பெர்லிஸ் ராஜா அரசராக நியமிக்கப்பட்டர். இது நடந்து நேற்றோடு 5 வருடம் பூர்த்தியானது.

இப்போது தேர்வானவர் திரங்கானு மாநில சுல்தான். இவருக்கு இப்போது 44 வயது மட்டுமே! 36 வயதில் தன் தந்தையிடமிருந்து திரங்கானு மாநிலத்தில் சுல்தானாக ஆகிய இவர் 11 வருட கால கட்டதிலேயே அரசராக அறியனையில் அமர்ந்துவிட்டார்.

இவர் நாட்டு அரசனனென்றால், மாநில சுல்தானக யார் இருப்பார்ன்னு கேட்குறீங்கலா? இதோ! இவர்தான்:


இவரின் பெயர்: தெங்கு முகமது இஸ்மாயில் சுல்தான் மிஜான் ஜைனால் அபிடின். வயது எட்டுதான். இவர்தான் திரங்கானு சுல்தான் (இப்போது அரசர்)-இன் மூத்த மகன்.


மலேசியா நாட்டின் வரலாற்றிலேயே இவர்தான் இந்த சின்ன வயசிலேயே ஒரு மாநிலத்தை ஆளுகிறார்.

நேற்று இவர் இடைகால சுல்தான் பட்டத்தை தன் தந்தயிடமிருந்து பெற்றுக்கொண்டார். 8 வயது பையன் என்ன ஆட்சி செய்யபோகிறான்னு கேட்குறீங்கலா?

அதற்க்கு 3 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்திருக்கிறார் இவர் அப்பா. அந்த 3 பேர்: ராஜாவின் மூன்றாவது தம்பி, ராஜாவின் மாமா மற்றும் ஒரு அரச மந்திரி)

இன்று அப்பாவும் அம்மாவும் அரண்மனையில் அரசர் அரசியர் பதவியை பெற்று அரியணையில் உட்கார்ந்துட்டாங்க.

இன்னும் ஒரு 5 வருடத்துக்கு இவங்கதான் ராஜா - ராணி..

பதவி விலகி பெர்லிஸுக்கு திரும்பும் 12-வது ராஜா-ராணி

131. பிரேயின் தீசர் 27 (Brain Teaser 27)

The answer for yesterday's teaser was:

Just turn the middle 1 into a T so it now reads 10 T0 10 = 9.50...

its telling you the time.

As usual Johnson D.S. answered first. COngrats
Baranee, Naadodi, C.M. Haniff, Mr. ANonymous & G3 also answered correctly..

Today will be a tricky but very simple mathematics question:

My age is half of a perfect square.
My age is 2 times a perfect square.
My age is one-eighth of a perfect square.
Reverse the digits of my age to get a perfect square.

How old am I?

Tuesday, December 12, 2006

130. பிரேயின் தீசர் 26 (Brain Teaser 26)

*Clap* *Clap* *Clap*..

7 friends answered correctly for yesterday's brain teaser.

1- Mr. Anonymous
2- Santhanamullai
3- Dondu
4- Senthil Kumaran
5- Latha
6- C.M. Haniff
7- ItzMe

The answer was The man was a security guard on the night shift and his boss fired him for sleeping on the job.

Today's one is a mathematical question:

Make this statement right by using just one straight line....

10 10 10 = 9.50
You also need to give a reason for it. ;-)

Monday, December 11, 2006

129. போலிங்கில் ஹட்ரிக்.. பூப்பந்தில் ஒன்று..


டோஹாவில் ஏற்கனவே போலிங்கில் வாங்கிய இரண்டு தங்கத்தை பற்றி எழுதின பதிவுகள் இதோ!

டோஹாவில் முதல் தங்கம்
டோஹாவில் மலேசியாவின் இரண்டவது தங்கம்..

வெள்ளியன்று மேலும் ஒரு தங்கத்தை ஐந்து பேர் கொண்ட குலு விளையாட்டில் வாகை சூடினர் மலேசியா போலிங் ராணியர்கள்!

ஏஸ்தேர், ஷேரோன், வென்டி, சன்ட்ரா, மற்றும் ஷாலின் இதில் பங்கேற்றனர். 6,314 பின்களை கீழே தள்ளி இவர்கள் முதல் இடத்தை கைப்பற்றினர். தென்கொரியா 6,239 பின்களை கீழே தள்ளி இரண்டம் இடத்தை பிடித்தாலும், இந்த குழு மிகவும் கடுமையான போட்டியை கொடுத்தது என்றெ சொல்லலாம்.


இதே நாளில், எஸ்தெர் சீயா "ஆல் இவேந்த்" போட்டியில் வெள்ளியும் வென்றார். பயிற்சியாளர் ஹொல்லோவே சீயாவின் மகலான இவர் இரண்டு தங்கம் மற்றும் மூன்று வெள்ளியை இப்போது கையில் வைத்துள்ளார். ஹட்ரிக் அடித்த போலிங்கை தொடர்ந்து கூ கியென் கியாட் மற்றும் தன் பூன் ஹியோங் பேட்மின்டன் இரட்டையர் பிரிவில் தங்கத்தை வென்று சாதனை படைத்துள்ளனர்.

சான் சொங் மிங் அடிப்பட்டிருந்ததால் கடைசி நிமிடத்தில், இவர்களை களம் இறக்கியிருந்தார் பயிற்சியாளர் கிம் ஹோக். இவர்கள் ஜெயிப்பார்கள் என்று யாரும் நினைக்காத ஒரு தருணத்தில், இவர்கள் கடைசி சுற்றுக்கு தேர்வானதும், எல்லாருடைய கண்களும் இவர்கள் மீது பட்டது.

இந்த பிரிவின் தங்கத்தை வெல்வதற்க்கு 36 வருடமாக காத்திருந்தோம்ன்னு சொல்லலாம். இந்த தங்கத்தை வெறும் 27 நிமிடத்திலேயே இவர்கள் சுலபமாக வென்றது ஒரு அதிசயமே!!!

ஆக மொத்ததில் இப்போது மலேசியா 4 தங்கங்களை வென்று 11-வது இடத்தில் இருக்கின்றது. மலேசியா போலே!!!


இந்தியாவை பற்றியும் சில தகவல்கள்:

1- இந்தியா இப்போது 6 தங்கங்களை வென்று ஏழாவது இடத்தில் உள்ளது.

2- சானியா மிர்சா தென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிருதி சுற்றுக்கு தேர்வானார். இவர் தென்கொரியா யூ மியை தோற்கடித்து முன்னேறினார். இப்பிரிவில் இவர் வெல்வதுக்கு வாய்ப்புகள் அதிகம் என்று கணிப்புகள் கூறுகின்றன.


3- டோஹாவில் இந்திய வீராங்கனைகள் கலக்கிக்கொண்டு இருக்கிறார்கள். பூசானில் நடந்த ஆசிய விளையாட்டுபோட்டியில் கலந்துகொண்ட வீராங்கனைகளின் முயற்ச்சிக்கும் டோஹாவில் கலந்துகொண்டோரின் முயற்சிக்கும் நிரைய வித்தியாசங்கள் இருக்கின்றன என்று சிலர் சொல்கிறார்கள். எது எப்படியோ.. இந்த ஸ்பீரிட்(spirit) இன்னும் நிரைய பதக்கங்களை குவிக்க என் வாழ்த்துக்கள்...

128. நன்றிக்கு மேல் நன்றி நான் சொல்ல வேண்டும்..

எதுக்கு நன்றின்னு கேட்கிறீங்கலா?


இதோ இதை பாருங்க ---->

தமிழ்மணத்துல என்னுடைய பதிவுகளை போட சொன்ன கார்த்திக்கு என் முதல் நன்றி..பீட்டா ப்ளாக்கரிலிருந்து தமிழ்மணத்தில் பதிவை போட முடியாதபொழுது, அவரும் உதவி செய்தார்.

கொஞ்ச நேரத்தில் ஜி ஒரு வலைப்பூ முகவரி கொடுத்து அதிலிருப்பதைபோல் முயற்ச்சிக்க சொன்னார். அது எனக்கு மிகவும் உதவியாய் இருந்தது. நன்றி ஜி.. ஆனாலும் என் பிரச்சனைக்கு முடிவு காண முடியவில்லை..

பிறகு கடல் அலைபோல வந்தார் கடல் கணேசன். உதவி செய்யுறேன்னு சொன்னார். என்னதான் செய்தாருன்னு தெரியலை.. ஆனாலும், என் பதிவுகள் தமிழ்மணத்தில் பிறசுரிக்கப்பட்டது.. சூப்பருங்கோ!உங்களுக்கு கட்டாயமாக இந்த தருணத்தில் நன்றி சொல்ல வேண்டும் கணேசா!

புதிதாக என் ப்ளாக்குக்கு வருகை புரிந்திருக்கும் அனைவருக்கும் நன்றி.. வருக வருக.. என்னுடைய உலகத்துக்கு!!!

127. பிரேயின் தீசர் 25 (Brain Teaser 25)

The Title is in Tamil. but the contents remains in English for you all. ;-)

I feel Previous Teaser was one of the interesting teaser I ever post. Isn't it?

Let's see the answer first:

The old one was : Out of date
The new one is: Different

He said: My password is "Out of date."
And the boss told him the new one when he said: "The password is different."

Wow. So many of you can guess it right as usual. ;-)
Those who answered correctly both answers will get 2 points. ^_^ (bonus point..hehe)
1- Johnson D.S
2- Mr. Bond
3- FruttiTooty
4- C.M. Haniff
5- G3
6- Priya

Since G3 only answered one, she will get only one point. Am I fair?

Ok. Today's teaser sounds like this:

A man is sleeping one night when he has a dream. In his dream his boss is driving in his car when he has a fatal accident, killing him. The man wakes up and, sensing that this is indeed a premonition of the near future, calls his boss to inform him of what horrible things that he saw in his dream.

So the boss, instead of taking his car to the work place, takes a taxi, and when he gets there, promptly fires the man. Why?

Friday, December 08, 2006

126. வாங்க.. நாமளும் மரம் வளர்க்கலாம்!

ஒரு வீட்டுக்கு ஒரு கணிணி வேண்டும்ன்னு சொன்னங்க. அப்புறம், ஒரு வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்ன்னு சொன்னாங்க.

இப்பு ஒவ்வொரு ப்ளாக்லேயும் மரம் வளர்க்க ஆரம்பிச்சுடாங்க..

நான் இப்பதான் விதையை போட ஆரம்பிச்சிருக்கேன். ஆனால், மரம் வளர்கிறேன் பேர்வழின்னு நம்ம தலைவரு கார்த்திக் அவரோட மரத்தை என்னை வளர்க்க சொல்லிட்டார்..

மறுநாள் நான் வளர்க்கலன்னு தெரிஞ்சதும் மொஹனை (மோஹினுக்கு ஆண்பால்) அனுப்பிடாருங்க என் வீட்டுக்கு.

அதான் ஆபிஸுக்கு வந்தவுடனேயே மரத்துக்கு தண்ணீர் ஊத்த ஆரம்பிச்சுட்டேன்.

இது எழுதுறதுக்கு முன் ரூல்ஸ் இருக்காமே! ஒன்னு இல்ல பத்து. ஒரு கடைபிடிக்கிறதே கஷ்டம். இதுல பத்தா!!! பரவாயில்லை.. நான் என்னால் முடிஞ்ச வறை நீங்க கொடுத்திருக்கிற 10 ரூல்ஸ்யையும் ஃபாலோ பண்ணி எழுதியிருக்கேன்.

------------------------------------
முதல்ல இது உஷா எழுதுனது:

The Unusual Endings"Ennadhan panra ava anga?" he wondered aloud, as he got out of the cab outside the building that flaunted a board that read "Amanushya vishayangaluku anugavum: Dr. JevitsJayaraj". Aniku kalaila, he had got a call, and pesinadhu Meeradhan. Aana he could notice the difference between the voice he had listened to 2 days ago and the one he heard in the morning. '2 days munnadi sema super-a veenai madhiri ketta kural iniku kaalaila eppadi husky-a vichitrama?', he shuddered for a moment recollecting the conversation he had.."Hello, iss it Vassisht, naan Meera" - there was an eerieness around the voice he heard...

அப்புறம் வேதா தொடர்ந்தது:

மீராவின் குரலை இப்ப நினைத்தாலும் ஒரு பயம் அவன் மனதில் பரவியது. சட்டென்று நினைவை கலைத்தது அவன் கைப்பேசி. அவன் அதை எடுக்...ட்ரிங்,ட்ரிங்'சே நல்ல கட்டத்துல இப்படி போன் அடிக்குதே, சத்யா சத்யா போன் அடிக்குது பார் எடு'ட்ரிங்,ட்ரிங்'அடச்சே, இந்த அத்தியாயத்தை இன்னிக்கு பத்திரிக்கைக்கு அனுப்பனும் இந்த நேரம் பார்த்து எழுத இவ்ளோ தடங்கல்'ட்ரிங்,ட்ரிங்'இந்த சத்யா எங்க போய் தொலைஞ்சா? நானே போய் எடுக்க வேண்டியது தான்'இவன் ஸ்பரிசத்திற்காக காத்திருந்தது போல் தொடர்ந்து அடித்த போனை எடுத்தான் எழுத்தாளன் சூர்யா.'ஹலோ யாரு?''நான் தான்' என்று ரகசியம் பேசுவது போல் ஒரு பெண் குரல்'அட யாருன்னு சொல்லித்தொலைங்க''மீரா பேசுறேன்''எந்த மீரா?''என்ன சூர்யா அதுக்குள்ள மறந்துட்ட? இப்ப தான என்னை பத்தி எழுதின?''என்னது? யாருங்க இது?''உன் கதையின் கதாபாத்திரம் மீரா' என்று கூறிய குரல் அவன் நினைவலைகளில் நீந்தி எதிரொலித்தது.அதிர்ந்துப்போன சூர்யா தொலைப்பேசியை நழுவ விட்டான்...

நழுவ விட்ட போனை கையிலெடுத்து என்னை தாக்கியவர் (ஹீ ஹீ ஹீ) கார்த்திக்:

ரத்தமெல்லாம் உறைய அப்படியே சேரில் அமர்ந்தான் சூர்யா..யா..யார் போன் பண்ணி இருப்பா..அவன் தலைக்குள்ளே ஆயிரம் கேள்விகள்... சரியாக அந்த நேரம் பார்த்து மின்சாரம் போய் அந்த இடமே கருங்கும்மென இருட்டாகியது.. நெஞ்சில் பயத்துடன் மெல்ல மெழுகுவர்த்தியை தேடி மெதுவாக அடி எடுத்து வைத்தான்.. அப்போ காற்றில் மெல்ல கொலுசு சத்தம் கேட்டது.. அந்த சத்தம் மெதுவாக இவனை நோக்கி வந்தது..எடுத்து வைத்த காலைக்கூட திரும்ப பின்னால் எடுத்து வைத்தான்.. கொலுசு சத்தம் நெருங்க நெருங்க மல்லிகைப்பூ வாசமும் இவன் நாசியை துளைத்தது.. சூர்யாவுக்கு அதிர்ச்சியில் தொண்டை வறண்டது..சூர்யா.. எப்படி இருக்க சூர்யா.. காதல் தொய்த்த மயக்கம் கலந்த ஒரு பெண் குரல் கேட்டது.. இந்த இந்த குரலை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே என்று சூர்யா குழம்பிய போது..என்ன சூர்யா..என்னை மறந்துட்டியா..நான் தான் நீ காதலிச்சு ஏமாத்துன மலர்விழி..


இப்ப இந்த கதையை தொடர்கிறேன்னு சொல்லி நான் எழுதும் சொதப்பல்.. ஹீ ஹீ ஹீ:
-----------------------------------------------------------------------------------
அந்த கரும் இருட்டில் அந்த குரலை கேட்டு அதிர்ந்தான் சூர்யா. இருட்டில் தன் சட்டை பையில் தட்டு தடுமாறி எதையோ எடுத்தான்.

அதை உரசியதும் ஒரு சின்ன ஒளி அந்த அறையை சூழ, மெல்ல மெல்ல ஒரு அழகான பெண்னின் முகம் அவனுக்கு தெரிந்தது.

"ம.. ம.. மலர்.. நீ.. நீ எப்படி இ.. இங்.. இங்கே? நீதான் போன வருடம் அந்த மலை உச்சியிலிருந்து விழுந்துட்டியே?"

அதை கேட்டு அவள் சத்தமாக சிரிக்க, பட்டென நின்று போன மின்சாரம் திரும்பி வர.. அறையே பிரகாசம் ஆனது.

அவன் தன் கண்களை கசக்கிகொண்டு மீண்டும் நிமிர்ந்து பார்த்தான்.

'இவள் உண்மையிலேயே நான் காதலித்த மலர்தான். இங்கே எப்படி? உயிரோடுதான் இருக்கிறாளா? பக்கத்தில் நிற்பவன் யார்?'ன்னு பல கேள்விகள் சூர்யாவின் மனதில் அலை மோதின.

மலருடன் வந்தவன் ஆறடி உயரத்தில் அபிஷேக் பச்சனைபோல் இருந்தான். கையிலிருந்த பூங்கொத்தை சூர்யாவிடம் கொடுத்து "You lost something precious"ன்னு சொல்லி கண்ணடித்தான்.
---------------------------------------------------------------------------

அப்பப்பா.. கதை எழுதுறது கூட கஷ்டம் இல்லைங்க.. எழுதி முடிச்சதும், 5 பேரை தாக்கனும்ன்னு சொல்லியிருகாங்கலே (அதாங்க அந்த ஆறாவது ரூல்ல), அதுதாங்க கஷ்டம்..

ப்ளாக்குக்கு நான் ஒரு குழந்தை.. இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா சிலர் அறிமுகம் ஆகியிருக்காங்க.. எனக்கு அறிமுகம் ஆனவங்க எல்லாரையும்ம் யாரவது ஒருத்தவங்க தாக்கிட்டீங்களே!! நான் யாரை தாக்குறது?

லெட் மீ தின்க்...

ஓகே.

நான் டேக் செய்யும் நண்பர்கள்:
1- எப்போதும் கடலை பற்றி அருமையாக கதை எழுதும் கடல் கணேசனுக்கும் இந்த கதையை கொடுத்தால், அருமையா எழுதுவார். ஸொ, இவர்தான் லிஸ்ட்ல ஃப்ர்ஸ்ட்.

2- நாலு நாளுக்கு முன்பு கொஞ்சம் வருத்ததுல இருந்த தீனக்க்ஷாதான்.. ப்ளாக் எழுதுறது ஒரு சந்தோஷம்தான்..

மரம் வளர்வதற்க்கு என்னால் கொடுக்க முடிந்த இரண்டு கிளைகள் இவர்கள்தான். ;-)

வெகு வெகு விரைவில் உங்கள் கதையை படிக்கும் ஆசயில் உள்ளேன். ;-)

ஆஹா.. ரூல்ஸ் இருக்காமே! அதையும் போஸ்ட் செய்யனும்ல்ல!!! இதோ அந்த ரூல்ஸ்:

1. A blogger can add only 90-100 words (not more or less) at a time
2. All previous snippets of 90-100 words need to be copied before the new set of 90-100 words are appended.
3. Each entire snippet should be linked to the respective author (and not just the first sentence or so)
4. Characters, scenes, etc. can be introduced by an author
5. Bizarre twists, sci-fi, fantasy sequences are best avoided.
6. After appending 90-100, the Story Tree can be passed on to at most 5 bloggers.
7. If more than 1 branch leads to a blogger, s/he is free to choose any one of them but cannot mix the snippets of the individual branches.
8. The Story Tree is best left to grow than concluded
9. Please attach the image of the Story Tree above with each accepted tag (the link address can be copied and used).
10. Please comment back your story’s link to post from where you were initially tagged so that people can follow.

125. Brain Teaser 24

Congratulation for friends who answered correctly yesterday's teaser:
1- G3
2- Johnson D.S.
3- C.M. Haniff
4- Priya

Welcome Priya for joining us in Chain-Teaser.
Johnson, Am I reminding you all your school life incident? hehehe..
Where is Mr. Bond?

Today's teaser starts with a story:

A man worked for a high-security institution, and one day he went in to work only to find that he could not log in to his computer terminal. His password wouldn't work.

Then he remembered that the passwords are reset every month for security purposes. So he went to his boss and they had this conversation:

Man: Hey boss, my password is out of date.
Boss: Yes, that's right. The password is different, but if you listen carefully you should be able to figure out the new one: It has the same amount of letters as your old password, but only four of the letters are the same.
Man: Thanks boss.

With that, he went and correctly logged into his station.

What was the new password?

BONUS QUESTION: What was his old password?

Hint: If you concentrate on the conversation, you can get the answers easily. ;-)

Thursday, December 07, 2006

124. டோஹாவில் மலேசியாவின் இரண்டவது தங்கம்..

நேற்று போலிங் ஆண்களுக்கான குளுக்கலின் பிரிவில் டேனியல் லிம், பென் ஹெங் மற்றும் ஏரோன் க்வோக் தங்கத்தை வென்றார். 28 வருடத்துக்கு பிறகு இந்த பிரிவில் மலேசியா தங்கம் பெருவது இதில் கிடைத்த இன்னொரு மகிழ்ச்சி..

இது யாரும் எதிர் பார்க்காத வெற்றின்னே சொல்லலாம்..

இதே நேரத்தில் விளையாடிய பெண்களுக்கான க்ளு போட்டியில், மலேசியா வெள்ளியை மட்டுமே வெல்ல முடிந்தது.


கடைசி வீச்சில் ஷாலின் ஸ்ட்ரைக் அடித்திருந்தால், கண்டிப்பாக இன்னொரு தங்கத்தை வென்றிருக்கலாம்.. 8 பந்து மட்டும் வீழ்த்தி தங்கத்தை தெற்கு கோரியாவிடம் கோட்டை விட்டனர்..

வாழ்த்துக்கள் டேனியல் லிம், பென் ஹெங் மற்றும் ஏரோன் க்வோக்! மலேசியா போலே!

123. அலார்ம் க்லாக் (Alarm Clock)

நீங்க சின்ன பையனோ, வாலிபரோ, வயதானவரோ.. பள்ளி போரீங்களோ இல்லை வேலைக்கு போரீங்களோ! இல்லை வீட்டை கவனித்துக்கொள்ளும் அம்மணிகளோ!!! எல்லாருக்மே காலையில் அனுபவிக்கும் முதல் தொல்லை/ கஷ்டம் என்ன?

காலையில் தைமுக்கு எழுந்து பள்ளிக்கோ, ஆபிஸுக்கோ கிளம்புவதுதான். அதிலேயும் திருமணம் ஆன பெண்கள்ன்னா, இன்னும் சீக்கிரமா எழுந்திரிக்கனும்.. வீட்டு வேலை செய்துட்டு, காலை ப்ரேக்ஃபாஸ்ட் செய்து, பிள்ளைகளை கிளப்பிவிட்டு அவர்களும் வேலைக்கு கிளம்பனும்..

அப்பப்பா!!! இதை கேட்கும் போதே நமக்கு கண்ணை கட்டுது!!!!

எனக்கும் அப்படி பிரச்சனைகள் இருந்தது. எந்த கேம்பஸில் மாணவர்கள் இரவு சீக்கிரமா படுத்து காலையில் சீக்கிரமா எழுந்திரிக்கிறாங்க!!!! நான் மட்டும் என்ன விதி விலக்கா? ஆனால், இப்போ பிராக்டிக்கலுக்கு போகுறதுனால காலையில 6 மணிக்கெல்லாம் எழுந்திருக்கிறேன். நானே லேட்டா படுக்கனும்ன்னு நினைச்சாலும் என்னால், வெகு நேரம் முழிதிருக்க முடியலை.. எல்லாம், தைம்தேபல் போல பழக்கம் ஆயிடுச்சு.

அப்படி பழக்கம் ஆவாதவர்களுக்கு உற்ற துணை உங்கள் அலார்ம் க்ளோக்.. இப்படி கரெக்டா நாம் எழுந்திருக்க வேண்டிய நேரத்தில், நம்மை எழுப்பிவிடுகிறது இந்த மணி அடிக்கும் கடிகாரம். ஆனாலும், நம்மல்ல சிலர் அதை சினூஸ்(snooze) செய்து திரும்பவும் படுத்து தூங்கிடிடுகிறார்கள். இவர்களுகாகவே வந்திருக்கு சில கடிகாரம். அதில் முதல் பத்து இதோ!!!


10- ஏணி கடிகாரம்

இது உங்கள் தலையின் மேல் தொங்கப்பட்டிருக்கும். மணி அடித்ததும் அது கொஞ்சம் கொஞ்சமாக மேலே ஏற ஆரம்பித்துவிடும். நீங்கள் வேகமாக எழுந்து ஆஃப் செய்யலைன்னா, அதை ஆஃப் செய்ய உங்களுக்கு ஏணி தேவைப்படும்.



9- காலை பஜ்ஜல்(puzzle)

நீங்கள் இந்த puzzle-ஐ பூட்டி முடித்தால்தான், இது ஆஃப் ஆகும்.



8- சாபக் கடிகாரம்

இதனிடம் மணி என்னனு கேட்டால், இது பதில் சொலும். ஆனால், நீங்கள் கரெக்டான தைமுக்கு எழுந்திரிக்கலன்னா, இது உங்களுக்கு சாபம் விடும்.





7- புதிய தெக்னாலஜி

இதுக்கு வைபிரேட்டர் இருக்கு. 95ட்B அலார்ம். போலிஸ் கார்ல பூட்டியிருக்கும் அந்த சுத்தும் விளக்கு போருத்தியிருக்கப்பட்டிருக்கு. பீ கேர்புல்!!!



6- பின்னை தேடுங்கள்

அலார்மை ஆஃப் செய்ய நீங்கள் இதனின் பின்னை தேடி கண்டுபிடிக்க வேண்டும். இந்த மிஷனை முடிக்கும் வரை.. நீங்கள் தூங்க வாய்ப்பே இல்லை.





5- முட்டை - கோழி பிரச்சனை

அலார்ம் அடிக்க ஆரம்பித்ததும், கோழி உருவமுல்ல கடிகாரம் முட்டை இட ஆரம்பித்துவிடும். நீங்கள் எல்லா முட்டையும் கூடயில் போட்டால்தான், அலார்ம் ஆஃப் ஆகும்.



4- காமாண்டர் ஜோ

காமாண்டர் கத்தலை கேட்டு நீங்கள் கண்டிப்பாக எழுந்திருத்து விடுவீர்கள்.



3- சுற்றும் அலார்ம்

அலார்ம் அடித்ததும், இது உங்கள் அறை முழுதும் சுற்றி கொண்டிருக்கும். நீங்கள் அதை பிடித்து ஆஃப் செய்ய வேண்டும்





2- கபோம்

இது ஒரு போம் அலார்ம். இதனின் சத்தம் உங்கள் காலணியில் இருக்கும் எல்லாருமே கண்டிப்பாக எழுந்திரித்துவிடுவார்கள். ஹீ ஹீ ஹீ..



1- ஒளிந்திருக்கிறென் - கண்டுபிடி

இதுதான் இந்த கடிகாரங்களிலேயே முதல் இடத்தை பிடித்திருக்கும் அலார்ம். மணி அடிக்க துவங்கியதும், அது தரையில் இறங்கி ஏதவது ஒரு இடத்தில் உருண்டு போய் ஒளிந்துகொள்ளும். சீக்கிரமாக ஆஃப் செய்யாவிட்டல், இதை தேடி கண்டுபிடிப்பதற்காக நீங்கள் உங்கள் ஆபிஸில் லீவு போட நெரிடும்..

:-)

122. Brain Teaser 23

Answer for yesterday's teaser:

Since 1st man had 3 pair of red socks & 3 pairs of white socks, 2nd man also had 3 pair of red socks & 3 pair of white socks.. and each pair held together with rubebr band.... Both men take each pair, and pull them a part.. Finally they will have 6 red socks & 6 white socks with each of them.. ;-)

Our friends who are visiting THe WoRLD oF .:: MyFriend ::. are briliant.. They are guessing all the teasers correctly. As usual, those who answered correctly yesterday's teaser:
1- Johnson D.S
2- Mr. Bond
3- G3
4- C.M. Haniff

Today's one will be one of the easy question too:

Can you read this?

Yy u r yy u b I c u r yy 4 me

Wednesday, December 06, 2006

121. கதையல்ல.. நிஜம்!!! 2

என் பள்ளிக்கூட மலரும் நினைவுகளை ஆட்டோகிராப்பா எழுதுனது நல்ல வரவேற்ப்பு கிடச்சது. இது முதல் பாகத்தின் தொடர்ச்சி.....

நான் அவர்களை தாக்கும்முன், என் பெயரை யாரோ கூப்பிடுவதைக் கேட்டு; திகத்து; குரல் வந்த திசையை நோக்கி பார்த்தேன். வகுப்பு ஆசிரியை வகுப்பின் முன்னே நின்னுக்கொண்டு என்னை பார்த்து கையசைத்தார்..

"போச்சு! முதல் நாளே ஒரு பிரச்ச்னை செய்து விட்டேன். இதுவரை செய்யாத ஒன்னு!!! இன்னைக்கு க்லாஸ்லேயும் வீட்டுலேயும் பிரம்படி நிச்ச்யம்"ன்னு மனசிலே நினைச்சுகிட்டே அவரை நோக்கி நடந்தேன். மனசில் என்னென்னவோ ஓடிக்கொண்டிருந்தது.

அவர் முன்னே போய் தலை குனிந்து நின்னேன்.. அவர் என் தோளின் மீது கைபோட்டு.. மற்ற மாணவர்களிடம் பேச தொடங்கினார்..

"மாணவர்களே! இவங்க பெயர் அனுராதா. ரொம்ப தூரத்துல இருந்து வந்து நம்ம பள்ளில சேர்ந்திருக்காங்க. உங்களுக்கு பகாங் எங்க இருக்குன்னு தெரியுமா?"ன்னு இவர் கேட்க.. மற்ற மாண்வர்கள் கேள்விக்குறியுடன் வியப்பாக தெரியாதுன்னு பதில் சொன்னாங்க..

என் மனசில "அட, பகாங் இங்க பக்கத்திலதானே இருக்கு! ஒரு மணி நேரத்தில வந்திடலாமே"ன்னு யோசிச்சுகிட்டு இருந்தேன்.

என்னை மறியாதையோடு வாங்க போங்கன்னு டீச்சர் சொல்வது ஆச்சர்யமாக இருந்ததது.

சரி, அறிமுகம் முடிஞ்சாச்சு.. நம்ம இடத்துல போய் உட்காரலாம்ன்னு நகர்ந்த நேரத்துல அவர் என் கையை பிடித்து இழுத்து.. மீண்டும் பேச தொடங்கினார்.

"அனு, அவங்க ஸ்கூல்ல படிக்கும்போது அவங்கதான் first. எல்லா பாடத்திலும் நூற்றுக்கு நூரு. வகுப்புத் தலைவியும் கூட. மாணவர்களே, உங்களுக்கு ஏதும் தெரியலைன்னா நீங்க இவங்க கிட்ட கேட்டு படிச்சுக்கலாம்"...

யம்மாடியோவ்.. என் தலையில ஐஸ் கட்டி இறக்கி வச்சதுபோல் இருந்துச்சு.. கொஞ்சம் நேரத்துக்கு முன் என்னை கேலி செய்த அந்த ரெண்டு பேரையும் திரும்பி பார்த்தேன். அவங்க என்னை ஆச்சர்யமா பார்த்தாங்க. என் புத்தக பையை கீழே போட்ட பையனை பார்த்தேன். அவன் முகத்துல அதே ஆச்சர்யம் தெரிஞ்சாலும்.. அவன் முகத்துல கொபமும் இருந்ததௌ. எதுக்கு அந்த கோபம்ன்னு தெறியல.. ஆனால், நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன்.

அந்த சந்தோஷம் ரொம்ப நேரம் நிலைகாதுன்னும்.. எனக்கு இறக்கி வச்ச அந்த ஐஸ் கட்டி மற்ற சிலருக்கு எறியும் எண்ணைன்னு அப்போ எனக்கு தெரியாது!!!!

டீச்சர் கொஞ்சம் நேரம் யோசிச்சுட்டு.. "நீ அங்கே உட்கார வேண்டிய ஆளே இல்லை"ன்னு சொன்னாங்க..

எனக்கும் அதற்க்கு என்ன காரணம்ன்னு தெரிய ஆவலா இருந்ததுனாலே அவரிடம் கேட்டேன். அவர் ஆறாக பிரிக்க பட்ட க்ரூப்பை காட்டி A+, A-, B+, B-, C+ மற்றும் C-ன்னு சொன்னார்..

ஒவ்வொருவருடைய திறமையை வச்சு இப்படி ஆறு ஆறாக பிரிக்கப்பட்டதாக சொன்னார்.. அந்த வகுப்ப நான் திரும்பி பார்த்தேன். என்னை தள்ளி விட்ட அந்த பையன் B+ க்ரூப்பில் அமர்ந்திருந்தான். என்னை கேலி செய்த மற்ற இருவர் உட்கார்ந்திருந்ததௌ C-யில்..

எனக்கு உடனே A+ போகனும்ன்னு ஆசை வந்தது.. எனக்கு முன் டீச்சர் அங்கே போய் யார் வேற க்ரூப் மாற போறீங்கன்னு கேட்டங்க.. டீச்சரே கட்டளை இடாமல் ஒவ்வொருவரின் சம்மதம் கேட்டார். (டெமோக்ராசி) ஹீ ஹீ ஹீ..

ஆனால், யாரும் அங்கே இருந்து மாற முன் வரவில்லை..

டீச்சரும் நான் உட்கார்ந்திருந்த இடத்திலேயே என்னை போய் உட்கார சொன்னார். ஆசை காட்டி மோசம் செய்துவிட்டரோன்னு எனக்கு தோன்றியது அப்போது.

அவரும் படித்து கொடுக்க ஆரம்பித்தார். அவர் அடிகக்டி கேல்விகள் கேட்டார். மற்றவர்களும் பதில் சொல்லிகொண்டிருந்தனர். நான் தனிமையில் இருந்தேன். எந்த கேள்விகளுக்கு யாராலும் பதில் சொல்ல முடியலையோ, அந்த கேல்விகளை என்னிடம் கேட்டார். நான் கடுப்பில் பதில் சொன்னேன். (பதிலை சொன்னாலும் சொல்லாட்டினாலும் என்னுடைய இடம் இதுதானேன்னு ஒரு விரக்த்தி)

அந்த பாடம் முடிந்து அந்த டீச்சர் வகுப்பை விட்டு வெளியாகும்முன் என்னை கூப்பிட்டு A-க்கு மாற சொன்னார்.

எனக்கு ஆச்சர்யம் கலந்த ஒரு வித சந்தோஷம். கூடவே ஒரு சின்ன கவலை (பேராசை)... A+க்கு போக முடியலையேன்னு..

நான் அங்கே போய் உட்கார்ந்தததும் ஒரு 30 பேர்... என்னை சுத்தி வந்து நின்னாங்க.. (டீச்ச்ர் அப்போது வகுப்பில் இல்லைன்னு கவனிக்கவும்)..
எல்லாரும் என்னை முறைச்சு பார்த்தாங்க..

ஒரு பொண்ணு (இவளை எங்கோ பார்த்த ஞாபகம்) வந்து பேச ஆரம்பித்தாள். "டீச்சர் உன்னை பத்தி பெருமையா சொன்னாங்கன்னு நீ பெருமை படாதே! ஒரே மாதத்தில இந்த வகுப்பை விட்டு வெளியே அனுப்புகிறோம் பார்!!!"ன்னு கோபமா பேசினாள்.

என்னடா! இரண்டாம் வகுப்பில் கேங்ஸ்தரிசமான்னு யோசிக்கிறீங்களா? உண்மைங்க!! நான் அனுபவித்தது.

நல்ல வேளை.. அவள் அடுத்த வரி பேசுவதற்க்குள் மலாய் மொழி சொல்லி கொடுக்கும் ஆசிரியை உள்ளே வந்தார். வந்தவுடன் ஒரு பரிட்சை தந்தார்..

அப்போதே மார்க் பண்ணி, அதற்கேத்தவாரு மாண்வர்களை இடம் மாற்றி அமர வத்தார். நானும் நான் ஆசைப்பட்ட அந்த A+க்கு போனேன்..

எனக்கு ஆப்பு நானே தேடிக்கொண்டேன்னுதான் சொல்லனும்!!! அங்கே உட்கார்ந்திருந்த 6 பேரும் ரொம்ப க்லோஸ். நான் அங்கே போனதால், அவர்களில் ஒருவர் அங்கிருந்து வெளியாக வேன்டி இருந்ததது. அங்கே தலைவி என்னை மிரட்டிய அதே பொண்ணுதான்...

அவர்களின் கண்களில் அப்படியொரு கோபம்..

இவர்களின் சேஷ்டைகள் ---> தொடரும்.....

120. Brain Teaser 22

Yesterday's answer was HEROINE

The first two letters are a man. --> HE
The first three letters are a woman. --> HER
The first four letters are a great man. --> HERO
The whole word is a great woman. --> HEROINE

Congratulations to G3, Johnson D.S., FruttiTooty & C.M. Haniff
:-)

Ok. Then, What is today's Teaser?

There was a man who went to the mall and he bought 3 pairs of red socks and 3 pairs of white socks. Another man who already bought 3 pairs of red socks and 3 pairs of white socks came back to return his 3 pairs of red socks and 3 pairs of white socks.

They are both blind. As they were walking they bumped into each other. All the socks scattered around the floor, but each pair remained held together by a rubber band. Nobody helped them pick it up except each other, but in 3 minutes they both put them back altogether.

Each man ended up with the same colors of socks he started with: six red and six white. How is that possible if they are blind?

Tuesday, December 05, 2006

119. ரெண்டு @ இரண்டு @ 2

அட.. ரெண்டுக்கு விமர்சனம் போட ப்ளாக் திறந்தா, இது 119-ஆவது போஸ்ட்..

1+1+9 = 11
1+1=2

இதுலகூட ரெண்டுன்னுதான் வருது.. ;-)

குஷ்பு தயாரிப்பில், கண்வர் சுந்தர். சி இயக்கிய படம் ரெண்டு. வெள்ளித்திரைக்கு வந்து இரண்டு நாளில் வரி விலக்குக்காக "இரண்டு"ன்னு பெயர் மாற்றம் காணப்பட்டது..

சுந்தர். சி படம்ன்னாலே காமெடி கலந்த மசாலா படம்ன்னு எல்லாருக்குமே தெரியும். இந்த படமும் அதே! அதே!
மாதவன் முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். ஒருவருக்கு ரீமா சென்.. இன்னொருவருக்கு புதுமுகம் அனுஷ்கா..

படத்தில் சீரியலாக கொலை விழுகிறது. ஒவ்வொருவரையும் கொல்வதுக்கு முன்பே கொலை நடக்க இருக்கும் தேதியும் நேரத்தையும் போலிஸுக்கு கொடுக்கப்படுகிறது. கொலையாளனை கண்டுபிடிக்கும் பொறுப்பு பாக்யராஜிடம் ஒப்படைக்கப்படுகிறது.
இந்த சமயத்தில் "வரட்டா வரட்டா"ன்னு கேட்டுக்கிட்டே திரையில் வராரு மாதவன் @ சீனு. சீனு கிராமத்திலிருந்து பட்டணத்துக்கு தன் தாய்மாமனிடம் வேலை சேர வருகிறார். மாமாவாக வடிவேலு. மாயாஜால வித்தை காட்டும் கரிகாலனாக கலக்கிட்டார் போங்க! ஒவ்வொரு தடவையும் மேஜிக் செய்யுறேன்ன்னு அடி வாங்குகிறார்.மாமாவின் பிஸினெஸ் சூடுப்பிடிக்காததற்க்கு இன்னொரு காரணம், ரீமா சென்னின் கடல் கன்னிங்கிர பேர்ல போட்டிருக்கும் கூடாரம்தான். சீனு வந்ததும் வராததுமாக, தன் மாமாவின் பிஸினெஸை டெவெலப் பன்றதாக சொல்லி அவர் ஏறி வந்த ஆட்டோவையே கடன் வைக்கிறார். அட்டோகாரரும் அங்கேயே டேரா போடுறார்.

மாதவன் கொடுக்கும் ஒவ்வொரு ஐடியாவும் சொதப்பல ஆக..மாதவனோ ரீமா சென் மீது காதல் வயப்படுகிறார். ரீமா-மீது காதலாய் இருக்கும் மணிவண்ணனை அடித்து துவைக்கும் போது ரீமக்கும் காதல் பத்திக்குது.
இந்த சமயத்தில் மாதவன் ரீமாவின் முறைமாமனை கொலை செய்வதை ரீமாவும், பாக்யராஜும் பார்க்க.. அடுத்த சீன்லேயே அவர் ஜெயிலுக்கு போகிறார். அடித்து விசாரித்தும் மாதவன் தான் கொலை செய்யவில்லை என்று சொல்ல.. அங்கே வடிவேலு வந்து ஒரு மேஜிக் செய்ய மாதவன் தப்பிக்கிறார்.
அதே நேரத்தில் பாக்யராஜ் கொலை செய்பவன் குருடனாக இருக்கவேண்டும் என்று கண்டுபிடிக்கிறார். கண்ணன் என்ற இன்னொரு மாதவன் தன் ஃப்ளாஷ்பெக்கை சீனுக்கு சொல்கிறார். கத கேட்டதும், சீனு, வடிவேலு, ரீமாவும் அந்த கடசி கொலையை செய்ய உதவுகிறார்கள்.

ஃப்ளாஷ்பெக் கதை ஒவ்வொரு காட்சியும் ஒரு கவிதை.. கண்ணனுக்கு ஒரு அண்ண்ன் (ஷாம் கணேஷ்), ஒரு அக்கா (தேவதர்ஷினி). சொந்த ஊருக்கு தந்தையின் நண்பரின் மகள் கல்யாணத்துக்கு போகிறார்கள்.கண்ண்னின் தேழனாக லொல்லு சபா சந்தானம். முதல் பாதியில் வடிவேலுவின் காமெடி வெடியை இரண்டாம் பாதியில் சந்தானத்தால் ஈடு கட்ட முடியவில்லை. மாறாக, தேவதர்ஷினி கலக்கிவிட்டார். இவரின் ஞாபகமறதிக்கு அளவே இல்லை.
சேம்பலுக்கு ரெண்டு காட்சிகள். தன் தம்பியின் கல்யாணம் நிச்சயிக்கப்பட்டதும் கல்யாணம் ஆகி 6 வயதில் ஒரு பொண்ணை வைத்திருக்கும் இவர் பெசுவது:

--------------
தேவதர்ஷினி: அப்பா, கணேஷுக்கு ஒரு நல்ல பொண்ணு பார்த்துட்டீங்க! காலா காலத்துல ஒரு நல்ல மாப்பிள்ளைய பார்த்து எனக்கும் கல்யாணம் பண்ணி வைங்க!
சந்தானம்: (தேவதர்ஷினி கணவரை பார்த்து) பப்பு, அதான் சொல்லிட்டாங்கல்ல.. போய் ஒரு நல்ல மாப்பிள்ளையா பாரு!(தேவதர்ஷினியை பார்த்து) அண்ணி, உங்களுக்கு கல்யாணம் ஆகி 6 வயசுல ஒரு குழந்தையே இருக்கு!
தே.த: எனக்கா?????
: பின்னே? கிழவனுக்க்கா?

-----
தே.த: எங்கடா போன? ஆளையே காணோம்?
மாதவன்: என்னக்கா நீதானே அனுப்பி வச்ச!!! சாமான்களை எடுத்து வர!!!தே.த: சரி சரி.. ஆமா.. அப்பா யாரை ரொம்ப நேரமா தேவி தேவின்னு கூப்பிட்டுக்கிட்டிருக்காரு?
மாதவன்: அக்கா... உன் பேருதாங்கா தேவி.. உன்னைதானக்கா கூபிடுறாரு!! போக்கா..
தே.ட: சரி சரி.. ஆமா.. யாரு என்னை கூப்பிட்டா?

----
இதை இங்கே படிக்கிறதை விட படத்தில் பார்த்தீங்கன்னா இன்னும் சூப்பரா இருக்கும்.

இப்படி இவங்க பன்ற ஒவ்வொன்னும் ரசிக்க வைக்குது. புதுமுகம் அனுஷ்கா அழகு. மாதவன்-அனுஷ்கா காதல் ஒரு நாளிலேயே அரம்பித்து வளர்ந்து மறுநாளே முடியவது வருத்தத்தை அளிக்கிறது.

ஒவ்வொருவரும் இறக்கும் அந்த காட்சியில் நம்மை அறியாமலேயே நம் கண்களின் ஓரத்தில் சின்ன ஈரம். அந்த சம்வத்தில் தன் கண்ணை இழந்து குருடனாகும் கண்ணன் அ.க்.அ மாதவன் ஒவ்வொருவரையும் பழி வாங்கி அந்த உண்மையை வெளிகொண்டு வருகிறார்.

பழி வாங்கும் காரணங்கள், காதல் காட்சிகள், கிளைமெக்ஸ் திருப்புமுனை காட்சிகள் எங்கோ பார்த்த ஞாபகம். ஆனாலும், லாஜிக்கை யோசிக்காமல் காமெடி, கதை, மாதவனுக்காக பார்த்தால்.. படம் சூப்பர்.
மாதவன் காமெடி, காதல், அக்க்ஷன்னு எல்லாத்திலும் கலக்கிட்டாரு..

பாக்யராஜ் ரோல் பெரிசா செய்யப் போறார்ன்னு எதிர்பார்க்க வச்சு ஏதும் செய்யாதது வருத்தத்தை தருது.

இந்த வார இறுதியில் நீங்கள் படம் பார்க்கனும்ன்னு நினைச்சீங்கன்னா இந்த படத்தை பார்க்கலாம்.