நேற்று விளையாட்டாய் போட்ட ஒரு பதிவு.. இன்று இதன் மூலம் இன்னொரு அருமையான தகவல் கிடைத்திருக்கிறது..
தமிழில் எழுத தெரியாதவர்கள் ஆங்கிலத்தில் இங்கே டைப் செய்தால் தமிழில் சரியான எழுத்துக்களில் மாறுகிறது. ஆனாலும், தமிழ் படிக்கத்தெரியாதவர்கள் இன்னமும் இந்த தமிழ் பதிவுகளை படிக்க முடியாதே என்ற கவலை இருந்தது. ஏனென்றால் என்னுடைய பல நண்பர்களுக்கு தமிழ் படிக்க தெரியாது.
முன்பு அவர்களுடன் தங்கியிருக்கும்போது தினமும் எனக்கு பிடித்த பதிவுகளை படித்துக்காட்டுவேன். இப்போது நாங்கள் அனைவரும் ஒவ்வொரு திசையிலும் பிரிந்து போயிருந்தாலும் போன் போட்டு, "ஹேய், புதுசா ஏதாவது நல்ல/ நீ ரசிச்ச பதிவுகள் இருந்தால் படித்துக்காட்டேன்?" என்று அன்புக்கட்டளைகள் செல்பேசியின் மூலம் வந்த படியேதான் இருக்கின்றன.
நண்பர்களே, இனி உங்களுக்கு தமிழ் படிக்க தெரியலையே என்ற கவலையே வேண்டாம். உங்கள் தமிழ் வலைப்பூவை அப்படியே லத்தின் எழுத்தாக மொழிமாற்றம் செய்தால், நீங்கள் படிக்கலாமே!
இந்த சுட்டியை உங்கள் ப்ரௌஸரில் டைப் செய்யுங்கள்:
http://eemaata.com/indic2latin.php
"Convert a website" என்ற இடத்தில் உங்கள் வலைப்பூவின் முகவரியை எழுதுங்கள்.
உதாரணத்துக்கு: engineer2207.blogspot.com
அது உடனடியாக http://eemaata.com/indic2latin.php?link=engineer2207.blogspot.com -ஆக மாறிடும். இந்த சுட்டியை தட்டிப்பாருங்க.. :-)
அதுமட்டுமல்ல. நீங்கள் நேரடியாக "Transform Text" என்ற பெட்டியில் தமிழில் டைப் செய்து "Transform to Latin" என்ற பட்டனை க்ளிக்கினாலுல் லத்தின் பெட்டியினுள்ளே அந்த எழுத்துக்கள் வந்துவிடும்..
INTERESTING....
இனி, தமிழ் தெரியாதவர்களும் தமிழில் படிக்கலாம்... :-)
IndicUnicode என்ற எழுத்து இதற்கு வேண்டுமாம். அதை தர இறக்கம் செய்ய http://scripts.sil.org/cms/scripts/page.php?site_id=nrsi&item_id=Gentium_download
இந்த அருமையான தகவலை பகிர்ந்துக்கொண்ட நண்பர் நா.கணேசன் அவர்களுக்கு எனது நன்றிகள்.
Wednesday, October 31, 2007
தமிழ் தெரியாதவர்களும் தமிழ் படிக்கலாம்..
Posted by MyFriend at 9:13 AM 23 comments
Labels: அறிவுப்பூர்வமானவை (?)
Tuesday, October 30, 2007
மொழியோடு விளையாடி.. மொழியோடு உறவாடி..
नानुम हिन्दी एज्हुथा आराम्बिक्कुद्दें अप्पदिन्नु थाप्पू कनाक्कू पोद्दीराथिन्ग्का. आहा, एज़ुथ्ठेल्लाम नूडल्स कनाक्का नीद्दु नीद्दा इरुक्कू. अप्पदिये साप्पिदालाम्न्नु ग३क्कु थोनुम. आनाल, मक्कले, इथुथान हिन्दी!!!!
తెలుంగు ఎజుత ఆరంబిచ్చాచు. ఇని సిద్ధర్తుక్కు తెలున్గ్కులేయే కదితం ఎజుతలాం. ఇతిప్పార్త్తు యారుం వయిరు ఏరియా కుదాతు... నల్లతిల్లై.. సరియా? రామన్నే, నాన్ తెలున్గ్కిల్ ఎజ్హుతురేనే! నాన్ తెలున్గ్కిల్ ఎజ్హుతురేనే!
ಕನ್ನದಾಳೆ ಯಾರುಂ ಥೆರಿಯಾತು. ಅದ, ದ್ರೆಂಜ್ಜ್ ನೀನ್ಗ್ಗ ಕನ್ನದಾಥಾನೆ! ಇ ಮೀನ್ ಕಾನದಳಥಾನೆ ಇರುಕ್ಕೀನ್ಗ್ಗ! ಪಾರುಂಗ್ ಪಾರುನ್ಗ್ಗ.. ಇಂಥ ಮೊಜ್ಹಿಯಿಲುಂ ನಾನ್ ಪೋಸ್ಟ್ ಪೋದ್ದಾ ನೀನ್ಗ್ಗ ವೆನಾಮ್ನ್ನಾ ಸೊಲ್ಲ ಪೋರೀನ್ಗ್ಗ?
തമിഴ് മാതിരിന്നു സോന്നാന്ഗ്ഗ.. ആനാല്, എഴുത്ത് ഇടിയപ്പ മാതിരി വയുതെ? ഒന്നുമേ പുരിയലി. മത്ത മൊഴി മട്ടും ഉണക്ക് പുരിയുതാന്നു കേട്കപ്പടാത്. ആനാല്. ഇതുവും സാപ്പാട് കണക്കാവേ വര്രതുനാലെ ഗ൩ക്കിദ്ദെ ഇരുവ്ത് ഇന്ത എഴുത്ത്തുക്കലി കാപ്പാത്ത്തനും കുകള് ആണ്ടവാ...
என்னடா, என்ன என்னமோ எழுதியிருக்கேனேன்னு பார்க்குறீங்களா? ஒன்னும் புரியலையா? உங்களுக்காக Professor வேதா மேலே நான் என்ன எழுதியிருக்கேன்னு மொழி பெயர்த்து தர்றாங்க.
ஓவர் டூ Prof. வேதா:
வணக்கம் மக்களே, .:: மை ஃபிரண்ட் ::. பல மொழியில கிறுக்கி வச்சிட்டு இதை ட்ரான்ஸ்லேட் பண்ணி தாங்கன்னு நிக்குறாங்க. முடியாதுன்னு சொன்னால், உங்க படத்தை தாங்க, கொஞ்சம் க்ராஃபிக் பண்றேன்னு சொல்றாங்க.. அவ்வ்வ்.. என் நேரம்.. விதி இப்படி சிரிப்பா சிரிக்குதே! வேற வழி இல்லை. இந்த தொல்லையை நீங்களும் கேளுங்க..
ஃபர்ஸ்டா பேசுறது ஹிந்தி.. அவங்க என்ன சொல்றாங்கன்னா:
நானும் ஹிந்தி எழுத ஆரம்பிச்சுட்டேன் அப்படின்னு தப்பு கணக்கு போட்றாதீங்க. ஆஹா, எழுத்தெல்லாம் நூடுல்ஸ் கணக்கா நீட்டு நீட்டா இருக்கு. அப்படியே சாப்பிடலாம்ன்னு உங்களுக்கு தோணும். ஆனால், மக்களே இதுதான் ஹிந்தி..
ஐயோ கொடுமை!!!
செகண்ட் தெலுங்கு. எங்கே போனாலும் இதை மட்டும் விட மாட்றா இவ. தெலுங்குல என்ன சொல்றான்னா:
தெலுங்கு எழுத ஆரம்பிச்சாச்சு. இனி சித்தார்த்துக்கு தெலுங்குலேயே கடிதம் எழுதலாம். இதைப்பார்த்து யாரும் பயிறு எறிய கூடாது.. நல்லதில்லை.. சரியா? ராமண்ணே, நான் தெலுங்கில் எழுதுறேனே! நான் தெலுங்கில் எழுதுறேனே!
இப்போ எதுக்கு ராமை இங்கே இழுக்குற?
பேங்கலூர் மக்களே, மூனாவது கன்னடாவாம்..
கன்னடால யாரும் தெரியாது. அட, ட்ரீம்ஸ் நீங்க கன்னடாதானே! ஐ மீன் கனடாலதானே இருக்கீங்க! பாருங்க பாருங்க.. இந்த மொழியிலும் நான் போஸ்ட் போட்டா நீங்க வேணாம்ன்னா சொல்ல போறீங்க?
கடைசியா மலையாளம்...
தமிழ் மாதிரின்னு சொன்னாங்க... ஆனால், எழுத்து எல்லாம் இடியப்பம் மாதிரி வருதே? ஒன்னுமே புரியல.. மற்ற மொழ்ஹி மட்டும் உனக்கு புரியுதான்னு கேட்கப்படாது. ஆனால், இதுவும் சாப்பாடு கணக்காவே வர்றதுனால G3க்கிட்டே இருந்து இந்த எழுத்துக்களை காப்பாத்தணும் கூகல் ஆண்டவா...
**********************
நன்றிங்க professor.. நன்றி சொல்றதுக்கு தனியா உங்களுக்கு ஒரு போஸ்ட் போட்றலாம். சரியா? மக்கள்ஸ், இன்னைக்குதான் இந்த சுட்டி பொன்ஸ் அக்கா கொடுத்தாங்க.. நான் மொழியோடு விளையாடி மொழியோடு உறவாடி ஒரு பதிவு போட்டுட்டேன்.
தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடா மற்றும் மலையாளம் தெரியணும்ன்னு அவசியமே இல்ல.. எழுத எழுத அதுவே சரியான சொல்லுக்கு மாற்றி அமைச்சிடுது. வாங்க விளையாடலாம். நம்முடைய இன்றைய விளையாட்டு மைதானம் இதுதான்......
இப்போதான் அம்பி அண்ணாத்தேவும் இதைப்பற்றி ஒரு போஸ்ட் போட்டிருக்காருன்னு சிட்டுக்குருவி தகவல் சொல்லிட்டு போச்சு. அவர் என்ன சொல்றாருன்னு இங்கே போய் பாருங்க...
நன்றி: பொன்ஸ் அக்கா, Professor வேதா
Posted by MyFriend at 4:59 PM 28 comments
Labels: கலாய்த்தல்
Saturday, October 27, 2007
CVR-இன் மறைக்கப்பட்ட உண்மைகள்..
என்னடா காலையிலேயே விஞ்ஞானி போட்டோக்ராபர் சி.வி.ஆரின் வலைப்பூவில் காதல் கவிதைன்னு யோசிச்சேன்.. இப்போதானே தெரியுது அந்த கவிதையின் உள் அர்த்தம்!!!!
பி.கு 1: படத்தை பெரிதாக பார்த்து ரசிக்க சி.வி.ஆரை க்ளிக்கவும்.
பி.கு 2: மற்ற 5 பேரின் மேலே க்ளிக்கினாலும் படம் பெரிதாகும். ஆனால் சி.வி.ஆரின் கோபத்துக்கும் நீங்கள் ஆளாவீர்கள்!
பி.கு 3: பி.கு 2 கட்டளை இல்லை.. எச்சரிக்கை..
பி.கு 4: பி.கு 3 சி.வி.ஆர் சொன்னது..
பி.கு 5: இது முன் குறிப்பாய் போட்டிருக்கணும். எனக்கும் இந்த பதிவுக்கும் சம்பந்தமில்லை சி.வி.ஆர்.. :-P
Posted by MyFriend at 9:17 PM 51 comments
Labels: கலாய்த்தல்
காதல் ஒன்று அல்லவா?
ரஹ்மான் ரஹ்மான்தான்.. அழகிய தமிழ் மகன் பாடலைப்பற்றி நான் எழுதப்போவதாக நினைத்தால்.. சாரி,, நான் அதைப்பற்றி பேசப்போவதில்லை என்று முன்கூட்டியே எச்சரித்து விடுகிறேன். :-)))
ஷா ஜஹான் மும்தாஜின் காதல்
லைலா மஜ்னுவின் காதல்
உன் காதல் எந்தன் காதல் ஒன்றுதான்..
-என்றொலிக்கும் பாடலை கேட்டதுண்டா?
ஒரு சில மாதங்களுக்கு முன்பு உலக அதிசயங்களை தேர்ந்தெடுக்கு ஓட்டு நடைப்பெற்றபோது தாஜ்மஹாலின் பெருமையை எடுத்துக்காட்ட அமைக்கப்பட்ட பாடல்தான் One Love.
ரஹ்மானின் பொருத்தவரை உலகில் மூன்று அதிசயங்கள். அவை: தாஜ் மஹால், காதல், இசை..
மூன்றையும் ஒன்றினைத்தால் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும்:
இந்த பாடல் 6 மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டது:
1- காதல் ஒன்று அல்லவா (தமிழ்)
2- Ek Mohabbat (ஹிந்தி)
3- ப்ரணயம் ஒன்னு அல்லோ (மலையாளம்)
4- ப்ரேமா ஒக்கதேகா (கன்னடா)
5- பாலோபாஷா ஏக் ஹொயே (பெங்காலி)
எந்த மொழியில் இருந்தால் என்ன? கருத்தும் காதலும் ஒன்றுதானே!
இதமான இசை, கேட்க கேட்க இனிமை தரும் குரல், அருமையான பாடல் வரிகள், அதற்கேற்ற காட்சியமைப்பு. தாராளமாக இன்னொரு சபாஷ் போடலாம் ரஹ்மானுக்கு..
பருவத் தென்றல் இல்லாது
யுகங்கள்தான் வழி சொல்லாது
காலத்தை வென்றிடுமே சில ஞாபகமே
அரியணைகள் அரசர்கள் எங்கே
வாள் வரைந்த எல்லைகள் எங்கே
எஞ்சுவதோ தென்றல் நீந்தும் பாடலே..
சிலர் பார்வைக்கு வாழ்வின் ஓர் அன்பே என்றால் இன்றானதே
சிலர் பார்வைக்கு வாழ்வின் உயில் செல்வம்தான் என்றானதே
காதல் கரைந்து நீ பார்த்தால்
தேகங்கள் சோகங்கள் தீர்க்கும் மேகம்தான் மேகம்தான்
காதல் அன்றோ
ஜூம்ஜூம் தனனா ஜூம் தனனா
இதயம் ஒன்றல்லவா
ஜூம்ஜூம் தனனா ஜூம் தனனா
இறைவன் ஒன்றல்லவா
ஜூம்ஜூம் தனனா ஜூம் தனனா
ஹேய் காதல் ஒன்றல்லவா
ராதா கிருஷ்ணாவின் காதல்
ஆடாம் ஏவாளின் காதல்
ஹீரா ரஞ்சாவின் காதல்
ஒன்றுதான்
ஷா ஜஹான் மும்தாஜின் காதல்
லைலா மஜ்னுவின் காதல்
உன் காதல் எந்தன் காதன் ஒன்றுதான்
உன் காதலும் எந்தன் காதலும் ஒன்றுதான்
காதலால் காவியம் ஆன ஜீவனே
இதயங்கள் சொல்லும் சலாம்
காதலால் காவியம் ஆன ஜீவனே
இதயங்கள் சொல்லும் சலாம்
(ஜூம்ஜூம்..)
காதலால் காவியம் ஆன ஜீவனே
இதயங்கள் சொல்லும் சலாம்..
யமுணைக்கும் உயிர் வாழ்த்தும் காதலே
உனை தாங்கும் தாயின் சலாம்..
Thursday, October 18, 2007
சித்தார்த்துக்கும் போலியா??
ஒருத்தர் கொஞ்சம் அழகாய், கியூட்டாய், பிரபலமாய் இருக்க கூடாதே? அதுக்குள்ள ஒரு போலி உருவாகிடுறாங்க। :-((((
Posted by MyFriend at 9:09 AM 23 comments
Labels: கவலை, சித்தார்த்
Sunday, October 14, 2007
கைப்புள்ள டூயட் பாடுவாரா?
இந்த 1000 டாலர் கேள்விக்கு பதில் இதோ:
Posted by MyFriend at 8:21 PM 12 comments
Labels: வீடியோ
உயிரை தொலைத்தேன் அது உன்னில்தானே...
என்னுடைய கைவண்ணத்தில் மற்றுமொரு படைப்பு: :-)
Posted by MyFriend at 5:06 PM 14 comments
Labels: சித்தார்த், வீடியோ
Thursday, October 11, 2007
விண்வெளிக்கு ஒரு பயணம்
நேற்றிரவு மலேசியாவின் சரித்திரத்தில் இன்னுமொரு மகத்தான சாதனை பொறிக்கப்பட்டது. வளர்ந்து வரும் நாடுகளின் பொன்னான கனவுகளில் ஒன்று விண்வெளியில் காலடி பதிப்பது. ஆனால், அதற்கான தகவல் மற்றும் அறிவியல் சாதனங்களை வாங்குவதற்கும் அதற்கேற்ற கல்வியை மக்களுக்கு தருவதற்கும் வசதி பல இரண்டாம் உலக நாடுகளுக்கு இல்லை என்று நாமெல்லாம் அறிவோம்.
இல்லை என்பதற்காக கைக்கட்டி வாய்பொத்தியா இருக்க முடியும்? முயற்சி! அதற்கான தேவையான முயற்சிகள் எடுத்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு இந்த சாதனை ஒரு நல்ல எடுத்துக்காட்டு. இன்று வரை விண்வெளி ஆராய்ச்சி மையம் மலேசியாவில் இல்லாவிட்டாலும், மலேசியா ரஷ்ய நாடுடன் இணைந்து செயல்ப்பட அமைந்த சந்தர்ப்பம்தான் மலேசிய விண்வெளி திட்டம் 2003 (Malaysia Space Programme 2003).
நடத்தப்பட்ட ஒவ்வொரு தேர்வும், அதன் கஷ்டங்களையும், கடைசி 8 பேர் கடந்து வந்த சோதனைகளையும், தமிழ் பெண்மணி வனஜா அவர்களின் தன்னம்பிக்கையும் ஏற்கனவே இங்கே எழுதியுள்ளேன். எட்டிலிருந்து நான்கு பேரை தேர்ந்தெடுத்த போது வனஜாவும் தேர்வுப்பெற்று ரஷ்யாவில் சில பயிற்சிகளை மேற்கொண்டார்.அதில் இரண்டு பேர் மட்டுமே விண்வெளி வீரர்களாக தேர்வெடுக்கப்பட்டபோது தேர்வானவர்கள் டாக்டர் ஷேய்க் முஜாப்பார் (Dr. Sheikh Muzaffar) மற்றும் டாக்டர் ஃபாயிஸ் காலீட் (Dr. Faiz Khaleed).
அதில் ஒருவரே TMA-11 ரக விண்கலத்தில் பயணிப்பார் என்று நாமெல்லாம் அறிந்ததே. இவர்கள் இருவரும் தகுதியானவர்களாக இருந்ததால் மேலும் பல தேர்வுகள் வைக்கப்பட்டு தேர்வானவர் டாக்டராக பணிப்புரிந்த ஷேய்க் முஜாப்பார்தான்.
நேற்று இரவு மலேசிய நேரம் 9.21க்கு கசாக்ஸ்தானில் இருந்து தன் பயணத்தை தொடங்கிய Soyuz TMA-11-இல் அமேரிக்காவை சேர்ந்த பெக்கி வித்சன் (Commander Peggy Withson) மற்றும் ரஷ்யாவை சேர்ந்த யூரி மலேன்செங்கோவும் (Yuri Malenchengko) சேர்ந்து பயணிக்கிறார்கள்.
TMA-11 மூலமாக ஒவ்வொரு மலேசியனின் கனவும் டாக்டர் ஷேய்க் முஜாப்பார் மூலமாக நினைவாகியது. இவரின் இந்த வெற்றி மலேசியாவின் வருங்கால தலைமுறையினருக்கு ஒரு ஊக்கமாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை எனலாம். விண்வெளி வீரனாக வேண்டும் என்ற இவரது சிறு வயது லட்சியத்தை "இது சாத்தியமற்ற கனவு. நடக்காது" என்று பல பேர் சொன்னதுக்கு அவர் இப்போது பதில் சொல்கிறார்.
"நான் கண்ட கனவு பேராசை, பகல் கனவு என்று மற்றவர்கள் சொன்ன அந்த வார்த்தைகள்தான் நான் இந்தளவு வளர காரணமாய் அமைந்தது. ஆகவே இப்போதே கனவு காணுங்கள். சாதிக்கலாம்." என்கிறார் orthopaedic எனப்படும் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும் மருத்துவராக பணி புரிந்த இவர்.
இவருடைய 12 நாட்கள் விண்வெளி பயணத்தில் இவர் பெரும் அனுபவம் கூடிய சீக்கிரத்திலேயே மலேசிய விண்வெளி ஆரய்ச்சி மையமும் மலேசியாவின் சொந்த விண்கலம் உருவாகுவதுக்கும், இன்னும் நிறைய விண்வெளிவீரர்களும் உருவாகுவதற்கு உதவும் என்று நம்புவோமாக.
நன்றி: அறிவுஜீவி கப்பி
மலேசிய முதல் விண்வெளிவீரர்
Posted by MyFriend at 10:45 AM 13 comments
Wednesday, October 10, 2007
திரும்பி பார்க்கிறேன்
இன்று ஒரு புள்ளியில் நின்று கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன். எங்கெங்கோ நடந்து/ கடந்து வந்திருக்கிறேன். மை ஃபிரண்டின் உலகின் 200வது பதிவையும் தொட்டாச்சு. மார்ச் மாதம் 2006-இல் எந்த ஒரு காரணமும் இல்லாமல் ஆரம்பிக்கப்பட்டது இந்த வலைப்பூ.
மார்ச் 11-இல் ப்ளாக்கர்ன்னா என்னன்னு தெரிந்துக்கொள்வதுக்காகத்தான் ஆங்கிலத்தில் ஆரம்பித்தேன். 4 மாதம்.. சரியாக நாலே நாலு மாதம்தான்.. மூடும் விழாவையும் நடத்தாமலேயே போய்விட்டேன். ப்ளாக்கர்ல ஒரு அக்கவுண்ட் இருக்கிறது என்பதையே மறந்துட்டேன். தமிழ் கிறுக்கு எனக்கும் பிடித்திருந்ததால் இரண்டாவது திறப்புவிழாவும் கண்டேன் நான்.
அக்டோபர் 10-இல் தமிழில் எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருடம் நிறைவடைகிறது. 200 பதிவுகளில் அனேகமாக தமிழில் எழுதியது மட்டும் 100 இருக்கும்.
நான் எழுத ஆரம்பிச்சது தமிழில் எனக்கிருந்த தாகம்தான். எனக்கு ஒரு பழக்கம் இருக்குங்க. தமிழ்ல எதை பார்த்தாலும் அதை படிப்பேன். ஒருத்தடவை நான் பேருந்துக்கு காத்திருந்தபோது ஒரு பேருந்து கண்ணாடி உள்ளே ஒரு போஸ்டர்… தமிழில்.. அதை நான் பார்க்கும்போது அந்த பேருந்து புரப்பட தயாராகிடுச்சு. அதை படித்தே தீரணும்ன்னு அந்த பேருந்துல ஏறி டிக்கெட் எடுத்து அந்த போஸ்டரை படித்துட்டுதான் இறங்கினேன்.
உங்க ஊரில் தமிழ் புத்தகம் கிடைக்காதான்னு கேட்டா, என்னோட பதில் இல்லைன்னுதான் சொல்வேன். நான் இருந்த இடத்தில் தமிழ் நாளிதழே கிடைக்காத போது புத்தகத்துக்கு எங்கே போவேன் நான்? அதுக்குதான் இப்படி பஸ்ல, ரோட்டுல, கீழே கிடக்குற எதுல தமிழை பார்த்தாலும் படிச்சுட்டு இருப்பேன்.
Basic தமிழ் மட்டுமே கற்றிருந்த எனக்கு ஒரு பதிவெழுதவே குதிரை கொம்பாக இருந்தது. இதை வச்சிக்கிட்டே இத்தனை பதிவெழுதியிருப்பது எனக்கே ஒரு பிரமிப்பாகத்தான் இருக்கிறது. ஆனால், இதுல ஏதாவது ஒரு பதிவாவது உங்களை கவர்ந்திருக்குமா இல்லையான்னு எனக்கே ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது. அப்படி இருந்தால் அது எதுன்னு நீங்கதான் சொல்ல வேண்டும்.
நான் இவ்வலையுலகில் கற்றதை விட பெற்றது அதிகம். கற்றது தமிழ்.. பெற்றது நண்பர்கள். ஈயடிச்சான் காப்பியிலிருந்து நண்பனான சூனியன் வரை கார்த்தியிலிருந்து லேட்டஸ்ட் ஃபிரண்ட் நிலா வரை எத்தனை எத்தனை நண்பர்கள்! என் நண்பர்களின் உலகத்தை அப்படியே வலது பக்கத்தில் பாருங்க.
உங்கள் ஒவ்வொருத்தரின் பற்றியும் இங்கே பேசவேண்டும் என்று ஆசைதான்.. ஆனால், அதைப்பற்றி எழுத வேண்டுமென்றால் அதுக்கே ஒரு தொடர் எழுத வேண்டும். இது கூடிய சீக்கிரமே வெளி வரும் என்று நினைக்கிறேன்.
இங்கே யார் யார் என்று சொல்லாமல் நான் அறிந்த சில நண்பர்களைப்பற்றி சொல்லவேண்டும் என்று விரும்புகிறேன். எத்தனையோ நண்பர்கள்!
சங்கம், யூனியன், கும்மி என்று பல வகை க்ரூப். அதையும் மீறீ சில நட்பு. அவர்களில் சிலர் இணையத்திலிருந்து ஒரு படி மேலே போய் போனிலும் தொடர்பு வைத்துக்கொள்ளும் அளவு வளர்ந்துள்ளது. அதிலும் ஒரு சிலர் இன்னொரு படி மேலே இதயத்தின் பக்கத்திலும் இடம் பிடித்திருக்கீங்க.
என்னுடைய பதிவுகளில் உங்களுக்கு ஏதாவது வளர்ச்சி தெரிந்தால் அதுக்கு காரணம் நான் அல்ல. என்னுடைய பதிவுகளை இடைவிடாது படித்து இப்படி எழுதலாமே அப்படி எழுதலாமே என்று ஐடியா கொடுக்கும் என் நண்பர்கள்தான் காரனம். காமெடி எழுது கதை எழுது என்று சொல்லி அதுக்கும் இப்படி எழுதலாமே அப்படி எழுதலாமே என்று கற்று கொடுப்பதிலிருந்து எழுதி முடித்ததும் இந்த வார்த்தை தவறு, 'ன'க்கு பதிலா 'ண' என்று எழுத வேண்டும், இப்படி எழுதினால் இந்த வார்த்தையில் அர்த்தம் இப்படி ஆகிடும், இந்த மாதிரி ஸ்டைய்லில் எழுதலாமே என்று அவர்கள் கொடுத்த அறிவுரைதான் காரணம். இவ்வேளையில் அவர்கள் அனைவருக்கும் எனது கோடி நன்றிகள். இனியும் அப்படியே எனக்கு வழிக்காட்டணும். சரியா? ;-)
இது வரை எந்த ஒரு பதிவரையும் நேரில் நான் பார்த்ததில்லை. கண்டிப்பாக நேரில் பார்க்க வேண்டும் என்று நான் நினைக்குமளவு வளர்ந்திருக்கும் சில நட்பு. என் நலனிலும் சந்தோஷத்திலும் மிகவும் அக்கறை வைத்திருக்கும் அந்த சிலருக்கு நான் என்ன செய்ய போகிறேன்?
தமிழில் பெரிசாக எதுவும் சாதிக்கும் அளவு எனக்கு திறமை இல்லாவிட்டாலும், இதுவரை எழுதியதை விட இன்னும் நன்றாக எழுத வேண்டும் என்று ஆசைகள் இருக்கு. நடக்குமா?? அதையும் பார்ப்போம். J
பி.கு 1: Double celebration என்னன்னு நான் சொல்லிட்டேன்
பி.கு 2: அதுல ஒரு குட் நியூஸ் G3 கலாய்த்தல் சங்கம் ஆரம்பிக்கறதுன்னு சிலர் தப்பா நெனச்சிட்டு இருந்திருப்பீங்க. அஸ்கு புஸ்கு.. எங்க அக்காவை நான் கலாய்க்கலாம். மத்தவங்க கலாய்க்கிறதுக்கு நானே சங்கம் ஆரம்பிப்பேனா?
பி.கு 3: ஆனால், மத்தவங்க அந்த சங்கம் ஆரம்பித்தால் கண்டிப்பாக எனக்கு லைஃப் டைம் அட்மிஷன் கொடுக்கணும். சரியா?
பி.கு 4: நிகழ்ச்சி முடிஞ்சிடுச்சு. அடுத்து என்ன? விருந்துதான். சென்னை மற்றும் சுற்று வட்டாரத்தில் இருப்பவர்களுக்கு G3 விருந்து வழங்குவார். ஷார்ஜா, துபாய் பக்கம் உள்ளவங்களுக்கு கோபி்யும் பேங்கலூரில் ராம் மற்றும் இம்சை அரசியும், அமெரிக்காவில் ஜி அண்ணணத்தேயும் விருந்து வழங்குவார்கள். வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு இந்த சின்ன குழந்தையை வாழ்த்திட்டு போங்க. :-)
Posted by MyFriend at 10:44 AM 127 comments
Labels: கொண்டாட்டம், நன்றி
Tuesday, October 09, 2007
பொண்ணுங்க எல்லாரும் கோவிலுக்கு போகணும்.. பையனுங்க எல்லாரும் ஷாப்பிங் போகணும்..
நேற்று காலையில் ஒரு நண்பன் ஒருவன் கால் பண்ணினான்.
நான்: ஹலோ! வாவ்.. என்ன ஒரு ஆச்சர்யம்! ஐயா காலங்காத்தாலேயே எழுந்திரிச்சிட்டாரு? என்ன விசேஷம்?
அவன்: ஏய்! இப்போ நீ எங்கே இருக்கே?
நான்: என்ன கேள்வி இது? ஆபிஸ்லதான்..
அவன்: லீவு போடுவியா இன்னைக்கு?
நான்: எதுக்கு?
அவன்: கோவிலுக்கு போகலாம் வா..
நான்: ஆஹா.. என் நண்பனுக்கு ஞானமெல்லாம் வந்துடுச்சு! காலையிலேயே கோவிலுக்கு போகணும்ன்னு கூப்பிடுறானே! பெருமையா இருக்கு!
அவன்: வா போகலாம்.. வா போகலாம்..
நான்: என்ன சூப்பர் ஸ்டார் வாங்க பழகலாம் வாங்க பழகலாம்ன்னு கூப்பிடுற மாதிரி கூப்பிடுற?
அவன்: அவர் பெரிய தல. இவரு சின்ன தல..
நான்: சின்ன தலயா? யாரை பத்தி பேசுற? அப்போ நீ சாமி கும்பிட போகல! அதானே?
அவன்: கோவிலுக்கு போகலாம்ன்னு சொன்னேன். சாமி கும்பிடத்தான் போறோம்ன்னு சொன்னேனா? பில்லா ஷூட்டிங் நடக்குது பத்துகேவ்ஸ் கோவில்ல. இன்னையோடு மூன்றாவது நாள் ஷூட்டிங். தல சூப்பரா நடிக்கிறாராம். அவரை பார்க்க போலாம் வான்னுதானே கூப்பிடுறேன்.
நான்: ஏண்டா! இது உனக்கே ஓவரா தெரியல? ஷூட்டிங் பார்க்க போறதுக்கு நான் லீவு போட்டுட்டு வரணுமா? ஹீரோவை பார்க்கறதுக்கு பொண்ணுங்கதானடா ஓடுவாங்க? நானே போகலை! உனக்கெதுக்குடா இதெல்லாம்? எனக்கு தெரிஞ்சு உன்னை போல பையனுங்க ஹீரோயினை பார்க்கத்தானே ஓடுவீங்க? நயந்தராதான் பத்துகேவ்ஸ்க்கு போகலையே! எதுக்கு உனக்கு இந்த ஆர்ப்பாட்டம்?
அவன்: நயந்தாராவும் ஷூட்டிங் பார்க்க வருவாங்கிற ஒரு நட்பாசைதான்..
நான்: ஒழுங்கா காலேஜுக்கு போகுற வழியை பாரு.. இப்போ போனை கட் பண்ணு!!!
அவ்வளவுதான்.. பையன் போனை கட் பண்ணிட்டான். காலேஜுக்கு போயிருப்பான்.. ஆனா...
இரவு 8 மணிக்கு திரும்ப அவனிடமிருந்து ஒரு கால்..
அவன்: ஹலோ...
நான்: என்னடா.. காலேஜ் போனியா?
அவன்: போகுற வழியில வண்டி பங்ச்சர். பத்துகேவ்ஸ்க்கு முன்னாடித்தான்.. வண்டியை மெக்கானிக் ஷாப்ல போட்டுட்டு ரிப்பேர் பண்ணி முடிக்கிற வரைக்கும் ஷூட்டிங் பார்த்தேன். அஜித் சூப்பரா ஆடுறார். பாட்டுக்கூட கேட்க ரொம்ப நல்லா இருக்கு.
நான்: அடப்பாவி! நான் அவ்வளவு சொல்லியும் நீ போயிருக்கே அங்கே!! :@@@@
அவன்: சரி அதை விடு.. நாளைக்கு லீவு போடுவியா நீ?
நான்: நாளைக்கு எதுக்கு நான் லீவு போடணும்?
அவன்: எனக்கு கம்பெனி கொடுக்கத்தான்.. நாளைக்கு நான் KLCCக்கு போகணும்.
நான்: ஏதாவது ப்ராஜெக்ட் ப்ரெசெண்டேஷனா? ப்ரிபேர் பண்ணிட்டியா?
அவன்: ப்ராஜெக்ட் ப்ரெசெண்டேஷனா? யாரு சொன்னா? நாளைக்கு ஷூட்டிங் KLCCலன்னு விஷ்ணூவர்த்தன் சொன்னாரு. நயந்தாரா ஷூட்டிங். அவளை பார்க்கத்தான் கூப்பிடுறேன்.
நான்: ஏண்டா! என்னை பார்க்க உனக்கு என்னவா தெரியுது? நான் காலையில அவ்வளவு சொல்லியும் நீ ஷூட்டிங் போனதும் இல்லாமல் திரும்ப என்னையே கூப்பிடுறீயா நீ?
அவன்: நீதானே ஒரு அருமையான தத்துவம் சொன்னே! அதைத்தான் ஃபாலோ பண்றேன்.
நான்: நானா? என்ன சொன்னேன்?
அவன்: பொண்ணுங்க எல்லாரும் கோவிலுக்கு போகணும் (அஜித்தை பார்க்க).. பையனுங்க எல்லாரும் ஷாப்பிங் போகணும் (நயந்தராவை பார்க்க)..ன்னு..
நான்: அடப்பாவி! நான் சொன்னதுக்கு இப்படி ஒரு மீனிங் டிரைவ் பண்ணி வச்சிருக்கியா நீ? :@@@@.. போன்ல அடிக்க முடியாதுன்னு தைரியமா உனக்கு? இப்பவே உன் அக்காவுக்கு கால் பண்றேன். கூட ரெண்டு அடி சேர்த்து தருவாங்க!!!!
அவன்: ஐயோ வேணாம்.. டாட்டா.. பை பை..
வச்சிட்டான் போனை.. அனேகமா இன்னைக்கு KLCC வளாகத்துலத்தான் சுத்திட்டு இருப்பான். யாராவது பார்த்தீங்கன்னா எனக்கு பதிலா ரெண்டு அடி சேர்த்து கொடுங்க அவனுக்கு!!!
பி.கு. 1: என்னை டென்ஷனாக்கி இந்த பதிவை எழுத காரணமாய் இருந்த அந்த நண்பன் பிரசாத்துக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.
பி.கு. 2: நாளைக்கு ஒரு ஸ்பெஷல் போஸ்ட். Double celebration. எல்லாரும் விருந்துக்கு வந்துடுங்க. :-)
Posted by MyFriend at 8:44 AM 25 comments
Monday, October 08, 2007
இன்பம் கொட்டிக்கிடக்கிறதே..
சுற்றும் பூமியில் இன்பம் கொட்டிக்கிடக்கிறது. ஆனால், நாம் அந்த இன்பத்தை அள்ளாமல் துன்பங்களையும் சோகங்களையும் தேடி செல்கிறோம். ஏன் என்று கேட்டால், "துன்பத்தை தேடி அதனை என் வாழ்வினில் இருந்த அகற்றப்போகிறேன்" என்றூதான் பதில் வரும். ஆனால், அதை அகற்றுவதுக்கு தேடி கூடவே வைத்துக்கொள்கிறோம். துன்பங்கள் குட்டி போட்டு வட்டி போட்டு பெரியதாக வளர்ந்து நிக்கும். அப்போது, "அய்யோ.. எனக்கு மட்டும் எல்லாம் கஷ்டங்களாகவே வருகிறதே" என்று கவலை படுவது நியாயமா?
இனபத்தை தேடி பிடித்து அதனை அள்ளுவதுதான் புத்திசாலித்தனம். இதனை படித்துக்கொண்டிருக்கும் அனைவருக்கும் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் கிட்ட என் பிரார்த்தனைகள். :-)
பூவெல்லாம் மாலைகள் ஆகும்
ஜெயித்தால் நம் தோள்களில் ஆடும்..
செவ்வானம் வெட்கம் கொண்டது யாராலே
சங்கீதம் மூங்கிலில் வந்தது யாராலே
சுற்றும் பூமியில் இன்பம் கொட்டிக்கிடக்கிறது
நம்மை அழைக்கிறது
(பூவெல்லாம்..)
வானகம் தூரம் இல்லை
வங்கக்கடல் ஆழம் இல்லை
நம்பிக்கை வைப்போம் இந்த வாழ்விலே
சூரியனை வட்டமிட்டு தன்னைத்தானே சுற்றும் பூமி
நம்மை சுற்றி வருமே அந்த வானிலே
புது சந்தோஷம் எங்கே
புது சங்கீதம் எங்கே
அது நம்பிக்கை வாழும் நெஞ்சில்தானடா
(செவ்வானம்..)
(பூவெல்லாம்..)
Posted by MyFriend at 8:26 PM 7 comments
Sunday, October 07, 2007
எனக்கு நடிக்க தெரியாதுய்யா..
இங்கு தவறு யாருடையது??
என்ன ஒரே சின்னபுள்ளத்தனமா இருக்கு? இந்த ஊரு இன்னுமா இவங்கள நம்பிட்டு இருக்கு??
Posted by MyFriend at 10:30 PM 17 comments
Labels: வீடியோ
தொட்டா சிணுங்கி
உறவு, பகை, நட்பு, பந்தம், பாசம்.. எது எப்போது தோன்றும் எப்போது முறியும் என்று தெரியாத ஒரு சூழலில் வாழ்கிறோம் மனிதர்கள் ஆகிய நாம். தாய் மேல் மகன் கொண்ட பகை, மகன் மேல் தந்தை கொண்ட வெறுப்பு, அண்ணன்-தம்பி சண்டை, மாமியார்-மருமகள் யுத்தம், கணவன்-மனைவி ஊடல்.. இப்படி எத்தனை வகை வேண்டும்? அடுக்கிக்கொண்டே போகலாம்.
தொட்டதுக்கும் கோபம் நமக்கு பொத்துக்கொண்டு வருகிறது. மனம் ஒரு தொட்டா சிணுங்கிதானே நமக்கு? ஒருத்தடவை உடைந்த கண்ணாடியை ஒட்ட வைத்தாலும் உடைந்த கோடுகள் கண்டிப்பாக தெரியும். அதுபோலவே உறவும் பகையும். சண்டை போட்டு சமாதானம் ஆனாலும் மனதில் கீறிய தழும்புகள் நம் மனதை விட்டு நீங்குகிறதா?
மறப்போம் மன்னிப்போம் என்று நம்மில் எத்தனை பேர் இருக்கிறோம்? மனதை தொட்டு கேளுங்கள். உண்மை பல சமயங்களில் கசத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டியது நாம்தான்.
அவ்வகைய பிரிவில் சேர்ந்த நான் ரசிக்கும் பாடல் ஒன்று:
மனமே தொட்டால் சிணுங்கிதானே
அதுவே தன்னால் மலரும் மானே
உறவோ என்னாலும் தீராது
பகையோ என்னாலும் வாராது
மனமே தொட்டால் சிணுங்கிதானே
தாய்பாலே விஷமாய் மாறுமா
தமிழ் தாயே நீ அதை கூறம்மா
பெற்ற தந்தை மீதே கோபமா
பிள்ளை கோபம் இங்கே ஞாயமா
தினந்தோறும் காலம் மாறுமே
தினந்தோறும் காலம் மாறுமே
இது பாவமோ இல்லை சாபமோ
சில காலம் தோன்றும் சோகமோ
(மனமே..)
நிழலே உன் பின்னால் நிலையில்லை
நிலவே இங்கு யாருக்கும் உறவு இல்லை
காற்றே தன் வழியது அறிந்ததில்லை
கட்லே தன் அலைகளை புரிந்ததில்லை
இதுதானே உலகின் நியதிய்டி
இதுதானே உலகின் நியதிய்டி
இது போலவே உந்த வாழ்விலே வந்த சோகம் நாலை மாறுமே
(மனமே..
Posted by MyFriend at 10:20 AM 6 comments
Saturday, October 06, 2007
நட்பெனும் பெயரிலே
நட்பெனும் பெயரிலே
கலந்தாய்
என்னுள்ளே..
இன்று..
நீ ஒரு மூலையில்
நான் ஒரு மூலையில்
அழுகையும் நினைவுகளும்
அதிகரித்தது நட்பின் ஆழத்தை…
நாளை
தொடருமா?
கேள்விக்குறி வளைந்து நிற்க,
உன் இறுகப் பற்றுதலில்
ஓடி மறைந்தன
ஒவ்வொரு வினாக்களும்…
Send this eCard !
என்னுடைய முதல் கவிதை (ஒத்துக்க மாட்டீங்கன்னு தெரியும்.. :-P)
Specially dedicating this to Asa, Usha & Printha. Miss you girls. :-((
நன்றி: ஜி
Posted by MyFriend at 10:36 PM 27 comments
உலகமே புதியதாய்..
ரொம்ப நாள் ஆச்சு எனக்கு பிடித்த பாடல்களை இங்கே எழுதி. அதான் திரும்பி வந்துட்டேன்ல. :-)
போன வருடம் வெளியாகிய படம் காதலே என் காதலே. இசையமைப்பாளர் ப்ரயோக் தமிழுக்கு புதியவர். ஆனால், இசைக்கு எதுக்கு மொழின்னு நிரூபித்திருக்கிறார். இந்த பாட்டில் முக்கிய தூண் அதில் வரும் வரிகள்.
முதல் தடவை கேட்டபொழுதே இந்த வரிகள் 100% எனக்கே எனக்காக எழுதியதுபோல ஒரு உணர்வு. அன்றிலிருந்து இன்று வரை எப்போதும் என் mp3 playerல என்னுடன் கூடவே இருக்கும் பாடல்களில் ஒன்றாக இடம்பிடித்துவிட்டது. நீங்களும் கேட்டுப்பாருங்கள். கூடவே பாட:
உலகமே புதியதாய் இன்று நானும் உணர்ந்தேனே
கதவினை திறந்து நான் புதிய வெளிச்சத்தை கண்டேன்
பனிக்குடம் உடைந்து நான் மீண்டும் மண்ணுக்குள் பிறந்தேன்
தோள்களில் வாழ்க்கையை சுமக்கவே துணிச்சல் தோண்றும்
காட்டிலே உள்ள மரத்துக்கு நீரை ஊற்றிட ஆளில்லை
உன்னையே நீ பார்த்துக்கொள் வாழ்க்கை என்பது வேறில்லை
உன் நிழல் உன்னை தொடருமே அது இருட்டிலே விட்டு விலகுமே
உண்மையில் நீ ஒருத்தன் தான் உன் துணையென்ற உண்மை விளங்குமே
பனிமூட்டமான பாதை நீ பயணிக்கும் வேளை
கண்ணோடு மறைந்த இடங்கள்
அருகில் சென்றால் தெரிந்துவிடும்
(உலகமே..)
தீயினை தொட்டு தெரிந்துக்கொள் மீண்டும் பயங்கள் தொடருமா
மலையிலே உள்ள அருவிகள் மண்ணில் விழுவதால் உடையுமா
இலைகளை கிளை உதிர்க்குமே அது மறுபடி மெல்ல துளிர்க்குமே
காயங்கள் கொஞ்சம் வலிக்குமே அதன் பாடங்கள் வெற்றி கொடுக்குமே
இந்த நாளும் உனது என்று நீ நினைத்திடும் பொழுது
கடிகார நேரம் எல்லாம் நீ சொன்னதை கேட்டுவிடும்..
(உலகமே..)
Posted by MyFriend at 10:52 AM 4 comments
Friday, October 05, 2007
வாழ்க்கைப்பயணம் -2
முன்னே வேகமாய் வந்துக்கொண்டிருந்தது ஒரு டாங்கர் லாரி.
"சந்தியா.. லாஆஆஆஆர்ர்ரீஈஈஈ" அஞ்சலி கத்தினாள்.
*********************************
இனி....
அஞ்சலியின் அலரலினால் மீண்ட சந்தியா சீக்கிரமாக அந்த நிலையை ஜீரணித்துக்கொண்டதுனால் இடது பக்கம் தன் காரை சட்டென திருப்பினாள்.
வினாடியில் நடக்கவிருந்த விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பித்தன்ர் இருவரும்..
"என்னடா இப்படி ஓட்டுற காரை? என்ன யோசிச்சுட்டு இருக்க? இது சரிப்பட்டு வராது.. சாவியை கொடு. நான் ஓட்டுறேன்". அஞ்சலி கார் சாவியை வாங்கிக்கொண்டு பயணத்தை தொடர்ந்தாள்.
கார் இவர்கள் தங்கியிருக்கும் அப்பார்ட்மெண்ட் வந்து சேர, சந்தியா தன் துணிகள் சிலவற்றை தன் பையில் எடுத்து வைத்துவிட்டு தன் ஊருக்கு புரப்பட்டாள்.
4 மணி நேர பிரயாணத்தில் அவள் குவாந்தானில் உள்ள தன் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். இரவு பத்து மணிக்கு மேல் தன் வீட்டு முன்னே ஒரு கார் சத்தம் கேட்டதும் வெளியே வந்து எட்டிப்பார்த்தார் ராஜகோபால்.
"என்னம்மா? திடீர்ன்னு வந்திருக்கே?"
அப்பா ஆச்சர்யமாகவும் சந்தோஷமாகவும் கேட்டுக்கொண்டே கார் வரை வந்து அவளின் பையை தூக்கினார்.
சத்தம் கேட்டு வெளியே வந்த பாக்கியம் அம்மாள் தன் மகளை பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியுடன் தன் மகளை கட்டி அணைத்துக்கொண்டார்.
"உனக்கு கால் பண்ணி ஊருக்கு வர சொல்லணும்ன்னு நெனச்சிட்டே இருந்தேன். நீயே வந்துட்டே. எல்லாம் கடவுளின் செயல்தான்"
"என்னம்மா விஷயம்?" சந்தியா புதிருடன் கேட்டாள்.
"இரும்மா.. சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்"
அம்மா சொல்லிக்கொண்டே சமயலறையை நோக்கி நடந்தாள்.
"என்னப்பா? அம்மா என்னமோ புதிருடன் பேசுறாங்க? நீங்களாவது சொல்லுங்களேன்".
"சாப்பிட்டுவிட்டு பேசலாம்மா" அப்பா சமாதானம் படுத்தினார்.
"என்னங்க, அவ கிட்ட விஷயத்தை பட்டுன்னு போட்டு உடைக்க வேண்டியதுதானே?" அம்மா சமயல்க்கட்டிலிருந்து மூன்று தட்டுகளை எடுத்து வந்து மேஜையில் அடுக்கிக்கொண்டே சொன்னார்.
"இன்னைக்கு ஒருத்தவங்க உன்னை பெண் கேட்க வந்தாங்க. நாங்கள் விசாரிச்சிட்டோம். நல்ல குடும்பம். பையனையும் எங்களுக்கு புடிச்சிருக்கு. உனக்கு சம்மதம்ன்னா மேற்கொண்டு பேசலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கோம்" அம்மா மூச்சு விடாமல் பேசினார்.
"இதுக்குதான்... நான் ஊர் பக்கமே வர்றதில்லை. வந்தாலே கல்யாணம் பேச்சை எடுக்காமல் இருக்கமாட்டீங்களே?"
தன் அறைக்குள் செல்ல முற்ப்பட்ட சந்தியாவை அப்பா நிறுத்தினார்.
"சந்தியா குட்டி, நீ இந்த வீட்டுல ஒரே பிள்ளைம்மா. உனக்கு ஒரு கல்யாணம் காட்சி பண்ணி வைத்து பேரக்குழந்தைகளை நெஞ்சுல போட்டு விளையாடுற ஆசை எங்களுக்கு இருக்காதாம்மா?" அப்பா மனவருத்ததுட்டன் பேசியது சந்தியாவுக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது.
"மூனாவது வீட்டு கனகா மகள் செல்விக்கு இப்போதான் 23 வயசு. அவளே திருமணம் செய்து 2 பிள்ளைங்க இருக்காங்க.. உன்னோடு படிச்ச பிள்ளைங்க எல்லாரும் கல்யாணம் பண்ணிட்டாங்க. உன்னோட கல்யாணம் பார்க்கத்தானே நாங்க இன்னும் உயிரை கையில புடிச்சிட்டு இருக்கோம்?"
சந்தியாவால் மௌனத்தை தவிர வேறெதுவும் பதிலாக தர முடியவில்லை.
"அம்மா, எனக்கு யோசிக்கிறதுக்கு கொஞ்சம் டைம் வேணும் ப்ளீஸ்.." சொல்லிக்கொண்டே தன் அறையை நோக்கி நடந்தாள்.
"என்னவோம்மா.. இப்படி யோசிக்கிறேன்னு சொல்லி ஒரு நாள் கூட நீ உன் பதிலை சொன்னதில்லை. இந்த தடவையும் நாங்க டைம் தருகிறோம். யோசிச்சுட்டு சரின்னு சொன்னீன்னா அதுவே போதும்மா" அம்மா தன் மகள் இந்த தடவை சரின்னு சொல்வாள் என்றூ மிகவும் உறுதியோடு சொன்னார்.
அறை கதவை சாத்திவிட்டு மின்விசிறியை தட்டிவிட்டு கட்டிலில் படுத்தவள் சந்தியாவின் எண்ண ஓட்டத்தில் தியாகுதான் நின்றான். அப்படியே தூங்கிவிட்டாள் அவள். கனவில் அந்த நெடுஞ்சாலை தோன்றியது. அவன் இன்னமும் தன் காரில் ஏறாமல்தான் நின்று கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் சந்தியாவின் கார் அருகில் ஒரு நீல நிற வாஜா கார் வந்து நின்று ஹார்ன் அடித்தது. காரின் கதவும் திறக்கப்பட்டது. இனியும் தியாகுவின் வருகையை எதிர்ப்பார்த்து நிற்பது அர்த்தமில்லாத ஒன்று என்று அவளுக்கு தோணவே காரிலிருந்து இறங்கினாள்.. யாரோ கதவு தட்டியதில் அவள் கனவிலிருந்து முழித்தாள்.
எழுந்து கதவை திறந்தாள்.
"சாப்பிடாமலேயே படுத்திட்டியேம்மா. இந்தா.. இந்த பாலையாவது குடி." அம்மா பாசத்தோடு ஒரு க்ளாஸ் பாலோடு நின்றார்.
பாலை வாங்கிக்கொண்டு "அம்மா, என் மனசு மாறுவதுக்குள்ள நீங்க சொன்ன பையனையே பேசி முடிச்சிடுங்க" என்று சொல்லிவிட்டு திரும்ப அவள் அறை கதவை தாளிட்டுக்கொண்டாள்.
தியாகுவும் அந்த முகம் தெரியாத வாஜா ஓட்டுனரும் அவள் சிந்தனையில் தோன்றினார்கள். யோசிக்க யோசிக்க கொஞ்சம் கண் கலங்கி அப்படியே உறங்கிபோனாள். காலை ஒன்பது மணிக்கு குளிச்சிட்டு வெளியே வந்தவள் வீட்டில் இருக்கும் பரப்பரப்பை பார்த்து கொஞ்சம் ஆச்சர்யப்பட்டு தன் தாயிடம் கேட்டாள்..
"நீதானம்மா சீக்கிரமே பேசி முடிக்க சொன்னே! அதான் மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை இன்னைக்கே பொண்ணு பார்க்க வரசொல்லிட்டேன். மதியம் 2 மணிக்கு வர்றேன்னு சொல்லியிருக்காங்க" அம்மா மும்முரமாக வீட்டை சுத்தப்படுத்திக்கொண்டிருந்தார்.
சந்தியா அஞ்சலிக்கு கால் பண்ணினாள்.
"The number you are calling is currently busy." என்று ஒரு இயந்திர பெண்ணின் குரல் கேட்கவே தன் செல்பேசியை கீழே வைத்தாள்.
நண்பகல் 12 மணிக்கெல்லாம் அம்மா ஒரு ஊதா கலர் சாரியை கொடுத்து "இதை கட்டும்மா. உனக்கு எடுப்பா இருக்கும்" என்றார்.
அவளும் அலங்காரம் பண்ணிக்கொண்டு கண்ணாடியின் முன் வந்து நின்றாள். கண்ணாடியில் தியாகுவின் முகம் தெரிய, தன் கண்களை கசக்கி மீண்டும் பார்த்தாள். மெது மெதுவாக தியாகுவின் உருவம் கண்ணாடியிலிருந்து மறைய ஆரம்பித்தது. வெகு விரைவில் இன்னொருத்ததுக்கு சொந்தமாகப்போகும் தன் மனதிலிருந்தும் தியாகுவின் நினைவுகள் மறைய வேண்டும் என்று ஆண்டவனை வேண்டினாள்.
"பெண்ணை அழைத்துவாம்மா" என்ற அப்பாவின் குரலை கேட்டு பக்கத்து வீட்டு செல்வி இவள் அறைக்கு வந்ததும் கண்ணில் தேங்கியிருந்த கண்ணீரை துடைத்துவிட்டு ஹாலுக்கு வந்தாள் சந்தியா. எல்லாருக்கும் வணக்கம் சொன்னாள்.
"இங்கே வாம்மா. இப்படி உட்காரு" என்று தன் பக்கத்தில் உட்கார அழைத்தாள் ஒரு 55-60 வயது நிரம்பிய பெண்மணி.
ஒரு சில நிமிடங்களுக்கு பிறகு, "சந்தியா உள்ளே போம்மா. பெரியவங்க பேச வேண்டியது எல்லாம் பேசணும்" என்று சொன்னதும் அவளும் தன் அறைக்கு போனாள். 'இதில் மாப்பிள்ளை யார்? எனக்கு அறிமுகமே படுத்தவில்லையே' என்று யோசித்துக்கொண்டிருந்தாள்.
15 நிமிடங்கள் இருக்கும். அந்த பெண்மணி அறைக்கு வந்து, "உன்னை எங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்கும்மா. சீக்கிரமே நீதான் எங்க வீட்டு மருமகள்" என்று சொல்லி நெத்தியில் முத்தமிட்டு கையில் ஒரு கவரை கொடுத்துவிட்டு வெளியேறினாள்.
'நான் இப்போது கண்டிப்பாக என் காரை விட்டு இறங்கி அப்பா பார்த்த மாப்பிள்ளையோட அந்த காரில் ஏறியே ஆகணும். ஆனால், என் மனதில் எந்த ஒரு சந்தோஷமும் இல்லையே? அஞ்சலி, அரவிந்த், ஸ்வாதி, சுமதி முகத்தில் இருந்த அந்த கல்யாண கலையும் என் முகத்தில் தென்படவில்லையே! பேசாமல் இந்த திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லைன்னு சொல்லி இன்னைக்கே கே.எல்க்கு கிளம்பி போயிடலாமா?' என்று எழுந்தாள்.
கையில் இருந்த அந்த கவர் அவள் உள்ளங்கையை குத்தியபோதுதான் அந்த கவரின் ஞாபகம் வந்து அதை பிரித்தாள். உள்ளே ஒரு கடிதம்.
அன்புள்ள சந்தியாவுக்கு,
என் மேல் வைத்திருந்த காதலால்தானே இன்னும் திருமணம் பண்ணாமலேயே இருந்தாய்? 6 மாதத்துக்கு முன்பு நான் ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பியபோதுதான் அதை தெரிந்துக்கொண்டேன். நானே உன் முன் வந்து என் காதலை சொல்வதைவிட பெற்றோர்களால் நிச்சயிக்கப்படட்டுமே என்றுதான் என் பெற்றோர்களை பேச சொன்னேன். இத்தனை நாள் உன்னை காக்க வைத்ததுக்கு மன்னிக்கவும். உனக்கு இந்த திருமணத்தில் சம்மதம் என்றால் நானே உனக்கு கால் பண்ணுகிறேன்.
உன்னுடைய சம்மதத்துக்காக காத்திருக்கும்,
தியாகு
அந்த கடிதம் அவளுக்கு ஒரு அதிர்ச்சியை கொடுக்க அறையை விட்டு வெளியே வந்தாள்.
"அப்பா, வந்தவங்க எல்லாம் எங்கே?"
"அவங்க இப்போதான் கிளம்பிபோனாங்க. ஏன்ம்மா?"
"மாப்பிள்ளை பெயர்.. பெயர் என்ன?"
"ம்ம்.. தியாகராஜன். என்ன பொண்ணும்மா நீ? இன்னும் அவ்ர் பெயர் கூட கேட்டு தெரிஞ்சிக்காமல் இருக்கிற. உன்னோட போன் நம்பர் கொடுத்திருக்கிறேன். அனேகமா இன்னும் சில நேரத்துல உனக்கு கால் வரும்"
ராஜகோபால் சொல்லிமுடிக்கிறதுக்கும் சந்தியாவின் செல்பேசி அதிறவும் சரியாக இருந்தது.
"ஹலோ"
"ஹலோ சந்தியா. தியாகு ஹியர்.. ஒரு லிஃப்ட் கிடைக்குமா?"
அதே தியாகு. 6 வருடத்துக்கு முன்னே எனக்கு அறிமுகமான, என் நினைவில் இன்னமும் இருக்கிற தியாகுவேதான் என்று சந்தியாவின் மனம் சொல்ல சந்தோஷமாக செல்பேசியை திரும்ப காதில் வைத்தாள். பேச்சு பல மணி நேரம் வளர்ந்துக்கொண்டே போனது.
Posted by MyFriend at 8:31 AM 19 comments
Labels: கதை
Thursday, October 04, 2007
வாழ்க்கைப்பயணம் -1
'இன்னேரம் ஸ்வாதி, அரவிந்த், சுமதி எல்லாருமே சந்தோஷமா இருப்பாங்க..'
அரவிந்த் weds ஸ்வாதி என்ற திருமண அழைப்பை தடவிக்கொண்டே யோசனையில் ஆழ்ந்தாள் சந்தியா.
'சரியாக 11 வருடம். 11 வருடம் காதலித்து இப்போது திருமண பந்தத்தில் இணைகிறார்கள். சுமதி மட்டும் என்னவாம்? அவளும் தனக்கு வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை அடுத்த வாரம் மணந்துக்கொள்ள போகிறாள்' என்று நினைத்துக்கொண்டே தன் புத்தகத்தின் நடுவில் மறைத்து வைத்திருந்த சுமதியின் திருமண அழைப்பை எடுத்தாள்.
'நண்பர்கள் அனைவரும் திருமணம், குடும்பம், பிள்ளைகள் என்று பல திசைகளை நோக்கி போய் கொண்டிருக்கிறார்கள். நான் மட்டும் அதே புள்ளியில் நகராமல் இருக்கிறேனே. ஏன் சந்தியா?'.. அவள் தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள்.
"சந்தியா, வீட்டுக்கு கிளம்பலையா நீ?"
அஞ்சலியின் குரல் கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்துப்பார்த்தாள் சந்தியா.
"சாரி, ரூம் கதவு தட்டினேன். உன்னிடமிருந்து ஒரு பதிலும் வரவில்லை. அறை கதவு திறந்து இருந்ததால் அப்படியே நுழைய வேண்டியதா போச்சு."
சந்தியா அவளின் கைக்கடிகாரத்தை பார்த்தாள். மணி ஆறாக பத்து நிமிடமே இருந்தது.
"நீ இப்போ கிளம்புறியா இல்லையா?"
"இதோ கிளம்பிட்டே இருக்கேன்." சட்டென்று இரண்டு அழைப்பிதழ்களையும் அவளின் மேஜை ட்ராவரில் போட்டு பூட்டிவிட்டு அவளின் கைப்பையை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.
சந்தியாவின் சிகப்பு நிற வீரா பார்க்கிங்கிலிருந்து வெளியாகி வேகமாக சென்றது. ஒரு சிக்னலில் கார் நின்றபோது,
"அஞ்சலி, இன்றைக்கு நான் ஊருக்கு கிளம்புறேன்"
சந்தியாவின் வார்த்தைகள் அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது. சந்தியா ஒரு பிரபலமான கான்ஸ்ட்ராக்ஷன் கம்பெனியில் டிசைக்னராக பணி புரிகிறாள். சனி ஞாயிறுகளில் கூட அலுவலகத்துக்கு செல்வதும் புதிதாக ஏதாவது வடிவமைப்பதுமாக இருப்பவள். ஊருக்கு 2-3 மாதங்களுக்கு ஒரு முறைதான் செல்வாள். அதுவும் அஞ்சலியின் வற்புருத்தலின் பேரில்.
"ஏன் திடீர்ன்னு?" அஞ்சலி தன் சந்தேகத்தை வெளிப்படுத்தினாள்.
"என்னுடைய பள்ளி தோழர்கள் அரவிந்த் ஸ்வாதி திருமணம் இந்த வீக் எண்ட்."
"ஆஹா. கல்யாண சாப்பாடா? இங்கே கே.எல்-ல இருந்திருந்தால் நானும் உன் கூட ஒட்டிக்கிட்டு வந்திருப்பேன். ரொம்ப நாள் ஆச்சு கல்யாண சாப்பாடு சாப்பிட்டு" பரவசத்துடன் சொன்னாள் அஞ்சலி.
"கல்யாணம் இங்கேதான். பங்சாரில். இதுக்கு போகக்கூடாதென்பதுனாலத்தான் நான் ஊருக்கு போகிறேன் என்று சொல்லிட்டு இருக்கேன் அஞ்சலி"
"ஏண்டி? முன்னெல்லாம் எப்போ பார்த்தாலும் உன்னோட பால்ய சினேகிதர்களை பற்றிதானே பேசிட்டு இருப்பே? இப்போ என்ன வந்தது? எதுக்கு போக மாட்டேன்னு அடம் புடிக்கிற?"
"உனக்கு புரியாது. என்னோட படித்த, பழகிய எல்லா நண்பர்களுக்கும் திருமணம் ஆகி குடும்பம், பிள்ளைகள்னு இருக்காங்க. நான் மட்டும்தான் தனியா இருக்கேன். இப்போ நான் அங்கே போனா, ஏன் எதுக்கு இன்னும் கல்யாணம் பண்ணிக்கவில்லைன்னு கேட்ப்பாங்க.. இதுக்கெல்லம் நான் தனி தனியா விளக்கம் கொடுத்துட்டு இருக்க முடியாது!"
அஞ்சலி சற்று நேரம் மௌனம் காத்தப்பின், "சரி பரவாயில்லை. விடு.. இந்த கல்யாண சாப்பாடு கிடைக்கலைன்னா என்ன. கூடிய சீக்கிரத்திலேயே நான் என்னோட சொந்த கல்யாண சாப்பாடுதான் சாப்பிடபோறேனே!" என்று ஒரு வித வெட்கத்துடன் சொன்னாள்.
சந்தியாவின் கவனம் ரோட்டிலிருந்து அஞ்சலி மேலே திரும்பியது.
"is It?"
"ம். காலையில்தான் டேட் கண்ஃபார்ம் பண்ணாங்க. நவம்பர் 30. உனக்கு சொல்லலாம்ன்னு காலையிலே கால் பண்ணேன். அம்மணிதான் என் கால் பிக்கப் பண்ணவே இல்லையே" என்று செல்லமாக கடிந்துக்கொண்டாள்.
"Congrats" என்ற ஒற்ற பதிலோடு சந்தியா திரும்ப அவளது கவனத்தை சாலையின் மேல் திருப்பினாள்.
"உனக்கு எப்போ கல்யாணம்?" திரும்ப அமைதியை கலைத்தாள் அஞ்சலி.
"கார்த்திக் ஓகேன்னு சொன்னா, இப்பவே என் கழுத்தை நீட்ட நான் தயார்"
"ஹேய்.. You naughty".. தன் வருங்கால கணவர் கார்த்திக்கை பற்றிதான் சந்தியா சொல்வதை அறிந்த அஞ்சலி சந்தியாவின் கையில் கிள்ளினாள்..
இருவரின் சிரிப்பிலும் அந்த காரே அதிரும் அளவு இருந்தது.
"ஹேய் சந்தியா.. Now I'm serious. நீ எப்போதுதான் உன்னுடைய இந்த தனிமையான வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கபோறே? உனக்கு 30 வயது ஆச்சு. உன் அம்மா கால் பண்ணும்போதெல்லாம் இதையே சொல்லி கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறார்"
".........."
"ஓ.. தியாகுதான் காரணமா?"
"இ.. இல்ல.."
அவள் மனம் ஆமாம் என்று சொல்வதுக்குள் வாய் இல்லை என்றது.
'தியாகு.. 6 வருடம் ஆச்சே! ஆனாலும் உன்னை என்னால் மறக்கமுடியவில்லையே. இந்த 6 வருடத்தில் ஒரு நாள் கூட உன்னை நினைக்காமல் இருந்ததில்லையே நான்! '
மனதில் ஆயிரம் சிந்தனைகள் ஓடி விளையாடின.
"பச்சை சிக்னல் விழுந்தாச்சுடா" என்று அஞ்சலி அவள் தோள் மீது கைவைத்தபோது மீண்டும் தன் கவனத்தை சாலையின் மேல் செலுத்தினாள் சந்தியா. நான்கு சக்கரங்களும் திரும்ப சுழல ஆரம்பித்தன.
ஒரு சிறு அமைதிக்கு பிறகு,
"தியாகு இல்லைன்னா, வேற என்ன காரணம்? தியாகு உன் வாழ்க்கையை விட்டு போய் 6 வருடங்கள் ஆச்சு. ஆறே மாதம்தான்! அதுவே உனக்குள் இப்படி ஒரு பாதிப்பா?"
"நான் எப்போதும் போலத்தானே இருக்கிறேன்?" வார்த்தைகளை தேடி தேடி பேசினாள் சந்தியா.
"உன்னோட நான் 8 வருடமா தங்குறேன். என் சந்தியா எப்படி இருந்தா, எப்படி இருக்கானு தெரியாதா எனக்கு? உன் முகத்தில் இருந்த பழைய சந்தோஷம் இப்போ இல்லையே!
அஞ்சலி சொல்வது உண்மைதான் என்று அறிந்து அமைதி காத்தாள் சந்தியா.
"ரேகா கூடத்தான் ஒரு பையனை காதலித்தாள்.. 3 வருடங்கள் சின்சியராக. அவள் காதல் தோல்வியடைந்த பிறகு அவள் உன்னை மாதிரியா இருந்தாள்? ஒரு வருடம் கழித்து சிவாவை மணக்கலையா? இப்போ 2 ஜூனியர் சிவாக்களோடு சந்தோஷமாதானே இருக்கா? அவளோட உன்னை கம்பேர் பண்ணா உன்னோடது சப்பை மேட்டர்தானே? உன்னோடது just one side love. உன்னுடைய காதலைக்கூட தியாகுவிடம் நீ சொல்லலை. அப்புறம் எப்படி அவர் திரும்பி வருவார் என்று காத்துக்கொண்டிருக்கிறாய்?"
சந்தியாவின் கார் நெடுஞ்சாலையில் நுழைந்தது.
"அஞ்சலி, என்னுடைய வாழ்க்கை இதோ இந்த நெடுஞ்சாலையில் நான் என் காரில் தனியாக செய்யும் பிரயாணம் போல.."
"புரியவில்லை சந்தியா"
"என் காரில் நான் ஒரு நீண்ட நெடுஞாலையில் வேகமாக பிரயாணம் செய்துக்கொண்டிருக்கிறேன். வழியில் பல ஆண்கள் லிஃப்ட் கேட்டபோது ஒரு தடவையும் நான் நிறுத்தவே இல்லை. ஆனால், அதே சாலையில் ஒரு புள்ளியில் தியாகு நிற்பதை பார்த்தபோது என்னையும் அறியாமல் என் கால்கள் ப்ரேக்கை அழுத்தியது. என் கார் அவர் முன் நின்னபோது அவர் என் வண்டியில் ஏறவில்லை. நானே அவருக்கு முன் சீட்டு கதவு திறந்துவிட்டபோதும் அவர் ஏறவே இல்லை"
"அப்படின்னா உன்னுடன் தன் பயணத்தை தொடர அவருக்கு விருப்பமில்லை என்றுதானே அர்த்தம்? நீ ஏன் உன்னுடைய அந்த காலியான சீட்டை லிஃப்ட் கேட்கும் மற்றவர்களுக்கு கொடுக்க கூடாது?"
"நானும் அப்படித்தான் நினைத்து என் காரை ஸ்டார்ட் பண்ணேன். எண்ணையை அழுத்த வேண்டிய என் கால் இன்னும் ப்ரேக்லேயேதான் இருக்கின்றது. தியாகுவின் முன் நிற்கும் என்னுடைய கார் அங்கிருந்து ஒரு இன்ச் கூட நகரவே இல்லை"
"நான் ஒன்னு சொன்னால் கேட்ப்பாயா சந்தியா?"
"சொல். முடிந்தால் முயற்ச்சிக்கிறேன்."
"உன்னுடைய கார்தான் அந்த இடத்தை விட்டு நகர மாட்டேங்குது என்று சொல்கிறாயே! நீ ஏன் அந்த காரை விட்டு இறங்கி வேறொரு காரில் லிஃப்ட் கேட்க கூடாது? உன்னுடன் பயணம் செய்ய வேறொருவர் விருப்பம் கொள்ளலாம் இல்லையா?"
"இப்போதைக்கு இந்த காரை விட்டு இறங்குவதாய் எந்த எண்ணமும் எனக்கில்லை அஞ்சலி"
இருவருமே அமைதியானார்கள். அஞ்சலி இடதுபக்க கண்ணாடியின் வெளியே தன் பார்வையை திருப்பினாள். சந்தியாவோ திரும்ப தியாகுவின் நினைவலைகளில் கலந்தாள்.
"சந்தியா, அடுத்த வாரம் நான் ஆஸ்த்ரேலியாவுக்கு போறேன். அங்கே எனக்கு ஒரு நல்ல வேலை கிடைத்திருக்கு. இந்த சந்தர்ப்பம் கண்டிப்பாக நான் நழுவ விடமாட்டேன். இந்த கம்பெனியில நீதான் என் பெஸ்ட் ஃபிரண்ட். உன்கிட்ட மட்டும்தான் இதை பத்தி சொல்றேன்". தியாகு அவளிடம் பேசிய இந்த கடைசி வார்த்தைகள் இன்னும் அவள் காதுகளில் ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தன.
'நான் அவரை காதலிக்கிறேன்னு அவர் கடைசி வரை அறியவே இல்லையே!'
"ஹோன்க் ஹோன்க்"
முன்னே வேகமாய் வந்துக்கொண்டிருந்தது ஒரு டாங்கர் லாரி.
"சந்தியா.. லாஆஆஆஆர்ர்ரீஈஈஈ" அஞ்சலி கண்ணை இருக்க மூடி காதை பொத்தி கத்தினாள்.
**இங்கே நாங்க தொடரும்ன்னு போடுவோம்ல... :-))**
(பயணம் வளரும்..)
Posted by MyFriend at 5:56 PM 33 comments
Labels: கதை
சித்தப்பா
உறவுகள்...
இந்த காலத்து தலைமுறையினர் அதிகம் அக்கரை எடுத்துக்கொள்ளாத ஒரு விஷயம். இங்கே எத்தனை பேர் தன்னுடைய அனைத்து உறவுகளையும் தெரிந்து வைத்திருக்கிறோம்?
"வாடா.. இப்படி நாலு விசேஷத்துக்கு போனாதான் உன் சொந்தங்கள் யார் யாருன்னு தெரிந்துக்கொள்ள முடியும். வா போயிட்டு வரலாம்"ன்னு அம்மா எவ்வளவு கெஞ்சியும், "எனக்கு வேலை இருக்கும்மா. அடுத்த தடவை பார்த்துக்கலாம்" என்று சாக்கு போக்கு சொல்லி தட்டிகழிக்கிறோம்.
இப்படியே போனால் அடுத்த தலைமுறையினர் அவ்ர்களது உறவுகளை அறிவார்களா?
உறவைப் பற்றி எடுக்கப்பட்டிருக்கும் இந்த குறும்படம் உங்கள் பார்வைக்காக..
பாகம் 1
பாகம் 2
Posted by MyFriend at 8:27 AM 13 comments
Labels: உறவு, குறும்படம்
Wednesday, October 03, 2007
ஒரு சிறிய காதல் கதை (The Shortest Love Story Ever)
Posted by MyFriend at 4:18 PM 34 comments
Labels: நையாண்டி
நானா நீயா? - 2
"பாட்டுதான் இது பாட்டுதான்.. சூப்பர் பாட்டுதான்!"
இப்படி பாடுனவரு யாரும் இல்லைங்க.. சாட்சாட் அந்த இயக்குனரேதான்!
நேத்து நைட் என்ன நடந்துச்சு தெரியுமா?? "நீங்க" யாரும் வர்றாததுனால யாரோ ஒரு இசையமைப்பாளரை கூப்பிட்டு கம்போஸிங் செய்ய சொன்னார் இயக்குனர். அந்த இசையமைப்பாளர் இசை கம்போஸ் பண்றேன்னு சொல்லி ஆர்மோனியப்பெட்டியை ஒரு வழி பண்ணிட்டார்.. அப்போதுதான் தெரிஞ்சது அவர் இசையமைப்பாளர் இல்ல.. தஞ்சோங் ரம்பூத்தான்ல இருந்து (இந்தியாக்கு ஒரு கீழ்பாக்கம்ன்னா மலேசியாவுக்கு இது ஒரு தஞ்சோங் ரம்புத்தான்) தப்பி ஓடி வந்த பேஷண்ட்..
இயக்குனர் வேற வழியில்லாமல் கம்போஸ் பண்றேன்னு ஒரு பியானோவை தூக்கி வச்சு உட்கார்ந்தார்.. அப்போ ஒரு பாட்டு காற்றுல கலந்து வருது...
நானா இல்லை நீயா.. நானா இல்லை நீயா..
நானா நீயா நானா நீயா X 4
இவன் இவனும் எதையும் அறியாதவன்
நல்லவன் அப்பளசாமி பாவம் இவன்
என்ன இது பூமி யாரவன் குண்டோதரன்
ஆணவம் கூடாது சாமி
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு
அதை அறியாமல் காலை விட்டு விட்டு
கொஞ்சம் திரும்பி பார்த்து
சிரித்து நீயும் கைகளால் தட்டு தட்டு
தட்டு தட்டு போடு ஆட்டம் போடு
நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும்
கெட்டதை நினைத்தால் கெட்டது நடக்கும்
ஏன் இந்த போட்டி சொல்வதுக்கெல்லாம் தலை ஆட்டி
வெளியே வஞ்சக பார்வை உள்ளெ விஷமாய் இருப்பது
இது பழகியது மருபடியும் முடிவாகும்..
ஏன் இது..
சொல் வேண்டாம் வேண்டாம் வேண்டாம்
சொல் வேண்டாம் வேண்டாம்
வம்பு வேண்டாம் சண்டை வேண்டாம்
சொல் வேண்டாம்
வேண்டாம் வேண்டாம் கோபம் வேண்டாம்
Don't Want It.. Don't Need It
வேண்டும் வேண்டும்
அன்பு வேண்டும் பண்பு வேண்டும்
சொல் வேண்டும்
வேண்டும் வேண்டும் பாசம் வேண்டும்
We Want It... We Need It..
சதி மேல் சதி இதுதான் கதி
வாழ்வினில் பாதி புரிந்தால் சரி
ஏன் ஏன் எதர்கிந்த போட்டி
பார் பார் ஆசை பேராசை
முடிந்ததை மறந்துவிடு
நல்ல வழி நீ உனக்கு தேடு
ஒரு மாட்டுக்கு ஒரு சூடு
நீ செய்வது தப்பு
இனி தேவை பாதுக்காப்பு
உனவில் உண்ட உப்பு
மீண்டும் மீண்டும் தப்பு
இனும் என்ன பண்ண
தப்பு மேலே தப்பு பண்ண
இல்லற வாழ்க்கை அல்ல சில்லறை வாழ்க்கை
சின்ன குழந்தை அல்ல
நான் இன்னும் எடுத்து சொல்ல
அரசன் அன்று கொல்வான்
இறைவன் நின்று கொல்வான்
இதை புரிந்தவன்
பிழைத்து கொல்வான் விழித்து கொல்வான்..
வெற்றியா இல்லை தோல்வியா..
நம் கைகளில் Forever
(வெற்றியா..) X 2
நானா இல்லை நீயா புயலா இடி மழையா
சரி தப்பு எது என்று அறியாமல்
காலை விட்டு முழிப்பது யார் என்று
(நானா...)
(வேண்டாம்..)
யோ யோ MC லோகா Together Vizz Da Blizz
அஹா Check It Out
Hyp Hyp.. Hyperkinetix
செல்வாக்கை விட சொல்வாக்கு முக்கியம்
Check Check Check Check It Out
நானா நீயா. நானா நீயா..
நானா நீயா. நானா நீயா..
நானா நீயா. நானா நீயா..
இயக்குனர் அசந்துட்டார் போங்க.. அவர் கேட்ட வரியில் அருமையா கம்போஸிங் ஆகியிருக்கு பாட்டு.. "யாரு.. இது யாரு.. அசத்திட்டு இருப்பவர் யாரு?"ன்னு அவர் வெளியே வந்து பார்த்தார்..
தலையில் திருப்பி போட்ட தொப்பி, கூலிங் க்லாஸ், கழுத்துல பட்டையா ஒரு சங்கிலி, பெரிய சட்டை. அதுக்கு மேலே ஒரு வெஸ்ட்.. ரெண்டு பேர் நுழையிற அளவுக்கு ஒரு ஜீன்ஸ் பேண்ட்னு அப்படியே ஹிப் ஹோப் ஸ்டைல்ல ரெண்டு பேர்...
இயக்குனர்: யாரய்யா நீங்க?
MC லோகா: MC லோகா from Hyp yp.. HYPERKINETIX..
கையை ஆட்டி ஆட்டி ஹிப் ஹோப் ஸ்டைல்ல ஒரு வணக்கத்தை சொல்ல..
இயக்குனர்: இந்த சின்ன பையன் யாரு?
Vizz: Vizz Da Blizz
இயக்குனர்: ஆஹா.. வெள்ளைகாரன் கணக்கா இங்கிலீசு பேசுறாரு துரை. இந்த பாட்டு பாடுனது நீங்கதானா?
பேசும்போதுதான் தெரிய வந்தது.. Vizzக்கு இப்போதுதான் 12 வயது. இப்பவே Rap நல்லா பண்றான். நன்றாகவே பாடும் திறனும் இருக்கு. cute-ஆவும் இருக்கான். உடனே அவருடைய "நானா நீயா?" என்கிற தெலிமூவீயில் இடம் பெறும் 8 பாடலுக்கு 4 பாடல் பாடும் வாய்ப்பை வழங்கிவிட்டார்.. MC லோகாவும் இந்த படத்துல பாடுறார்..
வேயிட் வேயிட்.. கதை இன்னும் முடியலை..அதுக்குள்ள கிளம்பினா எப்படி? இந்த படம் ஒரு காமெடி படம். 2 மணி நேரம் முழுக்க முழுக்க காமெடி வெலி வெலிக்க போகும்படம்.. மிஸ் பண்ணாமல் எல்லாரும் வந்து பார்க்கணும்ன்னு இயக்குனர் ஆசைப்படுறார்.. படம் ரிலீஸ் ஆகுறதுக்குள்ள் நீங்க MC லோகாவும் Vizz-உம் பாடும் நானா நீயாவை பார்த்து ரசியுங்கள். :-)
பி.கு: இன்று மாலை ஒரு அழகான காதல் காவியம் உங்கள் அபிமான ப்ரௌஸரில்... காணதவறாதீர்கள். :-P
Tuesday, October 02, 2007
நூரினின் மரணம்.. யாருடைய தவறு?
எட்டு வயதே நிரம்பிய நூரின் குடும்பத்தில் இரண்டாவது பிள்ளை. அழகானவள்; இரண்டாவது வகுப்பு படிக்கும் அவள் படிப்பிலும் சுட்டி. கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு மாலை வேளையில் வீட்டுக்கு அருகாமையிலுள்ள இரவு சந்தைக்கு போயிட்டு வர்றேன் அம்மா என்று போனவள் திரும்ப வீடு திரும்பவே இல்லை. பதறிப்போன பெற்றோர்கள் பக்கத்திலுள்ள எல்லா இடத்திலும் தேடிவிட்டு காவல் நிலையத்திலும் தன் மகளை காணவில்லை என்று புகார் கொடுத்தனர்.
ஒரு மாதம் ஆகியும் ஒரு தகவலும் இல்லை. ஆனாலும், தங்கள் தேடும் முயற்சியை கைவிடாமல் நாடு முழுதும் தேடினார்கள். இணையம், ஈமெயிலில் கூட தன் மகளை காணவில்லை என்று புகைப்படத்துடன் அனுப்பினார்கள். பட்டி தொட்டிகளிலும் அவளைப்பற்றியே தகவல்கள் இருந்ததால், அவளை யாராவது எங்கே பார்த்திருந்தாலும் அவள் சுலபமாக கண்டுபிடிக்கும் படியாக எல்லாரும் அவளைப்பற்றியே கவலைப்பட்டு தேடிக்கொண்டிருந்தார்கள்.
பின்னர் செப்டம்பர் மாதம் ஒரு நாளில் பெட்டாலிங் ஜெயா கடை வீதி பகுதியில் ஒரு கடையின் முன்னால் ஒரு கனமான ஸ்போர்ட்ஸ் பேக் இருப்பதை அந்த கடை உரிமையாளர் திறந்து பார்த்த பொழுது ஒரு பெரிய அதிர்ச்சி! பெட்டிக்குள்ளே ஒரு சிறுமியின் பிணம். உடனே காவல் நிலையத்துக்கு தகவல் சொன்னார்.
நூரினின் பெற்றோர்கள் அடையாளம் காண அழைக்கப்பட்டனர். எல்லாரும் அந்த உயிரற்ற சிறுமி நூரினாய் இருக்க கூடாதென்று வேண்டிக்கொண்டிருந்தனர். "இவள் என் மகள் இல்ல. என் மகளுக்கு உள்ள ஒவ்வொரு அடையாளமும் நான் அறிவேன்" என்று அவள் தந்தை உறுதியாக சொல்ல டி.என்.ஏ பரிசோதனை செய்யப்பட்டது. சோதனை பாசிட்டிவ்வாக அமைய, காவல்துறை நூரினின் காணவில்லை கேஸை மூட முட்ப்பட்டனர். ஆனால், நூரின் குடும்பத்தினர் மறுப்பு சொல்ல இரண்டாவது டி.என்.ஏ பரிசோதனை ஏற்ப்பாடு பண்ணப்பட்டது. நூரினின் சகோதரிகளின் ரத்தத்தையும் எடுத்து பரிசோதித்து அவள் நூரினேதான் என்று மருத்துவ வட்டாரம் கூறியது.பல இன்னல்களுக்கு பிறகு அவளை நல்ல படியாக அடக்கமும் செய்தாயிற்று!
பலரும் அந்த சிறுமிக்காக கண் கலன்கினர். என்னையும் சேர்த்து! ஆனால், இந்த சிறுமியின் மரணம் என்பது யார் செய்த தவறு? யாரின் கவனக்குறைவு?
எட்டு வயது சிறுமி அவள் தனியே வெளியே போனது குற்றமா? இதுதான் குற்றம் என்று பார்த்தால் எந்த சிறுவர்களும் காலையில் 6-7 மணிக்கு எழுந்து தனியே பள்ளிக்கு நடந்து செல்ல முடியுமா?
பெற்றோர்களின் கவனக்குறைவா? தன்னோட மூன்று பிள்ளைகளின் பாதுக்காப்பை கவனிக்க தவறிட்டார் என்று இவர்களை கைக்காட்டுவது சரியா?
அந்த சிறுமியை ஒரு வெள்ளை வேனில் கடத்துவதை பார்த்த பொதுமக்கள் ஒன்னும் செய்யாமலிருந்தாங்களே! அவர்களின் சமுதாய அக்கறைதான் என்ன?
மகளை காணவில்லை என்று புகார் கொடுத்தபோது சரியான/ தீவிரமான நடவடிக்கை எடுக்க தவறிய காவல்துறையின் குற்றமா?
அவளை கண்டுபிடித்து 2 வாரங்கள் ஆகிறதே. இன்னும் சந்தேகப்பேரில் பிடித்து வைத்திருக்கிற அந்த நால்வரும்தான் குற்றம் புரிந்தவர்களா? டி.என்.ஏ பரிசோதனைக்கு பிறகு இவர்கள் இல்லை என்று விடுவிக்கப்பட்டுவிட்டனரே?
இது வரைதான் காவல்துறையின் திறமையா?
சரி, மினிஸ்டர் என்ன சொல்றார் என்று பார்த்தால், அவரின் கருத்து என்ன தெரியுமா? "பெற்றோர் அவர்களின் மகளை சரியாக கவனிக்காததால்தான் மகள் கடத்தப்பட்டாள். அதனால் இவர்கள் மேல் ஒரு புகார் பதிவு அரசு தரப்பினர் செய்ய வேண்டும்" என்றூ சொல்கிறார்.
அப்படி என்றால் அரசாங்கம் மட்டும் பொது மக்களுக்கு முழு பாதுக்காப்பு வழங்கியுள்ளதா என்று கேட்டால் அதுக்கு அரசாங்கம் பேந்த பேந்த முளிக்க முடியுமே தவிர வேறெதுவும் சொல்ல இயலாது. இரண்டு வருடங்களுக்கு முன்பு வங்ஸா மாஜு LRT பக்கத்தில் ஒரு இளம் மலாய் பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டாளே! அது அந்த ஏரியாதானே! அப்போதிலிருந்தே அந்த இடத்தில் இரண்டு காவலாளிகளை நியமித்தார்களே! ஏன் இப்போது இல்லை?
இப்படி கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால், தவறு செய்தவர்கள் என்றும் அவர்களின் தப்பை ஒற்றுக்கொண்டதில்லை. அடுத்தவ்ரின் மேல் கைக்காட்டி தப்பித்துக்கொண்டேதான் இருக்கின்றனர். க்ரம் செய்தவர் நிம்மதியாக வெளியில் நடமாடுகின்றனர்..... என்ன உலகமடா சாமி!!!!!
Posted by MyFriend at 5:37 PM 14 comments
நானா நீயா..
நானா இல்லை நீயா.. நானா நீயா..
சண்டைக்கு கூப்பிடுறேன் என்று நினைக்கிறீர்களா.. இல்லை இல்லை.. மேலே (கீழே) படிங்க..
நீங்க ஒரு கவிஞர்! (சும்மா விளையாட்டுக்குதாங்க சொன்னேன். அதுக்குன்னு பேப்பரும் பேனாவும் ரெடி பண்ணீட்டீங்களே! படிக்கிற எங்கள் கண்ணுலதானே ரத்தக்கண்ணீர்தான் வரும்! ஹீஹீ).. சரி கதைக்கு வருவோம். நீங்க ஒரு கவிஞர் & இசையமைப்பாளர் என்று கற்பனை பண்ணிக்கோங்க.. ஒரு இயக்குனர் உங்க கிட்ட வந்து ஒரு சித்துவேஷனல் சாங் கம்போஸ் பண்ணி தர சொல்றார். இதுதான் அந்த சித்துவேஷன்:
இயக்குனர்: கதையோட ஹீரோ பெயர் அப்பளசாமி. அவருக்கு ஒரு காது கேளாத மனைவி. அவங்க பெயர் மங்களம். இவங்க ரெண்டு பேரும் புதுசா ஒரு வீட்டுக்கு குடி போறாங்க. இவங்களோட பக்கத்துவீட்டுக்காரர் குண்டோதரன் ஒரு பெரிய ரௌடி. இவரோட மனைவி பாக்கியம் ஒரு சினிமா பைத்தியம். குண்டோதரனுக்கு ஒரு விசித்திரமான குணம். அவர் பக்கத்து வீட்டுக்கு யாரும் குடிவந்தால் இவருக்கு பிடிக்காது. அவரோட அடியாள் (மலாயில பூடாக் என்று அழைக்கப்படும்) சங்கரனை வைத்து பல கஷ்டங்களை கொடுக்கிறாரு..
நீங்க: எதுக்கு இப்போ கதையில மலாய் பேரெல்லாம் அடிப்படுது? நான் இப்போ பாடல் எந்த மொழில எழுதுறது?
இயக்குனர்: வாயை மூடிக்கிட்டு கதையை கேளு. இல்லன்னா நான் வேற கவிஞரை தேட வேண்டியிருக்கும்.
இப்படியெல்லாம் நடந்துக்கிட்டு இருக்கிறதை அப்பளசாமிக்கும் குண்டோதரனுக்கும் தெரியாமலேயே ஒரு கும்பல் கண்காணிச்சுட்டு இருந்திருக்கு. அந்த கும்பல் யாரு, என்ன பண்ண போறாங்கன்னு சர்ப்ரைஸ்.. கதை அப்படியே சும்மா அதிருதுல்ல!!!!
நீங்க: ஃபுல் கதை தெரிஞ்சாதானே நான் இசையமைக்கிறதுக்கு வசதியா இருக்கும்? எனக்கே சர்ப்ப்ரஸா??
இயக்குனர்: உனக்கு கதை நான் சொல்லிட்டு இருக்கேன்.. ஆனா, அங்கே பாரு.. அதை இவங்க எல்லாரும் படிச்சுட்டு இருக்காங்க. நான் இப்போ முழு கதை சொன்னா அவங்களுக்கு தெரிஞ்சிடும்ல??
நீங்க: (மனசில்).. சகிக்கலை. :-(
இயக்குனர்: என்ன சவுண்டையே காணோம்?
நீங்க: நீங்க ரொம்ப ப்ரில்லியண்டா இருக்கிறதை பார்த்து பூரிச்சு போயிருக்கேன் சார்.
இயக்குனர்: சரி, எனக்கு முதல்ல தீம் சாங் போடு..
நீங்க: முதலை தீம் சாங்-ஆ? முதலைக்கெல்லாம் என்னால தீம் போட முடியாது.. என்னை விடுங்க..
இயக்குனர்: என்னமோ நான் பிடிச்சு வச்சிருக்கிற மாதிரியே விடுங்க விடுங்கன்னு நீங்க தமாஷ் பண்றீங்க. ஹீஹீ.. சரி.. இப்போ சீரியஸா பேசுவோம்.. எனக்கு இந்த கதைக்கு ஒரு தீம் சாங் வேணும். அதுல நல்ல நல்ல கருத்துக்களை மக்களுக்கு சொல்லணும். படம் முழுசா பிட்டு பிட்டா ஆங்காங்கே வரும் இந்த பாட்டு.. ஆங்.. சொல்ல மறந்துட்டேன்.. முக்கியமான ஒரு கண்டிஷன்.. இந்த பாட்டு தமிழ், மலாய், ஆங்கிலம்ன்னு மூன்று மொழியில் வரணும். முடியுமா?? முடியுமா? முடியுமா?
நீங்க: சார்..... எப்படி சார்? மூனு மொழியிலே ஒரே பாட்டா?
இயக்குனர்: முடியும். நான் ரெடி நீங்க ரெடியா??
பி.கு: இந்த "நீங்க"ங்கிறது படிக்கிற நீங்கதான். யாரால இந்த சித்துவேஷனுக்கு கவிதை எழுதி இசை கம்போஸ் பண்ண முடியும்? ட்ரை பண்ணுங்க. யாராலும் முடியலைன்னா, இந்த இயக்குனரே இந்த சித்துவேஷனுக்கு ஏத்த பாட்டு நாளைக்கு போடுறேன்னு அடம் பிடிக்கிறார். யாராவது என்னை காப்பாத்துங்கப்பா!!!!!!
Posted by MyFriend at 11:27 AM 18 comments