நீங்கள் அறிவாளி இல்லை... மற்றவர்களை முட்டாள் என்று சொன்னால்..
நீங்கள் அறிவாளி... உங்கள் அறிவு மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டால்..
நீங்கள் பணக்காரர் இல்லை... மற்றவர்களை ஏழை என்று சொன்னால்..
நீங்கள் பணக்காரர்... உங்கள் பணம் நல்ல காரியங்களுக்கு உபயோகமாயிருந்தால்..
நீங்கள் அழகன் இல்லை... மற்றவர்களை அசிங்கம் என்று சொன்னால்..
நீங்கள் அழகன்... நீங்கள் தற்பெருமை அடிக்காமலிருந்தால்..
நீங்கள் நல்லவர் இல்லை... மற்றவர்களை கெட்டவர் என்று சொன்னால்..
நீங்கள் நல்லவர்... மற்றவர்களை நல்வழி பாதையில் திருத்த முயன்றால்..
நீங்கள் பக்திமான் இல்லை... மற்றவர்களை இறைவழிபாடு இல்லாதவர் என்று சொன்னால்..
நீங்கள் பக்திமான்... ஒவ்வொரு நாளிலும் சில நேரமாவது கடவுளுக்காக ஒதுக்கினால்..
நீங்கள் பலசாலி இல்லை... மற்றவர்களை பலம் குறைந்தவர் என்று சொன்னால்..
நீங்கள் பலசாலி... பலம் குறைந்தவர்களுக்கு உங்களால் ஆன உதவியை செய்தால்..
நீங்கள் வீரர் இல்லை.. மற்றவர்களை பயந்தாங்கொல்லி என்று சொன்னால்..
நீங்கள் வீரர்... மற்றவர்களுக்கும் நாட்டிற்கும் வீட்டிற்கும் தேவைப்படும்போது எதிர்த்து நிற்க்கும் துணிச்சல் இருந்தால்..
Saturday, January 06, 2007
152. நீங்கள் இல்லை... ஆனால் நீங்கள்?
Posted by MyFriend at 8:44 PM
Labels: அறிவுப்பூர்வமானவை (?)
Subscribe to:
Post Comments (Atom)
25 Comments:
எல்லாம் உங்களோட கருத்துக்களா?
அருமை.. எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க...
உங்களுடைய பதிவினை IEல் திறந்தால் சில நேரம் ஏதோ டவுண்லோட் ஆகிறது. என்னுடைய IEயே மூடிவிட்டது. பெரிய ப்ராப்ளம் எதுவும் இருக்கதுன்னு நெனக்கிறேன். :)
நல்ல சிந்தனை.வாழ்த்துகள்
பிரண்ட், என்ன இது காலையில் எழுந்தவுடன் இப்படி ஒரு தத்துவ போஸ்ட்.. இன்றைய பொழுது நல்லாப் போகும்னு நினைக்கிறேன்..
ஆமா. நீங்க நேராவே நிக்க மாட்டீங்கள உங்க போட்டோவுல.. ஒரு சைடாத் தான் ஸ்டில் கொடுப்பீங்க போல..இது நீங்க தானே... முதலில் இருந்த படத்துக்கும் இதுக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கே..
// எல்லாம் உங்களோட கருத்துக்களா? //
ஆமாம் ஜி.
// அருமை.. எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க... //
நீங்கள் விதவிதமாய் எழுதுவதை கொம்பேர் பண்ணினா இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை ஜி. ;-) நீங்களே சூப்பரா எழுதுறீங்களே! நீன்க்களெல்லாம்தான் என் இன்ஸ்பிரேஷன். :-)
// உங்களுடைய பதிவினை IEல் திறந்தால் சில நேரம் ஏதோ டவுண்லோட் ஆகிறது. என்னுடைய IEயே மூடிவிட்டது. பெரிய ப்ராப்ளம் எதுவும் இருக்கதுன்னு நெனக்கிறேன். :) //
ஆமாங்களா? நான் எxஸ்ட்ராவா எதுவும் இதில் வைக்கவில்லையே! நான் எதுக்கும் ஒரு தடவை சோதிச்சு பார்க்கிறேன். வேறு யாருக்கும் இதே பிரச்சனை இருக்கிறதென்றால் தெரியப் படுத்துங்கள் நண்பர்களே!
// துர்கா said...
நல்ல சிந்தனை.வாழ்த்துகள்
//
நன்றி துர்கா
// மு.கார்த்திகேயன் said...
பிரண்ட், என்ன இது காலையில் எழுந்தவுடன் இப்படி ஒரு தத்துவ போஸ்ட்.. இன்றைய பொழுது நல்லாப் போகும்னு நினைக்கிறேன்.. //
நீங்கள் காலையில் எழுந்தவுடனேயே படிக்க, நான் இரவு தூங்க போகுமுன் எழுதியது. ஹா ஹா ஹா...
// ஆமா. நீங்க நேராவே நிக்க மாட்டீங்கள உங்க போட்டோவுல.. ஒரு சைடாத் தான் ஸ்டில் கொடுப்பீங்க போல..//
சாதாரணமா நாம் போட்டோ எடுக்கும் போது நேராதான் எடுக்கிறோம்.. அதான், நானே என் போட்டோ எடுக்கும்போது கொஞ்சம் சாயலா சைட்ல நின்னு எடுக்கிறேன். நாமளே நம்ம போட்டோ எடுக்கும்போது சாயலாய் எடுத்தாதான் நல்லா வருது..
// இது நீங்க தானே... முதலில் இருந்த படத்துக்கும் இதுக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கே.. //
உண்மையிலேயே இது நான்தாங்க.. அதில் சந்தேகமே வேண்டாம்.. என்னுடைய பழைய போட்டோ போன வருடம் மார்ச் மாதத்துல இந்த ப்ளாக் ஆரம்பிக்கும்போது எடுத்தது. இந்த போட்டோ இப்ப லேட்டஸ்ட்-ஆ எடுத்தது கார்த்திக்..
நல்ல கருத்துக்கள்!!!
// வெட்டிப்பயல் said...
நல்ல கருத்துக்கள்!!! //
நன்றி வெட்டி.. ;-)
சரளமாய் எழுத வருகிறது உங்களுக்கு, சாதாரணமாய் 150 தாண்டி சளைக்காமல் ஆடுறீங்க. இந்தப் பதிவும் அருமை.
Neengal oru THATHUVA GNANI my friend ;)
// நெல்லை சிவா said...
சரளமாய் எழுத வருகிறது உங்களுக்கு, சாதாரணமாய் 150 தாண்டி சளைக்காமல் ஆடுறீங்க. இந்தப் பதிவும் அருமை. //
சரளமாய் எழுதுகிறெனா? உங்கள் பாராட்டுக்கு நன்றி. இன்னும் நன்றாக எழுதுவதுதான் என் ஆசை சிவா.
//C.M.HANIFF said...
Neengal oru THATHUVA GNANI my friend ;)
//
THATHUVA GNANI!!! hahaha...
நல்ல வரிகள்.
இதை அப்படியே பிரின்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளப் போகிறேன்.
(Copy Right பிரச்சனை ஒன்றும் வராதே . . . . ? )
நான் மிகவும் ரசித்த பதிவுகளில் இதுவும் ஒன்றாகிவிட்டது.
நல்ல பதிவுக்கு நன்றி.
My Friend!
இவற்றை வாழ்வில் கடைப்பிடித்தால் சிக்கல் இல்லை.
நற்சிந்தனைகள்
யோகன் பாரிஸ்
// இதை அப்படியே பிரின்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளப் போகிறேன்.
(Copy Right பிரச்சனை ஒன்றும் வராதே . . . . ? )//
நன்று.
கண்டிப்பாக வராது. ஏனென்றால், அது என் ஆக்கம்தான். காபிரைட்டுக்கு நான் அப்லாய் செய்யவில்லை. ;-)
நான் மற்றவர்களின் பதிவில் படித்த/ என்னை கவர்ந்த பதிவுகளை பி.டி.எஃப் வடிவில் மாற்றி சேர்த்து வைப்பதுபோல், என் பதிவையும் ஒருவர் சேர்த்து வைப்பது எனக்கு மகிழ்சிதான் வெங்கட். ;-)
// இவற்றை வாழ்வில் கடைப்பிடித்தால் சிக்கல் இல்லை.//
நானும் இதை பின்பற்றதான் முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். அந்த முயற்சிதான், இதை எழுத தூண்டுகோலாக இருந்தது யோகன்.
நல்ல யோசிக்கிறீங்க. பணம்,வீரம் -- நல்ல கருத்துக்கள்
// பணம்,வீரம் -- நல்ல கருத்துக்கள் //
நன்றி அருண்
நான் உங்கள் பதிவை PDF ஆக எடுக்க முயன்றேன், முடியவில்லை.
தமிழ்மனம் தந்த செய்தி இதோ.
///////////////////////////
இப்பதிவில் மென்நூல் ஆக்கும் வசதி இல்லை. இவ்வசதியைப் பெற...
வலைப்பதிவர் செய்யவெண்டியது
http://www.nandhavanam.com/tmwiki/index.php?id=pdf_and_e-book_facility
///////////////////////////
நல்லாத் தான் சிந்திக்கிறீங்க :)
// நான் உங்கள் பதிவை PDF ஆக எடுக்க முயன்றேன், முடியவில்லை.//
நான் பி.டி.எஃப் எனேபல் செய்யவில்லை என்று நினைக்கிறேன். நீங்கள் தந்த வலையில் சென்று, அதில் உள்ளதைபோல் பின் பற்றுகிறேன் நண்பரே.
(நான் சில வலைகளில் இருந்து பதிவுகளை பி.டி.எஃப்க்கு மாற்ற பி.டி.எஃப் க்ரீயேட்டர் என்ற ஒரு சாப்ட்வேர் பயன்படுத்துகிறேன். நீங்களும் முயற்சிக்கலாம். ;-)
//நல்லாத் தான் சிந்திக்கிறீங்க :) //
ஒரு சூப்பரான கதாசிரியர் சொன்னா அது சரியாதான் இருக்கும். ;-)
Post a Comment