Saturday, January 06, 2007

151. எனக்கும் கிடைத்தது ஊக்கத் தானிக்

இப்போதெல்லாம் தினமும் பதிவை எழுதமுடியாமல் போனாலும், உங்களைபோல நல்ல நண்பர்கள் கிடைத்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

நான் தமிழில் எழுத ஆரம்பித்து முழுசா மூனு மாதம் கூட ஆகவில்லை. ஆனாலும் சிலரின் உசுப்பேத்தலால் தமிழ்மணத்திலும் தேன்கூடிலும் இணைந்தேன். அப்போதெல்லாம் தமிழ்மணம் நம் பதிவை போடுறதுக்கு மட்டும்தான்.. தேன்கூடில் மற்றவர்கள் எழுதும் கதைகளை படிக்க மட்டும்தான்-ன்னு நினைத்தேன்.

போன வாரம்தான் புதுசா ஒன்னு தெரிஞ்சுகிட்டேன். நம்ம கார்த்திக்தான் சொன்னார். ஏதோ என்னுடைய பதிவை தமிழ்மண பூங்காவில் பிரசுரித்திருக்கிறார்கள் என்று (நல்ல வேளை! அவரிடம் தமிழ்மண பூங்கா என்றால் என்ன என்று கேட்கவில்லை. கண்டிப்பாக மின்னஞ்சல் மூலமாக வந்தாவது ஏன்னை குட்டியிருபார் நம்ம தலைவர்!).உண்மையிலேயே தமிழ்மண பூங்கான்னு அப்போதுதான் கேள்விப் பட்டேன்.

உடனே தமிழ்மணம் வலையை திறந்து பூங்கவை தேடினேன். (இதுக்கு முன்னால் இதெல்லாம் தட்டி பார்த்திருந்தால்தானே தெரியும் எது என்க்கே இருக்குன்னு!).

கடைசியாக ஒரு வழியாய் கண்டுபிடித்தேன். என் நாற்காலியில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தேன். ஏதோ பெரிசா சாதிச்ச திருப்தி (இதெல்லாம் கொஞ்சம் ஓவர். என்னுடைய பதிவுகள் முக்கால்வாசி பூங்காவில் ஒவ்வொரு வாரங்களிலும் பிரசுரிக்கப்படுகின்றன. நானே இப்படி பதிவைபோட்டு பெருமிதப்பட்டதில்லை.. நீ மட்டும் என்ன? தற்பெருமையா?ன்னு நீங்கள் கேட்கலாம்). ஆனாலும், எனக்கு இதெல்லாம் புதுசுங்க.

நான் பள்ளியிலே படிக்கும்போது இந்த கட்டுரை எழுதுற பாடங்கள்ன்னாலே ஒரே வெறுப்பா இருக்கும். ஏன்தான் நம்மை எழுத சொல்லி கொல்றாங்களோன்னு ரொம்பவே சலிச்சுக்குவேன். கனவு காண்பது, அதை அழகாய் கதையாய் எழுதுவது என்பது எனக்கு சுட்டு போட்டாலும் வராத ஒன்று.

இங்கே நான் ஏதோ கிறுக்கிகிட்டு இருந்தேன். அப்படிப்பட்ட என்னுடைய பதிவு இங்கே பிரசுரிக்கப்பட்டது எனக்கு மிகவும் சந்தோஷமான ஒன்று. 2007-இல் எனக்கு கிடைத்த ஊக்க தானிக் இதுதான்.

ஆனாலும், நண்பர்களே! உங்களின் ஆதரவுகளை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன். உங்களின் ஆதரவிலும், எனக்கு கொடுத்த ஊக்கத்திலும், எனக்கு எழுத, இந்த வலையை தமிழ்மணத்தில் பிரசுரிக்க உதவிய அனைவருக்கும் நன்றி.

14 Comments:

Hariharan # 03985177737685368452 said...

வாழ்த்துக்கள். உங்கள் எழுத்து இன்னும் மேம்பட இந்த அங்கீகாரம் உதவும். எழுத்துப்பிழையில் கவனம் செலுத்துங்கள் கொஞ்சம் கூடுதலாக.
படிப்பவர்கள் பதிவை வாசிக்கும் போது சுவாரசியம் குறையாமல் இருக்கும்.

MyFriend said...

நன்றி ஹரி..

// எழுத்துப்பிழையில் கவனம் செலுத்துங்கள் கொஞ்சம் கூடுதலாக.
படிப்பவர்கள் பதிவை வாசிக்கும் போது சுவாரசியம் குறையாமல் இருக்கும். //

நீங்கள் சொல்லிய பிறகுதான் கவனித்தேன். நிறைய தைப்போ எர்ரோர். எனக்கு தெரிந்த தமிழில் அதை திருத்தியிருக்கிறேன். இன்னும் இருந்தால் கொஞ்சம் குட்டவும்.. நான் திருத்திகொண்டு கற்றுகொள்ளவும் இது உதவும் ஹரி.

ஜி said...

கலக்கிட்டீங்க தோழி.....

பூங்காவில் வருவதெல்லாம் பெரிய விசயம். நீங்க தைரியமாக கால் மேல கால் போட்டு உட்காரலாம் :)

புகைப்படம் வேற மாத்திட்டீங்க.. இந்த புத்தாண்டில் மென்மேலும் பாராட்டுக்கள் பெற வாழ்த்துக்கள்...

சுந்தர் / Sundar said...

வாழ்த்துக்கள்

மு.கார்த்திகேயன் said...

மை பிரண்ட்.. நீங்க நிச்சயம் இதுக்கு தகுதியானவர் தான்.. யாருக்குமே தெரியாம, மலேசியாவில் நடந்த ஒரு சம்பவத்தை, ஒரு நியூஸ் ரிப்போர்ட்டர் போல, போட்டோக்களுடன் நீங்க போட்ட பதிவு, உங்களின் பொறுப்புணர்ச்சியையும், அந்த மக்களின் கஷ்டங்களை கண்முன்னே நிறுத்தியது. அதுதான் உங்கள் பதிவை பூங்கா வரை கொண்டு போய், உங்களுக்கு ஒரு புது முகம் காட்டியுள்ளது..

வாழ்த்துக்கள் மை பிரண்ட்.. வளரட்டும் உங்கள் எழுத்து சேவை.

மு.கார்த்திகேயன் said...

இந்த மாதிரி விஷயங்கள்,என்ன தான் செடிகளுக்கு நாம் நீரூற்றினாலும், இரண்டு மழைதுளிகள் அதன் மேல் பட்டால் எப்படி சிலிர்க்குமோ அது போல ஒரு சொல்லொண்ணா உவகையைத் தருவது.. இனிமேல் எப்படி எழுத வேண்டும் என்று நமக்கும் ஒரு பொறுப்பை தருவது..

மென்மேலும் எழுதி சிறப்புற நம் நண்பர்கள் கூட்டத்தின் சர்பாக வாழ்த்துகிறேன் பிரண்ட்.

கோபிநாத் said...

ஃபிரண்ட்,
இன்னும் பல படிகள் உயர என் வாழ்த்துக்கள்.

MyFriend said...

// பூங்காவில் வருவதெல்லாம் பெரிய விசயம். நீங்க தைரியமாக கால் மேல கால் போட்டு உட்காரலாம் :) //

உண்மையாகவா சொல்றீங்க? அப்ப இப்பவே கால் மேல கால் போட்டுக்கறேன். ஹீ ஹீ ஹீ...

// புகைப்படம் வேற மாத்திட்டீங்க.. இந்த புத்தாண்டில் மென்மேலும் பாராட்டுக்கள் பெற வாழ்த்துக்கள்... //

புது வருடத்தில் புது படம் போடலாமேன்னுதான் மாற்றிட்டேன். நன்றி

MyFriend said...

// சுந்தர் / Sundar said...
வாழ்த்துக்கள் //

நன்றிங்க சுந்தர்.

MyFriend said...

// மு.கார்த்திகேயன் said...
மை பிரண்ட்.. நீங்க நிச்சயம் இதுக்கு தகுதியானவர் தான்.. யாருக்குமே தெரியாம, மலேசியாவில் நடந்த ஒரு சம்பவத்தை, ஒரு நியூஸ் ரிப்போர்ட்டர் போல, போட்டோக்களுடன் நீங்க போட்ட பதிவு, உங்களின் பொறுப்புணர்ச்சியையும், அந்த மக்களின் கஷ்டங்களை கண்முன்னே நிறுத்தியது. அதுதான் உங்கள் பதிவை பூங்கா வரை கொண்டு போய், உங்களுக்கு ஒரு புது முகம் காட்டியுள்ளது.. //

நன்றிங்க கார்த்திக். ஏதோ நீங்களெல்லாம் சொல்றீங்கன்னு நம்புகிறேன். வடிவேலுவைபோல் உசுப்பேத்தி உடம்பை ரணகளமா ஆக்கிவிட மாட்டீங்கதானே? ஹீ ஹீ ஹீ

MyFriend said...

// கோபிநாத் said...
ஃபிரண்ட்,
இன்னும் பல படிகள் உயர என் வாழ்த்துக்கள். //

நன்றி கோபி. :-)

Anonymous said...

Congrats my friend, thodarnthu eshuthungal ;)

MyFriend said...

//C.M.HANIFF said...
Congrats my friend, thodarnthu eshuthungal ;) //

NanRi haniff

நாமக்கல் சிபி said...

வாழ்த்துக்கள்!

தொடர்ந்து எழுதுங்கள்!