பகுதி 1 இங்கே
தந்தைதான் என்று முடிவு செய்தார் இந்திரா. அதன்பின் அவர் ஃபெரோஸைச் சந்திப்பதே எப்போதாவது தான் என்று ஆகிவிட்டது. நேருவின் மறைவின் போதே இந்தியாவின் பிரதமராகி இருக்க வேண்டியவர் இந்திரா காந்தி; வயது, அனுபவம் அனைத்திலும் அவர் இளையவர் என்ற போதும் காங்கிரசில் அப்போது அவருக்கு ஆதரவாளர்கள் நிறைய பேர் இருந்தவர்கள்.
பயம் கலந்த பணிவு. மரியாதை கலந்த செயல்வேகம். அக்கறை மிக்க ஒருங்கிணைப்பு இம்மூன்றும் ஒரு சேர இருந்தது இந்திரா காலத்தில் தான். அப்படியொரு நேர்த்தியைக் கட்சிக்குள் கொண்டுவர அவர் கையாண்ட வழி முறைகள் குறித்த பல மாறுப்பட்ட கருத்துக்கள் இருக்கின்றன. இந்திரா சமயத்தில் சர்வாதிகாரி மாதிரி நடந்து கொள்வார் என்றே கூட சொல்வார்கள். ஆனால், அவரது தன்னம்பிக்கைதான் அவரை எத்தகைய பிரச்சனையானாலும் உறுதிபடைத்த முடிவுகளை எடுத்துச் செயல் பட வைத்தது என்று அடித்து கூறலாம். பங்களாதேஷயுத்ததின் போதும் சரி, பஞ்சாப்பில் சீக்கியத் தீவிரவாதிகளை நசுக்கிய பொற்கோவில் சம்பவத்தின் போதும் சரி எத்தனையோ நெருக்கமான பலர் யோசித்துச் செய்யும்படி வற்புறுத்தியும் இந்திரா, தன் முடிவை மறுபரிசீலனை செய்யவே இல்லை. விளைவுகள் யோசித்துவிட்டுதான் அவர் செயலையே ஆரம்பிப்பார். ஆகவே எதைச் செய்யும்போதும் பதற்றம் என்பது கிடையாது அவருக்கு.
இந்திராகாந்தியின் பொதுவாழ்வில் அவசர காலம் ஒரு அழிக்க முடியாத கறையாகி விட்டபோதும் இன்னொரு முறையும் அவருக்கு ஆள்வதற்கு வாய்ப்பளிக்க மக்கள் தயங்கவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவரது கம்பீரம், உறுதி, தீர்மானம், செயல்வேகம் ஆகியவை ஏற்படுத்தியிருந்த தாக்கம் அத்தகையது.
மிக இளம் வயதிலிருந்தே தன் வாழ்க்கையை தேசத்துக்காக அர்ப்பணித்த தலைவர்களின் பட்டியலில் கடைசிப்பெட்டியில் ஆர்.ஏ.சி. இடம் பிடித்தவர் இந்திரா. நேரம் முழுவதும் பொதுவாழ்க்கைக்குப் போய்விட்டதாலோ என்னவோ, தனிவாழ்வில் அத்தனை சுகமாக இருந்தார் அவர் என்று சொல்ல முடியாது. கணவரின் பிரிவு, இரண்டாவது மருமகளுடன் (மேனகா) தகராறு, சஞ்சய் காந்தி தன் வியாபாரம் மூலம் கொண்டு வந்து சேர்த்த நிறையத் தலைவலிகள். அவரே ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் இறந்து போன துயரம் என்று ரொம்பவே அவஸ்தைகள் அவருக்கு.
ஆனால், முகத்தில் எதையும் காட மாட்டார். தன் தனிப்பட்ட விஷயங்கள் அனைத்தையும் தனக்குள்ளேயே புதைத்துக் கொள்கிற நெஞ்சுரம் அவருக்கு இயல்பாக இருந்தது.
ஆனால், பொதுவாழ்வில் வாழ்நாள் முழுவதும் தொட்ட அனைத்து விஷயங்களிலும் அநேகமாக வெற்றியே கண்ட இந்தியப்பிரதமர் என்றால் அது இந்திராதான் என்பதுகளில் பொற்கோயிலுக்குள் ராணுவத்தை அனுப்ப இந்திரா மேற்கொண்ட முயற்சியில் வெறுப்பு பெற்றிருந்த சீக்கியர்கள் மிக அதிகம்.
சீக்கியப் பிரிவினைவாதிகள் ஒழிப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சிதான் இந்திராவின் படு கொலையும். அவரைச் சுட்டுக் கொன்ற இரண்டு மெய்க்காவலர்களும், மேற்படி சீக்கியப் பிரிவினை வாதக்குழு அனுதாபிகள் அன்பது மிகவும் வெளிப் படையான விஷயம்.
அவரைப் போன்ற ஒரு செயல் திறன் மிக்க இரும்புப் பெண்மணி இன்றைக்கு வரை இந்தியாவில் உருவாகவேயில்லை.
Sunday, January 07, 2007
153. சிகரம் தொட்ட பெண்மணி இவர்.. -2
Subscribe to:
Post Comments (Atom)
16 Comments:
இந்திரா எமர்ஜென்சியை எடுத்து வந்தது தவறில்லை. ஆனால் அதைச் சுயநலத்துக்காக எடுத்துவந்தது கேவலமானது.
என்றபோதும் இன்றிருக்கும் தலைவர்களைப் பார்க்கையில் இந்திரா எவ்வளவோ நல்ல தலைவர் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயம். :-)))
பெண் அரசியல் தலைவர்களில் ஜெயலலிதா துணிவானவர் என்றாலும் விவேகமற்ற வீரம் முட்டாள்தனம் என்பதையே பலதரம் நிரூபித்து இருக்கிறார்.
ஹரி, நன் முன்பே சொன்னதுபோல்,இது என்னுடைய ஆக்கம் இல்லை. ஒரு வார நாளிதளில் நான் படித்தது. பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கதில் இதை எழுதினேன்.
ஆனாலும், உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. ;-)
மை பிரண்ட், இந்திரா காந்தியைப் பற்றியும், அவரது செயல்களைப் பற்றியும் காமராஜரின் பார்வையில் காமராஜர் படத்தில் பார்த்த போது ஏனோ கொஞ்சம் அவர் மீது இருந்து மரியாதை குறைந்ததென்னவோ உண்மை தான்.
சில விஷயங்களை அவர் எடுத்தேன் கவிழ்தேன் என்று செய்திருந்தாலும் பல விஷயங்களுக்காக அவரை நன்றியுடன் பார்க்கலாம், மை பிரண்ட்
Tnx for sharing ;)
// சில விஷயங்களை அவர் எடுத்தேன் கவிழ்தேன் என்று செய்திருந்தாலும் பல விஷயங்களுக்காக அவரை நன்றியுடன் பார்க்கலாம், மை பிரண்ட் //
இதைப்பற்றி நானும் நிறைய படித்திருக்கிறேன் கார்த்திக். இதனால்தான் என்னமோ சிலருக்கு இவரை பிடிக்கவில்லை. :-(
//C.M.HANIFF said...
Tnx for sharing ;)
//
You are welcome
தோழி...
அருமையான பதிவு.
"சன் செய்திகள்" தொடங்கிய காலத்தில் BBC தாயரித்திருந்த காங்கிரசின் முழு வரலாற்றையும் தமிழில் வெளியிட்டது.
அதிலும் அவர் சில விஷயங்களை யோசித்து செய்யவில்லை என்று தான் கூறுக்கின்றனார்.
அவருடைய துணிவையும், நாட்டிற்காக வாழ்க்கையை அர்ப்பணித்தமைக்கும் நாம் நன்றி சொலுத்தியாக வேண்டும்.
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
இந்தியாவின் இரும்பு பெண்மணியாச்சே இந்திரா...
வருகைப்பதிவு மட்டும். (attendance)
இதுவரைக்கும் உங்க பக்கத்துக்கு பல தடவை வரனும்னு நினைப்பேன். ஆனா இது தான் முதல் தடவை.
மன்னிச்சிக்கோங்க :(
இனிமே ஜமாய்ச்சிடலாம் :)
வாங்க வாங்க அருண்..
// மன்னிச்சிக்கோங்க :(//
மன்னிப்புலாம் எதுக்குப்பா? ;-)
//இனிமே ஜமாய்ச்சிடலாம் :) //
கண்டிப்பாக..
indira avangala pathi theriyadha enakku palavattrai alitha en arumai thozhiku nandriiiii...
இந்திராவைப் பத்தி பலருக்கு பல விதமான அபிப்ராயம் இருந்தாலும, எனக்கு அரசியல் அவ்வளவா தெரியாட்டியும் - துணிச்சலான, புத்திசாலியான பெண்ங்கர விதத்துல அவங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும். பாத்தாலே மரியாதை வர தோற்றம் - அதுவும் ரொம்ப பிடிக்கும்..
// ramya said...
indira avangala pathi theriyadha enakku palavattrai alitha en arumai thozhiku nandriiiii... //
எனக்கு விவரம் தெரிஞ்ச வயசிலிருந்தே என் வீட்டில் இரண்டு போட்டோக்கள் மாட்டப்பட்டிருந்தன. நான் என் தந்தையிடம் அந்த தாத்தாவும் பாட்டியும் யார்னு கேட்டேன். எங்க அப்பா அவர்கள் காந்தி தாத்தாவும், இந்திரா காந்தி பாட்டியும்ன்னு சொன்னார். (என் பெற்றோரும் இதுவரை இந்தியா சென்றதில்லை.)
அப்போதே என் பெற்றோர்கள் அவர்கள் மேல் வைத்திருந்த மரியாதை எனக்கும் வந்தது. அதுனால்தான், நான் அதன்பிறகு, இவர்கள் இருவரை பற்றியும் நிறைய படித்தேன்.
// பாத்தாலே மரியாதை வர தோற்றம் //
அதே.. அதே...
My Friend!
சிலரைப்போல் இவரும் தவறுகள் விட்டபோதும் ;நம் பாரத மாதாவுக்குப் புகழ் சேர்த்த பெண்மணி என்பதில் ஐயமில்லை.
இவர் மிடுக்கு எனக்குப் பிடித்தது.
யோகன் பாரிஸ்
நேருவின் மகள் என்ற தகுதி தவிர வேறு என்ன சிறப்புத் தகுதி அவருக்கு இருக்கிறது. அவரைவிட தகுதி உள்ள ஆட்கள் இருந்த போதிலும் காமராஜர் இந்திராவை பிரதமராக்கினார் ஆனால் பின்னாளில் அவரையே தூக்கி எறிந்தார். சுயநல மிகுந்த அராஜாக அரசியியல்வாதியாகத் தான் அவர் கடைசிவரை இருந்தார். ராஜிவ் வாரிசு அரசியில் காராண்மாக பிரதமர் ஆனாலும் இந்திரா அளவு மோசம் இல்லை.
Post a Comment