Wednesday, January 03, 2007

150. தம்பிக்கு அக்கா எழுதும் மடல்.

தம்பி,

நீ எப்படி இருக்கிறாய்? பார்த்து 6 மாதங்கள் ஆகிவிட்டது. உன்னுடைய இந்த பிறந்த நாளில் நான்தான் முதலில் வாழ்த்தவேண்டும்.. அதுவும் வித்தியாசமாக வாழ்த்த வேண்டும் என்பதற்காகதான் இந்த மடல்.

நீ இந்த பிறந்த நாளில் மலேசியாவுக்கு பறந்து வந்துவிடுவாய் என்று நினைத்தேன். ஆனால், உன்னுடைய பிறந்த நாளில்தான் உன்னுடைய முக்கியமான / கடைசி பரிட்சை என்று அறிந்தேன்.

நீ மேதைடா. ஒவ்வொரு தடைகளையும் சுலபமாக தடைதெறிவாய்.. உன்னுடைய ஃப்லையிங் தெஸ்ட்-இல் சூப்பராக செய்து, அருமையான விமானி என்று நல்ல பெயரை சம்பாதித்து வர இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இந்த வருடமும், இனி வரும் வருடங்களிலும் உனக்கு சூப்பராக அமைந்து எல்லா வெற்றிகளையும் பெற என் வாழ்த்துக்கள்.
நீ சீக்கிரமே மலேசியா வர வேண்டும்.

நாளை உன் பிறந்த நாளாய் இருந்தாலும், நான் இப்போதே உனக்கு வாழ்த்து சொல்கிறேன். பிறந்த நாள் வாழ்த்துக்கள்.இன்று இரவு உன் கைத்தொலைபேசிக்கு அழைக்கிறேன். (எப்போதும் போல உன் கைதொலைபேசியில் தொங்கிட்டு இருக்காதே. இன்னைக்காவது அதை ஃப்ரீயா விடு. அப்பதான் நாங்கள் உன்னை தொடர்பு கொள்ளமுடியும். ஹீ ஹீ ஹீ).

மற்றவை இன்று இரவு தொலைபேசியில் பேசிக்கலாம்..:-)

அன்புடன்,
உன் அக்கா.

33 Comments:

johan-paris said...

My Friend
உங்கள் விமானித் தம்பிக்கு என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
யோகன் பாரிஸ்

said...

ஓ..பிறந்த நாள் வாழ்த்தை தெரிவிக்க இப்படியும் ஒரு வழி இருக்கா..? அருமை

said...

நீங்கள் கவனித்தீர்களா என்று தெரியவில்லை.. மலேசியாவில் ஏற்பட்ட பெருமழை பற்றி நீங்கள் எழுதிய பதிவு தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்மண பூங்காவிள் வெளியாகியுள்ளது மை பிரண்ட்..

வாழ்த்துக்கள்.. புது வருடம் உங்களுக்கு எதிர்பாராமல் ஒரு அழகிய பரிசை தந்திருக்கிறது..

said...

அருமை தம்பிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லிவிடுங்கள் மை பிரண்ட்

said...

நன்றி நண்பர்களே!

உங்கள் வாழ்த்துக்களை அவன் இன்னேரம் படித்திருப்பான். :-)

said...

//நிலவன் said...
ஓ..பிறந்த நாள் வாழ்த்தை தெரிவிக்க இப்படியும் ஒரு வழி இருக்கா..? அருமை //

ஹீ ஹீ ஹீ...

said...

//மலேசியாவில் ஏற்பட்ட பெருமழை பற்றி நீங்கள் எழுதிய பதிவு தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்மண பூங்காவிள் வெளியாகியுள்ளது மை பிரண்ட்..//

அட. இப்படி ஒன்று நடக்கும் என்று நான் எந்நாளும் நினைத்து பார்த்ததே இல்லை. இந்த விஷயம் கூட இப்போது நீங்க சொல்லிதான் தெரிந்துகொண்டேன். இதோ இப்போதே அங்கே சென்று பார்க்கிறேன்.

2007-இல் ப்ளாக் உலகத்தில் எனக்கு கிடைத்த முதல் உற்சாகம். அதற்கு காரணம் நீங்கதான் நண்பர்களே! மீண்டும் ஒரு முறை உங்களுக்கு நன்றி.

C.M.HANIFF said...

Thambikku vaashthukkal my friend ;)

said...

உங்கள் தம்பிக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அந்த நன்னாளில் அவர் தேர்வின் வெற்றி இனிப்பாக அமையவும் வாழ்த்துக்கள்.

said...

உங்களோடு சேர்ந்து நானும் உங்கள் தம்பியை வாழ்த்துகிறேன்.

என் பதிவுகளுக்கு நீங்கள் தொடர்ந்து கொடுத்துவரும் பின்னூட்டங்களுக்கும் உற்சாகத்திற்கும் நன்றி.

said...

உங்கள் தம்பிக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் + உங்கள் இருவருக்கும் புத்தாண்டு + பொங்கல் வாழ்த்துக்கள்!!!

said...

ஆஹா...சத்தமே இல்லாம பல சாதனைகளை செய்திருக்கிங்க.
150 பதிவு - வாழ்த்துக்கள்

உங்களின் தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

\\மலேசியாவில் ஏற்பட்ட பெருமழை பற்றி நீங்கள் எழுதிய பதிவு தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்மண பூங்காவிள் வெளியாகியுள்ளது மை பிரண்ட்..\\ -

ஆஹா...வருஷம் தொடக்கமே கலக்கலயிருக்கு...வாழ்த்துக்கள் மை பிரண்ட்

said...

வாழ்த்து தெரிவித்த யோகன், நிலவன், கார்த்திக், ஹனிஃப், நாகை சிவா, வெங்கட்ராமன், அருட்பெருங்கோ மற்றும் கோபிநாத்-க்கு நன்றி. என் தம்பி சிவாவும் உங்களுக்கெல்லாம் நன்றி தெரிவித்திருக்கிறான். ;-)

said...

// வெங்கட்ராமன் said...

என் பதிவுகளுக்கு நீங்கள் தொடர்ந்து கொடுத்துவரும் பின்னூட்டங்களுக்கும் உற்சாகத்திற்கும் நன்றி. //

ஒரு நண்பர் அற்புதமாய் எழுதினால், அவருக்கு ஆதரவாய் பின்னூட்டம் எழுதுவது எங்கள் கடமை வெங்கட். அதைதான் நான் செய்தேன்.

said...

// அருட்பெருங்கோ said...
உங்கள் தம்பிக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் + உங்கள் இருவருக்கும் புத்தாண்டு + பொங்கல் வாழ்த்துக்கள்!!! //

வாருங்கள் அருட்பெருங்கோ..

உங்கள் முதல் பின்னூட்டத்துக்கு நன்றி. உங்கௌக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

said...

// கோபிநாத் said...
ஆஹா...சத்தமே இல்லாம பல சாதனைகளை செய்திருக்கிங்க.
150 பதிவு - வாழ்த்துக்கள் //

அட.. ஆமா. இதை எப்படி நான் மிஸ் பண்ணினேன்? ஞாபகம் படுத்தியதுக்கு நன்றி கோபிநாத். உங்கள் வருகைக்கும் நன்றி. :-)

// ஆஹா...வருஷம் தொடக்கமே கலக்கலயிருக்கு...வாழ்த்துக்கள் மை பிரண்ட் //

ஆமாங்க.. இது எனக்கு புத்துணர்ச்சி கொடுத்த தோனிக்தான்.. இது மெம்மேலும் என் வளர்ச்சிக்கு உதவும் என்று நான் நம்புகிறேன். (உங்கள் ஆதரவுகளுடன்).. ;-))

said...

தம்பிக்கு தம்பியின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

said...

பல்வேறு நாட்டு விமானங்களில் பயணித்து பல நாட்டு விமானிகளைக் கண்டிருந்தாலும் அவர்கள் நான் அறியாத வெளியாட்கள்.

தமிழ்வலைப்பூ மூலம் கிட்டிய உறவுக்கார விமானிக்கு கொஞ்சம் லேட்டானாலும் லேட்டஸ்ட் பிறந்தநாள் வாழ்த்துக்கள் எமது தரப்பிலிருந்து.

மேலே உயரவேண்டும் என்பது வாழ்க்கையில் பலருக்கு லட்சியமாயிருக்கும் வேளையில், தனது கட்டுப்பாட்டில் உயரப்பறந்து கொண்டே இருப்பதே வாழ்க்கையாகப் போகிற குடுப்பினை விமானிக்கு மட்டுமே கிடைக்கும் சிறப்புத்தன்மை அல்லவா :-)))

My Triple cheers to always fly high & safe to Your Pilot brother.

said...

// தம்பி said...
தம்பிக்கு தம்பியின் பிறந்தநாள் வாழ்த்துக்கள். //

நன்றி தம்பி. ;-)

said...

// தமிழ்வலைப்பூ மூலம் கிட்டிய உறவுக்கார விமானிக்கு கொஞ்சம் லேட்டானாலும் லேட்டஸ்ட் பிறந்தநாள் வாழ்த்துக்கள் எமது தரப்பிலிருந்து.//

என் தம்பியை போலவே இன்னொரு விமானியை சந்தித்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி ஹரி. நீங்களும் விமானத்தில் உலகை சுறி வர என் வாழ்த்துக்கள் ஹரி. :)

Welvome to World of .:: MyFriend ::.

said...

//என் தம்பியை போலவே இன்னொரு விமானியை சந்தித்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி ஹரி//

நான் விமானி அல்ல. விமானப் பயணி!
ஆனாலும் விமானி மாதிரியே ஒவ்வொரு முரையும் விமானம் டேக் ஆஃப் மற்றும் லேண்டிங் ஆவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைபவன்
:-))

said...

To Hariharan # 26491540:

ஹரி.. உங்கள் வலையில் என்னால் பின்னூட்டம் இட முடியவில்லை. கொஞ்சம் கவனியுங்கள். நான் அங்கே எழுத வேண்டிய அந்த பின்னொட்டத்தை இங்கே எழுதுகிறேன்:

வணக்கம் ஹரி. இந்து மதத்தை பற்றி சூப்பராக எழுதியிருகீர்கள். சென்சூரி அடிக இன்னும் மூன்றே பதிவுகள். தொடருங்கள்.

said...

// நான் விமானி அல்ல. விமானப் பயணி! //

அடடே! :P
நீங்கள் எழுதியதில் நீங்க ஒரு விமானியைபோலவ் இருந்தது. ஆனாலும், நீங்கள் பயணியாய் இருந்து பயனித்ததில் எனக்கு மகிழ்சி.. எத்தனையோ பேர் விமானத்டில் இன்னும் ஏறாமல் இருக்கிறார்களே! அதில் நானும் ஒருத்தி. இந்த வாஇயில் நீங்கள் லக்கிதான். ;-)

said...

என்ன பிரச்சினை எனத் தெரியவில்லை. இதர பின்னூட்டங்கள் வெளியாகின்றன. உங்களது பின்னூட்டம் பப்ளிஷ் செய்தாலும் எரர் வருகிறது. பீட்டா-புதிய எடிஷன் பிளாக்கரா நீங்கள்?

said...

ஆமாங்க ஹரி.. புதிய ப்ளாக்கரைதான் உபயோகிக்கிறேன். என் மற்ற நண்பர்களின் ப்ளாக்கில் இப்படிப்பட்ட எர்ரோர் வந்தால், அதர் ஒப்ஷன் ச்ஹூஸ் பண்ணி என் பெஅரை எழுதுவேன்.. ஆனால், நீங்கள் அதை எனேபல் செய்யாததால், அதையும் செய்ய முடியவில்லை. :-(

said...

என்னங்க.. நாங்க இருபத்தைந்து பதிவிற்கே கெடா வெட்டி சாப்பாடு போட்டோம். நீங்க 150 அடிச்சும் ஒரு சத்தத்தையும் காணோமே...

உங்கள் உடன்பிறப்பிற்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

said...

//ஜி said...
என்னங்க.. நாங்க இருபத்தைந்து பதிவிற்கே கெடா வெட்டி சாப்பாடு போட்டோம். நீங்க 150 அடிச்சும் ஒரு சத்தத்தையும் காணோமே...//

நான் எழுதவில்லையென்றாலும், அதை நீங்களெல்லாம் கண்டுபிடித்து எழுதியதே எனக்கு கிடைத்த மகிழ்ச்சி. அதுவே நான் கெடா வெட்டிய மகிழ்ச்சிக்கு சமம். ;-)

//உங்கள் உடன்பிறப்பிற்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... //

வாழ்த்துக்களை தம்பிக்கு தெரிவுப்படுத்துகிறேன். ;-)

said...

உங்கள் தம்பிக்கு என்னுடைய தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

அதாங்க , belated bday wishes :)

i wish him Good Luck :)

said...

இது உங்க 150ஆவது பதிவா?
வாழ்த்துக்கள் தோழி...

தமிழ்மண பூங்காவிள் உங்கள் பதிவு வெளியானதுக்கும் வாழ்த்துக்கள்.

said...

// Arunkumar said...
உங்கள் தம்பிக்கு என்னுடைய தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)//

உங்க விஷ்-ஐ தம்பிக்கு பாஸ் பண்ணியாச்சு.. :-)

said...

// இது உங்க 150ஆவது பதிவா?
வாழ்த்துக்கள் தோழி...//

ஆமாங்க.. ஆனாலும் நமக்கு ஒரு தங்கமணன் (தங்கமணிக்கு ஆண்பால் இதானோ?) இன்னும் கிடைக்கலப்பா!!!
ஹீ ஹீ ஹீ..

said...

//
ஆமாங்க.. ஆனாலும் நமக்கு ஒரு தங்கமணன் (தங்கமணிக்கு ஆண்பால் இதானோ?) இன்னும் கிடைக்கலப்பா!!!
ஹீ ஹீ ஹீ..
//
தங்கமகன் சிங்க நடை போட்டு வருவாரு.. காத்திருங்கள்... :)

said...

// தங்கமகன் சிங்க நடை போட்டு வருவாரு.. காத்திருங்கள்... :) //

ஹா ஹா ஹா.. பார்போமே!! ;-)