Sunday, January 14, 2007

154. இந்த பொங்கலுக்கு உங்கள் சாய்ஸ் எது?

இந்த ரெண்டு படத்துக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கா?


விஜய் பாடல் காட்சில வித்தியாசமா வந்துட்டா படத்துல வித்தியாசமா ஒரு கெட்-அப் போட்ட திருப்தி கிடைத்திருமா?

அஜித் வாலி பத்துல இருந்ததைபோல இளமையாயிட்டார். படமும் அவருடைய முந்தைய படங்களைப்போல் வசூலை அள்ளி குவிக்கவேண்டும்.

ரெண்டு படத்திலேயும் கலக்கலா இருப்பவர் நம்ம அசின்தான். 2005 தீபாவளியில் சிவகாசி - மஜான்னு இரட்டிப்பு மகிழ்சியில் இருந்தார். இப்போது இவருக்கு இரட்டிப்பு பொங்கல் கொண்டாட்டம்தான்..


இப்போது இந்த ரெண்டு படத்துக்கும் உள்ல வித்தியாசம் உங்களுக்கு தெரியுதா?


ரெண்டுமே சண்டைப்படம்தான். ரத்த ஆறு ஓடப்போகிறது இந்த படங்களில்.

நம்ம கார்த்திக்கு இதுதான்முதல் படம். அமீரின் இயக்கம் என்பதால், பையன் ஏதோ சாதிதிடிருபான் என்று எதிர்பார்க்கலாம். உங்களுக்கு ஞாபகம் இருக்கா? அமீர் தன்னோட படத்துல ஹீரோ ஆகபோறேன்னு சொன்னரே! இந்த படம்தான். கார்த்தியை ஒரு தடவைக்கு ரெண்டு தடவை பாருங்க. முடி ஸ்டைலும், தாடியும், அவர் கத்தும்போது ஃபேசியல் எக்ஸ்பிரஷன் எலாம் அமீரை போலவே இருக்குல்ல?

விஷாலுக்கு இன்னொரு சண்டைகோழி இது. அதே செம்மணிலொரு கிளைமெக்ஸ் சண்டைக்காட்சி. நம்ம மகாலட்சுமி (அதாங்க குமரனின் அம்மா நதியா) & பிரபு, ஹரியோட இயக்கத்துல நடிச்சிருக்காங்க.

இப்ப நீங்க முடிவு பண்ணுங்க.. சண்டைகோழியா? அமீரின் சுயசரிதையா? போக்கிரி மகேஷை ஜெராக்ஸ் எடுத்து காப்பி அடித்திருக்கும் விஜயா? இல்ல என்ன கதைன்னு இன்னும் சஸ்பென்ஸா இருக்கும் ஆழ்வாரா? எது பார்கபோறீங்க?

என் சாய்ஸ்:
1- ஆழ்வார் & பருத்திவீரன் (எது ஃப்ர்ஸ்ட்ன்னு முடிவு பண்ண முடியவில்லை)
2- தாமிரபரணி
3- போக்கிரி (அசினுக்காக. தெலுங்கு போக்கிரியை பார்த்துவிட்டேன். ஜெராக்ஸ் எடுத்து திரும்பவும் ஒரு புத்தகத்தை படிக்க வேண்டும்ன்னா நாமக்கு வேலை வெட்டி இல்லாதபோதுதான் படிப்போம். அப்போதுதான் நான் இதை பார்க்கலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கேன்.)

12 Comments:

said...

அட.. நீங்களும் ஒரு மலேசியராப்பா? ரொம்ப சந்தோஷம்..

உங்களுக்கு கூட்டணி கிடைச்சிடுச்சு.. படம் பார்க்க கொலிசியம் போட்டீங்க.. என் கூட்டணி எல்லாம் பிஸின்னு சொல்லி வீக்டேய்ஸ் போலாம்ன்னு கூப்பிடறாங்க.. வீக்டேய்ஸ்ல நான் பிஸி.. எங்கே மிட்வேலி போய் படம் பார்க்கறது. என் ப்லான் எல்லாம் சொதப்பல்.

said...

உங்க நாலு முயற்சியில மூன்றுதான் எனக்கு கிடைத்தது. :-)

said...

போக்கிரியை பத்தி விமர்சனம் போட்டுடீங்களா? இதோ, கிளம்பிட்டேன். உங்க ப்ளாக்ல வந்துபடிக்கிறேன்.

said...

அருமையான முன்னோட்டம் தோழியே.. எந்த படத்தை பார்த்தாலும் கட்டாயம் விமர்சனம் போடுங்கள்.. அதில் தயவு செய்து கதையை சொல்லாதீர்கள் :-)


உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் தோழியே..

மற்ற பதிவை அப்புறம் வந்து படிக்கிறேன்

said...

அடடா நல்ல எல்லா படங்களையும் ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்க தோழி...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

படம் பார்த்துவிட்டு கார்த்திக் சொல்வதைப்போல ரிவியூ எழுதுங்கள். நம்ம திரு.ஆரம்பம் மாதிரி இருந்தா பாக்க வேண்டாம் பாருங்க :)

Anonymous said...

பொங்கல் வாழ்த்துகள்.
//'உலக வலைபதிவர் வரலாற்றில் முதன் முறையா', நாமளும் இங்கே ஒரு வலைபதிவர் மாநாடு (?) ஒன்னை போட்டு போண்டாவோடயோ இல்ல டைகரோடவோ கொண்டாடிடுவோம் :) //
அடடா இதுக்கூட நடக்க போகுதா! :)))

said...

பொங்கல் வாழ்த்துக்கள் தோழி,

அது எப்பிடிங்க உங்களால மட்டும் மட மடனு இத்தன பதிவுகள் போட முடியுது?

சரி பொங்கல் படங்கள்ல என்னோட முதல் விருப்பம்
1. பருத்தி வீரன் (இது உண்மையில் வாழ்ந்த ஒருவரின் கதை, அதனால்)
2. போக்கிரி (பிரபுதேவா மற்றும் வருங்கால தமிழக முதல்வர் அசினுக்காக :-)
3. ஆழ்வார் (பீனிக்ஸ் பறவை அஜீத்துக்க்காக)
4. தாமிரபரணி (விறுவிறுப்பான திரைக்கதை இருக்கும்னு நம்பறேன்)

said...

//எந்த படத்தை பார்த்தாலும் கட்டாயம் விமர்சனம் போடுங்கள்.. அதில் தயவு செய்து கதையை சொல்லாதீர்கள் :-)//

எழுதுங்கன்னும் சொல்றீங்க.. எழுத வேண்டாம்ன்னும் சொல்றீங்க.. எப்படி, சன் டீவி தாப் 10 நிகழ்சியைபோல கால் மேல் கால் போட்டுகிட்டு 10.. 9.. 8..ன்னு வரிசை படுத்துவதைபோலவா??? ஹீ ஹீ ஹீ...

said...

// அடடா நல்ல எல்லா படங்களையும் ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்க தோழி... //

நன்றி அருண். ;-)
உங்களுக்கும் என் பொங்கல் வாழ்த்துக்கள்.

said...

// நீங்களும் மலேசியாலதான் இருக்கீங்களா. விடுங்க, இன்னும் ஒரு ரெண்டுபேர் மட்டும் இங்க கெடைச்சுட்டாங்கன்னா, 'உலக வலைபதிவர் வரலாற்றில் முதன் முறையா', நாமளும் இங்கே ஒரு வலைபதிவர் மாநாடு (?) ஒன்னை போட்டு போண்டாவோடயோ இல்ல டைகரோடவோ கொண்டாடிடுவோம் :)
//

நம்மளோட வட்டாரம் பெருகிகிட்டே போகுதுல.. இப்போ 3 பேர் இருக்கோம். மாநாடு என்பதை பற்றி நான் யோசிச்சதே இல்லை.. ஏன்னா, யாராவது மைக்கை கையில் எடுத்தாலே நான் கனவு காண(தூங்க) ஆரம்பிச்சிடுவேன். :-P

இப்படிதான் என் கல்லூரி வாழ்க்கையும் நடந்தது.. வகுப்பில் முன் வரிசையில் உட்கார்ந்துகிட்டே நன்றாக தூங்குவேன். ஹா ஹா ஹா..

said...

// அடடா இதுக்கூட நடக்க போகுதா! :))) //

நடக்கப்போகுதான்னு தெரியலை.. ஆனாலும் உங்களையும் லிஸ்டில் சேர்த்தாச்சு துர்கா.. ;-)

said...

// அது எப்பிடிங்க உங்களால மட்டும் மட மடனு இத்தன பதிவுகள் போட முடியுது? //


வீக்டேய்ஸ்ல என்னை வித விதமா ஆணி புடுங்க சொல்லி பெண்டு நிமிர்த்திடுறாங்க.. அந்த கலைப்பிலும் தினமும் நான்கு மணி நேரம் பேருந்திலும், ரயிலிலும் பயணம் செய்யும்போது யோசிக்கும் விசயங்கள்தான் இது "நான்"..

அதான், வார இறுதியில எல்லாற்றையும் பதிவாய் போட்டு உங்களை வாட்டி எடுத்துடுறேன். ஹீ ஹீ..