Wednesday, January 03, 2007

149. 2007-இல் நான்

2006 முடிந்தது. புத்தாண்டு பிறந்தது. 2007 வந்தது.

ஒவ்வொரு வருடம் ஆரம்பிக்கும்போது பலர் பல திட்டங்களை தீட்டுவார்கள். அதில் மிக சிலரே போட்ட திட்டங்களை நிறைவேற்றுவர். பலர் அதே திட்டங்களை புது வருடத்துக்கு ஒத்தி வைப்பார்கள்.
நான் புது வருடம் ஆரம்பிக்கும்போது திட்டங்களை போடுவதில்லை. நமக்கு அதெல்லாம் ஒத்து வராத விஷயம். கஜினி சூர்யா அளவுக்கு ஞாபக மறதி எனக்கு முத்தி போகாட்டினாலும்.. எனக்கும் ஞாபக மறதி அதிகம். ரெண்டு படத்தில் நடித்த தேவதர்ஷினி கேரக்டர் போலவே.

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இருக்கும் நான் போட்ட திட்டங்களை போட்ட அன்னைக்கே மறந்துவிடுவது சகஜம். அதனால், குறுகிய கால திட்டங்களையே அதிகமாக போடுவேன் நான். போட்டதை என் கணிணியின் டெஸ்க்டோப்பில் ஒட்டிவைப்பதும் வழக்கம். (இந்த சாஃப்ட்வேரை பற்றி ஒரு நாள் எழுதுகிறேன். ;-))

அதனால் சுற்று வட்டார மக்களுக்கு நான் சொல்வது என்னவென்றால், என்னுடைய புது வருடம் திட்டம் என்ன என்று கேட்காதீர்கள். ஏனென்றால், அப்படி எதுவும் எனக்கு இல்லை. ஹீ ஹீ ஹீ..

ஆனாலும் வருட இறுதியில் நான் சாதித்த, சந்தோஷப்பட்ட, வருத்தப்பட்ட நிகழ்வுகளை நான் எப்போதுமே பின்னோக்கி பார்ப்பது வழக்கம். அவைகளை டிசம்பர் 31-இல் எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் நேரம் கிடைக்கவில்லை. டிசம்பர் 31 ஹஜ்ஜி பெருநாளாகவும் இருந்த்தால் நான் என் பெற்றோருக்கு உதவியாய் கடையில் இருந்ததுதான் காரணம். ஜனுவரி 1, 2 முடிந்து இப்போது மூன்றும் பிறந்துவிட்டதால் 2006-இல் நடந்த நிகழ்வுகளை பதிவாய் போடுவது இப்போது டூ லேட்-ன்னு கருதுகிறேன்.

ஆனால், அதில் ஒன்றை கண்டிப்பாக உங்களோடு பகிர்ந்து கொள்ளவேண்டும். இந்த ப்ளாக்-தான். இந்த ப்ளாக்கின் மூலமாகத்தான் உங்களைப்போல் அருமையான நண்பர்கள் கிடைத்துள்ளனர். பல்வேறு நாடுகளில் இருந்து பலவகையான கேரக்டரை கொண்ட நண்பர்கள். ஒவ்வொருவரும் தரும் இந்த ஆதரவால்தான் என்னுடைய இந்த ப்ளாக் 150-ஆவது பதிவை தொட வழிவகுத்துள்ளது.

நான் ஒரு தனிமை விரும்பி. இந்த தனிமையிலும் என் நேரத்தை நல்வழியில் செலவழிக்கவும், என்னுடைய தமிழ் மொழியை வளர்க்கவும் இது உதவியாய் இருந்தது; இருந்துகொண்டிருக்கிறது; பிற்காலத்தில் இருக்கும் என நம்புகிறேன்.

எப்போதும் போல மனதில் ஓடும் எல்லா விஷயங்களை பற்றியும் எழுதினேன்... எழுதுகிறேன்.. இனிமேலும் எழுதுவேன்.. அதை நீங்கதான் பொருத்துக்கனும்..

நேற்று வயிற்று வலியால் இரவு தூக்கம் வராமல் வெகு நேரம் கட்டிலில் புரண்டு படுத்திருக்கும்போது, இந்த 2007-இல் முதல் பதிவில் ஏதாவது புதிதாய் எழுதனும்னு நினைத்துக் கொண்டிருந்த பொழுது, ஒரு கவிதை எழுதலாம்ன்னு நினைத்தேன். கவிதை படிப்பதும் எழுதுவதும் விட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது. எழுவதுக்கு நல்ல தமிழ் சொற்களும் மனதில் இல்லை. இந்த நிலமையிலும் ஏதாவது எழுதியாகனும்ன்னு ஒதோ இந்த கவிதையை எழுதினேன்.

கவிஞர்களே! நீங்க இதை படித்துவிட்டு நன்றாக துப்பதான் போறீங்கன்றது கன்ஃபார்ம் ஆகியாச்சு. என்ன பன்றது! துப்புறதுக்குதான் கமெண்ட்ஸ் பக்கம் இருக்கே! நல்லா துப்புங்கள். ;-)


நான் நீராக இருந்தால்..
என் காதலில்
கலந்து சங்கமமாக வா
என் காதலி..

நான் நெருப்பாக இருந்தால்..
என் காதல் நெருப்பில்
குளிர் காய வா
என் காதலி..

நான் காற்றாக இருந்தால்..
என் காதல் புயலில்
சேர்ந்து பறக்கவா
என் காதலி..

நான் நிலமாக இருந்தால்..
என் பரந்த இதயத்தில்
காதலை நட வா
என் காதலி..

நான் ஆகாயமாக இருந்தால்..
என் உயர்ந்த காதலை
கட்டி உன் மனதுக்கு இழுக்க வா
என் காதலி..

9 Comments:

said...

இந்த 2007 நல்லா இருக்க வாழ்த்துக்கள் மை பிரண்ட்..

கவிதை அருமை.. அதை அப்படியே காதலா என்று சொல்லி இருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும் என்பது என் எண்ணம்..

ஓ..நீங்களும் கடை வைத்திருக்கின்றீர்களா..பலே பலே..

அருமையான புத்தாண்டு பதிவு மை பிரண்ட்...

உங்களைப் போல நண்பர்கள் கிடைத்தது 2006 தந்த பரிசுகள் :-)

said...

சொல்ல மறந்துவிட்டேன்...உங்கள் பின்னூட்டம் இப்போது தடை இல்லாமல் எனக்கு வருகிறது மை பிரண்ட்

said...

//மு.கார்த்திகேயன் said...
இந்த 2007 நல்லா இருக்க வாழ்த்துக்கள் மை பிரண்ட்..//

நன்றி கார்த்திக். ;-)

//அதை அப்படியே காதலா என்று சொல்லி இருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும் என்பது என் எண்ணம்..//

காதலுக்கு கவிதை எழுதுவது பெரும்பாலும் ஆண்கள்தானே! அதுவும் எனக்கு இன்னும் காதல் மலரவில்லை. அப்படி எனக்கும் காதல் பூப்பூத்திருந்தால், கண்டிப்பாக இதை காதலா என்று எழுதி அவருக்கு கொடுத்திருப்பேன். ஹீ ஹீ..

//நீங்களும் கடை வைத்திருக்கின்றீர்களா//

அது என் கடை இல்லை கார்த்திக். என் பெற்றோரின் கடை. :-P

//அருமையான புத்தாண்டு பதிவு மை பிரண்ட்...

உங்களைப் போல நண்பர்கள் கிடைத்தது 2006 தந்த பரிசுகள் :-) //

மீண்டும் இன்னொரு நன்றி கார்த்திக். உங்களைப்போல் நண்பர்கள் கிடைத்தது, இந்த ப்ளாக்கின் மூலமாக எனக்கு கிடைத்த பெரும் வெற்றி என்றே நம்புகிறேன்.

said...

//மு.கார்த்திகேயன் said...
சொல்ல மறந்துவிட்டேன்...உங்கள் பின்னூட்டம் இப்போது தடை இல்லாமல் எனக்கு வருகிறது மை பிரண்ட் //

உங்கள் ப்ளாக்கில் பின்னூட்டம் இட நான் ஒதெர்(Other) என்ற சோய்ஸ் தேர்ந்தெடுத்து, அங்கே என் பெயரை எழுதியுள்ளேன்.

ப்ளாக்கர் என்ற சோய்ஸில் இன்றைக்கு இன்னொரு தடவை முயற்சிக்கிறேன். உங்களுக்கு கிடைத்ததா என்று சொல்லுங்கள் கார்த்திக்.

Anonymous said...

Ungalukkum enathu puthaandu nal vaashthukkal ;)

said...

வணக்கம் மை பிரண்ட்..
இது தான் என் முதல் வரவு
உங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
கவிதையும் அருமை இருக்கு.

said...

// C.M.HANIFF said...
Ungalukkum enathu puthaandu nal vaashthukkal ;)
//

unGkaLukkum e vaazhththukkaL Haniff. New Year eppadi irukku?

said...

// கோபிநாத் said...
வணக்கம் மை பிரண்ட்..
இது தான் என் முதல் வரவு
உங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
கவிதையும் அருமை இருக்கு. //

என் வலைக்கு வந்த உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன். ;-)

இதையும் ஒரு கவிதையாய் ஏற்றுகொண்டதுக்கு நன்றி கோபி :-)

Anonymous said...

அதென்ன ?,நான் தான் புதுவருட தீர்மானமெதுவும் எடுக்காமல் வாழ்பவன் என நினைத்தால் நம்ம பிரண்ட் நீங்களும் அப்படியா? நான் தீர்மானம் எடுக்கலாம் ;அவனும் அதான் கடவுளும் சேர்ந்தெல்லா எடுக்க வேண்டும்.
தங்கள் கவிதை பற்றிய என் கருத்து உங்களுக்கு நான் சொல்லியா?? தெரியவேண்டும்.நல்ல நண்பர்கள் நண்பர்களைப் புரிவார்கள் பொறுப்பார்கள்.
தங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு வாழ்த்து அனுப்பினேன். முகவரி தவறெனத் திரும்பியது.
இனிய புதுவருவமாக அமையட்டும்.
யோகன் பாரிஸ்