Monday, January 15, 2007

156. என்னன்னு நான் சொல்ல...

மார்கழி கழிஞ்சாச்சி..
போகி போயாச்சு..
தை பொறந்தாச்சு..
தமிழர் திருநாள் வந்தாச்சு..

உலகத்தில் வாழும் அனைத்து தமிழர்களுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!!உங்கள் பொழுதும், இனி வரும் நாட்களும் சர்க்கரை பொங்கல் போல் இனிக்க இறைவனை வேண்டுகிறேன்.


அருண்.. சர்க்கரை பொங்கல் கேட்டிருந்தீங்களே!! இன்னைக்கு எங்க வீட்டில் செய்த பொங்கல் இதோ! நன்றாக ருசித்து சாப்பிடுங்கள். நண்பர்களே! இது உங்களுக்கும்தான்.. நிறையவே இருக்கு! எல்லாரும் சாப்பிடலாம் வாங்க..

வருடப்பிறப்பின் போது என்னுடைய ஒரு பதிவு தமிழ்மண பூங்காவில் இடம் பெற்றது எனக்கு சந்தோஷத்தை கொடுத்தது. இது உங்கள் எல்லாருக்கும் தெரிந்ததே!

ஆனால் பொங்கல் தினத்திலும் நான் பேரானந்தத்துடன் இருக்கிறேன். ஒரு நல்ல வாய்ப்பு (நீங்களே ஏதாவது கற்பனை பண்ணீக்காதீங்க!!) என்னை தேடி வந்தது. Yes or No என்று நான் சொல்ல வேண்டியதுதான் மீதி..

இன்னும் நான் முடிவை சொல்லவில்லை. ஆனாலும், இவ்வளவு சீக்கிரமாக ஒரு வாய்ப்பா என்று நானே திகைத்து நிக்கிறேன். இன்னும் அதிலிருந்து மீளவில்லை.

அது என்னன்னு தெரியனுமா? நான் Yes or No என்று இந்த வார வெள்ளியன்று பதிலை சொல்லிவிட்டு முழு கதையையும் (அய்யயோ! இது கதையில்லை.. நிஜம்) எழுதுகிறேன். ஏன் வெள்ளி? நடுவில் 4 நாட்கள் இருக்கேன்னு கேட்கிறீர்களா? அன்று இன்னொரு சந்தோஷமான.. இல்லை இல்லை.. இரண்டு சந்தோசமான விஷயங்களும் நடக்கவிருக்கிறது. அது மட்டுமில்லை. என் சீனியர் இஞ்சீனியர் இந்த வாரம் புது வகை ஆணியை எப்படி புடுங்குறதுன்னு சொல்லி கொடுக்கபோறாரு. அப்போ! இன்னும் 4 நாள் உங்கள் தோழி பிஸியோ பிஸி!!

பி.கு: (என்னுடைய வலை எனக்கொரு டைரியை போன்றது! அதுனால்தான், என்னுடைய சந்தோசம் துக்கம் எல்லாவற்றையும் இதில் எழுதுகிறேன்.)

14 Comments:

Anonymous said...

Happy pongal my friend, waiting eagerly for the GOOD news ;)

மு.கார்த்திகேயன் said...

pongal vazhthukkal my friend..

romba santhosamana vishayamaa irukkum pOla..


Yes sollitte post podunga..my friend

Arunkumar said...

ஆஹா பொங்கல் சூப்பர் my friend !!!

ரொம்ப தேங்க்ஸ் :)

அப்பறம் அந்த Yes/No மேட்டர்ல சீக்கிரமே சஸ்பென்ஸ் ஒடச்சிடுங்க !!!
நல்ல செய்திக்கு வாழ்த்துக்கள் :)

கோபிநாத் said...

தோழி
பொங்கல் நன்றாக இருக்கிறது. யார் செய்தது? நீங்கள் இல்லையே..:)) மிக்க நன்றிகள்.

அய்யோ..நீங்களும் சஸ்பென்ஸ்???? சிக்கிரம் சொல்லிடுங்க...
அந்த நல்ல விஷயத்திற்கு வாழ்த்துக்கள்....

Priya said...

பொங்கலுக்கு நன்றி myFriend.

//நீங்களே ஏதாவது கற்பனை பண்ணீக்காதீங்க!!) //
இப்படி சஸ்பென்ஸ்ல விட்டா எப்படி கற்பனை பண்ணாம இருக்க முடியும்?

ரவி said...

மெய்யாலுமே உங்க வீட்லெ செஞ்ச பொங்கலா ???

Syam said...

belated pongal wishes :-)

Syam said...

என்ன வேனா எழுதுங்க...எங்களுக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்ல...ஆனா கேள்வி கேட்டு மட்டும் பதில் சொல்ல சொல்லாதீங்க :-)

ஜி said...

ஆஹா.. பயங்கரமா பொறி வக்கிறீங்க...

இவ்வளவு பில்ட்-அப்ப பாத்தா வெயிட்டான மேட்டர் மாதிரித்தான் தெரியுது...

வெள்ளி வரையுமா? ஓகே ஓகே..

MyFriend said...

அனைவருக்கும் என் பொங்கல் வாழ்த்துக்கள். கொஞ்சம் லேட்டாதான் சொல்கிறேன். ;-) மன்னிக்கவும்..

MyFriend said...

//கோபிநாத் said...
தோழி
பொங்கல் நன்றாக இருக்கிறது. யார் செய்தது? நீங்கள் இல்லையே..:)) மிக்க நன்றிகள்.//


நான் செய்யலைங்க.. எப்போதும் போல என் அம்மாதான் செய்தாங்க.. ;-)

MyFriend said...

//இப்படி சஸ்பென்ஸ்ல விட்டா எப்படி கற்பனை பண்ணாம இருக்க முடியும்? //

இது உண்மைதான்.. அதான் மின்னஞ்சல்ல பல வகையான ஈமெயில் வந்ததே!! ;-)

MyFriend said...

// செந்தழல் ரவி said...
மெய்யாலுமே உங்க வீட்லெ செஞ்ச பொங்கலா ??? //


எங்க வீட்டுல செய்தது இப்படிதான் இருந்தது.. ஆனால், படம் பிடிக்க முடியவில்லை. வேலைக்கு லேட்டானதுனல அப்படியே வேலைக்கு போயிட்டேன். பிறகு அதை போல ஒரு படம் தேடினேன். ஹீ ஹீ ஹீ..

MyFriend said...

//Syam said...
என்ன வேனா எழுதுங்க...எங்களுக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்ல...ஆனா கேள்வி கேட்டு மட்டும் பதில் சொல்ல சொல்லாதீங்க :-) //

ஷாம்.. எனக்கு தெரியும்.. நீங்க பதில் எழுத மட்டீங்கன்னு.. என்னுடைய பிரேயின் தீசருக்கு கூட நீங்க பதில் எழுத மாட்டேன்னு சொல்லிடீங்களே! :-))