நான் யாரு எனக்கேதும் தெரியலையே!
முதல்ல ஆடியன்ஸுக்கே தெரியலை. முன்னாலே வா..
ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன்
அய்யோ பாவம்! திக்கு வாய் போலிருக்குது!
காலங்களில் அவள் வசந்தம்
அப்போ கோலங்களிலே யாரு தேவயானியா?
தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா
உங்கப்பா என்ன கேஸ் கம்பேனிலியா வேலை செய்றாரு?
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்டேன்
மத்தவங்களுக்கெல்லாம் என்ன மூக்கிலுயா கேக்கும்?
மரத்தை வச்சவன் தண்ணீ ஊத்துறான்
மத்தவங்களேல்லாம் என்ன மண்ணெண்ணையா ஊத்துறாங்க?
ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ?
அவரை இப்ப யாசர்பாடிக்கு ட்ரான்ஸ்வர் பண்ணிட்டாங்க
தூது வருமா தூது வருமா
முன்னாடியிருந்து ரெண்டு தொடப்பம் வருமா? வேற பாட்டு பாடு
நேத்து ராத்திரி யம்மா
இன்னைக்கு ராத்திரு உங்கப்பாவா??
தகடுன்னா தமிழ்நாட்டுக்கு தெரியும்
அப்போ அலுமினியம் ஆந்த்ரா வரைக்கும் தெரியுமா?
மே மாசம் தொண்ணுதெட்டில் மேஜர் ஆனேனே!
அப்போ எப்போ சுந்தர்ராஜன் ஆனீங்க?
ஒளியிலே தெரிவது தேவதையா?
டேய் நல்லா பாரு அது குண்டு பல்ப்பு
என்ன சத்தம் இந்த நேரம்?
அது ஒன்னும் இல்லை. வயிறு கொஞ்சம் சரியில்லை
என்னமோ எனக்கு ஞானம் வந்து எழுதியிருக்கேனோன்னு நெனச்சிட்டீங்களா? அதுதான் இல்லை. அசத்த போவது யாரு நாலாவது பகுதியில ஜோன் மற்றும் சத்யராஜ் செய்த காமெடிதான் இது!
இதை படிச்சதும் உங்களுக்கும் ஏதாவது பாட்டுக்கு சொந்தமா கமேண்ட்டு போடணும் போல இருக்குமே? அப்படி இருந்தால் கீழே கிறுக்கிட்டு போங்கப்பா. :-)
Monday, March 26, 2007
174. பாடலும் அதுக்கேற்ற நையாண்டி பதில்களும்
Posted by MyFriend at 3:32 PM 56 comments
Labels: நகைச்சுவை
Sunday, March 25, 2007
173. என் ஞாபக சக்தியை டெஸ்ட் பண்றாங்கப்பா
எல்லாரும் கோழியா மாறுங்கய்யான்னு அபி அப்பா அழைக்கிறார் அழைக்கிறார் அழைக்கிறார்..
நம்மோட மூக்கை தீட்டி யோசிக்க சொல்றார். (எல்லாரும் மூளையைதானே தீட்டுவாங்க???)
அவர் ஒரு சவால் விடுறார். என்னனு?
"நாம படிச்ச பள்ளி, செக்ஷன், வாத்தியார் பெயர்.. எதெல்லாம் கரெக்ட்டா சொல்லனுமாம்"
நல்லா கேக்குறாய்ய்ங்க பாருய்யா டீடேய்ல்லு....
கரெக்ட்டா எழுதினா பரிசு எதுனாச்சும் தருவீங்களா அபி அப்பா?
நோட் மை பாய்ண்ட்டு:
LKG
4 வயது - "5 வயது க்லாஸ்" - டீச்சரோட கையெழுத்து அழகா முட்டை - முட்டையா இருக்கும் - தடிகா பேரு ஞாபகமில்லை
5 வயது - "6 வயது க்லாஸ்" - அதே டீச்சர் - "
6 வயது - "6 வயது க்லாஸ்" - அட, அதே டீச்சர்தாம்ப்பா - "
ஆரம்ப கல்வி
வகுப்பு 1 - Biru (நீலம்) - டீச்சர் குண்டா இருப்பாங்க. க்லாஸ்ல பென்சில், பேனா எல்லாம் விற்ப்பாங்க. ரொம்ப நல்ல டீச்சர். நாங்கெல்லாம் அவங்களை அம்மான்னுதான் கூப்பிடுவோம். - காராக் ஆரம்ப தமிழ்பள்ளி
வகுப்பு 2 - செண்பகம் (Cempaka) - டீச்சர் பெரிய கண்ணாடி ஒன்னு போட்டிருப்பாங்க.அதுக்கு மேலே உன்னும் ஞாபகம் இல்லை - பத்துமலை ஆரம்ப தமிழ்ப்பள்ளி
வகுப்பு 3 - செண்பகம் (Cempaka) - இவங்களை சுத்தமா ஞாபகம் இல்லை. எங்க பக்கத்து க்லாஸ் டீச்சர் பேரு ஞாபகம் இருக்கு. பேரு தெய்வானை டீச்சர் - "
வகுப்பு 4 - செண்பகம் (Cempaka) - இவங்க பேரு ஏதோ சாமி பேரு. என்னனு மறந்துபோச்சு. இவங்க அந்த வருஷம்தான் திருமணம் செய்தாங்க. அந்த வருட இறுதியில் பள்ளி மாற்றலாகி போயிட்டாங்க - "
வகுப்பு 5 - செண்பகம் (Cempaka) - இவங்க பேரும் நான்காம் வகுப்பு டீச்சர் பேரும் ஒன்னுதான். மேலே உள்ளதே ஞாபகம் இல்லை. இது மட்டும் எப்படி தெரியும்? நல்லா கேக்குறீங்கய்யா!!! - "
வகுப்பு 6 - ரோஜா (Ros) - இவங்க பெயர் கலாவதி டீச்சர். ரொம்ப கோபம் வரும் இவங்களுக்கு. - "
(ஸ்ஸ்ஸ்ஸப்பா.. இப்பவே கண்ணை கட்டுதே!!!)
இடைநிலைக் கல்வி
படிவம் 1 - கெம்பாஸ் (Kempas) - இவங்க பேரு ஃபாட்ஜிலின் (Fadzlin) டீச்சர். இவங்க பேரு மறக்காதுப்பா. ஏன்னா இவங்க என் பின் வீட்டுலத்தான் குடியிருக்காங்க.. ஹீஹீ.. - செலாயாங் பாரு 2 இடைநிலைப் பள்ளி
படிவம் 2 - ஜாத்தி (Jati) - இவங்க ஒரு அறிவியல் டீச்சர். அவங்க மகனும் என் க்லாஸ்மேட்தான். எனக்கு பிடிக்காத பாடத்தை சொல்லிக் கொடுத்தனாலே அவங்க பேரும் ஞாபகம் இல்லை. - டாருல் ஏசான் இடைநிலைப் பள்ளி
படிவம் 3 - ஜாத்தி (jati) - இவங்க பேரு சுஸ்லினா (Suzlina) டீச்சர். Oxford Universityலே படிச்சிட்டு வந்து எங்களை இங்கிலீஸ்ல பேச சொல்லி உயிரை வாங்கிட்டாங்க.. ஹ்ம்ம்.. - "
படிவம் 4 - அறிவியல் 1 (Science 1) - இந்த வருடத்துல நிறைய டீச்சருங்க வந்தாங்க.. எல்லாரையும் ஓட ஓட விரட்டிடோம்ல.. ;-) - "
படிவம் 5 - அறிவியல் 1 (Science 1) - இவங்க ஒரு மலாய் டீச்சர். சின்னதா இருப்பாங்க. அந்த வருடம் அவங்க pregnant. (அப்போதும் க்லாஸ்ல நாங்க அராஜகம் பண்ணூவோம்ல.. ) எங்க ரிசால்ட் வந்த ஒரு வாரத்துக்கு முன்தான் அவங்களுக்கு குழந்தை பிறந்தது. - "
அப்புறம் எப்படியோ எனக்கு univeristyலே ஒரு சீட்டு கொடுத்துட்டாங்க. நாமளும் அப்படியே இங்கே வந்து செட்டல் ஆயாச்சு! :-P
இந்த கேள்வி ரொம்ப நல்லாவே இருக்கு அபி அப்பா. இதுவே Tag பண்ணலாமா? வியர்ட் கேம் முடிஞ்சாச்சு! புதுசா இது ஸ்டார்ட் பண்ணிடுவோமா?
நான் Tag பன்ற அந்த அஞ்சு பேரு:
1- போன தடவை மிஸ் ஆகி போன கார்த்திக்
2- காதலை ஆராய்ச்சி செய்யும் CVR
3- சின்ன பையன் ராம்
4- புது மாப்பிள்ளை அம்பி
5- முதல்வர் @ நாட்டாமை ஷாம்
Posted by MyFriend at 6:24 PM 31 comments
172. சிவாஜி பாடல்கள் - எதுவரை உண்மை?
ஏப்ரல் 4 சிவாஜி ரிலீஸ் என்று AVM அறிவித்திருக்கும் இவ்வேளையில் 3 முழு பாடல்கள் இணையத்தில் பரவலாக வெளியிடப்பட்டுள்ளது சிவவஜி யூனிட்டுக்கு ஒரு அதிர்ச்சியூட்டக் கூடிய விஷயமே!
இதே நிலை சிவாஜியின் நிழற்படங்கள் வெளியாகியபோதும் நடந்தது. யார் அந்த கல்ப்ரீட் என்று தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. கடந்த வியாழன் அன்று காலையில் வெளியானது திருடப்பட்ட 3 பாடல்கள்:
1- ஒரு குடை சன்லைக்ட
2- சஹானா சாரல்
3- வா ஜி சிவாஜி
வெளியிடப்பட்ட பாடல்களில் இரைச்சல் சத்தங்கள் இருப்பதை கவனிக்கவும். ஷூட்டீங் நடந்த செட்டில்தான் இவைகள் திருடப்பட்டிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.
இறுதி கலவையின் தரம் கண்டிப்பாக இப்படி இருக்க வாய்ப்பில்லை, குறிப்பாக ஷேகி, ப்லேஸ் மற்றும் தான்வி பாடிய ஒரு குடை சன்லைக்ட் பாடல். இணையத்தில் வெளியான சஹானா சாரல் பாடலை பாடியது உதித் நாராயணன் மற்றும் சின்மாயி. ஆனால், ஒரிஜினல் ட்ராக்கில் பாடியிருப்பவர்கள் ரஹ்மானும் சின்மாயியும்தான்.
படத்தின் மற்ற பாடல்கள்:
1- டே லைக்ட் டுட் (Day Light Dude) - அமேரிக்க ரேப்பர்ஸ் பாடியிருக்கும் இந்த பாடல்தான் படத்தின் ஆரம்பப் பாடல்.
2- ட்ரம்ஸ் சிவமணி ட்ரம்ஸ் வாசிக்க ரஜினி பாடிய பாடல்
வெளியான பாடல்களே கேட்க அருமையாக இருக்கின்றன. இப்போது வெளியான இந்த விஷயங்கள் பாடல்களின் எதிர்பார்ப்பை இன்னும் கூடுதலாக தூண்டி விட்டிருக்கிறது. ரஹ்மான் இசையில் ஏப்ரல் 4-இல் வெளியாகவிருக்கும் சிவாஜிக்கு நான் வேய்ட்டிங். :-)
Source: IndiaGlitz
Posted by MyFriend at 3:00 PM 15 comments
171. சித்தார்த் விளையாடும் விளையாட்டு
Aata (கேம்) - "புலி மீது சவாரி"ன்னு subtitle-உடன் அமர்க்களமாய் வெளியாகியுள்ளது சித்தார்த், இல்லியானா நடிக்கும் Aata பட புகைப்படங்கள்.
நன்றி: ஜி
ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட படங்கள்:
Posted by MyFriend at 2:36 PM 14 comments
Labels: சித்தார்த், சினிமா, நிழற்படம்
Saturday, March 24, 2007
170. Nokia - Connecting People
அருண் அவரோட பதிவுல சில தத்துவங்களை தெளிச்சதும், நாமளும் புதுசா ஒரு திருக்குறள் சொல்லிட்டு போலாம்ன்னு வந்தேன்.
அதாவது மக்கா நான் என்ன சொல்ல வரேன்னா:
"நீ நோக்கிய பெண் உன்னை நோக்காவிடில்
நோக்கியா வாங்கி என்ன பயன்?"
Nokia - Connecting People..
அடடே! நீங்க அருண் ப்ளாக்ல இருந்து கல்லை பொருக்கிறது என் பைனோகுலரில் (binocular) தெரியுதுப்பா!!! நீங்கல்லாம் அப்படி செய்யக்கூடாது! நாமெல்லாம் அப்படியா பழகுறோம்? அந்த கற்களை வச்சிதான் அருண் வீடு கட்டப் போறார்ன்னு சொன்னார்! அவருடைய ஆசை நிராசையா ஆயிடக் கூடாதில்லையா?
சரி மேட்டருக்கு வர்ரேன். Nokia - Connecting People.. ரெண்டு விஷயத்தை இங்கே சொல்லி உங்களை இணைக்கலாம்ன்னு வந்திருக்கேன்.
மேட்டர் நம்பர் ஒன்னு
கவிதை போட்டி ஒன்னு நடக்குதுன்னு தோழி சேதுக்கரசி மின்னஞ்சல் அனுப்பினாங்க. எனக்கும் கவிதைக்கும்தான் எட்டாத தூரமாச்சே! என்ன செய்யலாம்ன்னு யோசிக்கும்போது "அட.. நம்ம தோழர்கள் நிறைய பேர் 'உளருதல் - என் உள்ளத்தின் வேலை'ன்னு உளரிக்கிட்டு இருக்காங்களே! அவங்க கிட்ட சொல்லியே ஆகணும்"ன்னு முடிவு பண்ணியாச்சு!
உளரல் சங்கிலி தொடர் மன்னர்களே,
இதோ!! இதை படியுங்கள்:
போட்டி விபரங்கள், விதிமுறைகள், பரிசுகளைப் பற்றி இங்கே சொடுக்கி தெரிந்துக்கொள்ளவும்.
மேட்டர் நம்பர் ரெண்டு
----------------------------------------------------------------------------------
உலகின் பெரிய பூ - ரஃலீசியா (Rafflesia) -இருப்பது சபா, மலேசியா
மலேசியா நெடுஞ்சாலை நீளம் 65,877KM. இது பூமியின் சுற்றளவு (40,075KM)-ஐ விட நீண்டது.
தெற்காசியாவிலேயே மிக பழமைவாய்ந்த ஆங்கில பள்ளி -பினாங்கு ஃப்ரீ ஸ்கூல் (Penang Free School) - வருடம்: 1816
14,500 வகை தாவரங்கள், 200க்கும் மேற்ப்பட்ட பாலூட்டும் பிராணிகள், 600 வகையான பறவைகள் 140 வகை பாம்புகள் மற்றும் 60 வகை பல்லிகள் மலேசியாவை வீடாக கொண்டிருக்கின்றன.
உலகின் நீளமான(5.54m) ராஜ நாகம் (King Cobra) ஏப்ரல் 1937-இல் போர்ட் டிக்ஸனில் பிடிக்கப்பட்டது. பிறகு லண்டன் மிருகக்காட்சி சாலையில் வைக்கப்பட்டபின் 5.71 மீட்டர் வரை வளர்ந்தது.
உலகின் மூன்றாவது நீளமான பாலம், பினாங்கு பாலம் (Penang Bridge) (13.7km)
----------------------------------------------------------------------------------
நான் உங்களில் பலரிடம் அறிமுகமானது என்னுடைய மலேசியாவை பற்றிய பதிவுகள் மூலமாகத்தான். மற்ற நாடுகளின் வாழ்க்கை முறைகளை அறிந்த பல பேர், மலேசியாவில் எப்படி இந்தியர்கள் வாழ்கிறார்கள் என்பது தெரியாமலே இருந்ததென பல பேர் சொல்லியிருந்தீங்க. சிலர் என்னை இதைப் பற்றி ஒரு தொடரே எழுத சொல்லியும் இருந்தீங்க. ஆனால், நேரம் பற்றாக் குறையில் இதை செய்ய முடியவில்லை.
ஆனால், இப்போ கவலையை விடுங்க. இதோ வந்து விட்டது.. கூலா ஜில்லென்று ஒரு மலேசியா!!!
நானும் துர்காவும் சேர்ந்து எழுத போகிறோம். அறிமுக பதிவு போட்டாச்சு. இனி உங்களுக்காகத்தான் வேய்ட்டீங்! :-)
நீங்க அடிக்கிற பின்னூட்டத்தில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா? ஹ்ம்.. கிளம்புங்கள்!
Posted by MyFriend at 4:39 AM 41 comments
Labels: அறிவிப்பு
Thursday, March 15, 2007
169. போர் கொடி தூக்கிட்டாங்கய்யா!!!!
சுத்தி வளைக்காமல் நான் நேரா மேட்டருக்கே வந்துடுறேன் மக்கா!! தல எப்போ சுகாதார துறை அமைச்சர் பதவியை பொற்கொடிக்கு வழங்கினாரோ, அப்பவே நானும் ஒரு மனு போட்டாச்சு! வந்து என் கீ போர்ட்டை கொஞ்சம் சுத்தம் செஞ்சுட்டு போங்கக்கான்னு...
ஆனால், இவங்களுக்கு என் மேலே என்ன கடுப்போ தெரியலை! போர் கொடியை தூக்கிட்டு நிக்குறாங்க..
நான் பச்சை கொடியை தூக்கினா, இவங்க ஸ்ட்ரைக்கிங் பச்சையை தூக்கிட்டு நிக்குறாங்க..
சிவப்பை தூக்கினா, ஸ்ட்ரைக்கிங் சிவப்பை தூக்கிட்டு லுக்கு விடுறாங்க..
காய்ச்சலப்போ வீட்டுல இருக்கும்போது பாக்யராஜ், டி. ஆர் படங்கள் ரொம்ப பார்த்திருப்பாங்க போல..
(எப்படித்தான் அந்த கலர கையில தூக்கிட்டு நிக்குறாரோ! இங்க மலேசியாவிலிருந்து பார்க்கும்போதே எனக்கு கண்ணெல்லாம் கூசுது. உங்களுக்கு கூசலையா?)
சரி மேட்டருக்கு வரேன் மேட்டருக்கு வரேன்னு சொல்லிக்கிட்டே என்னென்னவோ பேசிட்டு இருக்கேன் பாருங்க.. இவங்க கோபத்தை தணிக்கனும்ன்னா ஒரு தேக் எழுதணும்ன்னு வீட்டுப்பாடம் வேற கொடுத்துறுக்காங்க..
தலைப்பு: என்னைப் பற்றி 5 வியர்ட்டான விஷயங்கள்
(யாருடா இப்படிப்பட்ட தலைப்புகளையெல்லாம் கொண்டு வர்றது?)
முதல்ல ஒரு வெள்ளை கொடி காட்டிடுறேன்:
இப்போ தேக்:
1. ஞாபக மறதி
இது எனக்கு பலமா பலவீனமான்னு தெரியலை. சின்ன வயசுல ஓரளவுக்குதான் இந்த வியாதி இருந்தது. என் அப்பா, பாப்பா (நாந்தானுங்கோ!) பெரிய படிப்பெல்லாம் படிச்சு டாக்டரா, கலேக்டரா, தொழிலதிபரா, வக்கிலா (4 இன் 1) ஆகனும்ன்னு ஆசைப்பட்டு மேமோரி ப்லஸ் (Memori Plus) வாங்கி கொடுத்தார்.. மூனு நாலு போட்டல்களை காலி பண்ணிட்டேன். அப்பா வந்து கேட்டார்.
அப்பா: இப்போ படிக்கிறது எல்லாம் ஒன்னும் மறக்கலையே?
நான்: படிப்பா? நான் படிக்கிறேனா?
அம்மா இதை பார்த்துட்டு, எனக்கு மூலிகை மருத்துவம்தான் சரி வரும்ன்னு சொல்லி வீட்டுல வல்லாறை செடியை வளர்த்து, ஒரு நாளைக்கு மூனு வேளையும்:
தண்ணீருக்கு பதிலா - வல்லாறை ஜூஸ்
சமையலில் கருவேப்பிலைக்கு பதிலா - வல்லாறை கீரை
சாக்லேட் மிட்டாய் சாப்பிடனும்னா கூட அதில் வல்லாறையையும் சேர்த்து வச்சு கொடுத்தார்..
ஏன்னா, இந்த பாப்பா(!) பெருசா ஆனதும் டீச்சரா, விஞ்ஞானியா, கணித மேதையா, பெரிய கம்பெனியில மேனேஜரா வரனும்ன்னு இவங்களுக்கு ஆசை.. ஒரு மூனு மாசத்துக்கு வல்லாறையை சாப்பிட்ட பிறகு, என் அம்மா டெஸ்ட் வச்சாங்க..
அம்மா: இன்னைக்கு ஸ்கூல்ல நீ என்ன படிச்ச?
நான்: நான் என்ன படிச்சன்னு கேட்குறதுக்கு நீங்க யாரு?
அவ்வளவுதான்! அம்மாவும் அப்பாவும் தலையில் துண்டு போட்டுட்டு போயிட்டாங்க.
(கடைசியில் அவங்க ஆசைப்பட்ட எதுவும் நான் ஆகாமல், இஞ்சினியரிங் படிச்சு முடிக்க போறேன்.)
அதுக்கப்புறம்தான் தெரியுதே, என் ஞாபக சக்தி எப்படி வேலை செய்யுதுன்னு! யாரிடமாவது ஏதாவது முக்கியமா பேசிக்கிட்டே இருப்பேன். சில நிமிடங்களில் யாரிடமோ ஏதோ பேசினோம் என்று தெரியும். ஆனால், யார், என்ன மேட்டர்ன்னு சுத்தமா ஞாபகமே வராது!
போன்ல, கணிணில ரிமைண்டர் வச்சிருப்பேன். ஆனால், பல சமயங்களில் ரிமைண்டர் ஒன்னு இருக்குன்னே மறந்துடுவேன். இதை பத்தி சொல்லனும்ன்னா ஒரு பெரிய பதிவே போடலாம்ங்க.. அதை பிறகு பார்ப்போம். இப்போ Next போலாம் வாங்க..
2. கோபம்
அப்பன் எட்டடி பாய்ஞா பிள்ளை பதினாரடி பாயும்ன்னு பெரியவங்க சொல்லுவாங்க.. சின்ன வயசிலிருந்தே என் அப்பாவின் கோபங்களை கண்டு (அடியும் வாங்கி!) வளர்ந்ததால், அப்பாவின் கோபத்துக்கு நானும் சளைத்தவள் இல்லை என்று ஆகிவிட்டது. எனக்கும் சரமாறியா கோபம் வரும்.. ஆனால், நான் அதை முடிந்த வரை அடக்கிக்கொள்வேன். நானே எனக்கு கேட்டுக் கொள்வேன் "எதற்கு கோபம்? இதனால் பிரச்சனைகள்தான் கூடுமே தவிர, ஏதும் குறைய போவதில்லை!"
என்னுடைய பல நண்பர்களிடம் எனக்கு கோபம் வரும்ன்னு நீங்க போய் சொன்னா, அவங்க நம்பவே மாட்டாங்க. (நிஜமா!!)
ஆனாலும் சில சமயங்களில் என்னால் என்னையே கண்ட்ரோல் பண்ண முடியாது. அப்போது எரிமலை வெடித்துவிடும்! அது ஒரு குறுகிய காலத்துக்கு மட்டுமே (சில நிமிடங்கள் or சில மணி நேரம்)..
என்னுடைய கேரக்டர் நம்பர் 1 (ஞாபக மறதி) என்னை முழுவதுமாய் ஆட்கொண்டதால் கோபத்தையும் கோபப்பட காரணமான அந்த காரணங்களையும் மறந்துவிடுவேன். (இதனால், ஞாபக மறதி இருப்பது பலமே!!)
இதுனால் நான் என்ன சொல்ல வர்றேன் என்றால், நான் கோபம் கொண்டாலும், சீக்கிரமே தனிந்துவிடுவேன், இதை மனதில் வைத்து பிரச்சனைகளை பெரிது படுத்த வேண்டாம். நன்றி.. ;-)
3. இயந்திர வாழ்க்கை
வாழ்க்கையில் நான் கால அட்டவணை போட்டு அதன் படி நடக்கிறேன் என்று நினைக்கிறீங்களா? அதுதான் கிடையாது!
நான் சொல்லும் இயந்திர வாழ்க்கை: இயந்திரங்களை நம்பி வாழும் வாழ்க்கை.
இப்போழுது நான் உபயோகிக்கும் 5 இயந்திரங்கள்:
1- பர்சனல் கம்பியூட்டர் (Personal Computer)
2- லாப்டாப் (Laptop)
3- நோகியா 6680 (Nokia 6680)
4- ஆக்ஸியா ஏ108 பி.டி.ஏ போன் (AXIA A108 PDA Phone)
5- கைக்கடிகாரம்
இதில் முக்கியமாய், எப்போதுமே கணிணி என் கூடவே இருக்கவேண்டும். குளிக்கும் நேரமும், க்லாஸ் போகும் நேரமும் தவிர்த்து மற்ற எல்லா நேரமும் நான் இருப்பது - என் கணிணியின் முன்தான். அப்படியொரு பைத்தியம் எனக்கு. வேலை, ப்ராஜக்ட், அசைக்ன்மேண்ட், பாடம், படம், மியூசிக், விளையாட்டுன்னு சொல்லிட்டே போலாம். எல்லாமே இந்த கணிணியில்தான். இதோ! இந்த போஸ்ட் நான் எழுதுவதும் இதே கணிணியில்தான்.
என்னை தேட வேண்டும் என நினைப்பவர்கள் எத்தனை மணியாக இருந்தாலும், நேராய் என் ரூமுக்கு வந்துவிடுவார்கள். ஏனென்றால், இங்கேதானே என் கணிணி இருக்கு!!!!
நண்பர்கள் சொல்லுவாங்க: "நீ இந்த கம்பியூட்டர் கட்டிட்டே அழு"ன்னு.. அதுக்கு நன் சொல்வேன்: "நான் ஏன் அழனும்? கம்பியூட்டர் கட்டிக்கிட்டா நான் சந்தோஷமாய்தானே இருப்பேன்.. இப்போ இருப்பது போல!" ;-)
(Actually இதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு! நான்தான் மறதியாச்சே!!! கணிணியின் முன் உட்கார்ந்திருந்தால் எது எது எப்போது செய்ய வேண்டும் என ரிமைண்டர் கொடுத்து எனக்கு நினைவூட்டிக்கிட்டே இருக்கும். மற்றவர்கள் டைம் பிரகாரம் நம் முன் வந்து மியூசிக்குடன் நாம் என்ன செய்ய வேண்டும் என சொல்வார்களா?)
[யப்பா!!! என்ன மூளை!!! உன்னால மட்டும் எப்படி இப்படியெல்லாம் யோசிக்க முடியுது, .::மை ஃபிரண்ட்::.!!!!] ;-)
4. செய்வதை திருந்தச் செய்தல்
எனக்கு ஒரு பழக்கம் இருக்குங்க.. எதையும் நினைச்சதும் செய்ய மாட்டேன். அப்படி செய்ய ஆரம்பித்தால், என்னால் முடிந்த "The best from me"யைதான் தருவேன். என்னை விட எத்தனையோ பேர் நன்றாக செய்பவர்கள் இருந்தாலும், என்னை தேடி வந்துவிட்டார்களே! அவர்களை வருத்தப் பட வைக்கக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காக என்னால் முடிந்த வரை செய்துக் கொடுப்பேன். அது வேலை ஆகட்டும், உதவியாகட்டும், பாடமாகட்டும்.. அதுபோலத்தான், இந்த ப்ளாக்கும். ;-)
அதற்காக, எனக்கு தெரியாமல் புரியாமல் இருக்கும் விஷயங்களை கேட்டு படித்து முயற்சிப்பேன். என் எழுத்துக்களில் கொஞ்சம் முன்னேற்றம் இருக்குன்னு உங்களில் சிலர் சொல்லியிருக்கீங்க. அதுக்கு காரணம் நீங்கதான்! உங்கள்ல எத்தனை பேரை நான் தொல்லை பண்ணியிருக்கிறேன்னு எனக்குதான் தெரியும். எனக்கு தெரியாத வார்த்தைகளை சொல்லி தர கேட்டிருக்கிறேன். சில நண்பர்கள் ஒரு படி மேலே போய் என் எழுத்துக்களில் உள்ள பிழைகளை சுட்டி காட்டி எனக்கு உதவியிருக்கிறீர்கள். என்னுடைய இந்த வளர்ச்சிக்கு நீங்கதான் காரணம்! நன்றி..
5. நான்காவது படிக்கும்போதே என் ஐந்தாவது குணம் தெரிஞ்சிருக்குமே? (நன்றி மறக்காதவள் நான்)
யாரோ பெரியவங்க சொல்லியிருக்காங்க! வலது கை செய்யும் தானங்களையும் உதவிகளையும் இடது கைகூட அறியக்கூடாது. செய்த உதவியை அப்போதே மறந்துவிட வேண்டும். பிறர் நமக்கு செய்த உதவியை என்றென்றும் மறக்க கூடாதுன்னு!
அதனாலே நான் வெகு சுலபமாய் மற்றவர்களிடம் உதவி கேட்க மாட்டேன். அப்படி எனக்கு மிகவும் தேவைப்பட்டாலோ, (ஒரு சில நல்லவங்க) நாம் உதவி கேட்காமலேயே வந்து உதவி செய்யுறவங்களை நான் எப்போதும் மறக்க மாட்ட்டேன். (என் ஞாபக மறதி இந்த விஷயத்தில் ஒன்னும் செய்ய இயலாது என்று நினைக்கிறேன்.)
நான் நாலாவது படிக்கும்போது பஸ் ஏறிதான் வீட்டுக்கு வருவேன். அப்போ நான் ஒல்லி குச்சியாய், சின்னதாய் இருந்தேன். தோளில் புத்தகப்பை மூட்டையை சுமந்துக்கொண்டு கூட்டமாய் இருந்த பஸ்ஸில் ஏறினேன். பஸ் ஒவ்வொரு இடத்தில் ப்ரேக் போடும் போதும், நானும் முன்னாடி போய் விழுந்து எழுந்திருச்சி வந்தேன். அப்போது ஒரு அக்கா (24-25 வயசு இருக்கும்) எழுந்திருச்சி என்னை உட்கார சொல்லி இடம் கொடுத்தாங்க. போன வருடம் (ஒரு பத்து வருடத்துக்கு மேல ஆயிடுச்சு) நான் வேலை முடிந்து வரும்போது Putra LRT-யில் ஏறி வந்தேன். இடுப்பில் ஒரு கைக்குழந்தையையும், கையில் ஒரு 3 வயது குழந்தையையும் பிடித்துக்கொண்டு நிக்க முடியாமல் நின்றக்கொண்டிருந்தார். பத்து வருடத்துக்கு முன்பு இருந்ததுக்கும் இப்போதுக்கும் அதிக மாற்றம் இல்லை அவரிடம். ஆதலால் என்னால் சுலபமாக அடையாளம் கண்டுக்கொள்ள முடிந்தது. நானும் அங்கே நின்னுக்கொண்டிருந்தேன். உட்கார்ந்திருந்தால், நான் எழுந்து அவருக்கு என் இடம் கொடுத்திருக்கலாம் என்று மிகவும் வருத்தப்பட்டேன். அதனால், என்னால் முடிந்த அளவு அவருடைய மூனு வயது மகளை (என்னைபோல் ஒவ்வொரு முறையும் பிரேக் போடும்போது முன்னே விழுந்து எழுந்திருச்சி வந்தாள்) பிடித்துக்கொண்டேன். என்னால், அதை தவிர்த்து வேறெதுவும் உதவ முடியவில்லை. அவரை திரும்பவும் பார்ப்பேன், உதவுவேண் என்ற நம்பிக்கை எனக்கு இன்னும் இருக்கு!!!
அதே போல், யாருக்கு உதவி தேவைப் பட்டாலும் நான் முதல் ஆளாய் போய் நிற்பேன். அப்படி என்னால் அவருக்கு உதவ முடியும் என்றால் கண்டிப்பாய் உதவுவேன்.. வந்துவிடுவேன் (மறந்துவிடுவேன்)...
பொற்கொடி டீச்சர், உங்க வீட்டுப்பாடம் நான் சரியா செஞ்சிருக்கேனா? எனக்கு பாஸ் மார்க்கா? ஃபெயில் மார்க்கா? வந்து மார்க் போட்டு போகவும் டீச்சர்.. ;-)
மத்தவங்க ஏதாவது துப்பிறதுக்கு இருந்தா, கீழே துப்பிட்டு போலாம். :-)
அட.. ஒரு விஷயம் மறந்துட்டேனே!!! நான் யாராவது தேக்(Tag) பண்ணணும்ல??? எத்தனை பேரு டீச்சர்? ஓ! அஞ்சா?
ஓகே!!! இதோ நோட் பண்ணிக்கோங்க:
1- சிங்கபூரு வாலு துர்கா
2- சூடான் புலிகேசி.. ச்சீ புலி சிவா
3- பி.மு.க தல கார்த்திக்
4- செதுக்கல் மன்னன் தேவ்
5- நடைராஜா கோபிநாத்
ஃப்ரீயா இருக்கும்போது எழுதுங்க மக்கா!! வர்ட்டா!!!!
Posted by MyFriend at 1:48 PM 108 comments
Labels: Tag, அறிவுப்பூர்வமானவை (?), அனுபவம்
Thursday, March 08, 2007
168. எந்த பெண்ணும் விண்வெளியாளராய் ஆகலாம்
"பெண் புத்தி பின் புத்தி.."
"பெட்டை கோழி கூவி பொழுது விடியுமா?"
இப்படியெல்லாம் கேட்டு அடுப்பறையில் அடங்கிய பெண்கள் எனும் காலம் மாறி ஆண்களுக்கு நிகராக ஒவ்வொரு துறையிலும் சாதித்து காட்டுகிறார்கள்.
நேரு, காந்திக்கு நிகரா இந்திரா காந்தி அரசியலில் சாதனை படைத்தார்..
அண்ட்ரி அகாஸ்ஸியை (Andre Agassi) விட பிரமாதமாய் டென்னிஸ் விளையாடினார் ஸ்டெஃபி க்ராஃப் (Steffi Graph)..
கமர்ஷியல் உலகத்தை அப்பாற்ப்பட்ட உலகமான ஆன்மீகத்திலும் சமூக சேவைகளிலும் இவர்களது பணி பிந்தங்கவில்லை. அன்னை தெரசா, சாரதா தேவியைபோல் இன்னமும் ஒருவாகிக் கொண்டேதான் இருக்கிறார்கள்..
ஆனால், இதைதான் விரும்புகிறதா இந்த உலகம்? சாதிக்க துடிக்கும் எத்தனை பேருக்கு இந்த உலகம் முட்டுக் கட்டையாக இருக்கிறது? புன்னகை தேசம் படத்தில் ஒரு வசனம்.
"நாம் அந்த அலைகளை கடற்கரைலிருந்து பார்க்கிறோம். ஆனால், இந்த இளைஞர்கள் (பெண்கள்) அதில் குதித்து நீந்துகிறார்கள். அவர்கள் ஏறும் ஏணியை நாம் கீழே இருந்து கெட்டியா பிடித்தாலே, அந்த நம்பிக்கையில் அவர்கள் உச்சத்தை தொடுவார்கள். ஏன் நாம் அந்த ஏணியை ஆட்டி விட வேண்டும்?" : இது இளைஞர்களுக்கு மட்டும் பொருந்தும் ஒரு வசனங்கள் அல்ல. பெண்களுக்கும் இது தகும்.
ஒவ்வொரு பெண்ணுக்கும் யாராவது ஒருவர் ஆதரவு கொடுத்தால், இவர்கள் கண்டிப்பாக சாதிப்பார்கள். இதனால், ஆதரவு இல்லையென்றால் இவர்கள் சாதிக்க மாட்டார்கள் என்று நான் சொல்லவில்லை. அப்படியும் சிலர் சாதித்திருப்பார்கள். ஆனால் ஆதரவு இருந்தால், இவர்கள் அந்த சாதனையை வெகு சீக்கிரமாகவே செய்துவிடுவார்கள்.
இப்படி உலகமெங்கும் சாதித்த பலரை நாம் அறிந்திருப்போம். இன்றைய நாளில் நான் ஒரு பெண்மணியை இங்கே அறிமுகப்படுத்தலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். இவர் பெயர் வனஜா.
இவர் 1971-ஆம் ஆண்டில் கூலிமில் பிறந்தவர். படிப்பிலும் விளையாட்டிலும் சிறு வயதிலிருந்தே அதிக ஆர்வம் காட்டியவர். பெண்ணுக்கும் ஆணுக்கும் வித்தியாசம் என்ன என்று கேட்டவர். சின்ன வயதிலேயே தன் அண்ணன்களுடனும் அண்ணனின் நண்பர்களுடனும் அவர் ஊரில் பந்து விளையாடியவர். அந்த சின்னஞ்சிறு வயதிலேயே ஆண்கள் எதை செய்தாலும், அவை தன்னாலும் செய்யமுடியும் என்று முயற்சி செய்தவர். பலர் "நீ பொண்ணு. அடக்க ஒடுக்கமாய் இரு!"ன்னு தடுத்தனர். அவர் குடும்பமே தடுத்தும் இருகின்றனர். ஆனால், நாளடைவில் இவரது ஆர்வத்தை பார்த்து இவர் குடும்பம் அவருக்கு முழு ஆதரவும் தந்தது.
எஸ்.பி.எம் தேர்வில் சிறப்பான தேர்ச்சி பெற்றார். இவரது கனவு உலகம் சுற்ற வேண்டும் என்பதே! இவர் விமானியாக வேண்டும் கனவு கண்டார். அப்பொழுது இருந்த சூழ்நிலையில், அவரது குடும்பம் இவரது படிப்பிற்க்காக அதிக செலவு செய்ய முடியாததால், பொறியியல் துறையில் தன் மேல்கல்வியை தொடர்ந்தார். மலாயா பழ்கலைக்கழகத்தில் 1996-ஆம் ஆண்டு சிறந்த முறையில் தேர்ச்சி பெற்று ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியியலாளராய் சேர்ந்தார்.
ஆனாலும், அவர் எப்போதும் போல விளையாட்டிலும், மற்ற விஷயங்களிலும் கவனம் செலுத்தினார். பல பயிற்சிகளை மேற்க்கொண்டார்.
2003-ஆம் ஆண்டில் ரஷ்யாவுக்கும் மலேசியாவுக்கும் நடந்த ஒரு பேச்சுவார்த்தையில் ரஷ்யா விண்வெளி ப்ராஜெக்ட் 2007 (Russian Space Project 2007)-இல் ஒரு மலேசியரை விண்வெளிக்கு அனுப்ப முடிவெடுக்கப்பட்டுள்ளது. மலேசியா இனிமேல் ஒரு விண்வெளி ஆராய்ச்சி கழகம் உருவாக்கி, விண்வெளிக்கு போகுவதற்கு இன்னும் பல வருடங்கள் தேவைப்படும். ஒருவராவது இதில் கலந்துக் கொண்டால், அது மலேசியாவுக்கு ஒரு பலமாக அமையுமென முடிவெடுத்து மலேசியர்களுக்கு அறிவித்தது.
கலந்துக்கொண்டவர்களின் எண்ணிக்கை 11 275. ஒவ்வொரு தேர்வுக்கு பிறகும் இந்த எண்ணிக்கை குறுக குறுக.. 62 பேர் ஆகியது. அதில் இரண்டே பெண்கள். ஒருவர் வனஜா. இன்னொருவர் ஒரு மலாய்க்கார பெண்மணி.
இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், பல தேர்வுகளுக்கு பிறகு 8 பேரே தேர்வு செய்யப்பட்டனர். இதில் வனஜா ஒருவரே பெண். விமானியாகி ஆகாயத்தில் பறக்க வேண்டும் என்று கனவு காண்டவர், இப்போது அதையும் தாண்டி இன்னும் மேலே பறக்க வேண்டும் என்ற வெறி. அதுவே 10 000 பேரையும் தாண்டி இந்த 8 பேரில் ஒருவராய் வர முடிந்தது.
மற்றவர்களின் எதிர்ப்புகளைத் தாண்டி இது வரையிலும் வந்த பிறகுதான் அனைவரின் கண்களும் இவர் மேல் பட்டது.அந்த பதினாறு பேரில் ஒரே தமிழராய் இருந்தார். அது நம் சமூகத்துக்கு கிடைத்த ஒரு பொக்கிஷமாய் எல்லாரும் அவரை பாராட்டினர். பிறகுதான் அவர் அந்த நிலமைக்கு வர காரணங்களும் அவர் பட்ட கஷ்டங்களும் தெரிய வந்தது.
ஒரு விண்வெளி ஆராய்சியாளராய் ஆவது சுலபமல்ல. அதுவும் முதல் மலேசிய விண்வெளியாளராய் ஆவதென்றால் பல நூறு இன்னல்களை தாங்கவேண்டும்.. அவர் கடந்த பல தடைகளில் சில:
அந்த 18 பேருக்கும் கடுமையான பயிற்சிகள் (Survival Training) லூமூட்டில் வழங்கப்பட்டன. இது தொடர்ந்து 35 மணி நேரம் நடந்தது. மீதி 7 ஆண்கள். ஆனதால், இவர் தான் ஒரு பெண் என்றும், அதற்கு தனியாக சில சிறப்பு வசதிகள் வேண்டும் என்றும் அவர் கேட்கவில்லை. விண்வெளியில் எல்லாருமே சமம்தான். இதுவே செய்ய முடியவில்லையென்றால் எங்கு போய் என்ன செய்யமுடியும் என்று மனதுக்குள் நினைத்து, ஆண்கள் என்னென்ன செய்ய முடியுமோ அதெல்லாவற்றையும் தானும் செய்து காட்ட வேண்டும் என்று முடிவெடுத்தார்.
முதல் நான்கு மணி நேரம் (விடியற்காலையில்) குழு விவாதம் நடைப்பெற்றது. கூடவே தூக்கமின்மான்மையை தாங்கும் சக்தி இவர்களுக்கு எவ்வளவு இருக்கிறது என்ற ஒரு சோதனையும் செய்தார்கள். பிறகு இவர்களை ஒரு வேகமாய் செல்லும் கப்பல் (speed boat)-இல் நடு கடலுக்கு கொண்டு சென்றனர். கப்பல் வேகமாய் சென்றுக் கொண்டிருக்கும்போது இவர்களை கடலில் குதிக்கச் சொன்னனர். கப்பல் வேகமாய் சென்றுக்கொண்டிருக்கும்போது கடல் அலைகள் இரண்டு பக்கமும் பிளந்து கொண்டு போகும். அப்போது நாம் கடலில் குதிப்பது ஒரு ஆபத்தான தருணம். இவரும் மற்றவர்களைப்போல் (சிலர் குதிக்க பயப்பட்டனர் என்று இங்கே சொல்லியே ஆகவேண்டும்) குதித்து கடலில் மிதந்து, கடலில் கவிழ்ந்து கிடக்கும் படகை நேராய் நிமிர்த்தி, அதில் ஏறி கடற்கரையை அடைய வேண்டும். பிறகு தன் உடைகளை மாற்றி (மரத்துக்கு பின்னால், இவர் ஒருவரே அங்கே பெண். இவர் மட்டும் அறையில் சென்று மாற்றிக்கொண்டு வந்தாரானால் நேரம் விரயமாகும் என்பதால்), காடு கண்கானித்து (Jungle Tracking) சென்று (திசைமானியும் வரைப்படம் துணையுடன் மட்டும்) மாலை 6 மணிக்கு ஓரிடத்தில் முகாமிட்டனர். ஒரு 20 நிமிட ஓய்வுக்கு பிறகு, இவர்களை ஒரு வண்டியில் ஏற்றி ஒரு இடத்துக்கு கொண்டு சென்று அங்கே இருந்து ஒரு 30 நிமிடங்கள் நடந்தார்கள். அது ஒரு செம்பனைத் தோட்டம். அப்போது மணி இரவு 11.
செம்பனைத்தோட்டத்தில் பாம்புகள் நிறையவே இருக்கும். அதுவும் சில செம்பனைத் தோட்டங்கள் காடுகளுக்கு பக்கத்தில் இருக்கும். அதில் பாம்புகளைத் தவிர்த்து மற்ற பயங்கர காட்டு விளங்குகளும் அதிகம் இருக்கும். அங்கே சாலை விளக்குகள் இருக்காது. ஒரே கும்மிருட்டு. பக்கத்தில் யார் இருக்கிறார்கள் என்பது கூட தெரியாது. இவரை அந்த கரடு முரடான இடத்தில் படுக்கச்சொன்னார்கள். சில நிமிடங்களில் இவர் யாரோ குறட்டை விடுவது போல குரல் கேட்டது. அப்போதுதான் பக்கத்தில் யாரோ படுத்திருக்கிறார்கள் என்று அவாரல் உணரவே முடிந்தது. யாரோ அவர்களை சுற்றி சுற்றி நடப்பது அவரால் அறிய முடிந்தது.
அந்த இரவு குளிரில் அவர் நடுங்க ஆரம்பித்த போது இவர் கையை ஒருவர் பிடித்து இழுத்து ஒருவர் முன் கொண்டு சென்று விட்டார். ஒரு உருவம் வெள்ளையில் போர்த்தியபடி அங்கே உட்கார்ந்திருந்தது. அவர் இவர் முகத்தில் புனித நீரை தெளிக்கப்பட்டது. அதன் பிறகு அந்த நபர் இவர் கையை பிடித்து கூட்டிக்கிட்டு போய் ஒரு கயிறில் இவர் கையை வைத்தார். அந்த கயிறை பிடித்து சொந்தமாக செல்ல சொல்லி அவர் கட்டளையிட்டார்.
அந்த கயிறே அப்போழுது அவருடைய வாழ்க்கை.. அந்த இருட்டில் இருந்த ஒரே வெள்ளை புருள் அந்த கயிறு மட்டுமே! அதை தவிர்த்து வேறெதுவும் அவர் கண்களுக்கு தெரியவே இல்லை. நடந்தார்.. நடந்தார்.. நடந்துக்கொண்டே இருந்தார். அங்கே ஒரு உருவம் படுக்கவைக்கப்படிருந்தது. அந்த உருவம் தலை முதல் கால் வரை முழுவதுமாக ஒரு வெள்ளை துணியில் (மலாயில் இதை காயின் காப்பான் (Kain Kapan) என்று சொல்வார்கள்) சுற்றப்பட்டிருந்தது. இஸ்லாமியர்கள் இறந்தால், அவர்களின் உடலை இப்படித்தான் கட்டுவார்கள். இவர் அதன் பக்கத்தில் போனார். அந்த பிணத்தின் மேல் ஒரு காகிதமும் ஒரு பேனாவும் இருந்தது. அதில் அவர் பெயரை எழுத சொல்லி இருந்தது.
சுற்றும் முற்றும் திரும்பி பார்த்தார். அவர் கண்களில் பட்ட பொருள்கள் அந்த கயிறும், அந்த பிணமும் மட்டும்தான். ஒரு கையில் அந்த கயிறை பிடித்துக்கொண்டு இன்னொரு கையில் அவர் பெயரை எழுதினார். அவர் தனது இரண்டாவது "A" எழுதும்போது அவர் தடுமாறி அந்த எழுத்தும் கிறுக்கலைப்போல் ஆனது. ஒரு பிணத்துடன் மட்டுமே அவர் இருப்பதால் ஒரு பயம்தான் காரணம். பிறகு அதே கயிறை பிடித்து நடக்க ஆரம்பித்தார்.
திடீரென்று அவரது கால் மூழ்க ஆரம்பித்தது. முட்டிவரை மூழ்கிவிட்டது. அது ஒரு சதுப்பு நிலம். அந்த கயிறு ஒவ்வொரு தடைகள் இருக்குமிடமும் ஒரு சுறுக்கமிடப்பட்டிருந்தது. அங்கேதான் இவர் பாறை மேலிருந்து விழுந்தார்; இரண்டு முறை அவர் காலணிகளை தொலைத்தார்; அவர் கைகளை அந்த சேற்றில் விட்டு தடவி தேடி கண்டுபிடித்து அணிந்தார். இங்கெ இவருக்கு கிடைத்தவை: கீறல்கள், உமையடிகள், தழும்புகள், ரத்தம் உறிஞ்சிய அட்டைகள். (இவையணைத்தும் மறுநாள் விடிந்ததும்தான் அவரால் பார்க்கமுடிந்தது.)
அந்த சேற்றை தாண்டி சில நேரத்துக்கு பிறகு அந்த கயிறு முடிவடையும் இடத்துக்கு வந்து சேர்ந்தார். அது ஒரு பள்ளம். நீரோடும் சத்தம் அவரால் கேட்க முடிந்தது. அது ஒரு ஆறு என உணர்ந்தார். அதில் குதித்து தலை முதல் கால் வரை முக்கி எழுந்தார். அந்த இருட்டில் இரு குரல் கேட்டது. அவரது பெயரையும் எண்ணையும் கேட்டனர். இவர் சொன்னதுக்கு பிறகு, இவரை ஒருவர் கைகொடுத்து அந்த ஆறிலிருந்து வெளியேற்றினார். இன்னொரு அரை மணிநேரம் அதே சேற்றில் உட்கார்ந்திருந்தார். (அவர் நண்பர்கள் முடித்து வர காத்திருந்தார்).
எல்லாரும் முடித்த பிரகு, இவர்கள் படகு கப்பலில் ஏறி கப்பல்படை கப்பலுக்கு சென்று, அங்கிருந்து அவர்கள் அறைக்கு திரும்பினர்.
இவையணைத்தும் நம்மால் கேட்கத்தான் முடிந்தது. ஆனால், செய்திருக்க முடியுமா என்று தெரியவில்லை. இதை தவிர்த்து எத்தனையோ சோதனைகள் இவர் தாண்டினார். எட்டு பேரிலிருந்து 4 பேரை தேர்வு செய்தனர். இவர் அந்த நாளில் ஒருவர். இவர்கள் நால்வரும் ரஷியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கே பல பயிற்சிகளை மேற்க்கொண்டனர். அப்போதும், அந்த நால்வரில் இவர்தான் முதன்மையாக இருக்கிறார் என்று தகவல் கிடைத்தது. அதுமட்டுமல்லாமல், ரஷ்ய மொழியை வெகு எளிதாக கற்றுக் கொண்டார் என்றும் தகவல் தெரிந்தது. ஆனால், சில சோதனைக்குப் பிறகு, இவருக்கு பூஜ்யம் புவியீர்ப்பு விசை தேர்வில் இவர் கஷ்டப்பட்டதாலும், இன்னொருவருக்கு மருத்துவ சோதனையில் சில கோளாறு இருப்பதனாலும் நீக்கப் பட்டனர்.
இப்பொழுது மீதி இருவர் இன்னும் ரஷ்யாவில் பயிற்சியை மேற்கொண்டிருக்கின்றனர். மலேசிய விண்வெளி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஷேய்க் முசாப்பார் ஷுகோர், 35. இவர் ஒரு மருத்துவர். பேக்-உப் (Back-up) விண்வெளி வீரராக பாயிஸ் காலிட், 26, ராணுவ பல் மருத்துவர்.
வனஜா அவர்கள் மலேசிய விண்வெளி கழகத்தில் ஆராய்சியாளராய் வேலை செய்கிறார். மலேசியாவில் விண்வெளி அறிவியலை பற்றி கண்காட்சிகளை நடத்துகிறார். தன்னைப் போல் மற்றவர்களும் முன்னேற வேண்டும்; தைரியமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.
இவரைப்போல் எத்தனையோ சாதனை பெண்கள் இருந்தாலும் இன்று இவரைப் பற்றியே பேச வேண்டும் என உள் மனதில் சொன்னதால் எழுதிய ஒரு கட்டுரை. இவரின் வீரம், விவேகம் மற்ற பெண்களும் கடைப்பிடிப்பதால் அவர்கள் வாழ்விலும் ஏதாவது சாதிக்கலாம். இவரது சாதனை மென்மேலும் உயர வேண்டும் என்று நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இதை எழுதும்போதுதான் எனக்கு ஒரு விஷயம் தெரிய வந்தது. வனஜாவும் நம்மைப்போல் ப்ளாக் எழுதுகிறார். அவருடைய அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துக்கொள்ள எழுதுகிறார். அவைகளை படிக்க இங்கே (http://angkasawancandidate.blogspot.com/) சொடுக்கவும்.
பெண்கள் தினத்தை முன்னிட்டு மதி கந்தசாமி அவர்கள் 1 வாரத்துக்கு முன்பே பெண் பதிவர்களை அன்புடன் அழைத்து ஒரு பதிவு எழுதச் சொன்னார்.
இது என்னுடைய படைப்பு. அதே போல், இன்று மற்ற பெண் பதிவர்களின் வலைகளிலும் இதை விட அருமையான படைப்புகள் உங்களுக்கு விருந்தாக அமையவிருக்கின்றன.
/******************************
இதுவும் படித்து பாருங்க:
மலேசியா பெண்கள் - துர்கா
*******************************/
Posted by MyFriend at 12:12 AM 62 comments