Monday, January 28, 2008

நூரின், ஷர்லினி, அன்பரசி போன்ற குழந்தைகள் கடத்தலும் வீரத் தமிழ்ப்பெண்ணும்


நூரினின் மரணம். யாரருடைய தவறு? - இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு அக்டோபர் 2007-இல் நான் எழுதிய பதிவு.

இதற்க்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாயிற்று. கடத்தல்காரனை / கொலைகாரனை கண்டுபிடித்தாயிற்று என்று சொல்ல எனக்கும் ஆசைதான். ஆனால், இல்லை இல்லை.. இன்னும் கண்டுபிடிக்கவே இல்லை! என்றே சொல்லவேண்டிய கட்டாயம் இப்பொழுது!


நூரினின் கேஸையே தீர்க்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கும் காவல்துறையினருக்கு இன்னொரு சவால் விடப்பட்டுள்ளது. ஷர்லினி என்ற 5 வயது குட்டி பாப்பாவும் கடந்த ஜனுவரி ஒன்பதாம் தேதி கடத்தப்பட்டாள். பெட்டாலிங் ஜெயாவில் தன் வீட்டின் அருகாமையிலுள்ள விளையாட்டு மைதானத்தில் காணாமல் போனதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இன்றுடன் 18 நாட்கள் ஆகின்றது.

காவல்துறை, மீடியாக்கள், மக்கள் என்று நாலாபுறமும் தேடிக்கொண்டேதான் இருக்கின்றனர்.. ஆனால்...... இன்றுவரை கிடைக்கும் ஒரே பதில்: காணவில்லை! மட்டுமே!


இதே மாதிரி ஒரு சம்பவம் தைப்பூசத்துக்கு இரண்டு நாள் முன்பு பாசிர் கூடாங்கிலும் நாட்ந்திருக்கிறது. திருமதி சரஸ்வதி என்பவர் தன் 4 வயது மகள் அன்பரசியை அழைத்துக்கொண்டு அவர் வேலை செய்யும் இடத்துக்கு நடந்து செல்லும்பொழுது, திடீரென பின்புறமாக மோட்டார் சைக்கிளில் கவச தொப்பி அணிந்திருந்த இருவரில் ஒருவன் இவரை உதைத்து இடது காது புறம் குத்தி கீழே தள்ளியிருக்கான்.

இவர் கீழே விழுந்ததும் அவன் அன்பரசியை தூக்கி பின்னால் வந்த நீல நிற பழைய காரின் உள்ளே தள்ளி கதவை மூட முயன்றான். நல்ல வேளையாக திருமதி சரஸ்வதி சீக்கிரமாக சுதாகரித்துக்கொண்டு உடனே எழுந்து ஓடி ட்ரைவர் இருக்கையில் அமர்ந்திருந்தவனின் முகத்தில் குத்தி தனது மகளை காரிலிருந்து மீட்டிருக்கிறார். ஆனாலும், மோட்டார் சைக்கிளில் வந்தவன் அவரை தாக்கி அன்பரசியை கடத்த முயன்ற போது அவனை எத்தி, உதைத்து தன் மகளை காரிலிருந்து இழுத்து வெளியே தள்ளியதாகவும் இந்த சம்பவத்தில் தன் மகளுக்கு சில சீராய்ப்பு காயங்கள் ஏற்ப்பட்டுள்ளது என்றும் சொல்லியிருந்தார்.


"கடத்தல்காரர்களிடமிருந்து எப்படித் தான் என் மகளை காப்பாற்றினேன் என்று எனக்கு தெரியவில்லை என்றும் என் உயிரை ஒரு பொருட்டாக நான் நினைக்கவில்லை. எப்படியாவது என் மகளை அவர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமே என் மனதில் இருந்தது" என்று அவர் பத்திரிக்கைகளிடம் தெரிவித்தார்.

இதைச் சொல்லும்பொழுது, கடந்த பொங்கலன்று நானும் என் சகோதரர்களும் ஒரு சீன ஒட்டுக்கடையில் இரவு உணவு உண்ண சென்றபொழுது பார்த்த ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது. இரவு ஒரு 10-11 மணி இருக்கும். நாங்கள் போனது ரோட்டரத்தில் அமைந்த ஒரு ஒட்டுக்கடை. சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது திடீரென்று அலறும் ஒரு சத்தம். அதையடுத்து ஒரு கார் வேகமாக போவதும் பின்னால் சிலர் ஓடுவதுமாக இருந்தது. என்ன நடக்குதுன்னு போய் பார்த்தால், அங்கே ஒரு 3 வயது குட்டிபெண் கத்தி அழுதுக்கொண்டிந்தாள்.

என்ன நடந்து என்று விசாரிக்கையில் கார் அந்த பெண்ணின் கால் மீது ஏறிவிட்டது என்று சொன்னார்கள். உடனே ஒருவர், "சின்ன பிள்ளையை ஏன் தனியா விட்டீங்க? தூக்கிட்டோ, இல்ல கை பிடித்தோ கூட்டிட்டு வந்திருக்கலாம்ல?" என்று கேட்டார். அது நியாயமான கேள்விதான். ஒரு க்ரூப்பா 7-8 பேர் ஒன்னா வந்தாங்க. அதில் ஒருவர் கூடவா கைப்பிடித்து கூட்டிட்டு வர மறந்திருப்பாங்க?

அந்த பெண்னை தூக்கும்போது அவள் பாதம் உள்ள எழும்பு காலில் தொங்கிக்கொண்டு இருந்தது. குண படுத்துவது ரொம்ப கஷ்டம் போல் இருந்தது அவளுடைய நிலை. உடனே மருத்துவமனைக்கு தூக்கிட்டு ஓடுனாங்க. என் கேள்வி: இதை குண படுத்த முடியவில்லையென்றால், இந்த ஒரு சம்பவத்தால் வாழ்க்கை முழுக்க ஊனமாக திரிய வேண்டுமா இந்த பெண் பிள்ளை?

பி.கு: இம்சை அங்கிளின் ஜில்லுனு ஒரு Tag என்ற சீரியஸ் பதிவுக்காக...

11 Comments:

said...

மலேஷியாவுலயும் இப்படி தானா?... வருத்தமளிக்கும் விசயம்..:( அதேசமயம் துணிச்சலாக போராடி,மகளை மீட்ட தமிழ்ப் பெண்ணுக்கு ஒரு சபாஷ்.

said...

ஆகா மை ப்ரெண்ட் நீயும் சீரியசா பதிவு போட ஆரம்பிச்சுட்டியா? நல்ல விசயம்தான்.
இந்த மாதிரி குழந்தை காணமல் போகும் சம்பவங்களில் அதிகபட்சம் பெற்றோர்களின் அலட்சியம்தான் காரணமாக இருக்கிறது. இதை தவிர்க்க பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை முடியந்தவரை தனியாக அனுப்புவதை தவிர்க்க வேண்டும் அதே சமயம் காவலர்களின் கண்காணிப்பு ரொம்ப முக்கியம்.

said...

ஜாக்கிரதையாக வீதிகளில் செல்லும் வயது வரும்வரை குழந்தைகளின் மேல் அதிக கவன் செலுத்தியிருக்க வேண்டிய கடமை உடன் வந்தவர்களுக்கு இருந்தது.சில சமயங்களில் வாகன ஓட்டிகள் கவனமாக வந்தாலும்,துறுதுறுவென ஓடும் குழந்தைகள் தாமாக விபத்துக்களில் சிக்கிக்கொள்ள வாய்ப்புகள் அதிகம்.விபத்து காரணத்திற்க்கு குழந்தையோடு வந்தவர்களுக்கும் பங்கு உண்டு என்பதை மறுக்க முடியாது..
சின்ன அலட்சியம் ,அந்த பிஞ்சு குழந்தையின் எதிர்காலத்தையே,மனதளவில்,உடலலவில் எவ்வளவு நிரந்தர பாதிப்புக்களை தரும் என்பதை பெரியவர்கள் புரிந்துக்கொள்ளட்டும்.
என்னுடன் படித்த தோழி ஒருவள், சிறு வயதில் விளையாட்டாய் அவளை பயம்புறுத்த, அவள் அண்ணன் அவளை டுவிலரில் வண்டியில் வேகமாக ஓட்டி விளையாட,பயந்துப் போன அவள்,கீழே குதித்து கண்ணத்தில் ஆழமாக கிழிந்த வடு.இந்த வயதிலும் மனதளவில் அவளுடைய தன்னம்பிக்கையை எவ்வளவு பாதித்தது என்பதை கண்கூடாய் கண்டோம். நாளு பேர் கூடு இடத்திற்க்கு வர வெக்கப் படுவாள்.புகைப்படம் என்றாள் அவள் மட்டும் கண்ணத்தை மறைக்க தர்ம சங்கடப் படுவாள்.பேசும்போது கூட யாராவது அவள் கண்ணத்து வடுவை கவனித்தால். பேச்சை தொடற முடியாமல்,கண்கள் கலங்கி...
சமிபத்தில் தான் அவள் கல்யாணம் முடிந்தது,மனதை மட்டுமே பார்த்த மாப்பிள்ளை...நல்லபடியாக இருக்கிறார்கள் இப்போ..
இதுக்கே இப்டின்னா.. கால் ஊனம் ஆனால்,அதுவும் பெண் பிள்ளைக்கு.. ரொம்ப கஷ்டமா இருக்குங்க...அந்த குழந்தைக்கு நல்லபடியா குணமாக பிராத்திப்போம்..

said...

எல்லா ஊரிலும் இது சகஜந்தான் போலும்..

said...

ம்ம்ம்... என்னன்னமோ நடக்குது.. என்னத்த சொல்ல..

said...

thats so bad.

We have to be more carefull nowadays i guess..

நட்போடு
நிவிஷா..

said...

இனியும் மலேசியாவிலுள்ள பெற்றோர்கள் குழந்தைகளைத் தனியே விடக்கூடாது. இவற்றைப் பாடமாக எடுத்துக்கொள்ளவேண்டும். நம்மூரிலும்தான்... 2006ல் ஊருக்குப் போயிருந்தபோது நண்பர் ஒருவர் வீட்டுக்கு, அவர்கள் வீட்டுக்கு எதிர்வீட்டுக் குழந்தை (2 வயதுதான் இருக்கலாம், 3 கூட ஆகவில்லை) மதியம் தானாகவே தெருவைக் கடந்துவந்ததைப் பார்த்து அரண்டுபோய்விட்டேன்!

Anonymous said...

"நூரின், ஷர்லினி, அன்பரசி போன்ற குழந்தைகள் கடத்தலும் வீரத் தமிழச்சியும்" எனப் போட்டிருந்தால் கூட hit கிடைத்திருக்கும்.

Anonymous said...

குழந்தைகளுக்கு கூட தற்காப்பு கலை சொல்லி கொடுக்கனும் போலிருக்கு. :(

said...

போராடி மகளை மீட்ட அந்த வீரத்தமிழ்பெண்ணுக்கு ஒரு சல்யூட்

said...

//
Anonymous said...
"நூரின், ஷர்லினி, அன்பரசி போன்ற குழந்தைகள் கடத்தலும் வீரத் தமிழச்சியும்" எனப் போட்டிருந்தால் கூட hit கிடைத்திருக்கும்
//
:))))))))
ROTFL