Saturday, January 26, 2008

மொக்கை 2008

அடடடடடடடா......

2008 ஆரம்பமே டேக்கோ டேக் ஃபோபியாங்கிற நோய் இங்கே எல்லாருக்கும் பரவிடுச்சாமே? என்னையும் மதிச்சு சிலர் டேக் பண்ணியிருக்கீங்க. ஆனால், இப்போ எனக்கு இருக்கிற ஒரே பிரச்சனை யாரு என்ன டேக்குக்காக என்னை கூப்பிட்டதுன்னு மறந்துபோச்சு.. (பின்னே எப்படி ஞாபகம் இருக்கும்? எப்போதும் தேன்கிண்ணதுலேயே கதின்னு கெடக்கிறன்னு சொல்றீங்களா? ம்ம்.. அதுவும் சரிதான்!). எந்த டேக், யாருன்னு தெரியாமல்தான் இன்று வரை ஒரு டேக்கும் நான் எழுதவில்லை.

இப்போ இதை படிக்கிறவங்க என்ன பண்ணனும்ன்னா என் பெயர் எந்த பதிவுல எந்த டேக் எழுத சொல்லி மாட்டியிருக்கோ, அதெல்லாம் இன்ந்த பதிவின் பின்னூட்டதுல தெரிவிச்சிட்டீங்கன்னா ஒன்னொன்னா போட்டு முடிச்சிடுறேன். டீல் ஓகே?

சரி.. இந்த பதிவு ஒரு டேக் பதிவுதான். பொடியன் @ சஞ்சய் ஒரு நாள் ஈமெயில் பண்ணி உங்களை டேக் பண்ணிட்டேன். மறக்காமல் பதிவு போடுங்கன்னு ஈமெயில் ரிமைண்டரா அனுப்பிட்டே இருந்தார். இப்போ அவரும் மறந்துட்டார் போல.. ஆனால், ரசிகன் என்ன பண்ணார் தெரியுமா? அவரும் அதே டேக் எழுதி என்னையும் மாட்டி விட்டு தினமும் பதிவு எங்கே பதிவு எங்கேன்னு ஒரு unofficial ரிமைண்டராவே மாறிட்டார்.. (ஹீஹீஹீ).

உடனே நான் அவர்கிட்ட கேட்ட கேள்வி: "சார், என்ன டேக்? என்ன எழுதணும்?"

அவரோட பதில்: "மொக்கை மட்டுமே போடணும்"

நீங்களே சொல்லுங்க.. நான் யாரோட பேச்சாவது மீறீயிருக்கேனா? அவர் மொக்கை மட்டுமே போடணும்ன்னு சொன்னதுனால நானும் மொக்கை மட்டுமே போடுறேன். ரசிகன் & சஞ்சய்.. என்னுடைய மொக்கை கீழே:

30 Comments:

said...

அவ்வ்வ்வ்வ்....... மைபிரண்டு கலக்கிட்டிங்க போங்க.. இதுவல்லவோ அசல் மொக்கை...:))))))))

said...

////ரசிகன் என்ன பண்ணார் தெரியுமா? அவரும் அதே டேக் எழுதி என்னையும் மாட்டி விட்டு தினமும் பதிவு எங்கே பதிவு எங்கேன்னு ஒரு unofficial ரிமைண்டராவே மாறிட்டார்.. (ஹீஹீஹீ).

உடனே நான் அவர்கிட்ட கேட்ட கேள்வி: "சார், என்ன டேக்? என்ன எழுதணும்?"//


என்னவோ கேட்ட உடனே ஒத்துக்கிட்ட மாதிரியில்ல சொல்லறிங்க.. என்ன நடக்கும்ன்னு தெரியாது(ஹிஹி அதான் தெரியாதுன்னுடோம்ல்ல..)..ஆட்டோ வரும்ன்னெல்லாம் மிரட்டியெல்லாம் தானே இப்படி கேட்டிங்க..:P

said...

//நீங்களே சொல்லுங்க.. நான் யாரோட பேச்சாவது மீறீயிருக்கேனா? அவர் மொக்கை மட்டுமே போடணும்ன்னு சொன்னதுனால நானும் மொக்கை மட்டுமே போடுறேன்///

அவ்வ்வ்வ்வ்......ஃமைபிரண்டு,உங்க நட்பைக் கண்டு அப்படியே புல்லரிச்சுப் போச்சுங்க..
நன்றிகள் ,நன்றிகள், நன்றிகள்...

said...

மைஃபிரெண்டக்கா இந்த ரசிகன் மாமா செய்யறது நல்லாயில்லை.

நம்மளையெல்லாம் "மொக்கை" போடுன்னு சொன்னா என்ன பண்றது.

இப்படி சொல்லி நம்மளையெல்லாம் சீரியஸ் பதிவாளர் ஆக்குறார்

உஷாரா இருக்கனுங்க்கா

said...

பொக்கைன்னு தலைப்பிட்டு படம் போட்டு இன்னிக்கு தலைப்பிடலாமின்னு இருந்தேன்...

தமிழூற்றில் இப்போது வீடியோ, படம் இடுகைகளிலிருந்து எடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படுகிறது.

இதப்பாருங்களேன்...
http://techtamil.in/feed/engineer2207

said...

சரி..மொக்கை..

said...

ஹாஹா! நல்லா தான் காமெடி செய்யறீங்க...

said...

இது மாதிரி யாரும் கலர்புல்லா மொக்கை போட்டது இல்லை..
பின்னிட்டீங்க..

மொக்கை ஆதரவுப் படை said...

இது மொக்கைனா அப்ப உண்மையான மொக்கையை என்னவென்று சொல்வது

மொக்கை ஆதரவுப் படை said...

இது போன்ற அழகில்லாத மொக்கையைப் போடும் மை பிரண்ட் வாழ்க!

மொக்கை ஆதரவுப் படை said...

//2008 ஆரம்பமே டேக்கோ டேக் ஃபோபியாங்கிற நோய் இங்கே எல்லாருக்கும் பரவிடுச்சாமே? //
ஐயோ பாவம்! மலேசியால நல்ல ஆஸ்பத்திரி இருக்கோ இல்லையோ?

மொக்கை ஆதரவுப் படை said...

//ஆனால், இப்போ எனக்கு இருக்கிற ஒரே பிரச்சனை யாரு என்ன டேக்குக்காக என்னை கூப்பிட்டதுன்னு மறந்துபோச்சு.//
இந்த வியாதியுமா இருக்கு? அச்சச்சோ!

மொக்கை ஆதரவுப் படை said...

//உடனே நான் அவர்கிட்ட கேட்ட கேள்வி: "சார், என்ன டேக்? என்ன எழுதணும்?"

அவரோட பதில்: "மொக்கை மட்டுமே போடணும்"//
நல்ல கேள்வி பதில்

மொக்கை ஆதரவுப் படை said...

//Blogger நிலா said...

மைஃபிரெண்டக்கா இந்த ரசிகன் மாமா செய்யறது நல்லாயில்லை.//
வாம்மா நிலா! நீங்க ஒன்னும் மொக்கை போடலையா?

மொக்கை ஆதரவுப் படை said...

இவ்வளவுக்கும் காரணமான ரசிகனை என்ன செய்வதுனு தெரியலையே?

மொக்கை ஆதரவுப் படை said...

மொக்கைகளில் பெரிய மொக்கையை எதிர்பார்த்து வந்த எங்களை ஏமாற்றி விட்டீர்களே?

மொக்கை ஆதரவுப் படை said...

இனி மேல் நல்ல மொக்கையா போடுங்க பார்க்கலாம். மொக்கைக்கே மொக்கையா?

மொக்கை ஆதரவுப் படை said...

//மொக்கை 2008//
மொக்கை 2007 என்று இருந்தால் நன்றாக இருக்கும்.

மொக்கை ஆதரவுப்படை said...

இப்பதான் 19 ஆ? ம் இன்னும் கொஞ்ச நேரம் பார்க்கலாம், யாராவது வராமலா போவாங்க?

மொக்கை ஆதரவுப் படை said...

என்னப்பா இது யார்ரையும் காணோம்! நாம தான் தொடரணுமா? ம். ஸ்டார்ட் மீஜிக்

மொக்கை ஆதரவுப் படை said...

ஏன் மை பிரண்ட் இப்படியெல்லாம் மொக்கை போடுறான்ன்னு யோசிச்சு யோசிச்சு மண்டைல இருக்குற கொஞ்ச முடியும் கொட்டிப் போச்சப்பா.

மொக்கை ஆதரவுப் படை said...

ஒரு வேளை அடிக்கடி பாலைத்திணைல கவுஜ படிச்சதில இப்படி ஆயிருக்குமோ?

மொக்கை ஆதரவுப் படை said...

எல்லா இடத்திலயும் போய் டஜன் கணக்குல பின்னூட்டம் போட்டனால இருக்குமோ?

said...

இது நல்லா இல்லே சொல்லிபுட்டேன். ஏற்கனவே 8 போட்டதும் இப்படித்தான்.

மொக்கை ஆதரவுப் படை said...

குவாட்டர் நாந்தான்

said...

ம்ஹூம்..இது எல்லாம் செல்லாது...;)

said...

மொக்கைலயும் கலர் மொக்கையா? ம்.. நடத்துங்க...

said...

ஹ்ம்ம்ம்.. ஏற்கனவே 8 போடச் சொல்லி இப்படித்தான் நான் வாங்கிக் கட்டிகிட்டேன்! :(
ரசிகன்.. பொடியன் வாழ்த்துக்கள்!

said...

ஹலோ.. மைபிரண்ட்.. உங்க பதிவ நான் இதுக்கு முன்னாலயே படிச்சு இருக்கேன்.. ஆனா இப்ப தான் முதல் முறை கமெண்டறன்.. லைக் யுர் ஸ்டைல் of humour :)

நான் புதுசா ஒன்னு ஆரம்பிச்சு இருக்கேன் அக்கா.. வந்து எட்டி பாருங்க..நேரம் கிடைக்கையிலே..

நன்றி,
நிவிஷா..

said...

nalla eludhunaaangaiah tag :P