Thursday, December 28, 2006

148. மாய Blackout

இயற்கையில் சீற்றம் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே போகிறது. அதுவும் வருட கடைசியில் பெரிய பெரிய பேரிடர்கள் வருவது இப்போது சகஜமாகியுள்ளது. கடந்த வருடங்களில் டிசம்பரில்தான் நிலநடுக்கமும், சுனாமியும், ஹர்ரிகேனும் வந்தன.

காலம் கலிகாலம். பஞ்ச பூதங்களால் பாதிப்புகள் ஏற்ப்படும்ன்னு சொல்லியிருக்கின்றனர். 2006-இன் கடைசியிலும் நடக்கின்றன பல பேரிடர்கள். கடந்த வாரம் மலேசியாவில் பெய்த அடை மழையினால் வெள்ளம் ஏறிடதை பற்றி சொன்னேன். இப்போது இது ஓய்ந்துவிட்டது.. ஆனாலும் திரும்ப நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று கணித்திருந்த இந்த வேளையில் தாய்வான் நாட்டில் நிலநடுக்கம் நடந்தே விட்டது.

செவ்வாய் இரவு 8.30 மணியளவில் நடந்த இந்த நிலநடுக்கம் ரிச்சர்ட்டில் 7.1-ஐ குறித்திருக்கிறது. இந்த நிலநடுக்கத்தில் APCN2 (ஆசிய பசிஃபிக் கேபல் நெட்வர்க் 2) முற்றிலும் பாதிப்படைந்துள்ளது.

இதனால், இன்டெர்னெட் மற்றும் தொலைதொடர்பு லின்க் பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது. மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, மற்றும் ஹாங் காங் போன்ற நாடுகள் மாய இருட்டு-வெளி (அதாங்க, blackoutன்னு சொல்வாங்களே! நேரடி மாற்றம் செய்துப் பார்த்தேன்)-யில் அவதிப்படுகின்றன என்று சொல்லலாம்.

98% கம்யூனிகேஷன் லின்க் துண்ஸ்டிக்கப்பட்டுவிட்டதால், வலையில் நெரிசல்() ஏற்ப்பட்டுள்ளது. இந்த நாடுகள் வலைசேவை உபயோகிப்பவர்கள், அமேரிக்கா, ஜப்பான், சீனா, தாய்வான், தென்கோரியா மற்றூம் ஐரோப்பிய நாடுகளின் செர்வர்களை தொடைபுக்கொள்ளும்போது சிரமங்களை எதிர்நோக்குவர்.

ஆனாலும், நாம் வலை சேவைகளை அனுபவிக்கலாம். 2.0 மில்லியன் மக்கள் ஒரே பேக்கப் கெர்வரை பிங் பண்ணுவதால் சில தாமதங்கள் ஏற்ப்படும்.

கடல் அடியில் இருக்கும் அந்த லிங்கை சரி 3 வாரங்களுக்கு மேல் ஆகும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இது ஏனென்றால், இந்த நில நடுக்கத்தை அடுத்து தாய்வானை சுற்றி இருக்கும் கடலில் சுனாமி ஏற்ப்படலாம் என்று கணிக்கப்ப்ட்டுள்ளது.

வியட்னாம், மலேசியா, பிலிப்பினா மற்றும் சீனாவில் சுனாமிக்குறிய முன்னேற்ப்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளன.

19 Comments:

said...

Happy new year my friend..

ungka ellaa kanavum intha varushathula niraivera vazhththukkaL..

said...

உங்களால் கமெண்ட்ஸ் போட முடியுது. ஆனால் என்னால் முடியலையே!!

said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழியே..

இந்த வருடத்தில் கிடைத்த உங்கள் நட்பு எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. பரந்து விரிந்த இந்த உலகத்தில் நம்மை சேர்த்து வைத்த இந்த பிளாக்கருக்கு நன்றி.

இந்த புதிய வருடத்தில் ஆண்டவனிடன் நீங்கள் வேண்டும் யாவும் கிடைக்கப்பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் நீங்களும் உங்களும் குடும்பத்தினரும் எல்லா வித இன்பங்களும் கிடைக்கப் பெற்று வாழ வாழ்த்துக்கள். தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் மேலும் மேன்மை அடைந்து சிறக்க வாழ்த்துக்கள்

said...

என்னால உங்க டெஸ்டிங்க் 1..2..3 கமென்டெல்லாம் படிக்க முடியுதுங்க பிரண்ட் :-)

said...

Wishing you a very Happy, Prosperous and Successful New Year :-)

said...

first wishing u a happy new year my friend...thangal friendshipku sandhoshapadum itharunathil, ungal aasaigal, kanavugal, matrum ella nallavaigalum kidaika, my wishes n prayers...

dont worry bhoomi thai kodhithu ezhundhu vittal, boomiyil nadakum aniyayangalai paarthu...

ini ellam ok ayidum (nambikai than)...take care da.

said...

//மு.கார்த்திகேயன் said...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழியே..
//

உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கார்த்திக்..

said...

//மு.கார்த்திகேயன் said...
என்னால உங்க டெஸ்டிங்க் 1..2..3 கமென்டெல்லாம் படிக்க முடியுதுங்க பிரண்ட் :-)
//

கமெண்ட்ஸ் வருதா? நான் உங்களுக்கு இன்னும் சில கமெண்ட்ஸ் எழுதியிருக்கேன். அவைகளை வெளிஇட முடியுதா என்று பாருங்கள் கார்த்திக். ;-)

said...

// G3 said...
Wishing you a very Happy, Prosperous and Successful New Year :-)
//

same to you G3. May God Bless you!

said...

//one among u said...
first wishing u a happy new year my friend...thangal friendshipku sandhoshapadum itharunathil, ungal aasaigal, kanavugal, matrum ella nallavaigalum kidaika, my wishes n prayers...
//

Happy New Year to you too One Among "me".. hehe..
May god Bless You

said...

என் இனிய தோழி,

வாழ்த்துக்களுக்கு நன்றி.

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நீண்ட ஆயுளும், நிறைந்த சிந்தனையும் குறையாது கிடைக்க பரம்பொருளை வேண்டுகிறேன்.

அடிக்கடி வந்து செல்லுங்கள்.

said...

உள்ளம் களிந்த என் புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழியே....

Anonymous said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

said...

My Friend!

இவற்றைப் பற்றிக் செய்திகளில் பார்த்தேன்.இந்தோனேசியப் படகுவிபத்து கூட வேதனையாக உள்ளது. இறைவனென்பவன் தான் கருணை செய்யவேண்டும்.
அனைவருக்கும் புதுவருடம் நல்வருடமாகட்டும்.
யோகன் பாரிஸ்

said...

// ஜி said...
உள்ளம் களிந்த என் புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழியே.... //

உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜி.

said...

//துர்கா said...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். //

நன்றி துர்கா..

உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

said...

// Johan-Paris said...
My Friend!

இவற்றைப் பற்றிக் செய்திகளில் பார்த்தேன்.இந்தோனேசியப் படகுவிபத்து கூட வேதனையாக உள்ளது. இறைவனென்பவன் தான் கருணை செய்யவேண்டும்.
அனைவருக்கும் புதுவருடம் நல்வருடமாகட்டும்.
யோகன் பாரிஸ் //

ஆமாங்க.. இன்னொரு ஃபேரி விபத்து நடந்துள்ளது.. இம்முறை இந்தோனிசியாவில். எல்லாமே வருத்தமளிக்கும் விஷயங்கள் யோகன். :-(

said...

பிறந்திருக்கும் இப்புது வருடம், உங்கள் வலையுலக வாழ்விற்கும், தனியுலக வாழ்விற்கும், பொது உலக வாழ்விற்கும், இனிமை பயப்பதாக, உங்களின் கனவுகளை நனவாக்கும் வருடமாக இருக்க அன்பு வாழ்த்துக்கள், தோழி.

said...

//நெல்லை சிவா said...
பிறந்திருக்கும் இப்புது வருடம், உங்கள் வலையுலக வாழ்விற்கும், தனியுலக வாழ்விற்கும், பொது உலக வாழ்விற்கும், இனிமை பயப்பதாக, உங்களின் கனவுகளை நனவாக்கும் வருடமாக இருக்க அன்பு வாழ்த்துக்கள், தோழி. //

நன்றி சிவா. உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள். :-)