Sunday, March 25, 2007

173. என் ஞாபக சக்தியை டெஸ்ட் பண்றாங்கப்பா

எல்லாரும் கோழியா மாறுங்கய்யான்னு அபி அப்பா அழைக்கிறார் அழைக்கிறார் அழைக்கிறார்..

நம்மோட மூக்கை தீட்டி யோசிக்க சொல்றார். (எல்லாரும் மூளையைதானே தீட்டுவாங்க???)

அவர் ஒரு சவால் விடுறார். என்னனு?

"நாம படிச்ச பள்ளி, செக்ஷன், வாத்தியார் பெயர்.. எதெல்லாம் கரெக்ட்டா சொல்லனுமாம்"

நல்லா கேக்குறாய்ய்ங்க பாருய்யா டீடேய்ல்லு....

கரெக்ட்டா எழுதினா பரிசு எதுனாச்சும் தருவீங்களா அபி அப்பா?

நோட் மை பாய்ண்ட்டு:

LKG
4 வயது - "5 வயது க்லாஸ்" - டீச்சரோட கையெழுத்து அழகா முட்டை - முட்டையா இருக்கும் - தடிகா பேரு ஞாபகமில்லை
5 வயது - "6 வயது க்லாஸ்" - அதே டீச்சர் - "
6 வயது - "6 வயது க்லாஸ்" - அட, அதே டீச்சர்தாம்ப்பா - "

ஆரம்ப கல்வி
வகுப்பு 1 - Biru (நீலம்) - டீச்சர் குண்டா இருப்பாங்க. க்லாஸ்ல பென்சில், பேனா எல்லாம் விற்ப்பாங்க. ரொம்ப நல்ல டீச்சர். நாங்கெல்லாம் அவங்களை அம்மான்னுதான் கூப்பிடுவோம். - காராக் ஆரம்ப தமிழ்பள்ளி
வகுப்பு 2 - செண்பகம் (Cempaka) - டீச்சர் பெரிய கண்ணாடி ஒன்னு போட்டிருப்பாங்க.அதுக்கு மேலே உன்னும் ஞாபகம் இல்லை - பத்துமலை ஆரம்ப தமிழ்ப்பள்ளி
வகுப்பு 3 - செண்பகம் (Cempaka) - இவங்களை சுத்தமா ஞாபகம் இல்லை. எங்க பக்கத்து க்லாஸ் டீச்சர் பேரு ஞாபகம் இருக்கு. பேரு தெய்வானை டீச்சர் - "
வகுப்பு 4 - செண்பகம் (Cempaka) - இவங்க பேரு ஏதோ சாமி பேரு. என்னனு மறந்துபோச்சு. இவங்க அந்த வருஷம்தான் திருமணம் செய்தாங்க. அந்த வருட இறுதியில் பள்ளி மாற்றலாகி போயிட்டாங்க - "
வகுப்பு 5 - செண்பகம் (Cempaka) - இவங்க பேரும் நான்காம் வகுப்பு டீச்சர் பேரும் ஒன்னுதான். மேலே உள்ளதே ஞாபகம் இல்லை. இது மட்டும் எப்படி தெரியும்? நல்லா கேக்குறீங்கய்யா!!! - "
வகுப்பு 6 - ரோஜா (Ros) - இவங்க பெயர் கலாவதி டீச்சர். ரொம்ப கோபம் வரும் இவங்களுக்கு. - "

(ஸ்ஸ்ஸ்ஸப்பா.. இப்பவே கண்ணை கட்டுதே!!!)

இடைநிலைக் கல்வி
படிவம் 1 - கெம்பாஸ் (Kempas) - இவங்க பேரு ஃபாட்ஜிலின் (Fadzlin) டீச்சர். இவங்க பேரு மறக்காதுப்பா. ஏன்னா இவங்க என் பின் வீட்டுலத்தான் குடியிருக்காங்க.. ஹீஹீ.. - செலாயாங் பாரு 2 இடைநிலைப் பள்ளி
படிவம் 2 - ஜாத்தி (Jati) - இவங்க ஒரு அறிவியல் டீச்சர். அவங்க மகனும் என் க்லாஸ்மேட்தான். எனக்கு பிடிக்காத பாடத்தை சொல்லிக் கொடுத்தனாலே அவங்க பேரும் ஞாபகம் இல்லை. - டாருல் ஏசான் இடைநிலைப் பள்ளி
படிவம் 3 - ஜாத்தி (jati) - இவங்க பேரு சுஸ்லினா (Suzlina) டீச்சர். Oxford Universityலே படிச்சிட்டு வந்து எங்களை இங்கிலீஸ்ல பேச சொல்லி உயிரை வாங்கிட்டாங்க.. ஹ்ம்ம்.. - "
படிவம் 4 - அறிவியல் 1 (Science 1) - இந்த வருடத்துல நிறைய டீச்சருங்க வந்தாங்க.. எல்லாரையும் ஓட ஓட விரட்டிடோம்ல.. ;-) - "
படிவம் 5 - அறிவியல் 1 (Science 1) - இவங்க ஒரு மலாய் டீச்சர். சின்னதா இருப்பாங்க. அந்த வருடம் அவங்க pregnant. (அப்போதும் க்லாஸ்ல நாங்க அராஜகம் பண்ணூவோம்ல.. ) எங்க ரிசால்ட் வந்த ஒரு வாரத்துக்கு முன்தான் அவங்களுக்கு குழந்தை பிறந்தது. - "

அப்புறம் எப்படியோ எனக்கு univeristyலே ஒரு சீட்டு கொடுத்துட்டாங்க. நாமளும் அப்படியே இங்கே வந்து செட்டல் ஆயாச்சு! :-P

இந்த கேள்வி ரொம்ப நல்லாவே இருக்கு அபி அப்பா. இதுவே Tag பண்ணலாமா? வியர்ட் கேம் முடிஞ்சாச்சு! புதுசா இது ஸ்டார்ட் பண்ணிடுவோமா?

நான் Tag பன்ற அந்த அஞ்சு பேரு:
1- போன தடவை மிஸ் ஆகி போன கார்த்திக்
2- காதலை ஆராய்ச்சி செய்யும் CVR
3- சின்ன பையன் ராம்
4- புது மாப்பிள்ளை அம்பி
5- முதல்வர் @ நாட்டாமை ஷாம்

Thursday, March 15, 2007

169. போர் கொடி தூக்கிட்டாங்கய்யா!!!!

சுத்தி வளைக்காமல் நான் நேரா மேட்டருக்கே வந்துடுறேன் மக்கா!! தல எப்போ சுகாதார துறை அமைச்சர் பதவியை பொற்கொடிக்கு வழங்கினாரோ, அப்பவே நானும் ஒரு மனு போட்டாச்சு! வந்து என் கீ போர்ட்டை கொஞ்சம் சுத்தம் செஞ்சுட்டு போங்கக்கான்னு...


ஆனால், இவங்களுக்கு என் மேலே என்ன கடுப்போ தெரியலை! போர் கொடியை தூக்கிட்டு நிக்குறாங்க..


நான் பச்சை கொடியை தூக்கினா, இவங்க ஸ்ட்ரைக்கிங் பச்சையை தூக்கிட்டு நிக்குறாங்க..
சிவப்பை தூக்கினா, ஸ்ட்ரைக்கிங் சிவப்பை தூக்கிட்டு லுக்கு விடுறாங்க..
காய்ச்சலப்போ வீட்டுல இருக்கும்போது பாக்யராஜ், டி. ஆர் படங்கள் ரொம்ப பார்த்திருப்பாங்க போல..
(எப்படித்தான் அந்த கலர கையில தூக்கிட்டு நிக்குறாரோ! இங்க மலேசியாவிலிருந்து பார்க்கும்போதே எனக்கு கண்ணெல்லாம் கூசுது. உங்களுக்கு கூசலையா?)


சரி மேட்டருக்கு வரேன் மேட்டருக்கு வரேன்னு சொல்லிக்கிட்டே என்னென்னவோ பேசிட்டு இருக்கேன் பாருங்க.. இவங்க கோபத்தை தணிக்கனும்ன்னா ஒரு தேக் எழுதணும்ன்னு வீட்டுப்பாடம் வேற கொடுத்துறுக்காங்க..


தலைப்பு: என்னைப் பற்றி 5 வியர்ட்டான விஷயங்கள்
(யாருடா இப்படிப்பட்ட தலைப்புகளையெல்லாம் கொண்டு வர்றது?)


முதல்ல ஒரு வெள்ளை கொடி காட்டிடுறேன்:


இப்போ தேக்:

1. ஞாபக மறதி
இது எனக்கு பலமா பலவீனமான்னு தெரியலை. சின்ன வயசுல ஓரளவுக்குதான் இந்த வியாதி இருந்தது. என் அப்பா, பாப்பா (நாந்தானுங்கோ!) பெரிய படிப்பெல்லாம் படிச்சு டாக்டரா, கலேக்டரா, தொழிலதிபரா, வக்கிலா (4 இன் 1) ஆகனும்ன்னு ஆசைப்பட்டு மேமோரி ப்லஸ் (Memori Plus) வாங்கி கொடுத்தார்.. மூனு நாலு போட்டல்களை காலி பண்ணிட்டேன். அப்பா வந்து கேட்டார்.

அப்பா: இப்போ படிக்கிறது எல்லாம் ஒன்னும் மறக்கலையே?
நான்: படிப்பா? நான் படிக்கிறேனா?

அம்மா இதை பார்த்துட்டு, எனக்கு மூலிகை மருத்துவம்தான் சரி வரும்ன்னு சொல்லி வீட்டுல வல்லாறை செடியை வளர்த்து, ஒரு நாளைக்கு மூனு வேளையும்:

தண்ணீருக்கு பதிலா - வல்லாறை ஜூஸ்
சமையலில் கருவேப்பிலைக்கு பதிலா - வல்லாறை கீரை
சாக்லேட் மிட்டாய் சாப்பிடனும்னா கூட அதில் வல்லாறையையும் சேர்த்து வச்சு கொடுத்தார்..

ஏன்னா, இந்த பாப்பா(!) பெருசா ஆனதும் டீச்சரா, விஞ்ஞானியா, கணித மேதையா, பெரிய கம்பெனியில மேனேஜரா வரனும்ன்னு இவங்களுக்கு ஆசை.. ஒரு மூனு மாசத்துக்கு வல்லாறையை சாப்பிட்ட பிறகு, என் அம்மா டெஸ்ட் வச்சாங்க..

அம்மா: இன்னைக்கு ஸ்கூல்ல நீ என்ன படிச்ச?
நான்: நான் என்ன படிச்சன்னு கேட்குறதுக்கு நீங்க யாரு?

அவ்வளவுதான்! அம்மாவும் அப்பாவும் தலையில் துண்டு போட்டுட்டு போயிட்டாங்க.

(கடைசியில் அவங்க ஆசைப்பட்ட எதுவும் நான் ஆகாமல், இஞ்சினியரிங் படிச்சு முடிக்க போறேன்.)

அதுக்கப்புறம்தான் தெரியுதே, என் ஞாபக சக்தி எப்படி வேலை செய்யுதுன்னு! யாரிடமாவது ஏதாவது முக்கியமா பேசிக்கிட்டே இருப்பேன். சில நிமிடங்களில் யாரிடமோ ஏதோ பேசினோம் என்று தெரியும். ஆனால், யார், என்ன மேட்டர்ன்னு சுத்தமா ஞாபகமே வராது!

போன்ல, கணிணில ரிமைண்டர் வச்சிருப்பேன். ஆனால், பல சமயங்களில் ரிமைண்டர் ஒன்னு இருக்குன்னே மறந்துடுவேன். இதை பத்தி சொல்லனும்ன்னா ஒரு பெரிய பதிவே போடலாம்ங்க.. அதை பிறகு பார்ப்போம். இப்போ Next போலாம் வாங்க..

2. கோபம்
அப்பன் எட்டடி பாய்ஞா பிள்ளை பதினாரடி பாயும்ன்னு பெரியவங்க சொல்லுவாங்க.. சின்ன வயசிலிருந்தே என் அப்பாவின் கோபங்களை கண்டு (அடியும் வாங்கி!) வளர்ந்ததால், அப்பாவின் கோபத்துக்கு நானும் சளைத்தவள் இல்லை என்று ஆகிவிட்டது. எனக்கும் சரமாறியா கோபம் வரும்.. ஆனால், நான் அதை முடிந்த வரை அடக்கிக்கொள்வேன். நானே எனக்கு கேட்டுக் கொள்வேன் "எதற்கு கோபம்? இதனால் பிரச்சனைகள்தான் கூடுமே தவிர, ஏதும் குறைய போவதில்லை!"

என்னுடைய பல நண்பர்களிடம் எனக்கு கோபம் வரும்ன்னு நீங்க போய் சொன்னா, அவங்க நம்பவே மாட்டாங்க. (நிஜமா!!)

ஆனாலும் சில சமயங்களில் என்னால் என்னையே கண்ட்ரோல் பண்ண முடியாது. அப்போது எரிமலை வெடித்துவிடும்! அது ஒரு குறுகிய காலத்துக்கு மட்டுமே (சில நிமிடங்கள் or சில மணி நேரம்)..

என்னுடைய கேரக்டர் நம்பர் 1 (ஞாபக மறதி) என்னை முழுவதுமாய் ஆட்கொண்டதால் கோபத்தையும் கோபப்பட காரணமான அந்த காரணங்களையும் மறந்துவிடுவேன். (இதனால், ஞாபக மறதி இருப்பது பலமே!!)

இதுனால் நான் என்ன சொல்ல வர்றேன் என்றால், நான் கோபம் கொண்டாலும், சீக்கிரமே தனிந்துவிடுவேன், இதை மனதில் வைத்து பிரச்சனைகளை பெரிது படுத்த வேண்டாம். நன்றி.. ;-)

3. இயந்திர வாழ்க்கை
வாழ்க்கையில் நான் கால அட்டவணை போட்டு அதன் படி நடக்கிறேன் என்று நினைக்கிறீங்களா? அதுதான் கிடையாது!

நான் சொல்லும் இயந்திர வாழ்க்கை: இயந்திரங்களை நம்பி வாழும் வாழ்க்கை.

இப்போழுது நான் உபயோகிக்கும் 5 இயந்திரங்கள்:
1- பர்சனல் கம்பியூட்டர் (Personal Computer)
2- லாப்டாப் (Laptop)
3- நோகியா 6680 (Nokia 6680)
4- ஆக்ஸியா ஏ108 பி.டி.ஏ போன் (AXIA A108 PDA Phone)
5- கைக்கடிகாரம்

இதில் முக்கியமாய், எப்போதுமே கணிணி என் கூடவே இருக்கவேண்டும். குளிக்கும் நேரமும், க்லாஸ் போகும் நேரமும் தவிர்த்து மற்ற எல்லா நேரமும் நான் இருப்பது - என் கணிணியின் முன்தான். அப்படியொரு பைத்தியம் எனக்கு. வேலை, ப்ராஜக்ட், அசைக்ன்மேண்ட், பாடம், படம், மியூசிக், விளையாட்டுன்னு சொல்லிட்டே போலாம். எல்லாமே இந்த கணிணியில்தான். இதோ! இந்த போஸ்ட் நான் எழுதுவதும் இதே கணிணியில்தான்.

என்னை தேட வேண்டும் என நினைப்பவர்கள் எத்தனை மணியாக இருந்தாலும், நேராய் என் ரூமுக்கு வந்துவிடுவார்கள். ஏனென்றால், இங்கேதானே என் கணிணி இருக்கு!!!!

நண்பர்கள் சொல்லுவாங்க: "நீ இந்த கம்பியூட்டர் கட்டிட்டே அழு"ன்னு.. அதுக்கு நன் சொல்வேன்: "நான் ஏன் அழனும்? கம்பியூட்டர் கட்டிக்கிட்டா நான் சந்தோஷமாய்தானே இருப்பேன்.. இப்போ இருப்பது போல!" ;-)
(Actually இதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு! நான்தான் மறதியாச்சே!!! கணிணியின் முன் உட்கார்ந்திருந்தால் எது எது எப்போது செய்ய வேண்டும் என ரிமைண்டர் கொடுத்து எனக்கு நினைவூட்டிக்கிட்டே இருக்கும். மற்றவர்கள் டைம் பிரகாரம் நம் முன் வந்து மியூசிக்குடன் நாம் என்ன செய்ய வேண்டும் என சொல்வார்களா?)

[யப்பா!!! என்ன மூளை!!! உன்னால மட்டும் எப்படி இப்படியெல்லாம் யோசிக்க முடியுது, .::மை ஃபிரண்ட்::.!!!!] ;-)

4. செய்வதை திருந்தச் செய்தல்
எனக்கு ஒரு பழக்கம் இருக்குங்க.. எதையும் நினைச்சதும் செய்ய மாட்டேன். அப்படி செய்ய ஆரம்பித்தால், என்னால் முடிந்த "The best from me"யைதான் தருவேன். என்னை விட எத்தனையோ பேர் நன்றாக செய்பவர்கள் இருந்தாலும், என்னை தேடி வந்துவிட்டார்களே! அவர்களை வருத்தப் பட வைக்கக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காக என்னால் முடிந்த வரை செய்துக் கொடுப்பேன். அது வேலை ஆகட்டும், உதவியாகட்டும், பாடமாகட்டும்.. அதுபோலத்தான், இந்த ப்ளாக்கும். ;-)

அதற்காக, எனக்கு தெரியாமல் புரியாமல் இருக்கும் விஷயங்களை கேட்டு படித்து முயற்சிப்பேன். என் எழுத்துக்களில் கொஞ்சம் முன்னேற்றம் இருக்குன்னு உங்களில் சிலர் சொல்லியிருக்கீங்க. அதுக்கு காரணம் நீங்கதான்! உங்கள்ல எத்தனை பேரை நான் தொல்லை பண்ணியிருக்கிறேன்னு எனக்குதான் தெரியும். எனக்கு தெரியாத வார்த்தைகளை சொல்லி தர கேட்டிருக்கிறேன். சில நண்பர்கள் ஒரு படி மேலே போய் என் எழுத்துக்களில் உள்ள பிழைகளை சுட்டி காட்டி எனக்கு உதவியிருக்கிறீர்கள். என்னுடைய இந்த வளர்ச்சிக்கு நீங்கதான் காரணம்! நன்றி..

5. நான்காவது படிக்கும்போதே என் ஐந்தாவது குணம் தெரிஞ்சிருக்குமே? (நன்றி மறக்காதவள் நான்)
யாரோ பெரியவங்க சொல்லியிருக்காங்க! வலது கை செய்யும் தானங்களையும் உதவிகளையும் இடது கைகூட அறியக்கூடாது. செய்த உதவியை அப்போதே மறந்துவிட வேண்டும். பிறர் நமக்கு செய்த உதவியை என்றென்றும் மறக்க கூடாதுன்னு!

அதனாலே நான் வெகு சுலபமாய் மற்றவர்களிடம் உதவி கேட்க மாட்டேன். அப்படி எனக்கு மிகவும் தேவைப்பட்டாலோ, (ஒரு சில நல்லவங்க) நாம் உதவி கேட்காமலேயே வந்து உதவி செய்யுறவங்களை நான் எப்போதும் மறக்க மாட்ட்டேன். (என் ஞாபக மறதி இந்த விஷயத்தில் ஒன்னும் செய்ய இயலாது என்று நினைக்கிறேன்.)

நான் நாலாவது படிக்கும்போது பஸ் ஏறிதான் வீட்டுக்கு வருவேன். அப்போ நான் ஒல்லி குச்சியாய், சின்னதாய் இருந்தேன். தோளில் புத்தகப்பை மூட்டையை சுமந்துக்கொண்டு கூட்டமாய் இருந்த பஸ்ஸில் ஏறினேன். பஸ் ஒவ்வொரு இடத்தில் ப்ரேக் போடும் போதும், நானும் முன்னாடி போய் விழுந்து எழுந்திருச்சி வந்தேன். அப்போது ஒரு அக்கா (24-25 வயசு இருக்கும்) எழுந்திருச்சி என்னை உட்கார சொல்லி இடம் கொடுத்தாங்க. போன வருடம் (ஒரு பத்து வருடத்துக்கு மேல ஆயிடுச்சு) நான் வேலை முடிந்து வரும்போது Putra LRT-யில் ஏறி வந்தேன். இடுப்பில் ஒரு கைக்குழந்தையையும், கையில் ஒரு 3 வயது குழந்தையையும் பிடித்துக்கொண்டு நிக்க முடியாமல் நின்றக்கொண்டிருந்தார். பத்து வருடத்துக்கு முன்பு இருந்ததுக்கும் இப்போதுக்கும் அதிக மாற்றம் இல்லை அவரிடம். ஆதலால் என்னால் சுலபமாக அடையாளம் கண்டுக்கொள்ள முடிந்தது. நானும் அங்கே நின்னுக்கொண்டிருந்தேன். உட்கார்ந்திருந்தால், நான் எழுந்து அவருக்கு என் இடம் கொடுத்திருக்கலாம் என்று மிகவும் வருத்தப்பட்டேன். அதனால், என்னால் முடிந்த அளவு அவருடைய மூனு வயது மகளை (என்னைபோல் ஒவ்வொரு முறையும் பிரேக் போடும்போது முன்னே விழுந்து எழுந்திருச்சி வந்தாள்) பிடித்துக்கொண்டேன். என்னால், அதை தவிர்த்து வேறெதுவும் உதவ முடியவில்லை. அவரை திரும்பவும் பார்ப்பேன், உதவுவேண் என்ற நம்பிக்கை எனக்கு இன்னும் இருக்கு!!!

அதே போல், யாருக்கு உதவி தேவைப் பட்டாலும் நான் முதல் ஆளாய் போய் நிற்பேன். அப்படி என்னால் அவருக்கு உதவ முடியும் என்றால் கண்டிப்பாய் உதவுவேன்.. வந்துவிடுவேன் (மறந்துவிடுவேன்)...

பொற்கொடி டீச்சர், உங்க வீட்டுப்பாடம் நான் சரியா செஞ்சிருக்கேனா? எனக்கு பாஸ் மார்க்கா? ஃபெயில் மார்க்கா? வந்து மார்க் போட்டு போகவும் டீச்சர்.. ;-)

மத்தவங்க ஏதாவது துப்பிறதுக்கு இருந்தா, கீழே துப்பிட்டு போலாம். :-)

அட.. ஒரு விஷயம் மறந்துட்டேனே!!! நான் யாராவது தேக்(Tag) பண்ணணும்ல??? எத்தனை பேரு டீச்சர்? ஓ! அஞ்சா?

ஓகே!!! இதோ நோட் பண்ணிக்கோங்க:
1- சிங்கபூரு வாலு துர்கா
2- சூடான் புலிகேசி.. ச்சீ புலி சிவா
3- பி.மு.க தல கார்த்திக்
4- செதுக்கல் மன்னன் தேவ்
5- நடைராஜா கோபிநாத்

ஃப்ரீயா இருக்கும்போது எழுதுங்க மக்கா!! வர்ட்டா!!!!

Sunday, February 18, 2007

166. சீனப் பெருநாளில் நான் வாங்கிக்கிட்ட ஆப்பு!!

சீனப் பெருநாளைப் பற்றி ஒரு போஸ்ட் போட்டிருந்ததை வெட்டி படிச்சிட்டு, இந்த மாதிரி பெருநாளப்போ நீங்க எக்கு தப்பா மாட்டிக்கிட்ட அனுபவம் இருக்கான்னு கேட்டார்.. நான் இல்லவே இல்லன்னு சொல்லி சமாளிச்சுட்டேன்.

பிறகு படுத்துண்டே யோசிக்கறச்சே 8 வருடத்துக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் ஞாபகம் வந்தது.. இதை வச்சி நீங்க காமெடி கீமடி பண்ண மாட்டீங்களே?? சரி ஃப்ளாஷ்பேக்குக்கு போவோம்.. ப்ளாஷ்பேக் வட்டமெல்லாம் உங்க சொந்த செலவுல போட்டுக்கனும் சொல்லிட்டேன்.... ஆமா!!!


எனக்கு ஒரு பத்து வருஷமா சீன நண்பர்கள் அதிகம்தான். தீபாவளின்னா போதும்.. ஒரு 20 பேர் க்ரூப்பா காலையில் 10 மணிக்கெல்லாம் என் வீட்டு முன்னுக்கு வந்து கூப்பிடுவாங்க. அவர்களை வரவேற்று இடம் பார்த்து உட்கார வைக்கிறது இருக்கே!!! அப்பப்பா.. போதும் போதும்ன்னு ஆயிடும்.. என் வீடே ஒரு சின்ன வீடு!! எல்லாரையும் ஹால் முழுக்க அப்படியே நிரப்பிட்டு...

இட்லி..
தோசை..
வடை..
இடியப்பம்..
கோழிக் கறி...
ஆட்டுக் கறி..
சாம்பார்..ன்னு கொண்டு வந்து ஹாலிலேயே பறிமாறுவேன். இவங்கெல்லாம் கரண்டியிலேயே சாப்பிட்டு பழகிட்டதனாலே கரண்டி கேட்டாங்க.. நான் ஒத்த ஆளா எத்தனை கரண்டிகளைதான் தேடுறது???

திரும்பி வந்து அவர்களிடம், "எங்க கலாச்சாரப்படி இந்த உணவுகளை கையில்தான் சாப்பிடுவோம். கையில சாப்பிட்டா இதோட ருசியே தனி"ன்னு ஒரு பிட்ட போட்டேன்.. அவங்களும் எப்படி சாப்பிடுறதுன்னு கேட்க, நானும் ஒரு இட்லியை என் தட்டில் போட்டு சாப்பிட்டு காட்டினேன்..

காலை பசியாறை சாப்பிட்டுட்டு, மதியம் உணவையும் முடிச்சுட்டுதான் வீட்டுக்கு கிளம்பினாங்க.. போகும்போது என்னிடம் சமயலை பற்றி சூப்பரா பாராட்டினாங்க.. இத்தனைக்கும் இதை எல்லாம் என் அம்மாதான் சமைத்தார்.. ;-) ஆனால், பாராட்டுக்கள் எனக்கே எனக்குதான்.. ;-)

அப்படியே ஒரு மூனு மாதம் பார்வட் (Forward) போங்க.. சீனப் பெருநாள் வந்திருச்சா?

சீனப் பெருநாள் அன்னைக்கு எனக்கு ஒரு கால் (call) வந்தது.
"இன்னைக்கு நாங்கெல்லாம் டின்னருக்கு போறோம்.. நீயும் எங்க கூட வா.. ஜாலியா இருக்கும்"ன்னு என் சீன தோழி சொல்ல.. நமக்குதான் ஓசி சாப்பாடு கிடைச்சா முதல் ஆளா போய் நிப்போம்ல. சரின்னு நானும் ஒத்துக்கிட்டேன். எனக்கு நானே ஆப்பு வச்சிக்க போறேன் எனக்கு அப்ப தெரியாது பாருங்க!!

இரவு ஒரு 7 மணி இருக்கும்.. ஒரு 8 கார்கள் என் வீட்டு முன் வந்து நின்னது. ஏதோ V.I.P. ஏறுவதா ஒரு எஃபெக்ட்டு.. நானும் ஏறி அவங்களோட போனேன். புக்கிட் பிந்தாங்-இல் இருக்கும் ஒரு ரெஸ்ட்ரானுக்கு சென்றார்கள். நான் சீன ஒட்டுக் கடைகளில் சாப்பிட்டிருக்கிறேன். இப்படிப் பட்ட ஒரு இடத்துக்கு அதுவரை சென்றதில்லை.

கூட்டாளிகள் இருக்கும் தைரியத்தில் அவங்களோட சேர்ந்துக்கிட்டு உள்ளே சென்றேன். 30 பேர் உட்காருவதற்காக ஏற்கனவே என் தோழி ரிசர்வ் செய்திருந்தாள். நாங்கள் உட்கார்ந்ததும் வேய்டர் போய் (Waiter Boy) ஒவ்வொருவருக்கும் மெனு கார்ட் கொடுத்தான். எல்லாருமே அதை திறந்து பார்க்க தொடங்கினாங்க.. ஆசை யாரை விட்டது.. நானும் திறந்து பார்த்தேன்.

ஆஹா.. ஆப்பு நம்பர் ஒன் வைச்சுட்டான்யா வைச்சுட்டான்.. மெனு கார்ட்டில் எல்லாமே கோடு கோடா எழுதியிருக்கு. எல்லாமே மேண்டரின்ல எழுதியிருக்கு!! ஒரே குழப்பாமாய் இருக்க.. எனக்கு எதுத்தாப்புல உட்கார்ந்திருந்த நண்பனை பார்த்தேன். அவன் சீனனாய் இருந்தாலும் மேண்ட்ரின் படிக்கத் தெரியாது.. ஆனால் அவனும் தீவிரமாய் அந்த மெனுவை முன்னும் பின்னும் திருப்பிக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்தால் மெனுவை படிக்கத் தெரிந்தவன் போலத்தான் இருந்தது.

கொஞ்ச நேரத்தில் வேய்டர் போய் ஆர்டர் எடுக்க தொடங்கினான்..
ஒவ்வொருத்தராய் அவர்களோட ஆர்டரை கொடுக்க தொடங்கினாங்க.. எல்லாமே மேண்டரின் மொழியில்தான். ஏதோ ஆங்கிலத்தில் ஓர்டர் பன்னாலும் நம் காதில் விழுந்தால் அதுவே கப்புன்னு புடிச்சி நாமும் ஓர்டர் செய்யலாம்ன்னு காதை தீட்டி வச்சுகிட்டு கேட்டேன்.

என்ன சொல்லுராங்கன்னு புரியல.. ஆனால், கடைசியில "சு (shi) சு"ன்னு சொன்னாங்க.. பதிலுக்கு அந்த வேய்டர் போய்யும் "சு"ன்னு சொன்னான்..

எனக்கு தெரிஞ்சதெல்லாம் "இ"(Ee), "ஏ"(Er), "சன்"(San), "சு"(Si) ன்னு 1, 2, 3 மேண்டரினில் சொல்வது.. இப்படியே யோசிச்சுட்டு இருக்க, என்னுடைய தேர்ன் (turn) வந்தது.. வேய்டர் போய் என்னிடம் கேட்க, நான்,

"இ ஏ சன் சு"ன்னு சொல்ல..

அவன் திரும்பி "சு??" முழிக்க..

நானும் "யெஸ், சு"ன்னு சொல்ல, கடையே அதிர என் நண்பர்கள் சிரிச்சாங்க..

என் தோழன், "அனு, அவனுக்கு மேண்டரின் தெரியும்.. நீ அவனுக்கு 1 2 3 சொல்லி தரியா?"ன்னு கேட்டான்.

அடடா.. இப்படி நம்மளை வைச்சு காமெடி பண்ற நிலமை வந்திருச்சேன்னு மனசுக்குள்ள நினைச்சிட்டு "What I meant ந்as Set No. 4"ன்னு சொல்லி சமாளிச்சேன்..

வேய்டர் போயிட்டான்.. ஆனால், என் நண்பர்களோட சிரிப்பு மட்டும் அடங்கல..

அப்பத்தான் தெரிஞ்சது.. அவங்க சொன்ன "சு".. ஆமாண்ணு அர்த்தமாம்.. நான் ஏதோ 4-ன்னுதான் சொல்றாங்கன்னு நினைச்சிக்கிட்டேன்.. எல்லாம் ட்ரான்ஸ்மிஷன் (transmission) கோளாரு.. :-P

அது மட்டுமில்லை.. அந்த மெனு 2 மொழியில இருக்கு.. முதல் 6 பக்கம் மேண்டரினிலும், கடைசி 6 பக்கம் ஆங்கிலத்திலும் இருந்திருக்கு.. யாருமே என் கிட்டே சொல்லவே இல்லை.. இப்படி எததனை கடையிலடா கிளம்பியிருக்கீங்க????

திடீன்னு, என் பக்கத்துல உட்கார்ந்திருந்த தோழி "ஏய், நீ என்ன செட் ஓர்டர் பண்ணுன?"ன்னு கேட்டாள்..

நான் சிரிச்சிக்கிட்டே "Set No.4"ன்னு சொல்ல..

ஆச்சர்யமாய், "ஏய், நீ தவளை சாப்பிடுவேன்னு சொல்லவே இல்லையே!! அன்னைக்கு BBQ நைட்ல அதை தொடவே இல்லையே????"ன்னு கேட்டாள்..

எனக்கு தூக்கி வாறி போட்டது.. என்னது?? நான் ஓர்டர் பண்ணது தவளை பிரட்டலா??? தலையே சுற்றியது..

"பரவாயில்லை.. நான் போய் கேன்சல் பண்ணிட்டு வேறு ஏதாவது ஓர்டர் பண்ணூறேன்.. என்ன வேணூம்?"ன்னு என் மேல் அக்கரை உள்ள தோழன் எழுந்திருச்சிக்கிட்டே கேட்டான்..

இன்னொரு ரிஸ்க் எடுக்க விரும்பாமல், ஏதாவது சாப்பிடும் மாதிரி ஓர்டர் பண்ணுப்பான்னு சொல்லிட்டேன்..

சாப்பாடும் வந்தது.. ஏதோ ஒரு வித மீதான் வந்தது. தவளையோட இது எவ்வளவோ பரவாயில்லைன்னு நினைச்சிக்கிட்டே கரண்டியை தேடினேன். ரெண்டு குச்சிதான் வந்தது.

நானும் அதில் சாப்பிட முயற்சி செய்தேன். எவ்வளவு நேரம்தான் நானும் சாப்பிடுவது போலவே நடிக்கிறது??

"எனக்கு இதுல சப்பிட தெரியாது, எனக்கு கரண்டி வேணும்"ன்னு பக்கதுல உட்கார்ந்திருந்த தோழியிடம் முணுமுணுத்தேன். அவளோ, இன்னைக்கு நீதான் எங்களுக்கு காமெடி ட்ராக்ங்குற மாதிரியே இன்னொரு முறை வேகமாய் சிரிக்க, மற்றவர்களும் என்னனு கேட்டு திரும்ப சிரிக்க.. அய்யோ பாவம்ங்கிற நிலமைதான் எனக்கு.. :-(

பிறகு இவங்களே சொப் ஸ்டிக் (Chop Stick) எனப்படும் அந்த குச்சியை பயன்படுத்துவது எப்படின்னு சொல்லிக் கொடுத்தாங்க.. நானும் ஒவ்வொரு முறையும் முயற்சி செய்ய, அந்த மீ என் வாயுள்ளே போறதுக்கு பதிலா என் சட்டை மேலே விழ.. அது இன்னொரு காமெடியாய் போச்சு.. ஒவ்வொருத்தவங்களா என் பக்கதுல வந்து குச்சியை பிடிச்சு பிடிச்சு சொல்லிக் கொடுத்தாங்க.. இந்த மரமண்டைக்குதான் ஏறவே இல்லையே!!!!

பிறகு அவங்களே போய் கடைக்காரணிடம் கரண்டியை கேட்க, அந்த கடையில் கரண்டியே இல்லையாம்.. என் நண்பன் என் மேல் பரிதாபப் பட்டு, பக்கத்தில் உள்ள சூப்பர் மார்க்கேட்க்கு போய் பிளாஸ்டிக் கரண்டி வாங்கிட்டு வர்ர நிலைமை ஆயிடுச்சு.. கரண்டி வந்தப்புறம்தான் ஒழுங்காய் சாப்பிட ஆரம்பித்தேன்..

சாப்பிட்டுட்டு அரட்டை அடிக்கும்போது, ஒரு நண்பன் "வாங்க.. அப்படியே வால்கிங் (walking) போயிட்டு.. சப்பருக்கு (supper) இன்னொரு கடைக்கு போவோம்"ன்னு ஐடியா கொடுத்தான்..

நான் "அய்யோ! ஆளை விடுங்கடா சாமி.. இப்படியே நான் ரோட்டுல நடந்தேனா 2-3 வயசு குழந்தைங்க கூட என்னை பார்த்து கிண்டல் பண்ண ஆரம்பித்திடும்.. சட்டை அவ்வளவு அழகாய் இருக்கு!!!! இதுல உங்களுக்கு வாக்கிங் போயிட்டு இன்னொரு கடை வேறையா???? என்னை வீட்டுல விட்டுட்டு நீங்க எங்க வேணூம்ன்னாலும் போங்கடா சாமிங்களா!!!"ன்னு சொல்ல..

ஒரு நண்பன் என்னை வீட்டில் விட சம்மதித்து, நாங்கள் இருவரும் மட்டும் கலண்டுக்கிட்டோம்.. மத்தவங்க அப்படியே வால்கிங் போயிட்டு சப்பர் முடிச்சிட்டுதான் வீடு திரும்பினாங்க..

வீடு வந்ததும் வீட்டுல உள்ளவங்க என் சட்டையை பார்த்துட்டு நான் சாப்பிடத்தான் போனேன்னா, இல்லை அங்கே போய் மாவாட்டி சமைச்சிட்டு வந்தேன்னான்னு கிண்டல் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.. அந்த இன்சிடனை இப்போது நினைச்சாலும் சிரிப்புதான் வருது..

அதுக்கப்புறம் என்னுடைய இரண்டு தோழிகள் சொப் ஸ்டிக் வாங்கி கொடுத்து வகுப்பில் டீச்சர் இல்லாத சமயங்களில் அதை எப்படி உபயோகிப்பதுன்னு சொல்லி கொடுத்தாங்க.. ஆனால், இப்போது வரைக்கும் அந்த சொப் ஸ்டிக் நமக்கு எட்டாத தூரத்தில்தான் இருக்கு!!! கையில் சாப்பிடுவதுதான் பெஸ்ட்டுன்னு தோணுது!!!

Wednesday, February 14, 2007

162. பிப்ரவரி 14 தேதியா!!!

பிப்வரி 14 இன்னைக்கு..

எல்லாமே ரெண்டு ரெண்டா தெரியுது!!! (போச்சா? இதுதான் முடிவா? ஏற்கனவே 4 கண்ணு எனக்கு (specky).. இப்ப என்ன எட்டா?)

கேம்பஸே ர் ரா தெரியுது!!! (அப்பாடா.. atleast இன்னும் நான் கலர் ப்லைண்ட் (colour blind) ஆகலை..)

என்ன கதைன்னு கேட்குறேங்களா? (ஆமா.. நீங்க கேட்காட்டினாலும் நான் சொல்வேனே! இல்லைனா இன்னைக்கு எழுத ஒன்னும் இருக்காதே! :-P)

ப்ளாக்லேயிருந்து ஆரம்பிக்கலாமே:

ஒரு வாரமா நம்ம ப்ளாக் தோழர்கள் "ஏன் ஃபிரண்ட், காதலர் தினம் வருது.. ப்ளாக்கை எடிட் செய்யலையா?"ன்னு கேட்டாங்க..

நான் வேற இப்பத்தான் ஒரு 4 மாசம்மா இங்கு வந்து குப்பை கொட்டுறதுனாலே, எப்போதெல்லாம் சுத்தம் செய்யனும், என்ன செய்யனும்ன்னு ரூல்சஸ் தெரியலை..

உடனே நம்ம தோழர்கள் சொன்னாங்க:

"அது ரொம்ப ஈசி.. முதல்ல உங்க வலையை சிவப்பு அல்லது பிங்குக்கு மாத்துங்க!"

"என் ப்ளாக் சிவப்பாத்தானே இருக்கு?" இது நான்.

"அட.. அப்பன்னா பிங்குக்கு மாறுங்க"

"பிங்க்கா?? அதெல்லாம் ஒரு ரா??.... க்ர்ர்ர்ர்... த்த்தூ...."

"அப்படியெல்லாம் சொல்லப்படாது! நல்லா கேட்டுக்கோ! பிங்க் உனக்கு பிடிக்கலைன்னா உன்னை பெண்கள் லிசஸ்டிலேயே சேர்த்துக்க மாட்டாங்க.. ஆமா!!"

"அட.. இது என்ன கண்டிஷன்? புதுசா இருக்கே! ஓ அதான் திருமதி. சரவணன் பிங்க் கலர் சாரில திருமணம் செஞ்சுக்கிட்டாங்களா?"

"யாருப்பா அது? Mrs. Saravanan?"

"அதான், அடாவடியா துருதுருன்னு நிறைய படத்துல நடிச்சாங்களே! ஜோதிகான்னு கூட சிலர் கூப்பிடறதா நம்ம தலைவருடைய சிட்டுக்குருவி சொல்லிச்சு.."

"Out of topic எல்லாம் போகாதீங்க ஃபிரண்ட். உங்க தெம்ப்லேட் (template) கலர் மாத்த போறீங்களா இல்லையா!!!!"

நண்பர் கடுப்பாக..
நான் "அய்யோ மிரட்டாதீங்க தோழரே! வீராசாமி விமர்சனர்த்தை வலையில் படிச்சு.. பாவம் நான் பயந்து போய்.. இன்னும் அந்த பயத்திலிருந்து மீளவே இல்லை. அதுக்குள்ள இன்னொன்றா? நான் மாத்திருறேங்க.."

அப்புறம் என்ன.. நம்ம ப்ளாக்லேயும் என்னென்னவோ சேர்த்தும்.. சிலவைகளை கழித்தும்.. எனக்கு பிடித்த கலரையும் சேர்த்தேன்.

ஆனாலும் அந்த பிங்க் கலரை போடனும்ன்னு துளி கூட ஞாபகம் இல்லை.. எல்லாமே நீல மயமாக மாறிட்டது.. இப்போ THe WoRLD oF .:: MyFriend::.-இல் நான் ஒருவர் மட்டும் பதிவர் இல்லை.. Official-ஆக இன்னொருவரும் இணைந்திருக்கிறார்..

Let me welcome Mr. Siddarth with a big round of applause.... :-D (இவர் பதிவு எழுதினாலும் என் பெயரில்தான் எழுதுவார். அதுனால் எது அவர் எழுதினார்.. எது நான் எழுதினேன் என்ற சின்ன பிள்ள தனமா கேக்கக்கூடாது.. சொல்லிட்டேன் ஆமா!) :-P

அப்புறம் நேற்று செந்தழல் ரவியோட காதலர் தினம்: என்ன உடை - என்ன அர்த்தம் என்பதை படித்தேன். அட ஆமா: ரவி, நீங்க சொன்னது ரைட்தான் போல.. :-P என் ப்ளாக் நீலத்துல இருக்கு.. அப்ப நான் சும்மாத்தானிருக்கிறேன்.. ஃப்ரீரீரீ...

சரி.. இப்போ என்னை சுத்தி நடந்ததை சொல்லுறேன்.. நேற்று ஏதோ கொஞ்சம் ஃப்ரீயாத்தான் இருந்தேன். ஒருத்தி சும்மா இருந்தா எப்படித்தான் மத்தவங்களுக்கு மூக்குல வேர்க்குமோ தெரியாது.. நம்ம நண்பர்கள் எல்லாம் என் ரூம்ல வந்து கூடிட்டாங்க.. ஏதோ மாநாடு நடக்குற ஒரு எஃபேக்ட்டு..

ஒரே தாமாஷ்தான் அதுக்கு பிறகு.. பேசினோம்.. அரட்டை அடிச்சோம்.. கிண்டல் பண்ணோம்.. அப்படியே போயிக்கிட்டே இருந்தது.. திடீர்ன்னு:

"சுட்டும் விழி சுடரே..
சுட்டும் விழி சுடரே..
என் உலகம் உன்னை சு..."


"ஹலோ.."
பார்த்தால் என் தோழியின் கைத்தொலைபேசி ரிங்டோன்..

"Hey, will be back in a while.."ன்னு சொல்லிக்கிட்டே ரூம்மை விட்டு வெளியே போயிட்டாங்க..

சரி ஏதோ பர்சனல் கால்ன்னு நாங்கள் பேச்சை தொடர்ந்தோம்..

"பாக்காதே என்னை பாக்காதே..
கொட்டும் பார்வையாலே என்னை பார்க்.."
வரி முடியறதுக்குள்ளே

இன்னொருத்தவங்க "Urgent.. சீக்கிரமா வந்துடறேன்"ன்னு சொல்லி நழுவிட்டாங்க..

அவங்க பின்னாலேயே இன்னொருத்தவங்க "கீழே வரைக்கும் போயிட்டு வந்துடறேன்"ன்னு நழுவிட்டாங்க..

இன்னொருத்தவங்க இங்க நடக்கிறதையெல்லாம் கவனிக்காமல் மும்முறமா குறுஞ்செய்தி எழுதுறலேயே பிசியா இருந்தாங்க..

நான் அவங்களை கூப்பிட "நீ என்னை ரொம்பவே கிண்டல் பண்ற.. நான் கோபிச்சுகிட்டு போறேன்.."ன்னு கிளம்பிட்டாங்க.

பார்ரா... ரூமை விட்டு வெளியே போறதுக்கு இப்படியும் ஒரு வழியா?

நான் கடுப்பாகி "யார் யார் கிளம்பனும்ன்னு நினைக்கிறீங்களோ, இப்பவே கிளம்பலாம்.. ஒன்னு ஒன்னா கலண்டுக்கிறது நல்லா இல்ல சொல்லிட்டேன்"ன்னேன்..

ஒரு கும்பலா சிலர் எழுந்திருச்சி கிளம்பிட்டாங்க..

அதுலேயும் கடைசியா வெளியானவங்க என் பக்கத்தில வந்து நின்னு என்னை பாவமா பாத்தாங்க.

நான்: என்ன?
அவங்க: எவ்வளவு பேர் வெளியானாலும் நீ தாங்கிகிற.. நீ ரொம்ம்ம்ம்பபப நல்ல்லவ.. அவ்வ்வ்வ்..

சொல்லிக்கிட்டே ஓடிட்டாங்க.. என்னை வெறுப்பேத்துறதுக்குன்னே ஒரு க்ரூப் இப்படி சுத்திக்கிட்டு இருக்கு போல.. என்ன பன்றது.. என் தலைவிதி..

சரி போனால் போகட்டும் போடான்னு சொல்லிட்டு மிச்சம் இருக்கிற கூட்டணிய எண்ணினா... 1... Count again.. 1....அடப் பாவமே! என்னையும் சேர்த்து மொத்தமே 2 பேர்தான்...

என் தோழி: "கவலைப் படாதே! நான் இருக்கிறேன்.. எல்லாருக்குமே பார்த்னர் இருக்கு.. காதலர் தினம் கொண்டாட கிளம்பிட்டாங்க.. நமக்குதான் இல்லையே.. நீ உன் நண்பர்கள் நல்லா கவிதை கதையெல்லாம் எழுதியிருக்காங்கன்னு சொன்னியே.. வா.. நாம் அதையெல்லாம் படிக்க...."

"காதல் எனும் கடலுக்குள் நான் விழுந்தேன்..
கரையில் வந்த பின்னும் நான் விழுந்தேன்.."

இது அவளுடைய குறுஞ்செய்தி ரிங்டோன்..

"ஏய்.. இது காதல் வைத்து படல்தானே.. வரிகள் நல்லா இருக்கு"ன்னு நான் சொன்னேன்..

பதிலுக்கு அவள் : "அந்த படம் என் கிட்ட இருக்கு.. நான் போய் எடுத்துட்டு வரேன்"ன்னு சொல்லி ஒரே ஓட்டமா ஓடிட்டாள்..

அப்போ புரிஞ்சுக்கிட்டேன்.. இவளும் எஸ்கேப்ன்னு..
என்னங்க பன்றது.. எல்லாரும் ரெண்டு ரெண்டா சுத்துறாங்க..
நான் இன்னும் தனி ஆள்தான்.. சரி.. நமக்கு வாய்த்தது அவ்வளவுதான் நினைச்சிகிட்டு டவுன்லோட் பண்ணி வைத்திருந்த தீபாவளி படத்தை தனிமையில் உட்கார்ந்து பார்த்தேன்.

எல்லாரும் சொல்றதை போல நானும் என் பங்குக்கு வாழ்த்து சொல்லிகிறேன்:

காதலர்களாய் சுற்றுபவர்களுக்கு : "காதலர் தின வாழ்த்துக்கள்!"

ஒற்றையாய் இருப்பவர்களுக்கு : (பெப்சி உமா தோனில்) நான் என்னங்க சொல்ல போறேன்.. பலர் வருஷ கணக்கில முயற்சி ஷெய்திருப்பீங்க.. ஆனா லைன் (பொண்ணு / பையன்) கிடைச்சிருக்காது. சிலர் இன்னைக்குதான் முயச்ஷித்திருபீர்கள். உடனே கிடைத்திருக்கும். வருசத்துல 365 நாள் இருக்குங்க.. முயற்சி பண்ணுங்க.

(இது என்னுடய குரலில்) காதலர்கள் ஏன் காதலர் தினத்தை ஸ்பெஷலா கொண்டாடுறாங்கன்னு தெரியுமா? வருசத்துல 365 நாட்கள்ல 364 நாட்கள் எதுவும் ஸ்பெஷலா நடக்கததுனால இந்த ஒரு நாள ஸ்பெஷலா ஆக்கிகிட்டாங்க.. அப்ப காதலர் இல்லாதவங்களுக்கு 365 நாட்களும் ஸ்பெஷலான நாட்கள்தானே!! (அப்படின்னு நாமலே நினைச்சு சந்தோசப்பட்டுக்க வேண்டியதுதான்..)

ஒற்றையாய் சுற்றும் அன்பர்களுக்கு "அன்பர் தின வாழ்த்துக்கள்!"

Thursday, December 14, 2006

134. கதயல்ல.. நிஜத்தின் மூன்றாம் பகுதி

கதையல்ல நிஜத்தின் மூன்றாவது பகுதி இது. ஒன்றையும் இரண்டையும் நீங்கள் இங்கே படிக்கலாம்.


அங்கே போனது நான் எனக்கு தேடி கொண்ட ஆப்புன்னு சொன்னேன் அல்லவா?


அன்றிலிருந்து அவர்கள் சேட்டை அதிகம் ஆனது..

அதில் சில இங்கே:

1- மின்சார கண்ணாவில் விஜய் உட்காரும்போது மோனிஷா அவர் நாற்காலியை இழுப்பது நினைவில் இருக்கிறதா? அதேபோல் எனக்கும் செய்தனர் (அப்போது இந்த படம் இன்னும் வெளிவராத காலம்). விஜய் அதை அறிந்து நாற்காலி உள்ளதைபோல் பாசாங்கு செய்வார். ஆனால், நான் கீழே விழுந்தேன்.

2- எழுதும்போது பென்சிலை தட்டிவிடுவது.. என்னால் குறிப்பிட்ட நேரத்தில் எழுதமுடியாமல் போய் ஆசிரியரிடம் திட்டு வாங்கியுள்ளேன்..

3- ஓவிய வகுப்பில் என்னுடைய ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டு வகுப்பு நோட்டிஸ் போர்ட்டில் ஒட்டியிருந்தபோது, என் காதுபட அந்த ஓவியத்தை அசிங்க அசிங்கமாக திட்டியது.. அதை கேட்டு நான் அழுதது..

4- இடைவேளை நேரத்தில் நான் சாப்பிட வாங்கிய பொருளை கீழே தட்டிவிட்டு, எதுவும் தெரியாமல் நடந்துபோனது...

இப்படி பல சம்பவங்கள். மேலே உள்ளது சின்ன சேம்பில் மட்டுமே! ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பதிவு போட வேண்டாமேன்னு சுருக்கியது..
இந்த சேட்டைகள் 3 மாதங்களுக்கு தொடர்ந்தது. இவர்கள் செய்த சேட்டைகள் பலவற்றை நான் மறந்துவிட்டேன்.

அதற்க்கு காரணம் அந்த மூன்றாவது மாதத்தில் நடந்த சில சம்பவங்கள்..

மார்ச் மாதத்தில் எங்களுக்கு செமெஸ்டர் பரிட்சை வந்தது. அந்த வகுப்பில் என்னை மிகவும் துன்புறுத்திய அந்த பெண்தான் முதல் மாணவியாம். என்னை வந்து மிரட்டினாள். அவள்தான் இப்போதும் முதலாக வருவாள் என்று. அப்படி அவள் வந்தால், நான் அந்த வகுப்பை விட்டு வெளியாகனும். இதுதான் அந்த பந்தயம்.

"பந்தயத்துக்கு நான் தயார். நீ தயாரா? அப்படி நீ தோற்றால், நீ என்ன செய்ய போகிறாய்?"ன்னு நான் தைரியமாக கேட்டேன்.

நான் ஜெயிப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு ரொம்பவே இருந்தது. அவள் என்னை விட்டு விலகி விடுவதாகவும், இனி என் விஷயத்தில் தலையிடமாட்டேன்னும் சொன்னாள்.

அப்பாடா.. ஒரு வழியா ஒரு பிரச்சனைக்கு கூடிய சீக்கிரத்தில் நல்ல வழி பிறக்கபோகிறதுன்னு மகிழ்ச்சியா இருந்தேன்..

அதன் பிறகு அந்த பெண் படிப்பதை பார்த்து நானே ஆச்சர்யப்பட்டேன்.. எந்த நேரமும் கயில் புத்தகத்தோடு இருந்தாள். படித்து கொண்டே இருந்தாள். சிலர் என்னை "வாப்பஸ் வாங்கிக்கோ! நீ ஜெயிப்பது கஷ்டம்"ன்னு சொன்னாங்க..

பரிட்சை வாரமும் வந்தது. நான் நன்றாகவே செய்தேன். அவளும் நன்றாகவே செய்திருப்பாள்ன்னு நம்பினேன்.. உள்ளுக்குள்ளே ஒரு சின்ன பயம். .. அவள் ஜெயித்துவிடுவாளோன்னு...

பரிட்சை முடிந்து அன்த சனிக்கிழமை.. ஒரு தாத்தா என் கடைக்கு வந்தார். அவர் தினமும் வருபவர்தான்.. ஆனால், எனக்கு ஆச்சர்யம் என்னவென்றால், அவருடன் வருவது அதே பெண்தான்.
அய்யோடா! இங்கேயுமா?
அவர் என்னை பார்த்து நலம் விசாரிக்கயில் அவளின் முகத்தில் கோபதில் சிவந்தது. அந்த வயோதிகரை ஏசினாள்.

அவர் கூலாக பேசினார்:
"இது யாருன்னு தெரியலையா? தீபாவளிக்கு நம் வீட்டுக்கு வந்தாங்களே! புதுசா இன்கே கடை வச்சிருக்காங்கன்னு நான் உன் கிட்டே சொன்னேனே! அவங்க மகள்தான். அன்னைக்கு வீட்டுக்கு இந்த பிள்ளை வந்தபோது நீ பூலி பண்ணினே! ஆனால், 4 மாதத்துக்கு பிறகும் அதை ஞாபகம் வைத்திருக்கிறாயே!!"

எனக்கு அப்போதுதான் புரிந்தது. இந்த இடத்துக்கு மாறி வந்து நான் போன முதல் வீடு அந்த பெண்ணுடைய வீடுதான். ஆனால், எனக்கோ, அவளுக்கோ.. இரண்டு பேரும் அடையாளம் தெரியாமல் இவ்வளவு நாட்களாக இருந்திருக்கிரோம்.

பெற்றோர்கள் நண்பர்கள்.. பிள்ளைகள் எதிரி!!!

அவள் நடந்ததை தன் வீட்டாரிடம் சொல்லியிருக்காள் போல.. மறுநாள் அவளின் பெற்றோர் என் கடைக்கு வந்தனர்.

எங்களுக்குள் வளர வேண்டிய நட்பு தப்பான வழியில் கொழுந்துவிட்டு எறிவதை தண்ணீர் ஊற்றி அணைக்க அந்த நால்வரும் பேசி, எங்களுக்கு உண்மைகளை எடுத்துறைத்து, சமாதானம் பேசினார்கள்.

எப்படியோ என் மனமும் இறங்கியது. அவள் மனமும் இறங்கியது..
அடுத்த சீன் என்னனு கேட்குறீங்களா? மறுநாள் பள்ளிக்கு ஒன்றாய் சென்றதுதான். எங்களை பார்த்த அவளின் நண்பர்களுக்கு திகைப்பு.. (கண்ணேதிரே தோன்றினாள் படத்துல கரணும் பிரஷாந்தும் ஒன்றாய் பைக்குல போய் இறங்கியதை பார்த்து கரணின் நண்பர்கள் எப்படி திகத்தனரோ, அப்படியேதான்).. (ஆனாலும், அப்போது இந்த படம் வெளிவரவில்லை..)

நீங்கள் திட்டுவது புரியுது. அதனால், மற்றவை இன்னொரு நாளைக்கு.. இன்னொரு பதிவில் தொடரும்...

Wednesday, December 06, 2006

121. கதையல்ல.. நிஜம்!!! 2

என் பள்ளிக்கூட மலரும் நினைவுகளை ஆட்டோகிராப்பா எழுதுனது நல்ல வரவேற்ப்பு கிடச்சது. இது முதல் பாகத்தின் தொடர்ச்சி.....

நான் அவர்களை தாக்கும்முன், என் பெயரை யாரோ கூப்பிடுவதைக் கேட்டு; திகத்து; குரல் வந்த திசையை நோக்கி பார்த்தேன். வகுப்பு ஆசிரியை வகுப்பின் முன்னே நின்னுக்கொண்டு என்னை பார்த்து கையசைத்தார்..

"போச்சு! முதல் நாளே ஒரு பிரச்ச்னை செய்து விட்டேன். இதுவரை செய்யாத ஒன்னு!!! இன்னைக்கு க்லாஸ்லேயும் வீட்டுலேயும் பிரம்படி நிச்ச்யம்"ன்னு மனசிலே நினைச்சுகிட்டே அவரை நோக்கி நடந்தேன். மனசில் என்னென்னவோ ஓடிக்கொண்டிருந்தது.

அவர் முன்னே போய் தலை குனிந்து நின்னேன்.. அவர் என் தோளின் மீது கைபோட்டு.. மற்ற மாணவர்களிடம் பேச தொடங்கினார்..

"மாணவர்களே! இவங்க பெயர் அனுராதா. ரொம்ப தூரத்துல இருந்து வந்து நம்ம பள்ளில சேர்ந்திருக்காங்க. உங்களுக்கு பகாங் எங்க இருக்குன்னு தெரியுமா?"ன்னு இவர் கேட்க.. மற்ற மாண்வர்கள் கேள்விக்குறியுடன் வியப்பாக தெரியாதுன்னு பதில் சொன்னாங்க..

என் மனசில "அட, பகாங் இங்க பக்கத்திலதானே இருக்கு! ஒரு மணி நேரத்தில வந்திடலாமே"ன்னு யோசிச்சுகிட்டு இருந்தேன்.

என்னை மறியாதையோடு வாங்க போங்கன்னு டீச்சர் சொல்வது ஆச்சர்யமாக இருந்ததது.

சரி, அறிமுகம் முடிஞ்சாச்சு.. நம்ம இடத்துல போய் உட்காரலாம்ன்னு நகர்ந்த நேரத்துல அவர் என் கையை பிடித்து இழுத்து.. மீண்டும் பேச தொடங்கினார்.

"அனு, அவங்க ஸ்கூல்ல படிக்கும்போது அவங்கதான் first. எல்லா பாடத்திலும் நூற்றுக்கு நூரு. வகுப்புத் தலைவியும் கூட. மாணவர்களே, உங்களுக்கு ஏதும் தெரியலைன்னா நீங்க இவங்க கிட்ட கேட்டு படிச்சுக்கலாம்"...

யம்மாடியோவ்.. என் தலையில ஐஸ் கட்டி இறக்கி வச்சதுபோல் இருந்துச்சு.. கொஞ்சம் நேரத்துக்கு முன் என்னை கேலி செய்த அந்த ரெண்டு பேரையும் திரும்பி பார்த்தேன். அவங்க என்னை ஆச்சர்யமா பார்த்தாங்க. என் புத்தக பையை கீழே போட்ட பையனை பார்த்தேன். அவன் முகத்துல அதே ஆச்சர்யம் தெரிஞ்சாலும்.. அவன் முகத்துல கொபமும் இருந்ததௌ. எதுக்கு அந்த கோபம்ன்னு தெறியல.. ஆனால், நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன்.

அந்த சந்தோஷம் ரொம்ப நேரம் நிலைகாதுன்னும்.. எனக்கு இறக்கி வச்ச அந்த ஐஸ் கட்டி மற்ற சிலருக்கு எறியும் எண்ணைன்னு அப்போ எனக்கு தெரியாது!!!!

டீச்சர் கொஞ்சம் நேரம் யோசிச்சுட்டு.. "நீ அங்கே உட்கார வேண்டிய ஆளே இல்லை"ன்னு சொன்னாங்க..

எனக்கும் அதற்க்கு என்ன காரணம்ன்னு தெரிய ஆவலா இருந்ததுனாலே அவரிடம் கேட்டேன். அவர் ஆறாக பிரிக்க பட்ட க்ரூப்பை காட்டி A+, A-, B+, B-, C+ மற்றும் C-ன்னு சொன்னார்..

ஒவ்வொருவருடைய திறமையை வச்சு இப்படி ஆறு ஆறாக பிரிக்கப்பட்டதாக சொன்னார்.. அந்த வகுப்ப நான் திரும்பி பார்த்தேன். என்னை தள்ளி விட்ட அந்த பையன் B+ க்ரூப்பில் அமர்ந்திருந்தான். என்னை கேலி செய்த மற்ற இருவர் உட்கார்ந்திருந்ததௌ C-யில்..

எனக்கு உடனே A+ போகனும்ன்னு ஆசை வந்தது.. எனக்கு முன் டீச்சர் அங்கே போய் யார் வேற க்ரூப் மாற போறீங்கன்னு கேட்டங்க.. டீச்சரே கட்டளை இடாமல் ஒவ்வொருவரின் சம்மதம் கேட்டார். (டெமோக்ராசி) ஹீ ஹீ ஹீ..

ஆனால், யாரும் அங்கே இருந்து மாற முன் வரவில்லை..

டீச்சரும் நான் உட்கார்ந்திருந்த இடத்திலேயே என்னை போய் உட்கார சொன்னார். ஆசை காட்டி மோசம் செய்துவிட்டரோன்னு எனக்கு தோன்றியது அப்போது.

அவரும் படித்து கொடுக்க ஆரம்பித்தார். அவர் அடிகக்டி கேல்விகள் கேட்டார். மற்றவர்களும் பதில் சொல்லிகொண்டிருந்தனர். நான் தனிமையில் இருந்தேன். எந்த கேள்விகளுக்கு யாராலும் பதில் சொல்ல முடியலையோ, அந்த கேல்விகளை என்னிடம் கேட்டார். நான் கடுப்பில் பதில் சொன்னேன். (பதிலை சொன்னாலும் சொல்லாட்டினாலும் என்னுடைய இடம் இதுதானேன்னு ஒரு விரக்த்தி)

அந்த பாடம் முடிந்து அந்த டீச்சர் வகுப்பை விட்டு வெளியாகும்முன் என்னை கூப்பிட்டு A-க்கு மாற சொன்னார்.

எனக்கு ஆச்சர்யம் கலந்த ஒரு வித சந்தோஷம். கூடவே ஒரு சின்ன கவலை (பேராசை)... A+க்கு போக முடியலையேன்னு..

நான் அங்கே போய் உட்கார்ந்தததும் ஒரு 30 பேர்... என்னை சுத்தி வந்து நின்னாங்க.. (டீச்ச்ர் அப்போது வகுப்பில் இல்லைன்னு கவனிக்கவும்)..
எல்லாரும் என்னை முறைச்சு பார்த்தாங்க..

ஒரு பொண்ணு (இவளை எங்கோ பார்த்த ஞாபகம்) வந்து பேச ஆரம்பித்தாள். "டீச்சர் உன்னை பத்தி பெருமையா சொன்னாங்கன்னு நீ பெருமை படாதே! ஒரே மாதத்தில இந்த வகுப்பை விட்டு வெளியே அனுப்புகிறோம் பார்!!!"ன்னு கோபமா பேசினாள்.

என்னடா! இரண்டாம் வகுப்பில் கேங்ஸ்தரிசமான்னு யோசிக்கிறீங்களா? உண்மைங்க!! நான் அனுபவித்தது.

நல்ல வேளை.. அவள் அடுத்த வரி பேசுவதற்க்குள் மலாய் மொழி சொல்லி கொடுக்கும் ஆசிரியை உள்ளே வந்தார். வந்தவுடன் ஒரு பரிட்சை தந்தார்..

அப்போதே மார்க் பண்ணி, அதற்கேத்தவாரு மாண்வர்களை இடம் மாற்றி அமர வத்தார். நானும் நான் ஆசைப்பட்ட அந்த A+க்கு போனேன்..

எனக்கு ஆப்பு நானே தேடிக்கொண்டேன்னுதான் சொல்லனும்!!! அங்கே உட்கார்ந்திருந்த 6 பேரும் ரொம்ப க்லோஸ். நான் அங்கே போனதால், அவர்களில் ஒருவர் அங்கிருந்து வெளியாக வேன்டி இருந்ததது. அங்கே தலைவி என்னை மிரட்டிய அதே பொண்ணுதான்...

அவர்களின் கண்களில் அப்படியொரு கோபம்..

இவர்களின் சேஷ்டைகள் ---> தொடரும்.....

Thursday, November 30, 2006

112. இது கதை இல்லை.. நிஜம்!!!

சேரன் ஆட்டோகிராப் மூலமா அவரோட காதல்களை நினைவு கூர்ந்தார்.. இப்போ தங்கர் பச்சன் தன்னோட பள்ளி கூடம் மூலமா என்னத்தை நினைவு கூர போகிறார்ன்னு தெரியலை.

ஆனால், எனக்கு என் பள்ளி கூட வாழ்க்கையை பின்னோக்கி யோசிச்சப்ப நான் ஒன்றை கண்டுப்பிடித்திருக்கிறேன். ஒரே அனுபவத்தை மூன்று முறை வேறு வேறு கால கட்டத்தில் நான் அனுபவித்ததுதான்..

என் பள்ளி வாழ்க்கையை மூன்றாக பிரிக்கலாம்..
1- ஆரம்ப பள்ளி காலம்: தமிழ் மீடியம் (6 வருடம்)
2- இடை நிலை பள்ளி காலம்: மலாய் மீடியம் (5 வருடம்)
3- உயர் கல்வி காலம்: ஆங்கில மீடியம் (5 வருடம்) --> இதை இன்னும் தாண்டவில்லை

மூன்று வெவ்வேறு காலத்தில் மூன்று வெவ்வேறு மீடியத்தில் படிக்க ஆரம்பித்த போதுதான் அந்த சம்பவங்கள் நடந்தன..

1- ஆரம்ப பள்ளி காலம்

மலேசியாவில் ஆரம்ப பள்ளி 7 வயதில் ஆரம்பமாகும். தமிழ், மலாய், ஆங்கிலம் என்று மூன்று மீடியத்தில் இது உள்ளது. நாம் எந்த இனத்தை சார்ந்திருந்தாலும், மூன்றில் ஏதாவது ஒன்றில் நாம் சேரலாம். இதில் நம் இனத்தவருக்குதான் advantage.. மலாய்காரர்கள் மலாய் பள்ளியில்தான் சேர்வார்கள். சீனர் மலாய் அல்லது சீன பள்ளியில் சேர்வார்கள். ஆனால், நம் இனத்தவர் தமிழ், அல்லது மலாய் அல்லது சீன மீடியத்திலும் சேர்வார்கள். இது நாம் பெருமை படும் ஒரு விஷயம்.

நான் தமிழ் பள்ளியில்தான் சேர்ந்தேன். தாய் மொழியை காக்க, நம் மொழியை நாம்தானே கற்றுக்கொள்ள வேண்டும் என்று சிலர் சொல்லி தற்பெருமை அடிக்கிறார்களே அதற்காக இல்லை. அப்படி நான் சொன்னாலும் நீங்க நம்ப மாட்டீங்க. ஏன்னென்றால், அப்போ எனக்கு 7 வயதுதான். நான் அரட்டை அரங்கத்தில் அருமையாக பேசும் சின்ன பிள்ளைகள் போல் பேசும் வல்லமை படத்தவள் அல்ல.

வீட்டில் தமிழிலேயே பேசி பழகின எனக்கு அந்த முதல் வகுப்பு(காராக் ஆரம்ப தமிழ் பள்ளி) எனக்கு ஒரு அன்னியத்தை தர வில்லை. எல்லாருடனும் சகஜமாக பழகினேன். வகுப்பின் தலைவியும் நானே!! ஒரு வருடம் நன்றாக ஓடியது. ஒவ்வொரு நாளும் எப்போ காலையாகும்.. பள்ளிகூடம் போகனும்ன்னு ஆர்வமாய் இருந்தேன்.

நான் இரண்டாம் வகுப்பின் நுழைவதற்க்கு ஒரு மாதத்திற்க்கு முன் என் பெற்றோர் சிலாங்கூருக்கு மாற்றலாகி வந்தனர். நானும் அவர்களோடு வந்து பத்துமலை தமிழ் பள்ளியில் சேர்ந்தேன். (பத்துமலைன்னதும் உங்களுக்கு தொணுகிற விஷயம் தைபூசம்தானே! ஆமாம், இது முருகனின் தலம். அந்த மலையின் கீழே, கோவில் காம்பவுன்ட் உள்ளேதான் அந்த பள்ளி அமைந்திருந்தது).

என் பின்னால் ஒரு கூட்டமே நின்று தோல் கொடுத்த நண்பர்கள் அங்கே இல்லை. நான் ஒரு தனி மரம் அப்போது. என்னை என் தந்தை அந்த வகுப்புக்கு அழைத்து சென்றார். எல்லாருமே அனியம் எனக்கு!! என்னை ஒரு மாதிரியாய் பார்த்தார்கள். ஏனெனில், அவர்கள் அப்போது பகாங் என்ற ஊரை கேள்விப் பட்டதில்லை போலும். வகுப்பு மாணவர்கள் 6 க்ரூப்-ஆக பிரிக்கப் பட்டிருந்தனர். அந்த 6 க்ரூப்பும் தனி தனி க்ரூப்ன்னு அப்போ எனக்கு தெரியலை. ஒரு மேஜை காலியாக இருப்பதை பார்த்துட்டு என் அப்பா என்னை அங்கே உட்கார சொல்லிவிட்டு போய்விட்டார்.

கொஞ்ச நேரத்தில் ஒருவன் வந்தான்.

"ஏய்.. எந்திரி!!!" என்று சத்தம் போட்டான். நான் ஏன் என்று அமைதியாக கேட்டேன்.

"இது என் இடம். உன்னை போன்றவர்கள் அதோ அங்கேதான் உட்காரவேண்டும்" என்று சொல்லி ஒரு இடத்தை காட்டினான். என் புத்தகப்பையை கீழே போட்டான்.

அப்போது அவன் என்ன சொல்ல வந்தான்.. ஏன் நான் அங்கு போய் உட்கார வேண்டும்ன்னு சொன்னான்? என்னகு ஒன்றும் புரியவில்லை. ஏண்டா இந்த பள்ளிக்கு வந்தோம்! என் அப்பா அம்மா இங்கு மாறி வந்தார்கள்ன்னு அவங்க மேல் கொஞ்சம் கோபம் வந்தது.

நானும் அவன் சுட்டி காட்டிய இடத்தில் போய் அமர்ந்தேன். அங்கே ஏர்கனவே இரண்டு மாணவர்கள் அமர்ந்திருந்தனர். ஆனால், அங்கே இருந்ததோ 6 மேஜைகள். நானும் இங்கே உட்காரலாமா?"ன்னு கேட்டு அந்த இரண்டு பேர் உட்கார்ந்து இடத்தில் உட்காராமல் கொஞ்சம் தள்ளீயே உட்கார்ந்தேன். ஏன் வம்பு?

நான் உட்கார்ந்ததும் அந்த இரண்டு பேரும் (ஒரு பருமனான பையன்; ஒரு குள்ளமான மாணவி) குசுகுசுன்னு பேசினாங்க.. என்னை பற்றிதான் பேசுறாங்கன்னு எனக்கு நல்லா தெரிஞ்சது..
ஒரு முறை அந்த வகுப்பை உட்கார்ந்த இடத்திலிருந்தே சுற்றும் முற்றும் பார்த்தேன். சிலர் என்னை பார்த்துட்டு அவங்களுக்குளேயே பேசிக்கிட்டாங்க. சிலர் அவர்களோட நண்பர்களுடன் பேசி சிரிசுட்டு இருந்தாங்க. வகுப்பாசிரியர் மாணவர்களின் பெற்றோர்களிடம் ரெஜிஸ்திரேஷன் செய்து பணம் வாங்கி கொண்டிருந்தார்..

கொஞ்ச நேரத்தில் அந்த குண்டு பையனும் குட்டை பெண்ணும் என் பக்கத்தில் வந்து உட்கார்ந்துட்டு என்னை பற்றி விசாரிச்சார்கள். அவர்கள் கேட்கிற கேள்விகளுக்கெல்லாம் நான் பதில் சொன்னேன். ஆனால், அவர்கள் என் அப்பா அம்மா பேரைக் கேட்டுவிட்டு என் முன்னாடியே கிண்டல் செய்தார்கள். எனக்கு மூக்கின் மேலே கோபம் வந்தது. அதுவரை நான் யாரையும் அடித்தைல்லை. ஏனென்றால், இப்படிப்பட்ட நிலையில் நான் என்னாலும் இருந்ததில்லை. அன்று வந்தது. பக்கத்தில் கல் இருந்தால், அதை தூக்கி அந்த குண்டன் தலையில் போடனும் போல இருந்தது. பளார்ன்னு அந்த குட்டச்சிய அறையனும் போல இருந்தது.

இடத்தை விட்டு எழுந்தேன். இரண்டு பேரும் என்னை பார்த்து திகைத்தனர். நான் அடுத்த செயல் செய்யும் முன் என் பேரை யாரோ கூப்பிட்டு திகைத்தேன்.

பதிவு ரொம்ப நீளமாக ஆயிடுச்சு. சோ, இந்த பதிவை தொடரும்ன்னு போட்டு முடிச்சுடுறேன்.. இன்னொறு பதிவுல தொடருகிறேன். :-D

Sunday, November 19, 2006

காட்டு தீ போல..

நேற்று பதிவுக்கும் சேர்த்து இன்னைக்கு ரெண்டு விஷயம் பதிவாய் போடுகிறேன். கீழே உள்ள படத்தை பெரிதாய் பார்க்க அதன் மேல் க்ளிக் செய்யவும்.இது சைவமா அசைவமா?அது மட்டும் இல்லை. ஒரு தேரை உள்ளே இருக்குன்னு தெரியாமல் பேக்கிங் செய்த இந்த கம்பெனியில், மற்ற பேக்கெட்டில் என்ன என்ன இருக்குமோ???நீங்கள் இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சரி, இன்னைக்கு உள்ள இன்னொரு பதிவு என்னை பற்றி. ஞாபகம் வருதே!! ஞாபகம் வருதே!!!

என் பள்ளியில எனக்கு கொஞ்சம் power & popularity கூடதான். எனக்கு போதிக்காத, எனக்கு தெரியாத ஆசிரியர்களுக்கும் என்னை தெரியும்ன்னா பாருங்களேன்!

எனக்கே ஆச்சர்யமான ஒரு விஷயம்ன்னா, அப்போ நான் ஐந்தாம் படிவம் படிச்சுகிட்டு இருந்தேன். என்னோட additional mathematics ஆசிரியை பிரசவத்துக்காக இரண்டு மாத லீவு போட்டுட்டாங்க.
அவங்க இல்லாதபோது, நாங்க அந்த பாட பீரியட்டில் (period) ஆடாத ஆட்டம் ஒன்னா ரெண்டா?

எங்க அட்டகாசத்த தாங்காம, எங்க வகுப்புக்கு புதுசா ஒரு டீச்சரை நியமிச்சாங்க.. அவங்க தற்காலிக ஆசிரியர். அதுவும் அன்னைக்குதான் அவங்க அந்த பள்ளிக்கே வரும் முதல் நாள். எங்க Physics
டீச்சர் (ரொம்ப நல்ல டீச்சர்), முதல் நாள் எங்கள் சேட்டையை குறைச்சுக்க சொன்னதால், அவங்க வேண்டுகோளுக்கு கட்டுபட்டு அவங்களை ரேக்கிங் பண்ண கூடாதுன்னு முடிவு பண்ணினோம்..

அந்த டீச்சரும் புன்னகைத்தவாரே வகுப்புக்குள்ளே வந்தார். ரொம்ப இளமையாகவும் அழகாகவும் இருந்தார். 23-24 வயதுதான் ஒருக்கும் அவருக்கு.

சரி.. என்ன அந்த வியப்பான விஷயம்? சொல்லவே இல்லைன்னு நீங்க கேட்கிறது என் காதில் விழுகிறது..

ஒரு புது ஆசிரியர் வகுப்புக்குள்ளே வந்தால் அவங்க செய்யும் முதல் விஷயம், அவங்க புத்தகத்தை மேஜை மேலே வைத்துவிட்டு அவரை அறிமுகபடுத்துவார், இல்லையா?

இவர் அதை செய்யவில்லை.. அப்படி என்ன செய்தார்?

என்னோட வகுப்புல சீனர், மலாய், தமிழ்ன்னு மூனு இனத்தை சார்ந்தவர்களும் இருந்தார்கள். என்னுடைய வகுப்பு அறிவியல் பிரிவைக்கொண்ட அதுவும் முதல் வகுப்பாக இருந்ததாலேயும், என்னுடைய வகுப்புல சீனர்கள்தான் ஜாஸ்தி. இங்கு சீனர்கள்ன்னு சொன்னாலே நல்ல படிப்பவர்கள்ன்னுதான் பொருள். ஏன்னா ஒவ்வொரு வருஷமும் அவங்கதான் முதல்ல வருவாங்க.

எங்க batchலதான், தமிழ் மாணவர்கள் அறிவியல் பிரிவுல அதிகம்ன்னு சொல்லலாம். அப்போ, 6 தமிழ் மாணவிகளும் 2 தமிழ் மாணவர்களும் இருந்தோம். நான் பொதுவாவே வகுப்புல முன்னாடிதான் உட்காருவேன். எதுக்குன்னா, அப்பதானே வர்ர போர ஆசிரியர்களை நல்ல கலாய்க்க வசதியா இருக்கும்!! மற்ற என் தோழிகள் 5 பேரும் ஒன்னா உக்காருவாங்க..

இந்த புது டீச்சர் வந்ததும் வராததுமாக என் தோழிகள் உட்கார்ந்திருக்கும் இடத்துக்கு போய், என் பெயரை சொல்லி.. உங்களில் யார்ன்னு கேட்டாங்க..

என் தோழிகள் என்னை திரும்பி பார்க்க.. நான் அவர்கள் இடத்துக்கு போக.. என்னன்ன்னு கேட்க்க.. அவங்களும் அதை சொல்ல.. எனக்கு ஆச்சர்யாம இருந்தது.

நான் முன்ன பின்ன அவங்களை பார்த்தது கிடையாது. பிறகு எப்படி என்னை தெரியும்? சரி என்ன விஷயம்ன்னு தெரிவதற்க்கு முன், நிலமையை சரி செய்வோம்ன்னு,

நான் "டீச்சர், அந்த பொண்ணு இனனிக்கு லீவு"ன்னு சொன்னேன்.
அவங்க பதிலுக்கு "அந்த பொண்ணு பள்ளிக்கு லீவு போட்டதே இல்லையே!"ன்னு திரும்பி சொன்னாங்க..

எனக்கு என் நண்பர்களுக்கும் ரொம்ப ஆச்சர்யமா இருந்தது. எப்படியோ சமாளிச்சு "நான்" அங்கே இல்லைன்னு நம்பிட்டாங்க..

பிறகு பாடம் போதிக்க ஆரம்பிச்சுட்டாங்க.. நல்லதான் போதிச்சாங்க.. ஆனால், நானும் சில நண்பர்களும் சேர்ந்து எங்க சுட்டி தனத்தை ஆரம்பிச்சிட்டோம்.. அவங்க சொல்லி தரும் ஒவ்வொன்னுக்கும் எடக்கு மடக்கா கேள்வியை கேட்டோம். அவங்களுக்கு பதில் சொல்ல தெரியாமல் முளிக்க.. "டீச்சர், வீட்டுல போய் home work செய்துட்டு, நாளைக்கு பதில் சொல்லுங்க"ன்னு சொன்னோம்.

அவங்களும் சரின்னு சொன்னாங்க.. பிறகு அன்னைகே நான்தான் அவங்க தேடின ஆள்ன்னு மற்ற டீச்சர்கள் மூலமாக தெரிஞ்சுகிட்டாங்க.

வந்து என்னிடம் கேட்டாங்க.. நான் "தெரியாத ஒருத்தங்க கிட்ட பேசகூடாது! எதுவும் வாங்க கூடதுன்னு அம்மா சொல்லியிருகாங்க"ன்னு சொன்னேன். அவங்க அதுக்கு சிரிச்சாங்க..

என்னை எதுக்கு தேடுனீங்கன்னு கேட்டேன். அதுக்கு அவங்க சொன்ன பதில் அனக்கு சிரிப்பத்தான் கொடுத்துச்சு. அவங்க சொன்னது:
"நீ கணித மேதையாமே! Additional Mathematicsல 100% வாங்கினியாமே! சில நேரம் டீச்சருக்கே தெரியாத கணக்கை நீ செய்வாயாமே! நீ வகுப்புல இருக்கும்போது, நான் ஏதாவது பிழையாய் போதிச்சால், என்னை தனியாக வந்து பார்த்து என்ன தப்புன்னு சொல்லு. எல்லார் முன்னுக்கும் சொல்லிடாதே! எனக்கு அவமானமாக போயிடும்".

பிறகுதான் தெரிஞ்சது.. ஏன் எல்லா ஆசிரியருக்கும் என்னை பற்றி தெரிஞ்சிருக்குன்னு! உண்மயில் ஆசிரியர்க்கு செய்ய தெரியாத கணக்கை நான் செய்யவில்லை.. எப்போதும் மாணவர்கள் பரிட்ச்சையில் பதிலளிக்காத சில chapter-களை டீச்சர் வகுப்புல சொல்லி கொடுத்தாலும் யாரும் கேட்க்க மாட்டாங்க. அதுனால, அவங்க அதை படிச்சு கொடுக்க மாட்டாங்க. அது நாளடைவில அவ்ங்க மறந்துடுவாங்க..

நான் அதைதான் செய்வேன். எனக்கு சொல்லி கொடுங்கன்னு அடம் பிடித்தேன்! அவங்க வீட்டுல போய் படித்துட்டு வந்து சொல்லி கொடுக்குறேன்னு சொன்னாங்க. என் நண்பர் ஒருவர் அந்த chapter சம்பந்தப்பட்ட கேள்வியய் அவரிடம் போய் கேட்டபோது, அவருக்கு பதிலளிக்க இயலவில்லை. நான் ஏர்கனவே அதை படித்திருந்ததால், அவர் என்னை செய்ய சொன்னார்.

விஷயம் வேரு விதமாக காட்டு தீயய் போல் பறவிடுச்சு. ஒரே தமாஸு!! ஹீ ஹீ ஹீ