Saturday, October 06, 2007

நட்பெனும் பெயரிலே

நேற்று..
நட்பெனும் பெயரிலே
கலந்தாய்
என்னுள்ளே..

இன்று..
நீ ஒரு மூலையில்
நான் ஒரு மூலையில்
அழுகையும் நினைவுகளும்
அதிகரித்தது நட்பின் ஆழத்தை…

நாளை
தொடருமா?
கேள்விக்குறி வளைந்து நிற்க,
உன் இறுகப் பற்றுதலில்
ஓடி மறைந்தன
ஒவ்வொரு வினாக்களும்…



Send this eCard !



என்னுடைய முதல் கவிதை (ஒத்துக்க மாட்டீங்கன்னு தெரியும்.. :-P)
Specially dedicating this to Asa, Usha & Printha. Miss you girls. :-((

நன்றி: ஜி

Sunday, September 02, 2007

186. பாசமலர் கவிதை - தங்கச்சிக்கு வாழ்த்து

தோழியாய் வந்த தங்கையா
தங்கையா வந்த தோழியா
கேள்விகளை கடந்து நிற்கும்
உறவுகள்

ஆயிரம் ஆயிரம் வாழ்த்துகள்
உன்னை சுற்றி
பெற்றதன் பூரிப்பில் பொற்றோர்
ஒரு புறம்
உன்னை முந்த வேண்டுமே என்ற
கலக்கத்தில் தம்பி
ஒரு புறம்

சக வயதொத்த தோழிகளின்
கிண்டல் ஒரு புறம்
நாங்கள் இவளின் ஆசிரியர்கள்
என்ற பெருமையுடன் ஆசிரியர்க்ள
ஒரு புறம்
படைத்ததின் ஆனந்தத்தில் அந்த
கடவுளும் ஒரு புறம்

மார்தட்டி மகிழ்ச்சி கொள்ளும்
வலையுலக பாசக்கார குடும்பம்
ஒரு புறம்
உன் புன்னகையில் வாய் மொழி மறந்த
இந்த அண்ணனும் ஒரு புறம்

உன் பாதையில் இருக்கும் கற்கள் உன்னை காயப்படுத்த அல்ல உன்னை செதுக்கு வதற்காக. நாளைய சரித்திரத்தின் நாயகி நீ. இன்று போல் என்றும் புன்னையுடன் வாழ்க நீ பல்லாண்டு.


Send this eCard !




அதிகம் பேசிட்டேன்னு நினைக்குறேன்.

மட்டற்ற மகிழ்ச்சியில்
அண்ணன்
பி.கு: பாசத்துக்குறிய அண்ணன் ஒருத்தர் "அனு"ப்பிய கவிதை இது. அந்த அண்ணனுக்கும் அனுமதியில் இதை இங்கே பதிக்கிறேன். :-)