நேற்று விளையாட்டாய் போட்ட ஒரு பதிவு.. இன்று இதன் மூலம் இன்னொரு அருமையான தகவல் கிடைத்திருக்கிறது..
தமிழில் எழுத தெரியாதவர்கள் ஆங்கிலத்தில் இங்கே டைப் செய்தால் தமிழில் சரியான எழுத்துக்களில் மாறுகிறது. ஆனாலும், தமிழ் படிக்கத்தெரியாதவர்கள் இன்னமும் இந்த தமிழ் பதிவுகளை படிக்க முடியாதே என்ற கவலை இருந்தது. ஏனென்றால் என்னுடைய பல நண்பர்களுக்கு தமிழ் படிக்க தெரியாது.
முன்பு அவர்களுடன் தங்கியிருக்கும்போது தினமும் எனக்கு பிடித்த பதிவுகளை படித்துக்காட்டுவேன். இப்போது நாங்கள் அனைவரும் ஒவ்வொரு திசையிலும் பிரிந்து போயிருந்தாலும் போன் போட்டு, "ஹேய், புதுசா ஏதாவது நல்ல/ நீ ரசிச்ச பதிவுகள் இருந்தால் படித்துக்காட்டேன்?" என்று அன்புக்கட்டளைகள் செல்பேசியின் மூலம் வந்த படியேதான் இருக்கின்றன.
நண்பர்களே, இனி உங்களுக்கு தமிழ் படிக்க தெரியலையே என்ற கவலையே வேண்டாம். உங்கள் தமிழ் வலைப்பூவை அப்படியே லத்தின் எழுத்தாக மொழிமாற்றம் செய்தால், நீங்கள் படிக்கலாமே!
இந்த சுட்டியை உங்கள் ப்ரௌஸரில் டைப் செய்யுங்கள்:
http://eemaata.com/indic2latin.php
"Convert a website" என்ற இடத்தில் உங்கள் வலைப்பூவின் முகவரியை எழுதுங்கள்.
உதாரணத்துக்கு: engineer2207.blogspot.com
அது உடனடியாக http://eemaata.com/indic2latin.php?link=engineer2207.blogspot.com -ஆக மாறிடும். இந்த சுட்டியை தட்டிப்பாருங்க.. :-)
அதுமட்டுமல்ல. நீங்கள் நேரடியாக "Transform Text" என்ற பெட்டியில் தமிழில் டைப் செய்து "Transform to Latin" என்ற பட்டனை க்ளிக்கினாலுல் லத்தின் பெட்டியினுள்ளே அந்த எழுத்துக்கள் வந்துவிடும்..
INTERESTING....
இனி, தமிழ் தெரியாதவர்களும் தமிழில் படிக்கலாம்... :-)
IndicUnicode என்ற எழுத்து இதற்கு வேண்டுமாம். அதை தர இறக்கம் செய்ய http://scripts.sil.org/cms/scripts/page.php?site_id=nrsi&item_id=Gentium_download
இந்த அருமையான தகவலை பகிர்ந்துக்கொண்ட நண்பர் நா.கணேசன் அவர்களுக்கு எனது நன்றிகள்.
Wednesday, October 31, 2007
தமிழ் தெரியாதவர்களும் தமிழ் படிக்கலாம்..
Posted by MyFriend at 9:13 AM 23 comments
Labels: அறிவுப்பூர்வமானவை (?)
Thursday, March 15, 2007
169. போர் கொடி தூக்கிட்டாங்கய்யா!!!!
சுத்தி வளைக்காமல் நான் நேரா மேட்டருக்கே வந்துடுறேன் மக்கா!! தல எப்போ சுகாதார துறை அமைச்சர் பதவியை பொற்கொடிக்கு வழங்கினாரோ, அப்பவே நானும் ஒரு மனு போட்டாச்சு! வந்து என் கீ போர்ட்டை கொஞ்சம் சுத்தம் செஞ்சுட்டு போங்கக்கான்னு...
ஆனால், இவங்களுக்கு என் மேலே என்ன கடுப்போ தெரியலை! போர் கொடியை தூக்கிட்டு நிக்குறாங்க..
நான் பச்சை கொடியை தூக்கினா, இவங்க ஸ்ட்ரைக்கிங் பச்சையை தூக்கிட்டு நிக்குறாங்க..
சிவப்பை தூக்கினா, ஸ்ட்ரைக்கிங் சிவப்பை தூக்கிட்டு லுக்கு விடுறாங்க..
காய்ச்சலப்போ வீட்டுல இருக்கும்போது பாக்யராஜ், டி. ஆர் படங்கள் ரொம்ப பார்த்திருப்பாங்க போல..
(எப்படித்தான் அந்த கலர கையில தூக்கிட்டு நிக்குறாரோ! இங்க மலேசியாவிலிருந்து பார்க்கும்போதே எனக்கு கண்ணெல்லாம் கூசுது. உங்களுக்கு கூசலையா?)
சரி மேட்டருக்கு வரேன் மேட்டருக்கு வரேன்னு சொல்லிக்கிட்டே என்னென்னவோ பேசிட்டு இருக்கேன் பாருங்க.. இவங்க கோபத்தை தணிக்கனும்ன்னா ஒரு தேக் எழுதணும்ன்னு வீட்டுப்பாடம் வேற கொடுத்துறுக்காங்க..
தலைப்பு: என்னைப் பற்றி 5 வியர்ட்டான விஷயங்கள்
(யாருடா இப்படிப்பட்ட தலைப்புகளையெல்லாம் கொண்டு வர்றது?)
முதல்ல ஒரு வெள்ளை கொடி காட்டிடுறேன்:

இப்போ தேக்:
1. ஞாபக மறதி
இது எனக்கு பலமா பலவீனமான்னு தெரியலை. சின்ன வயசுல ஓரளவுக்குதான் இந்த வியாதி இருந்தது. என் அப்பா, பாப்பா (நாந்தானுங்கோ!) பெரிய படிப்பெல்லாம் படிச்சு டாக்டரா, கலேக்டரா, தொழிலதிபரா, வக்கிலா (4 இன் 1) ஆகனும்ன்னு ஆசைப்பட்டு மேமோரி ப்லஸ் (Memori Plus) வாங்கி கொடுத்தார்.. மூனு நாலு போட்டல்களை காலி பண்ணிட்டேன். அப்பா வந்து கேட்டார்.
அப்பா: இப்போ படிக்கிறது எல்லாம் ஒன்னும் மறக்கலையே?
நான்: படிப்பா? நான் படிக்கிறேனா?
அம்மா இதை பார்த்துட்டு, எனக்கு மூலிகை மருத்துவம்தான் சரி வரும்ன்னு சொல்லி வீட்டுல வல்லாறை செடியை வளர்த்து, ஒரு நாளைக்கு மூனு வேளையும்:
தண்ணீருக்கு பதிலா - வல்லாறை ஜூஸ்
சமையலில் கருவேப்பிலைக்கு பதிலா - வல்லாறை கீரை
சாக்லேட் மிட்டாய் சாப்பிடனும்னா கூட அதில் வல்லாறையையும் சேர்த்து வச்சு கொடுத்தார்..
ஏன்னா, இந்த பாப்பா(!) பெருசா ஆனதும் டீச்சரா, விஞ்ஞானியா, கணித மேதையா, பெரிய கம்பெனியில மேனேஜரா வரனும்ன்னு இவங்களுக்கு ஆசை.. ஒரு மூனு மாசத்துக்கு வல்லாறையை சாப்பிட்ட பிறகு, என் அம்மா டெஸ்ட் வச்சாங்க..
அம்மா: இன்னைக்கு ஸ்கூல்ல நீ என்ன படிச்ச?
நான்: நான் என்ன படிச்சன்னு கேட்குறதுக்கு நீங்க யாரு?
அவ்வளவுதான்! அம்மாவும் அப்பாவும் தலையில் துண்டு போட்டுட்டு போயிட்டாங்க.
(கடைசியில் அவங்க ஆசைப்பட்ட எதுவும் நான் ஆகாமல், இஞ்சினியரிங் படிச்சு முடிக்க போறேன்.)
அதுக்கப்புறம்தான் தெரியுதே, என் ஞாபக சக்தி எப்படி வேலை செய்யுதுன்னு! யாரிடமாவது ஏதாவது முக்கியமா பேசிக்கிட்டே இருப்பேன். சில நிமிடங்களில் யாரிடமோ ஏதோ பேசினோம் என்று தெரியும். ஆனால், யார், என்ன மேட்டர்ன்னு சுத்தமா ஞாபகமே வராது!
போன்ல, கணிணில ரிமைண்டர் வச்சிருப்பேன். ஆனால், பல சமயங்களில் ரிமைண்டர் ஒன்னு இருக்குன்னே மறந்துடுவேன். இதை பத்தி சொல்லனும்ன்னா ஒரு பெரிய பதிவே போடலாம்ங்க.. அதை பிறகு பார்ப்போம். இப்போ Next போலாம் வாங்க..
2. கோபம்
அப்பன் எட்டடி பாய்ஞா பிள்ளை பதினாரடி பாயும்ன்னு பெரியவங்க சொல்லுவாங்க.. சின்ன வயசிலிருந்தே என் அப்பாவின் கோபங்களை கண்டு (அடியும் வாங்கி!) வளர்ந்ததால், அப்பாவின் கோபத்துக்கு நானும் சளைத்தவள் இல்லை என்று ஆகிவிட்டது. எனக்கும் சரமாறியா கோபம் வரும்.. ஆனால், நான் அதை முடிந்த வரை அடக்கிக்கொள்வேன். நானே எனக்கு கேட்டுக் கொள்வேன் "எதற்கு கோபம்? இதனால் பிரச்சனைகள்தான் கூடுமே தவிர, ஏதும் குறைய போவதில்லை!"
என்னுடைய பல நண்பர்களிடம் எனக்கு கோபம் வரும்ன்னு நீங்க போய் சொன்னா, அவங்க நம்பவே மாட்டாங்க. (நிஜமா!!)
ஆனாலும் சில சமயங்களில் என்னால் என்னையே கண்ட்ரோல் பண்ண முடியாது. அப்போது எரிமலை வெடித்துவிடும்! அது ஒரு குறுகிய காலத்துக்கு மட்டுமே (சில நிமிடங்கள் or சில மணி நேரம்)..
என்னுடைய கேரக்டர் நம்பர் 1 (ஞாபக மறதி) என்னை முழுவதுமாய் ஆட்கொண்டதால் கோபத்தையும் கோபப்பட காரணமான அந்த காரணங்களையும் மறந்துவிடுவேன். (இதனால், ஞாபக மறதி இருப்பது பலமே!!)
இதுனால் நான் என்ன சொல்ல வர்றேன் என்றால், நான் கோபம் கொண்டாலும், சீக்கிரமே தனிந்துவிடுவேன், இதை மனதில் வைத்து பிரச்சனைகளை பெரிது படுத்த வேண்டாம். நன்றி.. ;-)
3. இயந்திர வாழ்க்கை
வாழ்க்கையில் நான் கால அட்டவணை போட்டு அதன் படி நடக்கிறேன் என்று நினைக்கிறீங்களா? அதுதான் கிடையாது!
நான் சொல்லும் இயந்திர வாழ்க்கை: இயந்திரங்களை நம்பி வாழும் வாழ்க்கை.
இப்போழுது நான் உபயோகிக்கும் 5 இயந்திரங்கள்:
1- பர்சனல் கம்பியூட்டர் (Personal Computer)
2- லாப்டாப் (Laptop)
3- நோகியா 6680 (Nokia 6680)
4- ஆக்ஸியா ஏ108 பி.டி.ஏ போன் (AXIA A108 PDA Phone)
5- கைக்கடிகாரம்
இதில் முக்கியமாய், எப்போதுமே கணிணி என் கூடவே இருக்கவேண்டும். குளிக்கும் நேரமும், க்லாஸ் போகும் நேரமும் தவிர்த்து மற்ற எல்லா நேரமும் நான் இருப்பது - என் கணிணியின் முன்தான். அப்படியொரு பைத்தியம் எனக்கு. வேலை, ப்ராஜக்ட், அசைக்ன்மேண்ட், பாடம், படம், மியூசிக், விளையாட்டுன்னு சொல்லிட்டே போலாம். எல்லாமே இந்த கணிணியில்தான். இதோ! இந்த போஸ்ட் நான் எழுதுவதும் இதே கணிணியில்தான்.
என்னை தேட வேண்டும் என நினைப்பவர்கள் எத்தனை மணியாக இருந்தாலும், நேராய் என் ரூமுக்கு வந்துவிடுவார்கள். ஏனென்றால், இங்கேதானே என் கணிணி இருக்கு!!!!
நண்பர்கள் சொல்லுவாங்க: "நீ இந்த கம்பியூட்டர் கட்டிட்டே அழு"ன்னு.. அதுக்கு நன் சொல்வேன்: "நான் ஏன் அழனும்? கம்பியூட்டர் கட்டிக்கிட்டா நான் சந்தோஷமாய்தானே இருப்பேன்.. இப்போ இருப்பது போல!" ;-)
(Actually இதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு! நான்தான் மறதியாச்சே!!! கணிணியின் முன் உட்கார்ந்திருந்தால் எது எது எப்போது செய்ய வேண்டும் என ரிமைண்டர் கொடுத்து எனக்கு நினைவூட்டிக்கிட்டே இருக்கும். மற்றவர்கள் டைம் பிரகாரம் நம் முன் வந்து மியூசிக்குடன் நாம் என்ன செய்ய வேண்டும் என சொல்வார்களா?)
[யப்பா!!! என்ன மூளை!!! உன்னால மட்டும் எப்படி இப்படியெல்லாம் யோசிக்க முடியுது, .::மை ஃபிரண்ட்::.!!!!] ;-)
4. செய்வதை திருந்தச் செய்தல்
எனக்கு ஒரு பழக்கம் இருக்குங்க.. எதையும் நினைச்சதும் செய்ய மாட்டேன். அப்படி செய்ய ஆரம்பித்தால், என்னால் முடிந்த "The best from me"யைதான் தருவேன். என்னை விட எத்தனையோ பேர் நன்றாக செய்பவர்கள் இருந்தாலும், என்னை தேடி வந்துவிட்டார்களே! அவர்களை வருத்தப் பட வைக்கக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காக என்னால் முடிந்த வரை செய்துக் கொடுப்பேன். அது வேலை ஆகட்டும், உதவியாகட்டும், பாடமாகட்டும்.. அதுபோலத்தான், இந்த ப்ளாக்கும். ;-)
அதற்காக, எனக்கு தெரியாமல் புரியாமல் இருக்கும் விஷயங்களை கேட்டு படித்து முயற்சிப்பேன். என் எழுத்துக்களில் கொஞ்சம் முன்னேற்றம் இருக்குன்னு உங்களில் சிலர் சொல்லியிருக்கீங்க. அதுக்கு காரணம் நீங்கதான்! உங்கள்ல எத்தனை பேரை நான் தொல்லை பண்ணியிருக்கிறேன்னு எனக்குதான் தெரியும். எனக்கு தெரியாத வார்த்தைகளை சொல்லி தர கேட்டிருக்கிறேன். சில நண்பர்கள் ஒரு படி மேலே போய் என் எழுத்துக்களில் உள்ள பிழைகளை சுட்டி காட்டி எனக்கு உதவியிருக்கிறீர்கள். என்னுடைய இந்த வளர்ச்சிக்கு நீங்கதான் காரணம்! நன்றி..
5. நான்காவது படிக்கும்போதே என் ஐந்தாவது குணம் தெரிஞ்சிருக்குமே? (நன்றி மறக்காதவள் நான்)
யாரோ பெரியவங்க சொல்லியிருக்காங்க! வலது கை செய்யும் தானங்களையும் உதவிகளையும் இடது கைகூட அறியக்கூடாது. செய்த உதவியை அப்போதே மறந்துவிட வேண்டும். பிறர் நமக்கு செய்த உதவியை என்றென்றும் மறக்க கூடாதுன்னு!
அதனாலே நான் வெகு சுலபமாய் மற்றவர்களிடம் உதவி கேட்க மாட்டேன். அப்படி எனக்கு மிகவும் தேவைப்பட்டாலோ, (ஒரு சில நல்லவங்க) நாம் உதவி கேட்காமலேயே வந்து உதவி செய்யுறவங்களை நான் எப்போதும் மறக்க மாட்ட்டேன். (என் ஞாபக மறதி இந்த விஷயத்தில் ஒன்னும் செய்ய இயலாது என்று நினைக்கிறேன்.)
நான் நாலாவது படிக்கும்போது பஸ் ஏறிதான் வீட்டுக்கு வருவேன். அப்போ நான் ஒல்லி குச்சியாய், சின்னதாய் இருந்தேன். தோளில் புத்தகப்பை மூட்டையை சுமந்துக்கொண்டு கூட்டமாய் இருந்த பஸ்ஸில் ஏறினேன். பஸ் ஒவ்வொரு இடத்தில் ப்ரேக் போடும் போதும், நானும் முன்னாடி போய் விழுந்து எழுந்திருச்சி வந்தேன். அப்போது ஒரு அக்கா (24-25 வயசு இருக்கும்) எழுந்திருச்சி என்னை உட்கார சொல்லி இடம் கொடுத்தாங்க. போன வருடம் (ஒரு பத்து வருடத்துக்கு மேல ஆயிடுச்சு) நான் வேலை முடிந்து வரும்போது Putra LRT-யில் ஏறி வந்தேன். இடுப்பில் ஒரு கைக்குழந்தையையும், கையில் ஒரு 3 வயது குழந்தையையும் பிடித்துக்கொண்டு நிக்க முடியாமல் நின்றக்கொண்டிருந்தார். பத்து வருடத்துக்கு முன்பு இருந்ததுக்கும் இப்போதுக்கும் அதிக மாற்றம் இல்லை அவரிடம். ஆதலால் என்னால் சுலபமாக அடையாளம் கண்டுக்கொள்ள முடிந்தது. நானும் அங்கே நின்னுக்கொண்டிருந்தேன். உட்கார்ந்திருந்தால், நான் எழுந்து அவருக்கு என் இடம் கொடுத்திருக்கலாம் என்று மிகவும் வருத்தப்பட்டேன். அதனால், என்னால் முடிந்த அளவு அவருடைய மூனு வயது மகளை (என்னைபோல் ஒவ்வொரு முறையும் பிரேக் போடும்போது முன்னே விழுந்து எழுந்திருச்சி வந்தாள்) பிடித்துக்கொண்டேன். என்னால், அதை தவிர்த்து வேறெதுவும் உதவ முடியவில்லை. அவரை திரும்பவும் பார்ப்பேன், உதவுவேண் என்ற நம்பிக்கை எனக்கு இன்னும் இருக்கு!!!
அதே போல், யாருக்கு உதவி தேவைப் பட்டாலும் நான் முதல் ஆளாய் போய் நிற்பேன். அப்படி என்னால் அவருக்கு உதவ முடியும் என்றால் கண்டிப்பாய் உதவுவேன்.. வந்துவிடுவேன் (மறந்துவிடுவேன்)...
பொற்கொடி டீச்சர், உங்க வீட்டுப்பாடம் நான் சரியா செஞ்சிருக்கேனா? எனக்கு பாஸ் மார்க்கா? ஃபெயில் மார்க்கா? வந்து மார்க் போட்டு போகவும் டீச்சர்.. ;-)
மத்தவங்க ஏதாவது துப்பிறதுக்கு இருந்தா, கீழே துப்பிட்டு போலாம். :-)
அட.. ஒரு விஷயம் மறந்துட்டேனே!!! நான் யாராவது தேக்(Tag) பண்ணணும்ல??? எத்தனை பேரு டீச்சர்? ஓ! அஞ்சா?
ஓகே!!! இதோ நோட் பண்ணிக்கோங்க:
1- சிங்கபூரு வாலு துர்கா
2- சூடான் புலிகேசி.. ச்சீ புலி சிவா
3- பி.மு.க தல கார்த்திக்
4- செதுக்கல் மன்னன் தேவ்
5- நடைராஜா கோபிநாத்
ஃப்ரீயா இருக்கும்போது எழுதுங்க மக்கா!! வர்ட்டா!!!!
Posted by MyFriend at 1:48 PM 108 comments
Labels: Tag, அறிவுப்பூர்வமானவை (?), அனுபவம்
Saturday, January 06, 2007
152. நீங்கள் இல்லை... ஆனால் நீங்கள்?
நீங்கள் அறிவாளி இல்லை... மற்றவர்களை முட்டாள் என்று சொன்னால்..
நீங்கள் அறிவாளி... உங்கள் அறிவு மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டால்..
நீங்கள் பணக்காரர் இல்லை... மற்றவர்களை ஏழை என்று சொன்னால்..
நீங்கள் பணக்காரர்... உங்கள் பணம் நல்ல காரியங்களுக்கு உபயோகமாயிருந்தால்..
நீங்கள் அழகன் இல்லை... மற்றவர்களை அசிங்கம் என்று சொன்னால்..
நீங்கள் அழகன்... நீங்கள் தற்பெருமை அடிக்காமலிருந்தால்..
நீங்கள் நல்லவர் இல்லை... மற்றவர்களை கெட்டவர் என்று சொன்னால்..
நீங்கள் நல்லவர்... மற்றவர்களை நல்வழி பாதையில் திருத்த முயன்றால்..
நீங்கள் பக்திமான் இல்லை... மற்றவர்களை இறைவழிபாடு இல்லாதவர் என்று சொன்னால்..
நீங்கள் பக்திமான்... ஒவ்வொரு நாளிலும் சில நேரமாவது கடவுளுக்காக ஒதுக்கினால்..
நீங்கள் பலசாலி இல்லை... மற்றவர்களை பலம் குறைந்தவர் என்று சொன்னால்..
நீங்கள் பலசாலி... பலம் குறைந்தவர்களுக்கு உங்களால் ஆன உதவியை செய்தால்..
நீங்கள் வீரர் இல்லை.. மற்றவர்களை பயந்தாங்கொல்லி என்று சொன்னால்..
நீங்கள் வீரர்... மற்றவர்களுக்கும் நாட்டிற்கும் வீட்டிற்கும் தேவைப்படும்போது எதிர்த்து நிற்க்கும் துணிச்சல் இருந்தால்..
Posted by MyFriend at 8:44 PM 25 comments
Labels: அறிவுப்பூர்வமானவை (?)
Monday, December 25, 2006
143. முயற்சி இருந்தால் மார்க்கம் உண்டு..
வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா
தடைக்கல்லும் உனக்கொரு வழிக்கல்லப்பா..
என்று படையப்பாவில் வரும் வரிகள் ஞாபகம் இருக்கிறதா?
ஒவ்வொருவருக்கு தடைகள் வெவ்வேறு வழியில் வருகின்றன. நாம்தான் நம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
இதோ இந்த நத்தை அதன் தடைக்கு தீர்வு காணுகிறது என்று பாருங்கள்..
யாராவது உங்களிடம் ஏதாவது செய்ய முடியாது என்று சொன்னால்:
சுற்றும் முற்றும் பாருங்கள்
இருக்கும் ஒவ்வொரு வழியையும் யோசியுங்கள்
அந்த வழியை மேற்கொள்ளுங்கள்
கடவுள் உங்களுக்கு அருளிய எல்லாவற்றையும் உபயோகியுங்கள்
வித்தியாசமாக சிந்தியுங்கள்
கடைசியில் வெற்றி உங்களுக்கே! மற்றவர் சொன்னது தவறு என்று நிரூபியுங்கள்

கடவுள் நம்மால் தாங்கிக்கொள்ள முடியும் தடைகளைதான் தருவார். அதை எதிர்க்கொள்ள நம்மால் கண்டிப்பாக முடியும். முயற்சி இருந்தால் மார்க்கம் உண்டு!
இந்த நண்ணாளில் என்னால் முடிந்த ஒரு சின்ன பங்கு.
Posted by MyFriend at 10:59 AM 16 comments
Labels: அறிவுப்பூர்வமானவை (?), நிழற்படம்
Friday, December 08, 2006
126. வாங்க.. நாமளும் மரம் வளர்க்கலாம்!
ஒரு வீட்டுக்கு ஒரு கணிணி வேண்டும்ன்னு சொன்னங்க. அப்புறம், ஒரு வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்ன்னு சொன்னாங்க.
இப்பு ஒவ்வொரு ப்ளாக்லேயும் மரம் வளர்க்க ஆரம்பிச்சுடாங்க..
நான் இப்பதான் விதையை போட ஆரம்பிச்சிருக்கேன். ஆனால், மரம் வளர்கிறேன் பேர்வழின்னு நம்ம தலைவரு கார்த்திக் அவரோட மரத்தை என்னை வளர்க்க சொல்லிட்டார்..
மறுநாள் நான் வளர்க்கலன்னு தெரிஞ்சதும் மொஹனை (மோஹினுக்கு ஆண்பால்) அனுப்பிடாருங்க என் வீட்டுக்கு.
அதான் ஆபிஸுக்கு வந்தவுடனேயே மரத்துக்கு தண்ணீர் ஊத்த ஆரம்பிச்சுட்டேன்.
இது எழுதுறதுக்கு முன் ரூல்ஸ் இருக்காமே! ஒன்னு இல்ல பத்து. ஒரு கடைபிடிக்கிறதே கஷ்டம். இதுல பத்தா!!! பரவாயில்லை.. நான் என்னால் முடிஞ்ச வறை நீங்க கொடுத்திருக்கிற 10 ரூல்ஸ்யையும் ஃபாலோ பண்ணி எழுதியிருக்கேன்.
------------------------------------
முதல்ல இது உஷா எழுதுனது:
The Unusual Endings"Ennadhan panra ava anga?" he wondered aloud, as he got out of the cab outside the building that flaunted a board that read "Amanushya vishayangaluku anugavum: Dr. JevitsJayaraj". Aniku kalaila, he had got a call, and pesinadhu Meeradhan. Aana he could notice the difference between the voice he had listened to 2 days ago and the one he heard in the morning. '2 days munnadi sema super-a veenai madhiri ketta kural iniku kaalaila eppadi husky-a vichitrama?', he shuddered for a moment recollecting the conversation he had.."Hello, iss it Vassisht, naan Meera" - there was an eerieness around the voice he heard...
அப்புறம் வேதா தொடர்ந்தது:
மீராவின் குரலை இப்ப நினைத்தாலும் ஒரு பயம் அவன் மனதில் பரவியது. சட்டென்று நினைவை கலைத்தது அவன் கைப்பேசி. அவன் அதை எடுக்...ட்ரிங்,ட்ரிங்'சே நல்ல கட்டத்துல இப்படி போன் அடிக்குதே, சத்யா சத்யா போன் அடிக்குது பார் எடு'ட்ரிங்,ட்ரிங்'அடச்சே, இந்த அத்தியாயத்தை இன்னிக்கு பத்திரிக்கைக்கு அனுப்பனும் இந்த நேரம் பார்த்து எழுத இவ்ளோ தடங்கல்'ட்ரிங்,ட்ரிங்'இந்த சத்யா எங்க போய் தொலைஞ்சா? நானே போய் எடுக்க வேண்டியது தான்'இவன் ஸ்பரிசத்திற்காக காத்திருந்தது போல் தொடர்ந்து அடித்த போனை எடுத்தான் எழுத்தாளன் சூர்யா.'ஹலோ யாரு?''நான் தான்' என்று ரகசியம் பேசுவது போல் ஒரு பெண் குரல்'அட யாருன்னு சொல்லித்தொலைங்க''மீரா பேசுறேன்''எந்த மீரா?''என்ன சூர்யா அதுக்குள்ள மறந்துட்ட? இப்ப தான என்னை பத்தி எழுதின?''என்னது? யாருங்க இது?''உன் கதையின் கதாபாத்திரம் மீரா' என்று கூறிய குரல் அவன் நினைவலைகளில் நீந்தி எதிரொலித்தது.அதிர்ந்துப்போன சூர்யா தொலைப்பேசியை நழுவ விட்டான்...
நழுவ விட்ட போனை கையிலெடுத்து என்னை தாக்கியவர் (ஹீ ஹீ ஹீ) கார்த்திக்:
ரத்தமெல்லாம் உறைய அப்படியே சேரில் அமர்ந்தான் சூர்யா..யா..யார் போன் பண்ணி இருப்பா..அவன் தலைக்குள்ளே ஆயிரம் கேள்விகள்... சரியாக அந்த நேரம் பார்த்து மின்சாரம் போய் அந்த இடமே கருங்கும்மென இருட்டாகியது.. நெஞ்சில் பயத்துடன் மெல்ல மெழுகுவர்த்தியை தேடி மெதுவாக அடி எடுத்து வைத்தான்.. அப்போ காற்றில் மெல்ல கொலுசு சத்தம் கேட்டது.. அந்த சத்தம் மெதுவாக இவனை நோக்கி வந்தது..எடுத்து வைத்த காலைக்கூட திரும்ப பின்னால் எடுத்து வைத்தான்.. கொலுசு சத்தம் நெருங்க நெருங்க மல்லிகைப்பூ வாசமும் இவன் நாசியை துளைத்தது.. சூர்யாவுக்கு அதிர்ச்சியில் தொண்டை வறண்டது..சூர்யா.. எப்படி இருக்க சூர்யா.. காதல் தொய்த்த மயக்கம் கலந்த ஒரு பெண் குரல் கேட்டது.. இந்த இந்த குரலை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே என்று சூர்யா குழம்பிய போது..என்ன சூர்யா..என்னை மறந்துட்டியா..நான் தான் நீ காதலிச்சு ஏமாத்துன மலர்விழி..
இப்ப இந்த கதையை தொடர்கிறேன்னு சொல்லி நான் எழுதும் சொதப்பல்.. ஹீ ஹீ ஹீ:
-----------------------------------------------------------------------------------
அந்த கரும் இருட்டில் அந்த குரலை கேட்டு அதிர்ந்தான் சூர்யா. இருட்டில் தன் சட்டை பையில் தட்டு தடுமாறி எதையோ எடுத்தான்.
அதை உரசியதும் ஒரு சின்ன ஒளி அந்த அறையை சூழ, மெல்ல மெல்ல ஒரு அழகான பெண்னின் முகம் அவனுக்கு தெரிந்தது.
"ம.. ம.. மலர்.. நீ.. நீ எப்படி இ.. இங்.. இங்கே? நீதான் போன வருடம் அந்த மலை உச்சியிலிருந்து விழுந்துட்டியே?"
அதை கேட்டு அவள் சத்தமாக சிரிக்க, பட்டென நின்று போன மின்சாரம் திரும்பி வர.. அறையே பிரகாசம் ஆனது.
அவன் தன் கண்களை கசக்கிகொண்டு மீண்டும் நிமிர்ந்து பார்த்தான்.
'இவள் உண்மையிலேயே நான் காதலித்த மலர்தான். இங்கே எப்படி? உயிரோடுதான் இருக்கிறாளா? பக்கத்தில் நிற்பவன் யார்?'ன்னு பல கேள்விகள் சூர்யாவின் மனதில் அலை மோதின.
மலருடன் வந்தவன் ஆறடி உயரத்தில் அபிஷேக் பச்சனைபோல் இருந்தான். கையிலிருந்த பூங்கொத்தை சூர்யாவிடம் கொடுத்து "You lost something precious"ன்னு சொல்லி கண்ணடித்தான்.
---------------------------------------------------------------------------
அப்பப்பா.. கதை எழுதுறது கூட கஷ்டம் இல்லைங்க.. எழுதி முடிச்சதும், 5 பேரை தாக்கனும்ன்னு சொல்லியிருகாங்கலே (அதாங்க அந்த ஆறாவது ரூல்ல), அதுதாங்க கஷ்டம்..
ப்ளாக்குக்கு நான் ஒரு குழந்தை.. இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா சிலர் அறிமுகம் ஆகியிருக்காங்க.. எனக்கு அறிமுகம் ஆனவங்க எல்லாரையும்ம் யாரவது ஒருத்தவங்க தாக்கிட்டீங்களே!! நான் யாரை தாக்குறது?
லெட் மீ தின்க்...
ஓகே.
நான் டேக் செய்யும் நண்பர்கள்:
1- எப்போதும் கடலை பற்றி அருமையாக கதை எழுதும் கடல் கணேசனுக்கும் இந்த கதையை கொடுத்தால், அருமையா எழுதுவார். ஸொ, இவர்தான் லிஸ்ட்ல ஃப்ர்ஸ்ட்.
2- நாலு நாளுக்கு முன்பு கொஞ்சம் வருத்ததுல இருந்த தீனக்க்ஷாதான்.. ப்ளாக் எழுதுறது ஒரு சந்தோஷம்தான்..
மரம் வளர்வதற்க்கு என்னால் கொடுக்க முடிந்த இரண்டு கிளைகள் இவர்கள்தான். ;-)
வெகு வெகு விரைவில் உங்கள் கதையை படிக்கும் ஆசயில் உள்ளேன். ;-)
ஆஹா.. ரூல்ஸ் இருக்காமே! அதையும் போஸ்ட் செய்யனும்ல்ல!!! இதோ அந்த ரூல்ஸ்:
1. A blogger can add only 90-100 words (not more or less) at a time
2. All previous snippets of 90-100 words need to be copied before the new set of 90-100 words are appended.
3. Each entire snippet should be linked to the respective author (and not just the first sentence or so)
4. Characters, scenes, etc. can be introduced by an author
5. Bizarre twists, sci-fi, fantasy sequences are best avoided.
6. After appending 90-100, the Story Tree can be passed on to at most 5 bloggers.
7. If more than 1 branch leads to a blogger, s/he is free to choose any one of them but cannot mix the snippets of the individual branches.
8. The Story Tree is best left to grow than concluded
9. Please attach the image of the Story Tree above with each accepted tag (the link address can be copied and used).
10. Please comment back your story’s link to post from where you were initially tagged so that people can follow.
Posted by MyFriend at 9:11 AM 26 comments
Labels: Tag, அறிவுப்பூர்வமானவை (?)
Thursday, December 07, 2006
123. அலார்ம் க்லாக் (Alarm Clock)
நீங்க சின்ன பையனோ, வாலிபரோ, வயதானவரோ.. பள்ளி போரீங்களோ இல்லை வேலைக்கு போரீங்களோ! இல்லை வீட்டை கவனித்துக்கொள்ளும் அம்மணிகளோ!!! எல்லாருக்மே காலையில் அனுபவிக்கும் முதல் தொல்லை/ கஷ்டம் என்ன?
காலையில் தைமுக்கு எழுந்து பள்ளிக்கோ, ஆபிஸுக்கோ கிளம்புவதுதான். அதிலேயும் திருமணம் ஆன பெண்கள்ன்னா, இன்னும் சீக்கிரமா எழுந்திரிக்கனும்.. வீட்டு வேலை செய்துட்டு, காலை ப்ரேக்ஃபாஸ்ட் செய்து, பிள்ளைகளை கிளப்பிவிட்டு அவர்களும் வேலைக்கு கிளம்பனும்..
அப்பப்பா!!! இதை கேட்கும் போதே நமக்கு கண்ணை கட்டுது!!!!
எனக்கும் அப்படி பிரச்சனைகள் இருந்தது. எந்த கேம்பஸில் மாணவர்கள் இரவு சீக்கிரமா படுத்து காலையில் சீக்கிரமா எழுந்திரிக்கிறாங்க!!!! நான் மட்டும் என்ன விதி விலக்கா? ஆனால், இப்போ பிராக்டிக்கலுக்கு போகுறதுனால காலையில 6 மணிக்கெல்லாம் எழுந்திருக்கிறேன். நானே லேட்டா படுக்கனும்ன்னு நினைச்சாலும் என்னால், வெகு நேரம் முழிதிருக்க முடியலை.. எல்லாம், தைம்தேபல் போல பழக்கம் ஆயிடுச்சு.
10- ஏணி கடிகாரம்
இது உங்கள் தலையின் மேல் தொங்கப்பட்டிருக்கும். மணி அடித்ததும் அது கொஞ்சம் கொஞ்சமாக மேலே ஏற ஆரம்பித்துவிடும். நீங்கள் வேகமாக எழுந்து ஆஃப் செய்யலைன்னா, அதை ஆஃப் செய்ய உங்களுக்கு ஏணி தேவைப்படும்.

9- காலை பஜ்ஜல்(puzzle)
நீங்கள் இந்த puzzle-ஐ பூட்டி முடித்தால்தான், இது ஆஃப் ஆகும்.

8- சாபக் கடிகாரம்
இதனிடம் மணி என்னனு கேட்டால், இது பதில் சொலும். ஆனால், நீங்கள் கரெக்டான தைமுக்கு எழுந்திரிக்கலன்னா, இது உங்களுக்கு சாபம் விடும்.

7- புதிய தெக்னாலஜி
இதுக்கு வைபிரேட்டர் இருக்கு. 95ட்B அலார்ம். போலிஸ் கார்ல பூட்டியிருக்கும் அந்த சுத்தும் விளக்கு போருத்தியிருக்கப்பட்டிருக்கு. பீ கேர்புல்!!!

6- பின்னை தேடுங்கள்
அலார்மை ஆஃப் செய்ய நீங்கள் இதனின் பின்னை தேடி கண்டுபிடிக்க வேண்டும். இந்த மிஷனை முடிக்கும் வரை.. நீங்கள் தூங்க வாய்ப்பே இல்லை.

5- முட்டை - கோழி பிரச்சனை
அலார்ம் அடிக்க ஆரம்பித்ததும், கோழி உருவமுல்ல கடிகாரம் முட்டை இட ஆரம்பித்துவிடும். நீங்கள் எல்லா முட்டையும் கூடயில் போட்டால்தான், அலார்ம் ஆஃப் ஆகும்.

4- காமாண்டர் ஜோ
காமாண்டர் கத்தலை கேட்டு நீங்கள் கண்டிப்பாக எழுந்திருத்து விடுவீர்கள்.

3- சுற்றும் அலார்ம்
அலார்ம் அடித்ததும், இது உங்கள் அறை முழுதும் சுற்றி கொண்டிருக்கும். நீங்கள் அதை பிடித்து ஆஃப் செய்ய வேண்டும்

2- கபோம்
இது ஒரு போம் அலார்ம். இதனின் சத்தம் உங்கள் காலணியில் இருக்கும் எல்லாருமே கண்டிப்பாக எழுந்திரித்துவிடுவார்கள். ஹீ ஹீ ஹீ..

1- ஒளிந்திருக்கிறென் - கண்டுபிடி
இதுதான் இந்த கடிகாரங்களிலேயே முதல் இடத்தை பிடித்திருக்கும் அலார்ம். மணி அடிக்க துவங்கியதும், அது தரையில் இறங்கி ஏதவது ஒரு இடத்தில் உருண்டு போய் ஒளிந்துகொள்ளும். சீக்கிரமாக ஆஃப் செய்யாவிட்டல், இதை தேடி கண்டுபிடிப்பதற்காக நீங்கள் உங்கள் ஆபிஸில் லீவு போட நெரிடும்..
:-)
Posted by MyFriend at 10:03 AM 21 comments
Labels: அறிவுப்பூர்வமானவை (?)
Wednesday, November 29, 2006
110. மௌனமே வார்த்தையாய்....
சிலருக்கு எப்போதுமே தனிமை பிடித்த விஷயம். மணிக்கணக்கில் தனிமையில் இருக்க விரும்புவார்கள்.
எதற்கு டஹ்னிமை? தன்னைத்தானே சிறைப்படுத்திக் கொள்கிற மாதிரி எதற்காக தீவு மாதிரி மற்றவர்களிடம் இருந்து துண்டித்துக் கொள்ள வேண்டும்?
கேள்விகளை இது மாத்ரியான தனிமை விரும்பிகளிடம் கேட்டால் இவைகளிடம் இருந்து உடனடியாக பதில் வராது. அமைதி காப்பார்கள். அந்த அமதிக்குப் பின்னால் ஓர் ஆழமான சோகம் இருக்கும். அது என்னவென்று அத்தனை சீக்கிரம் வெளிப்படுத்திவிட மாட்டார்கள்.
மற்றவர்களிடம் தங்களின் விஷயங்களை சொல்லும் போது அது வெளியரங்கமாகி இன்னும் விபரீதத்தை ஏற்ப்படுத்தும். அதன்பிறகு நாம் தவறாக விமர்சிக்கபடுவோம் என்கிற அவமானத்தை தவிர்க்கிற போக்கே பயத்துக்கு காரணம்.
சரி, மனம் விட்டுப்பேச ஒருவர் கூடவா இல்லாமல் போய்விட்டார்கள்? ருப்பார்கள். ஆனால், மனம் விட்டுப் பேகினால் தானே! பொதுவான விஷயம் பேசுவார்கள். நாட்டு நடப்பு பற்றிக் கூட அவ்வப்போது விசாரிப்பார்கள். அதே நேரம் தங்கள் விஷயம் என்று வரும்போது மட்டும் வாயை இறுக மூடிக் கொண்டு விடுவார்கள்.
ஒரு விஷயத்தை சரியா, தவறா என்று கணிப்பதில் ஏற்படுகிற குழப்பமே இவைகளின் விஷயங்களை இருட்டுக்குள் தள்ளி வைக்கின்றன. விடை வராத கணக்கை போட்டுப் போட்டுப் பார்த்து கால நேரத்தை வீணடிக்கிற மாதிரி தீர்க்கமுடியாத விஷயங்களை தங்களுக்குள்ளாக போட்டுப்போட்டு குழம்பிக் கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்டவர்களில் பலர் தங்கள் மனைவி, பிள்ளைகளிடம் கூட இது விஷயமாய் கலந்து பேச மாட்டார்கள்.
சிலர் இருக்கின்றனர். பேசினாலே வம்பு என்று நினைத்துக்கொள்கிற ரகம் இவர்கள். பல நேரங்களில் அமைதி விரும்பிகளாகவே இருந்து விடுவார்கள். ஆனால், இவைகளிடம் விஷயம் இருக்கும் எப்போது எங்கே பேச வேண்டுமோ அங்கே கட்டாயம் இவர்கள் குரல் நேரத்துக்கு ஒலிக்கும்.
இது நிச்சயமாக ஆபத்தில்லாத அமைதி. தேவயில்லாத நேரங்களில் எல்லாம் எதற்கு வீணாகப் பேசி பிரச்சனைகளில் சிக்கிக்கொள்ள வேண்டும் என்று எண்ணுகிற ரகமாக இவர்கள் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் பெரும்பாலும் மற்றவர்கள் பேசுவதை கேட்டுக் கொள்வார்கள். அதில் தங்கள் கருத்தை சொல்லாவிட்டாலும் அதில் உள்ள சாரம்சத்தை கிரகித்துக்கொண்டு விடுவார்கள். அது மட்டுமின்றி ஒருவர் அதிகம் பேசுவதால் எந்த மாதிரியான புதுபுது பிரச்சனைகளில் சிக்குகிறார்கள் என்பதையும் அவைகளால் சட்டென கிரகித்துக் கொண்டுவிட முடிகிறது.
சிலருக்கு நண்பர்கள் அமைய மாட்டார்கள். தவறிப்போய் அப்படி அமைந்தாலும் அதை ஸ்டெடி பண்ணிக்கொள்ளத் தவறி விடுவார்கள். இவர்கள் டேஸ்ட்டுக்கும் நண்பர்கள் டேஸ்ட்டுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. அதனாலும் தனிமைப்படுத்தப்படும் இவர்கள் அதையும் நல்லதுக்குன்றே அடுத்துக் கொள்வார்கள். வீட்டில் இருந்து ஆபிஸ். ஆபிஸ் விட்டால் வீடு என்கிற உணர்வைக் கொண்டிருக்கிற பலரும் இந்த வகையைச் சேர்ந்தவர்கள்தான். கலகலப்பாக பேசுவது என்பது சிலருக்கு கைவந்த கலை. ஒரு வீட்டுக்குள் இப்படி கநவன் மனைவி இருவரில் ஒருவர் கலகலப்புப் பேர்வழியாகவும் அடுத்தவர் அமைதி விரும்பியாகவும் இருந்தால், வீட்டில் ஒரு வித அசாதாரணமைதி கிடு கொண்டிருக்கும். கலகலப்புக்கு மௌனம் ஆட்சி செய்கிற இடத்தில் பெரும்பாலும் வேலை இருக்காது.
Posted by MyFriend at 9:36 AM 4 comments
Labels: அறிவுப்பூர்வமானவை (?)

