Friday, December 08, 2006

126. வாங்க.. நாமளும் மரம் வளர்க்கலாம்!

ஒரு வீட்டுக்கு ஒரு கணிணி வேண்டும்ன்னு சொன்னங்க. அப்புறம், ஒரு வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்ன்னு சொன்னாங்க.

இப்பு ஒவ்வொரு ப்ளாக்லேயும் மரம் வளர்க்க ஆரம்பிச்சுடாங்க..

நான் இப்பதான் விதையை போட ஆரம்பிச்சிருக்கேன். ஆனால், மரம் வளர்கிறேன் பேர்வழின்னு நம்ம தலைவரு கார்த்திக் அவரோட மரத்தை என்னை வளர்க்க சொல்லிட்டார்..

மறுநாள் நான் வளர்க்கலன்னு தெரிஞ்சதும் மொஹனை (மோஹினுக்கு ஆண்பால்) அனுப்பிடாருங்க என் வீட்டுக்கு.

அதான் ஆபிஸுக்கு வந்தவுடனேயே மரத்துக்கு தண்ணீர் ஊத்த ஆரம்பிச்சுட்டேன்.

இது எழுதுறதுக்கு முன் ரூல்ஸ் இருக்காமே! ஒன்னு இல்ல பத்து. ஒரு கடைபிடிக்கிறதே கஷ்டம். இதுல பத்தா!!! பரவாயில்லை.. நான் என்னால் முடிஞ்ச வறை நீங்க கொடுத்திருக்கிற 10 ரூல்ஸ்யையும் ஃபாலோ பண்ணி எழுதியிருக்கேன்.

------------------------------------
முதல்ல இது உஷா எழுதுனது:

The Unusual Endings"Ennadhan panra ava anga?" he wondered aloud, as he got out of the cab outside the building that flaunted a board that read "Amanushya vishayangaluku anugavum: Dr. JevitsJayaraj". Aniku kalaila, he had got a call, and pesinadhu Meeradhan. Aana he could notice the difference between the voice he had listened to 2 days ago and the one he heard in the morning. '2 days munnadi sema super-a veenai madhiri ketta kural iniku kaalaila eppadi husky-a vichitrama?', he shuddered for a moment recollecting the conversation he had.."Hello, iss it Vassisht, naan Meera" - there was an eerieness around the voice he heard...

அப்புறம் வேதா தொடர்ந்தது:

மீராவின் குரலை இப்ப நினைத்தாலும் ஒரு பயம் அவன் மனதில் பரவியது. சட்டென்று நினைவை கலைத்தது அவன் கைப்பேசி. அவன் அதை எடுக்...ட்ரிங்,ட்ரிங்'சே நல்ல கட்டத்துல இப்படி போன் அடிக்குதே, சத்யா சத்யா போன் அடிக்குது பார் எடு'ட்ரிங்,ட்ரிங்'அடச்சே, இந்த அத்தியாயத்தை இன்னிக்கு பத்திரிக்கைக்கு அனுப்பனும் இந்த நேரம் பார்த்து எழுத இவ்ளோ தடங்கல்'ட்ரிங்,ட்ரிங்'இந்த சத்யா எங்க போய் தொலைஞ்சா? நானே போய் எடுக்க வேண்டியது தான்'இவன் ஸ்பரிசத்திற்காக காத்திருந்தது போல் தொடர்ந்து அடித்த போனை எடுத்தான் எழுத்தாளன் சூர்யா.'ஹலோ யாரு?''நான் தான்' என்று ரகசியம் பேசுவது போல் ஒரு பெண் குரல்'அட யாருன்னு சொல்லித்தொலைங்க''மீரா பேசுறேன்''எந்த மீரா?''என்ன சூர்யா அதுக்குள்ள மறந்துட்ட? இப்ப தான என்னை பத்தி எழுதின?''என்னது? யாருங்க இது?''உன் கதையின் கதாபாத்திரம் மீரா' என்று கூறிய குரல் அவன் நினைவலைகளில் நீந்தி எதிரொலித்தது.அதிர்ந்துப்போன சூர்யா தொலைப்பேசியை நழுவ விட்டான்...

நழுவ விட்ட போனை கையிலெடுத்து என்னை தாக்கியவர் (ஹீ ஹீ ஹீ) கார்த்திக்:

ரத்தமெல்லாம் உறைய அப்படியே சேரில் அமர்ந்தான் சூர்யா..யா..யார் போன் பண்ணி இருப்பா..அவன் தலைக்குள்ளே ஆயிரம் கேள்விகள்... சரியாக அந்த நேரம் பார்த்து மின்சாரம் போய் அந்த இடமே கருங்கும்மென இருட்டாகியது.. நெஞ்சில் பயத்துடன் மெல்ல மெழுகுவர்த்தியை தேடி மெதுவாக அடி எடுத்து வைத்தான்.. அப்போ காற்றில் மெல்ல கொலுசு சத்தம் கேட்டது.. அந்த சத்தம் மெதுவாக இவனை நோக்கி வந்தது..எடுத்து வைத்த காலைக்கூட திரும்ப பின்னால் எடுத்து வைத்தான்.. கொலுசு சத்தம் நெருங்க நெருங்க மல்லிகைப்பூ வாசமும் இவன் நாசியை துளைத்தது.. சூர்யாவுக்கு அதிர்ச்சியில் தொண்டை வறண்டது..சூர்யா.. எப்படி இருக்க சூர்யா.. காதல் தொய்த்த மயக்கம் கலந்த ஒரு பெண் குரல் கேட்டது.. இந்த இந்த குரலை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே என்று சூர்யா குழம்பிய போது..என்ன சூர்யா..என்னை மறந்துட்டியா..நான் தான் நீ காதலிச்சு ஏமாத்துன மலர்விழி..


இப்ப இந்த கதையை தொடர்கிறேன்னு சொல்லி நான் எழுதும் சொதப்பல்.. ஹீ ஹீ ஹீ:
-----------------------------------------------------------------------------------
அந்த கரும் இருட்டில் அந்த குரலை கேட்டு அதிர்ந்தான் சூர்யா. இருட்டில் தன் சட்டை பையில் தட்டு தடுமாறி எதையோ எடுத்தான்.

அதை உரசியதும் ஒரு சின்ன ஒளி அந்த அறையை சூழ, மெல்ல மெல்ல ஒரு அழகான பெண்னின் முகம் அவனுக்கு தெரிந்தது.

"ம.. ம.. மலர்.. நீ.. நீ எப்படி இ.. இங்.. இங்கே? நீதான் போன வருடம் அந்த மலை உச்சியிலிருந்து விழுந்துட்டியே?"

அதை கேட்டு அவள் சத்தமாக சிரிக்க, பட்டென நின்று போன மின்சாரம் திரும்பி வர.. அறையே பிரகாசம் ஆனது.

அவன் தன் கண்களை கசக்கிகொண்டு மீண்டும் நிமிர்ந்து பார்த்தான்.

'இவள் உண்மையிலேயே நான் காதலித்த மலர்தான். இங்கே எப்படி? உயிரோடுதான் இருக்கிறாளா? பக்கத்தில் நிற்பவன் யார்?'ன்னு பல கேள்விகள் சூர்யாவின் மனதில் அலை மோதின.

மலருடன் வந்தவன் ஆறடி உயரத்தில் அபிஷேக் பச்சனைபோல் இருந்தான். கையிலிருந்த பூங்கொத்தை சூர்யாவிடம் கொடுத்து "You lost something precious"ன்னு சொல்லி கண்ணடித்தான்.
---------------------------------------------------------------------------

அப்பப்பா.. கதை எழுதுறது கூட கஷ்டம் இல்லைங்க.. எழுதி முடிச்சதும், 5 பேரை தாக்கனும்ன்னு சொல்லியிருகாங்கலே (அதாங்க அந்த ஆறாவது ரூல்ல), அதுதாங்க கஷ்டம்..

ப்ளாக்குக்கு நான் ஒரு குழந்தை.. இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா சிலர் அறிமுகம் ஆகியிருக்காங்க.. எனக்கு அறிமுகம் ஆனவங்க எல்லாரையும்ம் யாரவது ஒருத்தவங்க தாக்கிட்டீங்களே!! நான் யாரை தாக்குறது?

லெட் மீ தின்க்...

ஓகே.

நான் டேக் செய்யும் நண்பர்கள்:
1- எப்போதும் கடலை பற்றி அருமையாக கதை எழுதும் கடல் கணேசனுக்கும் இந்த கதையை கொடுத்தால், அருமையா எழுதுவார். ஸொ, இவர்தான் லிஸ்ட்ல ஃப்ர்ஸ்ட்.

2- நாலு நாளுக்கு முன்பு கொஞ்சம் வருத்ததுல இருந்த தீனக்க்ஷாதான்.. ப்ளாக் எழுதுறது ஒரு சந்தோஷம்தான்..

மரம் வளர்வதற்க்கு என்னால் கொடுக்க முடிந்த இரண்டு கிளைகள் இவர்கள்தான். ;-)

வெகு வெகு விரைவில் உங்கள் கதையை படிக்கும் ஆசயில் உள்ளேன். ;-)

ஆஹா.. ரூல்ஸ் இருக்காமே! அதையும் போஸ்ட் செய்யனும்ல்ல!!! இதோ அந்த ரூல்ஸ்:

1. A blogger can add only 90-100 words (not more or less) at a time
2. All previous snippets of 90-100 words need to be copied before the new set of 90-100 words are appended.
3. Each entire snippet should be linked to the respective author (and not just the first sentence or so)
4. Characters, scenes, etc. can be introduced by an author
5. Bizarre twists, sci-fi, fantasy sequences are best avoided.
6. After appending 90-100, the Story Tree can be passed on to at most 5 bloggers.
7. If more than 1 branch leads to a blogger, s/he is free to choose any one of them but cannot mix the snippets of the individual branches.
8. The Story Tree is best left to grow than concluded
9. Please attach the image of the Story Tree above with each accepted tag (the link address can be copied and used).
10. Please comment back your story’s link to post from where you were initially tagged so that people can follow.

26 Comments:

said...

wonderful my friend :-)

said...

சும்மா பேய் கதை, கிரைம் கதைனு போயிக்கொண்டிருந்த கதையை அழகா காதலின் அடுத்த பரிமானதுக்கு கொண்டு போயிட்டீங்க..
படிச்சவுடன் உங்களை வாழ்த்தாம இருக்க முடியல மை பிரண்ட்..

வாழ்த்துக்கள்..

said...

//அதான் ஆபிஸுக்கு வந்தவுடனேயே மரத்துக்கு தண்ணீர் ஊத்த ஆரம்பிச்சுட்டேன்.
//

அட எல்லோரும் நம்மளை மாதிரி தான் போல

//நழுவ விட்ட போனை கையிலெடுத்து என்னை தாக்கியவர் (ஹீ ஹீ ஹீ) கார்த்திக்//

well said and used flow :-))

அதுவும் எல்லா ரூல்ஸும் பாலோ பண்ணி.. கலக்குங்க மை பிரண்ட்..

நல்ல பெண்ணாய் டேக் போட்டதுக்காக மூணு பின்னூட்டங்கள் :-))

said...

நன்றி.

காமேடியா எழுதலாம்ன்னு நெனச்சேந். ஐடியா வரல. அதான், காதல் கதையா மாற்றிவிட்டேன். ;-)

என்னை இப்படி எழுத வச்ச உங்களுக்குதான் நன்றி சொல்லனும்..ஹீ ஹீ ஹீ

said...

My friend, Did you add this post to thamizhmanam.. it was not displayed.. thats why I am asking..

Add pathivu toolbar to your blogger template.. then use that..

It will attract more people.. (you can see my post on right hand side of the thamizhmanam's home page) mail me to karthikmuthurajan@gmail.com if you want more details..

All the Best..

said...

Otherwise time being, enter you blog address http://engineer2207.blogspot.com in left topmost textbox and click 'ali' button.. so it will display in home page.. you can see my asin post link there..

said...

//அட எல்லோரும் நம்மளை மாதிரி தான் போல//

இதுபோல ஆபிஸ்ல செய்தாதான் திரில். ;-)

////நழுவ விட்ட போனை கையிலெடுத்து என்னை தாக்கியவர் (ஹீ ஹீ ஹீ) கார்த்திக்//

well said and used flow :-))//
இதுக்கு இன்னொறு நன்றி..
மூன்றுக்கு மேலேயே பின்னூட்டம் போட்டதுக்கு நன்றி.

said...

//My friend, Did you add this post to thamizhmanam.. it was not displayed.. thats why I am asking..//

I had regsitered. Nut I dont know how to add it. I think beta blogger doesnt support. Can you guide me?

said...

//.:: My Friend ::. said...
I had regsitered. Nut I dont know how to add it. I think beta blogger doesnt support. Can you guide me? //

ஹாய் 'மை ஃப்ரெண்ட்',

நான் கூட பீட்டா ப்ளாக்கரில் பதிவு ஆரம்பிச்சதுனாலப் பலப் பிரச்சனைகளுக்கப்புறம் தமிழ்மணம் டூல்பார் இப்ப சரியா வேலை செய்யுது. நீங்க இந்த 'லிங்'க முயற்சி செஞ்சிப் பாருங்க.

http://blog.thamizmanam.com/archives/51

said...

//ஜி said...

ஹாய் 'மை ஃப்ரெண்ட்',

நான் கூட பீட்டா ப்ளாக்கரில் பதிவு ஆரம்பிச்சதுனாலப் பலப் பிரச்சனைகளுக்கப்புறம் தமிழ்மணம் டூல்பார் இப்ப சரியா வேலை செய்யுது. நீங்க இந்த 'லிங்'க முயற்சி செஞ்சிப் பாருங்க.

http://blog.thamizmanam.com/archives/51//

ஜி, ரொம்ப நன்றிங்க..

அங்கே சொல்லியிருக்கும் ஒவ்வொன்றையும் செய்தாச்சு. ஆனாலும், எனக்கு இந்த பதில்தான் வருது.

"மன்னிக்கவும்! உங்கள் பதிவை புதுப்பிக்க இயலவில்லை.

உங்கள் செய்தியோடையில் பிழையிருக்க வாய்ப்புள்ளது.

உங்கள் செய்தியோடையைச் சோதிக்கவும்

பிழையிருப்பின் அதை சரி செய்தபின் அளிக்கவும்"

யாராவது எனக்கு உதவுறீங்களா?

said...

my friend,
நான் இதற்கு முன் நிறைய தடவை உங்கள் பதிவுகளில் கமெண்ட் எழுத முயற்சி செய்துள்ளேன்..

ஆனால் பீட்டா பிளாக்கருக்கும் எனக்கும் ஏதோ தகராறு.. அதனால் அனுமதிக்கவில்லை..

முதலில் இந்த கமெண்ட் வருமா என்று பார்த்து விட்டு மீண்டும் எழுதுகிறேன்.

said...

My friend,
என்னுடைய முதல் கமெண்ட் Saved என்று வந்துள்ளது.. இதுவே வெற்றி தான்..

ஆனால் இதற்கு முன்பு பலதடவை கமெண்ட் போடவே என்னை அனுமதிக்கவில்லை.

உங்கள் பதிவுகளை பார்த்து நான் மிகவும் ஆச்சர்யப் பட்டுள்ளேன்.. எத்தனை விஷயங்களைப் பற்றி எழுதுகிறீர்கள்!

என் பெயரை மரம் வளர்க்க சேர்த்ததில் மகிழ்ச்சி.. முயற்சி செய்கிறேன்.. ஆனால் இப்போது கப்பல் பணி பயிற்சி காரணமாக வேறு எதையும் எழுத முடிவதில்லை.. என் வலைப்பதிவு கூட இன்னொருவர் தான் டைப் செய்து வெளியிடுகிறார்.

உங்கள் எழுத்து மிகவும் ஆச்சர்யமூட்டுகிறது.. நான் விரிவாக பின்னர் எழுதுகிறேன்..

நானும் பிளாக்கர் பீட்டாவில் தான் தெரியாமல் ஆரம்பித்து, பின் புதிய Blogger பக்கம் தொடங்கினேன்.. ஆனால் தமிழ்மணத்தில் வரவைக்க வழி உள்ளது.. விரைவில் தெரிவிக்கிறேன்.

said...

//கடல்கணேசன் said...
ஆனால் பீட்டா பிளாக்கருக்கும் எனக்கும் ஏதோ தகராறு.. அதனால் அனுமதிக்கவில்லை..

முதலில் இந்த கமெண்ட் வருமா என்று பார்த்து விட்டு மீண்டும் எழுதுகிறேன். //

உங்கள் கமெண்ட் இதோ!

said...

//கடல்கணேசன் said...

ஆனால் இதற்கு முன்பு பலதடவை கமெண்ட் போடவே என்னை அனுமதிக்கவில்லை.//

பீட்டா ப்ளாக் உபயோகிப்பதால், சாதாரண ப்ளாக் உபயோகிக்கிறவங்களோட ப்ளாக்கில் கமெண்ட் போட நான் இரண்டு தடவை லோக்-இன் பண்ண வேண்டி இருக்கு. இந்த பாஸ்வோர்ட்டை என் கணிணியில் பதிவு செய்ய முடியல. ஏன்னா, இது ஜிமேயில் அக்கவுன்ட் உபயோகிப்பதால்..

அதேபோல், சாதாரண ப்ளாக் உபயோகிக்கிறவங்க பீட்டா ப்ளாகில் கமெண்ட் போட முடியறது இல்லை..

கூகிள் இதை சீக்கிரமாக சரி செய்யனும். :-(

//உங்கள் பதிவுகளை பார்த்து நான் மிகவும் ஆச்சர்யப் பட்டுள்ளேன்.. எத்தனை விஷயங்களைப் பற்றி எழுதுகிறீர்கள்! //

அத்தனை விஷயம் பேசினாலும், உங்களை போல் சுவாரஸ்யமாக எழுத முடியலையேன்னு கொஞ்சம் ஃபீலிங் இருக்கு. உங்களைபோல் நன்றாக எழுதும் ப்ளாக்கர்களின் பதிவை படித்து நான் என்னை சரி செய்துகொள்கிறேன். :-)

//என் பெயரை மரம் வளர்க்க சேர்த்ததில் மகிழ்ச்சி..//

சந்தோஷம்..

//முயற்சி செய்கிறேன்.. ஆனால் இப்போது கப்பல் பணி பயிற்சி காரணமாக வேறு எதையும் எழுத முடிவதில்லை..//


நீங்கள் முயற்சி செய்யுங்கள். நீங்கள் ஃப்ரீயா இருக்கும்போது எழுதினால் போதும்.. ஆனால் எழுதாமல் விட்டுவிடாதீர். ;-)

//உங்கள் எழுத்து மிகவும் ஆச்சர்யமூட்டுகிறது.. நான் விரிவாக பின்னர் எழுதுகிறேன்..//

என் பதிவு உங்களுக்கு ஆச்சர்யம் ஊட்டுகிறதுன்னா, அது என்னனு தெரிய எனக்கும் ஆவலாய் இருக்கு. இதுக்காக காத்திருக்கிறேன். ;-)

//ஆனால் தமிழ்மணத்தில் வரவைக்க வழி உள்ளது.. விரைவில் தெரிவிக்கிறேன். //

நன்றி.. காத்திருக்கிறேன்..

said...

hey another Malaysian girl....welcome to world of tamil blogging.Your story was superb!

said...

Hey another malaysian girl.Nice to see your blog.Keep up the good job.bye

said...

Hi My Friend,

Please try this link for the validation of your atom feed.
http://validator.w3.org/feed/check.cgi?url=http://engineer2207.blogspot.com/atom.xml

If you still find problem send a mail to listadmin at thamizmanam dot com and techsupport at thamizmanam dot com. For quicker response post your problem in Thamizmanam google group (You can find this in 'manRam' tab of Thamizmanam site). Join this group and post your problem. I hope your problem will be rectified soon.

P.S: Sorry for English. I'm in office and in hurry :).

said...

Did you get the error while adding your URL in the Thamizmanam site? Since I don't find your blog in Thamizmanam list. Unless otherwise your blog is added, your posts will not be aggregated.

said...

//Thurgah said...
hey another Malaysian girl....welcome to world of tamil blogging.Your story was superb! //

Wow. another Malaysian? You are first Malaysian I ever saw in blog. Thanks for your wishes & welcome to my World! :-)

said...

muyarchi cheythuvidden Ji..

1st naan en blog url-ai thamizhmanathil idden. athu intha error message koduththathu:

"மன்னிக்கவும்! உங்கள் பதிவை புதுப்பிக்க இயலவில்லை.

உங்கள் செய்தியோடையில் பிழையிருக்க வாய்ப்புள்ளது.

உங்கள் செய்தியோடையைச் சோதிக்கவும்

பிழையிருப்பின் அதை சரி செய்தபின் அளிக்கவும்"

error messagil ulla linkai thaddinaal, athu ennai inGke konNdu chenrathu:

http://validator.w3.org/feed/check.cgi?url=http://engineer2207.blogspot.com/atom.xml

aanaalum entha maarramum illai.. NeengkaL chonna maathiri tech supportkku oru minnanjal anuppukiREN..

said...

Adada.. Supera kalakiteenga :)

//You lost something precious//
Super shot :)

said...

மரத்த நல்லா வளர்த்திருக்கீங்க்க. நல்லா போகுது கதை.

said...

//G3 said...
Adada.. Supera kalakiteenga :)

//You lost something precious//
Super shot :) //

Thank you. Ithu Lord Of The Rings-la Gollum sollura maathiri ille?

said...

//Priya said...
மரத்த நல்லா வளர்த்திருக்கீங்க்க. நல்லா போகுது கதை. //

NanrinGka.. maththavanGkalum ithai Nallaa valarkiraanGka.. ;-)

said...

கடைசியா தமிழ்மணம்ல சேர்ந்திட்டீங்க போல... ;)

said...

//ஜி said...
கடைசியா தமிழ்மணம்ல சேர்ந்திட்டீங்க போல... ;) //

ஆமாங்க ஜி.

நன்றி சொல்வதற்கே ஒரு பதிவு போடணும் போல.