Friday, December 15, 2006

137. கண்களில் என்ன ஈரமோ??

சிலர் வருத்ததுல இருக்கும்போது, யாராவது வந்து சமாதானம் படுத்தவேண்டும்ன்னு நினைப்பாங்க. மற்றவர்களிடம் தன் சோகங்களை பறிமாறிகொண்டால், தன்னிடம் இருக்கும் பாரம் இறக்கி வைக்கப்படுவதைபோல் உணர்வார்கள்..

ஆனால், எனக்கு என்னுடைய பிரச்சனைகள் / சோகங்களை நானே தாங்கிகொள்ள வேண்டும்ன்னுதான் நினைக்கிறேன். பாடல்கள் / இசைகள் - அதிலிருக்கும் வரிகள் பல பல சமயங்களில் எனக்கு உருதுணையாக இருந்திருக்கு.

அழ வேண்டும்ன்னு நினைக்கிற நேரங்களிக் அழவைக்கும் பாடல்களை கேட்பதும், சிரிக்க வேண்டிய நேரத்தில் சந்தோஷமான பாடல்கள் கேட்பதும், அசைக்ன்மென்ட் கடைசி நாளில் / கடைசி நிமிடங்களில் செய்யும் போது விருவிருப்பான பாடல்களை கேட்பதும், அமைதியான நேரங்களில் மனதை தழுவும் சென்டிமென்ட் பாடல்களை கேட்பது என் வழக்கம்.. இதுக்காகவே ஒரு பெரிய டாதாபேஸ்(database) வச்சிருக்கேன். :-)

நான் கவலையில் இருக்கும்போது எனக்கு ஆறுதல் சொல்வதற்க்காக சில பாடல்கள் கேட்பேன் அதில் "கண்களில் என்ன ஈரமோ"ன்ற பாடலும் ஒன்று. உழவன் என்ற படத்துக்காக பாலசுப்ரமணியமும் சித்ராவும் பாடிய இந்த பாடலுக்கு இசையமத்தவர் ரஹ்மான்தான்.

இந்த பாடலை நீங்கள் இங்கே கேட்கலாம்: http://www.oosai.com/mail_sng_view.cfm?plyid=1100'

கண்களில் என்ன ஈரமோ
நெஞ்சினில் என்ன பாரமோ
கைகளில் அதை வாங்கவா
ஒரு தாயைபோல்
உன்னை தாங்கவா?
(கண்களில்)

பெற்றவள் விட்டு போகலாம்
அன்னை பூமியும் விட்டு போகுமா?
தன்னுயிர் போல காப்பதில்
தாயும் நிலவும் ஒன்னுதான்..
இருக்கும் தாயை காத்திடு
மயக்கம் தீர்ந்து வாழ்ந்திடு
புது கோலம் போடு
விதி வாசலில்
கலக்கம் ஏனையா?
(கண்களில்)

அம்மம்மா இன்று மாறினேன்
அன்புக்கு நன்றி கூறினேன்
உள்ளத்தின் காயம் ஆறவே
உதவியதும் வார்த்தைதான்
நிம்மதி இன்றி வாடினேன்
நின்றிட நிழல் தேடினேன்
திக்கற்று போன வேளையில்
தெரிந்தது என் பாதைகள்
உனது பாடல் கேட்டது
மனதில் பாலை வார்த்தது
புயல் காற்றில் வாடி
நின்ற ஓடம்தான்
கரையை சேர்ந்தது

கண்களில் இல்லை ஈரமே
நெஞ்ஜினில் இல்லை பாரமே
கைகளில் அதை வாங்கினாய்
ஒரு தாயை போல
என்னை தாங்கினாய்..
(கண்களில்)


இந்த பாடலின் இசையே நமது வலியில் பாதியை போக்கிவிடும்.. பலமான இசை இல்லாமல், மிகவும் குறைவான வாத்தியங்களை பயன் படுத்தியிருக்கிறார் ரஹ்மான். அதுவும் 1:28-இலிருந்து 1:43 நிமிடங்கள் வரை வரும் அந்த பியானோ இசை அருமை. (நான் இசையை பற்றி படிக்கவில்லை. ஏதாவது தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும். இது நான் உணர்ந்த விஷயங்கள் மட்டுமே!)

// அம்மம்மா இன்று மாறினேன்
அன்புக்கு நன்றி கூறினேன்
உள்ளத்தின் காயம் ஆறவே
உதவியதும் வார்த்தைதான்
நிம்மதி இன்றி வாடினேன்
நின்றிட நிழல் தேடினேன்
திக்கற்று போன வேளையில்
தெரிந்தது என் பாதைகள்
உனது பாடல் கேட்டது
மனதில் பாலை வார்த்தது
புயல் காற்றில் வாடி
நின்ற ஓடம்தான்
கரையை சேர்ந்தது//


பாலா பாடிய இந்த வரிகள்தான் என்னை வருடிய சில வரிகள்ன்னு சொல்லலாம்.. அம்மம்மா.. அருமை அருமை!! அழுதுகொண்டிருந்தவனும் கூட அழுவதை நிருத்திவிடுவான்.

இந்த பாடலில் நீங்கள் கவனித்தீரானால், முதல் பாதியில் சித்ரா பாலாவுக்கு ஆறுதல் கூறுவார். அந்த ஆறுதலில் அவர் மாறி நான் கவலையை மறந்தேன் என்று இரண்டாம் பாதியில் பாடுவார். ச்ந்தோஷமான ஒரு சூழல் ஒருவாகிவிடும்..

இதே சாயலில் மூன்று வருடத்துக்கு முன் ஒரு பாடல் வெளியானது ஞாபகம் இருக்கிறதா? இதேபோல், அந்த பெண் சமாதானம் படுத்த, இரண்டாம் பாதியில் அந்த ஆண் கவலை தெளிந்து பாடுவார். இதுவும் ஒரு ஹிட் பாடல். எனக்கு மிகவும் கவர்ந்த பாடல்களில் இன்னொன்று. உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?

6 Comments:

said...

காதல் கொண்டேன் படத்தில் வரும் 'நெஞ்சோடு'

said...

//ஜி said...
காதல் கொண்டேன் படத்தில் வரும் 'நெஞ்சோடு' //

இதேதாங்க. இதை பத்தி ஒரு பதிவைபோடலாம்ன்னு நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க?

said...

எனக்குப் பழைய பாடல்களைக் கேட்கும் போது இப்படியான ஆறுதல் கிட்டுவதுபோல் இருக்கும்; குறிப்பாகக் கண்ணதாசனின் பாடல்கள். "இல்லாத மனிதனுக்கு இல்லை என்னும் தொல்லை;உள்ளவர்க்கு வாழ்க்கையெல்லாம் உள்ளது எல்லாம் தொல்லை"....அடா;;இது உலகுக் கொத்த தொல்லை...ஆறுமனமே!!ஆறு...என ஆறுதலாகும்.
யோகன் பாரிஸ்

said...

உண்மைதான் யோகன்..

said...

// .:: My Friend ::. said...
இதேதாங்க. இதை பத்தி ஒரு பதிவைபோடலாம்ன்னு நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க?//

Kanippa poodunga My Friend...

said...

//Kanippa poodunga My Friend... //

aahaa.. seekkiramE pOdduduvOm!;-)