Saturday, June 09, 2007

179. என்ன அழகு எத்தனை அழகு..

அச்சூம்ன்னு தும்பிக்கிட்டேதான் உள்ளே வரணும் போல.. செம்ம தூசி.. 1 மாதமா நான் இந்த பக்கம் வரவே இல்லை.. உண்மையை சொல்லுங்க.. நீங்களும் இந்த பக்கம் வந்திருக்க மாட்டீங்களே?

இருக்கட்டும் இருக்கட்டும்.. நானும் உயிரோடு இருக்கேன்னு உணர்த்த ஒரு மொக்கை போடலாம்ன்னு வந்திருக்கேன். என்ன எழுதலாம்ன்னு தெரியல. சரி, படம் காட்டலாம்ன்னு யோசிக்கிறப்ப, பதிவு அழகா இருக்கணும்ன்னு நினைச்சேன்.

டக்குன்னு ஐடியா வந்தது! பாருங்கோ இவரை.. என்ன அழகு! எத்தனை அழகு.. கோடி மலர்கள் கொட்டிய அழகு.....











Sunday, March 25, 2007

171. சித்தார்த் விளையாடும் விளையாட்டு

Aata (கேம்) - "புலி மீது சவாரி"ன்னு subtitle-உடன் அமர்க்களமாய் வெளியாகியுள்ளது சித்தார்த், இல்லியானா நடிக்கும் Aata பட புகைப்படங்கள்.

நன்றி: ஜி

ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட படங்கள்:


Monday, December 25, 2006

143. முயற்சி இருந்தால் மார்க்கம் உண்டு..

வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா
தடைக்கல்லும் உனக்கொரு வழிக்கல்லப்பா..


என்று படையப்பாவில் வரும் வரிகள் ஞாபகம் இருக்கிறதா?

ஒவ்வொருவருக்கு தடைகள் வெவ்வேறு வழியில் வருகின்றன. நாம்தான் நம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்.

இதோ இந்த நத்தை அதன் தடைக்கு தீர்வு காணுகிறது என்று பாருங்கள்..

யாராவது உங்களிடம் ஏதாவது செய்ய முடியாது என்று சொன்னால்:

சுற்றும் முற்றும் பாருங்கள்


இருக்கும் ஒவ்வொரு வழியையும் யோசியுங்கள்


அந்த வழியை மேற்கொள்ளுங்கள்


கடவுள் உங்களுக்கு அருளிய எல்லாவற்றையும் உபயோகியுங்கள்


வித்தியாசமாக சிந்தியுங்கள்


கடைசியில் வெற்றி உங்களுக்கே! மற்றவர் சொன்னது தவறு என்று நிரூபியுங்கள்


கடவுள் நம்மால் தாங்கிக்கொள்ள முடியும் தடைகளைதான் தருவார். அதை எதிர்க்கொள்ள நம்மால் கண்டிப்பாக முடியும். முயற்சி இருந்தால் மார்க்கம் உண்டு!

இந்த நண்ணாளில் என்னால் முடிந்த ஒரு சின்ன பங்கு.