Sunday, January 15, 2017

கம்போடியா 2: கேபால் ஸ்பியன் (Kbal Spean)




தளம் 2: கேபால் ஸ்பியன் (Kbal Spean)

Kbal Spean ஒரு வியக்கத்தகும் விதமாக செதுப்பட்ட ஆற்றங்கரை. பொதுவாக “1000 லிங்கங்களின் நதி” என ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுகிறது. ஆற்றங்கரையில் லிங்கங்களும், இந்து மத செய்வங்களும் விரிவாக செதுக்கப்பட்டுள்ளன. இந்த இடம் 1969-இல் ஜீன் போல்பெட் (Jean Boulbet) -க்கு ஒரு துறவி மூலம் அறியப்பட்டது.

இத்தளத்துக்கு நீங்கள் செல்ல விரும்பினால் நல்ல காலணிகளை அணைந்து கொள்வது சிறப்பு. சுவாரஸ்யமான் பாறாங்கல் மற்றும் இயற்கை அழகு நிறந்த காட்டில் 1.5கி.மீ மேல்நோக்கி நடக்க வேண்டும். போதுமான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள். இந்த பாதை இறுதியில் இரண்டாக பிரியும்; ஒன்று நீர்வீழ்ச்சி; இன்னொன்று ஆற்றின் சிற்பங்கள். ஆற்றின் மேற்பிரிவில் விஷ்ணு; அதை தொடர்ந்து அவருடைய கதைகள் செதுக்கப்பட்டிருக்கும். அதில் சில கவலைக்கிடமாக அழிந்துள்ளன. இப்போது இந்த இடமும் இந்த செதுக்கலும் பராமரிக்கப்படுகின்றன.

இதனை தொடர்ந்து நகரும் ஆற்றின் வழி நெடுக விஷ்ணு, சிவன் மற்றும் அவரின் துணைவி பார்வதி மற்றும் வித விதமான லிங்கங்களின் அமைப்பு ஆற்றங்கரையோரம் தோன்றுகின்றன. இது நமக்கு ஒரு தேடல் உணர்வை கொடுத்து ஒவ்வொன்றையும் தேட வைக்கிறது. ஒரு ஆயிரம் லிங்கங்களை பற்பல வடிவங்களில் காணலாம். சிவன் அர்த்தநாரீஸ்வர் உருவில் லிங்கத்தில் காட்சியளிக்கிறார் என்று அங்கே இருந்த கம்போடிய பெண்மணி தெரிவித்தார். நீர்வீழ்ச்சியின் மேல் பல மிருகங்களின்  (மாடு, தவளை) வடிவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. அதன் காரணம் நான் அறியேன்.

இதன் கீழே ஒரு மர படிக்கட்டு நீர்வீழ்ச்சிக்கு போக வழியமைத்து கொடுத்தது. இது 1000 லிங்கங்களை கடந்த நீர் என்பதால் இது புனித நீர் என்றும், இதை குடிக்கவும் குளிக்கவும் பயன்படுத்துவது நன்று என்று தெரிவிக்கப்பட்டது. 

இந்த இயற்கை அழகை ரசிக்க  3 மணிநேரம் பொதுமானது. சியம் ரேப்-பில் இருந்து 50கி.மீ வடக்கிழக்கில் / Banteay Sreri-இல் இருந்து 18 கி.மீ; அல்லது 2 மணி நேரம் துக் துக்கில் சவாரி போதுமானது. அங்கோர் நுழைசீட்டு இங்கே பயன்படுத்திகொள்ளலாம். தனியாக நுழைசீட்டு வாங்க அவசியம் இல்லை. மேலே ஏதும் கடைகள் இருக்காது. நுழைவாயில் அருகே உள்ள கடையில் உங்கள் மதிய உணவை உட்கொள்ளவும். 3.30pmக்கு மேல் இங்கே செல்ல முடியாது. துக்துக் வாடகைக்கு எடுத்தால் கண்ணிவெடி அருங்காட்சியகம், Kbal Spean & Banteay Srei சேர்த்து $25-30 தேவைப்படும்.

0 Comments: