பெய்ஜிங் 2008 நடத்திக்கொண்டிருக்கும் சீனா மற்றும் உண்மையான சீனா. நிறைய வித்தியாசம் இருக்குங்க.இந்த வாரம் சீனாவுக்கு சுற்றுப்பயணியாக போறீங்களா? ஊரை பார்த்து இதுதான் சீனா என்று தப்பாக எடை போடாதீர்கள்! In China, Things are not always as they seem.
எல்லா ஒலிம்பிக் நகரங்களை போல சீனாவும் தனக்கு புது/ சூப்பரான இமேஜ் உருவாக்கிக்கொள்ள முயற்சி பண்ணியிருக்கின்றது. பிச்சைக்காரர்கள் வேறு மாநிலத்துக்கு புலம் பெயர்க்கப்பட்டார்கள். தலைநகத்தில் உள்ள தொழிற்சாலைகள் நகரத்துக்கு வெளியே இடம்பெயர்க்கட்டன (இதற்கு எவ்வளவு செலவு பண்ணியிருக்கிறார்கள் தெரியுமா?).
ஒலிம்பிக்காக ஒரு மாநிலத்தை மட்டுமல்ல; ஒட்டுமொத்த சீனா நாட்டையே சுத்தும் செய்தது சீனா அரசாங்கம். சாலைகளை சுத்தம் செய்து, புது சாலைகளை உருவாக்கி, பழுதடைந்து கிடந்த சமிக்ஞை விளக்குகளை சரிப்படுத்தி, சுத்தமாக துடைத்தெடுத்திருக்கின்றனர். சாலைகள் கண்ணாடிப்போல பளப்பளக்குதாம். சாலையோரங்களில் பூக்களும், தோட்டங்களும், மரங்களும் நடப்பட்டன. செடிகள் என்றால் சாதாரண செடிகள் இல்லை. எல்லா செடிகளிலும் பூக்கள் பூத்துக்குலுங்க வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டன. ஒலிம்பிக் விளையாட்டு முடியும்வரை இந்த செடிகளுக்கு, தோட்டங்களுக்கு தினமும் தண்ணீர் ஊற்றி பேணிக்காக்க எக்கச்சக்க வேலையாட்களை நியமித்தது சீனா அரசாங்கம். எல்லா கட்டடங்களுக்கும், வீடுகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் வர்ணம் பூசப்பட்டன. பாதியில் நிறுத்தப்பட்ட கட்டுமானப்பணிகள் அப்படியே இருந்தால் அசிங்கமாக காட்சியளிக்கும் என கருதி அவைகளுக்கும் வர்ணம் பூசி, சுத்தம் செய்தார்கள். சீனாவில் இன்னொரு பெரிய பிரச்சனை புகைமூட்டம். தொழிற்சாலைகள், வாகனங்களில் இருந்து வரும் புகைமூட்டத்தினால் 10 அடி தள்ளியிருக்கும் பொருளும் மங்களாகத்தான் தெரியும் (முக்கியமாக பெய்ஜிங்கில்). செயற்கை மழை, அது இது என்று செய்து புகைமூட்டத்தை (சீனா முழுக்க) போக்கியிருக்கின்றன. ஒலிம்பிக் போட்டி ஆரம்பமாவதற்கு ஒரு வாரம் முன்னரே பெய்ஜிங்க் நகரில் நுழைய எந்த கார்களும் அனுமதிக்கபடவில்லை. ஆக மொத்தத்துல சீனா சீனாவாகவே இல்லை. என் மேனஜர் இரண்டு மாதத்துக்கு முன்னாடி சீனாவுக்கு போய் வந்தார். போய் வந்தவுடன் ஒரு நாள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சுத்தமான காற்று இல்லாததால் வந்த வினை. அவருக்கு ஏற்கனவே நுரையீரலில் ஒரு சின்ன சிக்கல் இருந்தது. பிறகு 2 வாரத்துக்கு முன்னரும் சென்றிருந்தார். நம்பவே முடியாத அளவில் சீனா மாறியிருந்தது. தெளிந்த வானம், சுத்தமான இடம் என்று உருத்தெரியாமல் மாறியிருந்தது. அவர் காட்டிய படங்களை பார்க்கும்போதே புரிந்துவிட்டது சீனாவின் தந்திரம்!
இவையெல்லாம் தன் நாட்டிற்கு பாசிட்டிவ் இமேஜ் உருவாக்குறதுக்காகத்தான் சீனா செய்தது. தப்பே இல்லை! ஒரு விளையாட்டுக்காக ஒரு நாடே சுத்தம் செய்வது பெரிய விஷயம். அதுவும் இதற்காக மட்டுமே இவ்வளவு செலவு பண்ணியிருக்காங்களே. எந்த நாடு இவ்வளவு செலவு பண்ணும்?
ஆனால், இவையெல்லாம் தவிர்த்து ஒலிம்பிக் திறப்புவிழாவில் சீன அரசாங்கம் செய்த பொய்த்தனம் இருக்கே! உலக மக்கள் நாம் அனைவரையும் முட்டாள் ஆக்கிவிட்டது!!!!
பெய்ஜிங் 2008 ஒலிம்பிக் திறப்புவிழாவை கண்டு வியக்காத மக்களே இல்லை. யூடியூப்பில் ஒவ்வொரு வீடீயோக்கு கிடைத்த ஹிட்ஸை பார்த்தாலே தெரியும்! உலக மக்கள் பார்த்து மிகவும் வியந்த ஒரு நிகழ்வு வானவேடிக்கை. பல நாடுகள் அந்த வானவேடிக்கையை புகழ்ந்து தள்ளின. "இப்படி செய்வது மிகவும் கடினம். ஆனால் சீனா சிறிது தவறுமின்றி செய்தது" என்று பல பத்திரிக்கைகள் சொல்லியிருந்தன.
ஆனால், அந்த வானவேடிக்கைகளில் பாதி பொய்யானது. ஏற்கனவே வெடித்து அதை பதிவு செய்து திறப்புவிழா அன்று உண்மையான வானவேடிக்கைகளையும் போலியையும் கலந்திருக்கிறார்கள். பார்த்த நமக்கு எது உண்மையானது எது போலியானது என்று கூட கண்டுப்பிடிக்க முடியாத அளவு நேர்த்தியாக இருந்திருக்கிறது! உண்மையில் அவர்கள் வெடிக்க வைத்திருந்து சில வானவேடிக்கைகள் வெடிக்காமல் செயலிழந்தும் இருந்திருக்கின்றன. அதையும் நாம் கண்டுப்பிடிக்க முடியவில்லை. தியானெந்மென் (Tiananmen) சதுரங்கத்திலிருந்து விளையாட்டரங்கத்துக்கு நகர்ந்த ராட்சச்ச சுவடுகள் கூட உண்மையானதில்லை. அது கணிணியால் உருவாக்கப்பட்ட பொய்யான வானவேடிக்கைதான்! They can do anything under the sky!
இதையும் தவிர்த்து இன்னும் பெரிய பொய்யை நம் தலையில் கட்டியிருக்கிறது சீனா!
திறப்புவிழாவில் அத்தனை மக்களின் மனதையும் கொள்ளைக்கொண்ட சிறுமி லின் மியோகே (Lin Miaoke). சிவப்பு நிற கவுனில் ரெட்டை வால் முடிக்கட்டி சிரித்த முகத்துடன் சீனாவின் தேசியகீதத்தை பாடினாள். மறுநாள் எல்லா நாளிதழிலும், தொலைக்காட்சிகளிலும் "The Rising Star of East" என்று வர்ணிக்கப்பட்டாள். அறுபுதமான குரல், நல்ல குரல்வளம், பெரிய பாடகியாய் வருவாள் என வர்ணிக்கப்பட்டாள். பல விளம்பரங்களில் நடிக்க கோறியும், பல இண்டர்வியூவில் பங்குப்பெறவும் அழைப்புகள் இச்சிறுமிக்கு வந்துக்கொண்டே இருக்கின்றது. ஆனால், அந்த சிறுமியை அதே பாடலை இப்போது பாடச் சொல்லுங்களேன் பார்ப்போம்!
உண்மையில் இந்த பாடலை பாடியவர் யங் பெய்யீ (Yang PeiYi) என்ற 7 வயது சிறுமி. சில ஒத்திகைகளிலும் பெய்யீயை உபயோகப்படுத்திவிட்டு, திறப்புவிழாவில் இன்னொரு பெண்ணை நிற்க வைத்திருக்கிறார்கள். ஏன்? என்று நாம் கேட்கும் காரமான கேள்விக்கு சீனா அரசாங்கமும் நிகழ்ச்சி நடத்துணர்களும் பதில் சொல்கிறார்கள்:
" பெய்யீ அழகாக இல்லை. பற்கள் சீராக இல்லை. நாங்கள் ஒரு நேர்த்தியான நாட்டின் இமேஜை பிரதிப்பலிக்க நினைக்கிறோம். இந்த இமேஜுக்கு பெய்யீயின் முகம் சரிவராது. அதனால்தான் மியோகோவை தேர்ந்தெடுத்தோம்"
அடப்பாவிமக்கா.. பெய்யீயும் உங்க நாட்டு பொண்ணுதான்! மியோகோவும் உங்க நாட்டு பொண்ணுதான்! அழகாய் இல்லைன்னா இவள் உங்க நட்டு பெண்ணாய் இருக்க முடியாதா? இன்னும் கொஞ்ச நாட்கள் போனால் இவர்களையெல்லாம் நாடு கடத்திடுவீங்க போல?
அழகா முக்கியம்? அறிவு, திறமைதானே முக்கியம்! அதுவும் அறிவியல் மற்றும் எல்லா விஷயங்களிலும் முதன்மையில் நிற்கும் சீன நாட்டின் பேச்சா இது!!!!!
பெய்யீக்கு என்ன குறை? அவள் அழகாய்தானே இருக்கா? சின்ன பிள்ளைகள் எப்படி இருந்தாலும் அவர்கள் அழகுதான். cute-தான். அதற்காக அவளுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தை இப்படியா முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பார்கள்?
உண்மை வெளியே தெரிந்ததில் பெய்யீக்கு ஒரு வகையில் நல்ல விஷயம்தான். ஆனால் மியோகோவின் நிலமை? infact, நிகழ்ச்சியில் அவள் பாடும் (நடிக்கும்)போது இன்னொரு பெண்ணின் குரலுக்கு தான் வாயசைக்கிறோம் என்று கூட தெரியாமல் இருந்திருக்கலாம்! அவள் பாடியது மற்றவர்களுக்கு கேட்காது என்ற உண்மை அவளிடமிருந்தே மறைக்கப்பட்டிருக்கலாம். நிகழ்ச்சி முடிந்ததும் பத்திரிக்கைகளுக்கு போஸ் கொடுத்து இண்டர்வியூவில் கலந்துக்கொண்டபோது அவள் திறமைக்கு கிடைத்த பரிசென்று நினைத்திருக்கும் மியோகோ இனி எப்படி வெளியே தன் முகத்தை காட்டுவாள்? எல்லாரும் அவளை கேலி பண்ண மாட்டார்களா?
சீனா தன் இமேஜுக்காக மியோகோவை ஊறுகாயாக பயன்படுத்திக்கொண்டதென்று சொல்லலாமா?
Thursday, August 14, 2008
பெய்ஜிங் ஒலிம்பிக்கில் சீனா செய்த மோசடிகள்
Posted by MyFriend at 8:58 PM 30 comments
Labels: ஒலிம்பிக்
Subscribe to:
Posts (Atom)