Tuesday, December 30, 2008

12 வருடத்துக்கு பிறகு ஒரு வெற்றிகரமான சந்திப்பு : 28 மாணவர்கள் + 2 ஆசிரியர்கள்

100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஆரம்பப்புள்ளியில் செய்யும் தவறு முதல் இடத்தில் வெற்றிப்பெற வேண்டிய வாய்ப்பை இழக்க வைத்துவிடும். இதுவே ஆரம்பப்புள்ளியில் சரியான நேரத்தில் புறப்பட்டு சீராக ஓடியிருந்தால் வெற்றி நிச்சயம்! அதனால்தான் இப்படிப்பட்ட விளையாட்டில் எப்படி முடிக்க வேண்டும் என்பதை விட எப்படி ஆரம்பிக்க வேண்டும் என்பதில் பயிற்சியாளர்கள் மிக கடுமையான பயிற்சிகளை விளையாட்டாளர்களுக்கு வளங்குவர்.

எவ்வளவுதான் படித்திருந்தாலும், என்னவெல்லாம் சாதித்திருந்தாலும், எங்கெல்லாம் போயிருந்தாலும் ஆரம்பப்புள்ளியை மறக்க முடியாது. ஆமாம்! நாம் வாயில் நுழையாத படிப்பெல்லாம் படித்து ஏ.சி. அறையிலும், விமானத்திலும், சொகுசு கார்களிலும் இப்போது பயணம் செய்தாலும், இதற்கெல்லாம் வித்தாக இருந்த நமது அ, ஆ சொல்லிக்கொடுத்த ஆசிரியர்களும், ஆரம்பப் பள்ளியும், நண்பர்களும், அங்கு நிகழ்ந்த நிகழ்வுகளும், வாங்கிய அடிகளும், ஓடிய ஓட்டங்களும், சிரித்து மகிழ்ந்த தருணங்களும், கண்கள் கலங்கி நின்ற சம்பவங்களும், பரிட்சையில் பிட் அடித்த நேரங்களும் எப்போதுமே மனதில் பசுமரத்தாணிப்போல் பதிந்து புதைந்து கிடைக்கின்றன.

வெகு சிலர் மட்டுமே அந்த பழைய நட்புகளை இன்னும் தன் தொடர்பில் வைத்திருக்கின்றனர். பலர் தன் வாழ்க்கை சக்கரம் ஓடும் வேகத்தில் இதற்கெல்லாம் நேரம் ஏது என்பதுபோல சுழன்று கொண்டிருக்கின்றனர். ஒரு கட்டத்தில் நீங்கள் நின்று திரும்பிப் பார்க்கும்போது “ச்சே.. வாய்ப்பு கிடைத்தபோது இந்த நட்பை புதுப்பிக்க முடியாமல் போய்விட்டதே! இப்போது இவர்களெல்லாம் எங்கே எப்படி இருக்காங்களோ!” என்று தோன்றவைக்கும் தருணம் மனதை மிகவும் புண்படுத்தும். பழைய நினைவுகளை நினைவில் கொண்டுவந்து கொஞ்சம் திருப்தி அடையவே முடியும்.

1996-ஆம் ஆண்டில் நாங்களும் எங்கள் ஆசிரியர்களும்

நான் சிறு வயதில் படிக்கும்போது ஒவ்வொரு ஆசிரியரும் வகுப்பில் சொல்லும் ஒரு விசயம்: ”இன்னும் சில வருடம் கழித்து நீங்களெல்லாம் படித்து நல்ல வேலையில் இருக்கும்போது எங்கேயாவது எங்களை பார்த்தால் “வணக்கம் டீச்சர், நாந்தான் உங்கள் மாணவன்/மாணவி. 19XX வருடத்தில் உங்கள் வகுப்பில் படித்தேன். இப்போது ஒரு டாக்டராக/வக்கீலாக/ஆசிரியராக/பொறியியலாலராக வேலை பார்க்கிறேன்” என்று அன்று சொல்லப்போகும் ஒரு வார்த்தைதான் எங்களை ஒரு முழு ஆசிரியராக ஆக்கும். ஒரு பெண்ணுக்கு தாய்மை எப்படி அவளை முழுமையாக்குகிறதோ, அதேப்போல இந்த ஒரு வார்த்தைதான் எங்களை ஒரு முழு ஆசிரியராக்கும்”. அப்போதே என் மனதில் புதைந்த விசயம்! நானும் எப்போதாவது எனக்கு படித்து கொடுத்த ஆசிரியர் முன்னாள் நின்று “டீச்சர் என்னை நினைவிருக்கிறதா? 96-ஆம் ஆண்டு உங்கள் வகுப்பு மாணவியாக இருந்தேனே? வீட்டுப்பாடம் செய்யாமல் உங்களிடம் அடிவாங்கினேனே! கணிதப்பாடம் நன்றாக செய்ததுக்கு நீங்க கூட தட்டிக்கொடுத்து முத்தம் கொடுத்தீங்களே!” என்றெல்லாம் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.

அந்த சந்தர்ப்பம் 12 வருடங்கள் கழித்து நேற்று அமைந்தது!
பத்துமலை ஆரம்ப தமிழ்ப்பள்ளியில் ஆறாம்வகுப்பு வரை படித்து 1996-இல் நானும் நண்பர்களும் வெளியானோம். 12 வருடம் கழித்து ஒரு 2 மாதத்துக்கு முன்பு திரும்ப நண்பர்களெல்லாம் ஒன்றாக சந்தித்தால் நன்றாக இருக்கும் என நினைத்து ஒவ்வொருவராக தேட ஆரம்பித்தேன். பல வகையிலும் கஷ்டப்பட்டு சிறுக சிறுக ஒவ்வொருவராக சேர்த்து 29/12/08-இல் சந்திக்கலாம் என ஏற்பாடானது.

காலை 11 மணிக்கு பத்துமலை கோவிலில் (முன்னாள் எங்கள் பள்ளி இந்த இடம்தான். பக்கத்திலேயே புதிதாக பள்ளி கட்டிக்கொண்டு அங்கே போனதும் எங்கள் பழைய பள்ளிக்கூடம் உடைக்கப்பட்டு கார் நிறுத்துமிடமாகவும், திருமண விருந்து நடக்கும் ஹாலாகவும் மாற்றப்பட்டுவிட்டது) எல்லாரையும் சந்தித்து சிறிது நேரம் அரட்டை அடித்தோம். பிறகு அனைவரும் கூட்டமாக பள்ளிக்கு சென்றோம். அப்போது எங்கள் மலாய் ஆசிரியை இப்போது அதே பள்ளியில் துணை தலைமையாசிரியராக பணியாற்றுகிறார். அவர் எங்களை பார்த்ததும் மகிழ்வுடன் வரவேற்றார். மற்ற ஆசிரியர்களை கூப்பிட்டு “இவர்கள்தான் என் பழைய மாணவர்கள்” என எங்கள் அனைவரையும் அந்த ஆசிரியர்களுக்கு அறிமுகப்படுத்திவைத்தார்.

அவரிடம் சில வார்த்தைகள் பேசிவிட்டு, எங்களில் நால்வர் (மற்ற அனைவரின் சார்பில்)அவருடன் பள்ளி அலுவலகத்துக்குள் சென்று இப்போதுள்ள பள்ளியின் நிலவரம், மாணவர்கள், ஆசிரியர்கள், பிரச்சனைகள், அதற்க்கான தீர்வுகள் என சில விசயங்களை கலந்தாலோசித்து விட்டு வந்தோம். அதன் பிறகு போட்டோஸ், போட்டோஸ், போட்டோஸ் என ஆங்காங்கே க்ளிக்கிக் கொண்டு பசி வந்ததும் அடுத்த இடம் பார்த்து கிளம்பினோம்.

மலாய் ஆசிரியர் ராஜேஸ்வரி டீச்சருடன் நாங்கள்

28 பேர் தாராளமாக உட்கார்ந்து சாப்பிட வசதியான இடம் எது என்று ஒரு பெரிய கேள்விக்கு விடை காணும் விதமாக அனைவரும் எஸ்.டி.சி ரெஸ்டாரண்டுக்கு பயணமானோம். அங்கே சுற்றி உட்கார்ந்த அனைவரும் எங்களையே பார்க்கும்படி பலவிதமான கூத்துகளை செய்து, உணவு அருந்தி, கலந்துரையாடினோம். இங்கேயும் போட்டோஸ் சில க்ளிக்கிவிட்டு அடுத்த இடத்துக்கு பயணத்தை தொடரலாமா என்று அனைவரின் கருத்துக்களையும் கேட்டோம். எல்லாரும் புறப்படலாம் என ஒரு மனதாய் முடிவெடுத்த பிறகு, நாங்கள் வாங்கிய நினைவுசின்னங்களை ஆளுக்கு ஒன்று என கொடுத்துவிட்டு 7 கார்களில் ரவாங்கை நோக்கி புறப்பட்டோம்.

உணவு விடுதியில் நாங்கள்

அங்கேதான் எங்கள் வகுப்பு ஆசிரியை திருமதி கலாவதி வசிக்கிறார். அவரிடம் முன்னமே நாங்கள் வரும் தகவலை அவரிடம் சொல்லியிருந்தபடியால், அவர் எங்களை வர சொன்ன இடத்துக்கு வந்து சேர்ந்தோம். அவரும் அதே நேரம் அங்கே வந்திருந்தார். “வாங்க.. அனைவரும் என் வீட்டும் போகலாம்” என சொன்னதும் 7 கார்களும் அவருடைய வாஜா காரை தொடர்ந்தோம்.

அருமையான இரண்டு மாடி வீடு. பல வித வித்தியாசமான பொருட்களால் அலங்கர்க்கப்பட்டிருந்தது. வீட்டில் டீச்சரின் கணவரும், அவருடைய மூன்று அழகிய மகள்களும் எங்கள் அனைவரையும் சந்தோஷமாக வரவேற்றனர். அங்கிள் வீட்டில் இருந்த அனைத்து நாற்காலிகளையும் எடுத்து வந்து வைக்க வைக்க, நாங்கள் வீட்டின் உள்ளே வர வர.. ”என்னடா வந்துட்டே இருக்காங்க.. எத்தனை பேரப்பா!”ன்னு அவருக்கே பிரமிப்பாய் இருந்திருக்கும்.

ஒரு வழியாக எல்லாரும் வந்து அவர் வீட்டும் ஹால் நிறைத்துவிட்டோம். டீச்சர் எங்களின் வருகை அவருக்கு எவ்வளவு சந்தோஷத்தை கொண்டுவந்துள்ளது என்று விளக்கினார். அவரின் குடும்ப உறுப்பினர்ர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். பிறகு அவரின் இப்போதைய பள்ளியை பற்றியும் அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதையும் சொன்னார்.

வருடத்துக்கு முன் டீச்சர் எங்களுக்கு என்னென்னமோ பரிட்சையெல்லாம் வைத்திருக்கிறார். இப்போது டீச்சருக்கு நாங்கெல்லாம் சேர்ந்து பரிட்சை வைத்தோம். நான் 12 வருடத்துக்கு முன் எடுக்கப்பட்ட வகுப்பு போட்டோவை எடுத்து வந்திருந்தேன். அதை டீச்சர் கையில் கொடுத்ததும் அவர் அந்த போட்டோவை வைத்து எங்கள் ஒவ்வொருவரையும் கண்டுப்பிடிக்கும் வேலையில் இறங்கினார். அவர் ஒவ்வொருவராக கண்டுப்பிடிக்க, நாங்கள் எங்கள் இப்போதைய நிலை என்ன என்றும் அவரிடம் பகிர்ந்துக்கொண்டோம். அனைவரும் நல்ல நிலையில் இருப்பதை கேட்டு அவர் மிகவும் பூரித்து போனார்.

டீச்சரிடம் நாங்கள் அனைவருமே ஒரு தடவையாவது அடி வாங்கியுள்ளோம். அந்த தருணங்களை இப்போது ஒன்று கூடி அவரிடம் பகிர்ந்துக்கொண்டோம். அவர் எங்களை கிள்ளியது, அடித்தது, அறைந்தது, என அப்போது கசப்பான தருணங்கள் இப்போது பகிர்ந்துகொண்டபோது ஒவ்வொருவரும் சிரித்துக்கொண்டோம். ஒருவர் பாடம் செய்யாததால் இன்னொருவர் அடி வாங்கிய சம்பவங்களிலிருந்து, நாங்கள் செய்த குறும்பால் எங்கள் வகுப்பு தலைவன் ஓட ஓட துரத்தப்பட்டது வரை சம்பவங்கள் இப்போது நகைச்சுவையாக மட்டுமே தோன்றியது.

இதையும் தாண்டி டீச்சர் எங்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்த தருணங்கள், அவர் எங்களுக்கு சொன்ன அறிவுரைகள், பிரச்சனையான மாணவர்களை தனியே கூட்டிச்சென்று அவர்களின் பிரச்சனைகளை பகிர்ந்துக்கொண்டு அவர் வருத்தப்பட்ட நேரங்கள், நாங்கள் நன்றாக பரிட்சையெழுதி வெற்றிப்பெற வேண்டும் என்று அவர் கடவுளை பிரார்த்தித்த வேளைகள், நிறைமாத கர்ப்பிணியாய் உடல் நலம் சுகமில்லாமல் இருந்த சமயங்களிலும் எங்கள் நலனுக்காக பள்ளியில் எங்களுடன் எங்கள் கல்விக்காக அர்ப்பணித்த அந்த சமயங்கள், நாங்கள் வெற்றிப்பெற்ற அந்த சமயத்தில் அவர் எங்கள் பக்கத்தில் இல்லாத அந்த சமயங்கள்... இப்படி பல மனதை நெகிழ வைத்த பல சம்பவங்கள் எங்கள் முன் தோன்றி கலங்க வைத்தன. ஆனால், எல்லாமே இப்போது வெற்றிக்கணியை பறித்ததில் ஒரு மகிழ்ச்சியான தருணமாக மாறியது.

நாங்கள் இப்படி கடந்த காலத்தை பற்றி நினைவு கூர்ந்த நேரத்தில் அங்கிள் எங்களுக்காக பலகாரங்கள் வாங்கி வந்து மேஜையை நிரப்பி விட்டார். பிறகு டீச்சர் கலக்கிய மைலோவும், டீயும், ஜூஸும் குடித்துக்கொண்டே பலகாரங்களை சுவைத்தோம். மீண்டும் பல இனிமையான தகவல்களை பறிமாறிக்கொண்டோம்.

அடுத்து அனைவரும் எப்போது சந்திக்கலாம்; எங்கு சந்திக்கலாம் போன்ற தகவல்கள் பறிமாறிக்கொள்ளப்பட்டது. அடுத்த மாதம் தோழி பிரேமாவின் திருமண வைபோகத்தில் எல்லாரும் அவசியம் கலந்துக்கொள்ளவேண்டும் என அன்பு வேண்டுக்கோள் விடுக்கப்பட்டது. டீச்சரும் எங்களுடன் கலந்துக்கொள்வதாக தீர்மானமானது. அதற்கு முன் வரும் ஜனவரி ஒன்றில் திலகவதியின் வீட்டில் நடக்கும் வருடப்பிறப்பு விருந்தில் கலந்துக்கொள்ள அனைவரும் அழைக்கப்பட்டனர்.

இனி, யாரும் தொடர்பு அறுந்து போகக்கூடாது என்பதற்க்காக ஒரு ஸ்ட்ராங்கான இணைப்பு தேவை என்பத்இல் அனைவரும் ஆம்மோதித்தனர். ஒரு க்ரூப் ஆரம்பித்தால் எல்லா வித தகவல்களும் ஒரே இடத்தில் பறிமாறிக்கொள்ள ஏதுவாக இருக்குமென எங்களில் ஒருவர் அந்த பொறுப்பை எடுத்துக்கொண்டோம். இதையும் தவிர்த்து சில நல்ல காரியங்கள் ஒன்றாக சேர்ந்து செய்ய திட்டமிட்டுள்ளோம். எல்லாம் நலம்பெற, நல்லபடியாக நடக்க இறைவன் அருள்புரிவானாக..

கிளம்பும்போது திரும்ப இன்னொரு குழு போட்டோ டீச்சருடன் எடுத்துக்கொண்டோம். டீச்சர் எங்களை ஒவ்வொருவரையும் கட்டிப்பிடித்து தழுவி முத்தங்களுடன் வழியுனுப்பிவைத்தார். அங்கிள் மற்றும் டீச்சரின் புதல்விகளுக்கும் இவ்வேளையில் எங்கள் கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

வகுப்பு ஆசிரியர் கலாவதி டீச்சருடன் நாங்கள்

நேற்றிரவு அனேக நண்பர்களிடமிருந்தும் எனக்கு குறுந்தகவல்கள் வந்தன. அனைவரும் எந்த அளவு ரசித்தனர் என்ற திருப்தியை குறுந்தகவலாக எனக்கு அனுப்பியதை படிக்கும்போது எங்கள் சந்திப்பின் வெற்றியை அறியமுடிந்தது. இது இத்தோடு நிற்காமல் இன்னும் பல வருடங்கள் தொடர வேண்டும்; அதுவும் இது வெறும் ஒரு சந்திப்பாக மட்டும் இல்லாமல் பலருக்கு நன்மை பெயர்க்கும்படியாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறோம். இதற்கு பலரும் சம்மதித்ததால் நம்மின் அடுத்த கட்ட வேலைகளில் நேற்றிலிருந்தே நான் ஈடுப்பட ஆரம்பித்துள்ளேன்.

ஒரு நாள்.. ஆனால், பல வருட ஆசைகள் நிறைவேறிய திருப்தி! இப்படிப்பட்ட ஒரு நிகழ்வு நடக்குமா என்று பலரும் ஏங்கும் சமயத்தில், நாங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றியதில் எல்லையில்லா மகிழ்ச்சி. இந்த ஒரு நாள் என் வாழ்வில் பல வருடங்கள் ஆனாலும் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக இருக்கும். இதை மறக்ககூடாது என்ற ஒரு எண்ணத்தில் எனது டைரி குறிப்பாக இங்கே என் வலைப்பதிவில் செதுக்குகிறேன்.

Saturday, January 20, 2007

157. அவசர பதிவில் சஸ்பன்ஸ் உடைப்பு!!!!

இது ஒரு அவசர பதிவு!!!!

சஸ்பென்ஸ் என்னன்னு நேற்று சொல்கிறேன் என்று சொன்னேன். டைம் கிடைக்காமல், கொட்ட கொட்ட விடியக்காலை 3 மணிக்கு இதை எழுதுகிறேன். (பலர் பலவாராய் கற்பனை செய்துள்ளீர்கள். சிலர் விஷயத்தை கண்டுபிடித்துவிட்டேன் என்று நிறைய கற்பனை செய்து என் மின்னஞ்சலுக்கு அனுப்பினீர்கள்)...

என்னுடைய மகிழ்ச்சிக்கு காரணம்:

1- எனக்கு வேலை கிடைத்தது (வேலை கிடைக்கிறது சாதாரண விஷயம்தானேன்னு நீங்க நினைக்கலாம்.. ஆனால், என்னுடைய நிலையில் இப்போது இருப்பவர்கள் இதை நினைத்து கூட பார்க்கமுடியாத ஒன்று. இதன் விரிவாக்கம் அடுத்த பதிவில்)

2- என் தம்பி நாடு திரும்பியது (இப்போதுதான் விமான நிலயத்திலிருந்து வீடு திரும்பினோம். வந்ததும் அவசரமாய் சுருக்கமாய் இந்த பதிவு எழுதுகிறேன்)

3- மூன்றாவதாகவும் ஒன்று இருக்கிறது. இதே நாளில்தான் என்னுடைய பிராக்டிக்கலை முடித்துள்ளேன்.

இன்று காலை நான் பினாங்கு செல்ல இருக்கிறேன். 3 நாட்களுக்கு பிறகுதான் திரும்பி வருவேன். அப்போது வந்து இந்த விஷயத்தை விரிவாய் எழுதுகிறேன்.

நீங்கள் எழுதிய பின்னூட்டங்களுக்கு நன்றி.. வந்ததும் பதில் எழுதுகிறேன்.

(உங்கள் வசதிக்காக கமெண்ட்ஸ் மோடெரேஷனை டிஸ்-ஏபல் செய்துள்ளேன்..)

Monday, January 15, 2007

156. என்னன்னு நான் சொல்ல...

மார்கழி கழிஞ்சாச்சி..
போகி போயாச்சு..
தை பொறந்தாச்சு..
தமிழர் திருநாள் வந்தாச்சு..

உலகத்தில் வாழும் அனைத்து தமிழர்களுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!!உங்கள் பொழுதும், இனி வரும் நாட்களும் சர்க்கரை பொங்கல் போல் இனிக்க இறைவனை வேண்டுகிறேன்.


அருண்.. சர்க்கரை பொங்கல் கேட்டிருந்தீங்களே!! இன்னைக்கு எங்க வீட்டில் செய்த பொங்கல் இதோ! நன்றாக ருசித்து சாப்பிடுங்கள். நண்பர்களே! இது உங்களுக்கும்தான்.. நிறையவே இருக்கு! எல்லாரும் சாப்பிடலாம் வாங்க..

வருடப்பிறப்பின் போது என்னுடைய ஒரு பதிவு தமிழ்மண பூங்காவில் இடம் பெற்றது எனக்கு சந்தோஷத்தை கொடுத்தது. இது உங்கள் எல்லாருக்கும் தெரிந்ததே!

ஆனால் பொங்கல் தினத்திலும் நான் பேரானந்தத்துடன் இருக்கிறேன். ஒரு நல்ல வாய்ப்பு (நீங்களே ஏதாவது கற்பனை பண்ணீக்காதீங்க!!) என்னை தேடி வந்தது. Yes or No என்று நான் சொல்ல வேண்டியதுதான் மீதி..

இன்னும் நான் முடிவை சொல்லவில்லை. ஆனாலும், இவ்வளவு சீக்கிரமாக ஒரு வாய்ப்பா என்று நானே திகைத்து நிக்கிறேன். இன்னும் அதிலிருந்து மீளவில்லை.

அது என்னன்னு தெரியனுமா? நான் Yes or No என்று இந்த வார வெள்ளியன்று பதிலை சொல்லிவிட்டு முழு கதையையும் (அய்யயோ! இது கதையில்லை.. நிஜம்) எழுதுகிறேன். ஏன் வெள்ளி? நடுவில் 4 நாட்கள் இருக்கேன்னு கேட்கிறீர்களா? அன்று இன்னொரு சந்தோஷமான.. இல்லை இல்லை.. இரண்டு சந்தோசமான விஷயங்களும் நடக்கவிருக்கிறது. அது மட்டுமில்லை. என் சீனியர் இஞ்சீனியர் இந்த வாரம் புது வகை ஆணியை எப்படி புடுங்குறதுன்னு சொல்லி கொடுக்கபோறாரு. அப்போ! இன்னும் 4 நாள் உங்கள் தோழி பிஸியோ பிஸி!!

பி.கு: (என்னுடைய வலை எனக்கொரு டைரியை போன்றது! அதுனால்தான், என்னுடைய சந்தோசம் துக்கம் எல்லாவற்றையும் இதில் எழுதுகிறேன்.)

Saturday, January 06, 2007

151. எனக்கும் கிடைத்தது ஊக்கத் தானிக்

இப்போதெல்லாம் தினமும் பதிவை எழுதமுடியாமல் போனாலும், உங்களைபோல நல்ல நண்பர்கள் கிடைத்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

நான் தமிழில் எழுத ஆரம்பித்து முழுசா மூனு மாதம் கூட ஆகவில்லை. ஆனாலும் சிலரின் உசுப்பேத்தலால் தமிழ்மணத்திலும் தேன்கூடிலும் இணைந்தேன். அப்போதெல்லாம் தமிழ்மணம் நம் பதிவை போடுறதுக்கு மட்டும்தான்.. தேன்கூடில் மற்றவர்கள் எழுதும் கதைகளை படிக்க மட்டும்தான்-ன்னு நினைத்தேன்.

போன வாரம்தான் புதுசா ஒன்னு தெரிஞ்சுகிட்டேன். நம்ம கார்த்திக்தான் சொன்னார். ஏதோ என்னுடைய பதிவை தமிழ்மண பூங்காவில் பிரசுரித்திருக்கிறார்கள் என்று (நல்ல வேளை! அவரிடம் தமிழ்மண பூங்கா என்றால் என்ன என்று கேட்கவில்லை. கண்டிப்பாக மின்னஞ்சல் மூலமாக வந்தாவது ஏன்னை குட்டியிருபார் நம்ம தலைவர்!).உண்மையிலேயே தமிழ்மண பூங்கான்னு அப்போதுதான் கேள்விப் பட்டேன்.

உடனே தமிழ்மணம் வலையை திறந்து பூங்கவை தேடினேன். (இதுக்கு முன்னால் இதெல்லாம் தட்டி பார்த்திருந்தால்தானே தெரியும் எது என்க்கே இருக்குன்னு!).

கடைசியாக ஒரு வழியாய் கண்டுபிடித்தேன். என் நாற்காலியில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தேன். ஏதோ பெரிசா சாதிச்ச திருப்தி (இதெல்லாம் கொஞ்சம் ஓவர். என்னுடைய பதிவுகள் முக்கால்வாசி பூங்காவில் ஒவ்வொரு வாரங்களிலும் பிரசுரிக்கப்படுகின்றன. நானே இப்படி பதிவைபோட்டு பெருமிதப்பட்டதில்லை.. நீ மட்டும் என்ன? தற்பெருமையா?ன்னு நீங்கள் கேட்கலாம்). ஆனாலும், எனக்கு இதெல்லாம் புதுசுங்க.

நான் பள்ளியிலே படிக்கும்போது இந்த கட்டுரை எழுதுற பாடங்கள்ன்னாலே ஒரே வெறுப்பா இருக்கும். ஏன்தான் நம்மை எழுத சொல்லி கொல்றாங்களோன்னு ரொம்பவே சலிச்சுக்குவேன். கனவு காண்பது, அதை அழகாய் கதையாய் எழுதுவது என்பது எனக்கு சுட்டு போட்டாலும் வராத ஒன்று.

இங்கே நான் ஏதோ கிறுக்கிகிட்டு இருந்தேன். அப்படிப்பட்ட என்னுடைய பதிவு இங்கே பிரசுரிக்கப்பட்டது எனக்கு மிகவும் சந்தோஷமான ஒன்று. 2007-இல் எனக்கு கிடைத்த ஊக்க தானிக் இதுதான்.

ஆனாலும், நண்பர்களே! உங்களின் ஆதரவுகளை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன். உங்களின் ஆதரவிலும், எனக்கு கொடுத்த ஊக்கத்திலும், எனக்கு எழுத, இந்த வலையை தமிழ்மணத்தில் பிரசுரிக்க உதவிய அனைவருக்கும் நன்றி.

Wednesday, January 03, 2007

150. தம்பிக்கு அக்கா எழுதும் மடல்.

தம்பி,

நீ எப்படி இருக்கிறாய்? பார்த்து 6 மாதங்கள் ஆகிவிட்டது. உன்னுடைய இந்த பிறந்த நாளில் நான்தான் முதலில் வாழ்த்தவேண்டும்.. அதுவும் வித்தியாசமாக வாழ்த்த வேண்டும் என்பதற்காகதான் இந்த மடல்.

நீ இந்த பிறந்த நாளில் மலேசியாவுக்கு பறந்து வந்துவிடுவாய் என்று நினைத்தேன். ஆனால், உன்னுடைய பிறந்த நாளில்தான் உன்னுடைய முக்கியமான / கடைசி பரிட்சை என்று அறிந்தேன்.

நீ மேதைடா. ஒவ்வொரு தடைகளையும் சுலபமாக தடைதெறிவாய்.. உன்னுடைய ஃப்லையிங் தெஸ்ட்-இல் சூப்பராக செய்து, அருமையான விமானி என்று நல்ல பெயரை சம்பாதித்து வர இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இந்த வருடமும், இனி வரும் வருடங்களிலும் உனக்கு சூப்பராக அமைந்து எல்லா வெற்றிகளையும் பெற என் வாழ்த்துக்கள்.
நீ சீக்கிரமே மலேசியா வர வேண்டும்.

நாளை உன் பிறந்த நாளாய் இருந்தாலும், நான் இப்போதே உனக்கு வாழ்த்து சொல்கிறேன். பிறந்த நாள் வாழ்த்துக்கள்.இன்று இரவு உன் கைத்தொலைபேசிக்கு அழைக்கிறேன். (எப்போதும் போல உன் கைதொலைபேசியில் தொங்கிட்டு இருக்காதே. இன்னைக்காவது அதை ஃப்ரீயா விடு. அப்பதான் நாங்கள் உன்னை தொடர்பு கொள்ளமுடியும். ஹீ ஹீ ஹீ).

மற்றவை இன்று இரவு தொலைபேசியில் பேசிக்கலாம்..:-)

அன்புடன்,
உன் அக்கா.

149. 2007-இல் நான்

2006 முடிந்தது. புத்தாண்டு பிறந்தது. 2007 வந்தது.

ஒவ்வொரு வருடம் ஆரம்பிக்கும்போது பலர் பல திட்டங்களை தீட்டுவார்கள். அதில் மிக சிலரே போட்ட திட்டங்களை நிறைவேற்றுவர். பலர் அதே திட்டங்களை புது வருடத்துக்கு ஒத்தி வைப்பார்கள்.
நான் புது வருடம் ஆரம்பிக்கும்போது திட்டங்களை போடுவதில்லை. நமக்கு அதெல்லாம் ஒத்து வராத விஷயம். கஜினி சூர்யா அளவுக்கு ஞாபக மறதி எனக்கு முத்தி போகாட்டினாலும்.. எனக்கும் ஞாபக மறதி அதிகம். ரெண்டு படத்தில் நடித்த தேவதர்ஷினி கேரக்டர் போலவே.

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இருக்கும் நான் போட்ட திட்டங்களை போட்ட அன்னைக்கே மறந்துவிடுவது சகஜம். அதனால், குறுகிய கால திட்டங்களையே அதிகமாக போடுவேன் நான். போட்டதை என் கணிணியின் டெஸ்க்டோப்பில் ஒட்டிவைப்பதும் வழக்கம். (இந்த சாஃப்ட்வேரை பற்றி ஒரு நாள் எழுதுகிறேன். ;-))

அதனால் சுற்று வட்டார மக்களுக்கு நான் சொல்வது என்னவென்றால், என்னுடைய புது வருடம் திட்டம் என்ன என்று கேட்காதீர்கள். ஏனென்றால், அப்படி எதுவும் எனக்கு இல்லை. ஹீ ஹீ ஹீ..

ஆனாலும் வருட இறுதியில் நான் சாதித்த, சந்தோஷப்பட்ட, வருத்தப்பட்ட நிகழ்வுகளை நான் எப்போதுமே பின்னோக்கி பார்ப்பது வழக்கம். அவைகளை டிசம்பர் 31-இல் எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் நேரம் கிடைக்கவில்லை. டிசம்பர் 31 ஹஜ்ஜி பெருநாளாகவும் இருந்த்தால் நான் என் பெற்றோருக்கு உதவியாய் கடையில் இருந்ததுதான் காரணம். ஜனுவரி 1, 2 முடிந்து இப்போது மூன்றும் பிறந்துவிட்டதால் 2006-இல் நடந்த நிகழ்வுகளை பதிவாய் போடுவது இப்போது டூ லேட்-ன்னு கருதுகிறேன்.

ஆனால், அதில் ஒன்றை கண்டிப்பாக உங்களோடு பகிர்ந்து கொள்ளவேண்டும். இந்த ப்ளாக்-தான். இந்த ப்ளாக்கின் மூலமாகத்தான் உங்களைப்போல் அருமையான நண்பர்கள் கிடைத்துள்ளனர். பல்வேறு நாடுகளில் இருந்து பலவகையான கேரக்டரை கொண்ட நண்பர்கள். ஒவ்வொருவரும் தரும் இந்த ஆதரவால்தான் என்னுடைய இந்த ப்ளாக் 150-ஆவது பதிவை தொட வழிவகுத்துள்ளது.

நான் ஒரு தனிமை விரும்பி. இந்த தனிமையிலும் என் நேரத்தை நல்வழியில் செலவழிக்கவும், என்னுடைய தமிழ் மொழியை வளர்க்கவும் இது உதவியாய் இருந்தது; இருந்துகொண்டிருக்கிறது; பிற்காலத்தில் இருக்கும் என நம்புகிறேன்.

எப்போதும் போல மனதில் ஓடும் எல்லா விஷயங்களை பற்றியும் எழுதினேன்... எழுதுகிறேன்.. இனிமேலும் எழுதுவேன்.. அதை நீங்கதான் பொருத்துக்கனும்..

நேற்று வயிற்று வலியால் இரவு தூக்கம் வராமல் வெகு நேரம் கட்டிலில் புரண்டு படுத்திருக்கும்போது, இந்த 2007-இல் முதல் பதிவில் ஏதாவது புதிதாய் எழுதனும்னு நினைத்துக் கொண்டிருந்த பொழுது, ஒரு கவிதை எழுதலாம்ன்னு நினைத்தேன். கவிதை படிப்பதும் எழுதுவதும் விட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது. எழுவதுக்கு நல்ல தமிழ் சொற்களும் மனதில் இல்லை. இந்த நிலமையிலும் ஏதாவது எழுதியாகனும்ன்னு ஒதோ இந்த கவிதையை எழுதினேன்.

கவிஞர்களே! நீங்க இதை படித்துவிட்டு நன்றாக துப்பதான் போறீங்கன்றது கன்ஃபார்ம் ஆகியாச்சு. என்ன பன்றது! துப்புறதுக்குதான் கமெண்ட்ஸ் பக்கம் இருக்கே! நல்லா துப்புங்கள். ;-)


நான் நீராக இருந்தால்..
என் காதலில்
கலந்து சங்கமமாக வா
என் காதலி..

நான் நெருப்பாக இருந்தால்..
என் காதல் நெருப்பில்
குளிர் காய வா
என் காதலி..

நான் காற்றாக இருந்தால்..
என் காதல் புயலில்
சேர்ந்து பறக்கவா
என் காதலி..

நான் நிலமாக இருந்தால்..
என் பரந்த இதயத்தில்
காதலை நட வா
என் காதலி..

நான் ஆகாயமாக இருந்தால்..
என் உயர்ந்த காதலை
கட்டி உன் மனதுக்கு இழுக்க வா
என் காதலி..

Tuesday, November 21, 2006

Post Number 100

Yeay!!!! at Last....

I reached 100th post by this... :D

Let's see some history of my blog..

I started my blog on March 11, 2006.. my first post was just a welcome message. This is because I dont know what to write.

Then I started to post some useful information like Motorola scholarships and England Optical scholarships for Diploma.. I also posted some news like SPM results, Astronaut's selection..

Most interestingly, I also posted some posts regarding numbers..
1-succession
2- What's Special About These Numbers?
3- Interesting Facts about Pi
4- Difference in two squares using Quadratic Formula
5- Another multiplication
6- 2=3 It's True? Here is the Derivation...

I done all these when I were in trimester break. When I were in Gamma third trimester, I posted 1 post for 2 days.. But when I entered my final year first trimester in June, my blogging activity completely stopped. Just becasue I dont have time for it. I was terribly busy with my Final Year Project (Part 1).. until at one point, I forgot that I had a blog.

I finished my final exams on 7th of October. Then, I was doing preparation for my industrial training. When I surf through Internet, I found out that now blogs are booming!!!!!
I recalled my blog..hehehe

I continued my 1st post of my 2nd phase on 10th of October. Thanks to Karthik, who thought me how to write blog in Tamil. My first blog on Tamil is a dialogue session between Osama & 23rd Pulikesi.

After a few days, I turned on my comments. C.M. Haniff was the 1st one to post a comments in Brain Teaser 1.

But my blog begin to get attention after I wrote இளம் நாயர்கள் - ஓர் அலசல்.. I felt this was my first victory in my blog. This encouraged me to do more in my blog.

My longest chain-post is of course Brain Teaser. where it reached 12 today.
I also planned to start some other chain-posts for Cinema News, Naaddu Nadappu, Enna Paaddu Ithu.

My current blog template is a version 3.1
(0.1 upgraded for using beta blogger)..

Now, Let's look on statistics!!!
Total number of visitors to my site from 3rd May 2006 is 1215..
Busiest day so far is 17th November 2006 (Friday)
Number of views on Busiet Day is 118

3 highest number of views by country:
Malaysia 903
U.S. 107
France 54

what I can say from here is until 10th of October, Total visitor from outside Malaysia was only around 10. but now it reached 300+

Thanks for all my friends who visited my blog. ;-)