Wednesday, November 12, 2008

தேடுகிறேன்: பத்துமலை தமிழ்ப்பள்ளி நண்பர்கள்


1996-இல் பத்துமலை தமிழ்ப்பள்ளியில் 6 ரோஜா (6 Rose)-இல் படித்த நண்பர்களே, உங்களை தேடுகிறேன். 12 வருடங்களுக்கு பிறகு நாமெல்லாம் ஒன்று கூடும் இந்த அறிய சந்தர்ப்பத்தில் உங்களையும் எதிர்ப்பார்க்கிறேன். இப்போதைக்கு நம்மில் 25 பேர் வருகை நிச்சயமானபோதும் மீதி உள்ள 15 பேரின் வருகையை நான் மிகவும் எதிர்ப்பார்க்கிறேன். நம்முடைய சந்திப்பு வரும் டிசம்பர் 29 (திங்கட்கிழமை - பொதுவிடுமறை நாள் [Awal Muharam]) நிகழவுள்ளது. மேலும் விபரங்களுக்கு என்னை தொடர்பு கொள்ளுங்கள்.

மின்னஞ்சல் முகவரி: engineer2207@gmail.com

பி.கு 1: 6 ரோஸ் தவிர்த்து 6 மல்லிகை, செண்பகம், டாஹ்லியா, ஆர்கிட், தாமரை மற்றும் கேக்வா வகுப்பு நண்பர்களும் என்னை தொடர்பு கொள்ளவும்.

பி.கு 2: இதை படிக்கும் நண்பர்களே, இந்த சந்திப்பு வெற்றியடைய உங்கள் ஆதரவும் தேவை. இதை உங்களுக்கு தெரிந்த நட்பு வட்டாரத்தில் பரப்பி எங்கள் நண்பர்களை கண்டுப்பிடிக்க உதவுவீர்களாக.

அன்புடன்,
.:: மை ஃபிரண்ட் ::. @ அனுராதா .இரா

----------------------------------------------------------------------------------------------
I am looking for friends from 6 Rose, SRJK (T) Batu Caves, 1996 batch. We will be having a class reunion on coming December 29 (Public Holiday - Awal Muharam). So far 25 of our classmates had confirmed their attendance. For me each of your presence is very important. Please contact me for further details. Thanks.

my email address: engineer2207@gmail.com

p/s 1: 6 Melur, Cempaka, Dahlia, Orchid, Teratai & Kekwa friends are also invited. Please contact me.

p/s 2: Those who are reading this, please forward this information to your friends. May this helps to reach my classmates.

Thanks.

Best Regards,
.:: MyFriend ::. @ Anuradha .R

25 Comments:

ஆயில்யன் said...

பாஸ் வாழ்த்துக்கள் பாஸ்!


தேடல் சீக்கிரமே முடிவுக்கு வந்து தேடுற ஆளுங்க க்யூ கட்டிக்கிட்டு மீட்ல வந்து முன்னாடி நிப்பாங்கன்னு அதுக்கு நான் இப்பவே வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன் :)))

VIKNESHWARAN ADAKKALAM said...

பாடல் எதாவது இருந்தா பாடி தேடி கண்டு பிடிச்சிடலாம்... அன்பு மலர்களே பாட்டு மாதிரி...


எல்லோரும் கிடைப்பார்கள்.... அது சரி பதிவர் சந்திப்பு மலேசியாவில் நடக்க வாய்ப்பே இல்லை போல...

Anonymous said...

//பாடல் எதாவது இருந்தா பாடி தேடி கண்டு பிடிச்சிடலாம்... அன்பு மலர்களே பாட்டு மாதிரி//
ரிப்பீட்டேய்,
எல்லாரும் வந்து சந்திப்பு களை கட்ட வாழ்த்துக்கள்

கப்பி | Kappi said...

நண்பர்களை தேட இண்டர்போல் உதவி வேணும்னா சொல்லுங்க...நம்ம பசங்க அங்க இருக்காங்க.......கஸ்டடில ஹி ஹி


வாழ்த்துகள்!! :)

நந்து f/o நிலா said...

1996 ஆ? ஆமா அப்ப நான் கூட பள்ளிகோடத்துல அஞ்சாம்ப்பு தான் படிச்சுகிட்டு இருந்தேன்.

ஆனா எங்க செட்டு பேரு மாப்ள பெஞ்சு செட்டாச்சே?

நானும் ஒரு போஸ்ட் போட்டு கூப்புட்டு பாக்கறேன்.

Sathis Kumar said...

ஆரம்பப் பள்ளி நண்பர்களை மீண்டும் சந்திப்பதில் ஓர் அலாதி மகிழ்ச்சிதான். வாழ்த்துகள் மை ஃபிரண்ட்.. :)

சென்ஷி said...

//உங்களுக்கு தெரிந்த நட்பு வட்டாரத்தில் பரப்பி எங்கள் நண்பர்களை கண்டுப்பிடிக்க உதவுவீர்களாக.//

பிளேடு பக்கிரி, செயின் கோபால், நாய் சேகர் எல்லோரையும் இந்த ஆப்பரேசன்ல இறக்கி விட்டுருக்கோம்.

மிஷன் பேரு "எவன்டா என் ஃபிரண்டு!"

சென்ஷி said...

//VIKNESHWARAN said...
பாடல் எதாவது இருந்தா பாடி தேடி கண்டு பிடிச்சிடலாம்... அன்பு மலர்களே பாட்டு மாதிரி...
//

ஆமாமுல்ல.. அப்ப அந்த பாட்ட தேன் கிண்ணத்துல தங்கச்சி ஒளிபரப்பு செய்யுமுன்னு நம்புறேன் :)

சென்ஷி said...

//VIKNESHWARAN said...

எல்லோரும் கிடைப்பார்கள்.... அது சரி பதிவர் சந்திப்பு மலேசியாவில் நடக்க வாய்ப்பே இல்லை போல...
//

ஏன் இல்லை. நீங்களும் இது மாதிரி ஒரு பதிவு போட்டு கூப்பிடுங்க. எங்களுக்கு தெரிஞ்ச நண்பர்களையெல்லாம் நாங்களும் அனுப்பி வைக்கறோம் :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஓ தேடறீங்களா தேடுங்க.. எல்லாரும் கிடைக்க வாழ்த்துக்கள்.. :)

சென்ஷி said...

// நந்து f/o நிலா said...
1996 ஆ? ஆமா அப்ப நான் கூட பள்ளிகோடத்துல அஞ்சாம்ப்பு தான் படிச்சுகிட்டு இருந்தேன்.

ஆனா எங்க செட்டு பேரு மாப்ள பெஞ்சு செட்டாச்சே?

நானும் ஒரு போஸ்ட் போட்டு கூப்புட்டு பாக்கறேன்.
//

ஓக்கே நந்துண்ணா.. மை பிரண்டு மிஷன் முடிஞ்சதும் அடுத்து உங்களுக்காக எங்க தோழர் படையை அனுப்பி வைக்குறோம் :)

சென்ஷி said...

//கப்பி | Kappi said...
நண்பர்களை தேட இண்டர்போல் உதவி வேணும்னா சொல்லுங்க...நம்ம பசங்க அங்க இருக்காங்க.......கஸ்டடில ஹி ஹி
//

எல்லோருக்குமே கல்யாணம் ஆகிடுச்சா கப்பி :))

சென்ஷி said...

/நந்து f/o நிலா said...
1996 ஆ? ஆமா அப்ப நான் கூட பள்ளிகோடத்துல அஞ்சாம்ப்பு தான் படிச்சுகிட்டு இருந்தேன்.
//

இப்ப வரைக்கும் கூட நீங்க அவ்வளவுதான் படிச்சீங்கன்னு குசும்பனோ, சஞ்சயோ வந்து கமெண்டு போடுறதுக்கு முன்னாடி நான் போட்டுக்கறேன்!

சென்ஷி said...

//பி.கு 1: 6 ரோஸ் தவிர்த்து 6 மல்லிகை, செண்பகம், டாஹ்லியா, ஆர்கிட், தாமரை மற்றும் கேக்வா வகுப்பு நண்பர்களும் என்னை தொடர்பு கொள்ளவும்.//

அய்யனார் ஆரம்ப பாடசாலையில் படித்த நண்பர்கள் தேவையென்றால் தொடர்பு கொள்ளவும் :)

சென்ஷி said...

மீ த 15 :)

Unknown said...

தேடுற எல்லாரும் கிடைக்க வாழ்த்துகள் தங்கச்சி.. ;)))

Anonymous said...

//ஸ்ரீமதி said...
தேடுற எல்லாரும் கிடைக்க வாழ்த்துகள் தங்கச்சி.. ;)))//

தங்கச்சியா!!! ஆஹா...இது எப்போதிலிருந்து?

கோபிநாத் said...

இதுல இருந்து ஒன்னு நல்லா தெரியுது...நீங்க படிச்சிருக்கிங்க ;))

எல்லோரும் கிடைக்க வாழ்த்துக்கள் ;)

Unknown said...

//இனியவள் புனிதா said...
//ஸ்ரீமதி said...
தேடுற எல்லாரும் கிடைக்க வாழ்த்துகள் தங்கச்சி.. ;)))//

தங்கச்சியா!!! ஆஹா...இது எப்போதிலிருந்து?//

அவங்க என்ன அக்கான்னு கூப்பிட ஆரம்பிச்சதிலிருந்து.. :((

ambi said...

அட, நீ ஸ்கூலுக்கு எல்லாம் போயி பெரிய படிப்பு எல்லாம் படிச்சு இருக்கியா கண்ணு? :p

ரெம்ப பெருமையா இருக்கு கண்ணு. :D

ஹைய்யா! என் தங்கச்சி படிச்சவ! :))

Anonymous said...

உங்க பாடசாலை எந்த நாட்டில் உள்ளது?

pudugaithendral said...

"எவன்டா என் ஃபிரண்டு!"//

தப்புங்க. தலைப்பை சரியா வைக்கணும்.

”எவண்டா மைஃப்ரண்டோட ஃபிரண்டு”

Anonymous said...

கலக்குங்க அக்காதங்கச்சி! ரீயூனியன்லாம் செஞ்சு உங்க வய்சை காமிச்சுட்டீங்களே? ஹிஹி..

சரி, ஜில்லென்றூ ஒரு மலேசியால மலாய் மொழி சொல்லி குடுத்த பதிவுகள் ஏன் அப்படியே நின்னு போச்சு? அவ்ளோ தான் பதிவு மூலமா சொல்ல கொடுக்க முடியுமா? :(

நான் என்னொட மலாய் டீம் மேட்டை இதெல்லாம் வெச்சு தான் பயமுறுத்தறேன். சீக்கிரமே சரக்கு தீர்ந்து போய் அவனுக்கு தைரியம் வந்துடும் போலிருக்கே? கொஞ்சம் உதவுங்கக்கா..

-kodi kutti.

காண்டீபன் said...

உங்கள் தேடல் வெற்றி பெறுமாக..

Sanjai Gandhi said...

வாழ்த்துக்கள் அனு.. நானும் எங்க பள்ளிகூடத்து பசங்களுக்கு எல்லாம் மெயில் அனுப்பிட்டேன்.. அவங்க யாராவது உங்க கூட படிச்சிருந்தா தொடர்பு கொள்வாங்க. ச்சரியா? வர்ட்டா?

....... மறக்காம எல்லா ஃபிகர்ஸ் மெயில் ஐடியும் கலெக்ட் பண்ணி வச்சிக்கோங்க.. எனக்கு தேவைப்படும்... :))