Tuesday, December 30, 2008

12 வருடத்துக்கு பிறகு ஒரு வெற்றிகரமான சந்திப்பு : 28 மாணவர்கள் + 2 ஆசிரியர்கள்

100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஆரம்பப்புள்ளியில் செய்யும் தவறு முதல் இடத்தில் வெற்றிப்பெற வேண்டிய வாய்ப்பை இழக்க வைத்துவிடும். இதுவே ஆரம்பப்புள்ளியில் சரியான நேரத்தில் புறப்பட்டு சீராக ஓடியிருந்தால் வெற்றி நிச்சயம்! அதனால்தான் இப்படிப்பட்ட விளையாட்டில் எப்படி முடிக்க வேண்டும் என்பதை விட எப்படி ஆரம்பிக்க வேண்டும் என்பதில் பயிற்சியாளர்கள் மிக கடுமையான பயிற்சிகளை விளையாட்டாளர்களுக்கு வளங்குவர்.

எவ்வளவுதான் படித்திருந்தாலும், என்னவெல்லாம் சாதித்திருந்தாலும், எங்கெல்லாம் போயிருந்தாலும் ஆரம்பப்புள்ளியை மறக்க முடியாது. ஆமாம்! நாம் வாயில் நுழையாத படிப்பெல்லாம் படித்து ஏ.சி. அறையிலும், விமானத்திலும், சொகுசு கார்களிலும் இப்போது பயணம் செய்தாலும், இதற்கெல்லாம் வித்தாக இருந்த நமது அ, ஆ சொல்லிக்கொடுத்த ஆசிரியர்களும், ஆரம்பப் பள்ளியும், நண்பர்களும், அங்கு நிகழ்ந்த நிகழ்வுகளும், வாங்கிய அடிகளும், ஓடிய ஓட்டங்களும், சிரித்து மகிழ்ந்த தருணங்களும், கண்கள் கலங்கி நின்ற சம்பவங்களும், பரிட்சையில் பிட் அடித்த நேரங்களும் எப்போதுமே மனதில் பசுமரத்தாணிப்போல் பதிந்து புதைந்து கிடைக்கின்றன.

வெகு சிலர் மட்டுமே அந்த பழைய நட்புகளை இன்னும் தன் தொடர்பில் வைத்திருக்கின்றனர். பலர் தன் வாழ்க்கை சக்கரம் ஓடும் வேகத்தில் இதற்கெல்லாம் நேரம் ஏது என்பதுபோல சுழன்று கொண்டிருக்கின்றனர். ஒரு கட்டத்தில் நீங்கள் நின்று திரும்பிப் பார்க்கும்போது “ச்சே.. வாய்ப்பு கிடைத்தபோது இந்த நட்பை புதுப்பிக்க முடியாமல் போய்விட்டதே! இப்போது இவர்களெல்லாம் எங்கே எப்படி இருக்காங்களோ!” என்று தோன்றவைக்கும் தருணம் மனதை மிகவும் புண்படுத்தும். பழைய நினைவுகளை நினைவில் கொண்டுவந்து கொஞ்சம் திருப்தி அடையவே முடியும்.

1996-ஆம் ஆண்டில் நாங்களும் எங்கள் ஆசிரியர்களும்

நான் சிறு வயதில் படிக்கும்போது ஒவ்வொரு ஆசிரியரும் வகுப்பில் சொல்லும் ஒரு விசயம்: ”இன்னும் சில வருடம் கழித்து நீங்களெல்லாம் படித்து நல்ல வேலையில் இருக்கும்போது எங்கேயாவது எங்களை பார்த்தால் “வணக்கம் டீச்சர், நாந்தான் உங்கள் மாணவன்/மாணவி. 19XX வருடத்தில் உங்கள் வகுப்பில் படித்தேன். இப்போது ஒரு டாக்டராக/வக்கீலாக/ஆசிரியராக/பொறியியலாலராக வேலை பார்க்கிறேன்” என்று அன்று சொல்லப்போகும் ஒரு வார்த்தைதான் எங்களை ஒரு முழு ஆசிரியராக ஆக்கும். ஒரு பெண்ணுக்கு தாய்மை எப்படி அவளை முழுமையாக்குகிறதோ, அதேப்போல இந்த ஒரு வார்த்தைதான் எங்களை ஒரு முழு ஆசிரியராக்கும்”. அப்போதே என் மனதில் புதைந்த விசயம்! நானும் எப்போதாவது எனக்கு படித்து கொடுத்த ஆசிரியர் முன்னாள் நின்று “டீச்சர் என்னை நினைவிருக்கிறதா? 96-ஆம் ஆண்டு உங்கள் வகுப்பு மாணவியாக இருந்தேனே? வீட்டுப்பாடம் செய்யாமல் உங்களிடம் அடிவாங்கினேனே! கணிதப்பாடம் நன்றாக செய்ததுக்கு நீங்க கூட தட்டிக்கொடுத்து முத்தம் கொடுத்தீங்களே!” என்றெல்லாம் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.

அந்த சந்தர்ப்பம் 12 வருடங்கள் கழித்து நேற்று அமைந்தது!
பத்துமலை ஆரம்ப தமிழ்ப்பள்ளியில் ஆறாம்வகுப்பு வரை படித்து 1996-இல் நானும் நண்பர்களும் வெளியானோம். 12 வருடம் கழித்து ஒரு 2 மாதத்துக்கு முன்பு திரும்ப நண்பர்களெல்லாம் ஒன்றாக சந்தித்தால் நன்றாக இருக்கும் என நினைத்து ஒவ்வொருவராக தேட ஆரம்பித்தேன். பல வகையிலும் கஷ்டப்பட்டு சிறுக சிறுக ஒவ்வொருவராக சேர்த்து 29/12/08-இல் சந்திக்கலாம் என ஏற்பாடானது.

காலை 11 மணிக்கு பத்துமலை கோவிலில் (முன்னாள் எங்கள் பள்ளி இந்த இடம்தான். பக்கத்திலேயே புதிதாக பள்ளி கட்டிக்கொண்டு அங்கே போனதும் எங்கள் பழைய பள்ளிக்கூடம் உடைக்கப்பட்டு கார் நிறுத்துமிடமாகவும், திருமண விருந்து நடக்கும் ஹாலாகவும் மாற்றப்பட்டுவிட்டது) எல்லாரையும் சந்தித்து சிறிது நேரம் அரட்டை அடித்தோம். பிறகு அனைவரும் கூட்டமாக பள்ளிக்கு சென்றோம். அப்போது எங்கள் மலாய் ஆசிரியை இப்போது அதே பள்ளியில் துணை தலைமையாசிரியராக பணியாற்றுகிறார். அவர் எங்களை பார்த்ததும் மகிழ்வுடன் வரவேற்றார். மற்ற ஆசிரியர்களை கூப்பிட்டு “இவர்கள்தான் என் பழைய மாணவர்கள்” என எங்கள் அனைவரையும் அந்த ஆசிரியர்களுக்கு அறிமுகப்படுத்திவைத்தார்.

அவரிடம் சில வார்த்தைகள் பேசிவிட்டு, எங்களில் நால்வர் (மற்ற அனைவரின் சார்பில்)அவருடன் பள்ளி அலுவலகத்துக்குள் சென்று இப்போதுள்ள பள்ளியின் நிலவரம், மாணவர்கள், ஆசிரியர்கள், பிரச்சனைகள், அதற்க்கான தீர்வுகள் என சில விசயங்களை கலந்தாலோசித்து விட்டு வந்தோம். அதன் பிறகு போட்டோஸ், போட்டோஸ், போட்டோஸ் என ஆங்காங்கே க்ளிக்கிக் கொண்டு பசி வந்ததும் அடுத்த இடம் பார்த்து கிளம்பினோம்.

மலாய் ஆசிரியர் ராஜேஸ்வரி டீச்சருடன் நாங்கள்

28 பேர் தாராளமாக உட்கார்ந்து சாப்பிட வசதியான இடம் எது என்று ஒரு பெரிய கேள்விக்கு விடை காணும் விதமாக அனைவரும் எஸ்.டி.சி ரெஸ்டாரண்டுக்கு பயணமானோம். அங்கே சுற்றி உட்கார்ந்த அனைவரும் எங்களையே பார்க்கும்படி பலவிதமான கூத்துகளை செய்து, உணவு அருந்தி, கலந்துரையாடினோம். இங்கேயும் போட்டோஸ் சில க்ளிக்கிவிட்டு அடுத்த இடத்துக்கு பயணத்தை தொடரலாமா என்று அனைவரின் கருத்துக்களையும் கேட்டோம். எல்லாரும் புறப்படலாம் என ஒரு மனதாய் முடிவெடுத்த பிறகு, நாங்கள் வாங்கிய நினைவுசின்னங்களை ஆளுக்கு ஒன்று என கொடுத்துவிட்டு 7 கார்களில் ரவாங்கை நோக்கி புறப்பட்டோம்.

உணவு விடுதியில் நாங்கள்

அங்கேதான் எங்கள் வகுப்பு ஆசிரியை திருமதி கலாவதி வசிக்கிறார். அவரிடம் முன்னமே நாங்கள் வரும் தகவலை அவரிடம் சொல்லியிருந்தபடியால், அவர் எங்களை வர சொன்ன இடத்துக்கு வந்து சேர்ந்தோம். அவரும் அதே நேரம் அங்கே வந்திருந்தார். “வாங்க.. அனைவரும் என் வீட்டும் போகலாம்” என சொன்னதும் 7 கார்களும் அவருடைய வாஜா காரை தொடர்ந்தோம்.

அருமையான இரண்டு மாடி வீடு. பல வித வித்தியாசமான பொருட்களால் அலங்கர்க்கப்பட்டிருந்தது. வீட்டில் டீச்சரின் கணவரும், அவருடைய மூன்று அழகிய மகள்களும் எங்கள் அனைவரையும் சந்தோஷமாக வரவேற்றனர். அங்கிள் வீட்டில் இருந்த அனைத்து நாற்காலிகளையும் எடுத்து வந்து வைக்க வைக்க, நாங்கள் வீட்டின் உள்ளே வர வர.. ”என்னடா வந்துட்டே இருக்காங்க.. எத்தனை பேரப்பா!”ன்னு அவருக்கே பிரமிப்பாய் இருந்திருக்கும்.

ஒரு வழியாக எல்லாரும் வந்து அவர் வீட்டும் ஹால் நிறைத்துவிட்டோம். டீச்சர் எங்களின் வருகை அவருக்கு எவ்வளவு சந்தோஷத்தை கொண்டுவந்துள்ளது என்று விளக்கினார். அவரின் குடும்ப உறுப்பினர்ர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். பிறகு அவரின் இப்போதைய பள்ளியை பற்றியும் அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதையும் சொன்னார்.

வருடத்துக்கு முன் டீச்சர் எங்களுக்கு என்னென்னமோ பரிட்சையெல்லாம் வைத்திருக்கிறார். இப்போது டீச்சருக்கு நாங்கெல்லாம் சேர்ந்து பரிட்சை வைத்தோம். நான் 12 வருடத்துக்கு முன் எடுக்கப்பட்ட வகுப்பு போட்டோவை எடுத்து வந்திருந்தேன். அதை டீச்சர் கையில் கொடுத்ததும் அவர் அந்த போட்டோவை வைத்து எங்கள் ஒவ்வொருவரையும் கண்டுப்பிடிக்கும் வேலையில் இறங்கினார். அவர் ஒவ்வொருவராக கண்டுப்பிடிக்க, நாங்கள் எங்கள் இப்போதைய நிலை என்ன என்றும் அவரிடம் பகிர்ந்துக்கொண்டோம். அனைவரும் நல்ல நிலையில் இருப்பதை கேட்டு அவர் மிகவும் பூரித்து போனார்.

டீச்சரிடம் நாங்கள் அனைவருமே ஒரு தடவையாவது அடி வாங்கியுள்ளோம். அந்த தருணங்களை இப்போது ஒன்று கூடி அவரிடம் பகிர்ந்துக்கொண்டோம். அவர் எங்களை கிள்ளியது, அடித்தது, அறைந்தது, என அப்போது கசப்பான தருணங்கள் இப்போது பகிர்ந்துகொண்டபோது ஒவ்வொருவரும் சிரித்துக்கொண்டோம். ஒருவர் பாடம் செய்யாததால் இன்னொருவர் அடி வாங்கிய சம்பவங்களிலிருந்து, நாங்கள் செய்த குறும்பால் எங்கள் வகுப்பு தலைவன் ஓட ஓட துரத்தப்பட்டது வரை சம்பவங்கள் இப்போது நகைச்சுவையாக மட்டுமே தோன்றியது.

இதையும் தாண்டி டீச்சர் எங்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்த தருணங்கள், அவர் எங்களுக்கு சொன்ன அறிவுரைகள், பிரச்சனையான மாணவர்களை தனியே கூட்டிச்சென்று அவர்களின் பிரச்சனைகளை பகிர்ந்துக்கொண்டு அவர் வருத்தப்பட்ட நேரங்கள், நாங்கள் நன்றாக பரிட்சையெழுதி வெற்றிப்பெற வேண்டும் என்று அவர் கடவுளை பிரார்த்தித்த வேளைகள், நிறைமாத கர்ப்பிணியாய் உடல் நலம் சுகமில்லாமல் இருந்த சமயங்களிலும் எங்கள் நலனுக்காக பள்ளியில் எங்களுடன் எங்கள் கல்விக்காக அர்ப்பணித்த அந்த சமயங்கள், நாங்கள் வெற்றிப்பெற்ற அந்த சமயத்தில் அவர் எங்கள் பக்கத்தில் இல்லாத அந்த சமயங்கள்... இப்படி பல மனதை நெகிழ வைத்த பல சம்பவங்கள் எங்கள் முன் தோன்றி கலங்க வைத்தன. ஆனால், எல்லாமே இப்போது வெற்றிக்கணியை பறித்ததில் ஒரு மகிழ்ச்சியான தருணமாக மாறியது.

நாங்கள் இப்படி கடந்த காலத்தை பற்றி நினைவு கூர்ந்த நேரத்தில் அங்கிள் எங்களுக்காக பலகாரங்கள் வாங்கி வந்து மேஜையை நிரப்பி விட்டார். பிறகு டீச்சர் கலக்கிய மைலோவும், டீயும், ஜூஸும் குடித்துக்கொண்டே பலகாரங்களை சுவைத்தோம். மீண்டும் பல இனிமையான தகவல்களை பறிமாறிக்கொண்டோம்.

அடுத்து அனைவரும் எப்போது சந்திக்கலாம்; எங்கு சந்திக்கலாம் போன்ற தகவல்கள் பறிமாறிக்கொள்ளப்பட்டது. அடுத்த மாதம் தோழி பிரேமாவின் திருமண வைபோகத்தில் எல்லாரும் அவசியம் கலந்துக்கொள்ளவேண்டும் என அன்பு வேண்டுக்கோள் விடுக்கப்பட்டது. டீச்சரும் எங்களுடன் கலந்துக்கொள்வதாக தீர்மானமானது. அதற்கு முன் வரும் ஜனவரி ஒன்றில் திலகவதியின் வீட்டில் நடக்கும் வருடப்பிறப்பு விருந்தில் கலந்துக்கொள்ள அனைவரும் அழைக்கப்பட்டனர்.

இனி, யாரும் தொடர்பு அறுந்து போகக்கூடாது என்பதற்க்காக ஒரு ஸ்ட்ராங்கான இணைப்பு தேவை என்பத்இல் அனைவரும் ஆம்மோதித்தனர். ஒரு க்ரூப் ஆரம்பித்தால் எல்லா வித தகவல்களும் ஒரே இடத்தில் பறிமாறிக்கொள்ள ஏதுவாக இருக்குமென எங்களில் ஒருவர் அந்த பொறுப்பை எடுத்துக்கொண்டோம். இதையும் தவிர்த்து சில நல்ல காரியங்கள் ஒன்றாக சேர்ந்து செய்ய திட்டமிட்டுள்ளோம். எல்லாம் நலம்பெற, நல்லபடியாக நடக்க இறைவன் அருள்புரிவானாக..

கிளம்பும்போது திரும்ப இன்னொரு குழு போட்டோ டீச்சருடன் எடுத்துக்கொண்டோம். டீச்சர் எங்களை ஒவ்வொருவரையும் கட்டிப்பிடித்து தழுவி முத்தங்களுடன் வழியுனுப்பிவைத்தார். அங்கிள் மற்றும் டீச்சரின் புதல்விகளுக்கும் இவ்வேளையில் எங்கள் கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

வகுப்பு ஆசிரியர் கலாவதி டீச்சருடன் நாங்கள்

நேற்றிரவு அனேக நண்பர்களிடமிருந்தும் எனக்கு குறுந்தகவல்கள் வந்தன. அனைவரும் எந்த அளவு ரசித்தனர் என்ற திருப்தியை குறுந்தகவலாக எனக்கு அனுப்பியதை படிக்கும்போது எங்கள் சந்திப்பின் வெற்றியை அறியமுடிந்தது. இது இத்தோடு நிற்காமல் இன்னும் பல வருடங்கள் தொடர வேண்டும்; அதுவும் இது வெறும் ஒரு சந்திப்பாக மட்டும் இல்லாமல் பலருக்கு நன்மை பெயர்க்கும்படியாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறோம். இதற்கு பலரும் சம்மதித்ததால் நம்மின் அடுத்த கட்ட வேலைகளில் நேற்றிலிருந்தே நான் ஈடுப்பட ஆரம்பித்துள்ளேன்.

ஒரு நாள்.. ஆனால், பல வருட ஆசைகள் நிறைவேறிய திருப்தி! இப்படிப்பட்ட ஒரு நிகழ்வு நடக்குமா என்று பலரும் ஏங்கும் சமயத்தில், நாங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றியதில் எல்லையில்லா மகிழ்ச்சி. இந்த ஒரு நாள் என் வாழ்வில் பல வருடங்கள் ஆனாலும் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக இருக்கும். இதை மறக்ககூடாது என்ற ஒரு எண்ணத்தில் எனது டைரி குறிப்பாக இங்கே என் வலைப்பதிவில் செதுக்குகிறேன்.

72 Comments:

said...

//12 வருடத்துக்கு பிறகு ஒரு வெற்றிகரமான சந்திப்பு : 28 மாணவர்கள் + 2 ஆசிரியர்கள்//

இப்பொழுது 28 மாணவர்களின் கதி என்ன?

said...

//பரிட்சையில் பிட் அடித்த நேரங்களும் எப்போதுமே மனதில் பசுமரத்தாணிப்போல் பதிந்து புதைந்து கிடைக்கின்றன.//

இதில் உங்கள் அனுபவத்தை மட்டும் சொன்னால் மாட்டிக்காமல் பிட் அடிப்பது எப்படியென்று நாங்களும் தெரிந்து கொள்வோம்

said...

//வெகு சிலர் மட்டுமே அந்த பழைய நட்புகளை இன்னும் தன் தொடர்பில் வைத்திருக்கின்றனர்.//

உள்ளூரில் குப்பை கொட்டுபவர்கள் என்றுமே நண்பர்கள் தான்,
அமெரிக்கா போய் விட்டால் தான் அண்ணாந்து பார்க்க வேண்டியிருக்கு

said...

//எனக்கு படித்து கொடுத்த ஆசிரியர் முன்னாள் நின்று “டீச்சர் என்னை நினைவிருக்கிறதா? 96-ஆம் ஆண்டு உங்கள் வகுப்பு மாணவியாக இருந்தேனே? வீட்டுப்பாடம் செய்யாமல் உங்களிடம் அடிவாங்கினேனே!//

எப்போதும் வீட்டுப்பாடம் செய்யாமல் உங்களிடம் அடிவாங்குவேனே என்றிருந்தால் சட்டென்று அவருக்கு ஞாபகம் வந்துவிடும்

said...

//கணிதப்பாடம் நன்றாக செய்ததுக்கு நீங்க கூட தட்டிக்கொடுத்து முத்தம் கொடுத்தீங்களே!”//

இன்னும் கனவு கண்டுகிட்டே இருக்கியாம்மா என்று கேட்டிருப்பாங்களே!

said...

அற்புதமான நிகழ்வு !


எல்லாரையும் ஒருங்கே சேர்த்து நினைவுகளை பகிர்ந்துக்கொண்டதற்கு மட்டுமல்ல,சில கால இடைவெளிக்கு பிறகு இனி தொடரப்போகும் நட்புக்கும் வாழ்த்துக்கள் :))

said...

vaazththukkal :)

said...

//சுற்றி உட்கார்ந்த அனைவரும் எங்களையே பார்க்கும்படி பலவிதமான கூத்துகளை செய்து, //

இது எங்க போனாலும் பண்றது தானே!

said...

அடடே கடைசியில உங்ககிட்ட மாட்டிகிட்டது அந்த ஆசிரியர்களும் தானா!

அப்போ அவுங்க தான் பாவம்

said...

வருடா வருடம் பழைய மாணவர்கள் சேர்ந்து டூர் போகும் பழக்கம் இங்கே உண்டு

said...

Vaazhthukkal :)

Paaratukal :)))

Nalla initiative :D

said...

இனிமையானதொரு சந்திப்பு, வாழ்த்துகள்!

Anonymous said...

wow...

said...

வாழ்த்துக்கள் !!

Anonymous said...

Nice!

-karthik narayyan

said...

வாவ்! அருமையான் நிகழ்சி..நினைவு பகிர்தல்கள்..ஒரு ஆட்டோகிராப் சினிமா ரெஞ்சுக்கு நடத்ட்திட்டீங்க போல!

said...

//அ, ஆ சொல்லிக்கொடுத்த ஆசிரியர்களும், ஆரம்பப் பள்ளியும், நண்பர்களும், அங்கு நிகழ்ந்த நிகழ்வுகளும், வாங்கிய அடிகளும், ஓடிய ஓட்டங்களும், சிரித்து மகிழ்ந்த தருணங்களும், கண்கள் கலங்கி நின்ற சம்பவங்களும், பரிட்சையில் பிட் அடித்த நேரங்களும்//

செம டச்சிங் டச்சிங்! உங்க ஆசிரியை மிகவும் கனிவாக அன்பாக இருக்கிறார்! வாழ்த்துகக்ள்! எனக்கும் எங்க மித்ரா மேடம் ஞாபகம் வந்துடுச்சு!!

said...

இப்ப தான் படிச்சு முடிச்சேன், எனக்கே நெகிழ்வா இருக்கும் போது உங்களுக்கு எப்படி இருக்கும். எங்களுக்கு தான் சொந்த நாடு, வீடு இல்லாம நண்பர்களையும் தொலைத்து வாழ்றோம், நீங்களாச்சும் இப்படியான நட்பு வட்டத்தை விட்டு விலகாம இருங்க, ஆயுசுக்கும் நல்லது.

said...

மிகவும் மகிழ்சியாக இருந்திருக்கும்....

நாமும் இவ்வாறானதொரு சந்திப்பை மேற்கொள்ளும் ஆசையை தூண்டியுள்ளீர்கள்...

said...

வாழ்த்துக்கள் மை ப்ரண்ட் ... நிச்சயம் இது ஒரு மகிழ்ச்சியான விசயமா இருந்திருக்கும்..

said...

வாழ்த்துக்கள் அனு! நல்ல நிகழ்வு! அருமையான பகிர்வு!

said...

:-)))...

வாழ்த்துக்கள் மை ப்ரண்ட்!!!

Anonymous said...

இதை படிச்சு எனக்கு மறந்து போன பழைய நினைவுகள் எல்லாம் மீண்டும் நினைவிற்கு வருகின்றன :)

வாழ்த்துக்கள் அக்கா

said...

நல்ல அனுபவம்!!! கொடுத்து வைத்த டீச்சர் மற்றும் மாணவர்கள்...

said...

வாழ்த்துக்கள் அனு!

said...

வெற்றிகரமான சந்திப்புக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.
வாழ்க வளமுடன்!

said...

பெரிய சாதனைதான், நல்ல முயற்சி எடுத்து வெற்றியும் பெற்றிருக்கிறீர்கள்.

என்னுடன் படித்தவர்களில் மூவர் சேர்ந்து சந்திப்பதே அறிதாகிவிட்டது.

said...

வாழ்த்துகள்.

நல்ல முயற்சி எடுத்திருக்கறீங்க.

இனி இந்த நட்பு தொடரட்டும்.

said...

// நல்ல அனுபவம்!!! கொடுத்து வைத்த டீச்சர் மற்றும் மாணவர்கள்...//

ரிப்பீட்டேய்ய்ய்ய்...

உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!

said...

வாவ். சூப்பர் மேட்டர்மா.. பயங்கற சந்தோஷமா இருந்திருக்கும்ல..

ஆமா இந்த கூட்டத்துல நீங்க எங்க இருக்கிங்கன்னு சொல்லவே இல்லையே.. :)

said...

vaazhthukkal friend.

said...

nostalgia...

said...

பள்ளிக்கூடம் படம் பார்த்த நிறைவை தந்தது உங்கள் பதிவு.:)

said...

அருமையான விசயம்..!
அனேகரின் மனதில் இருக்கிற ஒரு ஏக்கம்தான் இது என்றாலும் எல்லோராலும் வெற்றிகரமாக செயல்படுத்த முடிவதில்லை... உங்கள் பயணம் தொடர்ந்தும் வெற்றிபெற வாழ்த்துக்கள்..

said...

மை பிரண்ட் நீங்க உண்மையிலேயே குட் பிரண்ட்தான்...;)

said...

இனிய
புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி...

said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி.

உங்கள் சந்திப்பு அருகிய குறிப்புகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றியும் வாழ்த்தும்.

said...

பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து பழைய மாணவர்களைத் தேடித் திரட்டி ஆசிரியர்களைச் சந்தித்தது இமாலயச் சாதனை. அந்நாள் நினைவுகளை ஆனந்தித்து - பேசி - நினைத்து - பகிர்ந்து - புட்கப்படம் எடுத்து - தற்போதைய வாழ்க்கையுடன் ஒப்பு நோக்கி - ம்ம்ம்ம்ம்ம்ம்ம் - நன்று நன்று - பாராட்டுகள்

said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி. .:: மை ஃபிரண்ட் ::. ..

said...

படிக்க படிக்க உடனே கிளம்பி போயி எங்க டீச்சர்கள் அனைவரையும் பார்க்க வேண்டும் போல இருக்கு..;))

நன்றாக தொகுத்து எழுதியிருக்கிங்க..வாழ்த்துக்கள் ;)

Anonymous said...

இனிமையான சந்திப்பு, வாழ்த்துகள்!

Happy New Year sis :-)

said...

அழகான பதிவு..

//நாங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றியதில் எல்லையில்லா மகிழ்ச்சி. //

வாழ்த்துக்கள்..

said...

வாழ்க!

said...

பொங்கல் வாழ்த்துக்கள்... பிரிந்த நண்பர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தீர்கள்... சரி... அது என்ன டீச்சர் கணவர் அங்கிள்(மாமா)..... அதோடு நில்லாமல் டீச்சருக்கு 3 அழகிய மகள்களா....? ஆகட்டும்... ஆகட்டும்....

said...

நீங்கள்தானே சொக்கனை மலேசியாவில் அரைநாள் கடத்திக்கொண்டு போன கடத்தல்மன்னன்?
அப்பிடி நான் சொல்லல! பொதுவா பேசிக்கிறாங்க! :-D

said...

English la solren

U made me feel nostalgic!!!

Nalla postunga!!!

said...

அரிய சாதனை,தொடரட்டும் உங்கள் நட்பு

said...

கேட்கும் போதே ரொம்ப நல்லா இருக்கு.. வாழ்த்துகள்.. :) தொடரட்டும் உங்கள் பணி..

Anonymous said...

நானும் படித்தேன் பதிவை. அருமை, இனிமை. வாழ்த்துக்கள்.

said...

மிக அருமையான நிகழ்வு. நெகிழ வைத்த இந்த சந்திப்பு அனைவருக்கும் அவரவரது நினைவுகளைக் கிளப்பி விட்டிருப்பதும் தெரிகிறது. எனக்கும்தான்:)! பள்ளி கல்லூரி நண்பர்களுடன் இன்றும் தொடர்புண்டு. ஆனால் இதுபோல சந்தித்துக் கொண்டதில்லை:(!

ஆசிரியர்களைச் சந்தித்தது மிகவும் பாராட்டப் பட வேண்டியது.

டீச்சருக்கு நீங்கள் வைத்த டெஸ்டும் இண்ட்ரெஸ்டிங். வாழ்த்துக்கள் மை டியர் ஃப்ரெண்ட்:)!

said...

http://bharathanonline.blogspot.com/

வரவேற்கிறேன் my friend

-பரதன்-

said...

miga arumayana pathipu. :)

said...

அற்புதமான நிகழ்வு ! இனிமையானதொரு சந்திப்பு, வாழ்த்துகள்!

Can it happen in India?

said...

@வால்பையன்:

//இப்பொழுது 28 மாணவர்களின் கதி என்ன?//

28 இப்போது 40 ஆகி, வெற்றிகரமாக நான்காவது சந்திப்பு நாளை நடப்பெறவுள்ளது. ;-)

//இதில் உங்கள் அனுபவத்தை மட்டும் சொன்னால் மாட்டிக்காமல் பிட் அடிப்பது எப்படியென்று நாங்களும் தெரிந்து கொள்வோம்//

அதுக்கு வேணும்ன்னா ஒரு பதிவு போட்றலாம். ஆனா, இப்போ இது எங்க டீச்சர் படிக்கிறாங்க. அவங்களுக்கு உண்மையை நானே சொல்லி அடி வாங்க வச்சிடுவீங்க போல. ;-)

//உள்ளூரில் குப்பை கொட்டுபவர்கள் என்றுமே நண்பர்கள் தான்,
அமெரிக்கா போய் விட்டால் தான் அண்ணாந்து பார்க்க வேண்டியிருக்கு//

அப்படியும் இல்லை. வர வைக்க திறமை இருந்தால் கண்டிப்பாக வர வைக்க முடியும். இது எங்க விஷயத்தில் நடந்ததே. ;-)

//எப்போதும் வீட்டுப்பாடம் செய்யாமல் உங்களிடம் அடிவாங்குவேனே என்றிருந்தால் சட்டென்று அவருக்கு ஞாபகம் வந்துவிடும்//

இது ரொம்ப கஷ்டமான கேள்வி.. ஏனென்றால், இப்படி சொல்றவங்களை எண்ணினால் ஒரு யூனியனே உருவாக்கிடலாம். :-)

said...

@ஆயில்யன்:

நன்றி பாஸ் :)

@ஜீவ்ஸ்:

நன்றி அண்ணே. :-)

@ஜி3:

நன்றி யக்கோவ்.. :-)

said...

@சதீசு குமார்:

நன்றி

@தூயா:

வாவ்.. ;-)

@மின்னுது மின்னல்:

நன்றி ;-)

@கார்த்திக் நாராயண்:

நன்றி :-)

said...

@சந்தனமுல்லை:

//ஒரு ஆட்டோகிராப் சினிமா ரெஞ்சுக்கு நடத்ட்திட்டீங்க போல!//

ஆமா.. ஆமா.. :-)

//செம டச்சிங் டச்சிங்! உங்க ஆசிரியை மிகவும் கனிவாக அன்பாக இருக்கிறார்! வாழ்த்துகக்ள்! எனக்கும் எங்க மித்ரா மேடம் ஞாபகம் வந்துடுச்சு!!//

இப்பவே மித்ரா மேடம்க்கு ஒரு கால் பண்ணுங்க. :-)

said...

@கானா பிரபா:

//எங்களுக்கு தான் சொந்த நாடு, வீடு இல்லாம நண்பர்களையும் தொலைத்து வாழ்றோம், நீங்களாச்சும் இப்படியான நட்பு வட்டத்தை விட்டு விலகாம இருங்க, ஆயுசுக்கும் நல்லது.//

கண்டிப்பா உங்களுக்கும் ஒரு நாள் நடக்கும். அதைவிட ஒரு அமைதியான நாடு உங்களுக்கு வெகு விரைவிலேயே கிடைக்க இறவனை பிரார்த்திக்கிறேன். _/\_

said...

@நிமல்:

//நாமும் இவ்வாறானதொரு சந்திப்பை மேற்கொள்ளும் ஆசையை தூண்டியுள்ளீர்கள்...//

சீக்கிரமே செயலில் இறங்குங்கள் நிமல். :-)

@கயல்விழி முத்துலெட்சுமி:

நன்றிக்கா

@அபி அப்பா:

நன்றிண்ணே. :-)

@விஜய் ஆனந்த்:

நன்றி நண்பா

said...

@துர்கா:

நன்றிம்மா

@உதயகுமார்:

//கொடுத்து வைத்த டீச்சர் மற்றும் மாணவர்கள்...//
நன்றி நன்றி

@நிஜமா நல்லவன்:

நன்றிண்ணே

said...

@மு. வேலன்:

நன்றி.. :-)

@கோவி.கண்ணன்:

//பெரிய சாதனைதான், நல்ல முயற்சி எடுத்து வெற்றியும் பெற்றிருக்கிறீர்கள்.//

நன்றிண்ணே. :-)

said...

@ஜேகே:

நன்றி :-)

@மஹேஷ்:

நன்றி. :-)

@சஞ்சய் காந்தி:

நன்றிண்ணே

@கார்த்திக் BS:

நன்றி. ;-)

said...

@இராம்:

நன்றிண்ணே

@சுபாஷினி:

ஆமா.. எங்க வீட்டுல இதை நான் சொன்னபோதும் என் அப்பா-அம்மா அதைத்தான் சொன்னாங்க. :-)

said...

@தமிழன்-கறுப்பி:

//அனேகரின் மனதில் இருக்கிற ஒரு ஏக்கம்தான் இது என்றாலும் எல்லோராலும் வெற்றிகரமாக செயல்படுத்த முடிவதில்லை...//

செயல்படுத்தினால் எதிலும் வெற்றிக்காணலாம் என்பது என் நம்பிக்கை. அது வீண் போகவில்லை. ;-)

// உங்கள் பயணம் தொடர்ந்தும் வெற்றிபெற வாழ்த்துக்கள்..//

உங்க வாழ்த்தைப்போலவே நான்காவது வெற்றிகரமான சந்திப்பு நாளை நடப்பெறவுள்ளது. :-)

//மை பிரண்ட் நீங்க உண்மையிலேயே குட் பிரண்ட்தான்...;)//

touching.. :-)

//இனிய
புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி...//

இப்போது உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று சொன்னால் நீங்க திட்டுவீங்களா? ;-)

said...

@காண்டீபன்:

உங்களுக்கும் என் நன்றிகளும் வாழ்த்துக்களும் உறித்தாகுக..

@சீனா:

நன்றி தாத்தா. :-)

@சரவணகுமார் MSK:

நன்றி. :-)

said...

@கோபிநாத்:

//படிக்க படிக்க உடனே கிளம்பி போயி எங்க டீச்சர்கள் அனைவரையும் பார்க்க வேண்டும் போல இருக்கு..;))//

பதிவு படிச்சதுமே இந்தியா கிளம்பி போனீங்களா அண்ணா? :-)

@ஷோபன்:

நன்றிண்ணே. :-)

@கப்பி:

நன்றி அறிவுஜீவி :-)

said...

@தமிழ் ஊசி:

//பொங்கல் வாழ்த்துக்கள்... //

உங்களுக்கு பொங்கல் வாழ்த்து சொல்லலாம்ன்னு பார்த்தா இப்போது தமிழ் வருடப்பிறப்பே வந்துடுச்சே. :-)

//சரி... அது என்ன டீச்சர் கணவர் அங்கிள்(மாமா)//

பேர் சொல்லி கூப்பிடலாம்ன்னா பேர் என்னன்னு தெரியாதில்லையா! ஹீஹீஹீ

//அதோடு நில்லாமல் டீச்சருக்கு 3 அழகிய மகள்களா....? ஆகட்டும்... ஆகட்டும்....//

ஹீஹீஹீ

said...

@ஆதித்தன்:

நான் அவன் இல்லை! நான் அவன் இல்லை! :-)

@Karthik:

// English la solren

U made me feel nostalgic!!!

Nalla postunga!!!//

தமிழ்ல சொல்றேன்..
நன்றி ஹை!!
நல்லா கமேண்டுங்க!!!

said...

@சொல்லரசன்:

நன்றி. :-)

@பீமோர்கன்:

நன்றி :-)

@கோவை ரவி:

நன்றி. :-)

said...

@ராமலக்ஷ்மி:

//நெகிழ வைத்த இந்த சந்திப்பு அனைவருக்கும் அவரவரது நினைவுகளைக் கிளப்பி விட்டிருப்பதும் தெரிகிறது. எனக்கும்தான்:)! பள்ளி கல்லூரி நண்பர்களுடன் இன்றும் தொடர்புண்டு. ஆனால் இதுபோல சந்தித்துக் கொண்டதில்லை:(!//

கவலை வேண்டாம்.. இப்பவே ஒரு போன் போடுங்க.. நாளையே சந்திப்பு நடத்திடலாம். :-)

//ஆசிரியர்களைச் சந்தித்தது மிகவும் பாராட்டப் பட வேண்டியது.//

பாடம் கற்பித்த ஆசிரியரை எப்படி மறக்க முடியும். :-)

//டீச்சருக்கு நீங்கள் வைத்த டெஸ்டும் இண்ட்ரெஸ்டிங். வாழ்த்துக்கள் மை டியர் ஃப்ரெண்ட்:)!//

நன்றி மை டியர் ஃபிரண்ட். :-)

said...

@Carpe Diem:

// miga arumayana pathipu. :)//
நன்றி :-)

@Raju:

//அற்புதமான நிகழ்வு ! இனிமையானதொரு சந்திப்பு, வாழ்த்துகள்!//

நன்றி ராஜு. :-)

//Can it happen in India?//

முயற்சி செய்தால் எங்கேயும் எதுவும் சாத்தியம். :-)

said...

Great...!!!Greetings from Norway!