Friday, December 01, 2006

114. நாட்டு நடப்பு 2

இன்று டோஹாவில் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப் படுகிறது ஆசிய விளையாட்டு போட்டி.

எத்தனை பேர் போட்டியில் கலமிரங்கினாலும், நாட்டுக்காக பெறும் அந்த முதல் தங்க பதக்கம்தான் ரொம்ப ரொம்ப முக்கியம். ஏனென்றால், அதுதான் மற்ற விளையாட்டாளகளுக்கு ஜெயிக்க வேண்டும் என்ற வெறியை கொடுக்கும். அதுவும் தங்கம் வெல்வார் என்று பெரிதும் நம்பிரிருந்தவர் அதை கோட்டை விட்டால், அதுவே மற்ற பதக்கங்களை இழப்பதுக்கு காரணம் ஆகிவிடும்.

போன ஆசிய போட்டியில் நாட்டின் முன்னனி ஸ்குவாஷ் ஆட்டக்காரர் நிகோல் டேவிட் கோட்டை விட்ட பதக்கத்தை சுட்டி காட்டி, இதுதான் பதக்கங்களை வெல்ல முடியாததற்க்கு காரணம்ன்னு சொன்ன மாதிரி ஈன்த தடவை சொல்லி விடாதீர்!! மலேசியா போலே!!!


நிகோல் டேவிட்ன்னு சொன்னதும் 3 நாளுக்கு முன்பு நடந்த பெண்களுக்கான உலகத்தர ஸ்குவாஷ் போட்டிதான் நினைவுக்கு வருது. அயர்லாந்தில் நடந்த இறுதிச் சுற்றில் நதாலியுடன் மோதினார்.

98 நிமிட கடும் போரட்டத்துக்கு பிறகு, இந்த கோப்பையும், உலக வெற்றியாளர் பட்டத்தயும் வென்றார். போன உலக போட்டியிலும் இவர்தான் வெற்றியாளர் என்பது குறிப்பிட தக்கது.

அயர்லாந்திலிருந்து அப்படியே டோஹாக்கு செல்லும் நிகோலே, இன்னொறு தங்கத்தையும் வென்றுவிட்டு மலேசிய வாருங்கள். உங்கள் திறமைகளை கண்டிப்பாக தொலைகாட்சியில் பார்ப்பேன்..

கடந்த 24-ஆம் தேதி பாயார் தீவு அருகே ஃபேரி விபத்து நடந்தது. லங்காவியிலிருந்து வந்து கொண்டிருந்த ஒரு ஃபேரி கட்டுப்பாட்டை இழந்து குவாலா கெடாவிலிருந்து லங்காவியை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஃபேரியை இடித்தது.

பலத்த காயப்பட்டவர்கள் பட்டியலில் இருந்த 3 வவது சிறுவன் நேற்று முன் தினம் மாண்டான். நடக்க கூடாத ஒரு விஷயம் இது. விபத்துக்கு காரணம் தெளிவாக இல்லாத வானமும் கடல் அலைகளும்தானாம். அப்படி தெளிவாக இல்லாவிடில், கப்பல் தன் பயணத்தை தள்ளி போடலாம் அல்லவா? ஏன் இந்த அவசரம்? பலரின் வலிகளுக்கும் கண்ணீருக்கும் காரணம் ஆகிவிட்டனர் இப்போது!!!

6 Comments:

said...

//கப்பல் தன் பயணத்தை தள்ளி போடலாம் அல்லவா? ஏன் இந்த அவசரம்? பலரின் வலிகளுக்கும் கண்ணீருக்கும் காரணம் ஆகிவிட்டனர் இப்போது//

உண்மை.. சில நேரம் இது போன்ற முடிவுகள் பல உயிர்களை இழக்கச் செய்கின்றது மை பிரண்ட்

said...

உண்மைதான்.. இந்த செய்தியை படிக்கும்போதும், படங்களை பார்க்கும் போதும் ரொம்ப கவலையாக இருந்தது எனக்கு!!!!

Anonymous said...

where did u get the sejahtera pic from?i cant read tamil n im curious

Anonymous said...

Thanks for the info my friend ;)

said...

//Anonymous said...
where did u get the sejahtera pic from?i cant read tamil n im curious //

You mean the Sejahtera Ferri? i took it in one of online newspaper site. check out:
http://thestar.com.my
http://utusan.com.my

Sorry.. if you can't read Tamil, you can refer the page above to read the full info. ;-)

said...

//C.M.HANIFF said...
Thanks for the info my friend ;) //

you are welcome