Thursday, March 15, 2007

169. போர் கொடி தூக்கிட்டாங்கய்யா!!!!

சுத்தி வளைக்காமல் நான் நேரா மேட்டருக்கே வந்துடுறேன் மக்கா!! தல எப்போ சுகாதார துறை அமைச்சர் பதவியை பொற்கொடிக்கு வழங்கினாரோ, அப்பவே நானும் ஒரு மனு போட்டாச்சு! வந்து என் கீ போர்ட்டை கொஞ்சம் சுத்தம் செஞ்சுட்டு போங்கக்கான்னு...


ஆனால், இவங்களுக்கு என் மேலே என்ன கடுப்போ தெரியலை! போர் கொடியை தூக்கிட்டு நிக்குறாங்க..


நான் பச்சை கொடியை தூக்கினா, இவங்க ஸ்ட்ரைக்கிங் பச்சையை தூக்கிட்டு நிக்குறாங்க..
சிவப்பை தூக்கினா, ஸ்ட்ரைக்கிங் சிவப்பை தூக்கிட்டு லுக்கு விடுறாங்க..
காய்ச்சலப்போ வீட்டுல இருக்கும்போது பாக்யராஜ், டி. ஆர் படங்கள் ரொம்ப பார்த்திருப்பாங்க போல..
(எப்படித்தான் அந்த கலர கையில தூக்கிட்டு நிக்குறாரோ! இங்க மலேசியாவிலிருந்து பார்க்கும்போதே எனக்கு கண்ணெல்லாம் கூசுது. உங்களுக்கு கூசலையா?)


சரி மேட்டருக்கு வரேன் மேட்டருக்கு வரேன்னு சொல்லிக்கிட்டே என்னென்னவோ பேசிட்டு இருக்கேன் பாருங்க.. இவங்க கோபத்தை தணிக்கனும்ன்னா ஒரு தேக் எழுதணும்ன்னு வீட்டுப்பாடம் வேற கொடுத்துறுக்காங்க..


தலைப்பு: என்னைப் பற்றி 5 வியர்ட்டான விஷயங்கள்
(யாருடா இப்படிப்பட்ட தலைப்புகளையெல்லாம் கொண்டு வர்றது?)


முதல்ல ஒரு வெள்ளை கொடி காட்டிடுறேன்:


இப்போ தேக்:

1. ஞாபக மறதி
இது எனக்கு பலமா பலவீனமான்னு தெரியலை. சின்ன வயசுல ஓரளவுக்குதான் இந்த வியாதி இருந்தது. என் அப்பா, பாப்பா (நாந்தானுங்கோ!) பெரிய படிப்பெல்லாம் படிச்சு டாக்டரா, கலேக்டரா, தொழிலதிபரா, வக்கிலா (4 இன் 1) ஆகனும்ன்னு ஆசைப்பட்டு மேமோரி ப்லஸ் (Memori Plus) வாங்கி கொடுத்தார்.. மூனு நாலு போட்டல்களை காலி பண்ணிட்டேன். அப்பா வந்து கேட்டார்.

அப்பா: இப்போ படிக்கிறது எல்லாம் ஒன்னும் மறக்கலையே?
நான்: படிப்பா? நான் படிக்கிறேனா?

அம்மா இதை பார்த்துட்டு, எனக்கு மூலிகை மருத்துவம்தான் சரி வரும்ன்னு சொல்லி வீட்டுல வல்லாறை செடியை வளர்த்து, ஒரு நாளைக்கு மூனு வேளையும்:

தண்ணீருக்கு பதிலா - வல்லாறை ஜூஸ்
சமையலில் கருவேப்பிலைக்கு பதிலா - வல்லாறை கீரை
சாக்லேட் மிட்டாய் சாப்பிடனும்னா கூட அதில் வல்லாறையையும் சேர்த்து வச்சு கொடுத்தார்..

ஏன்னா, இந்த பாப்பா(!) பெருசா ஆனதும் டீச்சரா, விஞ்ஞானியா, கணித மேதையா, பெரிய கம்பெனியில மேனேஜரா வரனும்ன்னு இவங்களுக்கு ஆசை.. ஒரு மூனு மாசத்துக்கு வல்லாறையை சாப்பிட்ட பிறகு, என் அம்மா டெஸ்ட் வச்சாங்க..

அம்மா: இன்னைக்கு ஸ்கூல்ல நீ என்ன படிச்ச?
நான்: நான் என்ன படிச்சன்னு கேட்குறதுக்கு நீங்க யாரு?

அவ்வளவுதான்! அம்மாவும் அப்பாவும் தலையில் துண்டு போட்டுட்டு போயிட்டாங்க.

(கடைசியில் அவங்க ஆசைப்பட்ட எதுவும் நான் ஆகாமல், இஞ்சினியரிங் படிச்சு முடிக்க போறேன்.)

அதுக்கப்புறம்தான் தெரியுதே, என் ஞாபக சக்தி எப்படி வேலை செய்யுதுன்னு! யாரிடமாவது ஏதாவது முக்கியமா பேசிக்கிட்டே இருப்பேன். சில நிமிடங்களில் யாரிடமோ ஏதோ பேசினோம் என்று தெரியும். ஆனால், யார், என்ன மேட்டர்ன்னு சுத்தமா ஞாபகமே வராது!

போன்ல, கணிணில ரிமைண்டர் வச்சிருப்பேன். ஆனால், பல சமயங்களில் ரிமைண்டர் ஒன்னு இருக்குன்னே மறந்துடுவேன். இதை பத்தி சொல்லனும்ன்னா ஒரு பெரிய பதிவே போடலாம்ங்க.. அதை பிறகு பார்ப்போம். இப்போ Next போலாம் வாங்க..

2. கோபம்
அப்பன் எட்டடி பாய்ஞா பிள்ளை பதினாரடி பாயும்ன்னு பெரியவங்க சொல்லுவாங்க.. சின்ன வயசிலிருந்தே என் அப்பாவின் கோபங்களை கண்டு (அடியும் வாங்கி!) வளர்ந்ததால், அப்பாவின் கோபத்துக்கு நானும் சளைத்தவள் இல்லை என்று ஆகிவிட்டது. எனக்கும் சரமாறியா கோபம் வரும்.. ஆனால், நான் அதை முடிந்த வரை அடக்கிக்கொள்வேன். நானே எனக்கு கேட்டுக் கொள்வேன் "எதற்கு கோபம்? இதனால் பிரச்சனைகள்தான் கூடுமே தவிர, ஏதும் குறைய போவதில்லை!"

என்னுடைய பல நண்பர்களிடம் எனக்கு கோபம் வரும்ன்னு நீங்க போய் சொன்னா, அவங்க நம்பவே மாட்டாங்க. (நிஜமா!!)

ஆனாலும் சில சமயங்களில் என்னால் என்னையே கண்ட்ரோல் பண்ண முடியாது. அப்போது எரிமலை வெடித்துவிடும்! அது ஒரு குறுகிய காலத்துக்கு மட்டுமே (சில நிமிடங்கள் or சில மணி நேரம்)..

என்னுடைய கேரக்டர் நம்பர் 1 (ஞாபக மறதி) என்னை முழுவதுமாய் ஆட்கொண்டதால் கோபத்தையும் கோபப்பட காரணமான அந்த காரணங்களையும் மறந்துவிடுவேன். (இதனால், ஞாபக மறதி இருப்பது பலமே!!)

இதுனால் நான் என்ன சொல்ல வர்றேன் என்றால், நான் கோபம் கொண்டாலும், சீக்கிரமே தனிந்துவிடுவேன், இதை மனதில் வைத்து பிரச்சனைகளை பெரிது படுத்த வேண்டாம். நன்றி.. ;-)

3. இயந்திர வாழ்க்கை
வாழ்க்கையில் நான் கால அட்டவணை போட்டு அதன் படி நடக்கிறேன் என்று நினைக்கிறீங்களா? அதுதான் கிடையாது!

நான் சொல்லும் இயந்திர வாழ்க்கை: இயந்திரங்களை நம்பி வாழும் வாழ்க்கை.

இப்போழுது நான் உபயோகிக்கும் 5 இயந்திரங்கள்:
1- பர்சனல் கம்பியூட்டர் (Personal Computer)
2- லாப்டாப் (Laptop)
3- நோகியா 6680 (Nokia 6680)
4- ஆக்ஸியா ஏ108 பி.டி.ஏ போன் (AXIA A108 PDA Phone)
5- கைக்கடிகாரம்

இதில் முக்கியமாய், எப்போதுமே கணிணி என் கூடவே இருக்கவேண்டும். குளிக்கும் நேரமும், க்லாஸ் போகும் நேரமும் தவிர்த்து மற்ற எல்லா நேரமும் நான் இருப்பது - என் கணிணியின் முன்தான். அப்படியொரு பைத்தியம் எனக்கு. வேலை, ப்ராஜக்ட், அசைக்ன்மேண்ட், பாடம், படம், மியூசிக், விளையாட்டுன்னு சொல்லிட்டே போலாம். எல்லாமே இந்த கணிணியில்தான். இதோ! இந்த போஸ்ட் நான் எழுதுவதும் இதே கணிணியில்தான்.

என்னை தேட வேண்டும் என நினைப்பவர்கள் எத்தனை மணியாக இருந்தாலும், நேராய் என் ரூமுக்கு வந்துவிடுவார்கள். ஏனென்றால், இங்கேதானே என் கணிணி இருக்கு!!!!

நண்பர்கள் சொல்லுவாங்க: "நீ இந்த கம்பியூட்டர் கட்டிட்டே அழு"ன்னு.. அதுக்கு நன் சொல்வேன்: "நான் ஏன் அழனும்? கம்பியூட்டர் கட்டிக்கிட்டா நான் சந்தோஷமாய்தானே இருப்பேன்.. இப்போ இருப்பது போல!" ;-)
(Actually இதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு! நான்தான் மறதியாச்சே!!! கணிணியின் முன் உட்கார்ந்திருந்தால் எது எது எப்போது செய்ய வேண்டும் என ரிமைண்டர் கொடுத்து எனக்கு நினைவூட்டிக்கிட்டே இருக்கும். மற்றவர்கள் டைம் பிரகாரம் நம் முன் வந்து மியூசிக்குடன் நாம் என்ன செய்ய வேண்டும் என சொல்வார்களா?)

[யப்பா!!! என்ன மூளை!!! உன்னால மட்டும் எப்படி இப்படியெல்லாம் யோசிக்க முடியுது, .::மை ஃபிரண்ட்::.!!!!] ;-)

4. செய்வதை திருந்தச் செய்தல்
எனக்கு ஒரு பழக்கம் இருக்குங்க.. எதையும் நினைச்சதும் செய்ய மாட்டேன். அப்படி செய்ய ஆரம்பித்தால், என்னால் முடிந்த "The best from me"யைதான் தருவேன். என்னை விட எத்தனையோ பேர் நன்றாக செய்பவர்கள் இருந்தாலும், என்னை தேடி வந்துவிட்டார்களே! அவர்களை வருத்தப் பட வைக்கக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காக என்னால் முடிந்த வரை செய்துக் கொடுப்பேன். அது வேலை ஆகட்டும், உதவியாகட்டும், பாடமாகட்டும்.. அதுபோலத்தான், இந்த ப்ளாக்கும். ;-)

அதற்காக, எனக்கு தெரியாமல் புரியாமல் இருக்கும் விஷயங்களை கேட்டு படித்து முயற்சிப்பேன். என் எழுத்துக்களில் கொஞ்சம் முன்னேற்றம் இருக்குன்னு உங்களில் சிலர் சொல்லியிருக்கீங்க. அதுக்கு காரணம் நீங்கதான்! உங்கள்ல எத்தனை பேரை நான் தொல்லை பண்ணியிருக்கிறேன்னு எனக்குதான் தெரியும். எனக்கு தெரியாத வார்த்தைகளை சொல்லி தர கேட்டிருக்கிறேன். சில நண்பர்கள் ஒரு படி மேலே போய் என் எழுத்துக்களில் உள்ள பிழைகளை சுட்டி காட்டி எனக்கு உதவியிருக்கிறீர்கள். என்னுடைய இந்த வளர்ச்சிக்கு நீங்கதான் காரணம்! நன்றி..

5. நான்காவது படிக்கும்போதே என் ஐந்தாவது குணம் தெரிஞ்சிருக்குமே? (நன்றி மறக்காதவள் நான்)
யாரோ பெரியவங்க சொல்லியிருக்காங்க! வலது கை செய்யும் தானங்களையும் உதவிகளையும் இடது கைகூட அறியக்கூடாது. செய்த உதவியை அப்போதே மறந்துவிட வேண்டும். பிறர் நமக்கு செய்த உதவியை என்றென்றும் மறக்க கூடாதுன்னு!

அதனாலே நான் வெகு சுலபமாய் மற்றவர்களிடம் உதவி கேட்க மாட்டேன். அப்படி எனக்கு மிகவும் தேவைப்பட்டாலோ, (ஒரு சில நல்லவங்க) நாம் உதவி கேட்காமலேயே வந்து உதவி செய்யுறவங்களை நான் எப்போதும் மறக்க மாட்ட்டேன். (என் ஞாபக மறதி இந்த விஷயத்தில் ஒன்னும் செய்ய இயலாது என்று நினைக்கிறேன்.)

நான் நாலாவது படிக்கும்போது பஸ் ஏறிதான் வீட்டுக்கு வருவேன். அப்போ நான் ஒல்லி குச்சியாய், சின்னதாய் இருந்தேன். தோளில் புத்தகப்பை மூட்டையை சுமந்துக்கொண்டு கூட்டமாய் இருந்த பஸ்ஸில் ஏறினேன். பஸ் ஒவ்வொரு இடத்தில் ப்ரேக் போடும் போதும், நானும் முன்னாடி போய் விழுந்து எழுந்திருச்சி வந்தேன். அப்போது ஒரு அக்கா (24-25 வயசு இருக்கும்) எழுந்திருச்சி என்னை உட்கார சொல்லி இடம் கொடுத்தாங்க. போன வருடம் (ஒரு பத்து வருடத்துக்கு மேல ஆயிடுச்சு) நான் வேலை முடிந்து வரும்போது Putra LRT-யில் ஏறி வந்தேன். இடுப்பில் ஒரு கைக்குழந்தையையும், கையில் ஒரு 3 வயது குழந்தையையும் பிடித்துக்கொண்டு நிக்க முடியாமல் நின்றக்கொண்டிருந்தார். பத்து வருடத்துக்கு முன்பு இருந்ததுக்கும் இப்போதுக்கும் அதிக மாற்றம் இல்லை அவரிடம். ஆதலால் என்னால் சுலபமாக அடையாளம் கண்டுக்கொள்ள முடிந்தது. நானும் அங்கே நின்னுக்கொண்டிருந்தேன். உட்கார்ந்திருந்தால், நான் எழுந்து அவருக்கு என் இடம் கொடுத்திருக்கலாம் என்று மிகவும் வருத்தப்பட்டேன். அதனால், என்னால் முடிந்த அளவு அவருடைய மூனு வயது மகளை (என்னைபோல் ஒவ்வொரு முறையும் பிரேக் போடும்போது முன்னே விழுந்து எழுந்திருச்சி வந்தாள்) பிடித்துக்கொண்டேன். என்னால், அதை தவிர்த்து வேறெதுவும் உதவ முடியவில்லை. அவரை திரும்பவும் பார்ப்பேன், உதவுவேண் என்ற நம்பிக்கை எனக்கு இன்னும் இருக்கு!!!

அதே போல், யாருக்கு உதவி தேவைப் பட்டாலும் நான் முதல் ஆளாய் போய் நிற்பேன். அப்படி என்னால் அவருக்கு உதவ முடியும் என்றால் கண்டிப்பாய் உதவுவேன்.. வந்துவிடுவேன் (மறந்துவிடுவேன்)...

பொற்கொடி டீச்சர், உங்க வீட்டுப்பாடம் நான் சரியா செஞ்சிருக்கேனா? எனக்கு பாஸ் மார்க்கா? ஃபெயில் மார்க்கா? வந்து மார்க் போட்டு போகவும் டீச்சர்.. ;-)

மத்தவங்க ஏதாவது துப்பிறதுக்கு இருந்தா, கீழே துப்பிட்டு போலாம். :-)

அட.. ஒரு விஷயம் மறந்துட்டேனே!!! நான் யாராவது தேக்(Tag) பண்ணணும்ல??? எத்தனை பேரு டீச்சர்? ஓ! அஞ்சா?

ஓகே!!! இதோ நோட் பண்ணிக்கோங்க:
1- சிங்கபூரு வாலு துர்கா
2- சூடான் புலிகேசி.. ச்சீ புலி சிவா
3- பி.மு.க தல கார்த்திக்
4- செதுக்கல் மன்னன் தேவ்
5- நடைராஜா கோபிநாத்

ஃப்ரீயா இருக்கும்போது எழுதுங்க மக்கா!! வர்ட்டா!!!!

108 Comments:

said...

உங்க பஸ் பயண அனுபவத்தை ரொம்பவே ரசிச்சுப் படிச்சேன் மை பிரெண்ட் :-)

said...

ஆமாங்க அது என்ன செதுக்கல் மன்னன்.. விட்டா நம்ம கையிலே ஒரு உளியைக் கொடுத்து மலைப் பக்கம் போய பாறையிலே சிலை வடிக்க விட்டுருவீங்கப் போலிருக்கு :-)

said...

அது என்ன நடைராஜா கோபிநாத்? வெளுத்துகட்டுங்க!!

said...

//யாருக்கு உதவி தேவைப் பட்டாலும் நான் முதல் ஆளாய் போய் நிற்பேன். அப்படி என்னால் அவருக்கு உதவ முடியும் என்றால் கண்டிப்பாய் உதவுவேன்.. வந்துவிடுவேன் (மறந்துவிடுவேன்)...//


நீங்க இம்புட்டு நல்லவங்களா.....

எங்க தல ய விட நல்லவங்களா இருக்கீங்களே

அவ்வ்வ்வ்வ்

said...

//கடைசியில் அவங்க ஆசைப்பட்ட எதுவும் நான் ஆகாமல், இஞ்சினியரிங் படிச்சு முடிக்க போறேன்.) //

உண்மையிலே "படிச்சு" தான் முடிக்க போறீங்களா!!!

// இதை பத்தி சொல்லனும்ன்னா ஒரு பெரிய பதிவே போடலாம்ங்க.. //

இத கண்டிப்பா மறுந்துடுவீங்கள!!!!

said...

//ஆனால், நான் அதை முடிந்த வரை அடக்கிக்கொள்வேன்//

உங்களுக்கு லோ பி.பி. வரும் நினைக்குறேன். :-( சரியான கோபத்தை சரியான நேரத்தில் காட்டனும் முடிந்த அளவு....

//அப்போது எரிமலை வெடித்துவிடும்!//

அப்படி வெடிக்குற எரிமலைய கொஞ்சம் இந்தியாவுக்கு திருப்பி விடுங்க, மின்சாரம் எடுத்து பொழச்சுக்குறோம்.

said...

//அது என்ன நடைராஜா கோபிநாத்? வெளுத்துகட்டுங்க!! //

ஒரு வேளை இவரு வை.கோ.வுக்கு சொந்தமா இருப்பாரோ!!!!

said...

//அம்மா: இன்னைக்கு ஸ்கூல்ல நீ என்ன படிச்ச?
நான்: நான் என்ன படிச்சன்னு கேட்குறதுக்கு நீங்க யாரு?//

வாய்விட்டு சிரிச்சுட்டேன். :))

படிக்க ரொம்ப நல்லாருந்தது உங்க பதிவு.

Anonymous said...

Padikka nalla arumaiyaaga iruntathu my friend, continue ;-)

said...

//என்னுடைய பல நண்பர்களிடம் எனக்கு கோபம் வரும்ன்னு நீங்க போய் சொன்னா, அவங்க நம்பவே மாட்டாங்க//
same pinch!

எங்க அம்மாவுக்கு தான் தெரியும் எனக்கு எவ்ளோ கோபம் வரும்!னு. இப்ப நிறைய மாறி விட்டேன். ஆனாலும் அப்பப்ப வரும், போகும்.

ஒரு அழகான நதி இதமாய் பாய்ந்து ஓடுவது போல இருந்தது நீங்க எழுதின விதம். வாழ்த்துக்கள்.

said...

//வாய்விட்டு சிரிச்சுட்டேன். :))//

நான் வாய் மூடிகிட்டு சிரிச்சுட்டேன். ஏன்னா எங்க ஆஃபீஸ்ல ஆணிபுடுங்கும் போது சிரிச்சா தப்பு:-)))

said...

பொற்கொடிய கீதாமேடம் போற்கொடியா மாத்திட்டாங்களே!!அச்சச்சோ:-)))

said...

என்னப்பா கோபி எங்க போயிட்ட...12லயே நிக்குதே..சீக்கிரம் வாய்யா.

said...

புலிகூட 4 புல்லுதான் சாப்பிட்டுருக்கு!! ரொம்ம ஆணியோ?

said...

ஆஹா....கலக்கல் ;))))

அம்மா கேள்விக்கு வடிவேலு மாதிரியே பேசி எஸ்கேப் ஆகிடிவிங்க போல..

கோபம் இது நமக்கும் ரொம்பவே இருக்கு.

said...

\\யாருக்கு உதவி தேவைப் பட்டாலும் நான் முதல் ஆளாய் போய் நிற்பேன்.\\

ம்ம்ம்...இதுதான் எங்களுக்கு தெரியுமே ;)))

said...

\\சிங்கபூரு வாலு துர்கா \\

சரியாதான் பேர் வச்சுருக்கீங்க...
வாலு....
துர்கா.... வாலு ;)))

said...

\\ சூடான் புலிகேசி.. ச்சீ புலி சிவா\\

அட சூப்பர் ஆளை தான் புடிச்சு போட்டுயிருக்கீங்க...

said...

\\3- பி.மு.க தல கார்த்திக்\\

தல கலக்குங்க...

\\ செதுக்கல் மன்னன் தேவ்\\

நல்லா செதுக்குங்க தேவ்...

said...

\\நாகை சிவா said...
//அது என்ன நடைராஜா கோபிநாத்? வெளுத்துகட்டுங்க!! //

ஒரு வேளை இவரு வை.கோ.வுக்கு சொந்தமா இருப்பாரோ!!!!\\

யாரு நானா??? அப்படி இருந்தா நான் ஏன்ப்பா இங்க குப்பை கொட்ட போறேன்....எனக்கு என்னவோ என்னைவிட நீங்க தான் வை.கோவுக்கு ரொம்ப நெருக்கமுன்னு நினைக்குறேன்...

said...

இது வருகை பதிவு பின்னூட்டம்.. அப்புறமா வர்றேங்க மை பிரண்ட்

said...

//அம்மா: இன்னைக்கு ஸ்கூல்ல நீ என்ன படிச்ச?
நான்: நான் என்ன படிச்சன்னு கேட்குறதுக்கு நீங்க யாரு?//

ROTFL :-)

//ஆனால், யார், என்ன மேட்டர்ன்னு சுத்தமா ஞாபகமே வராது! //

என் பேர் Syam என்னோட பிளாக்கு எல்லாம் நீங்க வந்து இருக்கீங்க ஞாபகம் இருகுங்களா... :-)

said...

//அவர்களை வருத்தப் பட வைக்கக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காக என்னால் முடிந்த வரை செய்துக் கொடுப்பேன்//

என்ன ஒரு கடமை உணர்ச்சிடா சாமி....:-)

said...

//பத்து வருடத்துக்கு முன்பு இருந்ததுக்கும் இப்போதுக்கும் அதிக மாற்றம் இல்லை அவரிடம். ஆதலால் என்னால் சுலபமாக அடையாளம் கண்டுக்கொள்ள முடிந்தது. நானும் அங்கே நின்னுக்கொண்டிருந்தேன். உட்கார்ந்திருந்தால், நான் எழுந்து அவருக்கு என் இடம் கொடுத்திருக்கலாம் என்று மிகவும் வருத்தப்பட்டேன்//

this is really great....

said...

//அதே போல், யாருக்கு உதவி தேவைப் பட்டாலும் நான் முதல் ஆளாய் போய் நிற்பேன்//

எனக்கு அவசரமா ஒரு பத்து லட்சம் மலேசியன் டாலர் வேணும் குடுத்து உதவிட்டு..மறந்துடுங்களேன் பிளீஸ்....:-)

said...

@தேவ் | Dev:

//உங்க பஸ் பயண அனுபவத்தை ரொம்பவே ரசிச்சுப் படிச்சேன் மை பிரெண்ட் :-)//
:-)

//அது என்ன செதுக்கல் மன்னன்.. //
கதையை நன்றாக நீங்கள் செதுக்குவதால் இந்த செதுக்கல் பட்டம்ங்கண்ணா.

----------------------------------
@அபி அப்பா:
//அது என்ன நடைராஜா கோபிநாத்? //
அவருதான் வால்கர் (walker) ஆச்சே! அதான் தமிழில் நடைராஜா ஆகிட்டார்.. ;-)

//வெளுத்துகட்டுங்க!!//
;-)

---------------------------------
@நாகை சிவா:

//நீங்க இம்புட்டு நல்லவங்களா.....

எங்க தல ய விட நல்லவங்களா இருக்கீங்களே

அவ்வ்வ்வ்வ்//
உங்க தல கைப்பு எஃபெக்ட்டு தெரியுதுப்பா புலி. ;-)

//இத கண்டிப்பா மறுந்துடுவீங்கள!!!!//
இப்படி எத்தனையோ பதிவு போடறேன்னு சொல்லி மறந்திருக்கிறேன். நீங்கதான் அப்பப்போ ஞாபகம் படுத்தனும். ;-)

//உங்களுக்கு லோ பி.பி. வரும் நினைக்குறேன். //

ஹை பி.பிதான் ஏறுது இங்கே!! ;-)

//அப்படி வெடிக்குற எரிமலைய கொஞ்சம் இந்தியாவுக்கு திருப்பி விடுங்க, மின்சாரம் எடுத்து பொழச்சுக்குறோம்.//
எப்படிங்க உங்க மூளைக்கு இப்படிப்பட்ட ஐடியாவெல்லாம் தோணுது?

//ஒரு வேளை இவரு வை.கோ.வுக்கு சொந்தமா இருப்பாரோ!!!!//
அரசியலை கலக்காதீங்க மக்கா! ;-)

----------------------------------
@இராமநாதன்:

//வாய்விட்டு சிரிச்சுட்டேன். :))

படிக்க ரொம்ப நல்லாருந்தது உங்க பதிவு.//

வாங்க ராமநாதன். முதல் வருகைபோல் இருக்கு! இனி அடிக்கடி வாருங்கள். :-)

--------------------------------
@C.M.HANIFF:

//Padikka nalla arumaiyaaga iruntathu my friend, continue ;-)//
ஆரம்பத்திலிருந்து உங்கள் வற்றாத ஆதரவு எப்போதும் கொடுக்குறீங்களே. அதுக்கு நீங்கள் பாராட்டும் அளவுக்காவது எழுதணும்ல.. ;-)

---------------------------------
@ambi:

//எங்க அம்மாவுக்கு தான் தெரியும் எனக்கு எவ்ளோ கோபம் வரும்!னு. இப்ப நிறைய மாறி விட்டேன். ஆனாலும் அப்பப்ப வரும், போகும்.//
இனி நீங்க கண்ட்ரோல்ல இருக்கனும் அம்பி. இல்லைன்னா தங்கமணி நாட்டாமை தங்கமணியின் பூரிக்கட்டையை கடன் வாங்கி வந்து வெளுத்துபுடுவாங்க.. ஹிஹிஹி..

//ஒரு அழகான நதி இதமாய் பாய்ந்து ஓடுவது போல இருந்தது நீங்க எழுதின விதம். வாழ்த்துக்கள்.//
வாவ்!! பாராட்டுக்கு நன்றி அம்பி.. :-)

Anonymous said...

யக்கா...இங்கே என்ன நடக்குது?சும்மா இந்த பக்கம் எட்டி பார்க்கலாம் என்று வந்தால் என் பெயரும் இடி படுதே...என்ன நடக்குதுன்னு புரியலையே.

said...

@அபி அப்பா:

//நான் வாய் மூடிகிட்டு சிரிச்சுட்டேன். ஏன்னா எங்க ஆஃபீஸ்ல ஆணிபுடுங்கும் போது சிரிச்சா தப்பு:-)))//
ஆணி புடுங்கும்போது சிரிக்க கூடாதுன்னு சட்டமா உங்க ஆபிஸ்ல?
சரி.. நீங்க சிரிக்க கூடாது.. நாங்க மட்டும் சிரிக்கனுமாக்கும்.. உங்க போஸ்ட்டை படிச்சாலே வாய்விட்டு கத்தி சிரிக்கும்படியாகத்தானே இருக்கு?

//புலிகூட 4 புல்லுதான் சாப்பிட்டுருக்கு!! ரொம்ம ஆணியோ?//
புலிக்கு பசியில்லை! அவரு கவலைல இருக்காரு. :-(

--------------------------------
@கோபிநாத்:

//அம்மா கேள்விக்கு வடிவேலு மாதிரியே பேசி எஸ்கேப் ஆகிடிவிங்க போல..//
இப்பெல்லாம் வடிவேலுதானே நமக்கெல்லாம் ஹீரோ. ;-)

//கோபம் இது நமக்கும் ரொம்பவே இருக்கு.//
எல்லாருக்கும் ஒரே ரத்தம்தான் போல.. ;-)

//துர்கா.... வாலு ;)))//
அவங்க பேராக்ல இருந்து வந்ததும் எனக்கு இருக்கு ஆப்பு.. :-(

said...

@Syam:

//என் பேர் Syam என்னோட பிளாக்கு எல்லாம் நீங்க வந்து இருக்கீங்க ஞாபகம் இருகுங்களா... :-)//
அதுக்குதான் ஜி சொல்லிக்கொடுத்த கூகல் ரீடர் இருக்கே!! So, No need to memorise.. ஹிஹிஹி.. ;-)

//என்ன ஒரு கடமை உணர்ச்சிடா சாமி....:-)//
உங்க கட்சி மக்களான எங்களுக்கு உங்களைப்போல கடமையுணர்சி ஜாஸ்திதான் நாட்டாமை. :-)

//this is really great....//
:-)

//எனக்கு அவசரமா ஒரு பத்து லட்சம் மலேசியன் டாலர் வேணும் குடுத்து உதவிட்டு..மறந்துடுங்களேன் பிளீஸ்....:-)//

பாத்தீங்களா நாட்டாமை! அதுக்குள்ள எனக்கு ஆப்பு வச்சீட்டீங்களே. FYI, இங்க மலேசியா டாலர் இல்லை.. மலேசியா ரிங்கிட்தான் இருக்கு.
பத்து லட்சம் மலேசியா ரிங்கிட் ஒரு சூட்கேஸுல போட்டு இப்பத்தான் பரணியிடம் கொடுத்தேன். அவரிடம் நீங்க வாங்கிக்கலாம். ;-)

--------------------------------
@துர்கா:

//யக்கா...இங்கே என்ன நடக்குது?சும்மா இந்த பக்கம் எட்டி பார்க்கலாம் என்று வந்தால் என் பெயரும் இடி படுதே...என்ன நடக்குதுன்னு புரியலையே.//
இது துர்காவா? இல்லை துர்கா பேரில் விளையாடும் தர்காவா??

said...

இதெல்லாம் ஓவரா தெரியல???

Weird பழக்கத்தப் பத்திக் கேட்டா, நல்லவ மாதிரி சீன் போட்டு எஸ்கேப் ஆறீங்களா??

இது கள்ளாட்டம் கள்ளாட்டம்.. இந்த வீட்டுப் பாடத்துல நீங்க தோல்விதான்..

பொற்கொடி டீச்சர்.. சீக்கிரம் வந்து நம் தோழி கைல ரெண்டு அடியப் போடுங்க...

said...

அதுக்குள்ள முப்பது போட்டுட்டாங்களே.. வடிவேலு மாதிரி நீங்க ரொம்ப நல்லவங்க.. அதுனாலத்தான் ப்ளான் பண்ணி தமிழ்மணத்த விட்டு தூக்குறோம் ;)))

said...

//அபி அப்பா said...
நான் வாய் மூடிகிட்டு சிரிச்சுட்டேன். ஏன்னா எங்க ஆஃபீஸ்ல ஆணிபுடுங்கும் போது சிரிச்சா தப்பு:-))) //

அபி அப்பா.. நீங்க அப்போ ஆஃபிஸ்ல வச்சி பதிவு போட மாட்டீங்களா?? உங்கள மாதிரி நாங்களும் எழுதுனா, பதிவு போடும்போதே சத்தம்போட்டு சிரிக்க ஆரம்பிச்சிடுவோமே.. எப்படித்தான் நீங்க சமாளிக்கிறீங்களோ??

said...

aaah home work panni unga kittaye vechirunda? epdi mark poduradhu??

said...

irunga kanla vilakennai oothi padichittu varen!

said...

yabbbbaaa, anjavadhu point varadhukulla mudhal naalu point marandurudhu! :(

home work edho sumara senju irukinga, indhaanga 45/100. ;) (100/100 kudutha adutha dhadavai idhe pola nalla try panna thonadu illingla?)

seat kudutha akkava ithana varusham gnabagam irukka??? aiyoo kadavule, enakku my frienda paatha bayama irukku! naan home work kuduthada innum 2-3 jenmathuku avadhu gnabagam vechurka matinga? :(

said...

apram extrava inoru 5 mark! edhukkuna, 5 pera izhuthu vitrukinga paarunga, adhuku! mrs ambi idhai ellam marandachu :)

said...

@abi appa:
freeya vidunga! paatikku en mela poramai :) adhan pera mathi kuptu paakranga. ana idhuku ellam naan asainjuruvena? :)

said...

aaah, ana ena war flag nu sonnaduku ungluku -6 my friend! ippo kadasila evlo thaan vanguninga? kooti kazhichu sollunga?? :)

said...

z vera rendu adi poda sollirukkaru!
2 enna 4a kuduthruvom, ummmm neetu kaiya! :)

said...

first டீச்சருக்கு பதில் சொல்லிடுவோம்.. ;-)

//aaah home work panni unga kittaye vechirunda? epdi mark poduradhu??//
நீங்கதான் ஈ-மெயில் கொடுக்கலையே டீச்சர்! எப்படிங்க உங்களிடம் கொடுக்குறது?

//yabbbbaaa, anjavadhu point varadhukulla mudhal naalu point marandurudhu! :(//
என் வியாதி உங்களுக்கும் ஒட்டிக்கிச்சா?

//45/100//
இது ரொம்ப குறைவா இருக்கே! அப்போ நான் ஜஸ்ட் பாஸ்தானா?

//(100/100 kudutha adutha dhadavai idhe pola nalla try panna thonadu illingla?)//
100% கொடுத்துட்டு அடுத்த டேக் கொடுங்க.. கலக்கிடுவோம்.. ஹிஹி..

//seat kudutha akkava ithana varusham gnabagam irukka??? //
பின்ன? நன்றி மறப்பது நன்றன்று ...... (பின்னால மறந்துபோச்சு!) பரவாயில்லை.. ஆக மொத்ததுல இதெல்லாம் ஞாபகம் இருக்கும். ;-)

//home work kuduthada innum 2-3 jenmathuku avadhu gnabagam vechurka matinga?//
அப்போ இன்னும் 2-3 ஜென்மத்துக்கு நீங்கதான் எனக்கு டீச்சரா வர போறிங்களா?

//apram extrava inoru 5 mark! //
50%.. யப்பா!!! பாதி கிணறு தாண்டிட்டேன்.. ;-)

//mrs ambi idhai ellam marandachu :)//
அம்பிக்கு ரிமைண்ட் பண்ணிடலாம்.. :-)

//aaah, ana ena war flag nu sonnaduku ungluku -6 my friend!//
ஆஹா. வெள்ளை கொடிதான் காட்டினேன். அதுக்கு -6-ஆ?
அப்போ கருப்பு கொடின்னா?

//ippo kadasila evlo thaan vanguninga? kooti kazhichu sollunga??//
கொடுத்ததையும் கழிச்சிட்டீங்களே மக்கா!!! நீங்க டேக் பண்ண அஞு பேரில் நான்தானே கூட மார்க் எடுத்தேன்? நீங்க ஜியோட மார்க்கை கழிக்கனும்.. அவரு இன்னும் டேக் எழுதலை.. :-P

[ஜி, உங்களுக்கு ஆப்பு காத்திருக்கு! :-P]

//2 enna 4a kuduthruvom, ummmm neetu kaiya! //

இந்தாங்க என் கை.. அடிங்க..
அடி வாங்குறதெல்லாம் சகஜம் எங்களுக்கு!! இதுக்கெல்லாம் நாங்க அசரமாட்டோம் டீச்சரே!! ;-)

said...

@ஜி - Z:

//இதெல்லாம் ஓவரா தெரியல???//
தெரியலைப்பா.. :-P

//Weird பழக்கத்தப் பத்திக் கேட்டா, நல்லவ மாதிரி சீன் போட்டு எஸ்கேப் ஆறீங்களா??//
உண்மையை திருப்பி திருப்பி கேட்டாலும், உண்மை உண்மைதான்.. ;-)

//இது கள்ளாட்டம் கள்ளாட்டம்.. இந்த வீட்டுப் பாடத்துல நீங்க தோல்விதான்..//
உங்களுக்கு கருநாக்கு.. பொற்கொடி டீச்சர் கிட்ட போட்டு கொடுத்துட்டீங்க. கொடுத்த மார்க்கையும் கழிச்சிட்டு போயிட்டார்.. அவ்வ்வ்வ்...

//அதுக்குள்ள முப்பது போட்டுட்டாங்களே.. வடிவேலு மாதிரி நீங்க ரொம்ப நல்லவங்க.. அதுனாலத்தான் ப்ளான் பண்ணி தமிழ்மணத்த விட்டு தூக்குறோம் ;)))//

30 எந்த மூளை.. இதுதான் நாற்பதாவது கமேண்ட்.. தமிழ்மணத்திலிருந்து நான் அஃபிஷியலாக வெளியாகுறேன்.. ஹிஹிஹி.. :-))))

said...

my friend
attendance..
poi padichittu varen.. aiyo nambunga pls.. :)

said...

//அப்பா: இப்போ படிக்கிறது எல்லாம் ஒன்னும் மறக்கலையே?
நான்: படிப்பா? நான் படிக்கிறேனா?
//
அம்மா: இன்னைக்கு ஸ்கூல்ல நீ என்ன படிச்ச?
நான்: நான் என்ன படிச்சன்னு கேட்குறதுக்கு நீங்க யாரு?
//
சூப்பர் :) சான்சே இல்ல :)

பைதபை, ஏன் பேரு அருண். எனக்கு உங்கள கொஞ்ச நாளா தெரியும்.
நானும் வலையுலகத்துல ஓரமா ஒரு கட நடத்துறேன். நீங்க கூட
வந்து படிச்சிர்க்கீங்க... என்னாது ஞாபகம் வரலியா?
அட ஆண்டவா?

said...

//
ஆனாலும் சில சமயங்களில் என்னால் என்னையே கண்ட்ரோல் பண்ண முடியாது. அப்போது எரிமலை வெடித்துவிடும்! அது ஒரு குறுகிய காலத்துக்கு மட்டுமே (சில நிமிடங்கள் or சில மணி நேரம்)..
//
ஒரே ரத்தம்.. ஐ மீன் சேம் பிளட் :)

//
அவர்களை வருத்தப் பட வைக்கக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காக என்னால் முடிந்த வரை செய்துக் கொடுப்பேன். அது வேலை ஆகட்டும், உதவியாகட்டும், பாடமாகட்டும்.. அதுபோலத்தான், இந்த ப்ளாக்கும். ;-)
//
வெரி குட் மை தோழியே வெரி குட்

said...

//
என்னுடைய இந்த வளர்ச்சிக்கு நீங்கதான் காரணம்! நன்றி..
//
ஏ.. இட்ஸ் ஓகே.. இதெல்லாம் எனக்கு சாதாரணம்..
ஓ நீங்க என்ன சொல்லலியா? சரி.. ஹி ஹி ஹி
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா :)


//
அவரை திரும்பவும் பார்ப்பேன், உதவுவேண் என்ற நம்பிக்கை எனக்கு இன்னும் இருக்கு!!!
//
கண்டிப்பா பாப்பீங்க...

said...

நான் ரசிச்சுப்படிச்ச ஒரு அழகான பதிவு My Friend.
மேல வச்சிக்கோங்க (அட அதாங்க keep it up)

said...

//
ஒரு அழகான நதி இதமாய் பாய்ந்து ஓடுவது போல இருந்தது நீங்க எழுதின விதம். வாழ்த்துக்கள்.
//

நான் இதை வழிமொழிகிறேன் !!!

said...

yerkanave 47 run vandhu thatunaala naan oru 50 adichitu aarambikiren :)

said...

49

said...

50...ini aarambipom...start meejic :)

said...

enna oru nyabaga maradhi...vaazha...nyabaga maradhi oru varam-nga...ella gyabagam irundha payithiyam pudichidum :)

said...

//அம்மா: இன்னைக்கு ஸ்கூல்ல நீ என்ன படிச்ச?
நான்: நான் என்ன படிச்சன்னு கேட்குறதுக்கு நீங்க யாரு?
//...LOL :)

said...

//நான் என்ன சொல்ல வர்றேன் என்றால், நான் கோபம் கொண்டாலும், சீக்கிரமே தனிந்துவிடுவேன், இதை மனதில் வைத்து பிரச்சனைகளை பெரிது படுத்த வேண்டாம். நன்றி.. ;-)//....romba theliva solli irukeenga...idhuku appuram kova pada mudiyuma...peridhu paduthala :)

said...

//மற்றவர்கள் டைம் பிரகாரம் நம் முன் வந்து மியூசிக்குடன் நாம் என்ன செய்ய வேண்டும் என சொல்வார்களா?)
[யப்பா!!! என்ன மூளை!!! உன்னால மட்டும் எப்படி இப்படியெல்லாம் யோசிக்க முடியுது, .::மை ஃபிரண்ட்::.!!!!] ///...adhe dhaanga...naan kooda ketkanumnu nenachen...eppadi andha computer room-la utkaardhu yosipeengala :)

said...

//அப்படி என்னால் அவருக்கு உதவ முடியும் என்றால் கண்டிப்பாய் உதவுவேன்.. வந்துவிடுவேன் (மறந்துவிடுவேன்)...//...aaha...good policy-nga...senti-ya potuteenga....ippadiye iruka vaazthukal :)

said...

super wierd-unga...ellathayum appadiye maintain pannunga :)

said...

ippadiki ivlo dhaan...meethi nesht post-ku...

said...

adhanaala naan oru 60 oda poyidaren :)

said...

okie dhaane :)

said...

60...appalika varen :)

said...

attendance first

said...

//என்ன கடுப்போ தெரியலை! போர் கொடியை தூக்கிட்டு நிக்குறாங்க..//

enadhu kaduppu vandhaa போர் கொடியை தூக்கிட்டு நிக்குறாங்க'la??
aiyo indha aatam nalla irrukey....

//பார்க்கும்போதே எனக்கு கண்ணெல்லாம் கூசுது. உங்களுக்கு கூசலையா?)//

illai'ey kastapattu Gasoline vaaangi irruken.. kooosu'na insurance'la claim pannuvom.'la..

said...

//யாருடா இப்படிப்பட்ட தலைப்புகளையெல்லாம் கொண்டு வர்றது?)
//

sathyama naan illa, u jst cary on....

said...

//இது எனக்கு பலமா பலவீனமான்னு தெரியலை. //

sathyama பலவீனமான balam'nu naaan sollala...

//யாரு?
அவ்வளவுதான்! அம்மாவும் அப்பாவும் தலையில் துண்டு போட்டுட்டு போயிட்டாங்க. //
LOL...

//சில நிமிடங்களில் யாரிடமோ ஏதோ பேசினோம் என்று தெரியும். ஆனால், யார், என்ன மேட்டர்ன்னு சுத்தமா ஞாபகமே வராது! //

alo vanakkam'nga , en blog peru pakkatamilan'nga.. ippadi'nu ungalluku adikadi naan vandhu reminder kodunkanum'galaa?

//போன்ல, கணிணில ரிமைண்டர் வச்சிருப்பேன். ஆனால், பல சமயங்களில் ரிமைண்டர் ஒன்னு இருக்குன்னே மறந்துடுவேன்.

aahaaa, idha ellam therinchey thaaaan seireeeengala?
(vadivel style'la padinga..)

said...

//கோபம்
அப்பன் எட்டடி பாய்ஞா பிள்ளை பதினாரடி பாயும்ன்னு பெரியவங்க சொல்லுவாங்க.. //

nalla velai naan high jump veeraanganai'nu slip aaagiten konjam..

said...

//என்னுடைய பல நண்பர்களிடம் எனக்கு கோபம் வரும்ன்னு நீங்க போய் சொன்னா, அவங்க நம்பவே மாட்டாங்க.//

u mean ( kadal meen illai'nga) saadhu thol pothia kovam 'kaaranga?
(puriaati kelunga solluren)

said...

//என்னை முழுவதுமாய் ஆட்கொண்டதால் கோபத்தையும் கோபப்பட காரணமான அந்த காரணங்களையும் மறந்துவிடுவேன். (இதனால், ஞாபக மறதி இருப்பது பலமே!!) //

idhu top'u... its gud to be.... sumtimes....

said...

//இதுனால் நான் என்ன சொல்ல வர்றேன் என்றால், நான் கோபம் கொண்டாலும், சீக்கிரமே தனிந்துவிடுவேன், இதை மனதில் வைத்து பிரச்சனைகளை பெரிது படுத்த வேண்டாம். நன்றி.. ;-)
//

point noted... no dension..

konjam siringa plz...

said...

//நான் சொல்லும் இயந்திர வாழ்க்கை: இயந்திரங்களை நம்பி வாழும் வாழ்க்கை.//

neeenga remba mooooolgiteeenganu ninaikiren.......

//யப்பா!!! என்ன மூளை!!! உன்னால மட்டும் எப்படி இப்படியெல்லாம் யோசிக்க முடியுது, .::மை ஃபிரண்ட்::.!!!!] ;-) //

aaamaa aaaamaa என்ன மூளை!!! என்ன மூளை!!! , nalla idea'va thaaan irruku...
(idhuku thaaaan computer'a pakkathula keeping'a)

said...

//அவர்களை வருத்தப் பட வைக்கக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காக என்னால் முடிந்த வரை செய்துக் கொடுப்பேன். அது வேலை ஆகட்டும், உதவியாகட்டும், பாடமாகட்டும்.. அதுபோலத்தான், இந்த ப்ளாக்கும். ;-) //

ketkavey nalla irruku...
ungalukku oru Gudmorning teacher ok....

said...

//பிறர் நமக்கு செய்த உதவியை என்றென்றும் மறக்க கூடாதுன்னு!
அதனாலே நான் வெகு சுலபமாய் மற்றவர்களிடம் உதவி கேட்க மாட்டேன்//

kandipaaaa.

kaaalathinaaal seidha udhavi seridheninum...oru thirukural koooda irruku.. :))

//அவரை திரும்பவும் பார்ப்பேன், உதவுவேண் என்ற நம்பிக்கை எனக்கு இன்னும் இருக்கு!!!
//

touching touching....

said...

//மத்தவங்க ஏதாவது துப்பிறதுக்கு இருந்தா, கீழே துப்பிட்டு போலாம். :-)
அட..//

cha cha ennanga ippadi nalla eludhitu last'la ippadi solliputeeenga neeenga..

said...

thuppaaa maatom naaanga...

said...

74 aana

said...

75 pottu povom..

varta varta

said...

/என்னுடைய பல நண்பர்களிடம் எனக்கு கோபம் வரும்ன்னு நீங்க போய் சொன்னா, அவங்க நம்பவே மாட்டாங்க. (நிஜமா!!) //

நானும் அதே ரகம் தான் மை பிரண்ட்

said...

/அளவு அவருடைய மூனு வயது மகளை (என்னைபோல் ஒவ்வொரு முறையும் பிரேக் போடும்போது முன்னே விழுந்து எழுந்திருச்சி வந்தாள்) பிடித்துக்கொண்டேன். என்னால், அதை தவிர்த்து வேறெதுவும் உதவ முடியவில்லை.//

இந்த அளவுக்கு நல்ல பெண்ணா உலகத்துல, மை பிரண்ட்..

அவ்வ்வ்வ்வ்வ்வ்

said...

//3- பி.மு.க தல கார்த்திக்//

மன்னிச்சுக்கோங்க மைபிரண்ட்... நான் ஏற்கனவே இந்த டேக் பதிவைப் போட்டுட்டேங்க

said...

//எனக்கு என்னவோ என்னைவிட நீங்க தான் வை.கோவுக்கு ரொம்ப நெருக்கமுன்னு நினைக்குறேன்... //

எத வச்சு கோபி இப்படி சொல்லுற!!!

said...

//\\ சூடான் புலிகேசி.. ச்சீ புலி சிவா\\

அட சூப்பர் ஆளை தான் புடிச்சு போட்டுயிருக்கீங்க... //

என் மேல அப்படி என்ன கொலவெறி உனக்கு!!!

said...

//எப்படிங்க உங்க மூளைக்கு இப்படிப்பட்ட ஐடியாவெல்லாம் தோணுது?//

எல்லாம் ஊருக்குள்ள சுத்திக்கிட்டு இருக்கும் ஆல் இன் ஆல் அழகுராஜா வ பார்த்து தான்....

said...

//புலிகூட 4 புல்லுதான் சாப்பிட்டுருக்கு!! ரொம்ம ஆணியோ? //

உடம்பையும் மனசயையும் தேற்ற ரிலாக்ஸ் பண்ண போயிட்டேன், அதான்...

said...

//வாங்க ராமநாதன். முதல் வருகைபோல் இருக்கு! இனி அடிக்கடி வாருங்கள். :-)//

ராம்ஸ் உங்களை பற்றி சரியா தெரியாம வாங்கனு புன்னகையுடன் அழைக்குறாங்க.... கஷ்டம் தான் இனி அவங்கப்பாடு.....

said...

super myFriend. Arumaya ezhudhu irukkinga.

//ஞாபக மறதி//
neenga solra madhiri sila samayam idhu bliss dhan. Ana enakku marakka vendiyadhu marakkadhu, adhan prachani.

//என்னுடைய பல நண்பர்களிடம் எனக்கு கோபம் வரும்ன்னு நீங்க போய் சொன்னா, அவங்க நம்பவே மாட்டாங்க//
same pinch. Enakkum idhe dhan. Romba close anavanga kitta dhan ekkachakka kobam varum. Avanga kitta dhan namakku expectations adhigam irukkum. Adhunala dhan.

//இயந்திர வாழ்க்கை//
//இதில் முக்கியமாய், எப்போதுமே கணிணி என் கூடவே இருக்கவேண்டும்.//
Konjam kurachikkonga myFriend.. Naanum 3 years munnadi appadi dhan irundhen. Engayavadhu computer illadha idathula vitta paithiyam pidicha madhiri ayiduven. Appuram forcible ah mathikitten. Outdoor activities adhigamakkunga.

said...

//யப்பா!!! என்ன மூளை!!! உன்னால மட்டும் எப்படி இப்படியெல்லாம் யோசிக்க முடியுது, .::மை ஃபிரண்ட்::.!!!!]//
adhene??? Eppadi myFriend :)


// செய்வதை திருந்தச் செய்தல்
எனக்கு ஒரு பழக்கம் இருக்குங்க.. //
unga bloge idhukku satchi..

//அவரை திரும்பவும் பார்ப்பேன், உதவுவேண் என்ற நம்பிக்கை எனக்கு இன்னும் இருக்கு!!! //
ivlo nallavangala neenga..

said...

// யாருக்கு உதவி தேவைப் பட்டாலும் நான் முதல் ஆளாய் போய் நிற்பேன். //

myFriend... Avasarama oru $1000 thevai padudhu. Ungala thavira yaar kitta keppen!

said...

சொன்ன வேலையை லேட்டாச் செஞ்சாலும் வெயிட்டாச் செஞ்சுட்டோம்ல்ல.. வந்துப் பாருங்கம்மா :-)

http://chennaicutchery.blogspot.com/2007/03/5.html

said...

hi my friend
First time in your blog..
arumaiyaga ezhuthi irukkenga..
enaku kooda kovam niraya varum...
hmmm

said...

\\நாகை சிவா said...
//எனக்கு என்னவோ என்னைவிட நீங்க தான் வை.கோவுக்கு ரொம்ப நெருக்கமுன்னு நினைக்குறேன்... //

எத வச்சு கோபி இப்படி சொல்லுற!!!\\

உனக்கும் (புலி) அவருக்கும் தான் (வை.கோ) தொடர்ப்பு இருக்குன்னு ஊரே சொல்லுதே ;-)))))

said...

90

said...

91

said...

92

said...

93

said...

94

said...

ரொம்ப நாளாச்சு இந்த ஒண்ணு ரெண்டு சொல்லி, மை பிரண்ட்

said...

96

said...

97

said...

98

said...

யாருப்பா அது.. சோடா கொடுங்க.. 100 போடப்போறோம்ல

said...

ஸ்டாப்.. ஸ்டாப்.. பிரியாணியும் அப்படியே கொண்டுவாங்கா. நாட்டுக்கோழி பிரியாணிப்பா..

வாழ்த்துக்கள் மை பிரண்ட்.. 100 பின்னூட்டம் வாங்கியாச்சு போல

said...

ஒரு தலைவரா இருந்து இதைக்கூட செய்யலைனா எப்படி, மை பிரண்ட்!

வாழ்க வளர்க!

said...

@Arunkumar:

//பைதபை, ஏன் பேரு அருண். எனக்கு உங்கள கொஞ்ச நாளா தெரியும்.
நானும் வலையுலகத்துல ஓரமா ஒரு கட நடத்துறேன். நீங்க கூட
வந்து படிச்சிர்க்கீங்க... என்னாது ஞாபகம் வரலியா?
அட ஆண்டவா?//

கவலை படாதீங்க.. இருக்கவே இருக்கு கூகல் ரீடர். ;-)

//ஒரே ரத்தம்.. ஐ மீன் சேம் பிளட் :)//

O+ -aa?

//ஏ.. இட்ஸ் ஓகே.. இதெல்லாம் எனக்கு சாதாரணம்.. ஓ நீங்க என்ன சொல்லலியா? சரி.. ஹி ஹி ஹி
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா :)//

:-)))

//நான் ரசிச்சுப்படிச்ச ஒரு அழகான பதிவு My Friend.
மேல வச்சிக்கோங்க (அட அதாங்க keep it up)//
நீங்க இந்த பதிவை ரசிச்சு படிச்சிருக்கீங்கன்னு பார்பதுக்கு ரொம்ப ச்ந்தோஷமா இருக்கு. :-)

said...

@Bharani:

//yerkanave 47 run vandhu thatunaala naan oru 50 adichitu aarambikiren :)//
கடமைப் பற்று உங்களுக்கு கொஞ்சம் ஜாஸ்திதான். ;-)

//nyabaga maradhi oru varam-nga...ella gyabagam irundha payithiyam pudichidum :)//
நன்றி.

//romba theliva solli irukeenga...idhuku appuram kova pada mudiyuma...peridhu paduthala :)//
உங்களுக்கு ரொம்ப பெரிய மனசுங்க. :-)

//adhe dhaanga...naan kooda ketkanumnu nenachen...eppadi andha computer room-la utkaardhu yosipeengala//
சில சமயங்களில் எனக்கும் பதிலா கம்பியூட்டரே யோசிச்ச்சிடும்.. நானும் என் கம்பியூட்டரும் விட்டுக் கொடுத்துக்குவோம்.

//ippadiye iruka vaazthukal :)//
நன்றி பரணி

said...

@My days(Gops):

//enadhu kaduppu vandhaa போர் கொடியை தூக்கிட்டு நிக்குறாங்க'la??//

போர்கொடின்னு போட்டதாலே திரும்பவும் கடுப்பாகி கொடுத்த மார்க்கை குறைச்சுட்டாரே!

//illai'ey kastapattu Gasoline vaaangi irruken.. kooosu'na insurance'la claim pannuvom.'la..//
:-P

//sathyama naan illa, u jst cary on....//
அது தெரியுமே!

//sathyama பலவீனமான balam'nu naaan sollala...//
ரொம்பவே குழப்புரீங்க.. ;-)

//alo vanakkam'nga , en blog peru pakkatamilan'nga.. ippadi'nu ungalluku adikadi naan vandhu reminder kodunkanum'galaa?//
மறக்காமல் வவந்து நினைழு படித்திடுங்க. அப்புறம் உங்க ப்லாக் பக்கம் வரலைன்னா கோபிச்சுக்கக் கூடாது. ஓகே?

//u mean ( kadal meen illai'nga) saadhu thol pothia kovam 'kaaranga?
(puriaati kelunga solluren)//
உண்மையிலேயே புரியலை. கொஞ்சம் மீனிங் சொல்லிட்டு போங்க!

//(idhuku thaaaan computer'a pakkathula keeping'a)//
ஹாஹா.. ஆமாம்.. ;-)

75 அடிச்ச கோப்ஸ்க்கு நன்றி. :-)

said...

@மு.கார்த்திகேயன்:

//இந்த அளவுக்கு நல்ல பெண்ணா உலகத்துல, மை பிரண்ட்..

அவ்வ்வ்வ்வ்வ்வ்//

கைப்புள்ள ஸ்டைல் சூப்பர். ;-)

//மன்னிச்சுக்கோங்க மைபிரண்ட்... நான் ஏற்கனவே இந்த டேக் பதிவைப் போட்டுட்டேங்க//
பரவாயில்லை. மீதி 4 பேர் மட்டும் எழுதட்டும். ;-)

@நாகை சிவா:

//ராம்ஸ் உங்களை பற்றி சரியா தெரியாம வாங்கனு புன்னகையுடன் அழைக்குறாங்க.... கஷ்டம் தான் இனி அவங்கப்பாடு.....//

இதுல ஏதாவது உள்குத்து இருக்கோ புலி?

said...

@Priya:

//super myFriend. Arumaya ezhudhu irukkinga. //
நன்றி ப்ரியா

//Konjam kurachikkonga myFriend.. Naanum 3 years munnadi appadi dhan irundhen. Engayavadhu computer illadha idathula vitta paithiyam pidicha madhiri ayiduven. Appuram forcible ah mathikitten. Outdoor activities adhigamakkunga.//
ரொம்பவே கஷ்டம் ப்ரியா.. என் வவாழ்க்கையே இதிலேதான் ஓடிட்டிருக்கு. :-(

//unga bloge idhukku satchi..//
ஹீஹீஹீ..

//ivlo nallavangala neenga..//
:-)

//myFriend... Avasarama oru $1000 thevai padudhu. Ungala thavira yaar kitta keppen!//
$1000 அனுப்பி வச்சேனே! கிடைச்சதா ப்ரியா?

@தேவ் | Dev:
//சொன்ன வேலையை லேட்டாச் செஞ்சாலும் வெயிட்டாச் செஞ்சுட்டோம்ல்ல.. வந்துப் பாருங்கம்மா :-)//

இதோ வர்ரேன் தேவ்..

said...

@dubukudisciple said...
//hi my friend
First time in your blog..
arumaiyaga ezhuthi irukkenga..
enaku kooda kovam niraya varum...//
வாங்க டுபுக்கு டிசிப்பள்.
நன்றிங்க.. உங்களுக்குமா?

@மு.கார்த்திகேயன்:

//ஸ்டாப்.. ஸ்டாப்.. பிரியாணியும் அப்படியே கொண்டுவாங்கா. நாட்டுக்கோழி பிரியாணிப்பா..

வாழ்த்துக்கள் மை பிரண்ட்.. 100 பின்னூட்டம் வாங்கியாச்சு போல//

உங்க பாசத்துக்கு அளவே இல்லை தல. நன்றி. யாருப்பா அங்கே? ஒரு ஸ்பெஷல் பிரியாணி பார்ஸல் பண்ணி தம்பி கார்த்திக்கு ஓஹியோக்கு அனுப்பிடுங்க.. ;-)

Anonymous said...

ஹஹி ஹி சுவாரசியமான ஆ்ளு தான் நீங்க