Tuesday, June 17, 2008

தசாவதாரம் - ஒரு அறிவியல் ஆராய்ச்சி


இந்த படத்தை பற்றி எழுத இன்னும் கொஞ்சம் இருக்கு. கொஞ்சம் சைண்டிஃபிக் டியோரிக்குள்ளே போவோம். இந்த படம் முழுதும் Chaos Theory ~ Butterfly Effect பற்றிதான்னு சொல்லியிருக்கார். இதுக்காக ஒரு வண்ணத்துப்பூச்சி பறந்து போறது மாதிரி க்ராஃபிக்ஸ் பண்ணது எல்லாம் சின்ன பிள்ளை தனமால இருக்கு. ஆனால், கமலோட புத்திசாலித்தனம் இதுல எங்கே வருதுன்னா.. கதைக்கு திரைக்கதை எல்லாம் பண்ணின பிறகு.. இல்ல கதை போன போக்குல போன பிறகு.. கதையை Chaos Theory-ஐ கதை கருவோடு மேட்ச் ஃபிக்ஸிங் செய்திருக்கார். சுருக்கமா சொன்னால் இந்தியாவில் ஒரு பட்டாம்பூச்சியின் சிறகடிப்பு.. அமேரிக்காவில் சூறாவளியை உண்டாக்கலாம் (!!).

ஆனால் இந்த டியோரியை சரியா சொல்லிய படம் அந்நியன். யாரோ எங்கேயோ பண்ற தப்பு.. வேற யாரையோ சாக அடிக்கலாம். அப்படிங்கிறதை விக்ரமோட குட்டி தங்கச்சி சாகுற காட்சியில் நல்லாவே சொல்லியிருப்பாங்க (நன்றி சுஜாதா). ஒரு மாதிரியான சங்கிலி தொடர் (நிகழ்ச்சி)தான் இதுவும்.

[The flapping of a single butterfly's wing today produces a tiny change in the state of the atmosphere. Over a period of time, what the atmosphere actually does diverges from what it would have done. So, in a month's time, a tornado that would have devastated the Indonesian coast doesn't happen. Or maybe one that wasn't going to happen, does. (Ian Stewart, Does God Play Dice? The Mathematics of Chaos, pg. 141)]

ஒரு சின்ன எடுத்துக்காட்டு... எங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னா எனக்கு கவலையாய் இருக்கும். ஆபிஸ்ல வேலை ஓடாது. நான் வேலை செய்யலைன்னா என் டீம் மெம்பர்ஸும் வேலை செய்ய மாட்டாங்க.. (இல்லாட்டியும்... :-))).. அதனால ப்ராஜெக்ட் மேனேஜர் டென்ஷன் ஆவாரு. அவரு டென்ஷன் ஆனா அவரு பொண்டாட்டியை திட்டுவாரு. பொண்டாட்டி அவங்க ஆபிஸ்ல சரியா வேலை செய்யாமல் இருப்பாங்க/ இருக்கலாம். அவங்க ஆன்சைட் டேமேஜர் டென்ஷன் ஆகலாம். அதுனால யாரோ ஒரு அமேரிக்கன் கோபப்படலாம். எங்கேயோ இருக்கிற எங்க அம்மாவுடைய ஹெல்த் வேற எங்கேயோ பார்த்தால் ஒன்னுக்கொன்னு சம்பந்தம் இல்லாதவங்கலா இருப்பாங்க. இந்த 10 கமல்களும் யாரும் ரத்த சம்பந்தம் கிடையாது. 10 பேரும் வேற வேற இடத்துல இருக்கிறவங்க. இங்கேதான் இருக்கு கமலுடைய புத்திசாலித்தனம். Of course Sujatha was with him to back him with Tech-knowledgy.

Chaos Theory-ஐ கொஞ்சம் ஆழமா பார்த்தால் என்ன சொல்லுது? any dynamic system.. நம்ம சமூதயத்தை இல்ல ஒரு ப்ராஜெக்ட் டீம் இல்ல ஒரு க்ரிக்கேட் டீம் இல்ல ஒரு உலகத்தையே எடுத்துக்குவோமே.. இது எல்லாமே டைம் மாற மாற அதோட 'state'.. ஹ்ம்ம்.. எப்படி சொல்லலாம்? இயல்பும் மாறிக்கிட்டே இருக்கும். ஆனால் இந்த இயல்பின் மாற்றங்கள் எல்லாமே அந்த சிஸ்டத்துக்கு இருக்கிற ஆரம்பக் கால கண்டிஷன்ஸை பொருத்துதான் இருக்கும். இந்த கண்டிஷன்ஸ் மாற மாற.. 'State'-உம் கண்ணா பிண்ணான்னு (random) மாற வாய்ப்புகள் இருக்கு. கடைசி ஓவர்ல ஹர்பஜன் வந்து நாலு சிக்ஸ் அடிக்கிறது போலத்தான். It's depends on latest pitch condition, top order batsmen's score and so on. ஆனால் அந்த முதல் கண்டிஷன் எப்படி செட் ஆகுதுன்னு எல்லாம் இப்ப கேட்க கூடாது. அதுதான் கடவுள் அல்லது இயற்கையின் விளையாட்டு. இதைத் தான் படத்தோட main theme-ஆ எடுத்திருக்காங்க.

இந்த படத்தின் மூலமா அவர் என்ன சொல்ல வர்றாருன்னு பார்த்தால், இதுதாங்க என்னோட சிற்றறிவுக்கு எட்டுனது. விஷயம் தெரிஞ்சவங்க என்னை திருத்தலாம்.

12-ஆம் நூற்றாண்டுக்கும் 21-ஆம் நூற்றாண்டுக்கும் உள்ள கணேக்ஷன்:

12-ஆம் நூற்றாண்டில் இரண்டாம் குலோத்துங்க சோழன் தூக்கி கடலில் போட்ட சிலை கடலுக்கடியில் இருக்கும் ப்லேட்ஸ்களை (பூமியின் அடித்தட்டுகள்ன்னு சொல்லலாமா?) டிஸ்டர்ப் பண்ணதால கொஞ்சம் கொஞ்சமாக மாற்றங்கள் ஏற்ப்பட்டு 21-ஆம் நூற்றாண்டில் ஒரு சுனாமியா உருவாகுது - Butterfly Effect! (21-ஐ புரட்டி போட்டால் 12.. அட அட அட என்ன கண்டுப்பிடிப்பு!). சோழன் தூக்கி போட்ட சிலை கடலுக்கடியில் இருக்கும் ப்ளேட்ஸ்களை டிஸ்டர்ப் பண்ணியிருக்கலாம் (Butterfly effect!Theory of Plate Tectonics). இதுவே 21-ஆம் நூற்றாண்டில் மாபெறும் சுனாமிக்கு காரணமாய் இருந்திருக்கலாம். இந்த சுட்டியை பார்த்தால் இன்னும் கொஞ்சம் விளக்கங்கள் கிடைக்கும். இதை பற்றியும் கமல் ஒரு இடத்துல சொல்லுவார்.

http://en.wikipedia.org/wiki/Plate_tectonics

Butterfly effect + Chaos Theory விரிவாக:

- 10 கேரக்டர்கர்களில் ராமனுஜத்தை தவிர்த்தால், 9 பேரும் 21-ஆம் நூற்றாண்டில் இருக்காங்க. 9 கமல்களும் வெவ்வேறு இடங்களில் இருக்காங்க. இந்த இரண்டு theories-உம் கொஞ்சம் புரிஞ்சிக்கிட்ட பிறகு படத்தோட திரைக்கதையை பார்த்தால்.. Yes, It's world class!

- 12-ஆம் நூற்றாண்டில் சோழன் சிலையை தூக்கி கடலில் போடுறாரு ( இது எல்லாம் உண்மையா பொய்யாங்கிறது வரலாறு தெரிஞ்ச புண்ணியவர்கள்தான் சொல்லணும்). மேலே சொன்னது போல ப்ளேட்ஸ் டிஸ்டர்ப் ஆகியிருக்கலாம். இந்த டைனமிக் மாற்றங்கள் நடைப்பெறுவதுக்கு பல பல வருஷங்கள் எடுத்திருக்கு. இப்போ வர்றாரு இந்த நூற்றாண்டு கமல் கோவிந்த் & கோ. எதையோ கண்டுபிடிக்க போய் ஒரு மிகப் பெரிய அபாய வைரஸை கண்டுபிடிச்சிருக்காரு. அவரோட டீம்லேயே இருக்கிறவங்க அதை கெட்டவங்களுக்கு விற்க முயற்சி பண்றாங்க. கோவிந்தை காப்பாத்த வந்த யூகாவுக்கும் ஃப்லேட்சருக்கும் நடுவில் நடக்கும் சண்டையில் யுகா கொல்லப்படுகிறார். யூகா சீனக் கமலின் மகளானதால் அவர் கோவிந்தை கொலை பண்றதுக்காக தேட ஆரம்பிக்கிறார். அதே நேரத்தில் அந்த Vial (வைரஸ்) இந்தியாவுக்கு வந்து சேர துரத்தல் தொடர்கிறது. கமல் பால்ராம் இந்த கேஸை இன்வெஸ்டிகேட் பண்றாரு. அவரோட கேர்லெஸ்ஸினால் கமல் ப்லேட்சர் கோவிந்தை கடத்துறார். எப்படியோ தப்பிச்ச கோவிந்த் அந்த வைரஸ் கிருஷ்ணவேணி பாட்டிக்கு கிடைத்து தெரிஞ்சு அவரை தேடி போகிறார். பாட்டி அதை பெருமாள் சிலை உள்ளே போட்டுடுறாங்க. துரத்தல் சோழ மண்டபம் வரை தொடர்கிறது. சந்தான பாரதி & கோ அங்கே மணல் கொள்ளை பண்ணிட்டு இருக்காங்க. மணல் கொள்ளையை தடுக்க கமல் பூவராகன் அங்கே வர்றார். இவரால் (இவரை அறியாமல்) கோவிந்த் தப்பிக்கிறார். ஆனால் வழியிலே ஒரு முஸ்லிம் குடும்பத்து வேனுடன் விபத்துக்குள்ளாகிறார். கோவிந்த் கமல் கலிபுல்லா கான் குடும்பத்துக்கு உதவ, கலிபுல்லா கான் கோவிந்துக்கும் உதவுகிறார். இப்போ உள்ளே வர்றார் அவ்தார் சிங். இவரோட கேன்ஸர்ன்னு ஒரு ஐஸ் பெட்டி நிறய மருத்துவர் மருந்துகள் கொடுக்கிறார். பெட்டி கோவிந்துடைய பெட்டியோடு மாறுகிறது. புஷ் அவருடைய பவரை பயன்படுத்தி அனுப்பட்ட courier விமானத்தை திரும்ப அமேரிக்காவுக்கே வரவழைத்திருந்தால் ஃப்லேட்சர் அப்பவே கோவிந்தை கொன்றிருப்பான். கதை இந்தியா வரை பயனப்பட்டிருக்காது. கோவிந்துக்கு அந்த வைரஸை கொல்ல NaCl தேவைப்படுது & கடல் NaCl-ஆல் நிறைந்திருக்கிறது. இதே கடல்தான் 12-ஆம் நூற்றாண்டில் பெருமாள் சிலையினால் கடலுக்கடியில் உள்ள ஃப்ளேட்டுகள் மாற்றமடைந்து சுனாமியை உருவாக்குது.

இந்த கடவுள் / சக்தி இருக்கா இல்லையா? இது ஏன் இப்படி நடக்குது? கடவுள் எதாவது பண்ணலாமே? ஏன் சுனாமி வருது?

அசினுக்கு 'பெருமாள்தான் எல்லாத்தையும் காப்பாத்துறார்'..
கமலுக்கு இது 'Chaos Theory'
ஆதிக்கவாதிக்கு இது எல்லாம் பெருமாளோட வேலை
நாத்திகவாதிக்கு இது Pure Science.. Butterfly effect.

யப்பா சாமி, தலை சுத்துது. Hats off to கமல்.. பாஸ், நீங்க பண்ணின கதை, திரைக்கதையிலேயே இதுதான் பெஸ்ட்டூ. ஆனால் நீங்க பண்ணின screen presenceல இது அவ்வளோ நல்லா இல்ல. சுஜாதா உங்க கூட இருந்திருந்தால் இன்னும் விஷயத்தை சிம்பளா சொல்ல முயற்சித்திருக்க முடியும். B & C செண்டர் மக்களுக்கு இது எந்த அளவுக்கு போய் சேறும்ன்னு தெரியல. நிறைய விஷயங்களை உள்ளே கொண்டு வந்து ரொம்ப காம்ப்லேக்ஸா திரைக்கதை பண்ணியிருக்கீங்க. Einstein சொன்னது போல "An Intelligent fool can make things bigger, more complex, and more violent. It takes a touch of genius -- and a lot of courage -- to move in the opposite direction". உங்களை கலைஞானி, உலக நாயகன்னு சொல்றாங்க. அதுக்காக உங்களை இண்டலிஜெண்ட் ஃபூல்ன்னும் சொல்லல. இன்னும் பெட்டரா நீங்க பண்ணியிருக்க முடியும்ன்னு தோணுது. ஒரு பெரிய அட்வாண்டேஜ் என்னன்னன்னா நிறைய பேர் இப்போ Chaos Theory, Butterfly effect படிக்கிறாங்க. என்னையும் சேர்தது.

ரவிவர்மன் அவரோட வேலை சூப்பரா செஞ்சிருக்கார் ( ரோபோக்காக காத்திருக்கேன்). கலை இயக்குனர், எடிட்டர், BGM கம்போசர் தேவி ஸ்ரீபிரசாத் (பேசாமல் இவரே படம் முழுதும் இசையமைச்சிருக்கலாம்), க்ராஃபிக்ஸ் வேலைகள் (சென்னையில என் நண்பன் ஆபிஸ்லதான் பண்ணாங்க).

மை ஃபிரண்ட், இதையும் compile பண்ணி உங்க ப்ளாக்லேயே போடுறீங்களா? முடியுமா? ஏனென்றால், நீங்கதான் நல்லவங்க, வல்லவங்க, நாலும் தெரிஞ்சவங்க.

பி.கு: என்ன முழிக்கிறீங்க மக்களே? இந்த பதிவும் நான் எழுதலை. நண்பர் ஷோபன் எழுதிய பதிவுதான் இது. நாலும் தெரிஞ்சவங்கன்னு என்னை பார்த்து சொல்றார். ஆனால், இவரைப் போல் படத்தை இந்த அளவுக்கு என்னால் அலச தெரியலை. ஆனால், அவர் சொல்றது chaos theory, butterfly effect எல்லாம் இப்படியெல்லாம் வேலை செய்யுதான்னு இப்ப யோசிக்க தோணுது. பலர் ப்ளாக்ல 12-ஆம் நூற்றாண்டின் நம்பிக்கும் 21-ஆம் நூற்றாண்டின் கோவிந்துக்கும் என்ன சம்பந்தம்ன்னு கேள்வி மேலே கேள்வி கேட்குறாங்க. அதுக்கு பதிலும் கொடுத்துட்டார் தோழர்.

31 Comments:

said...

hai anu,

//யப்பா சாமி, தலை சுத்துது.//

repeat.

said...

hai,
naan innum padamey paakalai, adukulla ivlooooooooooooooooooo
periya vimarsanamaa?

said...

hai naan than phastu

said...

hai anu,

ellam sari ivolo porumaiyaai indha post potaduku unaku HATS OFF

said...

hai
appa modal muraiyaai 5 potaachu
naan aparam varen kummiku.

said...

interesting analysis.. not to be just smiled off, considering kamal's reputation on symbolism..

i will see the movie again to watch closely..

said...

//... எங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னா எனக்கு கவலையாய் இருக்கும். ஆபிஸ்ல வேலை ஓடாது. நான் வேலை செய்யலைன்னா என் டீம் மெம்பர்ஸும் வேலை செய்ய மாட்டாங்க.. (இல்லாட்டியும்... :-))).. அதனால ப்ராஜெக்ட் மேனேஜர் டென்ஷன் ஆவாரு. அவரு டென்ஷன் ஆனா அவரு பொண்டாட்டியை திட்டுவாரு. பொண்டாட்டி அவங்க ஆபிஸ்ல சரியா வேலை செய்யாமல் இருப்பாங்க/ இருக்கலாம். அவங்க ஆன்சைட் டேமேஜர் டென்ஷன் ஆகலாம். அதுனால யாரோ ஒரு அமேரிக்கன் கோபப்படலாம். //
:-)

ஆராய்ச்சி யெல்லாம் பலமாத்தான் இருக்கு.. உங்க பதிவ மறுபடியும் படிச்சி ஆராய்ச்சி பன்னாதான் முழுசா புரியும்...

ஆமா.. ஷோபன் emailid கிடைக்குமா? ரோம்ப நல்லவரா இருக்காரே..அதான்.

said...

எனக்கு தெரிஞ்சு ஒரு பிளேட் டெக்னிக் இருக்கு, பிளேட்ல கறி போட்டு பிளேட்டை தரையில் தட்டினா சத்தம் கேட்டு நாய் ஓடிவரும்...

said...

இப்போ இவரு இன்னா தான் சொல்ல வராரு? நேத்து படத்தை அநியாயத்துக்கு வாரினார். இன்னைக்கு ஆராய்ச்சி பண்ணி கொஞ்சம் ஆஹா ஓஹோ கொஞ்சம் கம்ல் அத்த பண்ணி இருக்கார்.. இத்தப் பண்ணி இருக்கார்னு அளந்து விடறார்... ஒண்ணும் புரியல... அக்கா அனு அக்கா.. பதிவு போட்ட உங்களுக்காவது எதுனா புரிஞ்சதா? :(
ஆள் வச்சி பதிவு எழுதி போடறிங்களா? :)

said...

ஷோபன் சார்..அறிவியல் ஆராய்ச்சி சூப்பர்..நன்றாக விளக்கியிருக்கிங்க..அதுக்காக உங்களுக்கு என்னோட மனமார்ந்த பாராட்டுக்கள் ;))

\\இப்போ உள்ளே வர்றார் அவ்தார் சிங். \\

அவ்தார் சிங் ஃப்லேட்சரை தப்பிக்க வைக்க முன்பே விமானநிலைத்தில் வந்துடுவார் ;)

\\யப்பா சாமி, தலை சுத்துது. Hats off to கமல்.. பாஸ், நீங்க பண்ணின கதை, திரைக்கதையிலேயே இதுதான் பெஸ்ட்டூ. \\

யப்பா...இப்பாவது புரிஞ்சிக்கிட்டிங்களே...மகிழ்ச்சி ;)

\\ரவிவர்மன் அவரோட வேலை சூப்பரா செஞ்சிருக்கார் ( ரோபோக்காக காத்திருக்கேன்). \\

ரோபோவுக்கு ரவிவர்மன் இல்லை ரத்னவேலு (சேது, நந்தா படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர்) ;))

said...

அடடே.....இதுல இம்புட்டு இருக்கா ?

புட்டு புட்டு வச்சிட்டிகளே.
:)

said...

புரியுர மாறி இருக்கு ஆனா புரியல... புரியாத மாறி இருக்கு ஆனா புரியுது...

இப்ப உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்..

என்ன நான் சொல்றது...

புரிஞ்சிக்க வேண்டியத புரிஞ்சிகிட்டாதான் புரியாதது புரியும்.
புரியாதது புரியலனா எதும் புரியாது...

புரிஞ்சதா..

said...

அட்டகாசம்... மனுசன் கலக்குறாரு.. :)

said...

நீங்க சொன்ன இரண்டு பரிமாணங்களைத் தவிர இன்னொரு பரிமாணமும் இருக்கு.

அடுக்கு 1:
------------------
கடலினடியில் ஏற்படும் techtonic plates-களின் உரசலினால் சுனாமி ஏற்படுகிறது என்று அறிவியல் சொல்கிறது. ஒரு சிறு அழுத்தம் காலம் காலமாக கூடிக்கொண்டே வந்து ஒரு சமயத்தில் அந்த தகடுகளை நகர்த்த அது சுனாமியாக வெளிப்படுகிறது. இந்த மாதிரியான நிகழ்தலுக்கு பல நூற்றாண்டுகள் ஆகலாம்.

அந்த சிறு கல் - ஒரு சிலை.

2004-ல் நடந்த பேரழிவு சுனாமி அதைவிட மிகப்பெரிய பேரழிவை nullify ஆக்குகிறது.

chaos theory-ன் அடிப்படையில் இப்படி ஒரு கற்பனையை முன்வைக்கிறது. பட்டாம்பூச்சியின் சிறகசைவை முதல் சில காட்சிகளில் காட்டுகிறார்கள்.

அடுக்கு 2:
------------------
கோவிந்தராசப் பெருமாள் பண்ணிரெண்டாம் நூற்றாண்டில் கடலுக்கடியில் போய் உட்கார்ந்து கொள்கிறார். பல நூற்றாண்டுகளுக்கு பின்னர் ஒரு பெரும் உயிரியல் ஆயுதம் வெடிக்கும்பொழுது ஆழிப்பேரலையை உண்டாக்கி வெளிப்பட்டு உலகை இரட்சிக்கின்றார்.

அடுக்கு 3:
------------------
- ரங்கராஜன் நம்பி - உலகை காப்பாற்ற வேதங்களை கடலுக்கடியில் கொண்டு மறைக்கும் மச்சமாக (மீனாக), இவர் ஒரு கல்லோடு கடலுக்கடியில் போகிறார்.

- கோவிந்த் ராமசாமி - ஆமையை அச்சாக வைத்து பாற்கடலை கடைந்த்தால் வெளிவருகிறது ஆலகால விசம். இவரை அச்சாணியாக வைத்து நடக்கும் ஆராய்ச்சியில் ஆலகால விசத்தைப் போல் கொடிய விசம் உருவாகிறது

- வின்செண்ட் பூவராகன் - தசாவதாரத்தில் ஒன்றான வராக அவதாரம் பூமியை காப்பாற்றுகிறது. இந்த பூவராகன் மண்ணைக் காப்பாற்ற போராடுகிறார். செண்டிம்ண்ட் காட்சிகளுக்காக உயிர் துறக்கிறார். பின்னர் அக்ரஹாரத்து பாட்டி தன் மகன் ஆராவமுதனாக இனம் கண்டு சோகத்தை கரைக்கின்றார்.

- கபிபுல்லா கான் - மூன்றடி உயர வாமனர் தனக்காக மூன்றடி நிலம் கேட்டார். எட்டடி உயரமான இவரோ மசூதிக்காக தனது நிலத்தை கொடை செய்கிறார்.

- ஷிங்கேன் நரஹசி - இறுதியில் நரசிம்ம அவதாரம் எடுக்கிறார்.

- அவ்தார் சிங் - குரலை இழந்தாலும் உயிரை இழக்க சம்மதிக்கவில்லை. மனைவி மேல் உள்ள பாசம். மனைவியை காட்டுக்கு அனுப்பிய அவதார புருஷன் இராமனின் செய்கை தவறு என்பதால் இந்த அவ்தார் புருஷன் இந்த முடிவை மேற்கொள்கிறார் போல :-)

- பல்ராம் நாயுடு - தசாவதாரக் கதைகளில் பலராமருக்கு தனிக் கதை கிடையாது. அதே போல் இவரும் தனி கதை எதுவும் இல்லாமல் படத்தில் ஒரு துணைப் பாத்திரமாகவே வந்து போகிறார் (பூவராகவன், கபிபுல்லா, அவ்தார், நரஹசி எல்லாருக்கும் ஒரு கதை சொல்லப்படுகிறது)

- கிருஷ்ணவேணி - பெயரில் கிருஷ்ணர் வருகிறார்.

- Michael Fletcher - உலகை அழிக்க வரும் கல்கியோ இவர்? உலகம் அழியவில்லை. அதனால் இந்த இறுதி அவதாரம் எடுக்கப்படவில்லை.

இந்த பாத்திரங்களை இணைக்கும் விதமாக கோவிந்த ராஜ பெருமாளின் உற்சவ விக்கிரகம் (இராமானுஜரால் பின்னர் நிறுவப்பட்டது. மூலவர் இன்று வரை கிடைக்கவில்லை) ஊர்வலமாக செல்கிறது. ஒரு கொடிய விஷக்கிருமி கொண்ட வாய்ல் (voil)ஐ தனக்குள் பத்திரப்படுத்தி கொண்டு (பஞ்சலோக சிலை. தமிழக வெயில் பாதிக்காமல் இருக்க) தன்னுடன் ஒரு கடவுள் நம்பிக்கையாள்ளையும் (ஆண்டாள்), அவநம்பிக்கையாளனையும் (கோவிந்த்) கூட்டிக் கொண்டு பயணிக்கின்றார்.

- மணல் கொள்ளையருக்கு எதிராக போராடும் விண்செண்ட் பூவராகனை சந்திக்கிறார்கள். பெருமாள் வந்த நேரம் அவர் மணல் மாஃபியாவுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்கிறார். பிறகு அவர்களின் வாரிசுகளை காப்பாற்றி உயிர் நீத்து மண்ணைக் காப்பாறுகிறார்.

- ஒரு Magic Bullet-னால் பாடகர் அவ்தார் சிங்கின் கேன்சர் குணமாகிறது (சிரிக்கக் கூடாது. ஆமாம்) .

- மசூதிக்காக நிலம் கொடுத்ட முக்தார் கானின் குடும்பம் மட்டுமல்ல அவர் சுற்றியுள்ள எல்லா குடும்பங்களையும் அந்த மசூதியின் மூலமே காப்பாற்றபடுகிறார்கள்.

- இறந்து போன மகன் ஆராவமுதனை நினைத்துக் கொண்டே உயிர்வாழும் கிருஷ்ணவேணி பாட்டி பூவராகனிடம் தன் மகனை அடையாளம் கண்டு சோகத்தை கரைக்கிறாள்.

said...
This comment has been removed by the author.
said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸாஆ
ஆஆஆஅப்ப்ப்ப்
ப்ப்ப்ப்பாஆஆ
ஆஆ

said...

///புரியுர மாறி இருக்கு ஆனா புரியல... புரியாத மாறி இருக்கு ஆனா புரியுது...

இப்ப உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்..

என்ன நான் சொல்றது...

புரிஞ்சிக்க வேண்டியத புரிஞ்சிகிட்டாதான் புரியாதது புரியும்.
புரியாதது புரியலனா எதும் புரியாது...///
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டடே

said...

//ஆளமா//

பேசும்போது இப்படி பேசலாம், ஆனா தப்பில்லை.
எழுதும்போதும் இப்படி எழுதரது சரியில்ல சொல்லிப்புட்டேன்.

பி.கு: இதையெல்லாம் நான் சொல்லிக் கேக்க வேண்டியது, உங்க நண்பரின் தலையெழுத்து :)

said...

ஷோபன்

குலோத்துங்க சோழன் நம்பிக்கு கொடுத்த தண்டனையை விட பெரிய தண்டனை இது ;-)

said...

தாங்க முடியலை.

Anonymous said...

எந்த ஊரில் சாமி உற்சவர் இப்படி பஞ்சு போன்று கனமே இல்லாமல் இருக்கிறது?

மேலும் ஒரு தவறை பதிவர் ஒருவர் சுட்டிக் காட்டியிருந்தார். அதாவது, சிலையை படகில் கொண்டு செல்கிறார்கள். பின்னால் யானை மேல் அரசன் வருகிறான். யானை கனுக்கால் அளவே தண்ணீர் இருந்தாலும், சிலையைக் கொண்டுபோகும் படகு தரை தட்டாமல் செல்கிறது.

said...

தசாவதாரம் இன்னும் பார்க்கவில்லை.
பொதுவாகவே படம் பார்க்கும் பழக்கம் இல்லை. ஆனால் எப்படியாவது (திருட்டு சி.டி.யிலாவது - அதற்கு ரெம்ப நாளாகும் பரவாயில்லை) பார்த்துவிட வேண்டும் என்று இந்தப் பதிவைப் படித்தபின் தோன்றுகிறது.
Butterfly Effect!
இதனை படத்தில் கூறியிருப்பதை எடுத்து எழுதிய உங்கள் நண்பருக்கு வாழ்த்துக்கள். நானும் இந்த butterfly Effect! பற்றி நிறையவே சிந்தித்துள்ளேன்.

எல்லாம் என்னால்தான் நடக்கிறது. என் ஒவ்வொரு அசைவுகளும்தான் இந்த உலக இயக்கத்தையே நிர்ணயிக்கின்றது என்றும் கருதலாம்.

என்னால் ஒன்றும் இயலாது. யாரோ எங்கோ செய்யும் சின்னச் சின்னச் செயல்களின் பாதிப்புதான் எனக்கு வந்து சேர்கிறது என்றும் கருதலாம்.

இந்தத் தியரியை கொஞ்சம் ஓவராகவே சிந்தித்தவர்கள் சிலர் தான் “நானே கடவுள்” என்று கூறி உண்மையான இறைவனை அறிவதை விட்டும் வழி தவறிச் சென்றிருக்கலாம்.

அதுபோல் இதே தியரியை கொஞ்சம் ஓவராக சிந்தித்த சில விஞ்ஞானிகள்தான் கடவுள் இல்லை என்ற கொள்கையையும் கொண்டு வந்திருக்கலாம்.


ஆனால் ஒன்று மட்டும் உண்மை. இந்த Butterfly Effect! ஐயும் தான்டிய ஒரு சக்தி உண்டு.

said...

ஷோபன்

குலோத்துங்க சோழன் நம்பிக்கு கொடுத்த தண்டனையை விட பெரிய தண்டனை இது ;-)

தாங்க முடியலை

said...

அதெப்பிடி இங்க கடல்ல போடற சிலை இந்தோனேஷியால plates உரச காரணமாகுது??

said...

அப்ப ஒவ்வொரு பட்டாம்பூச்சியின் சிறகசைவும் சூறாவளி ஏற்படுத்துமா??
கேனத்தனமா இல்ல.

said...

இந்த கேயாஸ் தியரிப்படியே படம் இருந்தாலும் screen play , அசின் நச்சரிப்பு, பல இடங்களில் ட்ரமாட்டிக்காக இருப்பதெல்லாம் படத்தின் வேகத்தை குறைக்கவே செய்கிறது சாதாரண ரசிகனுக்கு ஏமாற்றமே
:(

Anonymous said...

சுத்தி வளைத்து தவறியும் படத்தைக் காசு கொடுத்துப் பார்க்க வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளீர்கள்.
மிக்க நன்றி

said...

மை பிரண்ட் கலக்கிடீங்க சூப்பர்..உங்களோட சித்து பதிவு பார்த்தேன் ரசித்தேன்,நெம்ப சந்தோஷம்..தலைய பத்தி எழுதினதுக்கு ;)

said...

இன்னாமா மலேசியா மங்கம்மா.. ஆள் வச்சி எழுதியே கால்ம் தள்ளிடலாம்னு பாக்கறிங்களா? புதுசா "சொந்தமா" எதுனா எழுதும்மா... கும்மி அடிக்கனும்ல.. :)

said...

ebbbaaa....enna dasavatharam postsaa pottu thaaki irukeenga.!

movie ya vida lengthy postaa irukkum polaruke:)

said...

Butterfly effect logic pudusa irukku.
i read lots of vimarasanams for this movie, but this is somewhat different, good work.
compliment unga friendkku ungalukillai :)
-K mami