Saturday, June 14, 2008

தசாவதாரம்

இப்படிப்பட்ட ஒரு படத்துக்காக எவ்வளவு நாளானாலும் காத்திருக்கலாம்ன்னு கங்கணம் கட்டி திரிந்திருந்தேன். சிவாஜியை கூட டியேட்டரில் பார்க்கவில்லை நான். இரண்டு மாதத்துக்கு முன்பு கூட படம் பார்க்கலாம்ன்னு நானும் என் தோழியும் டிக்கேட் கவுண்டர் வரைக்கும் போயிட்டு திரும்பி வந்துட்டோம். எப்படி 1-2 மாதத்தில் தசாவதாரம் வந்துவிடும். அதுவரை வேறு படம் வேண்டாமென்று திரும்பிவிட்டோம். இன்று படம் வெளியாகியே முதல் நாளே இறங்கிட்டோம்.

கதை, திரைக்கதை, வசனம் எல்லாமே கமல்ஹாசன் என்று படம் ஆரம்பிக்கிறது. அப்படியே 12-ஆம் நூற்றாண்டு கொண்டு போகிறார்கள். கே.ஆர்.எஸ் அண்ணா சைவர்-வைணவர்ன்னு ஒரு பதிவு போட்டிருந்ததால அவர் சொன்ன விவரங்களையும் கொஞ்சம் குறிப்பெடுத்துக்கிட்டேன். நெப்போலியன் நம்பியை பார்த்து "ஓம் நமச்சிவாய என நீ உச்சரித்தால் உனக்கு உயிர் பிச்சை தருகிறேன்" என் ஆணையிடும்போது நம்பி "ஓம் நமோ நாராயணாய" என்றுதான் சொல்லுவார் என நாமெல்லாம் அறிந்ததே! ஆனாலும், அந்த காட்சியில் அனைவரும் சீட் நுனிக்கு வந்து என்ன நடக்க போகிறது என நகத்தை கடிக்க ஆரம்பிப்பீர்கள்.

"கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது"

ரங்கராஜன் நம்பியை சைவர்கள் துன்புறுத்தி கடலுக்கு கொண்டு போவதைப் பார்த்தால் இன்னொரு The Passion of The Christ பார்ப்பது போல் இருக்கின்றது. ஆனால், அதில் இன்னும் மோசமாக துன்புறுத்தப்படுவார் யேசுநாதர். இந்த பிரமாண்ட காட்சிக்கு போடலாம் ஒரு வாவ்!

படம் என்னவோ சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் நடுவே நடக்கும் போராட்டங்கள்தான் என நீங்கள் நினைத்தால் அது தவறு. கதை அப்படியே 2004-ஆம் ஆண்டு டிசம்பரில் அமேரிக்காவில் கொண்டுவரப் படுகிறது. விஞ்ஞானி டாக்டர் கோவிந்த் நடத்தும் ஆராய்ச்சியும், அவரின் ஆராய்ச்சியின் வெற்றியில் உருவாக்கப்பட்ட உலகத்தையே அழிக்கும் வைரஸும். இனி கதை கடைசி வரை இந்த வைரஸும், இதை தொடர்பான துரத்தலும்தான்.

12-ஆம் நூற்றாண்டில் வரும் அசின் இன்னும் கொஞ்சம் மெனக்க்கெட்டிருக்கலாம். அவர் அழுகையிலும் போலித்தனம் தெரிகிறது. ஆனால் மாடர்ன் அசின் அழகோ அழகு. ரெட்டை ஜடையை ரெண்டு கையால் தூக்கிக் கொண்டு ஆடுவதும், படம் முழுக்க விஷ்ணுவை தன் இரு கரங்களாலும் கட்டிக்கொள்வதும், வில்லனிடமிருந்து அந்த விஷ்ணு சிலையை காப்பாற்ற போராடுவதும், தன்னையறிமாலேயே கமலை விரும்ப ஆரம்பிப்பதும் அழகு. போலிஸ் இவரை தீவிர்வாதியின் காதலி என்றபோதிலும், கலிபுல்லா கான் இவரை கமலின் மனைவி என்று நினைக்கும்போதிலும் அவர் புலம்பல் ரசிக்க வைக்கின்றது.

அசினை விட ஹெவி ரோல் மல்லிகா ஷெராவாத்துக்குதான். கா கறுப்பனுக்கும் வெ வெள்ளையனுக்கும் என்ற பாடலில் செக்ஸியாய் வந்து வில்லன் கமலை மணந்து இவர் செய்யும் அட்டூழியங்கள்; அனைத்துக்கும் சபாஷ் போடலாம். அவர் தன்னுடைய பங்கை 100% அருமையாக செய்திருக்கிறார். அவரை அவ்வளவு சீக்கிரமாக பலியாக்கியிருக்காமல் இருந்திருந்தால் காட்சிகளின் விருவிருப்பு கூடியிருக்கும்.

ஜெயபிரதாவின் பகுதியை அவர் கச்சிதமாய் செய்திருக்கிறார். கவிஜர் கபிலனின் கவிதைகளும் அதை வாசிக்க அவரையே நடிக்க வைத்த கமலுக்கு நன்றி சொல்லலாம். நெப்போலியன், MS பாஸ்கர், ஆகாஷ், நாகேஷ், சந்தான பாரதி என்று பெரிய பட்டாளமே இருந்தாலும் அனைவரிடமும் மிகையில்லாத நடிப்பு. யூகா எனும் ஜப்பானிய பெண்ணின் நடிப்பை விட அவரின் சண்டை காட்சிகள் அற்புதம். ஒரு ஜெட் லி படம் பாத்தது போல இருந்தது. ரவிகுமார் படத்தில் அந்த கற்பழிப்பு காட்சி அவசியம்தானா?

படத்தின் இசை ஏற்கனவே பிரபலாமாகிவிட்டது. ஆனாலும், பிரமாண்டமான காட்சியமைப்பில் பார்க்கும்போது பாடல் இன்னும் அழகாக தெரிகிறது. ஒரு உண்மை தெரியுமா? படத்தில் கமலுக்கும் அசினுக்கும் ஒரு டூயட் பாடல் கூட இல்லைங்க. அதுவே ஒரு வித்தியாசம்தானே. BGM-க்கு இசையமைத்த தேவிஸ்ரீ பிரசாத்துக்கு கண்டிப்பாக வாழ்த்து சொல்ல வேண்டும். காட்சிகளின் விருவிருப்புக்கும் திகிலூட்டத்துக்கும் முக்கிய பங்கு வகிப்பது இவரின் BGM இசைதான். முக்கியமாக சண்டை காட்சிகளின் போது வரும் இசை ஒவ்வொரு தாக்குதல் போதும் நமக்கு 'டிக் டிக்' என இதய துடிப்பை கூட்டுகிறது.

படத்தின் சண்டைக்காட்சிகள் அட போட வைக்கின்றது. 12-ஆம் நூற்றாண்டில் நடக்கும் சண்டை காட்சி டிப்பிக்கல் கனல் கண்ணன் ஸ்டைல். யூகா மற்றும் அவர் தந்தையின் வூஷூ சண்டை திறனை பார்க்கும்போது சில வருடங்களுக்கு முன் நான் கற்றுக்கொண்ட தேக்குவாண்டோ ஞாபகம் வருகிறது. ஒரு ஜேக்கிசான் ரக சண்டை காட்சி க்ளைமேக்ஸில் பார்க்கலாம். படம் முழுக்க ஒரு 12-13 கொலையாவது இருக்கும். 15 நிமிடத்துக்கு ஒருவராவது இறப்பார்கள் என கணக்கு வைச்சிக்கலாம்.


ஒளிப்பதிவு.. இன்னும் என்ன சொல்ல வேண்டும் இதைப்பற்றி? அதான் கலக்கிட்டாரே ஒளிப்பதிவர். ஒவ்வொரு ஃப்ரேமிலேயும் காமேரா angle சுற்றி வரும் விதம் பிரமாதம். எடிட்டிங், ஸ்பெஷர் எஃப்பேக்ட் பெரிய வாவ்! படத்தில் முக்கால்வாசி காட்சிகளில் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட கமல் ஒரே ஃப்ரேம்ல இருந்தாலும் அதை அசலாக இருக்கும்படி எடிட் செய்திருக்கார் எடிட்டர். வேகமான நகரும் காட்சிகளிலும் சேசிங் காட்சிகளிலும் அனல் பறக்கின்றன. ஸ்பெஷ எப்பேக்ட் பேஷ் பேஷ். க்ளைமேக்ஸில் வரும் க்ராஃபிக்ஸில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். சில காட்சிகள் போலி என்பது மிக எளிதில் தெரிகிறது.

டைரக்டருக்கு வேலை இருந்திருக்காது என நினைக்கிறேன். கதை, திரைக்கதை, வசனம், நடிப்புன்னு ஆல்-இன்-ஆல் அழகுராஜாவாக கமலே இருந்துவிட்டார். 10 கதாப்பாத்திரங்கள். சில கதாப்பாத்திரங்களில் இவரா அவர்ன்னு சந்தேகம் படும்படி மேக்கப் உதவி செய்துள்ளது. என் பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருந்தவர் கடைசி வரை அந்த ஜப்பானியர் கமல்தான் என்று நம்பவே இல்லை. பாட்டி கதாப்பாத்திரத்துக்கு கமல் இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா ஏதாவது செய்திருக்கலாம். 94 வயது பாட்டி நிஜவாழ்க்கையில எப்படி இருப்பாங்களோ அதேப்போல முயற்சி செய்திருக்கலாம். இந்த பாட்டி என்னன்னா சின்ன பொண்ணாட்டாம் அங்கே தாவுறது இங்கே குதிக்கிறதுன்னு இருக்காங்க. அவங்க வயதுக்கும் அவங்க எனெர்ஜி லெவெலுக்கும் சம்பந்தம் இல்லை. பூவராகன் கறுப்பு எம்.ஜி.ஆர் என்று சொல்லலாம். ஆனால் சில இடங்களில் அவர் பேசுவது கேப்டன் விஜயகாந்தை போல இருக்கின்றது. சுனாமியில் மற்றவர்கள் உயிரை காப்பாற்றி அவர் இறக்கும் காட்சி நன்றாக படமாக்கப்பட்டுள்ளது. சிபிஐ பல்ராம் நாயுடு காமெடியில் கலக்குகிறார். கோவிந்த் ஆங்கிலத்தில் பேசும்போது "நான் தெலுங்கு. தமிழ் கற்றுக்கொண்டு தமிழில் பேசுகிறேன். நீ தஞ்சாவூரான். தமிழில் பேசலைன்னா, இனி யார் தமிழை வளர்ப்பா?"ன்னு கேட்பதுக்கு "உங்களைப் போல இன்னொரு தெலுங்கத்தான்"ன்னு கமல் சொல்வது நகைச்சுவையாக இருந்தாலும் சிந்த்திக்க வைக்கும் வரிகள்.

ஒரு கதைக்கருவை வைத்துக்கொண்டு மற்ற சில சிறு சிறு கதைகளை இதனூடையே அழகாய் பின்னியிருக்கும் கமலுக்கு பாராட்டுகள். அவ்தார் சிங், கலிபுல்லா கான், பூவராகன், புஷ் என்று சிலரின் சின்ன சின்ன கதைகளையும் கதையில் பொருத்தி தேவையான இடத்தில் போட்டதால் படம் திகட்டவில்லை.

முக்கியமாக படத்தின் கருத்து (Moral of th story) என்ன என்பது கேட்க வேண்டிய ஒன்று. நடக்கும் ஒவ்வொன்றும் நல்லதுக்கே! 4 வருடங்களுக்கு முன்னே நடந்த சுனாமியால் லட்சம் உயிர்கள் இழப்பு என வருத்தப்பட்டும் கடவுளிடம் நம் ஆதங்களை கொட்டிக்கொண்டு இருக்கிறோம். ஆனால், இந்த படத்தை க்ளைமேக்ஸை பார்த்தீங்களென்றால் கோடி உயிர்கள் பேரிழப்பு நடக்க வேண்டிய இடத்தில் லட்சம் பேரென குறைக்க நடந்த சுனாமியே கடவுளின் திருவிளையாடல் என புரிந்துக்கொள்வோம். அதலால், இனி என்ன கெட்டது நடந்தாலோ அது பெருசா வர வேண்டிய ஒன்னு சிறுசா வந்திருக்கேன்னு சந்தோஷப்பட்டு அந்த கஷ்டங்களை தாண்டி வர வேண்டும் என நினைவுக்கொள்வோம்.

மொத்தத்தில், பிரமாண்டம்... பிரமாண்டம்... பிரமாண்டம். திரும்ப பார்க்கலாம் இந்த பிரமாண்டத்தை. ஆனாலும் இந்த மாதிரி படங்களை தியேட்டரில் பார்ப்பதுதான் அழகு. நான் இந்த வாரம் அடுத்த ரவுண்டுக்கு தயார் ஆகலாம் என நினைக்கிறேன். நீங்கள் எப்படி?

31 Comments:

said...

நான் விமர்சனத்தை படிக்கல... டைரக்டா கமேண்ட் தான்... நான் இன்னிக்குதான் அடிச்சு புடிச்சு டிக்கட் வாங்கி வச்சிருக்கேன்... அது வரைகும் இந்த பதிவ படிகறதா இல்லை... நான் தானே பஸ்ட்டு???

said...

நான் தான் பஸ்ட்டு... :-))

said...

நல்ல தரமான விமர்சனம்...படித்ததில் இதுமட்டுமே திருப்தி அளிக்கிறது.

said...

உள்ளேன் ஆத்தா

Anonymous said...

Indha padathai paakkalaamnu nenachirundhaen. Unga karuththu padiyae innuum 4,5 monthsla thalaivar padam release aagidum. Direct-aa adhai theatrela paathidalaam. Indha padaththu VCDthaan 2 naalila vandhidumae. Adhila paakkuradhae adhigamnnu vittuttaen.

said...

kuduthuvachavanga...
nanga innum 2 vaarathukku paarkaveee mudiyaahtu pola irukkee...

athu varaikkum naanum vimarsanathai padikkirathai illai..
..:(

said...

//kuduthuvachavanga...
nanga innum 2 vaarathukku paarkaveee mudiyaahtu pola irukkee...

athu varaikkum naanum vimarsanathai padikkirathai illai..
..:(//

இதான் சரி...

said...

எக்கா படம் முதல் 15 நிமிடங்கள் சூப்பர். அம்புட்டுத்தேன் :((

said...

பெருமாள் பெருமாள்னு அக்ரஹாரத்து அசின் மாமி கூடவே வந்திருவான்னா சயிண்டிஸ்ட் கோவிந்தராஜன்கூடவும் அந்த அமெரிக்க வில்லன் பேரு என்ன ப்ளட்சரோ என்னமோ அவன்கூட சண்டை போட்டு நானே கடத்திகிட்டு வந்திருக்கலாம்.

:)))

said...

பெருமாள் பெருமாள்-னு ராமாயணம் பாடறப்பல்லாம் மகராசி மல்லிகா செராவத் இவளை (அசினை) போட்டுத்தள்ளாம போய் சேந்துட்டாளேன்னு எரிச்சலோ எரிச்சல்
:((

said...

சந்தான பாரதியோட நல்ல வாய்ப்பை !?!? (எல்லாம் படம் பாத்து தெரிஞ்சிக்கங்கப்பா) ஒரு ட்ராமா கும்பல் வந்து கெடுத்து சின்னாபின்னமாக்கீடுது.

நம்ம எல்லாருக்கும் ஒரே சோகமா போயிடுது

:)))))))))

said...

நல்லா க்ராபிக்ஸ் பண்ணி இருக்காங்க, கஷ்டப்பட்டிருக்காங்க.

டெக்னாலஜி இருப்பதாலேயே குறைகளை எல்லாம் விட்டு படம் ஆஹா ஓஹோ சூப்பர் என சொல்லிவிடமுடியாது
:((

said...

வேட்டையாடு விளையாடு மாதிரி ஒரு நல்ல எண்டர்டெய்னர் குடுங்க கமல்ஜி

said...

இல்லைனா முன்னாபாய் அது இதுன்னு விஜய், ஜெயம் ரவிக்கு போட்டியா ரீமேக்ல இறங்குங்க.

:(

said...

நானும் உள்ளேன் ஆத்தா!

said...

சூப்பர் விமர்சனம் ;)

\\நான் இந்த வாரம் அடுத்த ரவுண்டுக்கு தயார் ஆகலாம் என நினைக்கிறேன். நீங்கள் எப்படி?
\\\

நாங்களும் தான் ;))

said...

படம் பாத்தாச்சா! நானுந்தான்...இதோ விமர்சனம். :)

http://gragavan.blogspot.com/2008/06/dasavatharam-kamalhasan.html

நீங்க சொன்னதுகளையும் ரசிச்சேன். தமிழைக் காப்பாத்த தெலுங்கர் வருவாருன்னு சொல்றப்போ சிரிப்பு வந்துருச்சு. ஆனால் அந்த நெலமைலதான் இருக்கோம்.

அந்த ஜப்பான் பொண்ணு நல்லா சண்டை போடுறாங்க. நீங்க என்னவோ படிச்சீங்களே.. அது கராத்தே சண்டையா? அப்ப மக்கள் எச்சரிக்கையா இருக்கனும்.

said...

///சில வருடங்களுக்கு முன் நான் கற்றுக்கொண்ட தேக்குவாண்டோ ஞாபகம் வருகிறது.///


ஆஹா நல்ல வேலை இப்பவாவது சொன்னீங்க. ரொம்ப உஷாரா இருக்கணும்:)

said...

நாளைக்கு தான் நான் படம் பார்க்க போறேன்:(

said...

///சில வருடங்களுக்கு முன் நான் கற்றுக்கொண்ட தேக்குவாண்டோ ஞாபகம் வருகிறது.///


ஆஹா நல்ல வேலை இப்பவாவது சொன்னீங்க. ரொம்ப உஷாரா இருக்கணும்:)

said...

/
நிஜமா நல்லவன் said...

நாளைக்கு தான் நான் படம் பார்க்க போறேன்:(
/

இதுக்கு ஏன்யா ஜோக ஸ்மைலி!?!?
நாங்கல்லாம் பாத்துட்டு ஸ்டாங்கா இல்ல!?!?

என்ன இது சின்ன புள்ள தனமா!?!?

:))

said...

படம் பார்த்து வந்து உங்க விமர்சனம் தான் முதல் போணி, நல்லா இருக்கு, நல்லா இருங்க

said...

ammani, padam parthutu vandhu padikirenda :)

said...

ammani, padam parthutu vandhu padikirenda :)

Anonymous said...

நான் இன்னமும் படம் பார்க்கவில்லை...

//வீர வைணவர் முன்னாள்-எங்கள்
வீர சைவமும் தோற்காது!!"
இல்லை என்று சொன்ன பின்பும்-இன்றி அமையாது....
தொல்லை தந்தபோதும் எங்கள்-தில்லை மாறாது!!//

மொத்தத்தில் இந்த கோவிந்தா கிருஷ்ணா புலம்பல் இல்லாமல் இருந்திருந்தாலவது படம் பார்க்க தூண்டியிருக்கும் !

said...

மங்கை இன்னும்பாக்கலையாம்..கம்பெனிகுடுக்க சொன்னாங்க.இன்னோருமுறை ....போலாம்ன்னு பாக்கறேன்.. :) பாராட்டித்தள்ளிட்டியேப்பா..

said...

//அவர் தன்னுடைய பங்கை 100% அருமையாக செய்திருக்கிறார்//

ஹிஹி, ரொம்ப தான் குசும்பு. சரி, பாத்துடுவோம்.

சந்தடி சாக்குல உனக்கு ஏதோ ஒரு சண்டை தெரியும்னு பிட்டு போட்டு இருக்கியே, சூப்பரப்பு. :))

Anonymous said...

Friend, pinnreenga ponga... Super.



Unga Dasavatharam vimarsanam padichen. As usual kalakkal. ( I couldn’t post my comments on your blog, ‘cos that is blocked in our office L, neenga itha vena unga blog la pinnottama use pannikalam J). I watched it on last Saturday. Not much impressed. Too much messages (!?) in a single movie, 10 get ups, different locations, poor songs, irritating Asin (character, asin valakkam pola alagu thaan..he hee), ….all these factors strain our brain for 3 hours. In fact his get ups are not that good…except Balram Naidu, Chris Fletcher (I personally liked this character), Rangarajan Nambi. And yes, Poovaragan’s characterization is good but make up is pathetic. Chinna pasanga moonjila mask maatitu varathupola irukku, that tall guy’s make up sagikkala. Kamal ethukkaga ivvalo strain pannanumnu puriyala. Padam mudinja piragu avar make up poda patta kastam ellam kaattunanga….romba paavama irukku. Thannala 10 getup pottu nadikka mudiyum ngaratha 70cr selavula kaatirukkaru. Ethavathu oru character mattum kamal panni, other characters ah vera yaaravathu panni irundha padam innum romba nallave vanthirukkum. Very poor incorporation of Chaos theory and connecting it with the question of existence of God. Oru velai enakku puriyalanu theriyala J. Dear Kamal sir, make up podurathu mattume nadippu illa boss….athayum thaandi neenga perusa pannanum. Atha vitutu ithuve ulaga tharamnu solarathu….yosichu paatha ungalukke comedy ah irukum.



Thanks,

Shoban

said...

Nice Comment. I doknow why u forget to tell the idiot character of asin. Ofcourse for this character also kamal is only respondible...

Vijay

Anonymous said...

கிழவனான நாகேஸ் வத வத பிள்ளைகள். ஜனத்தொகை பெருகி வரும் நிலையிலும் புத்திகெட்ட இனத்தின் செயல்பாடுகளையும் ஆங்காங்கே காட்டியுள்ளார்.

காலி புல்லா நன்றியுள்ளவர் போல், நல்லவர் போல் காட்டப்பட்டாலும், அடிப்படையில் மடயன் மாதிரி காட்டிவிட்டார்.

காலிபுல்லா பாத்திரமும், சீனாக்காரர் பாத்திரமும் அவசியமே இல்லாதவைகள்.

அமெரிக்காவில் விஞ்ஞானி என்றாலும், அங்கேயும் திருட்டுக் கும்மளாக இந்தியர்களே இருப்பதை இப்படம் தெளிவாக்கியுள்ளது. பணத்திற்காக எதையும் செய்பவன் இந்தியன் என்பதை இப்படம் காட்டியுள்ளது. தீவிரவாதியுடன் என்றாலும் கைக்கோர்த்துக்கொள்ளும் இந்திய அடிப்படைக் கொள்கையையும் காட்டுகிறது.

ஆனால் வெறுமனே இந்தியாவில் காண்போரையெல்லாம் தீவிரவாதி தீவிரவாதி எனும் பைத்தியக்காரத்தனத்தையும் இப்படம் வெளிப்படுத்துகிறது.

அது அமெரிக்க CIA என்றாலும் சரி, விஞ்ஞான கமல் என்றாலும் சரி, முஸ்லீம் கமல் என்றாலும் சரி, எல்லோரையும் நாயுடு தீவிரவாதி தீவிரவாதி என்று எந்த ஆய்வும் இன்றி மனம் போனபோக்கில் கூறும் இந்தியாவின் அடிப்பட்ட மடமையையும் இந்த படம் காட்டியுள்ளது.

எப்படியோ கமல் சில இடங்களில் சில வற்றை மறைமுகமாக சொல்லியுள்ளார்.

said...

படத்தை எங்கே ஜொஹூரில் பார்த்தீர்களா