நானும் கடந்த சனிக்கிழமை அடிச்சு புடிச்சு டிக்கேட் வாங்கி பார்த்தேன தசாவதாரத்தை. படம் பெருசா ஒன்னும் இம்ப்ரஸ் பண்ணலை. ஒரே படத்தில் அளவுகக்திமான மேசேஜ்ஸ் (!?), 10 அவதாரம், பல இடங்கள், வீக்கான பாடல்கள், இர்ரிட்டேட்டிங் அசின் (கேரக்டர் மட்டும்தான். அசின் வழக்கம்போல அழகுதான்.. ஹீஹீ).. இது எல்லாமே நம் மூளையை 3 மணி நேரத்துக்கு ரொம்ப கஷ்டப்படுத்திடுச்சு. 70 கோடியில் கமல் இதே தசாவதாரத்துக்கு பதிலாக வேற படங்கள் எடுத்திருக்கலாம். உதாரணத்துக்கு
1- 12-ஆம் நூற்றாண்டில் நடந்த சம்பவங்களை மட்டும் படமாக எடுத்திருக்கலாம். சைவம், வைணவம், சோழ நாட்டு வரலாறுன்னு அந்த காலக் கட்டத்தில் நடந்ததை ஒரு அழகான தொகுப்பாய் கொடுத்திருக்கலாம்
2- இந்த வைரஸ் தீம் வச்சு ஒரு Sci-Fi படம் ஒன்று கொடுத்திருக்கலாம். (கோவிந்த், ஃப்லேட்சர், மல்லிகா, அசின்... புஷ் தேவை இல்லைனு நினைக்கிறேன்)
3- மணல் கொள்ள, பூவராகன், பால்ராம் நாயுடு, அசின் கேரக்டர்களை வைத்து ஒரு KS ரவிகுமார் ஸ்டைல்ல மசாலா படம் எடுத்திருக்கலாம்.
4- அந்த சீனாக் காரன், யுகா, ஃப்லேட்சரை வைத்து ஒரு "ஹிட்டன் ட்ராகன் அண்ட் க்ரோச்சிங் டைகர்" (Hidden Dragon and Crouching TIger" ரேஞ்சுக்கு ஒரு தற்காப்ப்ய் கலை (Martial Arts) படம் எடுத்திருக்கலாம். ஜேக்கி சானை கூட நடிக்க வச்சிருக்கலாம். :-)
5- கடவுள்ங்கிற தீமை மட்டும் வைத்து ஒரு சீரியஸ் படம் எடுத்திருக்கலாம்
6- அட.. அட்லீஸ்ட் கமல் & ஜெயப்ரதாவை மட்டும் வச்சு ஒரு சலங்கை ஒலி பார்ட் 2 எடுத்திருக்கலாம். ( அசின், மல்லிகாவை விட ஜெயப்ரதா சூப்பர்.. ஹீஹீஹீ)
மல்லிகா ரோல் நல்லா இருந்துச்சு. மல்லிகாவை சாக அடிச்சதுக்கு பதிலா அசினை சாக அடிச்சிருக்கலாம். அசின் கேரக்டர் அவ்வளோ இர்ரிட்டேட்டிங்கா இருந்துச்சு. கோவிந்த் உயரமான கட்டடங்களில் இருந்து குதிக்கிறது, BMW கார்ல துரத்தலும், ஓடுறதும், சண்டை போடுறதும் "டாக்டர்" விஜயோட குருவி பார்க்கிறாப்லயே இருக்கு. ஆனா அவருக்கு அந்த ஸோ கால்ட் முக்கியமான பெட்டியை கிருஷ்ணவேணி பாட்டிகிட்ட இருந்து பிடுங்கிட்டு போக தெரியல. அட் லீஸ்ட் அசின் கிட்ட இருந்து வாங்க கூட தெரியாமல் அவரையும் கூட்டிட்டு ஓடுறார்.. ஓடுறார்... என்ன கொடுமை மை ஃபிரண்ட் இது!
கொஞ்சம் கவனமா பார்த்தால் இன்னும் ஆளவந்தான் சாயல் இருக்கு. ஃப்லேட்சர் கேரக்டர் = ஆளவந்தான் நந்து கமல். ஒரே சின்ன வித்தியாசம் நந்து மனநலம் சரியில்லாதவன். ஃப்லேட்சரோட கோபம், செய்ய வேண்டிய வேலையில் முழு கவனம், அவரோட ஸ்டைல், மேன்னரிஸ்ம், அக்ரெஸ்ஸிவ்னஸ் எல்லாமே நந்துதான். ஆனாலும் எனக்கு இந்த கேரக்டர் ரொம்பவே பிடிச்சிருந்தது. ஆளவந்தான் க்ளைமேக்ஸில் நந்து விஜையை மெர்சடிஸ் காரில் துரத்துவான். ஒரு விபத்து ஏற்ப்பட்டதும் காரிலிருந்து வெளியில் குதிப்பான். அப்போது ஒருவன் புல்லட்ல வருவான். நந்து ஒரு உருட்டு கட்டையை எடுத்து அவன் கிட்ட நடந்து போய் அவனை அடித்துவிட்டு அந்த மோட்டார் சைக்கிளில் துரத்தலை தொடர்வான். இதுல ஃப்லேட்சர் அதையே செய்வார். இங்லீஸ்ல பேசுறது, வெளிநாட்டு லோக்கேஷன்ஸ்.. டெக்னாலகி முயற்சி மட்டுமே உலக தரமான படத்தை தந்திராது. அதையும் தாண்டி ஒரு க்ளாச்சிக்கல் தச் இருக்கணும்.
நம்பி, அவ்தார் & கோவிந்த் தவிர்த்து மற்ற எல்லா கேரக்டர்களும் முகத்துல டிக் மேக்கப் போட்டிருக்கறதுனால, கமல் தேவையான முகப்பாவனைகளை காட்ட இயலவில்லை. இது அவரோட பர்ஃபாமன்ஸை குறைத்துவிட்டது. சீனன், பூவராகன், கிருஷ்ணவேணி, புஷ், உயரமான மனிதன் - இவங்க எல்லா முகத்திலும் முகப்பாவனை ஒரே மாதிரியாக இருக்கு. பாவம் கமல் கஷ்டப்பட்டு கண்ணுல தான் வித்தியாசங்கள் காட்டணும். ஆனால் அதையும் ரொம்பவே ட்ரை பண்ணியிருக்காரு. எல்லாம் விழலுக்கு இறைத்த நீர்தான். "பிரமாண்டம்" அப்படிங்கிற டைரக்டர் ஷங்கர்க்கு அடுத்து தசாவதாரம் டீம் கேவலப்படுத்தி இருக்காங்க. பிரமாண்டம்ன்னா, பாட்ஷா படத்துல ரஜினி மெடிக்கல் காலேஜ் சீட்க்கு மூடுன ரூம்குள்ள பேசுற காட்சி இருக்கு பாருங்க. அது பிரமாண்டம். அப்படியே புல்லரிக்கணும். கமல் சார்.. நீங்க இன்னும் நிறைய பண்ணனும். 'Self Proclamation' -ஐ விட்டு வெளியே வாங்க. உங்களை மாதிரி சிறந்த நடிகர்கள் உங்க நேரத்தை இப்படி வேஸ்ட் பண்ண கூடாது. அதுக்கு நிறைய அஜித், சிம்பு எல்லாம் இருக்காங்க.
இசை: இப்பவும் இதே படத்தை அப்படியே கொண்டு போய் இளையராஜா கிட்ட கொடுங்க. அவர் முதல் 20 நிமிடத்துக்கும் கடைசி 20 நிமிடத்துக்கும் அப்படியே மாறுப்பட்ட கோணம் கொடுத்திருப்பார். மற்றதை ரஹ்மான், ஹரீஸ், யுவன் கிட்ட கொடுத்திருக்கலாம். கொஞ்சமாவது கேட்குற மாதிரி பாட்டு கொடுத்திருப்பாங்க. பிர்லா சிமேண்ட் விளம்பரம் மாதிரி படத்துல எல்லாம் இருக்கு ஆனால் உயிர் இல்லை.
எழுதியவர்,
ஷோபன்
பி.கு: ஷோபன் யாருன்னு கேட்குறீங்களா? இவர்தான் "நான்" என்கிற ப்ளாக்கர். ரொம்ப நாளா ஐயா பதிவெழுதாமலேயே இருந்தாரு. கேட்டால், மேட்டர் இல்ல எழுத்னு சொல்றார். ஆனால், இந்த பதிவை படித்தாலே தெரியும். இவர் எவ்வளவு டேலண்ட் நிறைஞ்சவர்ன்னு. மின்னஞ்சல்ல தசாவதாரம் படத்தை பற்றி பேசிட்டு இருந்தோம். அவர் உடனே அவரோட பார்வையில் தசாவதாரம் எப்படி இருக்குன்னு எழுதியிருந்தார். படித்து நானே பிரமித்து விட்டேன். இதை மற்றவர்களும் படிக்கட்டும் என அவருடைய சம்மதத்துடன் இங்கே பதிவிட்டுள்ளேன்.
Monday, June 16, 2008
70 கோடியை வீணாக்கிட்டாரே கமல் - தசாவதாரம் இன்னொருவர் பார்வையில்
Subscribe to:
Post Comments (Atom)
40 Comments:
இன்னும் படிகலை.. படிச்சிட்டு வரேன்..
மீ த பர்ஸ்டு :)
\\நானும் கடந்த சனிக்கிழமை அடிச்சு புடிச்சு டிக்கேட் வாங்கி பார்த்தேன\\
இதுதான் கலைஞானியோட வெற்றி...;))
உங்களை அடிச்சு புடிச்சு டிக்கேட் வாங்க வைக்கவும் செய்வார். அதே போல இப்படி பதிவு போட வைக்கவும் செய்வார்.
\\கமல் சார்.. நீங்க இன்னும் நிறைய பண்ணனும்\\
இன்னும் என்னாங்க செய்யனும் அதையும் பட்டியல் போட்டு சொல்லிடுங்க சாமி ;)
1,2,3,4,5,6 இந்த ஐடியா எல்லாம் உண்மையில் சூப்பருங்க...இப்படி கூட செய்யலாம்ன்னு தோணுது..சூப்பர் ;)
\\பாட்ஷா படத்துல ரஜினி மெடிக்கல் காலேஜ் சீட்க்கு மூடுன ரூம்குள்ள பேசுற காட்சி இருக்கு பாருங்க. அது பிரமாண்டம். அப்படியே புல்லரிக்கணும்.\\
சார்...புல்லரிக்கணும் அப்படின்னா நீங்க ரஜினி படத்துக்கு தான் போகனும்...கமல் படத்தை பார்த்துட்டு இதுல ரஜினி மாதிரி புல்லரிக்கிற சீன் இல்லைன்னு சொல்லறது எல்லாம் காமெடிங்க ;)))
\\இசை: இப்பவும் இதே படத்தை அப்படியே கொண்டு போய் இளையராஜா கிட்ட கொடுங்க. அவர் முதல் 20 நிமிடத்துக்கும் கடைசி 20 நிமிடத்துக்கும் அப்படியே மாறுப்பட்ட கோணம் கொடுத்திருப்பார்.\\
இதுக்கு ஒரு ஸ்பெசல் ஒ...;)))
என்னடா கமலுக்கு வந்த சோதனை
ஷோபன்
நீங்க நல்லவரா கெட்டவரா?
//6- அட.. அட்லீஸ்ட் கமல் & ஜெயப்ரதாவை மட்டும் வச்சு ஒரு சலங்கை ஒலி பார்ட் 2 எடுத்திருக்கலாம். ( அசின், மல்லிகாவை விட ஜெயப்ரதா சூப்பர்.. ஹீஹீஹீ)//
ஹிஹி.. இ லைக் இட் :P
Poda dupukku
//3- மணல் கொள்ள, பூவராகன், பால்ராம் நாயுடு, அசின் கேரக்டர்களை வைத்து ஒரு KS ரவிகுமார் ஸ்டைல்ல மசாலா படம் எடுத்திருக்கலாம்.//
அட இது சூப்பர்! நான் ஒரு பத்து தடவை பார்த்துடுவேன்:)
///SanJai said...
//6- அட.. அட்லீஸ்ட் கமல் & ஜெயப்ரதாவை மட்டும் வச்சு ஒரு சலங்கை ஒலி பார்ட் 2 எடுத்திருக்கலாம். ( அசின், மல்லிகாவை விட ஜெயப்ரதா சூப்பர்.. ஹீஹீஹீ)//
ஹிஹி.. இ லைக் இட் :P///
ரிப்பீட்டேய்..
//கானா பிரபா said...
என்னடா கமலுக்கு வந்த சோதனை//
தல நீங்க கவலைபடாதீங்க. அவரு சோதனைகளை எல்லாம் சாதனைகளா மாத்திடுவாரு!
//படித்து நானே பிரமித்து விட்டேன்.//
அது சரி!
//அதுக்கு நிறைய அஜித், சிம்பு எல்லாம் இருக்காங்க.//
haahaa..இது டாப்பு! :)
செஞ்சாலும் தப்பு செய்யாடியும் தப்பு... என்னனு செல்றது... கமல் என்ற கலை ஞானிய வாழவிடமாட்டிங்க போல...
//ஷோபன்
நீங்க நல்லவரா கெட்டவரா?//
இது நல்லா இருக்கு
வர வர நாட்டுல இந்த கருத்து கந்தசாமிங்க தொல்ல தாங்கமுடியலைடா அப்பூ :((
// இது எல்லாமே நம் மூளையை 3 மணி நேரத்துக்கு ரொம்ப கஷ்டப்படுத்திடுச்சு//
அதெல்லாம் மூளை இருக்கறவங்களுக்கு...
//. ( அசின், மல்லிகாவை விட ஜெயப்ரதா சூப்பர்.. ஹீஹீஹீ)
//
இது சூப்பரூ :)))
idhukku dhaan over build-up koodadhungradhu..
idhula Oscar'ku anuppa poraangalam.. haiyoo... haiyoo...
athey athey...ejjactly same blud afer seeing the movie..
/
மல்லிகா ரோல் நல்லா இருந்துச்சு. மல்லிகாவை சாக அடிச்சதுக்கு பதிலா அசினை சாக அடிச்சிருக்கலாம். அசின் கேரக்டர் அவ்வளோ இர்ரிட்டேட்டிங்கா இருந்துச்சு
/
Same blood
என்னடா இது கமலுக்கு வந்த சோதனை
கானா பிரபா said...
ஷோபன்
நீங்க நல்லவரா கெட்டவரா?
25
/
நிஜமா நல்லவன் said...
//3- மணல் கொள்ள, பூவராகன், பால்ராம் நாயுடு, அசின் கேரக்டர்களை வைத்து ஒரு KS ரவிகுமார் ஸ்டைல்ல மசாலா படம் எடுத்திருக்கலாம்.//
அட இது சூப்பர்! நான் ஒரு பத்து தடவை பார்த்துடுவேன்:)
/
:)))))
மொத்தத்தில 'ஆப்பு'ரேசன் சக்சஸ் பேஷண்ட் டைட் அப்படிங்கறீங்க!!
:)))))
//அதுக்கு நிறைய அஜித், சிம்பு எல்லாம் இருக்காங்க.//
இங்கு சித்தார்த்தை விட்டதை சமூகம் வன்மையாக கண்டிக்கிறது
//அதுக்கு நிறைய அஜித், சிம்பு எல்லாம் இருக்காங்க.//
இங்கு சித்தார்த்தை விட்டதை சமூகம் வன்மையாக கண்டிக்கிறது
/
//அதுக்கு நிறைய அஜித், சிம்பு எல்லாம் இருக்காங்க.//
இங்கு சித்தார்த்தை விட்டதை சமூகம் வன்மையாக கண்டிக்கிறது
/
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்
@ Gopinath:
thanks J. Nejamave pullarikka (bramikka vaikkira…) vaikkira kamal padangal irukkunga Gopi…rajini padam maathiri illainu solrathu comedy illai..muttalthanam…rajini and kamal compare pannave koodathu. Naan ethirparthathu andha bramippu thaan. Ungalin karuthukkalukku nandri Gopi.
@Kanaa Praba:
Thanks praba J. Naan nallavana…kettavanaa….theriyalayeppaaa….innum nallavana irundha nalla irukkumnu thaan solren :-))
@ SanJai:
Thanks
@ anony:
naan dubukku ngarathu ellarukkum therinju poche
@: Vikneshwaran:
Neenga thappa purinjukiteenga Vikneshwaran. Kalai gnani inum super ah theliva padam kuduthirukkalamenu thaan varuthapaduren.
@Shenshi:
Thanks Shenshi J. Naan ennudaya karuthukkala yaar melayum thinikkala. Ithellam ennoda opinions…avvalavuthaan. Ungaloda karuthukkal maarupattathaa irukkalaam…athu enakku pidikkama kooda irukkalaam…but atha naan thollai nu nenaikka matten. Of course enakku moolai illaithaan….but enna maathiri aalungalukkum puriyara maathiri irundha nalla irukkumla sir. Anyways thanks
@ Nijama Nallavan, Joe, Aayilyan and Tamizhmaangani:
Thanks
//மல்லிகா ரோல் நல்லா இருந்துச்சு. மல்லிகாவை சாக அடிச்சதுக்கு பதிலா அசினை சாக அடிச்சிருக்கலாம். அசின் கேரக்டர் அவ்வளோ இர்ரிட்டேட்டிங்கா இருந்துச்சு
/
அது சரி. விழுந்தடிச்சிட்டு ஓடி போய் படம் பார்த்த ஒரு சிலரை கொன்னுப்புட்டாங்க. அத சொல்லக் காணும்!
நாட்டுல குற்றம் சொல்லி பேர் வாங்குறவுங்க நிறைய இருக்காங்க....
நாட்டுல குற்றம் சொல்லி பேர் வாங்குறவுங்க நிறைய இருக்காங்க....
...ரவி...
Post a Comment