Sunday, August 05, 2007

184. மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப்தான்

மதியம் ஒன்றை தாண்டி கடிகாரம் வேகமாய் சுழன்று கொண்டிருந்தது. ஆபிஸே காலியாக இருந்தது. கவிதா மட்டும் மும்முரமாக தன் ப்ராஜெக்ட்டில் மூழ்கியிருந்தாள்.

"ஹேய்.. நீ லஞ்சுக்கு போகல இன்னைக்கு?" அமைதியை கலைத்தாள் அமுதா.

"இல்லப்பா.."

ஒற்றை வார்த்தையில் பதிலளித்து மீண்டும் தன் கம்பியூட்டரில் மூழ்கினாள் கவிதா.

"உனக்கு எப்போ வேலை இல்லைன்னு சொல்லியிருக்க! ஹ்ம்ம்.. சரி இந்தா... சாக்லேட் எடுத்துக்கோ!"

"என்ன விசேஷம் இன்னைக்கு?"

"மறதி கோழி. போன வாரம்தானே சொன்னேன். இன்னைக்கு என் பொண்ணோட பிர்த்டேன்னு!" அமுதா செல்லமாக கடிந்துக்கொண்டாள்.

கவிதா தன் மேஜை நாள்காட்டியை பார்த்தாள்.

ஏப்ரல் 22..

அந்த தேதியை நாள்காட்டியில் பார்ததும் கவிதா அமைதியானாள்.. அவள் எண்ணங்கள் எட்டு வருடங்கள் பின்னோக்கி போனது..

*******************************************************************************

"ஹேய், நாளைக்கு ஸ்கூலையே ஒரு கலக்கு கலக்கிடனும்டா. இவ பிர்த்டேக்கு ஸ்கூலுக்கே லீவு கொடுக்க முடியலைன்னாலும், இந்த ஸ்கூலே அவளுக்கு பிர்த்டே பாட்டு பாடணும்".. தன் கனவுகளை வார்த்தையாய் கொட்டிக்கொண்டிருந்தாள் கவிதா.

"என்னடா சொல்ற! அது எப்படி சாத்தியம் ஆகும்? வேணும்ன்னா, பள்ளி முடிஞ்சதும் நாம் ஸ்வீட்டிக்கு போய் கேக் வாங்கி கொண்டாடுவோம்" என்று மலர் மறுத்து கவிதாவின் கற்பனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.

"ம்ம்.. இல்லடா.. இப்படி இது வரை யாருமே பிறந்த நாள் கொண்டாத அளவுக்கு செய்து அசத்தணும். இது கூட செய்யலைன்னா நாமெல்லாம் எதுக்குடா ஃபிரண்டுன்னு இருக்கோம்" கவிதா திரும்பவும் ஆரம்பிக்க.

"சரிடா. இப்ப என்ன செய்யலாம்? ஒவ்வொருத்தவங்க பிறந்த நாளையும் நீதான் ப்ளான் பண்ணுவ. நீயே இதையும் செய். நான் என்ன செய்யணும்ன்னு மட்டும் சொல்லிடு. செய்யுறேன்.."

"குட்.. அப்போ நாளைக்கு இதான் ப்ளான்.."

கவிதா பிறந்த நாள் பிளான் சூப்பரா போட்டாள்..

"அட, இந்த ப்ளான் நல்லா இருக்கே. ஆனால், கொஞ்சம் ரிஸ்க்.."

"கவலைப்படாதே.. அது நான் பார்த்துக்குறேன்.."

******************************************************************************

மறுநாள்.. அதே பள்ளியில் காலை 7.00க்கு..

"மலர், அனிதா வர்றா.. கண்டுக்காத மாதிரி இருடா"

கவிதாவும் மலரும் தமது வேலைகளில் மும்முரமாக இருந்தனர்.. அனிதாவின் பிறந்த நாளில் எப்போதுமே முதலில் வாழ்த்து சொல்பவர்கள் இவர்கள்தான். இன்றைக்கும் இவங்கதான் "மீ த ஃபர்ஸ்ட்டூ"ன்னு வாழ்த்துவாங்கன்னு ஆவலுடன் வந்தாள்.

ஆனால் இவர்கள் கண்டுக்காததை கண்டு மிகவும் வருத்தப்பட்டாள். இன்று தன் பிறந்தநாள்ன்னு பல அறிகுறிகளை காட்டினாள். ஆனால், இவர்கள் தெரிந்ததாக காட்டிக்கவில்லை.

கவிதா மாணவர் தலைவி என்பதால் 7.25க்கு டியூட்டி இருக்கென்று சொல்லி வகுப்பறையை விட்டு வெளியேறினாள். மலரோ எங்கே சென்றாள் என்று தெரியவில்லை.

7.30 மணிக்கு மாணவர்கள் தத்தம் வகுப்பறையின் வெளியே வரிசையில் நின்று தேசிய கீதம் பாடிவிட்டுதான் வகுப்புக்கு செல்ல வேண்டும். எல்லாரும் எப்போதும் போல் உற்சாகமாக பாட, அனிதா மட்டும் ஒரு வித சோகத்துடனேயே இருந்தாள். தேசிய கீதம் பாடி முடிந்ததும், தலைமை ஆசிரியர் ஒரு சின்ன உரை ஆற்றினார். அதன் பிறகு எல்லாரும் வகுப்பினுள் போக முற்ப்பட்டபோது, பிறந்த நாள் பாடல் பள்ளி ஒலிபெருக்கியில் பாட, ஒரு பள்ளியே சேர்ந்து பாடியது.

Happy Birthday To You..
Happy Birthday To You..
Happy Birthday To Anitha..
Happy Birthday To You..

அனிதாவுக்கு ஒரே ஷாக். பாடல் பாடி முடிந்ததும், அதே ஒலிபெருக்கியில் கவிதாவின் குரல். தன் தோழிக்கு ஒரு இன்ப அதிர்ச்சியா, ஒரு பள்ளியே சேர்ந்து அவள் பிறந்த நாள் கொண்டாட வேண்டும் என்ற ஆசை நிறைவேறியது என்று சொல்லி, மீண்டும் ஒரு முறை வாழ்த்தினாள்.

கவிதா வகுப்புக்கு வந்து சேரும் பொழுது, அனிதா முகம் கண்ணீருக்கு பின்னால் ஒளிந்திருந்தது. அப்படியே மலர் கொண்டு வந்த கேக்கை ஊதி வெட்டி கவிதாவுக்கும் மலருக்கும் ஊட்டினாள்.

இப்படி நெருக்கமாக இருந்த அந்த நட்பு, அன்றே உடையும் என்று யாரும் எதிர்ப்பார்க்கவில்லை..

*****************************************************************************
மணி 3 மதியம்..
இடம்: பள்ளி நூல்நிலையம்

"நான் கிளம்புரேண்டா. 5 மணிக்கு டியூஷன்ல பார்ப்போம்." என்று சொல்லி கவிதா தன் புத்தகப்பையை தூக்கிட்டு வெளியானாள்.

பள்ளியை விட்டு சிறிது தூரம் நடந்து வந்தவள், முக்கியமான புத்தகம் ஒன்றை அனிதாவிடம் மறந்து விட்டது ஞாபகம் வர, திரும்ப நூல்நிலையத்துக்கு நடந்து வந்தாள்..

அங்கே..

கவிதாவுக்கு ஒரு பக்கம் ஷாக்.. அனிதாவுக்கு ஒரு பக்கம் ஷாக். இவர்களை பார்த்த மலருக்கு இன்னொரு பக்கம் ஷாக்.. இன்னொருவொருவருக்கும் ஷாக்.. அவர் கவிதாவின் அண்ணன்.

கவிதாவின் அண்ணன் கவிதாவை விட இரண்டு வயது மூத்தவர். அதே பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். கவிதாவுக்கும் அவள் அண்ணனுக்கும் குணங்கள் முழுமையாக வேறுப்பட்டிருக்கும். கவிதாவை ஒரு பள்ளியே அறியும். டீச்சர்ஸ்க்கிட்ட நல்ல பெயர். மாணவர்களிடையே ஜூனியர் முதல் சீனியர் வரை எல்லாருக்குமே கவிதாவை தெரியும். ஆனால், அவள் அண்ணன் ஜீவா ரொம்ப அமைதியான டைப். யாருக்கும் அவர் இருப்பதே தெரியாது.

இன்று ஜீவாவும் அனிதாவும் ஒரே மேஜையில் உட்கார்ந்திருப்பதை பார்த்தாள் கவிதா. அது ஒரு ஷாக் இல்லை. ஆனால் அவர்கள் கைகளை பிடித்து உட்கார்ந்திருந்ததுதான் அவளுக்கு அப்படி ஒரு ஷாக்.

அந்த வயதில் காதலிப்பதே தப்பென்று சொல்பவள் கவிதா. இதனால் பல நாட்கள் மலருக்கும் கவிதாவுக்கும் வாக்குவாதம் நடந்திருக்கிறது.

தன் தோழிக்காக அந்த கொள்கையை கை விடுவதாக இருந்தாலும், இத்தனை நாட்கள் இந்த விஷயத்தை மறைத்து விட்டாளே என்ற கோபமும் தலைக்கேறியது. நட்பில் ஒளிவு மறைவு இருக்க கூடாதுன்னு முடிவுடன் இருந்தவள் கவிதா. அவளும் அதை கற்பு போல் காப்பாற்றியவள்..

அந்த சம்பவத்தை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காதலித்த அனிதாவின் மேலும், அந்த காதலை ஊற்றி வளர்த்த மலரின் மேலும் உள்ள கோபத்தை அடக்க முடியவில்லை. அவளுக்கு அவர்களை திட்ட கூட முடியவில்லை. கண்ணீர் மட்டுமே நிரம்பியது.

அப்படியே திரும்பி வீட்டுக்கு போய்விட்டாள். நாள் முழுதும் அழுதாள். பிறகு கண்ணீரை துடைத்துக் கொண்டு இனி இவர்களிடமிருந்து தள்ளி இருப்பதே நல்லதென முடிவெடுத்தாள். மலர் எத்தனையோ தடவை கவிதாவை தொடர்பு கொண்டாள். முடியவில்லை.

கவிதா இவர்களை சந்திப்பதை தவிர்த்தாள். காலேஜில் அட்மிஷன் கிடைச்சதும், தன்ன்னுடைய படிப்பிலேயே கவனம் செலுத்தினாள்.

நடுவில், ஏதோ ஒரு பிரச்சனையில் தன் அண்ணனும் அனிதாவும் பிரிந்து விட்டதாகவும், அதில் அனிதா ரொம்ப டிப்ரஸ்ட்டாகவும் இருப்பதாக கேள்விப்பட்டாலும், அவளுக்காக கவலைப்பட்டாலும்.. தன் வைராக்கியம் அவளை பார்க்க இடம் கொடுக்க வில்லை..

**************************************************************************
எட்டு வருடம் ஆகிவிட்டது. அனிதா, மலர் நட்பு இன்னமும் மனதில் ஆழமாக பதிந்திருந்தது கவிதாவுக்கு..

செல்போன் ரிங் ஆகி கவிதாவின் எண்ணங்களை கலைத்தது..

'Private Number Calling..'

யாராக இருக்கும் என நினைத்துக்கொண்டே போனை எடுத்தவள், "ஹலோ, கவிதா ஸ்பீக்கிங்..."

"...."

"ஹலோ.. வூ இஸ் ஆன் த லைன் ப்ளீஸ்?"

"ஹ.... ஹல்லோ"

அந்த குரலை கேட்டதும் ஒரு நிமிடம் ஜெர்க் ஆகி நின்றாள் கவிதா.

"மலர்?"

"ஆமாம் கவிதா...."

"ஹேய்.. எப்படி இருக்கடா? இப்போ என்ன பண்றே? எங்கே இருக்கே?" மலரின் குரலை கேட்ட கவிதாவுக்கு தலைக்கு மேலே பல்ப் எறிந்சதைப்போல் தெளிவானாள்..

உலகமே மறந்துட்டு மலரோட அரட்டை அடிச்சுட்டு இருந்தாள். திடீரென்று,

"மலர், அனிதா இப்போ எப்படி இருக்கா?"

"ம்ம்.. அவளை பத்தி நீயே கேட்பேன்னுதான் இவ்வளவு நேரம் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்."

"நான் அவளை ரொம்ப மிஸ் பண்றேண்டா.."

"ஐ மிஸ் யூ டூ.. என்னை மன்னிச்சிடு"

"ஹேய்.. ஹேய்.. அனிதா?"

"அனிதாதான் பேசுறேன்.. இவ்வளவு நேரம் நீ என் கிட்ட பேசுவீயான்னு வேய்ட் பண்ணிட்டே இருந்தேன். நீ என்னைக்கும் என்னை மறக்க மாட்டே.. உன் நட்பை நாந்தான் புரிஞ்சிக்கல. மன்னிச்சிடுடா"

"ஹேய்.. அனி.. இப்பக்கூட நான் உன்னைத்தான் நெனச்சிட்டிருந்தேன். எப்படி உன் கிட்ட பேசுறதுன்னு யோசிச்சிட்டே இருந்தேன்.. இப்போ எங்கே இருக்க?"

"நான் இப்போ கே.எல்.சி.சியில் இருக்கேன்.."

"அங்கேயே இரு.. நான் வந்துட்டே இருக்கேன்."

போனை ஆஃப் செய்துட்டு சந்தோஷமாக ஓடி காரில் ஏறினாள் கவிதா. இன்று எப்படி அனிதாவின் பிறந்த நாளை கொண்டாடுவது என்று ப்ளான் போட்டுக்கொண்டே கே.எல்.சி.சியை நோக்கி தன் காரில் பயணமானாள் கவிதா.

-----------------------------------------------------------------------------------
இன்று நண்பர்கள் தினம். நம்மை அறியாமலேயே நம் நண்பர்களிடம் இப்படி சண்டை போட்டிருந்தால், மறப்போம் மன்னிப்போமாக. :-)

என் வலையுலக நண்பர்களுக்கு என் இதயம் கனிந்த நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!


78 Comments:

G3 said...

Mee the Firshtu :))

G3 said...

Happy friendship day :))

G3 said...

//கவிதா மட்டும் மும்முறமா தன் ப்ராஜெக்ட்டில் மூழ்கியிருந்தாள்.//

Blogging/ chatting project ;)

G3 said...

//இப்படி இது வரை யாருமே பிறந்த நாள் கொண்டாத அளவுக்கு செய்து அசத்தணும். இது கூட செய்யலைன்னா நாமெல்லாம் எதுக்குடா ஃபிரண்டுன்னு இருக்கோம்" //

yakka.. en porandhanaal on the way nnu naan solla maaten ;)

G3 said...

//அவர் கவிதாவின் அண்ணன்.//

engada hero entryae kaanumae.. verum ladies specialannu paathen.. aana ippadi villana intro kuduthuteengalae :(

அபி அப்பா said...

சூப்பர் கதை தங்கச்சி!

அபி அப்பா said...

எழுத்து நடை சூப்பர்!

அபி அப்பா said...

////கவிதா மட்டும் மும்முறமா தன் ப்ராஜெக்ட்டில் மூழ்கியிருந்தாள்.//

இந்த வரி சூப்பர். நானும் படிசுட்டு தன் பின்னூட்டம் போடுறேன்ப்பா:-))

அபி அப்பா said...

//இது கூட செய்யலைன்னா நாமெல்லாம் எதுக்குடா ஃபிரண்டுன்னு இருக்கோம்" //

இதுவும் சூப்பர்!

G3 said...

Kadhai overall super.. asathiteenga my friend :))

கோபிநாத் said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் தோழி ;-))

G3 said...

//நானும் படிசுட்டு தன் பின்னூட்டம் போடுறேன்ப்பா:-)) //

@abi appa, Edha padicheenganu sollaliyae.. postaya commentaya?? ;))

கோபிநாத் said...

\\"மறதி கோழி. போன வாரம்தானே சொன்னேன். இன்னைக்கு என் பொண்ணோட பர்துடேன்னு!" அமுதா செல்லமாக கடிந்துக்கொண்டாள்.\\\

;-)))))))

உண்மை...உண்மை

கோபிநாத் said...

\\"ம்ம்.. இல்லடா.. இப்படி இது வரை யாருமே பிறந்த நாள் கொண்டாத அளவுக்கு செய்து அசத்தணும். இது கூட செய்யலைன்னா நாமெல்லாம் எதுக்குடா ஃபிரண்டுன்னு இருக்கோம்" கவிதா திரும்பவும் ஆரம்பிக்க.\\

இப்படி எல்லாம் போட்டு மலரும் நினைவுகளை ஞாபகப் படுத்திட்டிங்க....போங்க உங்க பேச்சு...கா ;-(

கோபிநாத் said...

\\இன்று நண்பர்கள் தினம். நம்மை அறியாமலேயே நம் நண்பர்களிடம் இப்படி சண்டை போட்டிருந்தால், மறப்போம் மன்னிப்போமாக. :-)

என் வலையுலக நண்பர்களுக்கு என் இதயம் கனிந்த நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!\\

கலக்கியிருக்கிங்க...வாழ்த்துக்கள் ;-))

கண்மணி/kanmani said...

//கலக்கியிருக்கிங்க...வாழ்த்துக்கள் ;-))//

கோபி சொன்னது சரிதான் கலக்கிடுச்சி [வயித்த]

குசும்பன் said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் தோழி ;-))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நீங்க பதிவு போட்டதும் படிச்சிட்டு ஓடிப்போய் எல்லா ப்ரண்ட்ஸுக்கும்
ஆப்லைனில் ஒரு வரிய எழுதி போட்டேன்..விஷ்ஷஸ்ன்னு.. நல்ல கதை...

CVR said...

அழகான கதை!!


நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்!! :-)

இராம்/Raam said...

நண்பர் தின வாழ்த்துக்கள்....

இராம்/Raam said...

சிறுகதையில் கலக்கும் எழுத்தாளர் மலேசிய மாரியத்தா-2 மை ஃபிரண்ட் வாழ்க!! வாழ்க!!!

TBCD said...

இதுவும் உன்மைக் கதையா..?
நான் எல்லா கதையும் படிக்கிறதில்ல...
ரொம்ப சூஸி :)))))))))
.... இந்த கதை படிச்சேன்...
நல்ல நடை..வாழ்த்துக்கள்

ஜொள்ளுப்பாண்டி said...

Happy friendship Day !!! :)))

ILA (a) இளா said...

கொஞ்சம் கலங்க வெச்சுடேப்பா.

கப்பி | Kappi said...

அருமையான கதை!! வாழ்த்துக்கள்!

Bharani said...

Happy Friendship day :)

Bharani said...

thangachi...kadhai ellam eppa aarambichemma...annanukum konjam solli kudu...romba naala ippadi supera oru kadhai ezhudhanumnu nenachikite iruken :)

Bharani said...

moozhginaalum friendship friendship dhaan...yenna adhu submarine maadhiri sila nerathula :)

Bharani said...

innum niraya kadhai ezhudhanum...sariya :)

Bharani said...

30 kadhaiku :)

My days(Gops) said...

அந்த நாள் நியாபகம் நெஞ்சிலே வந்ததே வந்ததே நண்பனனே நண்பனனே பாட்டு தான் ஓடுது இங்க..

My days(Gops) said...

//ஆபிஸே காலியாக இருந்தது. கவிதா மட்டும் மும்முரமாக தன் ப்ராஜெக்ட்டில் மூழ்கியிருந்தாள்.
//


இது கண்டிப்பா நீங்க தான்..... புனை, பூனை பேரு எல்லாம் எப்படி வச்சாலும் நாங்க கண்டுப்பிடிப்போம்'ல...

My days(Gops) said...

//ஹேய்.. நீ லஞ்சுக்கு போகல இன்னைக்கு?" அமைதியை கலைத்தாள் அமுதா.

"இல்லப்பா.."

ஒற்றை வார்த்தையில் பதிலளித்து மீண்டும் தன் கம்பியூட்டரில் மூழ்கினாள் கவிதா.
//

இதுல சந்தேகம் ஓவர் confirmed

My days(Gops) said...

//ஹேய், நாளைக்கு ஸ்கூலையே ஒரு கலக்கு கலக்கிடனும்டா//
ஸ்கூல் பேரு என்ன "ரஸ்னா"வா? கலக்கு கலக்கு னு வருது :P


//கலக்கிடனும்டா//
//இல்லடா//
//சரிடா//
//எதுக்குடா//
என்னங்கடா ஒவர் டால்டா வா இருக்கு... டி யா இல்ல டா வா... சொல்லிடுங்க பிளிஸ்...

My days(Gops) said...

//ஆனால் இவர்கள் கண்டுக்காததை கண்டு மிகவும் வருத்தப்பட்டாள்//

பன் பன்...

//பல அறிகுறிகளை காட்டினாள். ஆனால், இவர்கள் தெரிந்ததாக காட்டிக்கவில்லை.//

கீழ கிடக்கிற கல்லை எடுத்து அவங்க மண்டைல போட்டு இருக்கனும்...

பிறந்த நாள் அதுவுமா இப்படி தான் டிஸ்.அப்பாயிண்ட் பண்ணுறதா? ஹி ஹி ஹி ஹி...

My days(Gops) said...

//கவிதா வகுப்புக்கு வந்து சேரும் பொழுது, //

தலைமை ஆசிரியர் என்ன பண்ணிக்கிட்டு இருந்தார்...?

//அனிதா முகம் கண்ணீருக்கு பின்னால் ஒளிந்திருந்தது. அப்படியே மலர் கொண்டு வந்த கேக்கை ஊதி வெட்டி கவிதாவுக்கும் மலருக்கும் ஊட்டினாள்.//

அப்போ, அனிதா
'நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு"

பதிலுக்கு கவிதா டெல்லிங்,
அதெல்லாம் அப்புறம்.. இப்போ ஒன்லி கேக் ஈடிங் :)

My days(Gops) said...

//கவிதாவின் அண்ணன் கவிதாவை விட இரண்டு வயது மூத்தவர்//

நல்ல கொடுக்குறாங்கப்பா விளக்கம்..

//கவிதாவுக்கு ஒரு பக்கம் ஷாக்.. அனிதாவுக்கு ஒரு பக்கம் ஷாக். இவர்களை பார்த்த மலருக்கு இன்னொரு பக்கம் ஷாக்.. //

இரும்பு அடிக்கிற இடத்துல ஈ க்கு என்ன வேலை கிடக்கு?
நான் மலரை கேட்டேனாக்கும்...

My days(Gops) said...

//அப்படியே திரும்பி வீட்டுக்கு போய்விட்டாள்//

அடடா, அப்போ அந்த புக்?

//அப்படியே திரும்பி வீட்டுக்கு போய்விட்டாள். நாள் முழுதும் அழுதாள். பிறகு கண்ணீரை துடைத்துக் கொண்டு இனி இவர்களிடமிருந்து தள்ளி இருப்பதே நல்லதென முடிவெடுத்தாள். மலர் எத்தனையோ தடவை கவிதாவை தொடர்பு கொண்டாள். முடியவில்லை.//

சட்டி சுட்டதுடா, கை விட்டதுடா.......

My days(Gops) said...

//அந்த குரலை கேட்டதும் ஒரு நிமிடம் ஜெர்க் ஆகி நின்றாள் கவிதா.
//

ஹா ஹா ஹா, பரவாயில்லைங்க உங்க ஊருலையும் அந்த ஜெர்க் வார்த்தை இருக்குங்களா?

//கவிதாவுக்கு தலைக்கு மேலே பல்ப் எறிந்சதைப்போல் தெளிவானாள்//

சோடா செலவு மிச்சம்.... :)

My days(Gops) said...

//உலகமே மறந்துட்டு மலரோட அரட்டை அடிச்சுட்டு இருந்தாள்//

ஒரு வார்த்தை சொல்ல எட்டு வருஷம் காத்திருந்தாங்ளோ?

//நான் அவளை ரொம்ப மிஸ் பண்றேண்டா.."
"ஐ மிஸ் யூ டூ//

அப்போ எட்டு வருஷம் ஆகியும் ரெண்டு பேரும் "மிஸ்" ஆக தான் இருக்காங்களா?

My days(Gops) said...

//அனி.. இப்பக்கூட நான் உன்னைத்தான் நெனச்சிட்டிருந்தேன். எப்படி உன் கிட்ட பேசுறதுன்னு யோசிச்சிட்டே இருந்தேன்//

எல்லாம் வாய்ல தானே பேசுவாங்க? சுத்தம்...

My days(Gops) said...

ஒரே ஊருல இருந்துக்கிட்டு எப்படிங்க
"Private number calling" னு வரும்...

என்னங்க இது? லாஜிக் இடிக்கிதே? ம்ம்ம்ம்ம்

My days(Gops) said...

கடைசில கவிதா அண்ணனுக்கு என்ன ஆச்சினு சொல்லவே இல்ல?

My days(Gops) said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

My days(Gops) said...

//இன்று நண்பர்கள் தினம். நம்மை அறியாமலேயே நம் நண்பர்களிடம் இப்படி சண்டை போட்டிருந்தால், மறப்போம் மன்னிப்போமாக. :-)
//

மெஸேஜ் எல்லாம் பட்டாசு கிளப்புது :)

My days(Gops) said...

உண்மை கதையா?

இல்ல

கதை கதையா?

My days(Gops) said...

உண்மை னா உண்மை

கதை னா கதை

இப்படி தானே சொல்லுவீங்க?

My days(Gops) said...

சொல்லுறத்துக்கு ஒன்னும் இல்லை

My days(Gops) said...

49 வெற்றியை சைக்கிள் கேப்'ல விட்டு வேடிக்கை பார்க்கிறதே வேலையா போச்சி... ஹி ஹி ஹி ஹிஹி

50 யாரு போட போறா?

Dreamzz said...

//49 வெற்றியை சைக்கிள் கேப்'ல விட்டு வேடிக்கை பார்க்கிறதே வேலையா போச்சி... ஹி ஹி ஹி ஹிஹி //
அதே சைக்கில, நடந்து வந்தே ஓவர் டேக் பன்னி, பின்னி பெடலெடுத்து, ஜெயிக்கிறதே நமக்கும் வேலயா போச்சு!
என்ட்ரி வித் 50

Dreamzz said...

கதை நல்லா இருக்குங்கோவ்!

MyFriend said...

G3:

//yakka.. en porandhanaal on the way nnu naan solla maaten ;)//

அதுக்கென்ன.. ஜமாய்ச்சிடலாம்.. எந்த ஓட்டல்ல ட்ரீட் வேணும் கண்ணா? :-)

//engada hero entryae kaanumae.. verum ladies specialannu paathen.. aana ippadi villana intro kuduthuteengalae :( //

வில்லனா? அப்படி யாரும் இங்கே இல்லையே? ;-)

//Kadhai overall super.. asathiteenga my friend :)) //

ஆமாவா? உங்க ஃபிரண்டுக்கு யாருக்கோ இதே மாதிரி நடந்துச்சுன்னு சொன்னீங்களே.. தத்ரூபமா இருக்கா?

MyFriend said...

@அபி அப்பா:

//சூப்பர் கதை தங்கச்சி! //

ஆஹா.. ஆரம்பிச்சிட்டார்ய்யா.. :-P


//எழுத்து நடை சூப்பர்! //

நடை சூப்பர்ன்னு சொல்லியாச்சு. ஓட்டம் எப்படி இருந்துச்சுன்னு சொல்லலையே? ;-)

அபி அப்பா, நீங்க படிக்காமலேயே பின்னூட்டம் போடுவதை நான் புரிஞ்சிட்டேன். G3யோட கமேண்ட்டா ரிப்பீட் ஆகுது. ;-)

MyFriend said...

@கோபிநாத்:

//\\"மறதி கோழி. போன வாரம்தானே சொன்னேன். இன்னைக்கு என் பொண்ணோட பர்துடேன்னு!" அமுதா செல்லமாக கடிந்துக்கொண்டாள்.\\\

;-)))))))

உண்மை...உண்மை //

என்னது உண்மை? உங்களுக்கு இதே மாதிரி நடந்துச்சா? ;-)

//இப்படி எல்லாம் போட்டு மலரும் நினைவுகளை ஞாபகப் படுத்திட்டிங்க....போங்க உங்க பேச்சு...கா ;-(//

சரி சரி.. மூக்கை சிந்தி அபி அப்பா சட்டையில தொடச்சிட்டு அடுத்த வேலையை பாருங்க அண்ணா. :-)

//கலக்கியிருக்கிங்க...வாழ்த்துக்கள் ;-))//

நன்றி நன்றி. :-)

MyFriend said...

@கண்மணி:

//கோபி சொன்னது சரிதான் கலக்கிடுச்சி [வயித்த]//

சீக்கிரம் ஓடுங்க டாய்லெட்டுக்கு.. :-P

MyFriend said...

@முத்துலெட்சுமி:

//நீங்க பதிவு போட்டதும் படிச்சிட்டு ஓடிப்போய் எல்லா ப்ரண்ட்ஸுக்கும்
ஆப்லைனில் ஒரு வரிய எழுதி போட்டேன்..விஷ்ஷஸ்ன்னு.. நல்ல கதை...//

வாவ். க்ரேட். :-)

MyFriend said...

@CVR:

//அழகான கதை!!//

நன்றி சிந்தனையாளரே. :-)

MyFriend said...

@இராம்:

//சிறுகதையில் கலக்கும் எழுத்தாளர் மலேசிய மாரியத்தா-2 மை ஃபிரண்ட் வாழ்க!! வாழ்க!!!
//

யப்பா. இப்போதான் ஏதோ கிறுக்கியிருக்கேன். அதுக்குள்ள கோஷம் போட்டு என்னை அடியோடு காணாமல் ஆக்கிடுவீங்க போலிருக்கே? ;-)

MyFriend said...

@TBCD:

//இதுவும் உன்மைக் கதையா..?
நான் எல்லா கதையும் படிக்கிறதில்ல...
ரொம்ப சூஸி :)))))))))
.... இந்த கதை படிச்சேன்...
நல்ல நடை..வாழ்த்துக்கள்//

நன்றி த்BCD அவர்களே. ;-)

MyFriend said...

@ILA(a)இளா:

//கொஞ்சம் கலங்க வெச்சுடேப்பா.//

ம்ம்.. எழுதியதும் நானும்தான்.. எப்படிப்பா உனக்கு இப்படி கதையெல்லாம் வருதுன்னு என்னை நெனச்சு நானே கலங்கிட்டேன். :-P

MyFriend said...

@கப்பி பய:

//அருமையான கதை!! வாழ்த்துக்கள்!//

நன்றி அறிவுஜீவி அவர்களே. :-)

MyFriend said...

@Bharani:

//thangachi...kadhai ellam eppa aarambichemma...//

நேத்து நைட்டுதான். ;-)

//annanukum konjam solli kudu...romba naala ippadi supera oru kadhai ezhudhanumnu nenachikite iruken :)//

என்னன்னு சொல்லி தர்றது.. நான் எழுதினது கதையான்னு எனக்கே ஒரு டவுட்டு இருந்துச்சு. :-P

//moozhginaalum friendship friendship dhaan...yenna adhu submarine maadhiri sila nerathula :)//

ஆமா. ஆமா.. எபப்டி மூழ்கினாலும். கண்டிபா கரைக்கு சேதாரம் இல்லாமல் வந்துடும். ;-)

//innum niraya kadhai ezhudhanum...sariya :)//

அண்ணன் பேச்சை மீறுவேனா? இப்போதைக்கு எழுதுற ஐடியா இல்லை. பட் கண்டிப்பா நீங்க சொன்னதுக்காக ட்ரை பன்றேன். ;-)

MyFriend said...

@My days(Gops):

//அந்த நாள் நியாபகம் நெஞ்சிலே வந்ததே வந்ததே நண்பனனே நண்பனனே பாட்டு தான் ஓடுது இங்க..//

உங்களுக்கு இந்த அனுபவம் இருந்துச்சோ? அதான் அந்த நாள் ஞாபககம் வந்திருக்கு. ;-)

//இது கண்டிப்பா நீங்க தான்..... புனை, பூனை பேரு எல்லாம் எப்படி வச்சாலும் நாங்க கண்டுப்பிடிப்போம்'ல...//

நீங்க ஏமார்ற அளவுக்கு எழுதியிருக்கேன்னா, கண்டிப்பா கதை சக்ஸஸ்தான். ஹீஹீ..

//இதுல சந்தேகம் ஓவர் confirmed//

இங்கேயும் கண்ஃபார்ம் ஆயிடுச்சு. நீங்க ஏமாந்துட்டீங்கன்னு. ஹீஹீ..

//என்னங்கடா ஒவர் டால்டா வா இருக்கு... டி யா இல்ல டா வா... சொல்லிடுங்க பிளிஸ்...//

பாசம்.. நெருக்கம்.. நட்பு.. வேற என்னத்தை சொல்ல. :-P

//இரும்பு அடிக்கிற இடத்துல ஈ க்கு என்ன வேலை கிடக்கு?
நான் மலரை கேட்டேனாக்கும்...//

மலர்தானே அந்த காதல் கவிதாவுக்கு தெரியாமல் காப்பாற்றீட்டு இருந்தாள் இவ்வளவு நாளா.... அதான் ஷாக். ;-)

//அடடா, அப்போ அந்த புக்?//

ஹ்ம்ம்.. எடுக்கலை.. :-(

//அப்போ எட்டு வருஷம் ஆகியும் ரெண்டு பேரும் "மிஸ்" ஆக தான் இருக்காங்களா?//

ஆமாம்.. இன்னும் சின்ன வயசு. :-P

//ஒரே ஊருல இருந்துக்கிட்டு எப்படிங்க
"Private number calling" னு வரும்...

என்னங்க இது? லாஜிக் இடிக்கிதே? ம்ம்ம்ம்ம்//

இங்கே நீங்க postpaid செர்வீஸ் யூஸ் பண்ணா, நம்பர் hide பண்றதுக்கு ஒரு form fillup பண்ணிட்டா, இப்படி private numberன்னு காட்டும்.

ஒரே வீட்டிலேயே இருந்து கால் பண்ணாலும், அந்த நம்பர் private numberன்னுதான் காட்டும். :-)

//கடைசில கவிதா அண்ணனுக்கு என்ன ஆச்சினு சொல்லவே இல்ல?//

கூடிய சீக்கிரம் டும் டும் டும்தான். ஆனா வேற ஒரு பொண்ணு கூட.. வேணும்ன்னா ஜீவாவின் காதல் கதைன்னு ஒரு தொடர் போட்டுடுவோமா? :-P

//உண்மை கதையா?

இல்ல

கதை கதையா?//

அதெல்லாம் சொல்லப்படாது.. உண்மைன்னு நெனச்சா உண்மை.. கதைன்னு நெனச்சா கதை.. பக்கத்து வீட்டுல நடந்ததை அப்படியே எழுதினேன்னு நெனச்சாலும் ஓக்கே.. இல்ல, எதுத்த வீட்டு பாட்டி சொன்ன கதைன்னு சொன்னாலும் ஓகே. :-)

//49 வெற்றியை சைக்கிள் கேப்'ல விட்டு வேடிக்கை பார்க்கிறதே வேலையா போச்சி... ஹி ஹி ஹி ஹிஹி //

என்ன ஒரு பெருந்தன்மை. :-)

MyFriend said...

@Dreamzz:

//அதே சைக்கில, நடந்து வந்தே ஓவர் டேக் பன்னி, பின்னி பெடலெடுத்து, ஜெயிக்கிறதே நமக்கும் வேலயா போச்சு!
என்ட்ரி வித் 50//

50 போட்ட ட்ரீம்ஸ்க்கும்.. 50 போட உதவின கோப்ஸ்க்கும் ரெண்டு பெப்ஸி அனுப்புங்கப்பா. :-)

//கதை நல்லா இருக்குங்கோவ்!//

நன்றீங்கோவ். :-)

VIKNESHWARAN ADAKKALAM said...

unggalukkum enathu nanbargal tina nalvazthukal....

ACE !! said...

nanbar dhina vazthukkal my friend :D

மு.கார்த்திகேயன் said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் மை பிரண்ட்

மு.கார்த்திகேயன் said...

இவ்வளவு பெரிய போஸ்டா..ஹிஹிஹி.. மெதுவா வந்து படிக்கிறேனே மை பிரண்ட்

Anonymous said...

Kadhai super nga!!!
Old friends aa romba naaluku apparam meet pannaradhu iruke.. WOW words ye illanga.

Anonymous said...

Innorka appy friendship day solllikaren.. indha 70th comment la :)

Karthikeyan K said...

நல்லா இருக்கு 'மை ப்ரண்டு'.. :)
வாழ்த்துக்கள்..

Arunkumar said...

Belated Appy Friends day..

super message !!

Arunkumar said...

waiting to see more kadhais from you.. nicely written !!

Arunkumar said...

74

Arunkumar said...

late aa vandhaalum... 3 kottarsoda thaan poven :)

த.அகிலன் said...

இது பவளப்பின்னூட்டத்திற்கு அடுத்த பின்னூட்டம்.

Unknown said...

happy b'day to Anitha.

Raji said...

Thanks buddy...
Romba naguzhuchiyaana kadhai or unmai sambavam:)