Sunday, July 22, 2007

183. இது நான் நன்றி சொல்லும் நேரம்

பாசமழை பொழிகிறது..
ஒவ்வொரு துளியிலும் உங்கள் முகம் தெரிகிறது..
ப்ளாக்கர் தோட்டத்து நண்பர்களே
.:: மை ஃபிரண்ட் ::.க்கே "மை ஃபிரண்டுகளே"
பாசமழை பொழிகிறது..
ஒவ்வொரு துளியிலும் உங்கள் முகம் தெரிகிறது..


இந்த பதிவு ஏன்? எதுக்கு என்று நான் சொல்லவே தேவையில்லை.. You all made it complete. :-)


எதை சொல்ல..


அன்பு தங்கச்சியின் கவுண் டவுனை சொல்லவா?

G3-யின் ப்ராவகம் ஸ்பெஷல் விருது 2007-ஐ சொல்லவா?

தல கார்த்தியின் 500-ஆவது பதிவை எனக்கு பரிசளித்ததை சொல்லவா?

கவிதாயினி காயத்ரியின் என் நெஞ்சை நெகிழ வைத்த அந்த டெஸ்டிமோனியலை சொல்லவா?

பாசக்கார குடும்பத்தின் சார்பா குசும்பன் சொன்ன வாழ்த்தை சொல்லவா?

சித்துவையும் பாசக்கார குடும்பத்தில் சேர்க்க அனுமதிச்ச பாசக்கார குடும்பத்தை பற்றி சொல்லவா?

சித்து எனக்காக எழுதிய கவிதையை சொல்லவா? அனுப்பிய ஈ-கார்டை சொல்லவா?

இதையெல்லாம் செய்துட்டு மீண்டும் அவங்க பெயரில் மனமார வாழ்த்திய கண்மணியக்காவை பற்றி சொல்லவா?

எனக்கு எத்தனை வயசுன்னு போட்டி வச்சாங்களே, அதை சொல்லவா?

சரியாக பதிலளித்த கோபி எனக்காக அனுப்பிய அந்த அழகான வாழ்த்து அட்டையை சொல்லவா?

அனுசுயா கொடுத்த மலேசிய புயல் என்ற பட்டத்தை பற்றி சொல்லவா?

சிபி அண்ணாத்தே டெடிக்கேட் பண்ணிய பாடலை சொல்லவா?

இம்சையக்கா, ஜீ, ராம் அனுப்பிய அந்த அழகான பரிசை பற்றி சொல்லவா?

இரவு 12 மணியிலுருந்து கால் பண்ணி வாழ்த்து சொன்ன கோப்ஸ், புலி, அருண், கப்பியை பற்றி சொல்லவா?

காலையில் நடந்த கான்ஃபரன்ஸில் இணைந்து கலாய்த்த கே.ஆர்.எஸ், ட்ரீம்ஸ், சந்தோஷ் பற்றி சொல்லவா?

கலாய்க்கப்பட்ட சி.வீ.ஆரை பற்றி சொல்லவா?

ப்ளாக் யூனியன் மக்கள்ஸின் பாச மழைகளை சொல்லவா?

12 மணிக்கு எதிர்ப்பாராமல் வந்த மதி அக்காவின் மின்னஞ்சல் வாழ்த்தை சொல்லவா?

கடலில் இருந்தாலும் மறக்காமல் என்னை நினைத்து அழகிய ஈ-கார்டுடன் கூடிய அந்த அருமையான வாழ்த்து சொல்லிய கடல் கணேசனை சொல்லவா?

எங்கே எனக்கு பதிவு போட்டாலும் எல்லா இடத்திலும் வந்து பின்னூட்டமிட்ட அபி அப்பா, கானா பிரபா, மின்னுது மின்னல், தம்பி, கார்த்திக் BS, அய்யனார், பரணி அவர்களின் கைவரிசைகளை சொல்லவா?

ஆர்குட்டிலும் தேவ் அண்ணா, சவுண்ட் பார்ட்டி, பாலா, ஜொல்லு பாண்டி வாழ்த்திய ஸ்க்ராப்களை சொல்லவா?

மற்றும் வாழ்த்து சொன்ன இளா, வெட்டியண்ணே, கிட்டு M&M, சுமதியக்கா, பொற்கொடி, பத்மப்ரியா, நிலவன், வேதா, செந்தழல் ரவி, தம்பி, மனசு, குட்டி பிசாசு, முத்து லெட்சுமி அக்கா, மலைநாடான், நெல்லல காந்த், UP தர்சன், காட்டாறு அக்கக, துளசி டீச்சர், மணி பிரகாஷ் மற்றும் பெயர்கள் விட்டுப்போன அனைத்து நல் உள்ளங்களையெல்லாம் (இங்கேதான் என் ஞாபக சக்தி கொடி [இங்கேயும் கொடிதான்.. என்ன கொடுமை கொடி இது!] கட்டி பறக்குது. உங்க பெயர்கள் விட்டுப்போயிருந்தால் புதிதாய் பிறந்த இந்த குழந்தையை மன்னிக்கனும்.)

You all made my day COMPLETE buddies!

நன்றிகள் பல கோடி உரித்தாகுக. :-)

கேக் எல்லாம் door delivery செஞ்சாச்சு! வந்து சேரலைன்னா, நீங்க தொடர்பு கொ(ல்ல)ள்ள வேண்டிய நபர்:

மிஸ்டர் அபி அப்பா,
கிடேசன் பார்க்,
துபார் குறுக்கு சந்து,
துபாய் மேயின் ரோடு,
துபாய்..

இவரை தொடர்பு கொ(ல்ல)ள்ள முடியலைன்னா, கிடேசன் பார்க்ல கவுந்து கிடக்கும் பாறைகள் (எல்லாம் நம்ம மக்கள்ஸ்தான்.. அலேய்ன் பார்க்ல இருந்து வந்து இங்கே ஒரே குத்தாட்டம் போட்டு மயங்கி விழுதிருக்காங்க..) யாரையாவது எழுப்பி கேட்கவும். ;-)
உங்கள் அனைவருக்காகவும்:

21 Comments:

said...

ஆஹா! தங்கச்சி கடேசியா நமக்கு ஆப்பா? பாசகார பயபுள்ளங்க விடாதுங்களே! கொண்டாட்டம்தான் போங்க கிடேசன் பார்க்கிலே!

said...

//
காலையில் நடந்த கான்ஃபரன்ஸில் இணைந்து கலாய்த்த கே.ஆர்.எஸ், ட்ரீம்ஸ், சந்தோஷ் பற்றி சொல்லவா?

கலாய்க்கப்பட்ட சி.வீ.ஆரை பற்றி சொல்லவா?//
ரொம்ப முக்கியம் இந்த டீட்டேயுலு!!
இதை சொல்லனும்னு யாராச்சும் கேட்டாங்களா?? :-P

said...

இட்ஸ் ஆல்ரைட்.கேக் மொத்தமா துபாய்க்கே அனுப்பியாச்சா?
பொழச்சு போட்டம் மக்கள்ஸ்.

said...

வாந்த்துக்கள் சின்ன மேடம்..

said...

கேக் முழுவைதையும் ஆட்டைய போட்ட அபி அப்பாவை கேக் வெட்டும் கத்தியால் வெட்டியே தீருவேன் என்று தம்பி கதிர் கோபமாக இருக்கிறார், நான் தான் வேண்டாம் என்று அவரை பிடித்து வைத்து இருக்கிறேன்ன்... ஏன்னா நான் தான் சமாதான தூதுவர் :))))

said...

"கலாய்க்கப்பட்ட சி.வீ.ஆரை பற்றி சொல்லவா?//"

எப்படி காலாய்சீங்க ? சொல்லுங்க சொல்லுங்க... மக்களுக்கு

எனக்கு வேண்டாம் ஏன்னா நான் அடுத்தவுங்க விசத்தை கேட்க ஆர்வம் காட்ட மாட்டேன் :)

ambi said...

Happy B'day My friend. konjam late thaan, but it's ok.

unake theriyum, annaku veetula, officela evloo velai palu?nu :)

said...

//ஏன்னா நான் தான் சமாதான தூதுவர் :))))//

நீயா ராசா? நாரதர் வம்சாவளியாச்சே நீயி! சரி சரி.. தங்கச்சி பதிவுல சண்டை போட வேணாம்.. தங்கச்சி என்ன இது நன்றின்னு பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிகிட்டு?

(நன்றி சின்ன வார்த்தைதானே ன்னு யாராச்சும் சந்தேகம் கேட்டுட்டு வந்து நின்னீங்க...என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.. ):))

said...

\\மிஸ்டர் அபி அப்பா,
கிடேசன் பார்க்,
துபார் குறுக்கு சந்து,
துபாய் மேயின் ரோடு,
துபாய்..\\

அய்யோ.....இதுக்கு நீங்களே சாப்பிட்டுயிருக்கலாம் ;-)

said...

\\CVR said...
//
காலையில் நடந்த கான்ஃபரன்ஸில் இணைந்து கலாய்த்த கே.ஆர்.எஸ், ட்ரீம்ஸ், சந்தோஷ் பற்றி சொல்லவா?

கலாய்க்கப்பட்ட சி.வீ.ஆரை பற்றி சொல்லவா?//
ரொம்ப முக்கியம் இந்த டீட்டேயுலு!!
இதை சொல்லனும்னு யாராச்சும் கேட்டாங்களா?? :-P\\

அடபாவிகளா....இதுக்கு தான் வாங்க வாங்கன்னு கூப்பிட்டிங்களா !!! ;-))))

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள், மை பிரண்டு! :))))))

said...

ஹிஹி! தாங்க்ஸ் சொல்ல ஒரு பதிவா! உங்க பாசத்துக்கு அளவே இல்ல!

said...

நன்றியெல்லாம் வேண்டாம் தோழி அந்த மலேசிய டிக்கட் மட்டும் அனுப்பி வைங்க போதும் :)

Anonymous said...

ennaku kidaika vendiya McD kidaikama pooche :(((

Anonymous said...

//கலாய்க்கப்பட்ட சி.வீ.ஆரை பற்றி சொல்லவா?//
ரொம்ப முக்கியம் இந்த டீட்டேயுலு!!
இதை சொல்லனும்னு யாராச்சும் கேட்டாங்களா?? :-P //


ithu eppolah nadanthathu

said...

Ohh.. Thanks Post eh??
you are most welcome buddy!! (in next year too)

c.m.haniff said...

Late but sweet happy birthday, intha pakkam vanthu romba naal aachu ;-)

said...

கேக் என்னாச்சுங்க மைஃபிரண்ட்? :)

said...

சொல்லவா..சொல்லவா..சொல்லவான்னு எல்லாத்தையும் சொல்லிட்டீங்க.. நீங்க தமிழ் நாட்டு மேடை பேச்சாளர் ஆகலாம்...

said...

hehe same blud for me on my bday :)

said...

//
கலாய்க்கப்பட்ட சி.வீ.ஆரை பற்றி சொல்லவா?
//

sollalaame :)
adutha padhivula sollunga :)