Friday, June 15, 2007

180. சர்வேசா, நானும் கலந்துக்கலாமா?

குட்டீஸ் போட்டி அறிவிச்சு நாலே நாலு பேர்தான் கலந்திருக்காங்க.. அதிலும் ரெண்டு பேர் (அபி அப்பாவையும் சேர்த்துதான்) இன்னும் பாடலை அனுப்பவில்லைன்னு சர்வேசன் இன்னைக்கு கவலையா ஒரு பதிவு போட்டிருக்காரு.. அந்த காலியாக விடப்பட்ட ஆறு இடத்தையும் நிறப்பி சர்வேசனுக்கு சந்தோஷத்தை கொடுக்கலாம்ன்னு நெனச்சாலும், அதுக்குதான் இங்கே வழி இல்லையே!

அதான் இன்னைக்கு வீட்டுக்கு வந்ததுமே என் தங்கச்சியை கூப்பிட்டு "உனக்கு பிடிச்ச ஒரு பாட்டை பாடும்மா. சர்வேசன் அங்கிளுக்கு போட்டு காட்டுவோம்"ன்னு சொன்னேன்.

அவளோ "டிவிங்கள் டிவிங்கள் லிட்டில் ஸ்டார்" பாடவான்னு கேட்க..

"ஐயோ! இந்த சர்வேசன் என்ன பாட்டு பாடணும் சொல்லலையே!"ன்னு நான் சொல்ல..

"ம்ம்.. பாப்பாக்கு (அவள்தான்) பிடிச்ச பாட்டு ஒன்னு பாடட்டா?"ன்னு அவ கேட்க..

"சரி.. ஏதோ ஒன்னு பாடு.. பேருக்கு ஒரு column நிரப்பிவிட்டு வரலாம்"ன்னு சொல்லி mp3 playerல ரெக்கார்ட் பண்ண ஆரம்பிச்சேன்..

அவ என்ன பாட்டு பாடுனான்னு தெரியுமா? நீங்களே இந்த மூனு வயசு வாண்டு பாடின பாட்டை கேட்டு பாருங்கள். சொல்ல மறந்துட்டேனே.. இந்த வாண்டு எப்படி இருப்பான்னு கேட்கிறவங்க, இந்த ப்ளாக்ல வலது புறத்து மேலே cheong sam உடையில ஸ்டைலா போஸ் கொடுக்கிறாளே.. அவளை பாருங்க.. அவதான் இந்த சுட்டி வாண்டு. :-D


Get this widget Share Track details

35 Comments:

நாகை சிவா said...

என்ன ஒரு கருத்தாழம் மிக்க பாடல் அது... இதில் என்ன குறை இருக்கு....

ஆனாலும் இந்த ஜெனரேசன் எல்லாம் பிறக்கும் போதே பழுத்து வருது...

MyFriend said...

@நாகை சிவா:

//என்ன ஒரு கருத்தாழம் மிக்க பாடல் அது... இதில் என்ன குறை இருக்கு....//

"கருத்து" ஆழமா? நீங்க சொன்னா கரெக்ட்டா இருக்கும் புலி. ;-)

//ஆனாலும் இந்த ஜெனரேசன் எல்லாம் பிறக்கும் போதே பழுத்து வருது... //

இதைதான் பிஞ்சுலேயே பழுத்ததுன்னு சொல்வாங்களா? :-P

Anonymous said...

அம்மாடி என்ன ஒரு அற்புதமான குழந்தைப் பாடல்.பேசாம மாலேசியாவுல நர்சரி ரைமாப் போட்டுடலாம்.
ஆமா இதென்ன உங்க புலாக்குல ஒரே கண்மனி மயம்?

நாகை சிவா said...

கருத்து ஆழத்த பத்தி அப்பால சொல்லுறேன்...

உங்க வாண்டு ஆச்சும் பரவாயில்லை... மூனு வயசு.. நம்ம வாண்டு ஒன்னே முக்கால் வயசுல தீடிர்னு ஒரு நாள் லாசு பெண்னே... லாசு பெண்ணேனு தனியா பாடிக்கிட்டு இருந்து இருக்கு... நம்ம மக்களுக்கு எல்லாம் டவுட்... என்னா பயலுக்கு எந்த வார்த்தையும் முழுசா வராது... வாங்கனு சொல்லா சொன்னா வா... சாப்பிடுங்க அப்படினு சொல்ல சொன்னா சாப்பு தான் சொல்லும்.. ஆனா இது மட்டும் தெளிவா வருது எனத்த சொல்ல...

இப்ப போன வாரம் எங்க அப்பாக்கிட்ட போன்ல தாத்தா தா தைய்னு தெளிவா கேட்டு இருக்கான்... நான் போன் பண்ணும் போது சொல்லுது.. ஆனா எப்படி இருக்கீங்க கேட்க சொன்னா. மாமா..எப்... எப் தான். ...

என்னத்த சொல்ல...

SurveySan said...

Thanks for doing this :)))

I didnt listen to the song yet. will do later today and post my comment.

MyFriend said...

@Anonymous:

//அம்மாடி என்ன ஒரு அற்புதமான குழந்தைப் பாடல்.பேசாம மாலேசியாவுல நர்சரி ரைமாப் போட்டுடலாம்.//

இதை நர்சரி ரைமா போட்டுட்டு, நர்சரி ரைமை சினிமா பாட்டா போடலமா? அப்படிதானெ சில பாடல்களும் வருது. :-)

//ஆமா இதென்ன உங்க புலாக்குல ஒரே கண்மனி மயம்? //

கூகல் ரீடர் பல நாள் அப்டேட் பண்ணாம இருக்குங்க. :-P

MyFriend said...

@நாகை சிவா:

//கருத்து ஆழத்த பத்தி அப்பால சொல்லுறேன்...//

சரி சரி.. வேய்ட்டீங். ;-)

//உங்க வாண்டு ஆச்சும் பரவாயில்லை... மூனு வயசு.. நம்ம வாண்டு ஒன்னே முக்கால் வயசுல தீடிர்னு ஒரு நாள் லாசு பெண்னே...//

ஒன்னே முக்கால் வயசுல உங்க வாண்டாச்சும் லூசு பெண்ணேன்னு பாடிச்சு.. இந்த வாண்டு ஒரு வயசுல பாடுன பாட்டு என்ன தெரியுமா? சிரிச்சு சிரிச்சு வந்தா சீனாதானா!!! என்னன்னு சொல்ல!!!

MyFriend said...

@SurveySan:

//Thanks for doing this :)))

I didnt listen to the song yet. will do later today and post my comment. //

sure.. மெதுவா வாங்க. ;-)

ulagam sutrum valibi said...

ஏன் சின்ன புள்ள,
பாடுதே அது யாருடைய பாப்பா?

MyFriend said...

@ulagam sutrum valibi:

//ஏன் சின்ன புள்ள,
பாடுதே அது யாருடைய பாப்பா? //

பாட்டி, இவ என் செல்ல தங்கச்சி. ;-)

SurveySan said...

VOW!!!!!!!!!!

great singing. I am sure this one has prize winning quality :).

kalakkal.

thanks for sending this.! name of your sis?

CVR said...

ஹே
Really cute voice!!

உங்களை பார்த்தவுடனே குழந்தைக்கு லூசு பெண்ணே என்று பாட வேண்டும் என்று தோன்றியிருக்கிறதே!!
அதை சொல்ல வேண்டும்!! :-D


பரிசு வெல்ல வாழ்த்துக்கள்!! :-D

ALIF AHAMED said...

எங்க பாத்தாலும் இப்படிதான் இருக்கும் போல

ALIF AHAMED said...

ஆனாலும் இந்த ஜெனரேசன் எல்லாம் பிறக்கும் போதே பழுத்து வருது...

//

புலி பாராட்டனும் பாட்ட முழுசா பாடுனதுக்கு எனக்கு எந்த பாட்ட எடுத்தாலும் ரெண்டு முனு வரிதான் வரும்..:)

Bharani said...

sema cute...valluvar correct-a dhaan solli irukaaru :)

Bharani said...

indha paathathaan paadanumnu ellam naama avangala control panna mudiyaadhu....avanga pokuku vitudunga...

G3 said...

haha.. neenga paatu paada solli kettaadhala ungala paathu paadiducho.. neenga loosu ponnu therinjuduchu.. unga mela loosa suthara andha loosu paiyan yaaro :P

Paatu super.. recording kalakkal.. clarity pakkava irukku.. chuttikku en vaazhthukkal sollidunga :-))

MyFriend said...

@SurveySan:

//VOW!!!!!!!!!!

great singing. I am sure this one has prize winning quality :).

kalakkal.//

ஹீஹீ.. உங்க வாழ்த்துக்களை வாண்டுக்கிட்ட சொல்லியாச்சு. ;-)

//thanks for sending this.! name of your sis? //

பெயர்: மணிமலர்

MyFriend said...

@CVR:

//
ஹே
Really cute voice!!

உங்களை பார்த்தவுடனே குழந்தைக்கு லூசு பெண்ணே என்று பாட வேண்டும் என்று தோன்றியிருக்கிறதே!!
அதை சொல்ல வேண்டும்!! :-D
//

ஆஹா.. ஆப்பு எனக்கேவா?

MyFriend said...

@மின்னுது மின்னல்:

//
எங்க பாத்தாலும் இப்படிதான் இருக்கும் போல //

இப்படின்னா எப்படி மிமி?

MyFriend said...

@மின்னுது மின்னல்:

//புலி பாராட்டனும் பாட்ட முழுசா பாடுனதுக்கு எனக்கு எந்த பாட்ட எடுத்தாலும் ரெண்டு முனு வரிதான் வரும்..:)
//

ஆமா.. உண்மை.. எனக்கே தெரியாத பாடல்கள்.. தெரிஞ்சாலும் ஒன்னு ரெண்டு வரி மட்டுமேதான் ஞாபகம் இருக்கு. ஆனா, இந்த வாண்டு என்னன்னா பாட்டை முழுசா பாடுறா..

ALIF AHAMED said...

//
எங்க பாத்தாலும் இப்படிதான் இருக்கும் போல //

இப்படின்னா எப்படி மிமி?
//

எங்க வீட்டுலையும்...

sister & brother ரோட குழந்தைகள் அடிக்கிற லூட்டி

MyFriend said...

@Bharani
//
sema cute...valluvar correct-a dhaan solli irukaaru :)
//

வல்லுவர் என்ன சொன்னாரு? லூசு பெண்ணேன்னா?


//indha paathathaan paadanumnu ellam naama avangala control panna mudiyaadhu....avanga pokuku vitudunga... //

அதே!! அதான் நீயே பாடுன்னு சாய்ஸ் அவ கிட்டயே விட்டாச்சு. ;-)

MyFriend said...

@G3:

//haha.. neenga paatu paada solli kettaadhala ungala paathu paadiducho.. neenga loosu ponnu therinjuduchu.. unga mela loosa suthara andha loosu paiyan yaaro :P//

ஆகா.. கிளம்பிட்டாங்கய்யா.. கிளம்பிட்டாங்க!!!! நல்ல வேளை.. என் தங்கccஇ ப்ளாக் எழுதலை.. இல்லைன்னா அவளையும் உங்க கட்சில சேர்த்துக்கிட்டு எனக்கு நல்லாவே ஆப்பு அடிப்பீங்க போல? ;-)

//Paatu super.. recording kalakkal.. clarity pakkava irukku.. chuttikku en vaazhthukkal sollidunga :-)) //

வாழ்த்து சொல்லியாச்சு. :-D

MyFriend said...

@மின்னுது மின்னல்:

//sister & brother ரோட குழந்தைகள் அடிக்கிற லூட்டி //

ஆமாம் ஆமாம்.. இவங்களோட லூட்டிகளை பார்த்தாலே நேரம் போறது தெரியலை. :-)

Bharani said...

//வல்லுவர் என்ன சொன்னாரு? லூசு பெண்ணேன்னா?
//...over lollunga ungaluku......thiruvalluvar enna sollir irukaarna....kuzhandhainga voice ketkaadha loosunga dhaan instruments-la irundhu vara isai super-a irukunu solluvaanga....

ACE !! said...

சூப்பருங்க.. சான்ஸே இல்ல.. மிகவும் ரசித்தேன்.. :D :D

SurveySan said...

போட்டி ஆரம்பிச்சாச்சு.

க்ளிக் இங்கே

My days(Gops) said...

yakka paatu sooooper.... :)
(yapppaada vandhadhuku oru comment potaachi.... apple soose anupuveeega la? )

MyFriend said...

@Bharani said...

//...over lollunga ungaluku......thiruvalluvar enna sollir irukaarna....kuzhandhainga voice ketkaadha loosunga dhaan instruments-la irundhu vara isai super-a irukunu solluvaanga.... //

எப்போதிலிருந்து வல்லுவர் இதெல்லாம் சொன்னாருங்க? எனக்கு இதெல்லாம் தெரியாம போச்சே! எனக்கும் அந்த புத்தகத்தை இரவல் தர்றீங்களா? படிச்சிட்டு தர்றேன். ;-)

MyFriend said...

@சிங்கம்லே ACE !!:

//சூப்பருங்க.. சான்ஸே இல்ல.. மிகவும் ரசித்தேன்.. :D :D //

நன்றி நன்றி..

என்ன கொடுமை இதுன்னு இங்கண சொல்லக்கூடாதுல.. சரி சரி.. என்ன பாசம் இதுன்னு சொல்லுவோமா? ;-)

MyFriend said...

@SurveySan:


//போட்டி ஆரம்பிச்சாச்சு.

க்ளிக் இங்கே //

நன்றி சர்வேசா,

தோ வர்றேன். ;-)

MyFriend said...

@My days(Gops):

//yakka paatu sooooper.... :)
(yapppaada vandhadhuku oru comment potaachi.... apple soose anupuveeega la? ) //

ஆப்பிள் என்ன.. ஆரஞ்சும் கலந்து கொடுத்துடலாம் கோபிக்கு.. என்ன சரியா? ;-)

Bharani said...

//எப்போதிலிருந்து வல்லுவர் இதெல்லாம் சொன்னாருங்க? எனக்கு இதெல்லாம் தெரியாம போச்சே! எனக்கும் அந்த புத்தகத்தை இரவல் தர்றீங்களா? படிச்சிட்டு தர்றேன்.//.....enna vachi comedy edhuvum pannalaye :(

MyFriend said...

@Bharani:

//enna vachi comedy edhuvum pannalaye :( //

ithaiththaan naan ungge kidde kedkalaamnnu nenachen.. ennai vachchi neengga comedy keemadi pannalaiaye??? ;-)