Saturday, May 05, 2007

177. அழகே அழகல்லோ.. என் நண்பர்கள் அழகே அழகல்லோ..

கண்ணுக்கு மை அழகு..
கவிதைக்கு பொய் அழகு..
கண்ணத்தில் குழி அழகு..
கார் கூந்தல் பெண் அழகு..

ம்ம்.. நானும் அழகு பதிவைத்தான் எழுத போகிறேன் என்று தெரிந்திருக்கும் உங்களுக்கு! கிடேசன் பார்க்கிலிருந்து கோபி நீங்க எழுதியே ஆகணும்ன்னு வற்ப்புறுத்தினார். ஆன் ஆர்பரில் இருந்து சி.வி.ஆர் உங்கள் பெயரையும் விளையாட்டில் சேர்த்துக்கவா என்று அனுமதி கேட்டார். Dr.டிடியின் பக்கத்து ஆத்து அம்பி அவர்கள் நீ எழுதுற... மறுபேச்சு அதுக்கு இல்லைன்னு சொல்லிட்டு கிளம்பிட்ட்டார்.

நான் இப்போது எழுதும்போது அனேகமா எல்லாரும் ஆடியே முடிச்சிருப்பீங்க. நான் சொல்ல வந்த குறும்பு, குழந்தை, தமிழ், தனிமை, நட்புன்னு ஒன்னு விடாமல் எல்லாருமே சொல்லிட்டீங்க. எனக்கும் இந்த ஆறு மட்டும்தான் அழகு என்று சொல்வதில் உடன் பாடு இல்லைங்க. அதனால், அந்த ஆறில் ஒன்னே ஒன்னு பற்றியதை மட்டும் எழுதலாம்ன்னு நினைக்கிறேன்.

எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் வருவதே நட்பு. அந்த நட்பில் இந்த குறுகிய காலத்தில் எனக்கு கிடைத்த நட்பு வட்டாரங்களில் சிலரின் நான் ரசிக்கும் சில அழகுகள்:


கார்த்தியின் கிராமத்தின் ஏக்கம் அழகு..
கடல் கணேசனின் கடல் பயணம் அழகு..
சி.வி.ஆரின் சிந்தனைகள் அழகு..

ஜியின் நையாண்டிகள் அழகு..
அம்பியின் காமெடி சென்ஸ் அழகு..
அருணின் நக்கல் அழகு..

ஜி3யின் G3 (சுடுவது) அழகு..
ஸ்யாமின் தீர்ப்புகள் அழகு..
சந்தோஷின் விமர்சன ரசனை அழகு..

ராமின் குழந்தைத்தனம் அழகு..
புலியின் உதவி மனப்பான்மை அழகு..
அபி அப்பாவின் அபி பாப்பா அழகு..

தேவின் கதைகள் அழகு..
இம்சை அரசியின் எழுத்துத்திறன் அழகு..
கண்மணியின் டைமிங் காமெடி அழகு..

கோபியின் கிடேசன் பார்க் அழகு..
வெட்டியின் தெலுங்கு ரசணை அழகு..
இளாவின் விவசாய கலை அழகு..

துர்காவின் குறும்புகள் அழகு..
பொற்கொடியின் சமையல் டெஸ்டிங் அழகு..
ரம்யாவின் அன்பு அழகு..

பரணியின் பில்லு கட்டும் கடமை அழகு..
தம்பியின் கும்மியடிக்கும் திறன் அழகு..
ப்ரியாவின் கதை சொல்லும் திறன் அழகு..

டிடியின் காதல் திருமணம் அழகு..
கோப்ஸின் வணக்கங்கள் அழகு..

இன்னும் நிறைய பேரின் அழகை இங்கே மறக்க காரணமான
என் ஞாபக மறதியும் அழகு. :-D (ராம், நீங்க சொல்றதுக்குள்ள நானே சொல்லிட்டேன்..:-P)

இங்கே பல பேரோட பெயர்கள் விட்டு போயிருக்கு.. அதற்க்காக நோ ஃபீலிங்ஸ் ப்லீஸ்.. :-D (அதுவும் ஒரு அழகுன்னு சொல்லி சமாளிச்சுக்கிறேன்.. )

சரி.. அப்படியே முடிச்சிட்டா நல்லா இருக்காது.. அதனால இன்னும் ரெண்டு போனஸ் அழகை இங்கே சேர்த்துக்கிறேனுங்கோ..

1- எப்பவும் போல நம்ம ப்ரின்ஸ்தானுங்கோ.. பாருங்கோ!!!2- என்னைக் கவர்ந்த ஒரு குரல்.. எல்லா நேரமும் என்னுடன் துணையாய் இருக்கும் ஒரு குரல்.. எந்த ஒரு மூட்டிலும் எனக்கே எனக்காய் ஆதரவாக ஒரு குரல்.. அது என் சுஜாதாவின் குரல்தானுங்கோ.. அந்த அழகிய குரல் இப்போதும் என் காதில் ரீங்காரம்மிட்டுக்கொண்டிருக்கிறது..

இவ்வளவு லேட்டா பதிவை போட்டு டேக் பண்ண ஆள் தேடுவது கொடுமையிலும் கொடுமைங்க.. என்ன கொடுமை "சிங்கம்லே ACE" இது!!
அதனால இந்த போஸ்ட்டை படிக்கும் பதினெட்டு பட்டி மக்களுக்கும் என்ன சொல்ல வர்றேன்னா, யார் இன்னும் அழகு போஸ்ட் எழுதலையோ.. எனக்கு ஒரு மெயில் அனுப்புங்க.. நானே உங்களை டேக் பண்ணிடுறேன்..

டாட்டா...

62 Comments:

said...

மை பிரண்டு எல்லாத்தையும் அழகா சொல்லி இருக்கிங்க.ஹிஹி.. அப்படியே சந்தடி சாக்குல உங்க ஆளு படத்தையும் போட்டுடிங்க கலக்குங்க.

said...

அழகா இருக்கு மேடம்,உங்க பதிவு!!
எனக்கு தமிழ் வலைப்பதிவு மூலமா,அழகழகா பல நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள்!!
அவர்களை பற்றி எல்லாம் சொல்ல ஆரம்பித்தால் சொல்லிக்கொண்டே போகலாம்!! :-)

said...

அழகாக இருக்கு உங்க அழகு.. :) :)

said...

//என்ன கொடுமை "சிங்கம்லே ACE" இது!!
//

எப்படி பேர மாத்தி வச்சாலும், சிங்கத்த தூங்க விடாம சீண்டி பாக்கறாங்க.. :( :(

said...

மை பிரண்ட், உங்க பாசத்தை நினச்சா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

அழகு பதிவுகள்லேயே இது தான் வித்யாசமான பதிவு.. கலக்கல் ரவுண்ட்-அப்

said...

//இன்னும் நிறைய பேரின் அழகை இங்கே மறக்க காரணமான
என் ஞாபக மறதியும் அழகு. //

அட! நல்ல அழகுகள் மை பிரண்ட்

said...

//என்ன கொடுமை "சிங்கம்லே ACE" இது!!//

ACE! உங்களை யாரும் விடுற மாதிரி இல்லை போல

என்ன கொடுமை "சிங்கம்லே ACE" இது!!

said...

மை பிரண்ட், உங்க சுஜாதா பாசம் தான் தெரியுமே.. அதை இங்கே காட்டிட்டீங்க கரெக்டா

said...

ம்... நல்லா எல்லாருக்கும் ஜஸ் வச்சிறுகிறீர்கள்.

said...

ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது நீங்கள் அழகு சொன்ன விதம்...பாராட்டுக்கள்..:)

said...

//ஜி3யின் G3 (சுடுவது) அழகு..//

Yakka.. aanalum over publicitya irukkae ;-)

said...

Unga azhagu post thani azhagu :-))

said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :)
இம்புட்டு நல்லவங்களா நீங்க ?


என்ன அழகு
எத்தனை அழகு
உங்க போஸ்ட் கோடி அழகு :)

said...

//என்ன கொடுமை "சிங்கம்லே ACE" இது!!
//
மனுஷன் பாவம் :P

said...

இனிமே கொடி தங்கச்சிக்காவோட பேர யூஸ் பண்ணிக்கோங்க... ரைமிங்கா இருக்கும்.. என்ன கொடும கொடி :)

கொனாவுக்கு கொனா :)

said...

adra adra...

super'a eludhi irukeenga...azhga pathi...adhuvum rhyming'a....

said...

//ஜி3யின் G3 (சுடுவது) அழகு..//
adra adra... idhu, idhu varaikum vandhuducha......

said...

//பொற்கொடியின் சமையல் டெஸ்டிங் அழகு..//

oh avanga samaiyal'a testing mattum thaaan seiraangala?
yakka ennadhu idhu........

Anonymous said...

அக்கா என்னைவிட குறும்பு உங்களுக்குத்தான் அதிகம்.நீங்கதான் சீனியர் ;-)

said...

எங்க தங்ச்சிக்கா என்றென்றும் அழகு.......:)

said...

/(ராம், நீங்க சொல்றதுக்குள்ள நானே சொல்லிட்டேன்..:-P)//

யே!! மறதி கோழி.... இதை மட்டும் எப்பிடி ஞாபகம் வைச்சிருந்தே'லா?

said...

nice. :)

said...

வித்தியாசமாக இருக்கு உங்க அழகு ;-))

said...

\\அழகே அழகல்லோ.. என் நண்பர்கள் அழகே அழகல்லோ.."\\

தலைப்பு கூட அழகு தான் இருக்கு ;-))

Anonymous said...

vanten vanten!

-porkodi

Anonymous said...

en samaiyal testing azhaga?? adhai rasichu sapidra ranguva vitutingle... che enna ponga :-)

-porkodi

Anonymous said...

adhu enna sujatha pasam?!

-porkodi

said...

aaru azagu podanumnu sonna enna onne onnuthaan pottirukeenga??

said...

மை பிரண்ட், உங்க பாசத்தை நினச்சா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :)

naisa sidhaarth padam pottu side gapula santro ootiyaachu! :)

said...

Ahaha ipdi pathivu ulaga nanbargal pathi azhaga oru pathivu pottu aasathiteenga my friend :)

said...

அழகுக்கு ஒரூ கவிதையே எழுதறீங்க!

said...

/எப்பவும் போல நம்ம ப்ரின்ஸ்தானுங்கோ.. பாருங்கோ!!!
//


ஹி ஹி!! அது சரி!

said...

//பதினெட்டு பட்டி மக்களுக்கும் என்ன சொல்ல வர்றேன்னா, யார் இன்னும் அழகு போஸ்ட் எழுதலையோ.. எனக்கு ஒரு மெயில் அனுப்புங்க.. நானே உங்களை டேக் பண்ணிடுறேன்..//

இது வேறயா! மை பிரண்ட்... கலக்கற்றீங்க!

said...

அழகு அழகு நீங்க அழக சொன்ன விதம் அழகு....:-)

said...

//எப்படி பேர மாத்தி வச்சாலும், சிங்கத்த தூங்க விடாம சீண்டி பாக்கறாங்க..//

சிங்கத்த தூங்க விடாம யாரு அது....என்ன கொடுமை இது சிங்கம்லே ACE :-)

said...

மை ப்ரெண்டு.... உங்கள் சோம்பேறித்தனமே அழகு... உங்கள் கும்மியே அழகுன்னு யாரும் சொல்லன்னு நினைக்க வேண்டாம். இங்கெ இப்போதே சொல்லியாச்சி. ;-)

அழகை ரொம்ப அழகா சொல்லிருக்கீங்கன்ற உண்மையும் சொல்லிட்டேன்

said...

ஆஹா இப்படி கலக்கிட்டிங்களே..

//ப்ரியாவின் கதை சொல்லும் திறன் அழகு..
//

தங்கச்சி எந்த ப்ரியாமா அது??

said...

//என்ன கொடுமை "சிங்கம்லே ACE" இது!!
//

ஹா ஹா... அவர விடறதா இல்ல..

said...

//புலியின் உதவி மனப்பான்மை அழகு..//

அப்படியா?

கேட்டுக்கோ கேட்டுக்கோ எல்லாம் மக்களும் கேட்டுக்கோ.... நல்லா கேட்டுக்கோ, தெளிவா கேட்டுக்கோ....

இதுக்காக நான் எந்த ஒரு செலவு செய்யல....

said...

@சந்தோஷ் aka Santhosh said...

//மை பிரண்டு எல்லாத்தையும் அழகா சொல்லி இருக்கிங்க.ஹிஹி.. அப்படியே சந்தடி சாக்குல உங்க ஆளு படத்தையும் போட்டுடிங்க கலக்குங்க.//

நன்றி..

அவரில்லாமலா? அழகுன்னு சொல்லிட்டு அவரை மிஸ் பண்றதா? ம்ஹூம்.. சான்ஸே இல்லை. ;-)

said...

@CVR:

//அழகா இருக்கு மேடம்,உங்க பதிவு!!
எனக்கு தமிழ் வலைப்பதிவு மூலமா,அழகழகா பல நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள்!!
அவர்களை பற்றி எல்லாம் சொல்ல ஆரம்பித்தால் சொல்லிக்கொண்டே போகலாம்!! :-) //

ஆமாம் சி.வி.ஆர். அதனால்தான் என் நண்பர்கள் அழகுன்னு இந்த பதிவையே போட்டேன். :-)

said...

@சிங்கம்லே ACE !!:

//அழகாக இருக்கு உங்க அழகு.. :) :) //

நன்றி ACE


////என்ன கொடுமை "சிங்கம்லே ACE" இது!!
//

எப்படி பேர மாத்தி வச்சாலும், சிங்கத்த தூங்க விடாம சீண்டி பாக்கறாங்க.. :( :( //

சரி.. நீங்க தூங்கி எழுந்திரிச்சதும் சொல்லுங்க.. ஆட்டத்தை கண்டினியூ பண்ணிக்கலாம். ;-)

said...

@மு.கார்த்திகேயன்:

//மை பிரண்ட், உங்க பாசத்தை நினச்சா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் //

கார்த்தி, நீங்க அடிகக்டி இப்படி ஃபீல் ஆகியிடுறீங்க.. கொஞம் கண்ட்ரோல்.. :-P

//அழகு பதிவுகள்லேயே இது தான் வித்யாசமான பதிவு.. கலக்கல் ரவுண்ட்-அப்//

நான் அழகு பதிவுன்னு எழுதினேன்.. நீங்க வியர்ட் பதிவு லிஸ்டுல சேர்த்துட்டீங்களே. :-P

////இன்னும் நிறைய பேரின் அழகை இங்கே மறக்க காரணமான
என் ஞாபக மறதியும் அழகு. //

அட! நல்ல அழகுகள் மை பிரண்ட்//

ஹீஹீ.. இப்படியும் சமாளிக்க வேண்டியிருக்கு கார்த்தி.. :-(

//ACE! உங்களை யாரும் விடுற மாதிரி இல்லை போல

என்ன கொடுமை "சிங்கம்லே ACE" இது!!//

யெஸ் யெஸ்.. விடுறதா இல்லை. ;-)

said...

@U.P.Tharsan said...

//ம்... நல்லா எல்லாருக்கும் ஜஸ் வச்சிறுகிறீர்கள்.//

ஐஸா சில்லுன்னு இருந்தாலும் இவைகள் அனைத்தும் உண்மை உண்மை & உண்மை மட்டுமே! :-D

said...

@balar said...

//ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது நீங்கள் அழகு சொன்ன விதம்...பாராட்டுக்கள்..:)
//

நன்றி பலர்

said...

@G3:

////ஜி3யின் G3 (சுடுவது) அழகு..//

Yakka.. aanalum over publicitya irukkae ;-)//

அக்காவை எல்லாருக்கும் அறிமுகப்படுத்துறேன். ஹீஹீ..

//Unga azhagu post thani azhagu :-))//

நன்றியக்கா. ;-)

said...

@Arunkumar:

//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :)
இம்புட்டு நல்லவங்களா நீங்க ?//

:-)


//என்ன அழகு
எத்தனை அழகு
உங்க போஸ்ட் கோடி அழகு :)//

நன்றி நன்றி.. கோடி நன்றி. :-)


///இனிமே கொடி தங்கச்சிக்காவோட பேர யூஸ் பண்ணிக்கோங்க... ரைமிங்கா இருக்கும்.. என்ன கொடும கொடி :)

கொனாவுக்கு கொனா :)
//

சரி.. அப்போ அடுத்த போஸ்ட்டுலேயே ஆரம்பிச்சிடலாம். :-)

said...

@My days(Gops):

//
adra adra...
//

யாரை அடிக்க போறீங்க? :-P

//super'a eludhi irukeenga...azhga pathi...adhuvum rhyming'a....//

நன்றி நன்றி

////ஜி3யின் G3 (சுடுவது) அழகு..//
adra adra... idhu, idhu varaikum vandhuducha......//

இது இன்னும் பல இடத்துக்கு போக வேண்டியிருக்கே! ;-)


////பொற்கொடியின் சமையல் டெஸ்டிங் அழகு..//

oh avanga samaiyal'a testing mattum thaaan seiraangala?
yakka ennadhu idhu........//

கோப்ஸ் இதைப்பத்திதான் உங்களுக்கு தெரியுமே! இதைத்தானே நாம் தினமும் யாஹூ க்ரூப்ல பேசிட்டு இருக்கோம். ;-)

said...

@துர்கா|thurgah:

//அக்கா என்னைவிட குறும்பு உங்களுக்குத்தான் அதிகம்.நீங்கதான் சீனியர் ;-)//

குறும்பு யாருக்கு இருந்தாலும் அவங்க அழகுதான் என் அழகு தங்கச்சி. :-)

said...

@இராம் said...

//எங்க தங்ச்சிக்கா என்றென்றும் அழகு.......:)//

நன்றி தம்பி..

ஆனால் உன் கோபம் அழகல்ல.. அது கொஞ்சம் நீ குறைக்கவேண்டும்.. அக்கா சொல்லிட்டேன். சரியா? ;-)

said...

@மணி ப்ரகாஷ் :

//nice. :)//

நன்றி மணி. :-)

said...

@கோபிநாத்:

//வித்தியாசமாக இருக்கு உங்க அழகு ;-))//

நன்றி கோபி. :-)

//தலைப்பு கூட அழகு தான் இருக்கு ;-))//

ரொம்ப ரொம்ப நன்றி. :-))

said...

@பொற்கொடி:

//vanten vanten!//

கொடி, சுஜாதா பாட்டெல்லாம் பாடுறீங்களே.. நீங்களும் என்னைப்போல சுஜு ரசிகரா? ;-)

//en samaiyal testing azhaga?? adhai rasichu sapidra ranguva vitutingle... che enna ponga :-)
//

அய்யோ! அது நீங்க சொன்னாதாங்க அழகு. நான் சொன்னா தப்பாயிடும். :-P

//adhu enna sujatha pasam?! //

யூ டூ? ;-)

said...

@ஜி:

//aaru azagu podanumnu sonna enna onne onnuthaan pottirukeenga??//

அந்த ஒன்னே ஒன்னுலேயே நிறைய மேட்டர் சொல்லியிருக்கேன்ல.. கூட்டி கழிச்சுப்பாருப்பா. கணக்கு சரியா வரும். ஹீஹீ.. ;-)

said...

@ambi:

//மை பிரண்ட், உங்க பாசத்தை நினச்சா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :)//

யூ டூ? நன்றி. :-D

//naisa sidhaarth padam pottu side gapula santro ootiyaachu! :)//

இதெல்லாம் நமக்கெல்லாம் (உங்களையும் சேர்த்துதான் சொல்றேன்) சகஜமப்பா. ;-)

said...

@ராஜி:

//Ahaha ipdi pathivu ulaga nanbargal pathi azhaga oru pathivu pottu aasathiteenga my friend :)//

ரொம்ப நன்றி ராஜி. :-D

said...

@Dreamzz:

//அழகுக்கு ஒரூ கவிதையே எழுதறீங்க!//

நான் எழுதியது கவிதையா? எனக்கே தெரியலையே.. நன்றி நன்றி. :-D

///எப்பவும் போல நம்ம ப்ரின்ஸ்தானுங்கோ.. பாருங்கோ!!!
//


ஹி ஹி!! அது சரி!//

:-D

////பதினெட்டு பட்டி மக்களுக்கும் என்ன சொல்ல வர்றேன்னா, யார் இன்னும் அழகு போஸ்ட் எழுதலையோ.. எனக்கு ஒரு மெயில் அனுப்புங்க.. நானே உங்களை டேக் பண்ணிடுறேன்..//

இது வேறயா! மை பிரண்ட்... கலக்கற்றீங்க!//

சொன்னதுபோலவே ஒருத்தவங்க நமக்கு ரெஸ்போன்ஸ் பண்ணியிருக்காங்களே! :-D

said...

@Syam:

//அழகு அழகு நீங்க அழக சொன்ன விதம் அழகு....:-)//

நாட்டாமை சொன்ன தீர்ப்பு எப்போதும் கரேக்ட்டாதான் இருக்கும் :-)

//சிங்கத்த தூங்க விடாம யாரு அது....என்ன கொடுமை இது சிங்கம்லே ACE :-)//

சிங்கம் இன்னைக்கு தூங்கின மாதிரிதான். ஹீஹீ.. :-P

said...

@காட்டாறு:

//மை ப்ரெண்டு.... உங்கள் சோம்பேறித்தனமே அழகு... உங்கள் கும்மியே அழகுன்னு யாரும் சொல்லன்னு நினைக்க வேண்டாம். இங்கெ இப்போதே சொல்லியாச்சி. ;-)

அழகை ரொம்ப அழகா சொல்லிருக்கீங்கன்ற உண்மையும் சொல்லிட்டேன்//

ஹீஹீ.. நீங்களும் என்னை சரியா புரிஞ்சு வச்சிருக்கீங்க கட்டாறு. ;-) நன்றி. :-D

said...

@Priya:

//ஆஹா இப்படி கலக்கிட்டிங்களே..//

உங்களை விடவா அக்கா?

////ப்ரியாவின் கதை சொல்லும் திறன் அழகு..
//

தங்கச்சி எந்த ப்ரியாமா அது??//

எனக்குத்தெரிந்து தமிழில் கதையெழுதி கலக்கும் ஒரே ப்ரியா நீங்கதான்.. அப்போ இது யாராக இருக்கும்ன்னு நீங்களே கண்டுபிடிங்க பார்ப்போம்? ;-)

said...

@நாகை சிவா:

////புலியின் உதவி மனப்பான்மை அழகு..//

அப்படியா?

கேட்டுக்கோ கேட்டுக்கோ எல்லாம் மக்களும் கேட்டுக்கோ.... நல்லா கேட்டுக்கோ, தெளிவா கேட்டுக்கோ....

இதுக்காக நான் எந்த ஒரு செலவு செய்யல....//

ஆமா ஆமா.. infact இந்த போஸ்ட் எழுதும்போது புலி ஊரிலேயே இல்லை (ஆமாம்.. புலி காட்டுலதான் இருந்தது! :-P)

ஆனால், இதற்க்கு முன் தாங்களே ஒவ்வொரு விஷயத்தில் தானாகவே முன் வந்து உதவிகரம் நீட்டியிருக்கீங்களே.. உங்களை நினைத்தபோது இதுதான் முதலில் என் ஞாபகத்துக்கு வந்தது புலி. :-)