Friday, April 20, 2007

176. சிங்கங்கள் மலேசியா வந்தாச்சு! (பாகம் 2)

சிங்கங்களின் மலேசியா டூர் எப்படி ஆரம்பிச்சதுன்னு இங்கே பாருங்க..

நம்ம தல அம்புட்டு அழகா சொக்காயை மாட்டிக்கிட்டு கிளம்பி போனது , கட்டதுரையோட மாங்கா தோப்புக்குதான்.. வியாழக்கிழமை மலேசியா கிளம்புறதுனால சனிக்கிழமை கட்டதுரையின் தோப்புக்கு போக முடியாதுன்னு, சீக்கிரமா கிளம்பி போயிட்டார். கடமை வீரனாச்சே நம்ம கைப்பூ..

கொட்டுங்கடா கும்பியை.. பையன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்னு பாராட்டி பாராட்டியே நொங்கு எடுத்துட்டானுங்க கட்டதுரையின் ஆட்கள்.. இதுல என்ன சீரியஸ் மேட்டர்னா, கட்டதுரையோட ஒன்னு வீட்டு பாட்டி கைப்பூவை அடிக்க அடிக்க, சீக்காளியா இருந்த அந்த கெழவி பரவை முனியம்மா ரேஞ்சுல எனர்ஜெஸ்டிகா ஆயிட்டார்.. எழுந்து குதிக்கிறது என்ன.. ஆடுறது என்ன.. பாடுறது என்ன.. கட்டதுரை கண்ணே கலங்கிடுச்சுன்னா பாருங்களேன் ..

ஒரு வேளையா வியாழனும் வந்தது. எல்லாரும் சென்னை ஏர்போர்ட்டுக்கு வந்துட்டாங்க. எல்லாரும் எப்படி வந்திருக்காங்கன்னு சொல்லனும்ல..

ராயல் ராம்:
மலேசியாவுக்கு போறோம்ன்னு முடிவானதும் ராம் ராயல் ராமா இருக்கணும்ன்னு தலைக்கு மஞ்சள் கலர் சாயம் அடிச்சு சிகப்பு கலர் சொக்கா போட்டுக்கிட்டு கழுத்துல ஒரு ரிப்பன்னோட வந்திருக்காரு. கேட்டா இதுதான் ரிச்சி ரிச் லுக்காம்.

தேவ்:
பச்சை கலரு டீசர்ட்டு போட்டு, அதுக்கு மேட்சே ஆகாம ஒரு டை கட்டிக்கிட்டு கவ் பாய் தொப்பி அணிஞ்சுகிட்டு கையில் ஒரு பேப்பரும் பேனாவும் சகதியுமா நிக்குறாரு. ஏன் இந்த பேப்பர் பேனான்னு கேட்டா, யாருக்காவது பர்த்துடேன்ன்னா கச்சேரி வைக்கத்தான் குறிப்பு எடுக்க போறேன்னு சொல்றாரு .

புலி:
கோர்ட்டும் சூட்டும் போட்டு கலக்கலா வந்திறங்கியிருக்கார். சூடானில் பொண்ணுங்களே பார்க்காம காய்ஞ்சு போய் இருந்ததுனால மலேசியாவுல ஒரு கலக்கு கலக்கனும்ன்னு அமர்க்களமாய் வந்திறங்கியிருக்கார்.. ஆனால், கால்ல ஜப்பான் சிலிப்பரை போட்டு வந்து மானத்தையே வாங்கிட்டார்..

வெட்டி:
எப்படி வந்திருப்பார்ன்னு உங்களுக்கு நான் சொல்லிதான் தெரியனுமா ? தெலுங்கு பட ஹீரோ ஸ்டைலில் (சித்தார்த் தவிர்த்து) ஸ்ட்ரைக்கிங் கலர்ல உடுத்தி டூயட் பாடுவாங்களே, அந்த மாதிரி நம் கண்ணே கூசுற மாதிரி ஸ்ட்ரைக்கிங் பச்சையில சட்டை அணிஞ்சு ஸ்ட்ரைக்கிங் மஞ்சல்ல பேண்டு போட்டு, ஸ்ட்ரைக்கிங் சிகப்புல டை கட்டி, சுட்டெரிக்கும் சூரியன் கலர்ல ஒரு சப்பாத்து போட்டிருக்கார் . இருட்டுலையும் இவரை கண்டு பிடிக்கிற அளவுக்கு ஸ்ட்ரைக்கிங் கலர்ன்னா பார்த்துக்கோங்களேன்.

சிபி:
என்னமோ கவலைல இருக்கார் போல. வெட்டிக்கு டோட்டல் ஆப்போசிட்டா எல்லாம் கருப்பு (All Black)-ல வந்து இறங்கியிருக்கார். என்ன கவலை தளபதியாரே? சொல்லுங்க தீர்த்து வச்சிடலாம் (உங்களையல்ல. உங்க பிரச்சனையைத்தான்)..

இளா:
விவசாயி வெள்ளை சட்டை வேட்டின்னு ஏதோ தேர்தலுக்கு போற மாதிரி வந்திறங்கியிருக்காரு.. ஏன்னு கேட்டா ஜீன்ஸ் எல்லாம் தோய்க்க போட்டபோது , எறுமை பசியில தின்னுடுச்சாம்..

பாண்டி:
இவர் எப்போதும் போல அமர்க்களமாய்தான் வந்திருக்கார்.. கூலிங் க்லாஸ் என்ன! ரேய்மண்ட் வாட்ஜ் என்ன.. பெர்முடா ஸ்டைலில் ஒரு சர்ட் அணிஞ்சு முக்கா கால் பேண்டு போட்டு வந்திருக்கார்.. வந்ததும் "ஹேய் டூட், எல்லாம் என்னடா பட்டிக்காடா வந்திருக்கீங்க? என்ன மாதிரி மாடர்ன்னா வர தெரியாதா ? கண்ட்ரி ஃப்ரூட்!!"ன்னு சொல்ல எல்லாரும் கடுப்பாகிறார்கள்.

ஸ்யாம்:
கூட்டத்தில எல்லாரையும் விட அதிக குஷியில இருப்பவர் அட்லாஸ் வாலிபர் ஸ்யாம்தான். மலேசியா போக போறதை, அவங்க தெருவில உள்ள எல்லார் கிட்டேயும் "எல்லாரும் பார்த்துக்கோங்க.. நானும் மலேசியா போறேன் மலேசியா போறேன்"னு சொல்லி, எல்லார் கிட்டேயும், துணி மணிகளை ஆட்டையை போட்டு வாங்கி வந்திருக்கார் . பத்து வயது சிறுவனின் சட்டை போட்டா நமக்கு தெரியாதா ? கேட்டா, இது பாடி ஃபிட்டு . உங்களுக்கு இதெல்லாம் தெரியாதுன்னு சொல்றார். அவங்க தெரு குட்டையனுடைய பேண்டு போட்டு வந்திருக்கார் . கேட்டா, இப்போ இதுதான் ஃபேஷன் . முக்கா கால் சிலுவார்ன்னு சொல்றார். என்னன்னு சொல்ல..

கைப்புள்ள:
எப்போதும் போல, அவங்க சிட்டி மாமா பையனுடைய சட்டையையும் ஜீன்ஸ் பேண்டையும் போட்டுட்டு அவனுக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி வர்ரேன்னு டகால்டி கொடுத்துட்டு வந்திருக்கார். ஸ்டைலுக்கு ஒரு கூலிங் க்லாஸ் . இருட்டுலையும் அதை கழட்ட மாட்டாராம் . சைட்ல ஒரு பேக் வேற. என்னாத்த சொல்ல...

இப்படி அமர்க்களமாக இந்த கோஷ்டிங்க மலேசியா கே.எல்.ஐ .ஏ. ஏர்போர்டில் வந்து தரை இறங்கினாங்க. (ஏரோப்ளேனிலும் நிறைய கூத்துங்க நடந்தது. அது இப்போது வேணாமே!). எல்லாரும் அவங்க அவங்க சூட்கேஸை வண்டியில் தள்ளி வர, கைப்பூ சின்ன புள்ளயாட்டம் அந்த வண்டியில ஏறி உட்கார, நம்ம தேவுதான் தள்ளிட்டு வந்தார்.

கைப்பு: அடடா.. அடடா. ஏர்போர்டிலேயே இத்தனை அம்சமா ஃபிகருங்களா! அப்போ கே. எல் டவுனுல எத்தனை பேருடா இருப்பாளுங்க! இந்த அஞ்சு நாளுக்குள்ள எப்படியாவது நமக்கு ஒரு காதலியை செட் பண்ணிடலாம்..

ஸ்யாம்: நமக்குதானே!! பண்ணிடலாம் பண்ணிடலாம் ..

ஸ்யாமின் வாயில் ஜொள்ளு வடிய , பக்கத்தில் வெட்டியோட டைய பிடிச்சி அவரோட வாயை துடைக்கிறார்.

வெட்டி: என் டை என் டை!!!! சுமா எனக்கு ஆசையா வாங்கி கொடுத்த என் டை என் டை!!!

கைப்பூ: நமக்குன்னா எனக்கு மட்டுந்தான் அயோக்கிய அப்புரெண்டிஸ்களா? ஊருக்குள்ளே எனக்கு ஒன்னை கூட கொடுக்கமே இருந்தீங்க... இங்கயாவது ஒன்னாவது செட் ஆகட்டுமிடா? விட்டு கொடுங்கடா சாமிகளா?

இப்படி கைப்பூவும் வெட்டியும் ஒரே நேரத்துல கத்த ஏர்போர்ட்டுல உள்ள எல்லாருமே இவங்களையே திரும்பி பார்குறாங்க..(நல்ல வேலை, இவீங்கல பிக் அப் பண்ண நான் போகலை.. இல்லைன்னா என் மானமே போயிருக்கும்...)

விவா: வ. வா.. ச .. ங்.. க.. ம்.... வ வா சங்கம்!!!

விவசாயி ஒரு போர்டுல எழுத்து கூட்டி படிக்கிறார்.. சந்தோசத்துல மேலும் கீழும் குதிக்கிறார்.. அவரு வேட்டி கலண்டுக்கிட்டதை கூட அவரு கவனிக்கலைன்னா பாருங்களேன்..

விவா: அந்த மலாய் பொண்ணு நமக்குதான் காத்திருக்கா. நம்மளை பத்திதான் போர்டு பிடிச்சிருக்கா!

விவசாயி சொல்லி முடிக்கிறதுக்குள்ள, ஜொள்ளு,ராயல்,புலி, வெட்டி, ஸ்யாம் மற்றும் கைப்பூ அந்த மலாய் பெண்மணி முன்னுக்கு கியூ கட்டி நிக்குறாங்க.

கைப்பு: எஸ் கிஸ் மீ!

மலாய் அம்மணி படார்ன்னு ஒரு அறை விடுறா கைப்பூக்கு.

கைப்பூ: அவ்வ்வ்வ்வ்வ்.....

மலாய் அம்மணி: அப்பா காமு நாக் (Apa Kamu Nak)?

வெட்டி: நானு ஏமி செப்புதாணன்டி??


மலாய் அம்மணி வெட்டியை முறைச்சி பர்க்க, வெட்டி ரெண்டு அடி பின்னால பம்முகிறார்..

புலி: உர்ர் உர்ர்...

ராயல்: என்னடா பண்ற?

புலி: இந்த அம்மணிக்கு இங்கிலீஸு புரியல. தெலுங்கு புரியல. அதான் என்னுடைய மொழியில பேசுறேன்.

ராயல்: இதுல உனக்கு பெருமை வேற... க்க்க்ர்ர்ர்... த்த்தூதூ...

ஸ்யாம்: இப்போ நான் எப்படி கேக்குறேன் பாரு!

ஸ்யாம் அவருடைய சூட்கேஸை திறந்து பூலோக உருண்டைய எடுத்து சுத்தி சுத்தி இந்தியாவை காட்டுறார் .. அப்புறம் அந்த அம்மணியை இழுத்து போய் ப்ளேனை காட்டுறார் . கைப்புள்ளையை காட்டி, தன் கையை மேலே தூக்கிட்டு அப்புறம் ரெண்டு கையையும் சேர்த்து லெஃப்டும் ரைட்டுமா ஆடுறார்.

கைப்பூ: என்னை பற்றி பய எப்படி புகழ்ந்து பேசுறான் பாரு!

கைப்புள்ளக்கு ஒரே சந்தோஷம். ஸ்யாம் வேர்க்க விருவிருக்க எல்லாமே செய்து காட்டினதும், அந்த அம்மணி கைத்தட்டி பத்து ரிங்கிட் தானம் பண்ணுகிறார். (பைத்தியக்காரன் என்று நினைத்திருப்பாரோ!!)

விவசாயிதான் அந்த க்ரூப்பிலேயே விவரமானவர்ன்னு சொல்லிதான் தெரியனுமா என்ன. அவரு அப்படி இப்படின்னு அந்த போர்ட்டை காட்டி கஷ்டப்பட்டு விளக்க,

மலாய் அம்மணி: அவாக் நாக் பாப்பான் இனீ (Awak nak papan ini)?

விவசாயி வ.வா.சங்கம்ன்னு எழுதியிருக்கிற பலகைதான் கேட்கிறார் என்று நினைத்து அவரிடம் நீட்டினார் . இப்படியே இவங்க மாறி மாறி விளக்கிக் கொண்டிருக்க, கைப்புள்ள தன் கன்னத்தை தடவிக்கொண்டே ஒரு ஓரமா போய் உட்கார்ந்துக் கொண்டார்.

கொஞ்ச நேரத்தில் வாஷ் ரூமில் இருந்து ஒரு இந்தியர் நடந்து வர, சிபியும் தேவும் அவரை கடத்திட்டு வந்து அந்த பெண்மணி முன்னுக்கு நிக்க வைத்தனர் . அவங்க என்ன ஐடியா போட்டிருந்தாங்கன்னா, இவங்க பேசுறதை அவரை மலாயில் மொழிமாற்றம் செய்ய சொல்லலாம்ன்னு.. என்ன மூளை!! என்ன மூளை!!!

ஆனால், அந்த நபரோ அந்த பெண்மணியிடம் தெரிஞ்சவர் போல பேச ஆரம்பிச்சார்.. ஒரு 15 நிமிடமா பேசிட்டே இருந்தார்.. சுத்தி நின்ன இந்த ஒன்பது பேரும் வாயில் ஈ புகுறது கூட தெரியாமல் பொழந்து பார்த்திட்டே இருந்தாங்க . அந்த பெண்மணி அந்த போர்ட்டை இந்த நபரிடம் கொடுத்துட்டு கைப்பூ அண்ட் தி கேங்கை பார்த்து ஒரு சிரிப்பு சிரிச்சிட்டு நடந்து போயிட்டார்...


கைப்பூக்கு ஒரே சந்தோஷம்.. நம்மளையும் பார்த்து இந்த பொண்ணு சிரிக்குதே.. கைப்புள்ள வொர்க் அவுட் ஆச்சுடா! இனி அடுத்து டூயட் பாட இடம் தேடணும்டான்னு பல வகையான சிந்தனைகளை கணக்கு போட ஆரம்பித்துவிட்டார்..


சரி, இந்த மர்ம இந்தியர் யாருன்னு சஸ்பென்ஸை உடைக்கனுமில்ல... இவருதான் நான் இவங்களை அழைத்து வர அனுப்பிய டூரிஸ்ட் கைட். இவர் கொஞ்ச நேரம் வாஷ் ரூம் போயிட்டு வர்றதுக்குள்ள இம்புட்டு காமெடியாகிப்போச்சு ..


பிறகு என்ன? எல்லாரும் அவங்கவங்க சூட்கேஸை தூக்கிட்டு காரை நோக்கி நடக்க ஆரம்பிச்சாங்க.


இப்பவே இப்படின்னா, இன்னும் அஞ்சு நாளுக்கு இவங்க அடிக்கிற லூட்டியை நீங்க பார்க்கணுமா வேண்டாமா?

இவங்கதான் கைப்பூவை அறைஞ்ச அம்மணி. எப்படி இருக்காங்க?


இந்த இரண்டு பாகங்களும் வ.வா. சங்க போட்டிக்காக எழுதியது. மற்ற பாகங்களை கொஞ்சம் கேப் விட்டு எழுதறேன். ஒரேயடியா போட்டா உங்களுக்கு போரடிச்சிருமோன்னு கொஞ்சம் பயம்தான். ஹீஹீ..
வாங்க மக்களே! நல்லா இருந்தா கொஞ்சம் ரெகமண்ட் பண்ணிட்டு (துப்பிட்டு) போங்க.. கும்மியடிக்க போறதாவும் காத்தால தகவல் வந்துச்சு. அதுக்கும் இங்க ரெடிதான் :-)

108 Comments:

Anonymous said...

i am first ah?

Arunkumar said...

just miss :(

Anonymous said...

yeah yeah i am first.muhahahaha

Anonymous said...

first time in history of kummi i am first

மு.கார்த்திகேயன் said...

ada.. namakku munnadi redu per..Grrrr

மு.கார்த்திகேயன் said...

/first time in history of kummi i am first //

thanjavur kalvettula pottudalaam thurga

Anonymous said...

//thanjavur kalvettula pottudalaam thurga //

please do it.and better luck next time dude

மு.கார்த்திகேயன் said...

//தெலுங்கு பட ஹீரோ ஸ்டைலில் (சித்தார்த் தவிர்த்து)//

உஷார் பார்ட்டிங்க நீங்க மை பிரண்ட்

மு.கார்த்திகேயன் said...

//better luck next time dude //

துர்கா பொண்ணு, இந்த சிங்கத்தை இப்படி சீண்டுதே

Anonymous said...

நான் போய் படிச்சுட்டு வரேன்.கும்பி அடிக்கும் ஆர்வத்தில் படிக்கமால் வந்துட்டேன்.

Anonymous said...

//துர்கா பொண்ணு, இந்த சிங்கத்தை இப்படி சீண்டுதே//

நீங்க மிருகம்ன்னு சொல்லவே இல்லையே ;-)

மு.கார்த்திகேயன் said...

// பத்து வயது சிறுவனின் சட்டை போட்டா நமக்கு தெரியாதா ? கேட்டா, இது பாடி ஃபிட்டு . உங்களுக்கு இதெல்லாம் தெரியாதுன்னு சொல்றார். அவங்க தெரு குட்டையனுடைய பேண்டு போட்டு வந்திருக்கார் . கேட்டா, இப்போ இதுதான் ஃபேஷன் . முக்கா கால் சிலுவார்ன்னு சொல்றார். என்னன்னு சொல்ல..

//

நாட்டாமை காஷ்டியூம் தான் சூப்பர், மை பிரண்ட்

Anonymous said...

hey erra fazira தான் கைப்பூவை அடிச்சாங்களா?பாவம்லா அவரு.ஏன் எல்லாரும் அவரை அடி வாங்க வைக்குறீங்க

MyFriend said...

அடடா.. ஒரு நிமிடத்திலேயே 12 கமேண்ட்டா.. உங்க பாசத்துக்கு அளவே இல்லையப்பா..

என் கண்ணெல்லாம் கலங்கிடுச்சு... :-)

இன்னைக்கு கமேண்ட் மோடரேஷன் டிஸேபல்ட்.. புகுந்து விளையாடுங்க. :-))
(ஏதோ, என்னால முடிஞ்சது)

Arunkumar said...

அப்டி போட்டுத் தாக்குங்க..
செம ROTFL

எல்லாரோட காஸ்ட்யூம் சூப்பர் :-)

Anonymous said...

//அடடா.. ஒரு நிமிடத்திலேயே 12 கமேண்ட்டா.. உங்க பாசத்துக்கு அளவே இல்லையப்பா..

என் கண்ணெல்லாம் கலங்கிடுச்சு... :-)//

sis.நம்ப எல்லாம் பாச மலர்கள் லா.இப்படிதான் இருப்போம் ;-)

Arunkumar said...

அந்த மலாய அம்மணி சூப்பர் ஆனா மலேசியா கூப்டு வந்தும் கைப்புவ அடி வாங்க வச்சிட்டீங்களே :((

அவர மலேசிய ஃபிகர்ஸோட டேன்ஸ் ஆட விட்டுர்க்கலாம்ல.. பாவம் மனுஷன் !!

Arunkumar said...

//
(சித்தார்த் தவிர்த்து)
//
அட்ரா அட்ரா.. காரியத்துல கண்ணா இருக்கீங்க .::மை ஃப்ரண்ட் :)

Arunkumar said...

//
வெட்டி: என் டை என் டை!!!! சுமா எனக்கு ஆசையா வாங்கி கொடுத்த என் டை என் டை!!!
//
வெட்டி அங்க போயும் சுமா நெனப்பு தானா?

Anonymous said...

//தேவ்:
பச்சை கலரு டீசர்ட்டு போட்டு, அதுக்கு மேட்சே ஆகாம ஒரு டை கட்டிக்கிட்டு கவ் பாய் தொப்பி அணிஞ்சுகிட்டு கையில் ஒரு பேப்பரும் பேனாவும் சகதியுமா நிக்குறாரு. ஏன் இந்த பேப்பர் பேனான்னு கேட்டா, யாருக்காவது பர்த்துடேன்ன்னா கச்சேரி வைக்கத்தான் குறிப்பு எடுக்க போறேன்னு சொல்றாரு //

அப்படியே எனது கற்பனை குதிரையை தட்டி விடுறேன்.தேவ் அண்ணா இந்த உடையில் சூப்பராக இருப்பார் போல

மு.கார்த்திகேயன் said...

//இன்னைக்கு கமேண்ட் மோடரேஷன் டிஸேபல்ட்.. புகுந்து விளையாடுங்க. :-))
(ஏதோ, என்னால முடிஞ்சது) //

அட அட அட.. என்ன ஒரு நல்ல எண்ணம் உங்களுக்கு மை பிரண்ட்..

ஆனா.. துர்கா இருகப்ப நாம பேசினா டோட்டல் டேமஜ் பண்ணிடுறாங்களே அது தான்.. கொஞ்சம் யோசிக்கிறேன் :-)

மு.கார்த்திகேயன் said...

/வெட்டி அங்க போயும் சுமா நெனப்பு தானா?//

சும்மா சும்மா சுமா நினைப்பு தான் இந்த வெட்டிக்கு, அருண்

Anonymous said...

//ஆனா.. துர்கா இருகப்ப நாம பேசினா டோட்டல் டேமஜ் பண்ணிடுறாங்களே அது தான்.. கொஞ்சம் யோசிக்கிறேன் :-) //

grrrrrrrr.ஒரு அப்பாவி பொண்ணு நான்.என் மேல் இப்படி பட்ட குற்றசாட்டு.ஐயகோ இது கொடுமை!!

மு.கார்த்திகேயன் said...

// இன்னும் அஞ்சு நாளுக்கு இவங்க அடிக்கிற லூட்டியை நீங்க பார்க்கணுமா வேண்டாமா?//

இன்னும் அஞ்சு நாளைக்கா.. ஆஹா.. இப்பவே சிரிச்சதுல நம்ம ஆபீசு மக்கள் ஒரு மாதிரி பாக்குறாங்க.. கடசில நம்ம கீழ்பாக்கத்துல சேத்துவிட்டுடுவீங்க போல, மை பிரண்ட்

மு.கார்த்திகேயன் said...

/ஒரு அப்பாவி பொண்ணு நான்.என் மேல் இப்படி பட்ட குற்றசாட்டு.ஐயகோ இது கொடுமை!!//

இதையெல்லாம் நாங்க நம்பமாட்டோம் துர்கா.. கார்த்தி விடு எஸ்கேப்!

மு.கார்த்திகேயன் said...

மை பிரண்ட்! எல்லோரையும் பேசவிட்டுட்டு நீங்க எங்கே எஸ்கேப்.. கைப்புவுக்கு களிம்பு வாங்க போயிருக்கீங்களா

Anonymous said...

//இதையெல்லாம் நாங்க நம்பமாட்டோம் துர்கா.. கார்த்தி விடு எஸ்கேப்! //

உண்மையை சொன்ன யாரு நம்புறாங்க?எல்லாம் காலத்தின் கோலம்.துர்கான்னு ஒரு நல்ல பெண்ணைப் பார்த்து இப்படி எல்லாம் அபாண்டமாக குற்றசாட்டுகள் :-(

Anonymous said...

i go n sleep.kummi adichu very tired.good night kummi gang!!

MyFriend said...

//மு.கார்த்திகேயன் said...
மை பிரண்ட்! எல்லோரையும் பேசவிட்டுட்டு நீங்க எங்கே எஸ்கேப்..
//

நீங்க பேசுறத பார்த்து புல்லரிச்சு நிக்குறேனுங்க.. :-)

Arunkumar said...

//
.துர்கான்னு ஒரு நல்ல பெண்ணைப் பார்த்து இப்படி எல்லாம் அபாண்டமாக குற்றசாட்டுகள் :-(
//
காமிடி உங்களுக்கு நல்ல வருது துர்கா... நீங்க கூட சங்கத்து போட்டிக்கு ஒரு பதிவு போடலாமே :)

இதுக்கு மேல இங்க இருந்தா ரணகள்மாயிடும்.. கார்த்தி மாதிரி நானும் எஸ்கேப் :)

Priya said...

செம காமெடி மை ஃப்ரெண்ட்.. உங்களுக்குள்ள இவ்ளோ திறமையா?

Priya said...

ரெண்டு பாகமும் இப்ப தான் படிச்சேன்..

Priya said...

//இந்த இரண்டு பாகங்களும் வ.வா. சங்க போட்டிக்காக எழுதியது. //

வெற்றி பெற வாழ்த்துக்கள் மை ஃப்ரெண்ட்..

கண்மணி/kanmani said...

முடிவு பண்ணிட்டேன் அம்மிணி.உனக்கு மட்டும் அவிங்க பரிசு தரல உருப்படியா மலேயாவுலயிருந்து திரும்ப முடிய்யாது.பெஸ்ட் ஆப் லக்.
ஆனா யாரை ஒன்னாலும் திட்டு வெட்டித் தம்பி நம்ம பக்கத்து ஆளு அத்தப் போயி ஸ்ட்ரைக்கிங் கலர்ல போட்டு...பாவம் இனி ரொம்ப கலாய்க்காதே.[சும்மாச்சுக்கும்...நெசமில்லே யூ கேரியான் பேபி]

Anonymous said...

oh :-( late attendance...

-porkodi

Anonymous said...

rendu padhivayum padichittu varen..

-porkodi

Anonymous said...

rotfl!! aiyo amma nalla costume designer my friend ;-) kalakkunga! pottiku atb :-)

-porkodi

Syam said...

போன போஸ்ட்ல வெச்ச ஆப்பயே இன்னும் எண்ணி முடிக்கல அதுக்குள்ள இன்னொன்னா :-)

Syam said...

சங்க மக்களுக்கு டிக்கெட் எடுத்து குடுத்து...நல்ல கலர் கலர்ரா டிரஸ் போட்டு...மலேசிய பிகர்கிட்ட அடிவாங்க வெச்சு உங்க பெருந்தன்மைய என்னனு சொல்றது :-)

Syam said...

அந்த அம்மணி குடுத்த 10 ரிங்கட் அப்படியே வெச்சு இருக்கேன் நியாபகார்த்தமா...:-)

Syam said...

அடிச்சு ஆடி இருக்கீங்க வெற்றி பெற வாழ்த்துக்கள் :-)

Dreamzz said...

ஆஹா! ஆரம்பிச்சுடாங்கய்யா! ஆரம்பிச்சுடாங்கய்யா!

Dreamzz said...

கடசில போட்ட பிகர் போட்டோ சூப்பர் :))

Dreamzz said...

//எல்லாமே செய்து காட்டினதும், அந்த அம்மணி கைத்தட்டி பத்து ரிங்கிட் தானம் பண்ணுகிறார். //


நாட்டாமை.. இஹு உங்களுக்கு உச்ச கட்ட அவமானம்! ROFL!

Dreamzz said...

/ கும்மியடிக்க போறதாவும் காத்தால தகவல் வந்துச்சு. அதுக்கும் இங்க ரெடிதான்//

:) good~

Syam said...

//நாட்டாமை.. இஹு உங்களுக்கு உச்ச கட்ட அவமானம்!//

dreamzz, நானே ஒரு பத்து ரிங்கட் ஒரு பிகரு கைல அதும் மலேசிய பிகரு கைல இருந்து கிடச்சுதுன்னு சந்தோசத்துல இருக்கேன்...நீங்க வேற
:-)

Syam said...

//நாட்டாமை காஷ்டியூம் தான் சூப்பர், மை பிரண்ட் //

தல, பின்ன நம்ம எல்லாம் யாரு :-)

Dreamzz said...

@syam
//dreamzz, நானே ஒரு பத்து ரிங்கட் ஒரு பிகரு கைல அதும் மலேசிய பிகரு கைல இருந்து கிடச்சுதுன்னு சந்தோசத்துல இருக்கேன்...நீங்க வேற
:-) //

அது!

Dreamzz said...

50??

Santhosh said...

//நம்ம தல அம்புட்டு அழகா சொக்காயை மாட்டிக்கிட்டு கிளம்பி போனது , கட்டதுரையோட மாங்கா தோப்புக்குதான்..//
மாங்கா தோப்புக்கு போயி அடிவாங்கறத்துக்கே இம்முட்டு அழகா போறாரா தலை.
//கட்டதுரை கண்ணே கலங்கிடுச்சுன்னா பாருங்களேன் ..//
தலை தலை தான் சொன்ன மாதிரியே கட்டதுரையை கண்கலங்க வெச்சிட்டாரு.
//ஒரு வேளையா வியாழனும் வந்தது. எல்லாரும் சென்னை ஏர்போர்ட்டுக்கு வந்துட்டாங்க.//
இதை வியாழன் அன்னிக்கி மொத்த சனியும் ஏர்போட்டுக்கு வந்தது அப்படின்னு சொல்றது தான் சரியா இருக்கும்.

மை பிரண்டு (முன்னாடி பின்னாடி புள்ளி வெக்கிறது கொஞ்சம் கஷ்டமா இருக்குதுங்க இப்படியே freeஆ விட்டுடலாம்) costume designingல கலக்குறீங்க. //சித்தார்த் தவிர்த்து// நம்பிட்டோமுல்ல
//ஸ்யாமின் வாயில் ஜொள்ளு வடிய //
நாட்டாமை ஒண்ணும் சரியில்லையே தங்கமணி கிட்ட பேச வேண்டியது தான். நாட்டாமைக்கு தான் எவ்ளோ அறிவு. பின்னி பெடல் எடுக்குறாரு.

கலக்கல் பிரண்டு.

Syam said...

//இதை வியாழன் அன்னிக்கி மொத்த சனியும் ஏர்போட்டுக்கு வந்தது அப்படின்னு சொல்றது தான் சரியா இருக்கும்//

@சந்தோஷ்

இங்க பாருங்க இதுதான் எரியர தீயுல ஸ்பீடு பெட்ரோல் ஊத்தரதுங்கறது :-)

Syam said...

//நாட்டாமை ஒண்ணும் சரியில்லையே தங்கமணி கிட்ட பேச வேண்டியது தான்//


@சந்தோஷ்

பேசுங்க பேசுங்க...அதுனால மட்டும் தனியா ரெண்டு அடி சேத்தா விழ போகுது...இப்பொ எல்லாம் நாங்களும் ரவுடி ஆகிட்டோம்...தங்கமணி பூரி கட்டைய தூக்கும் போதே மயக்கம் வர மாதிரி கீழ விழுந்துடுவோம் :-)

ALIF AHAMED said...

//
தங்கமணி பூரி கட்டைய தூக்கும் போதே மயக்கம் வர மாதிரி கீழ விழுந்துடுவோம் :-)
//

தல ட்ரைனிங் பத்தல

எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாரு எங்க ஆளு ரொம்ப நல்லவருனு தங்கமணி சொல்லனும்..

அது தான் சங்கத்துக்கு அழகு..::)

Santhosh said...

//@சந்தோஷ்

இங்க பாருங்க இதுதான் எரியர தீயுல ஸ்பீடு பெட்ரோல் ஊத்தரதுங்கறது :-)//
ஹி ஹி..

//@சந்தோஷ்

பேசுங்க பேசுங்க...அதுனால மட்டும் தனியா ரெண்டு அடி சேத்தா விழ போகுது...இப்பொ எல்லாம் நாங்களும் ரவுடி ஆகிட்டோம்...தங்கமணி பூரி கட்டைய தூக்கும் போதே மயக்கம் வர மாதிரி கீழ விழுந்துடுவோம் :-)//
இது வேறயா சொல்லுவோமுல்ல சொல்லுவோமுல்ல இதையும் சொல்லுவோமுல்ல. அடிப்பாங்க இல்ல அடிப்பாங்க இல்ல இதுக்கும் சேத்து அடிப்பாங்க இல்ல (நம்ம தலை சொல்லுகிற மாதிரி படிச்சிகோங்க ஹிஹி..)

balar said...

ROTFL..
நல்ல வேளை நான் ஆபிஸ்ல படிக்கல இந்த பாகத்தை ..:))
நல்ல கலக்கல் காமடியா எழுதி இருக்கீஙக..:)

/**புலி: உர்ர் உர்ர்...

ராயல்: என்னடா பண்ற?

புலி: இந்த அம்மணிக்கு இங்கிலீஸு புரியல. தெலுங்கு புரியல. அதான் என்னுடைய மொழியில பேசுறேன்.**/
ROTFL....

அந்த மலாய அம்மணி நல்ல இருக்காங்க
நம்ம கைப்பு எஸ் கிஸ் மீ! சொன்னதுல தப்பே இல்லே...:)

தங்கள் பதிவுகள் வெற்று பெற வாழ்த்துக்கள்!!.

G3 said...

Adada.. pona episodela 1st commentu.. indha episodela top 50la kooda kedayaadha :-((

Sema ROTFL post.. Total sangam + Notaamai... total damage.. :-)

Poattila vetri pera vaazhthukkal.. and 175 adichadhukkum special vaazhthukkal :-))

இராம்/Raam said...

கலக்கலா எழுதிருக்கே'லா :)

டிரெஸ் காஸ்டீயூம்'ல்லாம் சூப்பர் செலக்சன்... :)

MyFriend said...

@துர்கா|thurgah:

//i am first ah?//

ஆமாம் தங்கச்சி. நீங்கதான் இன்னைக்கு ஃபர்ஸ்ட்டு.. :-)

//yeah yeah i am first.muhahahaha//

என்ன ஒரு சந்தோஷம்.. :-)

//first time in history of kummi i am first//

இன்னும் நம்ப முடியலையா? :-P

//நான் போய் படிச்சுட்டு வரேன்.கும்பி அடிக்கும் ஆர்வத்தில் படிக்கமால் வந்துட்டேன்.//

ஆஹா.. சரி. போய் படிச்சுட்டு வாங்க.. :-)

//hey erra fazira தான் கைப்பூவை அடிச்சாங்களா?பாவம்லா அவரு.ஏன் எல்லாரும் அவரை அடி வாங்க வைக்குறீங்க//

ஆமாம்.. அவங்களேதான். கைப்பு அடி வாங்உறதே அழகு.. நீங்க வேணும்ன்னா பாருங்க.. இவங்க போட்டோ பார்த்ததும், மத்த சிங்கள் அறை கிடைக்கலையேண்னு வருத்தப் படுவாங்க.. ஹீஹீஹீ..

//sis.நம்ப எல்லாம் பாச மலர்கள் லா.இப்படிதான் இருப்போம் ;-)//

நன்றி. நன்றி.. திரும்பவும் கண்ணெல்லாம் கலங்குது. ;-)

//அப்படியே எனது கற்பனை குதிரையை தட்டி விடுறேன்.தேவ் அண்ணா இந்த உடையில் சூப்பராக இருப்பார் போல//

அப்போ மத்தவங்க ட்ரஸ் சூப்பரா இல்லையா? சிங்கங்கள் கோச்சுக்க போறாங்க. ;-)

MyFriend said...

@Arunkumar:

//just miss :(//

ஆஹா.. நீங்களும் கோதாவுல குதிச்சிட்டீங்களா?

//அப்டி போட்டுத் தாக்குங்க..
செம ROTFL //

நன்றி அருண் :-)

//எல்லாரோட காஸ்ட்யூம் சூப்பர் :-)//

நன்றி அகேயின். :-)

//அந்த மலாய அம்மணி சூப்பர் ஆனா மலேசியா கூப்டு வந்தும் கைப்புவ அடி வாங்க வச்சிட்டீங்களே :((//

கைப்பூதான் சொல்லீருக்கார்ல.. அவரு அடி வாங்கலைன்னா இந்த உலகம் அழிஞ்சிடுமாம்.. :-P

//அவர மலேசிய ஃபிகர்ஸோட டேன்ஸ் ஆட விட்டுர்க்கலாம்ல.. பாவம் மனுஷன் !!//

அதுக்கென்ன!! ஆட விட்டுட்டா போச்சு.. இன்னும் அஞ்சு நாள் இருக்குல்ல.. ;-)

//அட்ரா அட்ரா.. காரியத்துல கண்ணா இருக்கீங்க .::மை ஃப்ரண்ட் :)//

ஹீஹீ.. அப்படித்தான். ;-)

//வெட்டி அங்க போயும் சுமா நெனப்பு தானா?//

அவர் எப்போ சுமாவை மறந்திருக்கார்.. :-P

//காமிடி உங்களுக்கு நல்ல வருது துர்கா... நீங்க கூட சங்கத்து போட்டிக்கு ஒரு பதிவு போடலாமே :)//

அதேதான் நானும் சொல்லிட்டு இருக்கேண் அருண். கேட்க மாட்றாங்க.. :-)

MyFriend said...

@மு.கார்த்திகேயன்:

//ada.. namakku munnadi redu per..Grrrr
//

எல்லாரும் துண்டை விரிச்சி போட்டுல்ல உட்கார்ந்திருக்காங்க.. :-)

//உஷார் பார்ட்டிங்க நீங்க மை பிரண்ட்//

காரியத்துல்ல கண்ணா இருக்கோம்ல.. ;-)

//துர்கா பொண்ணு, இந்த சிங்கத்தை இப்படி சீண்டுதே//

கார்த்தி, நீங்களும் சிங்கமா? அப்போ உங்களுக்கும் ஒரு டிக்கேட் போட்டுடலாமா?

//நாட்டாமை காஷ்டியூம் தான் சூப்பர், மை பிரண்ட்//

நாட்டாமை நாட்டாமைதான். ;-)

//ஆனா.. துர்கா இருகப்ப நாம பேசினா டோட்டல் டேமஜ் பண்ணிடுறாங்களே அது தான்.. கொஞ்சம் யோசிக்கிறேன் :-)//

துர்காவுக்கு நீங்க பயபடுறீங்களா? இது நல்லா இல்லையே!!!! :-P

//சும்மா சும்மா சுமா நினைப்பு தான் இந்த வெட்டிக்கு, அருண்//

சுமாவை பார்க்குற வரைக்கும் இவர் இப்படித்தான். :-)

//இன்னும் அஞ்சு நாளைக்கா.. ஆஹா.. இப்பவே சிரிச்சதுல நம்ம ஆபீசு மக்கள் ஒரு மாதிரி பாக்குறாங்க.. கடசில நம்ம கீழ்பாக்கத்துல சேத்துவிட்டுடுவீங்க போல, மை பிரண்ட்//

தல, எம் போஸ்ட்டு உங்களுக்கு இந்த அளவுக்கு புடிச்சிருக்கா? ரொம்ப மகிழ்ச்சி தல.. பரவாயில்லை.. அவங்க பார்த்தால் வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்.. அதான் சிரிகிறேன்னு சொல்லி சமாளிச்சிடுங்க.. :-)

MyFriend said...

@Priya:

//செம காமெடி மை ஃப்ரெண்ட்.. உங்களுக்குள்ள இவ்ளோ திறமையா?//

நன்றி ப்ரியாக்கா.. உங்களைப்போல் கதை எழுதுற திறமையில்லைன்னாலும், இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா காமெடி எழுத முயற்சி செய்யுறேன் அக்கா. :-)

//ரெண்டு பாகமும் இப்ப தான் படிச்சேன்..//

நன்றி..:-)

//வெற்றி பெற வாழ்த்துக்கள் மை ஃப்ரெண்ட்..//

நன்றி நன்றி :-)

MyFriend said...

@கண்மணி:

//முடிவு பண்ணிட்டேன் அம்மிணி.உனக்கு மட்டும் அவிங்க பரிசு தரல உருப்படியா மலேயாவுலயிருந்து திரும்ப முடிய்யாது.பெஸ்ட் ஆப் லக்.//

:-) நன்றியக்கா.. மலேசியாவுல ஆட்கள் செட் பண்ணி வச்சிருக்குற மாதிரி தெரியுதே!! அப்போ இவங்க கதை அதோ கதிதானா? இதை கூட நம்ம கதையில சேர்த்துகலாம் போல இருக்கே! (கண்மணியக்கா கேங் லீடர்.. நீங்க சம்மதம் தெரிவித்தால் மேலே யோசிக்கலாம்.. என்ன சொல்றீங்க?) ;-)

//ஆனா யாரை ஒன்னாலும் திட்டு வெட்டித் தம்பி நம்ம பக்கத்து ஆளு அத்தப் போயி ஸ்ட்ரைக்கிங் கலர்ல போட்டு...பாவம் இனி ரொம்ப கலாய்க்காதே.//

இல்லை.. சுமாவை பற்றியே சும்மா சும்மா யோசிச்சுட்டே இருக்கார்.. கொஞ்சம் கலாஇப்போம்.. :-P

//[சும்மாச்சுக்கும்...நெசமில்லே யூ கேரியான் பேபி]//

தெரியும் அக்கா.. உங்கள் மேலே கோப படுவேனா? நீங்க, அபி அப்பாவெல்லாம் குருவாச்சே இந்த சின்ன பொண்ணுக்கு.. ;-)

MyFriend said...

@பொற்கொடி:

//oh :-( late attendance...//

நோ ப்ராப்ளம்..:-)

//rendu padhivayum padichittu varen..
//

சரிங்க.. :-)

/rotfl!! aiyo amma nalla costume designer my friend ;-) kalakkunga! pottiku atb :-)//

:-)) நன்றிங்க கொடி.

MyFriend said...

@Syam:

//போன போஸ்ட்ல வெச்ச ஆப்பயே இன்னும் எண்ணி முடிக்கல அதுக்குள்ள இன்னொன்னா :-)//

ஆப்புகளை கணக்கு பண்றீங்களா? டைம் இருக்கா நாட்டாமை? உங்களுக்கு ஒவ்வொரு நிமிடமும் ஆப்பு வருதுன்னு சொன்னீங்களே?

//சங்க மக்களுக்கு டிக்கெட் எடுத்து குடுத்து...நல்ல கலர் கலர்ரா டிரஸ் போட்டு...மலேசிய பிகர்கிட்ட அடிவாங்க வெச்சு உங்க பெருந்தன்மைய என்னனு சொல்றது :-)//

ஹீஹீ.. ரொம்ப புகழ்றீங்க.. எனக்கு வெட்கமா இருக்கு.. :-P

//அந்த அம்மணி குடுத்த 10 ரிங்கட் அப்படியே வெச்சு இருக்கேன் நியாபகார்த்தமா...:-)//

அடிச்சது லக்கி ப்ரைஸு உங்களுக்குதான். :-)

//அடிச்சு ஆடி இருக்கீங்க வெற்றி பெற வாழ்த்துக்கள் :-)//

நன்றி தலைவா! :-)

//dreamzz, நானே ஒரு பத்து ரிங்கட் ஒரு பிகரு கைல அதும் மலேசிய பிகரு கைல இருந்து கிடச்சுதுன்னு சந்தோசத்துல இருக்கேன்...நீங்க வேற
:-)//

நாட்டமை சன்ந்தோஷம் நிலைச்சு நிக்க வாழ்த்துக்கள்.. :-)

MyFriend said...

@Dreamzz:

//ஆஹா! ஆரம்பிச்சுடாங்கய்யா! ஆரம்பிச்சுடாங்கய்யா!//

:-P

//கடசில போட்ட பிகர் போட்டோ சூப்பர் :))
//

ரொம்பவே அழகு.. ஆமாதானே சிங்கங்களா??? ;-)

//நாட்டாமை.. இஹு உங்களுக்கு உச்ச கட்ட அவமானம்! ROFL!//

அவரே குஷிலே இருக்கார்.. நீங்க அவமானம்ன்னு சொல்றீங்களே.. ;-)

//50??//

பொன்னான 50 அடிச்சது நீங்கதான் ட்ரீம்ஸ்.. ;-)

MyFriend said...

@சந்தோஷ் aka Santhosh:

//மாங்கா தோப்புக்கு போயி அடிவாங்கறத்துக்கே இம்முட்டு அழகா போறாரா தலை.//

கடமை வீரனாச்சே தல..

//தலை தலை தான் சொன்ன மாதிரியே கட்டதுரையை கண்கலங்க வெச்சிட்டாரு.//

ஹீஹீ.. ஆமாம்.. ;-)

//இதை வியாழன் அன்னிக்கி மொத்த சனியும் ஏர்போட்டுக்கு வந்தது அப்படின்னு சொல்றது தான் சரியா இருக்கும்.//

எரியிற எண்ணையில நெய்யை ஊத்தி எனக்கு டின்னு கட்டிடுவீங்க போலிருக்கே.. பாவம் இந்த சின பொண்ணு.. :-(

//மை பிரண்டு (முன்னாடி பின்னாடி புள்ளி வெக்கிறது கொஞ்சம் கஷ்டமா இருக்குதுங்க இப்படியே freeஆ விட்டுடலாம்)//

நீங்க எழுதும்போது புள்ளி வச்சு கோலம் போடவில்லைன்னா பரவாயில்லை.. உங்களுக்கு எது வசதியோ அப்படியே எழுதுங்க. முன்னாடியு பின்னாடியும் புள்ளி வைக்கிறது எனக்குன்ன்னு ஒரு ட்ரேட் மார்க் ஒருவாக்கனுமில்லை.. ;-)

//costume designingல கலக்குறீங்க.//

:-D நன்றி

//நாட்டாமை ஒண்ணும் சரியில்லையே தங்கமணி கிட்ட பேச வேண்டியது தான். நாட்டாமைக்கு தான் எவ்ளோ அறிவு. பின்னி பெடல் எடுக்குறாரு.//

;-).. நாட்டாமை அறிவுக்கும் பரிசாதான் இந்த மலேசியா ட்ரிப்.. :-)

//கலக்கல் பிரண்டு.//

நன்றி சந்தோஷ்.. :-)

MyFriend said...

@Syam said...

//பேசுங்க...அதுனால மட்டும் தனியா ரெண்டு அடி சேத்தா விழ போகுது...//

அதானே லீவு எடுத்து மலேசியா வந்தாச்சே!! ;-)

//இப்பொ எல்லாம் நாங்களும் ரவுடி ஆகிட்டோம்...//

நாய் சேகரை மாதிரி.. நான்களும் ரவுடி நாங்களும் ரவுடின்னா?

//தங்கமணி பூரி கட்டைய தூக்கும் போதே மயக்கம் வர மாதிரி கீழ விழுந்துடுவோம் :-)//

ROTFL.. நாட்டாமை நாட்டாமைதா. ;-)

MyFriend said...

@மின்னுது மின்னல்:

//தல ட்ரைனிங் பத்தல//

வாப்பா மின்னல்.. :-)

//எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாரு எங்க ஆளு ரொம்ப நல்லவருனு தங்கமணி சொல்லனும்..//

அதுக்கெல்லாம் நாட்டாமை வேற ப்ளான் வச்சிருப்பாரு.. அவரோட அறிவே அறிவுதான். :-)

//அது தான் சங்கத்துக்கு அழகு..::)//

:-)

ALIF AHAMED said...

என்ன எனக்கு மட்டும் தான் ரெண்டு ரெண்டா தெரியுதா...????

இல்ல பின்னுட்டமே அப்படிதானா..::))

MyFriend said...

@balar:

//ROTFL..
நல்ல வேளை நான் ஆபிஸ்ல படிக்கல இந்த பாகத்தை ..:))
நல்ல கலக்கல் காமடியா எழுதி இருக்கீஙக..:)//

:-)) பாராட்டுக்கு நன்றி பாலா..


//அந்த மலாய அம்மணி நல்ல இருக்காங்க
நம்ம கைப்பு எஸ் கிஸ் மீ! சொன்னதுல தப்பே இல்லே...:)//

ஆஹா.. நீங்களுமா?? ;-)

//தங்கள் பதிவுகள் வெற்று பெற வாழ்த்துக்கள்!!.//

மீண்டும் நன்றி. :-)

MyFriend said...

@G3:

//Adada.. pona episodela 1st commentu.. indha episodela top 50la kooda kedayaadha :-(( //

நீங்கதான் லேட் G3யக்கா.. பரவாயில்லை.. நீங்க வந்துட்டீங்களே! :-)

//Sema ROTFL post.. Total sangam + Notaamai... total damage.. :-) //

டோட்டல் டேமேஜா? இன்னும் இருக்கே! அடுத்த பாகத்துல.. ;-)

//Poattila vetri pera vaazhthukkal.. and 175 adichadhukkum special vaazhthukkal :-))//

டபல் நன்றி. :-)

MyFriend said...

@இராம்:

//கலக்கலா எழுதிருக்கே'லா :)

டிரெஸ் காஸ்டீயூம்'ல்லாம் சூப்பர் செலக்சன்... :)
//

நன்றி ராம். நேற்று நீங்க செய்த உதவிக்கும் நன்றி.. :-)

MyFriend said...

@மின்னுது மின்னல்:

//என்ன எனக்கு மட்டும் தான் ரெண்டு ரெண்டா தெரியுதா...????

இல்ல பின்னுட்டமே அப்படிதானா..::)) //

அது ப்ளாக்கர் சொதப்பல் மின்னல்.. சரி செய்தாச்சு.. :-)

கோபிநாத் said...

பாகம் ரெண்டும் அட்டகாசம் ;-)))

மீண்டும் மீண்டும் சிரிப்பு தான் ;-))) வாழ்த்துக்கள்

கோபிநாத் said...

\\கண்மணி said...
முடிவு பண்ணிட்டேன் அம்மிணி.உனக்கு மட்டும் அவிங்க பரிசு தரல உருப்படியா மலேயாவுலயிருந்து திரும்ப முடிய்யாது.பெஸ்ட் ஆப் லக்.
ஆனா யாரை ஒன்னாலும் திட்டு வெட்டித் தம்பி நம்ம பக்கத்து ஆளு அத்தப் போயி ஸ்ட்ரைக்கிங் கலர்ல போட்டு...பாவம் இனி ரொம்ப கலாய்க்காதே.[சும்மாச்சுக்கும்...நெசமில்லே யூ கேரியான் பேபி]\\

எல அக்கா சொன்னதை கேட்டிங்கலால.....
அக்கா தீர்ப்புக்கு மறு தீர்ப்பு இந்த தமிழ்மணத்திலேயே கிடையாதுல......கிடையாதுல .........கிடையாதுல ;-)))

கோபிநாத் said...

\\புலி: உர்ர் உர்ர்...

ராயல்: என்னடா பண்ற?

புலி: இந்த அம்மணிக்கு இங்கிலீஸு புரியல. தெலுங்கு புரியல. அதான் என்னுடைய மொழியில பேசுறேன்.

ராயல்: இதுல உனக்கு பெருமை வேற... க்க்க்ர்ர்ர்... த்த்தூதூ...\\

நல்லா கோத்துவுட்டிங்க போங்க.....ஒரே சிரிப்பு தான் ;-))))

கோபிநாத் said...

\\துர்கா|thurgah said...
first time in history of kummi i am first\\

வரலாறில் எதை எல்லாம் சேர்க்க வேண்டியிருக்கு பாருங்க மக்கா ;)

கோபிநாத் said...

\\இது வேறயா சொல்லுவோமுல்ல சொல்லுவோமுல்ல இதையும் சொல்லுவோமுல்ல. அடிப்பாங்க இல்ல அடிப்பாங்க இல்ல இதுக்கும் சேத்து அடிப்பாங்க இல்ல (நம்ம தலை சொல்லுகிற மாதிரி படிச்சிகோங்க ஹிஹி..)\\

சந்தோஷ் ஒரு கொலைவெறியோட தான் கிளம்பிருக்கிங்க போல ;-))

Anonymous said...

////சூடானில் பொண்ணுங்களே பார்க்காம காய்ஞ்சு போய் இருந்ததுனால மலேசியாவுல ஒரு கலக்கு கலக்கனும்ன்னு அமர்க்களமாய் வந்திறங்கியிருக்கார்..//

என்ன ஒரு அபாண்ட குற்றச்சாட்டு. சூடான் கிளிகள் மேல இப்படி ஒரு குற்றச்சாட்டா? ஐய்யகோ.... இங்கு காய்ந்து கிடப்பது நிலமும் அப்பாவி ஜனமும் தான், அரபிய கிளிகள் அல்ல என்பதை இந்த நேரத்தில் தெரிவிக்க கடமைப்பட்டு இருக்கிறேன் //

ALIF AHAMED said...

///
என்ன ஒரு அபாண்ட குற்றச்சாட்டு. சூடான் கிளிகள் மேல இப்படி ஒரு குற்றச்சாட்டா? ஐய்யகோ.... இங்கு காய்ந்து கிடப்பது நிலமும் அப்பாவி ஜனமும் தான், அரபிய கிளிகள் அல்ல என்பதை இந்த நேரத்தில் தெரிவிக்க கடமைப்பட்டு இருக்கிறேன்
//


அவசர பட்டுட்டியே மக்கா...
காய்ந்து கிடக்கும் தல யிக்கு தெரிந்தால்
மலேசியா ட்டிரிப்பை கேன்சல் செய்து விட்டு அங்க வந்துடுவாரு

அப்படியே கைம்பெண்னை தேடி ஆப்பிரிக்கா போயிட்டா சங்கத்த என்ன பண்ணுறது...

:)

Anonymous said...

excuse me may i come in

Bharani said...

idhuku enna comment poduradhune theriyalaye....

Bharani said...

second part mathum dhaan padichen...nalla ezhudhi irukeenga...innum try panni part 3, 4 ellam ezhudunga :)

Bharani said...

ellarayum potu varuthu eduthu irukeenga....nalla irunga :)

Cheranz.. said...

கலக்கல்.....நல்லா ஏழுதிருக்கிங்க
வெற்றி பெற வாழ்துக்கள்

~சேரன்

ஜி said...

aiyayo.. yaar ivunga kitta sangathula potti irukuthunnu sonnathu...

enna ammani malaysiavil barigade nu post potuttu iruntheenga.. thideernu intha podu podureenga...

kalakals of Malaysia...

Raji said...

Ada Eswara..Naan dhaan ivalavu lateaa?

Sat sunday blog pakkam vara mudiyadhungooo...Ipa thaan padichaen superngoo...

Raji said...

Myfriend..Superaa ellarukkum costume design pannirukkeenga ...
Part time fashion design edhuvum padikkureengala enna?
Oh Siddarth ungalooda favaa?Adhaan avara telegu film industry costumela irundhu othikku vachuteengala?

Raji said...

Motha postum ROFL:)

Sikkiram nest partu podunga...

Raji said...

Kadaisila andha malai akka padam pottu asathiteenga ...

Pottiyil vetri paera vazhththukkaL enadhu thozhiyae...

கண்மணி/kanmani said...

பாப்பு ரெண்டு நாளா அக்கா ஊர்ல இல்ல தாயி அதுக்குள்ள நம்மள 'சொர்ணாக்கா' ரேஞ்சுக்கு இந்த கோபி உசுப்பேத்திவுடுது.நம்ம தீர்ப்புக்கு அப்பீலு இல்லையாம்.அது சரி வ.வா.ச வைக் கலாய்ப்பதில் மை பிரண்ட் ரவுண்டு கட்டி அடிக்குதே.

MyFriend said...

@கோபிநாத்:

//பாகம் ரெண்டும் அட்டகாசம் ;-)))
//

நன்றி.. ;-)

//மீண்டும் மீண்டும் சிரிப்பு தான் ;-))) வாழ்த்துக்கள்//

அப்படின்னா காமெடி டைம், கமெடி கவுண்டவுனெல்லாம் வரலையா?? :-P

//எல அக்கா சொன்னதை கேட்டிங்கலால.....
அக்கா தீர்ப்புக்கு மறு தீர்ப்பு இந்த தமிழ்மணத்திலேயே கிடையாதுல......கிடையாதுல .........கிடையாதுல ;-)))//

அக்காதான் சுப்ரீம் கோட் ஜட்ஜா? ஓஹோ!!!

//நல்லா கோத்துவுட்டிங்க போங்க.....ஒரே சிரிப்பு தான் ;-))))//

புலியின் உண்மையான காட்டினேனுங்க. ;-)

//\\துர்கா|thurgah said...
first time in history of kummi i am first\\

வரலாறில் எதை எல்லாம் சேர்க்க வேண்டியிருக்கு பாருங்க மக்கா ;)//

பாவம் குழந்தை.. சேர்த்துடுங்கப்பா.. :-)

//சந்தோஷ் ஒரு கொலைவெறியோட தான் கிளம்பிருக்கிங்க போல ;-))//

எல்லாம் கேப்டனுடைய சபரி படம் பார்த்த எஃபெக்ட்டு கோபி.. :)

MyFriend said...

@நாகை சிவா:

//என்ன ஒரு அபாண்ட குற்றச்சாட்டு. சூடான் கிளிகள் மேல இப்படி ஒரு குற்றச்சாட்டா? ஐய்யகோ.... இங்கு காய்ந்து கிடப்பது நிலமும் அப்பாவி ஜனமும் தான், அரபிய கிளிகள் அல்ல என்பதை இந்த நேரத்தில் தெரிவிக்க கடமைப்பட்டு இருக்கிறேன் //

அந்த அளவுக்கு கலர் கலரா இருந்திருந்தா புலி மலேசியாவுக்கு வர்றதுல்ல எதுக்கு இவ்வளவு ஆர்வம்?? டிக்கேட்டை வேறு யாருக்காவது கொடுத்துடலாமா புலி? ;-)

MyFriend said...

@மின்னுது மின்னல் said...

//அவசர பட்டுட்டியே மக்கா...
காய்ந்து கிடக்கும் தல யிக்கு தெரிந்தால்
மலேசியா ட்டிரிப்பை கேன்சல் செய்து விட்டு அங்க வந்துடுவாரு

அப்படியே கைம்பெண்னை தேடி ஆப்பிரிக்கா போயிட்டா சங்கத்த என்ன பண்ணுறது...

:)//

மின்னலுக்கு கரெக்ட்டா புரிஞ்சிருக்கு.. டிக்கெட்டை இவரு பேருக்கே மாற்றிடலாம் போலிருக்கே! :-D

MyFriend said...

@Anonymous:

//excuse me may i come in//

வாங்க அனானி.. அப்படியே பேர் சொல்லிட்டே வாங்க.. :-)

MyFriend said...

@Bharani:

//idhuku enna comment poduradhune theriyalaye....
//

அவ்வளவு மட்டமாவா இருக்கு??

//second part mathum dhaan padichen...nalla ezhudhi irukeenga...innum try panni part 3, 4 ellam ezhudunga :)//

ஏங்க? முதல் பகுதி படிக்க கூடாதுன்னு ஏதும் வேண்டுதலா?? ;-)

//ellarayum potu varuthu eduthu irukeenga....nalla irunga :)//

நன்றி.. :-)

MyFriend said...

@Cheran Parvai:

//கலக்கல்.....நல்லா ஏழுதிருக்கிங்க
வெற்றி பெற வாழ்துக்கள்

~சேரன்//

ஆட்டோகிராப் சேரன்தான் வந்திருகாருன்னு நெனச்சேன்.. :-P

முதல் வருகைக்கு நன்றி. பாராட்டுக்கும் நன்றி.. :-)

MyFriend said...

@ஜி:

//aiyayo.. yaar ivunga kitta sangathula potti irukuthunnu sonnathu.../

இதை யாரு சொல்லுறா பாருங்க! இவரே ஒரு பெரிய எழுத்தாளரு.. இவர் கிட்ட யாரு சொன்னான்னு நாந்தானுங்க கேட்கனும்.. ;-)

//enna ammani malaysiavil barigade nu post potuttu iruntheenga.. thideernu intha podu podureenga...//

பரிகேஜ் என்றால் என்னங்க??

//kalakals of Malaysia...//

கலக்கல் ஆஃப் சிங்கங்கள் இன் மலேசியா.. ஹீஹி..

ஜி said...

100......

cup ungalukkuthaan.. cup ungalukkuthaan...

MyFriend said...

@ராஜி:

//Ada Eswara..Naan dhaan ivalavu lateaa?//

பெட்டர் லேட் தேன் நெவெர்.. :-)

//Sat sunday blog pakkam vara mudiyadhungooo...Ipa thaan padichaen superngoo...//

நன்றிங்க.. :-)

//Motha postum ROFL:)//

:-))

//Sikkiram nest partu podunga...//
நெக்ஸ்ட்டு போஸ்ட்டு போடுரதுக்கு கொஞ்சம் கேப் விடப்பட்டு இருக்கின்றது. ;-)

//Kadaisila andha malai akka padam pottu asathiteenga ...//

அவங்க நல்ல பாடகி கம் நடிகை.. ரொம்ப அழகானவங்க.. நான் கைப்புள்ள அடி வாங்உவதை கற்பனை பண்ணும்போது இவங்கதான் பொருத்தமா இருப்பாங்கன்னு தீர்மானிச்சாச்சு. ;-)

//Pottiyil vetri paera vazhththukkaL enadhu thozhiyae...//

நன்றி. :-)

MyFriend said...

@கண்மணி:

//பாப்பு ரெண்டு நாளா அக்கா ஊர்ல இல்ல தாயி அதுக்குள்ள நம்மள 'சொர்ணாக்கா' ரேஞ்சுக்கு இந்த கோபி உசுப்பேத்திவுடுது.நம்ம தீர்ப்புக்கு அப்பீலு இல்லையாம்.//

கோபி உங்க மேலே அவ்வளவு பிரியமும் நம்பிக்கையும் வச்சிருக்காருக்கோ! அதான்.. பாசத்துல சொர்ணாக்கா. ச்சாரி.. கண்மணியக்கா ஞாபகமாகவே இருந்துட்டாரு அண்ணன்! ;-)

//அது சரி வ.வா.ச வைக் கலாய்ப்பதில் மை பிரண்ட் ரவுண்டு கட்டி அடிக்குதே.//

ரவுண்டு கட்ட உதவி செய்த பாசமலர் குடும்பத்துக்கும் நன்றி. :-)

MyFriend said...

@ஜி :

//100......

cup ungalukkuthaan.. cup ungalukkuthaan...//

கேப்ல 100 அடிச்சிட்டீங்களே!!!
உங்களுக்கு ஒரு ஃபில்டர் காப்பி பேங்களுர் ஆபிஸுக்கே அனுப்பி வைக்கப்படுகிறது. ;-)

ulagam sutrum valibi said...

naa first naa first inu varuva enna theyriyalaya namba pakam vaa kannu

ACE !! said...

superngo.. sangathu singangkalai oru vazhi pannra mudivoda irukeenga polirukku :)

ambi said...

congrats for clinching the title my dear sister. enna treatu intha annavukku..? :)

balar said...

2007-காமெடி க்வீன் பட்டம் வாங்கியற்காக வாழ்த்துக்கள் மைஃப்ரண்ட் ..

மிக பொருத்தமான பட்டம்தான்..:)

ulagam sutrum valibi said...

my friend, i do look at you as my grandchild, that is why i addressed you as kannu(eyes) and china ponnu(little girl)and i will continue to do so :).i think we both misunderstood each other but lets forget about it. i will come and visit your blog, please feel free to come and visit mine, eppa venalum vanthu comment pottutu po maa.

Raji said...

Next part eppo my frined?