Saturday, July 26, 2008

போவோமா.. LKG-க்கு. ;-)

நம்ம மக்களுக்கு அறிவு ஜாஸ்திங்க. அறிவு மட்டுமில்ல. ரொம்பவே க்ரியேட்டிவானவங்க. நமக்கெல்லாம் பதிவெழுத மேட்டர் இல்லன்னு எப்படித்தான் கண்டுபிடிக்கிறாங்களோ? (ஒரு வேளை இவங்க எல்லாம் விஞ்ஞானியாகவோ, துப்பறியும் வல்லுனராகவோ ஆக வேண்டியவங்களோ?) இப்படி புதுசு புதுசா டேக் கண்டுபிடிச்சு நம்ம ப்ளாக்கையும் வாழ வைக்கிறாங்கப்பா.. இதை ஆரம்பித்த புண்ணியவான்களுக்கும் முத்துக்காக்கும் நன்றி சொல்லி நாம் எல்லாரும் LKG-க்கு போவோம்..

அட என்னங்க.. இது A for ஆப்பிள் வகுப்புதான். கொஞ்சம் அட்வான்ஸா நாம் அடிக்கடி போகுற வலைகளின் சுட்டிகளை கேட்குறாங்க. நான் இந்த வகுப்புல 2 தடவை கலந்துக்கப் போறேன். முதல் வகுப்புல, நான் சுற்றும் வலைப்பூக்கள். இரண்டாவது சுற்றுல நான் சுற்றும் மற்ற வலைத்தளங்கள்.

***********************************************************************

A for அம்பி, அனுசுயா, அபி அப்பா, அகிலன், அய்யனார், அருட்பெருங்கோ, அருண் சிவா, அருண்குமார், ஆயில்யன், ஆஷ் அம்ருதா, ஏஸ், அரும்புகள், அவந்திகா
B for பரணி, பத்மபிரியா, ப்ளாக் யூனியன்
C for CVR, ச்சின்னப் பையன்
D for தேவ், டுபுக்கு டிசைபிள், ட்ரீம்ஸ், திவ்யா
E for எழில்பாரதி
G for G ராகவன், G3
I for இம்சை அரசி, இம்சை, இளா
J for ஜில்லென்று ஒரு மலேசியா, ஜேகே, ஜீவ்ஸ், ஜி, ஜொல்லுப்பாண்டி
K for கடல் கணேசன், கார்த்திகேயன், கண்மணி, கப்பி பய, காயத்ரி, கே4கே, கேகே, குசும்பன், கோபிநாத், கோப்ஸ், குட்டீஸ் கார்னர், கீத்துக் கொட்டாய், கானா பிரபா, கே.ஆர்.எஸ்
M for மங்களூர் சிவா, மங்கை, மின்னுது மின்னல், முத்துலெட்சுமி, மது, மாதினி
N for நாமக்கல் சிபி, நிஜமா நல்லவன், நான், நிலவு நண்பன், நிலா ரசிகன், நிலா, நானானி
P for பயமரியா பாவையர் சங்கம், பவன், ப்ரியா, பொன்ஸ், பொற்கொடி, பாசமலர், புதுகைத் தென்றல், புனிதா, பேரண்ட்ஸ் கிளப்
R for ராம், றேடியோஸ்பதி, ரசிகன், ரம்யா, ராஜி, ராப், ரிஷான் ஷெரிப், ரம்யா ரமணி
S for சஞ்சய், சந்தோஷ், சினேகிதி, சுமதி, ஸ்யாம், சுவரொட்டி, சரவணக்குமார், சென்ஷி, SP VR சுப்பையா, சதீஸ்குமார்
T for தேன்கிண்ணம், தமிழ்மணம், தேன்கூடு, தம்பி, துர்கா, துளசி கோபால், தூயா, TBCD, தமிழ் புகைப்படக்கலை, தமிழ் பிரியன், தருமி
U for உங்கள் நண்பன் சரா
V for வலைச்சரம், வீடியோஸ்பதி, விக்னேஸ்வரன், வினையூக்கி, வெங்கட்ராமன், வெட்டிப்பயல், வேதா, வேடந்தாங்கல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், வல்லி சிம்ஹன்
Y for யோகேஸ்வரன்
# for 24/7 ஃப்ரேம்ஸ்

*****************************************************************************

A for AllAboutSymbian --> சிம்பியன் ஃபோன் வகைகளின் applications மற்றும் கைத்தொலைப்பேசிகளின் விபரங்கள் முழுமையாக கிடைக்குமிடம்
AsteriskGuru --> சொந்தமா PBX சர்வீஸ் செய்யுறதை பற்றி விளக்குறாங்க
B for Blogger --> இதுக்கு மட்டும் வராமல் இருந்தால் பதிவு எப்படி போடுறதாம்?
C for CoolToad --> என்ன பாடல் தேடினாலும் கிடைக்குமிடம்
CineSouth --> சினிமா நியூஸ்
D for Dell --> எல்லா கணிணியூம் மடிக்கணிணியும் சூப்பரா இருக்குல்ல. ;-)
F for FileHippo --> இலவசமாக சாஃப்ட்வேர் டவுன்லோட் செய்ய
Friendster --> நண்பர்கள் கூட்டணி
Facebook --> நண்பர்கள் கூட்டணியுடன் கேம் விளையாட
G for GSC --> எந்த படம் என்ன தியேட்டர்ன்னு தெரிஞ்சிக்கத்தான் ;-)
Gmail --> மின்னஞ்சல் நிறைய வருமே. ;-)
Google --> தினமும் இதன் முகத்தில் விழிக்கலைன்னா வேலையே நடக்காது
H for HowStuffWorks --> எப்படி சுறா மீனிடமிருந்து தப்பிகிறதுங்கிற சுலபமான கேள்வியிலிருந்து எப்படி மேகி போடுறது என்ற கஷ்டமான கேள்வி வரைக்கும் பதில் கிடைக்கும் இங்கே.
Happy --> எந்த மொபைல் அல்லது லேன்லைனுக்கு கால் பண்ணினாலும் 45 நிமிடத்துக்கு just RM0.99 தான் (மலேசியாவில் மட்டுமே)
I for Imeem --> பாடல்களை அப்லோட் செய்யவும், கேட்கவும்
K for Kumudam --> ஓசியில் படிக்கத்தான்
L for LowYat --> என்னைப் போல கம்ப்யூட்டர்வாதிங்களுக்கு சொர்க்கம்
M for MalaysiaKini --> மலேசிய அரசியல் செய்திகள் தெரிந்துக்கொள்ள
Maps of Google --> எங்கே போறதென்றாலும் இங்கே பார்த்துட்டுதான் போகணும்.
Mobile88 --> மலேசியாவில் ஃபோன் வாங்கனுமா? எல்லா தகவலும் இங்கே கிடைக்கும்
O for Orkut --> ஃப்ரெண்ட்ஸ்தெரோட பிரதர்
P for PCB123 --> வேலை வேலைன்னு ஒன்னு இருக்குல்ல. அதுக்கு கொஞ்சம் ஹெல்ப்ஃபுல்லா இருக்கு
R for RHBBank -->RHB வங்கி ஆன்லைன்
S for Siddharth-Online --> சித்தார்த் ஸ்பெஷல்
Scribd --> நிறைய புத்தகங்கள் இலவசமா கிடைக்கும்
T for Twitter --> பேசிட்டே இருக்க.
U for UserTube --> சில வீடீயோ க்ளிப்ஸ் பார்க்க
V for VMWare --> ஒரே நேரத்துல விண்டோவ்ஸ், லினக்ஸ்ன்னு புகுந்து விளையாட..
W for Wikipedia --> கூகிலுடைய தங்கச்சி. எதையும் தெரியாதுன்னு சொல்லவே சொல்லாது
Y for YouTube --> நல்லா பொழுது போகும்.
# for 123Greetings --> வாழ்த்துக்கள் பறிமாற.

*****************************************************************************
மூனு பேர டேக் பண்ணனுமாமே?

1- கானா பிரபா
2- சென்ஷி
3- ஜீவ்ஸ்

Friday, July 25, 2008

அனைத்துலக திருமண சின்னம் (International Symbol of Marriage)

அனைத்துலக திருமண சின்னம் என்னத் தெரியுமா?ஹாஹாஹா.. ஷூ.. சிரிக்க கூடாது.. மனித உரிமை கமிஷன் திருமணத்துக்காக என்ன சிம்போல் தேர்ந்தெடுக்கலாம் என்று 5 வருட சூடான டிஸ்கஷனுக்கு பிறகு 21 ஏப்ரல் 2005-இல் இந்த படத்தை தேந்தெடுத்திருக்கிறது..

என்னங்க.. நான் சொல்றதை நம்பலையா??
இருக்கவே இருக்கார் கூகில் ஆண்டவர். கூகிலில் International Symbol of Marriage-ன்னு டைப் பண்ணுங்க. Image-இல் தெரியும் படங்களை பாருங்க..

அவ்வ்வ்.. எல்லாருக்கும் ஒரே தமாஷா போச்சு.. மனித உரிமை கமிஷனுக்கு சேர்த்துதான் சொல்றேன்.
பசங்களா, இதுல இருந்து என்ன தெரியுது? நீங்க கல்யாணம் பண்ணனும்ன்னா முதலில் உங்களிடம் ஒரு க்ரேடிட் கார்ட் இருக்கணும். அட்லீஸ்ட் ஒரு பேங்க் கார்டாவது வேணும் போலிருக்கே. ;-))

பி.கு: ஈமெயிலில் எனக்கு வந்தது இந்த படம். இதைப்பற்றி கூகிலில் தேடியதில் மேலே நான் சொன்ன சில விபரங்கள் கிடைத்தன. நன்றி ராஜி.

Sunday, July 20, 2008

பிறந்தநாள் வாழ்த்துக்கள்....



இன்று பிறந்தநாள் கொண்டாடும் தோழன் விஜய்க்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். சிங்கம் இது நாள் வரை சிங்கலா இருந்து இப்போதுதான் ஒரு பொண்ணு கிட்ட மாட்டியிருக்கு. இன்று போல் என்றும் இந்த ஜோடிகள் ஒற்றுமையுடனும், நலமுடனும், மகிழ்வுடனும் வாழ வாழ்த்துக்கள். இவர்களுக்காகவும், விஜயின் பிறந்த நாளுக்காகவும் இந்த பாடலை சமர்ப்பிப்போம். :-)

Thursday, July 10, 2008

காத்திருந்த காதலி - பாகம் 8


இதுவரை காத்திருந்த காதலி:

வடகரை வேலன் பாகம் 1
பரிசல் காரன் பாகம் 2
வெயிலான் பாகம் 3
கிரி பாகம் 4
ஜெகதீசன் பாகம் 5
டிபிசிடி பாகம் 6
கயல்விழி முத்துலெட்சுமி பாகம் 7

....மருத்துவமனை ஒன்றாம் எண் வாசலில் கௌரியின் அப்பா கார்நுழைந்த அதே நேரம் கார்த்திக் கார் இரண்டாம் எண் வாசல் வழியாக நுழைந்தது. இருவரும் வேறு வேறு படிக்கட்டுகளில் சங்கர் அறையை நோக்கி ஏறிக்கொண்டிருந்தார்கள்.

**********************************************************
இது முத்துக்கா எழுதியது.. நான் பாட்டுக்கு தேன்கிண்ணத்துல பாட்டு போட்டுக்கிட்டு, 24/7 ஃப்ரேம்ஸ்ல வீடியோ போட்டுக்கிட்டு, அப்பப்போ யாராவது பதிவு எழுதி கொடுத்தா அதை என் வலைப்பதிவுல போட்டுக்கிட்டு, அப்பப்போ கொஞ்சம் கும்மியும் ஆடிட்டு இருந்தேன். கதை எழுது நீன்னு ஆர்டர் போட்டுட்டு போயிட்டாங்க முத்துக்கா. என்ன கொடும சார் இது! கதையா? நானா?ன்னு எனக்கே ஒரு நிமிடம் ஒன்னும் புரியல. தயவு செய்து விளக்கவும் நிலமைதான். சரி, என்னை நம்பி வாக்கு கொடுத்துட்டாங்களே. எழுதி கொடுத்துடுவோம்ன்னு இறங்கிட்டோம்ல. ;-)
முத்துக்கா வலுக்கட்டாயமா டில்லியை சேர்த்துக்கிட்டதால நான் கேரக்டர் அனைவரையும் மலேசியா கூட்டிட்டு வரணும்ன்னு பார்த்தேன். ஃப்ளைட் டிக்கேட்ஸ் கட்டுப்படியாகாததுனால ஒருத்தரை மட்டும் மலேசியாவிலிருந்து இந்தியா கொண்டு வந்திருக்கேன். ஹீஹீஹீ.. இப்போ நம்ம கதை. படிச்சுட்டு நீங்க அடிக்க வர்றதுக்குள்ள நான் அப்பீட்டு..

**********************************************************

சங்கரின் பெற்றோர்கள் பின் தொடர கார்த்திக் வெகு வேகமாக படிக்கட்டுகளில் ஏறி சங்கரின் அறையை அடைந்தான். மற்றவர்கள் அறைக்கு வந்து சேறுவதற்கு முன்பே சில காரியங்கள் செய்ய வேண்டும் என முன்பே குறித்துவைத்திருந்தான்.
உள்ளே சீருடையில் நர்ஸ் மட்டுமே இருந்தாள்.

கார்த்திக்கை பார்த்ததும் நர்ஸ் எழுந்து அவன் அருகில் வந்தாள்.

"சிறிது நேரம் பேஷண்டை பார்த்துக்குறீங்களா? நான் சில மருந்துகளை எடுத்துட்டு வந்துடுறேன்"

"சரி சிஸ்டர்"

நர்ஸ் ஒரு துண்டு சீட்டை எடுத்துட்டு வெளியாவதை நின்ற இடத்திலிருந்தே பார்த்துக் கொண்டிருந்தான். நர்ஸ் தன் பார்வையிலிருந்து மறைந்ததும் சங்கர் கட்டிலின் அருகே போனான்.

சங்கர் தூக்க மாத்திரையின் தாக்கத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். ஆனாலும் இப்படிப்பட்ட நிலையில் இருக்கும்போது பக்கத்தில் யாராவாது பேசினால் நோயாளிகளுக்கு கேட்குமாமே! கார்த்திக் கொஞ்சம் குனிந்து சங்கரின் காதில் ஏதோ முனுமுனுத்துக் கொண்டிருந்தான்.

சடாறென்று யாரோ கண்ணத்தில் ஓங்கி அறைந்த வேகத்தில் அப்படியே விழுந்து கட்டிலின் இரும்பில் மோதி தலைக்கு மேல் நட்சத்திரங்கள் சுற்றுவது போல் இருந்தது. தன்னை சுதாகரித்துக்கொள்வதுக்குள் மேலும் மேலும் அடிகள் விழ ஆரம்பித்தன.

"ஐயா!!!! எம்பையனை எதுக்குயாஅடிக்கிறீங்க??" என்று தன் சேலையின் முந்தானையை பிடித்துக்கொண்டு ஓடி வந்தார் சங்கரின் அம்மா. அப்பாவோ தன் பங்குக்கு தன் மகனை கௌரியின் தந்தையிடமிருந்து காப்பாற்ற பாடுப்பட்டார்.

"ம்ம்.. நீங்கதான் இவன பெத்தவங்களோ?? %@*#&(%" இளக்காரமாய் கேட்டார் ராமச்சந்திரன்.

"சார்.. வார்த்தையை அளந்து பேசுங்க"

"ஓ பண்றதையும் பண்ணிட்டு மரியாதையா வேற பேசணுமோ?"

"சார். என்ன விஷயம்ன்னு சொல்ல்லுங்க"

"உம் மையனையே கேளுய்யா.. சொல்லுவான் அவன் வண்டவாளத்தை"

"டேய்.. என்னடா பண்ணே? எதுக்கு இந்த ஐயா என்னென்னமோ சொல்லுராரேடா.. என்னப்பா நடந்துச்சு. சங்கர் வேற இப்படி கெடக்குறான். இந்த நிலமையில..." துக்கம் தொண்டையை அடைத்தது சங்கரின் அம்மாவுக்கு.

" அம்மா... அது ஒன்னும் இல்லம்மா. இவர்தான் கௌரியோட அப்பா. சங்கர் காதலிக்கிறான்னு அன்னைக்கு போன்ல சொன்னானே. அந்த பொண்ணோட அப்பா"

"அவர் ஏண்டா உன்னை அடிக்கணும்?" இது அப்பா..

"அப்பா.. அது வந்து.. வந்து.. அதுதான் எனக்கும் தெரியல.."

"பண்றதெல்லாம் பண்ணிட்டு தெரியலைன்னா சொல்றே!!!" மிகவும் ஆக்ரோஷத்துடன் சீறி பாய்ந்தார் ராமச்சந்திரன்.

அதற்க்குள் சங்கர் முனுமுனுக்க எல்லாரும் சங்கரின் பக்கத்தில் வந்து நின்றார்கள்.

"மாப்பிள்ள.. இப்போ எப்படி இருக்கு?"

சங்கர் அவரை பார்த்து மீண்டும் முனுமுனுத்தான். "சரியா விளங்கல. என்ன சொன்னே?"

அவர் காதை சங்கரின் வாய் அருகே வைத்தார். சங்கர் திரும்ப முனுமுனுத்தான்.

ஷாக் அடித்தது போல ஒரு ரியாக்ஷனுடன் ராமச்சந்திரன் நிமிர்ந்தார். அதற்குள் மருந்து எடுக்க சென்ற நர்ஸ் ஓடி வந்தாள்.
"கொஞ்சம் தள்ளி நில்லுங்கப்பா. கொஞ்சம் காத்து வரட்டும்"

"மிஸ்டர் சங்கர், இப்போ பரவால்லையா.. இன்னும் வலி இருக்கா?"

"ம்ம்.."

"இன்னும் ஒரே ஒரு ஊசி. இன்னும் 15 நிமிடத்துல உங்களுக்கு ஆப்பரேஷன். எல்லாம் சரியாகிடும்" என சொல்லிகொண்டே மயக்க ஊசியை குத்தினாள். சங்கர் திரும்ப மயக்க நிலைக்கே திரும்பினான்.

"சார், என் பையன் என்ன சொன்னான்?"

சத்தம் இல்லை. திரும்பி பார்த்தால் ராமசந்திரனும் அங்கே இல்லை. "எங்கே போயிட்டாரு இந்த மனுஷன்?" என சிந்தித்துக்கொண்டே அறைக்கு வெளியே எட்டிப்பார்த்தார். காரிடோர் வெறிச்சோடி கிடந்தது.
--------------------------------------------------------------
"ட்ரிங் ட்ரிங்.." சங்கரின் மொபைல் அலறியது.

"ஹேல்லோ"

"ஹெல்லோ கேட்டரிங் சங்கர்?"

"இல்ல. ஐ எம் கௌரி. சங்கர் வெளியே போயிருக்கார். என்ன விஷயம்?"

"ஒரு கேட்டரிங் ஆர்டர் கொடுக்கணும். ஏற்கனவே சாருடன் பேசிட்டேன். இன்னைக்கு ரெண்டு மணிக்கு வீட்டுக்கு வர சொன்னார். வந்துட்டேன். வீடு பூட்டியிருக்கு."

"சாரிங்க. நீங்க எங்க ஆபிஸ்க்கு வர முடியுமா?"

"ஆபிஸா? எனக்கு எப்படி வர்றதுன்னு தெரியாதுங்க. நான் மலேசியாவில் இருந்து வந்திருக்கேன். இந்த அட்ரஸையே 3 மணி நேரமா தேடிதான் கண்டு பிடிச்சிருக்கேன். புதுசா இன்னொரு அட்ரெஸ்ஸெல்லாம் தேடுறது ரொம்ப ரொம்ப சுசா (கஷ்டம்).."

"ம்ம்.. சரிங்க. நீங்க அங்கேயே இருங்க. ஒரு 45 நிமிடத்துல ஒருத்தர் உங்களை அங்கே சந்திப்பார்"

சங்கரின் போனில் கார்த்திக்கை தொடர்பு கொள்ள முயற்சித்தாள்.

"You have no suffient balance for outgoing calls" என ஒரு பீட்டரக்கா குரல் ஒலித்தது.

ஹேண்ட்பேக்கில் தன்னுடைய போனை தேடினாள். "ஓ மை காட். போன் அப்பா ஆபிஸ்லேயே விட்டுட்டேன் போலிருக்கு."
'ம்ம்.. நானேதான் சங்கரோட க்ளையேண்டை மீட் பண்ணனும் போல..' என்று எண்ணிக்கொண்டு தன் ஹேண்ட்பேக்கை தோளில் மாட்டிக்கொண்டு தன் காரை நோக்கி நடந்தாள்..

40 நிமிடங்களிலேயே சங்கரின் வீட்டை அடைந்ததும், ஏற்கனவே சங்கரின் பொருட்களை கார்த்திக் தன்னிடம் ஒப்படைத்ததில் சங்கர் வீட்டு சாவிக் கொத்தும் இருந்ததனால் வீட்டை திறந்து உள்ளே போனால். மலேசிய க்ளையேண்டிடம் ஒரு 20 நிமிடங்கள் வியாபர பேச்சு நடத்தியதில் நல்ல முடிவில் முடிந்தது. மலேசியா க்ளையேண்ட் "தெரிமா காசே" என்று நன்றியுரைத்து உற்சாகமாக திரும்பினார்.

கௌரி காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடாததனால் பசி வயிற்றை கிள்ளியது. சமையல் அறையில் ஏதாவது இருக்குமா என்று தேடிச் சென்றாள். பேச்சலர்ஸ் வீடு மட்டும்தான் அலங்கோலமாக இருந்ததே தவிர சமையல் அறை சுத்தமாக இருந்தது. பசங்க வீட்டில் சமைக்கிறதே இல்ல போல என்று எண்ணி ஃப்ரிஜ்ஜை திறந்து ஐஸ் வாட்டர் மட்டுமே குடித்தாள்.

திரும்ப ஹாலுக்கு வந்த போது ஒரு அறையின் கதவு லேசாக திறந்திருந்தது. இது சங்கரோட அறையாக இருக்குமோ என்றெண்ணிக்கொண்டே 'என்னைப் பற்றி ஏதாவது கவிதை எழுதி வைத்திருக்கிறானா என் அருமை காதலன்' என அந்த அறையினுள் நுழைந்தாள்.

துவைக்காத துணிகள், அடுக்கி வைக்கப்படாத புத்தகங்கள், கலந்து கிடக்கும் மெத்தை, ஒரு மூளையில் 1 மாதத்துக்கும் மேலாக துவைக்கப்படாத ஜீன்ஸ் எல்லாம் கிடந்தது. பேச்சுலர் அறை என்றாலே இப்படித்தானோ என்று மேஜை அருகே வந்தாள். மேஜை மேலே ஒரு டைரி. டைரியை எடுத்து முதல் பக்கம் திறந்தாள். கார்த்திக்கின் படத்தை அந்த முதல் பக்கத்தில் பார்த்ததும் இது கார்த்திக்க்கின் அறையோ.. நாம்தான் தப்பா வந்துட்டோம் என்று வெளியாக முற்ப்பட்டாள். கதவருகே வந்ததும், கார்த்திக் ஏற்கனவே அவளிடம் ஒரு விஷயத்தை பற்றி சொன்னது ஞாபகம் வந்தது

@@@@@@@@@@@@
சின்ன ஃப்ளாஷ்பேக்:

கௌரி: கார்த்திக், நீ எப்போ கல்யாணம் பண்ணிக்க போறே?
கார்த்திக்: கல்யாணம் பண்ணிக்க போறது இல்ல
கௌரி: ஏன்? காதல் மேலே வெறுப்பா?
கார்த்திக்: இல்ல. ஒருத்தருக்கு ஒரு தடவைதான் காதல். நான் ஏற்கனவே காதலிச்சிட்டு இருக்கேன்
கௌரி: அட்ரா சக்க.. யாரந்த பொண்ணு?
கார்த்திக்: இது ஒரு தலை காதல். நான் அவ கிட்ட சொல்றதுக்கு முன்னவே செத்து போச்சு. யாரென்று கேட்காதே ப்ளீஸ்..
@@@@@@@@@@@@@@

கார்த்திக் யாரை காதலிக்கிறான் என்று தெரிந்துக்கொள்ளும் ஆர்வத்தில் திரும்ப அறையினுள் நுழைந்தாள்.

**********************************************************
நான் முடிச்சுட்டேன். அடுத்த ஆப்பு பாசக்கார அண்ணன் கோபிநாத்.
அண்ணா, இந்த மாதம் கோட்டா இன்னும் காலியா இருக்கு. எழுதி ஜமாய்ங்க. ;-)