தங்கையா வந்த தோழியா
கேள்விகளை கடந்து நிற்கும்
உறவுகள்
ஆயிரம் ஆயிரம் வாழ்த்துகள்
உன்னை சுற்றி
பெற்றதன் பூரிப்பில் பொற்றோர்
ஒரு புறம்
உன்னை முந்த வேண்டுமே என்ற
கலக்கத்தில் தம்பி
ஒரு புறம்
சக வயதொத்த தோழிகளின்
கிண்டல் ஒரு புறம்
நாங்கள் இவளின் ஆசிரியர்கள்
என்ற பெருமையுடன் ஆசிரியர்க்ள
ஒரு புறம்
படைத்ததின் ஆனந்தத்தில் அந்த
கடவுளும் ஒரு புறம்
மார்தட்டி மகிழ்ச்சி கொள்ளும்
வலையுலக பாசக்கார குடும்பம்
ஒரு புறம்
உன் புன்னகையில் வாய் மொழி மறந்த
இந்த அண்ணனும் ஒரு புறம்
உன் பாதையில் இருக்கும் கற்கள் உன்னை காயப்படுத்த அல்ல உன்னை செதுக்கு வதற்காக. நாளைய சரித்திரத்தின் நாயகி நீ. இன்று போல் என்றும் புன்னையுடன் வாழ்க நீ பல்லாண்டு.
Send this eCard !
அதிகம் பேசிட்டேன்னு நினைக்குறேன்.
மட்டற்ற மகிழ்ச்சியில்
அண்ணன்