சிங்கங்களின் மலேசியா டூர் எப்படி ஆரம்பிச்சதுன்னு இங்கே பாருங்க..
நம்ம தல அம்புட்டு அழகா சொக்காயை மாட்டிக்கிட்டு கிளம்பி போனது , கட்டதுரையோட மாங்கா தோப்புக்குதான்.. வியாழக்கிழமை மலேசியா கிளம்புறதுனால சனிக்கிழமை கட்டதுரையின் தோப்புக்கு போக முடியாதுன்னு, சீக்கிரமா கிளம்பி போயிட்டார். கடமை வீரனாச்சே நம்ம கைப்பூ..
கொட்டுங்கடா கும்பியை.. பையன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்னு பாராட்டி பாராட்டியே நொங்கு எடுத்துட்டானுங்க கட்டதுரையின் ஆட்கள்.. இதுல என்ன சீரியஸ் மேட்டர்னா, கட்டதுரையோட ஒன்னு வீட்டு பாட்டி கைப்பூவை அடிக்க அடிக்க, சீக்காளியா இருந்த அந்த கெழவி பரவை முனியம்மா ரேஞ்சுல எனர்ஜெஸ்டிகா ஆயிட்டார்.. எழுந்து குதிக்கிறது என்ன.. ஆடுறது என்ன.. பாடுறது என்ன.. கட்டதுரை கண்ணே கலங்கிடுச்சுன்னா பாருங்களேன் ..
ஒரு வேளையா வியாழனும் வந்தது. எல்லாரும் சென்னை ஏர்போர்ட்டுக்கு வந்துட்டாங்க. எல்லாரும் எப்படி வந்திருக்காங்கன்னு சொல்லனும்ல..
ராயல் ராம்:
மலேசியாவுக்கு போறோம்ன்னு முடிவானதும் ராம் ராயல் ராமா இருக்கணும்ன்னு தலைக்கு மஞ்சள் கலர் சாயம் அடிச்சு சிகப்பு கலர் சொக்கா போட்டுக்கிட்டு கழுத்துல ஒரு ரிப்பன்னோட வந்திருக்காரு. கேட்டா இதுதான் ரிச்சி ரிச் லுக்காம்.
தேவ்:
பச்சை கலரு டீசர்ட்டு போட்டு, அதுக்கு மேட்சே ஆகாம ஒரு டை கட்டிக்கிட்டு கவ் பாய் தொப்பி அணிஞ்சுகிட்டு கையில் ஒரு பேப்பரும் பேனாவும் சகதியுமா நிக்குறாரு. ஏன் இந்த பேப்பர் பேனான்னு கேட்டா, யாருக்காவது பர்த்துடேன்ன்னா கச்சேரி வைக்கத்தான் குறிப்பு எடுக்க போறேன்னு சொல்றாரு .
புலி:
கோர்ட்டும் சூட்டும் போட்டு கலக்கலா வந்திறங்கியிருக்கார். சூடானில் பொண்ணுங்களே பார்க்காம காய்ஞ்சு போய் இருந்ததுனால மலேசியாவுல ஒரு கலக்கு கலக்கனும்ன்னு அமர்க்களமாய் வந்திறங்கியிருக்கார்.. ஆனால், கால்ல ஜப்பான் சிலிப்பரை போட்டு வந்து மானத்தையே வாங்கிட்டார்..
வெட்டி:
எப்படி வந்திருப்பார்ன்னு உங்களுக்கு நான் சொல்லிதான் தெரியனுமா ? தெலுங்கு பட ஹீரோ ஸ்டைலில் (சித்தார்த் தவிர்த்து) ஸ்ட்ரைக்கிங் கலர்ல உடுத்தி டூயட் பாடுவாங்களே, அந்த மாதிரி நம் கண்ணே கூசுற மாதிரி ஸ்ட்ரைக்கிங் பச்சையில சட்டை அணிஞ்சு ஸ்ட்ரைக்கிங் மஞ்சல்ல பேண்டு போட்டு, ஸ்ட்ரைக்கிங் சிகப்புல டை கட்டி, சுட்டெரிக்கும் சூரியன் கலர்ல ஒரு சப்பாத்து போட்டிருக்கார் . இருட்டுலையும் இவரை கண்டு பிடிக்கிற அளவுக்கு ஸ்ட்ரைக்கிங் கலர்ன்னா பார்த்துக்கோங்களேன்.
சிபி:
என்னமோ கவலைல இருக்கார் போல. வெட்டிக்கு டோட்டல் ஆப்போசிட்டா எல்லாம் கருப்பு (All Black)-ல வந்து இறங்கியிருக்கார். என்ன கவலை தளபதியாரே? சொல்லுங்க தீர்த்து வச்சிடலாம் (உங்களையல்ல. உங்க பிரச்சனையைத்தான்)..
இளா:
விவசாயி வெள்ளை சட்டை வேட்டின்னு ஏதோ தேர்தலுக்கு போற மாதிரி வந்திறங்கியிருக்காரு.. ஏன்னு கேட்டா ஜீன்ஸ் எல்லாம் தோய்க்க போட்டபோது , எறுமை பசியில தின்னுடுச்சாம்..
பாண்டி:
இவர் எப்போதும் போல அமர்க்களமாய்தான் வந்திருக்கார்.. கூலிங் க்லாஸ் என்ன! ரேய்மண்ட் வாட்ஜ் என்ன.. பெர்முடா ஸ்டைலில் ஒரு சர்ட் அணிஞ்சு முக்கா கால் பேண்டு போட்டு வந்திருக்கார்.. வந்ததும் "ஹேய் டூட், எல்லாம் என்னடா பட்டிக்காடா வந்திருக்கீங்க? என்ன மாதிரி மாடர்ன்னா வர தெரியாதா ? கண்ட்ரி ஃப்ரூட்!!"ன்னு சொல்ல எல்லாரும் கடுப்பாகிறார்கள்.
ஸ்யாம்:
கூட்டத்தில எல்லாரையும் விட அதிக குஷியில இருப்பவர் அட்லாஸ் வாலிபர் ஸ்யாம்தான். மலேசியா போக போறதை, அவங்க தெருவில உள்ள எல்லார் கிட்டேயும் "எல்லாரும் பார்த்துக்கோங்க.. நானும் மலேசியா போறேன் மலேசியா போறேன்"னு சொல்லி, எல்லார் கிட்டேயும், துணி மணிகளை ஆட்டையை போட்டு வாங்கி வந்திருக்கார் . பத்து வயது சிறுவனின் சட்டை போட்டா நமக்கு தெரியாதா ? கேட்டா, இது பாடி ஃபிட்டு . உங்களுக்கு இதெல்லாம் தெரியாதுன்னு சொல்றார். அவங்க தெரு குட்டையனுடைய பேண்டு போட்டு வந்திருக்கார் . கேட்டா, இப்போ இதுதான் ஃபேஷன் . முக்கா கால் சிலுவார்ன்னு சொல்றார். என்னன்னு சொல்ல..
கைப்புள்ள:
எப்போதும் போல, அவங்க சிட்டி மாமா பையனுடைய சட்டையையும் ஜீன்ஸ் பேண்டையும் போட்டுட்டு அவனுக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி வர்ரேன்னு டகால்டி கொடுத்துட்டு வந்திருக்கார். ஸ்டைலுக்கு ஒரு கூலிங் க்லாஸ் . இருட்டுலையும் அதை கழட்ட மாட்டாராம் . சைட்ல ஒரு பேக் வேற. என்னாத்த சொல்ல...
இப்படி அமர்க்களமாக இந்த கோஷ்டிங்க மலேசியா கே.எல்.ஐ .ஏ. ஏர்போர்டில் வந்து தரை இறங்கினாங்க. (ஏரோப்ளேனிலும் நிறைய கூத்துங்க நடந்தது. அது இப்போது வேணாமே!). எல்லாரும் அவங்க அவங்க சூட்கேஸை வண்டியில் தள்ளி வர, கைப்பூ சின்ன புள்ளயாட்டம் அந்த வண்டியில ஏறி உட்கார, நம்ம தேவுதான் தள்ளிட்டு வந்தார்.
கைப்பு: அடடா.. அடடா. ஏர்போர்டிலேயே இத்தனை அம்சமா ஃபிகருங்களா! அப்போ கே. எல் டவுனுல எத்தனை பேருடா இருப்பாளுங்க! இந்த அஞ்சு நாளுக்குள்ள எப்படியாவது நமக்கு ஒரு காதலியை செட் பண்ணிடலாம்..
ஸ்யாம்: நமக்குதானே!! பண்ணிடலாம் பண்ணிடலாம் ..
ஸ்யாமின் வாயில் ஜொள்ளு வடிய , பக்கத்தில் வெட்டியோட டைய பிடிச்சி அவரோட வாயை துடைக்கிறார்.
வெட்டி: என் டை என் டை!!!! சுமா எனக்கு ஆசையா வாங்கி கொடுத்த என் டை என் டை!!!
கைப்பூ: நமக்குன்னா எனக்கு மட்டுந்தான் அயோக்கிய அப்புரெண்டிஸ்களா? ஊருக்குள்ளே எனக்கு ஒன்னை கூட கொடுக்கமே இருந்தீங்க... இங்கயாவது ஒன்னாவது செட் ஆகட்டுமிடா? விட்டு கொடுங்கடா சாமிகளா?
இப்படி கைப்பூவும் வெட்டியும் ஒரே நேரத்துல கத்த ஏர்போர்ட்டுல உள்ள எல்லாருமே இவங்களையே திரும்பி பார்குறாங்க..(நல்ல வேலை, இவீங்கல பிக் அப் பண்ண நான் போகலை.. இல்லைன்னா என் மானமே போயிருக்கும்...)
விவா: வ. வா.. ச .. ங்.. க.. ம்.... வ வா சங்கம்!!!
விவசாயி ஒரு போர்டுல எழுத்து கூட்டி படிக்கிறார்.. சந்தோசத்துல மேலும் கீழும் குதிக்கிறார்.. அவரு வேட்டி கலண்டுக்கிட்டதை கூட அவரு கவனிக்கலைன்னா பாருங்களேன்..
விவா: அந்த மலாய் பொண்ணு நமக்குதான் காத்திருக்கா. நம்மளை பத்திதான் போர்டு பிடிச்சிருக்கா!
விவசாயி சொல்லி முடிக்கிறதுக்குள்ள, ஜொள்ளு,ராயல்,புலி, வெட்டி, ஸ்யாம் மற்றும் கைப்பூ அந்த மலாய் பெண்மணி முன்னுக்கு கியூ கட்டி நிக்குறாங்க.
கைப்பு: எஸ் கிஸ் மீ!
மலாய் அம்மணி படார்ன்னு ஒரு அறை விடுறா கைப்பூக்கு.
கைப்பூ: அவ்வ்வ்வ்வ்வ்.....
மலாய் அம்மணி: அப்பா காமு நாக் (Apa Kamu Nak)?
வெட்டி: நானு ஏமி செப்புதாணன்டி??
மலாய் அம்மணி வெட்டியை முறைச்சி பர்க்க, வெட்டி ரெண்டு அடி பின்னால பம்முகிறார்..
புலி: உர்ர் உர்ர்...
ராயல்: என்னடா பண்ற?
புலி: இந்த அம்மணிக்கு இங்கிலீஸு புரியல. தெலுங்கு புரியல. அதான் என்னுடைய மொழியில பேசுறேன்.
ராயல்: இதுல உனக்கு பெருமை வேற... க்க்க்ர்ர்ர்... த்த்தூதூ...
ஸ்யாம்: இப்போ நான் எப்படி கேக்குறேன் பாரு!
ஸ்யாம் அவருடைய சூட்கேஸை திறந்து பூலோக உருண்டைய எடுத்து சுத்தி சுத்தி இந்தியாவை காட்டுறார் .. அப்புறம் அந்த அம்மணியை இழுத்து போய் ப்ளேனை காட்டுறார் . கைப்புள்ளையை காட்டி, தன் கையை மேலே தூக்கிட்டு அப்புறம் ரெண்டு கையையும் சேர்த்து லெஃப்டும் ரைட்டுமா ஆடுறார்.
கைப்பூ: என்னை பற்றி பய எப்படி புகழ்ந்து பேசுறான் பாரு!
கைப்புள்ளக்கு ஒரே சந்தோஷம். ஸ்யாம் வேர்க்க விருவிருக்க எல்லாமே செய்து காட்டினதும், அந்த அம்மணி கைத்தட்டி பத்து ரிங்கிட் தானம் பண்ணுகிறார். (பைத்தியக்காரன் என்று நினைத்திருப்பாரோ!!)
விவசாயிதான் அந்த க்ரூப்பிலேயே விவரமானவர்ன்னு சொல்லிதான் தெரியனுமா என்ன. அவரு அப்படி இப்படின்னு அந்த போர்ட்டை காட்டி கஷ்டப்பட்டு விளக்க,
மலாய் அம்மணி: அவாக் நாக் பாப்பான் இனீ (Awak nak papan ini)?
விவசாயி வ.வா.சங்கம்ன்னு எழுதியிருக்கிற பலகைதான் கேட்கிறார் என்று நினைத்து அவரிடம் நீட்டினார் . இப்படியே இவங்க மாறி மாறி விளக்கிக் கொண்டிருக்க, கைப்புள்ள தன் கன்னத்தை தடவிக்கொண்டே ஒரு ஓரமா போய் உட்கார்ந்துக் கொண்டார்.
கொஞ்ச நேரத்தில் வாஷ் ரூமில் இருந்து ஒரு இந்தியர் நடந்து வர, சிபியும் தேவும் அவரை கடத்திட்டு வந்து அந்த பெண்மணி முன்னுக்கு நிக்க வைத்தனர் . அவங்க என்ன ஐடியா போட்டிருந்தாங்கன்னா, இவங்க பேசுறதை அவரை மலாயில் மொழிமாற்றம் செய்ய சொல்லலாம்ன்னு.. என்ன மூளை!! என்ன மூளை!!!
ஆனால், அந்த நபரோ அந்த பெண்மணியிடம் தெரிஞ்சவர் போல பேச ஆரம்பிச்சார்.. ஒரு 15 நிமிடமா பேசிட்டே இருந்தார்.. சுத்தி நின்ன இந்த ஒன்பது பேரும் வாயில் ஈ புகுறது கூட தெரியாமல் பொழந்து பார்த்திட்டே இருந்தாங்க . அந்த பெண்மணி அந்த போர்ட்டை இந்த நபரிடம் கொடுத்துட்டு கைப்பூ அண்ட் தி கேங்கை பார்த்து ஒரு சிரிப்பு சிரிச்சிட்டு நடந்து போயிட்டார்...
கைப்பூக்கு ஒரே சந்தோஷம்.. நம்மளையும் பார்த்து இந்த பொண்ணு சிரிக்குதே.. கைப்புள்ள வொர்க் அவுட் ஆச்சுடா! இனி அடுத்து டூயட் பாட இடம் தேடணும்டான்னு பல வகையான சிந்தனைகளை கணக்கு போட ஆரம்பித்துவிட்டார்..
சரி, இந்த மர்ம இந்தியர் யாருன்னு சஸ்பென்ஸை உடைக்கனுமில்ல... இவருதான் நான் இவங்களை அழைத்து வர அனுப்பிய டூரிஸ்ட் கைட். இவர் கொஞ்ச நேரம் வாஷ் ரூம் போயிட்டு வர்றதுக்குள்ள இம்புட்டு காமெடியாகிப்போச்சு ..
பிறகு என்ன? எல்லாரும் அவங்கவங்க சூட்கேஸை தூக்கிட்டு காரை நோக்கி நடக்க ஆரம்பிச்சாங்க.
இப்பவே இப்படின்னா, இன்னும் அஞ்சு நாளுக்கு இவங்க அடிக்கிற லூட்டியை நீங்க பார்க்கணுமா வேண்டாமா?
இவங்கதான் கைப்பூவை அறைஞ்ச அம்மணி. எப்படி இருக்காங்க?
இந்த இரண்டு பாகங்களும் வ.வா. சங்க போட்டிக்காக எழுதியது. மற்ற பாகங்களை கொஞ்சம் கேப் விட்டு எழுதறேன். ஒரேயடியா போட்டா உங்களுக்கு போரடிச்சிருமோன்னு கொஞ்சம் பயம்தான். ஹீஹீ..
வாங்க மக்களே! நல்லா இருந்தா கொஞ்சம் ரெகமண்ட் பண்ணிட்டு (துப்பிட்டு) போங்க.. கும்மியடிக்க போறதாவும் காத்தால தகவல் வந்துச்சு. அதுக்கும் இங்க ரெடிதான் :-)