'கணவருடன் அன்பான உறவை வளர்ப்பது எப்படி?' என்ற கருத்தரங்கில் கலந்துக்கொள்ள சில பெண்கள் வந்திருந்தனர். "உங்களில் எத்தனை பேர் உங்கள் கணவரை காதலிக்கிறீர்கள்?" என்று கருத்தரங்கு பேச்சாளர் கேட்டார். அனைவருமே தங்கள் கைகளை உயர்த்தினர்.
உடனே அவர்களிடம் "உங்கள் கணவரை நீங்கள் காதலிப்பதாக எப்போது கடைசியாக சொன்னீர்கள்?" என்ற கேள்வி தொடுக்கப்பட்டது. சிலர் இன்று என்றும், சிலர் நேற்று என்றும், சிலர் ஞாபகம் இல்லை என்றும், மீதி அமைதியும் காத்தனர்.
"பரவாயில்லை. இப்பொழுது உங்கள் கைத்தொலைப்பேசி எடுத்து 'I Love You Sweetheart!' என்று குறுஞ்செய்தி அனுப்புங்கள்" என்றார் பேச்சாளர்.
பதில் குறுஞ்செய்தி வந்தவை என்ன தெரியுமா?
1. யார் நீங்க?
2. என் பிள்ளைகளுடைய அம்மாவே, உனக்கு ஏதும் உடம்பு சரியில்லையா?
3. I love you too!
4. இப்போ என்ன? திரும்பவும் கார் ஆக்ஸிடண்ட் ஆச்சா?
5. நீ என்ன சொல்றன்னு எனக்கு புரியல்ல
6. இப்போ என்ன செஞ்சு வச்சிருக்க? இந்த தடவை உன்னை மன்னிக்க மாட்டேனடி
7. ஐஸ் வைக்காதே.. இப்போ எவ்வளவு பணம் தேவை படுது?
8. ?!?
9. இது கனவா இல்லை நினைவா?
10. இந்த குறுஞ்செய்தி யாருக்கு அனுப்பியது என்று இப்ப நீ சொல்லலைனா, இன்னைக்கு ஒரு கொலை நிச்சயம்!
11. குடிக்க வேணாம்ன்னு எத்தனை தடவைதான் சொல்றது!! நான் என்னத்தான் பண்ணுவேன்??
12. இந்த தடவை எது வேணும்ன்னு நீ கேட்க போறியோ அது கண்டிப்பாக நான் வாங்கி தரப்போவதில்லை!
நீங்களாக இருந்தால் என்ன பதில் சொல்லியிருப்பீர்கள்?
Friday, March 22, 2013
I Love You-வும் பதிலும்
Posted by MyFriend at 7:49 PM 3 comments
Subscribe to:
Posts (Atom)