Thursday, October 11, 2007

விண்வெளிக்கு ஒரு பயணம்


நேற்றிரவு மலேசியாவின் சரித்திரத்தில் இன்னுமொரு மகத்தான சாதனை பொறிக்கப்பட்டது. வளர்ந்து வரும் நாடுகளின் பொன்னான கனவுகளில் ஒன்று விண்வெளியில் காலடி பதிப்பது. ஆனால், அதற்கான தகவல் மற்றும் அறிவியல் சாதனங்களை வாங்குவதற்கும் அதற்கேற்ற கல்வியை மக்களுக்கு தருவதற்கும் வசதி பல இரண்டாம் உலக நாடுகளுக்கு இல்லை என்று நாமெல்லாம் அறிவோம்.

இல்லை என்பதற்காக கைக்கட்டி வாய்பொத்தியா இருக்க முடியும்? முயற்சி! அதற்கான தேவையான முயற்சிகள் எடுத்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு இந்த சாதனை ஒரு நல்ல எடுத்துக்காட்டு. இன்று வரை விண்வெளி ஆராய்ச்சி மையம் மலேசியாவில் இல்லாவிட்டாலும், மலேசியா ரஷ்ய நாடுடன் இணைந்து செயல்ப்பட அமைந்த சந்தர்ப்பம்தான் மலேசிய விண்வெளி திட்டம் 2003 (Malaysia Space Programme 2003).

நடத்தப்பட்ட ஒவ்வொரு தேர்வும், அதன் கஷ்டங்களையும், கடைசி 8 பேர் கடந்து வந்த சோதனைகளையும், தமிழ் பெண்மணி வனஜா அவர்களின் தன்னம்பிக்கையும் ஏற்கனவே இங்கே எழுதியுள்ளேன். எட்டிலிருந்து நான்கு பேரை தேர்ந்தெடுத்த போது வனஜாவும் தேர்வுப்பெற்று ரஷ்யாவில் சில பயிற்சிகளை மேற்கொண்டார்.அதில் இரண்டு பேர் மட்டுமே விண்வெளி வீரர்களாக தேர்வெடுக்கப்பட்டபோது தேர்வானவர்கள் டாக்டர் ஷேய்க் முஜாப்பார் (Dr. Sheikh Muzaffar) மற்றும் டாக்டர் ஃபாயிஸ் காலீட் (Dr. Faiz Khaleed).

அதில் ஒருவரே TMA-11 ரக விண்கலத்தில் பயணிப்பார் என்று நாமெல்லாம் அறிந்ததே. இவர்கள் இருவரும் தகுதியானவர்களாக இருந்ததால் மேலும் பல தேர்வுகள் வைக்கப்பட்டு தேர்வானவர் டாக்டராக பணிப்புரிந்த ஷேய்க் முஜாப்பார்தான்.

நேற்று இரவு மலேசிய நேரம் 9.21க்கு கசாக்ஸ்தானில் இருந்து தன் பயணத்தை தொடங்கிய Soyuz TMA-11-இல் அமேரிக்காவை சேர்ந்த பெக்கி வித்சன் (Commander Peggy Withson) மற்றும் ரஷ்யாவை சேர்ந்த யூரி மலேன்செங்கோவும் (Yuri Malenchengko) சேர்ந்து பயணிக்கிறார்கள்.

TMA-11 மூலமாக ஒவ்வொரு மலேசியனின் கனவும் டாக்டர் ஷேய்க் முஜாப்பார் மூலமாக நினைவாகியது. இவரின் இந்த வெற்றி மலேசியாவின் வருங்கால தலைமுறையினருக்கு ஒரு ஊக்கமாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை எனலாம். விண்வெளி வீரனாக வேண்டும் என்ற இவரது சிறு வயது லட்சியத்தை "இது சாத்தியமற்ற கனவு. நடக்காது" என்று பல பேர் சொன்னதுக்கு அவர் இப்போது பதில் சொல்கிறார்.

"நான் கண்ட கனவு பேராசை, பகல் கனவு என்று மற்றவர்கள் சொன்ன அந்த வார்த்தைகள்தான் நான் இந்தளவு வளர காரணமாய் அமைந்தது. ஆகவே இப்போதே கனவு காணுங்கள். சாதிக்கலாம்." என்கிறார் orthopaedic எனப்படும் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும் மருத்துவராக பணி புரிந்த இவர்.
இவருடைய 12 நாட்கள் விண்வெளி பயணத்தில் இவர் பெரும் அனுபவம் கூடிய சீக்கிரத்திலேயே மலேசிய விண்வெளி ஆரய்ச்சி மையமும் மலேசியாவின் சொந்த விண்கலம் உருவாகுவதுக்கும், இன்னும் நிறைய விண்வெளிவீரர்களும் உருவாகுவதற்கு உதவும் என்று நம்புவோமாக.

நன்றி: அறிவுஜீவி கப்பி

மலேசிய முதல் விண்வெளிவீரர்

13 Comments:

said...

\\இவருடைய 12 நாட்கள் விண்வெளி பயணத்தில் இவர் பெரும் அனுபவம் கூடிய சீக்கிரத்திலேயே மலேசிய விண்வெளி ஆரய்ச்சி மையமும் மலேசியாவின் சொந்த விண்கலம் உருவாகுவதுக்கும், இன்னும் நிறைய விண்வெளிவீரர்களும் உருவாகுவதற்கு உதவும் என்று நம்புவோமாக\\

கண்டிப்பாக நடக்கும்...வாழ்த்துக்கள் ;))

said...

போஸ்ட் சூப்பர்....ஆனா எல்லாத்தையும் விட கடைசி நன்றி தான் அட்டகாசம்.....

அறிவுஜீவி... கப்பி நிலவர்.... ஜாவா பாவலர்... இன்னும் எத்தன???

said...

விண்வெளி பயணத்தில் ஒரு மலேசியர் மகிழ்ச்சியாக உள்ளது. அங்கேயே அவர் ஈத் பெருநாள் கொண்டாடுவார்.
வாழ்த்துக்கள்.

said...

\\நன்றி: அறிவுஜீவி கப்பி\\

அய்யயோ...இத்தனை நாள் இது தெரியமால் இருந்துட்டனே...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

என்ன ஆச்சு இவ்ளோ பொறுப்பா சீரியசா பதிவு போடற எப்டியோ நல்லது நடந்தா சரி :)

said...

பதிவு அருமை அதைவிட அருமை
////நன்றி: அறிவுஜீவி கப்பி////

சூப்பர்!!!

said...

வாழ்த்துக்கள்...

@ கப்பி... விடுய்யா.. விடுய்யா.. இது எல்லாம் நம்ம வாழ்வில் சாதாரணம்ப்பா...

said...

நல்ல தகவல்கள்.... நன்றி... :)

said...

/
நன்றி: அறிவுஜீவி கப்பி///

நம்ம சங்கத்து சூப்பர்ஸ்டாரை ஓவரா'லாம் கலாய்க்க கூடாது... ஆமாம் சொல்லிட்டேன்... :))

Anonymous said...

He is a part time model and do you believe he is suitable??/

said...

ம்ம்... சந்தோஷம் தான்!

said...

நன்றிக்கு முன் வரை நல்ல பதிவு!! :))

said...

ஆஹா.. வாழ்த்துக்கள் புதிய முயற்சிக்கு