Monday, February 12, 2007

161. நல்லவர் சொல்லை நாம் கேட்போம் தமிழா..

இதுவரை நான் இங்கு எழுதிய பாடல்கள் எல்லாமே சினிமா பாடல்கள்தான். இன்றைக்கு ஒரு வித்தியாசத்துக்கு ஒரு மலேசிய கலைஞசர்களின் பாடலை பற்றி சொல்லலாமே என்றுதான் இந்த பதிவு..

ஏற்கனவே மடை திறந்து என்ற பாடலை நிறைய பேர் கேட்டு மலேசிய கலைஞர்களின் திறமையை உணர்ந்துள்ளனர். இங்கெ இன்று நட்சத்திரமாய் வந்திருப்பது பூமெராங்-X (BoomerangX) என்னும் குழு. இவர்கள் ராப் இசை கலைஞசர்கள். தம்ழில் சரளமாய் பேச தெரியாவிட்டாலும் இவர்களின் பாடலில் நல்ல ஒரு கருத்து இருப்பதனாலேதான் இந்த பாடலை நான் இங்கே எழுதுகிறேன்..

தமிழ்நாட்டிலிருந்து தமிழர்கள் இங்கே பிரிட்டீஷ் காலத்தில் வரவைக்கப்பனர் தோட்டத் தொழிலுக்கு.. அன்றிலிருந்து தமிழர்களின் இடம் தோட்டங்கள்தான் என்று ஆகிவிட்டது.. 20 வருடத்துக்கு முன்பிலிருந்துதான் ஒவ்வொறு தமிழனாய் பட்டணத்துக்கு வர ஆரம்பித்தார்கள்... (இதை விடுங்கள்.. இதை பற்றி பின்பு ஒரு பதிவாய் போடுகிறேன்.)

இந்த பாடலில் அந்த வலியையும், கஷ்டங்களையும் சொல்லும் விதமே என்னை கவர்ந்தது.. இதில் மற்றொன்று எனக்கு பிடித்தது: அந்த பெண் குரல் (Featuring artiste: அலிண்டா) (வீடியோவில் தேவதை உடையில் இருப்பார்). இவர் வானவில் பாடல் திறன் போட்டியில் (2nd Season) முதன்மை நிலை வெற்றியாளர். இவர் தன் குரலை மாற்றி மாற்றி பாடும் வல்லமை படைத்தவர். 'மலேசிய பெண் SP பாலா' என்று சொன்னால் மிகையாகாது. இவர் கடைசி சுற்றில் பாடிய பாடல் என்ன என்று கேட்டால் நீங்கள் ஆச்சர்ய படுவீர்கள். அவ்வை சண்முகியில் சுஜாதாவும் கமலஹாசனும் சேர்ந்து பாடிய ருக்கு ருக்கு. இவர் இவருடைய குரலை இரண்டு மோடுலேஷனில் பாடியது அவ்வளவு அருமையாய் இருந்தது.

சரி இப்போது வீடியோ க்ளிப்பையும் அதனை தொடர்ந்து பாடல் வரியையும் பார்ப்போம்..



ஏதோ பிறந்தோம் வளர்ந்தோம்..
நாமெல்லாம் ஒரு ரத்தம்.. தெரியும்..
உலகம் பூரா நாம செதரிக்கெடக்கிறோம்..
4 பேரு சிரிக்கிறோம்..
4 பேரு அழுவுறோம்..
4 பேரு அழியிறோம்..
ஒருத்தன் ஞானியாவுறான்..
என்ன நடக்குது?
புரியுது.. புரியலை..

கிட்ட கொண்டுவா உன் கதை..
சொல்ல போறேன் பல கதை..
சொந்த கதை.. சொந்த கதை..
தாத்தா பாட்டி வந்த கதை..
இயற்கை மண்ம் வீசும் பால் பரக் காட்டுலே
வாழ்க்கை தேயும் செம்மண்ணின் ரோட்டுல..
அந்த பரம்பரை..மீண்டும் ஒரு முறை..
ஆள நினைப்பது என்ன குறை..

நல்லவர் சொல்லை நாம் கேட்போம்..
நலமாய் வாழ வழி வகுப்போம்..
தலைவர் சொல்ல வழி நடப்போம்..
தாய் நாட்டினையே வாழ வைப்போம்..

தமிழன் என்று சொல்லடா..
தலை நிமிர்ந்து நீ நில்லடா..
கேட்க எல்லாம் நல்லா இருக்கு அண்ணே..
முதல் வந்து பாரு தோட்டத்து மண்ண..
தோட்டத்து மக்கள்க்கு ஒரு செய்தி.
நல்லது கேட்க இல்ல ஒரு நாதி..
மரம் வெட்ட போனா உயிர் பாதி..
மறந்து நீ போனா அதோ கதி..
தோட்ட தமிழா அது செய்தி..
கேட்கவா தமிழா அது நீதி..
பட்டணத்து வாழ்க்கை கொஞ்சம் கஷ்டம்..
இருந்தும் உன் பிள்ளை உருப்படும்..
கெட்டது இல்லாமல் பட்டுபோக
மலக்காடு இருக்கு வேலைகாக..
மாச சம்பளம் உனக்கில்லை..
மாசம் கடைசி வரும் தொல்லை..

ஒரு காலத்தில் உலகம் முழுவதும் சிறந்து விளங்கினோம்..
ஆனால் இன்று தோட்டப்புறத்துல மாதச் சம்பளம் பிரச்சனை..
பட்டணத்துல படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காத பிரச்சனை..
ஒரு சிலர் நல்லாயிருந்தாலும்..
பலர் வருமையில வாடும் அவலம் இன்னும் இருக்கவே செய்யுது..
வந்தவருக்கெல்லம் வாரி தந்த அந்த காலம்..
இனி மீண்டும் எப்போ மலரும்?

பசிக்கும் வயிற்றின் கொடுமைகளை..
நாம் பார்த்து வாழ கூடாது..
(பசிக்கும்..)
வதக்கும் மனிதன் இருந்தாலே..
இங்கு பறிக்கும் மனிதன் தோண்ரிடுவான்..
(நல்லவர்..)

மழையில வெயிலில நனைஞ்சோம்.. காஞ்சோம்..
ஓடா தேஞ்சோம்.. அது மிச்சம்..
வீட்டைக் கட்டி.. வாயைக் கட்டி..
உழைச்சி..
10 வட்டி..கடன் கட்டி..
அழிச்சி..
வாழ்நாள் பாட்டாளி..
வருமையோட கூட்டாளி..
ஒருநாள் தான்டா தீபாளி..
இதுதான் இங்கே என்றும் கதி..
அல்லும் பகலும் உழைப்பதற்க்கு..
கல்லும் முள்ளும் உனகெதற்கு?
இல்லும் முள்ளும் கிடைக்கிற்து..
தெளிவாய் செல்லு..
நீ வெல்லு..
நாட்டை கூட நீ வளர்த்த..
காட்டுகுள்ள இன்னும் கிடக்க..
(இயற்கை..)

(நல்லவர்..)
(நல்லவர்.. & தமிழன்..)
(தமிழன்..)

Friday, February 09, 2007

160. ஆட்டோ - ஷேர் - ஆட்டோ


படத்தை பார்த்தீங்களா?


அர்ஜுனரை போல் படத்தில் நான் குறி வைப்பது ஆர்யாவை அல்ல..
அதோ!
அவர் பின்னால் நிற்கும் ஆட்டோவைதான்..

குருஷேத்ரம் படத்தில் வடிவேலுவின் ஒரு ஜோக்கை பார்த்து இன்னமும் குழம்பிகொண்டு இருக்கிறேன்.
அதாங்க..
கைப்புள்ள வேலை தேடி பட்டணத்துக்கு வருவாரு.. பலர் அவரை ஏமாத்தி பண்ம் பறிப்பாங்க.. (இவரு ரொம்ப நல்லவரு!!! அவ்வ்வ்....)

அப்போ ஒருத்தர் "ஷேர் ஆட்டோன்னா 10 பேர் ஏறலாம். எல்லாரும், கொஞ்சம் கொஞ்சம் பணம் தருவாங்க. கடைசி ஆளும் அந்த அட்டோகாரரும் பணத்தை பங்கு போட்டுக்குவாங்க.."ன்னு சொல்லி கைப்புள்ளைய மொத்து மொத்துன்னு அடி வாங்க வைப்பாரே!

எங்க ஊருல ஆட்டோவே இல்லை.. ஆட்டோவை சினிமாவிலும், வலையுலகிலும் பார்த்திருக்கிறேனே தவிர.. நேரடியாக பார்த்ததும் இல்லை.. ஏறியதும் இல்லை..

ஆட்டோ சீட்டை பார்த்தால் மொத்தமே 3 பேர்தான் ஏறமுடியும் போல் இருந்தாலும்,

எப்படிங்க 10 பேர் ஏர்றீங்க?
அந்த ஷேர் ஆட்டோன்னா என்ன?

அது புரியாமல் அந்த ஜோக்குக்கு என்னால் சிரிக்க கூட முடியவில்லை..

யாராவதுக்கு பதில் தெரிந்தால் சொல்லுங்க.. (அது உங்களோட பதிவாய்.. நீளமாய் போட்டாலும் எனக்கு சந்தோஷம்தான்..) ;-)

Saturday, February 03, 2007

159. பெண்: என் கேள்விக்கென்ன பதில்?

தற்செயலாக திவ்யாவின் கலைப்பாடங்களில் பட்டப்படிப்பு படிக்கலாமே என்னும் பதிவை படித்தேன். என்னுள் பல பல கேள்விகள்...

இந்தியாவில் மட்டும்மல்ல.. அனேக நாடுகளில் நம் தமிழினத்தில் பெண்களை சீக்கிரம் திருமணம் செய்து வைக்க நிறைய பெற்றோர்கள் கங்கணம் கட்டி திறீகிறார்கள்.

ஏன்?

1- உங்களுக்கு நாங்கள் என்ன பாரமா?

2- நாங்கள் படிப்பிலும் தொழிலிலும் வெற்றி பெற மாட்டோம் என்று நினைக்கிறீர்களா?

3- சீக்கிரம் திருமணம் புரியாவிட்டால் மற்றவர்கள் குறை சொல்வர் என்றா?

4- மாப்பிள்ளை கிடைக்காதென்றா?

5- உங்களின் கடமைகளை சீக்கிரமே முடிக்க வேண்டும் என்பதாலா?

பிறகு எதற்க்கு சின்ன வயசிலிருந்தே நன்றாக படிக்க வேண்டும், பள்ளியில் முதன்மையாக வரவேண்டும் என்று எங்களை தொல்லை படுத்தினீர்கள்?

பரிட்சையில் புள்ளிகள் குறைந்ததற்க்கு எங்களை பிரம்பு பிய்யும் வரை அடித்தீர்கள்?

உங்களின் அந்த அடியும் கட்டளைகளும்தான் எங்கள் மனதில் தீயானது. படித்து உங்களின் ஆண் பிள்ளகளை விட ஒரு படி மேலே இருக்கவேண்டும் என்ற வெறி..

ஆனாலும் மேல் நிலை கல்வி படிக்கும் போது திரும்பவும் பிரச்சனை.. எங்களின் லட்சியத்தை அடைய விடாமல் செய்யும் உங்களின் இந்த திருமண ஆசை..

எங்களை எங்கள் வழியில் விட்டு பாருங்கள். பல ஆயிரம் சரித்திர பெண்களையும் சாதிக்கும் பெணளையும் நீங்கள் கான்பீர்கள்... அது உங்களுக்கு பெருமை தானே??

பதில் சொல்லுங்கள் என் கேள்விகளுக்கு...