Monday, February 12, 2007

161. நல்லவர் சொல்லை நாம் கேட்போம் தமிழா..

இதுவரை நான் இங்கு எழுதிய பாடல்கள் எல்லாமே சினிமா பாடல்கள்தான். இன்றைக்கு ஒரு வித்தியாசத்துக்கு ஒரு மலேசிய கலைஞசர்களின் பாடலை பற்றி சொல்லலாமே என்றுதான் இந்த பதிவு..

ஏற்கனவே மடை திறந்து என்ற பாடலை நிறைய பேர் கேட்டு மலேசிய கலைஞர்களின் திறமையை உணர்ந்துள்ளனர். இங்கெ இன்று நட்சத்திரமாய் வந்திருப்பது பூமெராங்-X (BoomerangX) என்னும் குழு. இவர்கள் ராப் இசை கலைஞசர்கள். தம்ழில் சரளமாய் பேச தெரியாவிட்டாலும் இவர்களின் பாடலில் நல்ல ஒரு கருத்து இருப்பதனாலேதான் இந்த பாடலை நான் இங்கே எழுதுகிறேன்..

தமிழ்நாட்டிலிருந்து தமிழர்கள் இங்கே பிரிட்டீஷ் காலத்தில் வரவைக்கப்பனர் தோட்டத் தொழிலுக்கு.. அன்றிலிருந்து தமிழர்களின் இடம் தோட்டங்கள்தான் என்று ஆகிவிட்டது.. 20 வருடத்துக்கு முன்பிலிருந்துதான் ஒவ்வொறு தமிழனாய் பட்டணத்துக்கு வர ஆரம்பித்தார்கள்... (இதை விடுங்கள்.. இதை பற்றி பின்பு ஒரு பதிவாய் போடுகிறேன்.)

இந்த பாடலில் அந்த வலியையும், கஷ்டங்களையும் சொல்லும் விதமே என்னை கவர்ந்தது.. இதில் மற்றொன்று எனக்கு பிடித்தது: அந்த பெண் குரல் (Featuring artiste: அலிண்டா) (வீடியோவில் தேவதை உடையில் இருப்பார்). இவர் வானவில் பாடல் திறன் போட்டியில் (2nd Season) முதன்மை நிலை வெற்றியாளர். இவர் தன் குரலை மாற்றி மாற்றி பாடும் வல்லமை படைத்தவர். 'மலேசிய பெண் SP பாலா' என்று சொன்னால் மிகையாகாது. இவர் கடைசி சுற்றில் பாடிய பாடல் என்ன என்று கேட்டால் நீங்கள் ஆச்சர்ய படுவீர்கள். அவ்வை சண்முகியில் சுஜாதாவும் கமலஹாசனும் சேர்ந்து பாடிய ருக்கு ருக்கு. இவர் இவருடைய குரலை இரண்டு மோடுலேஷனில் பாடியது அவ்வளவு அருமையாய் இருந்தது.

சரி இப்போது வீடியோ க்ளிப்பையும் அதனை தொடர்ந்து பாடல் வரியையும் பார்ப்போம்..ஏதோ பிறந்தோம் வளர்ந்தோம்..
நாமெல்லாம் ஒரு ரத்தம்.. தெரியும்..
உலகம் பூரா நாம செதரிக்கெடக்கிறோம்..
4 பேரு சிரிக்கிறோம்..
4 பேரு அழுவுறோம்..
4 பேரு அழியிறோம்..
ஒருத்தன் ஞானியாவுறான்..
என்ன நடக்குது?
புரியுது.. புரியலை..

கிட்ட கொண்டுவா உன் கதை..
சொல்ல போறேன் பல கதை..
சொந்த கதை.. சொந்த கதை..
தாத்தா பாட்டி வந்த கதை..
இயற்கை மண்ம் வீசும் பால் பரக் காட்டுலே
வாழ்க்கை தேயும் செம்மண்ணின் ரோட்டுல..
அந்த பரம்பரை..மீண்டும் ஒரு முறை..
ஆள நினைப்பது என்ன குறை..

நல்லவர் சொல்லை நாம் கேட்போம்..
நலமாய் வாழ வழி வகுப்போம்..
தலைவர் சொல்ல வழி நடப்போம்..
தாய் நாட்டினையே வாழ வைப்போம்..

தமிழன் என்று சொல்லடா..
தலை நிமிர்ந்து நீ நில்லடா..
கேட்க எல்லாம் நல்லா இருக்கு அண்ணே..
முதல் வந்து பாரு தோட்டத்து மண்ண..
தோட்டத்து மக்கள்க்கு ஒரு செய்தி.
நல்லது கேட்க இல்ல ஒரு நாதி..
மரம் வெட்ட போனா உயிர் பாதி..
மறந்து நீ போனா அதோ கதி..
தோட்ட தமிழா அது செய்தி..
கேட்கவா தமிழா அது நீதி..
பட்டணத்து வாழ்க்கை கொஞ்சம் கஷ்டம்..
இருந்தும் உன் பிள்ளை உருப்படும்..
கெட்டது இல்லாமல் பட்டுபோக
மலக்காடு இருக்கு வேலைகாக..
மாச சம்பளம் உனக்கில்லை..
மாசம் கடைசி வரும் தொல்லை..

ஒரு காலத்தில் உலகம் முழுவதும் சிறந்து விளங்கினோம்..
ஆனால் இன்று தோட்டப்புறத்துல மாதச் சம்பளம் பிரச்சனை..
பட்டணத்துல படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காத பிரச்சனை..
ஒரு சிலர் நல்லாயிருந்தாலும்..
பலர் வருமையில வாடும் அவலம் இன்னும் இருக்கவே செய்யுது..
வந்தவருக்கெல்லம் வாரி தந்த அந்த காலம்..
இனி மீண்டும் எப்போ மலரும்?

பசிக்கும் வயிற்றின் கொடுமைகளை..
நாம் பார்த்து வாழ கூடாது..
(பசிக்கும்..)
வதக்கும் மனிதன் இருந்தாலே..
இங்கு பறிக்கும் மனிதன் தோண்ரிடுவான்..
(நல்லவர்..)

மழையில வெயிலில நனைஞ்சோம்.. காஞ்சோம்..
ஓடா தேஞ்சோம்.. அது மிச்சம்..
வீட்டைக் கட்டி.. வாயைக் கட்டி..
உழைச்சி..
10 வட்டி..கடன் கட்டி..
அழிச்சி..
வாழ்நாள் பாட்டாளி..
வருமையோட கூட்டாளி..
ஒருநாள் தான்டா தீபாளி..
இதுதான் இங்கே என்றும் கதி..
அல்லும் பகலும் உழைப்பதற்க்கு..
கல்லும் முள்ளும் உனகெதற்கு?
இல்லும் முள்ளும் கிடைக்கிற்து..
தெளிவாய் செல்லு..
நீ வெல்லு..
நாட்டை கூட நீ வளர்த்த..
காட்டுகுள்ள இன்னும் கிடக்க..
(இயற்கை..)

(நல்லவர்..)
(நல்லவர்.. & தமிழன்..)
(தமிழன்..)

30 Comments:

said...

நாந்தான் ஃபர்ஸ்ட்டா?

நல்லவர் சொல்லை நாம் கேட்போம். அவங்க சொல்றத மலேசிய மக்கள் பிரச்சனையா... மலேசியாவில் தமிழர்கள் நல்ல நிலையில்தான் இருக்குறாங்கன்னு நெனச்சிட்டு இருந்தேன். அவர்களுக்கும் பிரச்சனைகள் இருக்குதா... ம்ம்ம்...

said...

சிலர் பட்டணத்துக்கு வந்து முன்னேறி விட்ட்டார்கள் (எங்களைப் போல்..).. சிலர் இன்னும் அந்த தோட்டங்களில் இருந்து வெளியே வர மறுக்கிறார்கள்.

நானும் சிறு வயதில் தோட்டத்தில் வாழ்ந்திருந்ததால் அவர்களது வாழ்க்கையை பற்றி தெரியும். விடியற்காலை 3 மணிக்கே மரம் வெட்ட செல்வார்கள். அந்த இருட்டில் பாம்பு இருந்தாலும் தெரியாது.. தேள் இருந்தாலும் தெரியாது.. சம்பளமோ குறைவு.. மாத கடைசியில் கையில் காசு இல்லாத குறை வேறு.

இப்படிப்பட்ட கஷ்டங்களுக்கு இடையே இருந்து வெளி வர வேண்டும் என்ற கருத்தைத்தான் இவர்கள் சொல்கிறார்கள். (பட்டணத்துக்கு வந்து சீர் அழியும் சிலரும் இருக்கிறார்கள்.. ஆனாலும் முன்னேறும் மக்களே அதிகம்..)

இவர்களது வாழ்க்கையை என்னால் முடிந்தால் ஒரு பதிவாய் போடுகிறேன்.

said...

மை பிரண்ட், மலேசியாவில் இந்த மாதிரி ஆல்பங்கள் தமிழ்நாட்டை விட அமர்க்களமாய் பண்றாங்க.. சூப்பர் வீடியோ..

நல்ல விஷயம்.. இந்த மாதிரி புதிய விஷயங்களை பறிமாறுங்க மை பிரண்ட்

said...

மை பிரண்ட், தங்களைப் பார்த்து தமிழர்கள் எல்லாம் சூப்பரா இருக்காங்க மலேசியாவில்னு நினைச்சேன்.. உங்க விளக்கம் இருண்ட ஒரு கண்டத்தை சொல்கிறது.. அவர்கள் வாழக்கை வளம் பெற வாழ்த்தி வேண்டுகிறேன்

said...

//மலேசியாவில் இந்த மாதிரி ஆல்பங்கள் தமிழ்நாட்டை விட அமர்க்களமாய் பண்றாங்க.. சூப்பர் வீடியோ..//

பலர் பாடல்களை அருமையாக படைத்தாலும், வீடியோ அவ்வளவு இம்ப்ரெசிவ்-ஆக இல்லை.. ஆனால், சிலர் விதிவிலக்கு. எனக்கு கிடைக்கும் போதெல்லாம் இப்படிப்பட்ட க்ளிப்களை பகிர்ந்துகொள்கிறேன் தலைவரே...

said...

// தங்களைப் பார்த்து தமிழர்கள் எல்லாம் சூப்பரா இருக்காங்க மலேசியாவில்னு நினைச்சேன்.. உங்க விளக்கம் இருண்ட ஒரு கண்டத்தை சொல்கிறது.. அவர்கள் வாழக்கை வளம் பெற வாழ்த்தி வேண்டுகிறேன் //

அவர்கள் ஒரு சிறு எண்ணிக்கையே! இருந்தாலும் நானெல்லாம் அப்படிப்பட்ட ஒரு நிலையிலிருந்துதான் வந்திருக்கிறேன்.. மற்றபடி மலேசியா ஒரு முன்னேறும் நாடு. அதன் வளர்ச்சியோடு நம்மையும் இணைத்து கொண்டால், நாமும் சிகரத்தை அடையலாம்.. :-)

said...

MyFriend,
அருமையான பதிவு.மலேயாவின் எந்த பகுதியில் இருக்கீங்க?நான் 6 வருடம் அங்கிருந்தேன் இப்போ சிங்கையில்.உங்கள் பதிவை படித்ததில் மகிழ்ச்சி.

said...

வாருங்கள் பில்லா,

நான் பிறந்து சில வருடங்கள் பகாங் மாநிலத்தில் வசித்தேன். இப்போது சிலாங்கூரில் வசிக்கிறேன்.

நீங்க எங்கே இருந்தீங்க?

said...

அற்புதமாக இருந்தது!!
"மடை திறந்து" பாட்டை கேட்டதிலிருந்து மலேசிய தமிழ் கலைஞர்களின் திறைமையை தெரிந்து கொண்டேன். அவர்களின் திறைமைக்கு இந்த பாட்டு இன்னொரு சிறந்த உதாரணம்.
மேலும் இதை போன்ற நல்ல படைப்புகளை பகிர்ந்து கொள்ளவும்!! :-)

said...

வாங்க CVறR,

இப்போது நிறைய கலைஞர்கள் திறமைகளோடு இருக்கிறார்கள். திறமை இருந்தால் எந்த நாட்டிலும் இவர்கள் கௌரவிக்கப்படுவார்கள் என்பதற்கு யோகி பி & நட்சதிரா ஒரு எடுத்துக்காட்டு.. ;-)

said...

நான் அப்பவே சொல்லனும்னு நெனைச்சேன்
அது
வதக்கும்(?!) மனிதன் இருந்தாலே..
இங்கு பறிக்கும் மனிதன் தோண்ரிடுவான்..

அல்ல

பதுக்கும் மனிதன் இருந்தாலே..
இங்கு பறிக்கும் மனிதன் தோன்றிடுவான்.. :-)

said...

// பதுக்கும் மனிதன் இருந்தாலே..
இங்கு பறிக்கும் மனிதன் தோன்றிடுவான்.. :-) //

ஹா ஹா ஹா.. நன்றி CVறR..

எத்தனையாவது தடவையாக இந்த பாடலை பார்க்கிறீர்கள்?

said...

myfriend,

வேலை காரணமாக ஒவ்வொரு இடமாக மாற்றப்படேன்.மென்பொருள் துறையில் இருப்பதால் நானே மாற்றிக்கொண்டேன்.Wangsa Maju, Damansara Bandar Sunway, Seremban,Melaka சுத்தீட்டு இப்போ சிங்கை. நம்ம இசை அறிவு தமிழ் சினிமா பாட்டோட நின்னுடும்,ஒன்னுரெண்டு மலேசிய தமிழ் பாட்டு கேட்ருக்கேன்."செம்மண் சாலை" படம் பாக்கமமுடியாம போனதில கொஞ்சம் வருத்தம். மலேசிய தமிழ் பாட்ட இனிமே கேக்க முயற்சி பண்றேன்.

said...

// Wangsa Maju, Damansara Bandar Sunway, Seremban,Melaka சுத்தீட்டு இப்போ சிங்கை.//

அட, நான் கூட போன மாதம் வரைக்கும் டாமான்சாராவில்தான் (Damansara Height) வேலை செய்தேன்.

//"செம்மண் சாலை" படம் பாக்கமமுடியாம போனதில கொஞ்சம் வருத்தம்.//

செம்மண் சாலை ஒரு அருமையான படம். தியேட்டர்களிலே மட்டுமே ஒளிப்பரப்பட்ட இந்த படம் சிடி/டிவிடி-களில் வெளியாகவில்லை என்று நினைக்கிறேன். சமீபத்தில் ஆஸ்ட்ரோ வானவில் சேனலில் ஒளிப்பரப்பட்டது..

// மலேசிய தமிழ் பாட்ட இனிமே கேக்க முயற்சி பண்றேன். //
கவலை படாதீங்க.. அப்பபோ நானே சில பாடல்களை அறிமுகப்படுத்துகிறேன். ;-)

said...

அந்த வரியை முதல் தடவையே கவனிச்சேன்.அப்போ சொல்லனும்னு தோனல
பாட்ட 3-4 தடவை கேட்டாச்சு!!
நல்லா இருக்கு!!! :-)

said...

அருமையான பதிவு தோழி..

காட்சிகள் அனைத்தும் நன்றாக அமைத்திருக்கின்றனார்.
முதலில் சிரிக்காத மக்கள் பாடல் முடியும் போது அனைவரும் சிரிக்கின்றனார். விடியால் வெகு தொலைவில் இல்லை என்று காட்டுகின்ற காட்சி அது...பாடல் வரிகள் அருமையாக உள்ளது..

said...

\\இப்படிப்பட்ட கஷ்டங்களுக்கு இடையே இருந்து வெளி வர வேண்டும் என்ற கருத்தைத்தான் இவர்கள் சொல்கிறார்கள். (பட்டணத்துக்கு வந்து சீர் அழியும் சிலரும் இருக்கிறார்கள்.. ஆனாலும் முன்னேறும் மக்களே அதிகம்..)

இவர்களது வாழ்க்கையை என்னால் முடிந்தால் ஒரு பதிவாய் போடுகிறேன்.\\\

கண்டிப்பா எழுதுங்க...இந்த "தோட்டம்"ன்னு சொல்றிங்களே அது என்ன ஒரு ஊரா??

said...

// பாட்ட 3-4 தடவை கேட்டாச்சு!!
நல்லா இருக்கு!!! :-) //

அவ்வளவு பிடிச்சுப்போச்சா? :-)

said...

நன்றி கோபி,

//விடியல் வெகு தொலைவில் இல்லை என்று காட்டுகின்ற காட்சி அது...பாடல் வரிகள் அருமையாக உள்ளது.. //

நம் பயணம் அந்த விசியலை நோக்கித்தானே! ;-)

said...

// கண்டிப்பா எழுதுங்க...//

தமிழ்மணத்திலிருந்தும் மலேசியாவைப் பற்றியும், மலேசியத் தமிழர் பற்றியும் ஒரு தொடராக எழுதச் சொல்லி கேட்டிருக்கிறார்கள். முடிந்தால், எனக்கு நேரம் கிடைக்கும்போது எனக்கு தெரிந்த ஒவ்வொன்றையும் எழுதுகிறேன். :-)

// இந்த "தோட்டம்"ன்னு சொல்றிங்களே அது என்ன ஒரு ஊரா?? //

"தோட்டம்" எனபது ஆங்கிலத்தில் estate என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட தமிழர்களை ஆங்கிலேயர்கள் இந்த மாதிரி இடத்தில்தான் தங்க வைத்தார்கள். இது போன்ற இடத்தில் உள்ள முக்கிய தொழில் ரப்பர் மரம் வெட்டுதல் மற்றும் செம்பணை அறுத்தல். இந்த இடங்களில் ரப்பர் மரங்களோ செம்பணை மரங்களோ ஒரு பெரிய காடுபோல நட்டிருக்கப்பட்டிருப்பதால், இவை தோட்டபுரம் என்றழைக்கடுகிறது.

said...

friend, approma vandhu padikkiren

said...

// Arunkumar said...
friend, approma vandhu padikkiren //

சரிங்க அருண்..

said...

My friend!
மலேசிய தமிழ் ரப் பாடலா? நல்லா இருக்கு! இவர்கள் நினைக்கும் மாற்றம் வரட்டும்.

said...

// மலேசிய தமிழ் ரப் பாடலா? //

ஆமாங்க யோகன்..

said...

அருமை MyFriend. மலேசிய, சிங்கப்பூர் தமிழர்களுக்கு தமிழ் நாட்ல இருக்கறவங்களை விட தமிழ் மேல் காதல் அதிகம்.

said...

பெண்: என் கேள்விக்கென்ன பதில்? படிசேன் myFriend. ரொம்ப அருமையா கேட்டிருக்கிங்க. என்ன தான் முன்னேறிட்டோம்னு சொல்லிக்கிடாலும், பெண்ணுக்கு கல்யாணம் தான் ultimate success னு நினைக்கறது மாறல. இது பெண்களான நமக்கு தான் தெரியும். நாமளாவது இத மாத்த முயற்சி பண்ணலாம்.

said...

//இவர்களது வாழ்க்கையை என்னால் முடிந்தால் ஒரு பதிவாய் போடுகிறேன்.
//

kandippa podunga. is there any NGO's or organizations who guide these pple..?

btw, read your prev posts too.

pashtu vijit! he hee, ethunaachum kudunga. :)

said...

// மலேசிய, சிங்கப்பூர் தமிழர்களுக்கு தமிழ் நாட்ல இருக்கறவங்களை விட தமிழ் மேல் காதல் அதிகம். //

அப்படியும் சொல்லிடமுடியாது.. இங்கு தமிழில் எழுதுபவர்களை ஒப்பிட்டு பார்த்தால், மற்ர நாட்டவர்கள் விரல் விட்டு என்னும் அளவிலேயே இருக்கிறார்கள்..

இந்தியாவில் இருக்கும் சில ஆங்கிலம் பேசும் தமிழ்ர்களை (பந்தாவுக்கு ஆங்கிலம் பேசுபர்கள்) போல, இங்கேயும் நிறையவே இருக்கிறார்கள்.

said...

// என்ன தான் முன்னேறிட்டோம்னு சொல்லிக்கிடாலும், பெண்ணுக்கு கல்யாணம் தான் ultimate success னு நினைக்கறது மாறல. இது பெண்களான நமக்கு தான் தெரியும். //

சரியா சொன்னீங்க பிரியா. ஒரு பெண்ணோட மனசு இன்னொரு பெண்ணுக்குதான் புரியும்.. ;-)

said...

முதல் முதலில் என் ப்ளாக்குக்கு வருகை புரிந்ததற்கு நன்றி அம்பி.. ;-)

//kandippa podunga. is there any NGO's or organizations who guide these pple..? //

இருக்கிறார்கள். மலேசிய இந்திய காங்கிரஸ் என்ற கட்சி தமிழர்களுக்காகவே உருவாக்கப்படிருந்தாலும், லஞ்சம் என்ற அந்த சாக்கடையும் இதில் கலந்துள்ளதால்.. பணம் உள்ளவர்களுக்குதான் சலுகைகளும் ஆதரவுகளும் அழிக்கப்படுகின்றன. இந்தியாவில் நடக்கும் ஊழல் அளவுக்கு இது பெரிதாக இல்லாவிடிலும், சிலரின் இந்த பாகப்பிரிவினையே இவர்களை முன்னேற விடாமல் பண்ணுகிறது.

NGO போன்ற சில கழகங்கள் இருந்தாலும், இவர்களது பிரச்சனை:
1- நிதி பற்றாக்குறை
2- ம.இ.கா-விடம் சண்டை போட்டு முடிக்கவே நேரம் பற்றாக்குறை..

// btw, read your prev posts too.

pashtu vijit! he hee, ethunaachum kudunga. :) //

உங்க முதல் விசிட்க்கு ஒரு ரோஜா பூ கொடுக்கலாம்ன்னு நினைச்சேன்.. ஆனால், அப்புறம் உங்க தங்கமணி கோபிச்சுகிட்டாங்கன்னா என்ன பன்றது அம்பி???? :-P