Thursday, August 28, 2008

நல்ல படங்களை நாலு பேரு பார்க்கணும்ல. அதுக்குதான்!

ரொம்ப நாள் ஆச்சு நல்ல படம் பார்த்து! ஆனால், இன்று மூன்று படம்! நல்ல படங்களாய் பார்த்துவிட்ட திருப்தி. மூன்றும் மூன்று மொழி; வெவ்வேறு கருக்களை ஏந்தி நிற்க்கின்றன.

1- படம்: தாரே ஜமீன் பர்
இயக்கம்: அமீர்கான்
நடிகர்கள்: டர்ஷீல் சஃபாரி, அமீர்கான், தனய் சேடா, திஸ்கா சோப்ரா, விபின் ஷர்மா
இசை: ஷங்கர் - எஹ்சான் - லோய்


மூன்றாம் வகுப்பையே இரண்டு முறை படித்து திணறுகிறான் சிறுவன் இஷான். Dyslexia என்ற நோயால் புத்தகத்தில் உள்ள எல்லா எழுத்துக்களும், எண்களும் அவன் முன் நடனமாடுகின்றன. ஆனாலும் சிறுவனுக்கு அபார கற்பனாசக்தி இருக்கிறது. அழகாய், அறிவாய் படம் வரைகிறான். ஒவ்வொரு ஓவியத்திலும் உயிர் இருக்கின்றது. நேரம் எடுத்து மெதுவாய், பதறாமல் செய்ய வேண்டிய காரியம் நம்மில் எத்தனை பேரால் செய்ய முடியும்? ஆனால், இஷான் செய்கிறான். தன்னுடைய இயலாமையை மறைக்க இஷான் ஒவ்வொரு விஷயத்திலும் பிடிவாதம் பிடிக்கிறான். நடுத்தர குடும்பத்தின் பெற்றோர் (கண்டிப்பான அப்பா, அன்பான அம்மா, பாசமுள்ள அண்ணன்) தன் மகனின் நிலையை புரிந்துகொள்ள முடியாமல் பையனுக்கு டிசிப்ளின் முக்கியம் என்று நினைத்து போர்டிங் பள்ளியில் சேர்க்கின்றனர். இந்த நிலமையில்தான் தற்காலிக ஆசிரியராய் அப்பள்ளிக்கு வரும் அமீர்கான் இஷானை சந்திக்கிறார். இஷானின் நிலையை கண்டு அவன் பெற்றோரை சந்திக்கிறார். இஷானின் இன்னிலையின் நிஜ காரணத்தை கண்டறிந்து அவன் பெற்றோரிடமும் விளக்குகிறார். சிறுவன் மேல் அதிக கவனத்தை செலுத்தி ஒவ்வொன்றிலும் அதி சிரத்தை எடுத்து சொல்லிக்கொடுக்கிறார். அதுமட்டுமல்லாமல் அவனுள் உள்ளும் திறமை ஒரு பிரமிக்கவைக்கும் திறமை என்று வெளியுலகுக்கு (முக்கியமாக இஷானுக்கே) புரியவைக்கிறார். சிறுவனின் தாழ்வு மனப்பான்மையை போக்குகிறார்.

சிறுவன் இஷானின் நடிப்பில் இப்போது தமிழ் சினிமாவில் இருக்கும் பல இளம் கதாநாயகர்களிடம் கூட இல்லாத திறமை தெரிகிறது. படம் முழுக்க இவனையே சுற்றி வருவதால் இவனுடைய ஒவ்வொரு அசைவையும் நன்று கவனிக்க முடிகிறது. மற்ற கதாப்பாத்திரங்களும் பொருத்தமாய் தேர்ந்தெடுக்கப்பட்டதால் ஓவர் ஆக்டிங்கோ, அல்லது இது ஒரு நடிப்பு என்று தெரியாதவாறு படு இயல்பாக இருக்கின்றது. அமீரின் இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படம். வாழ்த்துக்கள் அமீர்! ஹீரோ ஒரு படத்துக்கு இயக்குனரானால் பெரும்பாலுமே அந்த படம் முழுக்க அவரது ஹீரோயிஸம்தான் மேலோங்கும். ஆனால், இதில் அமீர் மற்றவர்களைப்போல் ஒரு துணை நடிகராய் மட்டுமே வந்து போகிறார். இந்த படம் தமிழில் வால் நட்சத்திரம் என்று டப் ஆகப்போகிறது. கண்டிப்பாக சிறுவர்களும், முக்கியமாக பெற்றோர்களும் பார்க்க வேண்டிய அருமையான படம்.

2- படம்: ஹேப்பி டேய்ஸ்
இயக்கம்: சேகர் கம்முல்லா
நடிகர்கள்: வருண் சந்தேஷ், ராஹுல், நிகில், வம்சி கிருஷ்ணா, தாமன்னா, காயத்ரி ராவ், சோனியா, மோனாலி சவ்திரி
இசை: கிஷோர் சௌக்ஸி




ரொம்ப நாளாய் பார்க்க வேண்டும் என நினைத்த படம். ரெண்டு நாள் முன்புதான் சப்டைட்டிலுடன் படம் கையில் சிக்கியது. நாம் நிறைய நட்பு சம்பத்தப்பட்ட படங்களும், கல்லூரி வாழ்க்கை சம்பந்தப்பட்ட படங்களும் பார்த்திருப்போம். ஆனால், இதுவும் கண்டிப்பாக நாம் பார்த்து ரசிக்கும் படங்களின் வரிசையில் சேறும். படம் கல்லூரி அட்மிஷன் நாளில் ஆரம்பித்து கல்லூரி கடைசி நாளில் நண்பர்களின் பிரிவுடன் முடிகிறது. படத்தில் ஒரு சின்ன குறை என்னவென்றால் நண்பர்கள் கூட்டணியில் கடைசியில் அனைவரும் ஆளுக்கு ஒரு ஜோடியாய் முடிவதுதான். ஹீரோ சந்து - ஹீரோயின் மது, ராஜேஷ் - அப்பு, அர்ஜூன் - ஷ்ராவணி, ஷங்கர் - சங்கீதான்னு நண்பர்களுக்குள்ளேயே காதல் ஜோடிகளாகிக்கொண்டனர். நடுவில் ஒரு ஜோடிக்கு ஊடலென்றால் அந்த கேப்பை ஃபில் அப் பண்ணுவதுக்கு எவனாவது வந்து விடுகிறான். ஹ்ம்.. இது மட்டும்தான் கொஞ்சம் இடிக்குது. மற்றப்படி படம் அருமை. கல்லூரி நண்பர்களுடன் இந்த படத்தை பாருங்கள். அதன் ஆழம் அனுபவிப்பீர்கள்.

படத்தில் எனக்கு பிடித்த கேரக்டர் அர்ஜூன் @ டைசன். இண்ட்ரோ காட்சியிலேயே பையன் என்னமோ பண்ண போறான்னு தோணுச்சு. படம் முழுக்க ஏதாவது இண்ட்ரெஸ்டிங்கா செய்துக்கொண்டே இருக்கிறார். அவருடைய காதலும் அவர் ஷ்ராவணியை துரத்துவதும் நன்றாய் இருக்கின்றது. முக்கியமாய் ஒரு நண்பன் எப்படி இருக்க வேண்டும் என எடுத்துக்காட்டாய் திகழ்கிறார் அர்ஜூன். ஹீரோ சந்து @ வருண் சந்தேஷ் கூட அந்தளவுக்கு பிரகாசிக்கவில்லை (இவர் சித்தார்த் க்லோன் என்பதால்தான் நான் இப்படி சொல்கிறேன் என்று யாரும் தப்பாய் நினைக்கப்படாது. படம் பார்த்தாலே உங்களுக்கு தெரியும் ;-)). அப்புறம் தாமன்னா. கல்லூரி படத்திலே பிரகாசித்த அளவு இதில் இல்லை என்றே சொல்லணும். பாடல்கள் அருமையாக இருக்கின்றது. அரேரே அரேரே, ஹேப்பி டேய்ஸ்,ஜில் ஜில் ஜிங்கா, ஓ மை ஃபிரண்ட் (அட என் பேருல ஒரு பாட்டு) எல்லாம் ரசிக்கும்படி இருக்கு (நாந்தான் பாடல் வரியையும் சப்டைட்டிலில் படித்தேன்ல).

3- படம்: சுப்ரமணியப்புரம்
இயக்கம்: சசிகுமார்
நடிகர்கள்: ஜெய், ஸ்வாதி, சசிகுமார், கஞ்சா கருப்பு, சமுத்திரக்கனி
இசை: ஜேம்ஸ் வஸந்த்


இந்த படத்துடைய விமர்சனம் தமிழ்மணத்துல ஏற்கனவே கிழி கிழின்னு கிழிச்சுட்டாங்க. அதனால் கதை பற்றி நான் ஒன்னும் சொல்ல விரும்பல. அதே கொலவெறி ஆயுதங்களுடன் ரத்த வெள்ளம். ஆனால், நடுநடுவில் காதல் படகு அழகாய் நீந்துகிறது. நடிகர்கள் தேர்வு மிகச்சரியாய் இருப்பதாய் எனக்கு தோன்றுகிறது. திரைக்கதையை அழகாய் தொகுத்திருக்கிறார் இயக்குனர் @ தயாரிப்பாளர் @ நடிகர் சசிகுமார். இயக்குனர் பாலா, அமீர் பேட்டர்ன் தெரிகிறது. பாடல்கள் அருமை. 80களில் நடக்கும் கதை என்பதால் படம் முழுக்க 80களில் பிரபலாமான பாடல்கள் படம் முழுக்க பிண்ணனியில் வருவது நல்ல முயற்சி.

இப்படிப்பட்ட ஒரு படத்தை தியேட்டரில்தான் பார்க்க வேண்டுமென நண்பனிடம் டிக்கெட் வாங்க சொன்னால், சத்யம் என்ற மொக்கை படத்துக்கு டிக்கேட் வாங்கி வந்து, பிறகு அந்த மொக்கை படத்தை தியேட்டரில் பார்த்த கொடுமை இருக்கே! அப்பப்பா! இந்த மொக்கை படத்துக்கு நம்ம கவிதாயினி கூடிய சீக்கிரமே விமர்சனம் எழுதுவாராக.. ;-)

23 Comments:

said...

//இவர் சித்தார்த் க்லோன் என்பதால்தான் நான் இப்படி சொல்கிறேன் என்று யாரும் தப்பாய் நினைக்கப்படாது. படம் பார்த்தாலே உங்களுக்கு தெரியும் ;-)). ///



ரைட்டு!

நான் தப்பாவே எடுத்துக்கலை!

said...

ஹய்யய்யோ! நாந்தான் பர்ஸ்டா!

said...

நல்ல படங்கள் மூன்றினையும் விமர்சனறிமுகம் செய்தமைக்கு நன்றி!

பட்...! கொஞ்சம் லேட்டோ!???

said...

என்னது காந்தி செத்துட்டாரா :D

said...

@ஆயில்யன்:

ரைட். அப்படித்தான் இருக்கணும். ;-)

//பட்...! கொஞ்சம் லேட்டோ!???//

ரொம்பவே. :-)
ஹிந்தி படம் தியேட்டர்லேயே அபூர்வமாதான் போடுவாங்க. ஆனால், சிடி இங்கே கிடைக்கும். ஆனா, வாங்க டைம் லேது. அப்படியே வாங்கினாலும் சிலதுல சப்ஸ்டைட்டில் இருக்காது.

தெலுங்கு படமெல்லாம் இங்கே ரிலீஸ் ஆகாதுப்பா. சிடி கூட கிடைக்காது. அதனால, நெட்ல வர்ற வரைக்கும் வெயிட் பண்ணியே ஆகணும். அதுவும் சப்ஸ்டட்டிலுடன், க்லீயர் வெர்ஷன் வர்ற வரைக்கும் வெயிட் பண்ணியே ஆகணும்.

சுப்ரமணியபுரம் ஏன் பார்க்கலைன்னு காரணம் ஏற்கனவே போட்டாச்சு. :-))

அதனாலத்தான் லேட்டா கொஞ்சம் விமர்சம். இது எப்படி இருக்கு? ;-)

said...

@அய்யனார்:

என்னது? இந்தியாவுக்கு சுதந்திரம் கெடச்சிடுச்சா? ;-)

said...

தாரே ஜமீன் பர் மூலம் தன்னை ஒரு நேர்த்தியான படைப்பாளி என்று அமீர்கான் நிரூபித்து விட்டார்.

படம் முடிந்தவுடன் நம் மனதில் ஒட்டிக்கொள்ளும் இஷானின் நடிப்புக்கு பின்னால் இருப்பது அமீர்கான் தான்.

இது வரை பத்து தடவையேனும் பார்த்திருப்பேன் இந்தப் படத்தை.

said...

\\2- படம்: ஹேப்பி டேய்ஸ்\\??

நானும் தேடிக்கிட்டு இருக்கேன் கொஞ்சம் டீட்டெயில் கொடுத்த நல்லாயிருக்கும் ;))

said...

பின்னூட்ட மொள்ளமாறித்தனம்1

said...

இந்த படங்கள் எல்லாம் இப்பதான் பாத்தீங்களா??

நல்லா இருங்க தாயி!

said...

நானும் tare zamin par சமீபத்தில் தான் பார்த்தேன்.தமிழில் இது போல் ஓர் படம் இல்லையே என்று நினைத்தேன்,சரியாக அதே வாரம் dubbing பற்றிய செய்தியும் படித்தேன்.சூர்யா தான் ஆமிர் க்கு வாய்ஸ் கொடுக்கிறார்

said...

//ரசிக்கும் படங்களின் வரிசையில் சேறும்.//

அது 'சேறும்' இல்லமா, சேரும். :))

மத்தபடி, தாரே சமீன் பர் படத்தில் அமீர் கலக்கி இருப்பார். தமிழ்ல இப்டி ஒரு படம் வராதா?னு ரொம்ப ஆதங்கபட்ருக்கேன்.

said...

//இவர் சித்தார்த் க்லோன் என்பதால்தான் நான் இப்படி சொல்கிறேன் என்று யாரும் தப்பாய் நினைக்கப்படாது.//

அதானே பாத்தேன்! (my daddy is not inside the kuthir) :D

said...

/ஆயில்யன் said...

நல்ல படங்கள் மூன்றினையும் விமர்சனறிமுகம் செய்தமைக்கு நன்றி!

பட்...! கொஞ்சம் லேட்டோ!???/


ரிப்பீட்டேய்...!

said...

"தாரே ஜாமீன் பார்" தமிழில் வருவதால் வீட்டில் அனைவருக்கும் போட்டு காட்டலாம்.

said...

//கல்லூரி நண்பர்களுடன் இந்த படத்தை பாருங்கள். அதன் ஆழம் அனுபவிப்பீர்கள்.//


மை பிரண்டு ஆன்லைனில் இந்த படத்த பார்க்க வசதி இருந்த சொல்லுங்க எல்லாரையும் கான்பிரன்ஸ் பண்ணி கூப்பிட்டு ஆளுக்கு ஒரு பக்கம் இருந்து பார்க்க வேண்டிதான். நல்ல விமர்சனம். இத்தன நாளா படம் பார்க்கதான் போயிருந்திங்கலா நல்லது.

said...

இந்த படங்கள் எல்லாம் இப்பதான் பாத்தீங்களா??

நல்லா இருங்க தாயி!


மறுக்கா கூவிக்கிறேன்

said...

//இவர் சித்தார்த் க்லோன் என்பதால்தான் நான் இப்படி சொல்கிறேன் என்று யாரும் தப்பாய் நினைக்கப்படாது. படம் பார்த்தாலே உங்களுக்கு தெரியும் ;-)). //

சரி சரி நான் தப்பா எடுத்துக்கல, இனிமே இது மாதிரியெல்லாம் பண்ணாதீங்க ஆம்மா.

அது சரி, சொந்தமா ஒரு தியேட்டர் (அதாங்க மூவி பிளாக் ) வச்சிருந்தீங்களே ரொம்ப நாளா அதில் ஒண்ணுமே ரிலீஸ் ஆகிறதில்லையே.

said...

நானும் தாரே ஜமீன் பர் படம் பார்த்தேன்,ஆகா ஓகோனு சொல்லும்படியா பெரிய படம் கிடையாது, அமீர்கான் படம் இயக்கிருக்கிறாருனு ஒரு பில்டப் கொடுத்து, ஹைப் உருவாக்கி படத்தை ஒட வச்சது, அந்த படத்துல வற்ர சின்ன பயனோட வாழ்கைமுறையும் நம் இந்திய குழந்தையின் வாழ்கைமுறையுடன் ஒத்துபோகவில்லை அதனால் படத்தில் உயிர் இல்லை, அதுபோல் படத்தில் நிறைய காட்சிகள் யுகிக்க முடிகிறது
இப்ப நம்ம படத்துக்கு வருவோம் அதுதான் நம்ம சுப்ரமணியப்புரம்
உண்மையில் அருமையான படம், வன்முறையை கொஞ்சம் குறைத்திருக்கலாம் பரவாயில்லை
முதலிடத்தில் நிங்கள் சுப்ரமணியப்புரம் படத்தை போட்டுருக்கவேண்டும் அதவிட்டு தாரே ஜமீன் பர், சின்ன ஜமீன்தார்னு, நல்ல தமிழ் படத்துக்கு விமர்சனம் போடுங்க, இல்லனா அறிவியல், டெக்கனாலஜி, பிரம்மாண்டம்னு பிரம்மிக்கிற வைக்கிற ஆங்கிலம் படத்துக்கு விமர்சனம் போடுங்க

said...

//என்னது காந்தி செத்துட்டாரா :D

என்னது? இந்தியாவுக்கு சுதந்திரம் கெடச்சிடுச்சா? ;)//

;))))))

said...

Happy days திரைப்படத்தை இங்கு பெறலாம்.

said...

taren zameen par and subramanyapuram paathurken. happy days no.

Anonymous said...

தாரே ஜமீன் பர்’ கடந்த வாரம் தான் ஜீ டீவியில் பார்த்தேன்... என்னை இந்தத் திரைப்படம் கவர்ந்ததற்கு முக்கியக் காரணம் இந்த ‘Dyslexia’ ... கல்வித்துறையில் உள்ளவர்களுக்கு இதொன்றும் புதிதல்லதான்... ஆனால் முதல் தடவையாக இந்த மாணவர்களைச் சந்தித்தப் போது லேசான அதிர்வு எனக்குள் இருக்கவே செய்தது. Cluster தகுதிப் பெற்ற பள்ளிகளில் இம்மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பே உள்ளது. ஆனாலும் நம் பெற்றோர்களிடையே இதுப் பற்றிய விழிப்புணர்வு அதிகம் இல்லையென்பது வருத்தமளிக்கும் விசயம். வாய்ப்புக் கிடைத்தால் அம்மாணவர்களைப் பற்றி தகவலை படத் தொகுப்போடு பதிவிட முயற்சிக்கிறேன்!!!!