Saturday, July 07, 2007

182. இதுவும் ஒரு காதல் (இல்லா) கதை

காதல் கதை காதல் இல்லாமல் காமெடியா ஆரம்பமானது பரணியில், ப்ரியமான கதையாக மாறியது ப்ரியாவின் கையில்.. காதல் இருக்கு ஆனா இல்லைன்னு கொடி அருணுக்கு நெருக்கடி கொடுத்தாங்க. அருண் பௌயமா அதை அம்பி கையில கொடுத்ததும், டாப் கியர் போட்டு தூக்கி சைலண்டா என் தலையில இறக்கி வச்சிட்டு ஓடிப் போயிட்டாரு!

இது அம்பி வீசின குண்டு:

சரி! அரை மனசாக தலையசைத்து விட்டு, அப்பா (இந்த தடவை சொதப்பாமல்) காவேரி!னு சவுண்டு விட,
மயில் கழுத்து கலர் மெட்டல் ஷிபான் சரசரக்க, அதற்கு மேட்சிங்கா சந்தன கலர் பிளவுஸ், சிறிது லூஸாக பின்னிய பின்னலில் ஒரு முழம் மட்டும் முல்லைப்பூ சூடி, குட்டியாக ஒரு ஜிமிக்கி அசைந்தாட, லேசாக ஐ லைனரும், லேக்மே நேச்சுரல் கலர் லிப்ஸ்டிக்கும் போட்டு, கழுத்தில் ஹைத்ராபாத் வெண்முத்தில் கட்டிய நீளமான மாலையில் வந்த சந்தியாவை பார்த்ததும் (ஸ்ஸ்ஸ்ப்பா, இருங்க நான் முதல்ல கொஞ்சம் தண்ணிய குடிச்சுகறேன்) சூர்யா, கார்த்தி இரண்டு இதயங்களும் டமால்னு வெடித்தன.

அட இது என்ன? சந்தியாவின் ஜெராக்ஸ் உருவமாய் இன்னோரு சந்தியா.
இல்லை! இல்லை! அது தான் சந்தியாவா?

கார்த்தியின் கண்கள் சொருகின....

******************************************************************
மு.கு: இது செம்ம காமெடியா இருக்கும்ன்னு நினைக்கிறவங்களுக்கு இங்க ஒன்னு சொல்லிக்கிறேன். நீங்க அப்படியே கீழே வரைக்கும் ஸ்க்ரோல் பண்ணி பின்னூட்ட பேஜுக்கு போயிடுங்க. இங்க உங்களுக்கு வேலை இல்லவே இல்ல.. இதுல காமெடி இருக்காது.. இது முழுக்க முழுக்க காதல் (இல்லாத) கதை மட்டுமே!


இப்போ கதைக்கு போலாம்:


சூர்யா மெல்ல நிமிர்ந்து பார்த்தான். கண்ணை கசக்கி கசக்கி பார்த்தான்; பாக்கெட்ல இருந்த கண்ணாடியை போட்டு பார்த்தான்; சைட்ல பார்த்தான்; நேரா பார்த்தான்..

எப்படி பார்த்தாலும் இவ சந்தியா மாதிரியே இருக்காளே?
இவ.. இவ.. சந்தியா.. சந்தியாதான்.. கண்ஃபார்ம்!!!! சந்தியாவேதான்!!!

டமால்...

கார்த்திக்கின் இதயம் அப்பளமாய் நொருங்கியது.

மனதில் வடியும் கண்ணீர் ரத்தத்தில் கலக்கும் சோகத்தை தனக்குள் அடக்கிக்கொண்டான்.

"எங்க குடும்பத்துக்கு ஏத்த மருமகளா இருக்கா. சூர்யா, உனக்கு புடிச்சிருக்கா?"

கார்த்திக்கின் அம்மா சந்தோசத்துடன் சூர்யாவிடம் கேள்வி கேட்டுட்டு ஒரு முறுக்கை உடைச்சு அவங்க வாயில போட்டாங்க. ஆனால்..

ஆனால்.. சூர்யாவின் கண்களோ கலங்கியிருந்தன..

"கல்யாணத்துக்கு பிறகு பொண்ணு கண் கலங்க கூடாதுன்னு மாப்பிள்ளை இப்பவே கண் கலங்க ஆரம்பிச்சிட்டார்ப்பா" என்று சொல்லிக் கொண்டே சந்தியாவின் அப்பா தன் கையை மெதுவா கேசரியில் வைக்க, அடுப்பறையிலிருந்து அவர் மனைவி புரிக்கட்டையை தூக்க, தனக்கு கொடுத்து வச்சது அந்த நெய் மட்டும்தான்னு நக்கி பெரு மூச்சு விட்டார்.

சூர்யா எழுந்து நின்றான்.

"சார்.. நான் கொஞ்சம் பேசணும்."

"ஆமா ஆமா.. கல்யாணத்துக்கு பிறகு பேச முடியாம அடங்கிதானே இருப்ப. எல்லாத்தையும் இப்பவே பேசு" என்று சூர்யாவின் சித்தப்பா (கார்த்திக்கின் அப்பா) நக்கலடிக்க..

"சித்தப்பா.. ப்ளீஸ்.. என்னை கொஞ்சம் பேச விடுங்க"

"சார், இங்க பாருங்க. அஞ்சு ஆறு வருசத்துக்கு முன்ன வரைக்கும் எல்லாத்தையும் மனசுல வச்சி அடக்கிட்டுதான் இருந்தேன். இப்போ நான் ரொம்ப ஓபன் டைப். எதுவா இருந்தாலும் உடனே சொல்லி உடைச்சுடுவேன். என்க்கு புடிச்சிருக்கு..."

"டேய், புடிச்சிருக்குன்னு சொல்றதுக்குதான் இவ்வளோ நேரம் டயலோக் பேசின? இதுனால நான் ரெண்டு பக்கோடா மிஸ் பண்ணிட்டேன்"ன்னு சொலிக்கிட்டே பக்கோடாவை வாயில போட்டார் கார்த்திக்கின் அப்பா.

"சித்தப்பா ப்ளீஸ்... சார், எனக்கு புடிச்சிருக்கு.. ப்ரியாவை புடிச்சிருக்கு!"

"அடேய் சூர்யா.. பொண்ணு பேரு சந்தியாடா!"

"இல்லம்மா.. நான் புடிச்சிருக்குன்னு சொன்னது பொண்ணு தோழியா இதோ நிக்குறாளே!! ப்ரியா!! இவளைத்தான்!!!"

சொல்லிக்கொண்டே கூர்மையான பார்வையுடன் தன் விரலால் ப்ரியாவை நோக்கினான்..

கண்ணும் கண்ணும் நோக்கியா..
சந்தியாவின் கையில் இருந்த காப்பியா..
கீழே விழுந்தது பார்த்தியா??
நீ பார்த்தியா....

சந்தியாவின் கையில் இருந்த தாம்பளத்தட்டு கீழே விழ, கார்த்திக்கின் அப்பா தொண்டையில பக்கோடா மாட்டிக்க, ப்ரியா பேயறைந்ததுபோல் நின்னாள்.

சந்தியாவின் அப்பாவின் வாயில் இதுவரை மூனு ஈ புகுந்தாகிவிட்டது! அந்த அளவுக்கு ஷாக்ல இருந்தார்.

கார்த்திக் மனதில் ஒரு டன் அளவுக்கு சந்தோசமா இருந்தாலும், சந்தியா வருத்தப்படுறாளேன்னு ஒரு டின் அளவுக்கு கவலைப்பட்டான்..

"டேய் சூர்யா! என்னடா ஆச்சு உனக்கு?? ஏண்டா??"ன்னு அவனை குலுக்கினான்.

"கார்த்தி.. என்னை விடு! இன்னைக்கு நான் சொல்லலைன்னா எப்போதும் என் காதலை சொல்ல முடியாது! சார், அமேரிக்க மாப்பிளைன்னா பன்னு திங்கிறதுக்கு மட்டும்தான் லாயக்குன்னு சொல்ற அளவுக்கு "விஞ்ஞானம்" வளர்ந்திருக்கு! இதெல்லாம் ஒத்த ராத்திரியில அழிக்க முடியாத ஒன்னுன்னாலும், நானே ஃபர்ஸ்ட்டா இருந்து இதை நடத்தி வைக்கிறேன். சந்தியாவை எனக்கு புடிக்கலை.. நான் காதலித்தவள், காதலிக்கிறவள், காதலிப்பவள் ப்ரியா ப்ரியா ப்ரியா மட்டுமே! "

ப்ரியா, சந்தியாவின் அக்கா.. ஒரே வருடம்தான் மூத்தவள். ஆனால், சந்தியாவை விட டோட்டல் ஆப்போஸிட்டான கேரக்டர். அதிகமா பேச மாட்டாள். தான் உண்டு தன் வேலைகள் இல்லைன்னு சொல்ற அளவுக்கு முன்கூட்டியே செய்து முடித்துவிடுவாள் அவள் வேலைகளை. அவள் என்ன நினைக்கிறான்னு அவள் பெற்றோர்களால் கூட யூகிக்க முடியாத இவள் ஒரு புதிர் (ரடான் டிவிக்கு அனுப்பிடலாமா?)! கொஞ்ச நாளாகவே பேசுற அந்த ஒரு சில வார்த்தைகளும் கட். அமேரிக்க மாப்பிள்ளை சூர்யாவை ப்ரியாவுக்கு மணம் முடிக்கத்தான் வீட்டில் பார்த்தார்கள். ப்ரியாதான் எனக்கு கல்யாணமே வேண்டாம் என்று போர் கொடி (நான் ஒன்னும் தப்பா சொல்லல கொடி) தூக்கியதால், அந்த பன்னு துன்ற பையனை சந்தியாவுக்கு தெரியாமலேயே அவசர அவசரமாக நிச்சயம் பண்ண வேண்டிய நிர்ப்பந்தம்.

(வண்டி கொஞ்ச நேரம் இந்த ஸ்ட்டாப்புல நிக்கும்.. தம் அடிக்கிறவங்க, பாத்ரூம் போறவங்க, டீ காப்பி குடிக்கிறவங்க எல்லாரும் சீக்கிரமா போயிட்டு வந்துடுங்கப்பா...)

(எல்லாரும் வந்தாச்சா? சரி.. ஸ்டார்ட் எஞ்சின்...)

"ஏண்டி ப்ரியா! என்னை எதுக்கு நீ ஏமாத்தின? கல்யாணம் ஆச்சுன்னு எதுக்கு என் கிட்ட பொய் சொன்னே? உன்னை நான் பார்க்கணும்ன்னா ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிட்டுதான் உன் முன்னாடி வந்து நிக்கணும்ன்னு எதுக்கு கண்டிஷன் போட்டே? சொல்லு! சொல்லு!"

"சூர்யா! ப்ளீஸ்! நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாது!"

"அதான் ஏன்னு கேட்கறேன்! ஏன்???"

"முடியாதுன்னு சொன்னா புரிஞ்சிக்கோ!"

"இல்ல.. நான் மண்டு! எனக்கு புரியல! நீயே சொல்லு!"

"....."

"சொல்லு... நீ இன்னைக்கு பதில் சொல்லாம நான் உன்னை விட மாட்டேன்!"

"அப்பா அம்மா, என்னை மன்னிச்சிடுங்க.. நான் ஒரு பெரிய தப்பு பண்ணிட்டேன்."

"என்ன ப்ரியா? என்ன தப்பு? என்ன நடந்துச்சு?" சந்தியா பதற்றத்துடன் கேட்க..

"நான்.. நான்.. ஏற்கனவே வேறொரு மதத்துக்கு மாறிட்டேன்..."

"ப்ரீய்ய்ய்யாஆஆஆ....." (இது அவங்க அப்பாவோட சவுண்டு...)

******************************************************************
அம்பிண்ணே கதை எழுதிட்டு எனக்கொரு நோட்டிஸும் தராம ஓடிப்போயிட்டதால, நாந்தான் தாக்கப்பட்டிருக்கேன்னு எனக்கு தெரியாமல் போயிட்டது.. அதனால், 2-3 நாள்ல அடுத்த தொடரை போடனும்ங்கிற ரூல்ஸ் நான் மீறிட்டேன்.. இதுக்கு பில்லு பரணி ஏதாவது பனிஷ்த்மண்ட் தர்றதா இருந்தா, அம்பிக்கு பாஸ் பண்ணிடுங்க.. ஹீஹீ..

என் தலையில இருந்த சுமையை இறக்கி வைக்கிற நேரம் வந்தாச்சு.. ஹாஹாஹா.. ஹோஹோஹோ!! இப்போ இந்த கதையை முழுக்க முழுக்க காமெடியா கொண்டு போறதுக்கு ஒருத்தர் இருக்கார்.. அவருதான் ஒரு கையில காப்பியும் இன்னொரு கையில வ்ரிஸ்ட் வாட்சுமா ப்ளாக் உலகத்தை வலம் வந்து 13 அடிப்பவர்:

எங்க இருந்தாலும் மேடைக்கு வரவும் என்று அழைக்கப்படுபவர்:

பக்கா தமிழன் கோப்ஸ்
பக்கா தமிழன் கோப்ஸ்
பக்கா தமிழன் கோப்ஸ்
பக்கா தமிழன் கோப்ஸ்
பக்கா தமிழன் கோப்ஸ்
(ச்சும்மா.. ஒரு எக்கோ!) :-P

Saturday, June 23, 2007

181. ஆத்தா நான் பாஸாயிட்டேன்!

நானும் எட்டு போட்டுட்டேன். பாஸாயிடுவேனா? லைசன்ஸ் கிடைக்குமா? ஆத்தா! நான் பாஸாயிட்டேன்னு வயல் வரப்புல ஓடலாமான்னு நீங்கதான் பார்த்து சொல்லணும்ங்க..

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

காயத்ரிக்கா, நீங்க கொடுத்த வீட்டுப்பாடத்தை எவ்வளவு அழகா செஞ்சு முடிச்சிருக்கேன் பாருங்க. :-)

--------------------------------------------------------------------------------------------விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்.

----------------------------------------------------------------------------------------------
8 போட நான் கூப்பிடும் 8 பேர்:

1- குட்டி பிசாசு

2- சூடான் புலி

3- விவாசாயி இளா

4- இலவச கொத்தனார்

5- கப்பி பய

6- குசும்புக்கார குசும்பன்

7- சிறில் அலெக்ஸ்

8- என்னையே 8 போட வச்ச காயத்ரி

பி.கு: இதுல ஒன்னு கவனிச்சீங்கன்னா, இந்த 8 பேரும் ஏற்கனவே 8ன்னு பதிவு போட்டுட்டாங்க.. ஆனால், யாரும் சரியா 8 போடலை. அதனால பாடத்தை திரும்ப செய்யுங்கன்னு சொல்ல வேண்டியதா போச்சு. :-P

Friday, June 15, 2007

180. சர்வேசா, நானும் கலந்துக்கலாமா?

குட்டீஸ் போட்டி அறிவிச்சு நாலே நாலு பேர்தான் கலந்திருக்காங்க.. அதிலும் ரெண்டு பேர் (அபி அப்பாவையும் சேர்த்துதான்) இன்னும் பாடலை அனுப்பவில்லைன்னு சர்வேசன் இன்னைக்கு கவலையா ஒரு பதிவு போட்டிருக்காரு.. அந்த காலியாக விடப்பட்ட ஆறு இடத்தையும் நிறப்பி சர்வேசனுக்கு சந்தோஷத்தை கொடுக்கலாம்ன்னு நெனச்சாலும், அதுக்குதான் இங்கே வழி இல்லையே!

அதான் இன்னைக்கு வீட்டுக்கு வந்ததுமே என் தங்கச்சியை கூப்பிட்டு "உனக்கு பிடிச்ச ஒரு பாட்டை பாடும்மா. சர்வேசன் அங்கிளுக்கு போட்டு காட்டுவோம்"ன்னு சொன்னேன்.

அவளோ "டிவிங்கள் டிவிங்கள் லிட்டில் ஸ்டார்" பாடவான்னு கேட்க..

"ஐயோ! இந்த சர்வேசன் என்ன பாட்டு பாடணும் சொல்லலையே!"ன்னு நான் சொல்ல..

"ம்ம்.. பாப்பாக்கு (அவள்தான்) பிடிச்ச பாட்டு ஒன்னு பாடட்டா?"ன்னு அவ கேட்க..

"சரி.. ஏதோ ஒன்னு பாடு.. பேருக்கு ஒரு column நிரப்பிவிட்டு வரலாம்"ன்னு சொல்லி mp3 playerல ரெக்கார்ட் பண்ண ஆரம்பிச்சேன்..

அவ என்ன பாட்டு பாடுனான்னு தெரியுமா? நீங்களே இந்த மூனு வயசு வாண்டு பாடின பாட்டை கேட்டு பாருங்கள். சொல்ல மறந்துட்டேனே.. இந்த வாண்டு எப்படி இருப்பான்னு கேட்கிறவங்க, இந்த ப்ளாக்ல வலது புறத்து மேலே cheong sam உடையில ஸ்டைலா போஸ் கொடுக்கிறாளே.. அவளை பாருங்க.. அவதான் இந்த சுட்டி வாண்டு. :-D


Get this widget Share Track details