Friday, April 20, 2007

175. சங்கத்து சிங்கங்களின் மலேசியா டூர் (பாகம் 1)

சங்கம் ஒரு வயதை தொட்டாச்சு!. சிங்கங்கள் அதுக்கான விழாவை இதோ வைக்கிறோம் இதோ வைக்கிறோம்ன்னு தள்ளி போட்டுக்கிட்டே போறாங்க.. நமக்குதான் தாராள மனம் ஆச்சே! பாவம் பசங்க.. வருடம் பூரா உட்கார்ந்த இடத்திலிருந்தே ஆப்பு வாங்குறாய்ங்க. கொஞ்சம் வெளியிலே கூட்டி போனால், ஆப்பு வாங்கும் இந்த அப்புகளை பார்த்து மக்கள்ஸும் சந்தோஷப் படுவாங்களே என்ற நல்லெண்ணம் (!) எனக்கு..

என்ன செய்யலாம்ன்னு பத்துமலை படிக்கட்டில் உட்கார்ந்துட்டே யோசிக்கிறப்போ, அங்கேயும் இங்கேயும் தாவிக் கொண்டிருந்த குரங்கு என் முன்னே மூன்றாம் பிறை கமல் மாதிரி ஏதேதோ சாகசம் செய்ய தொடங்கியது. ஐடியா வந்தது. பசங்களை மலேசியா வர வைத்தால் என்ன!. வந்து எஞ்சாய் பண்ணடுமே!

உடனே ஏர் இந்தியாவுல 9 டிக்கெட் புக் பண்ணி சங்கத்துக்கு ஈமெயில் அனுப்பினேங்க. அப்போ சங்கத்து ஈமெயிலை தளபதி படிக்க தல கைப்பு ஒவ்வொன்னுக்கா பதில் சொல்ல புலி டைப் பண்ணிக் கொண்டு இருந்தார்.

தளபதி: தல, தல.. கட்டதுரை ஈமெயில அனுப்பியிருக்கான் தல.

கைப்பூ: (ஸ்டைலா படுத்துண்டே..) வந்துட்டான்யா வந்துட்டான். நீ மேலே படிலே..

தளபதி: டேய் கைப்புள்ள..

கைப்பூ: நிறுத்து! ஒனக்கெத்தன நாளா எம்மேலே இந்த கொலைவெறி தளபதியாரே!

தளபதி: இது நான் இல்லை.. நான் இல்லை.. கட்டதுரை அப்படித்தான் எழுதியிருக்கான் தல.

கைப்பூ: ம்ம்.. ஓகே.. மேலே படிலே...

தளபதி: யாகூ மெயில். மெயில், அட்ரஸ், காலெண்டர், நோட்பேட்..

கைப்பூ: என்னடா படிக்கிற?

தளபதி: நீங்கதானே மெயில் மேலே என்ன எழுதியிருக்குன்னு படிக்க சொன்னீங்க?

கைப்பூ: ஸ்ஸ்ஸப்ப்ப்பாபா.. இப்பவே கண்ணை கட்டுதே! சாகடிக்காறானே என்னைய்ய!!!! கட்டதுரையோட மேசேஜை மேலே படிக்க சொன்னேண்டா...

தளபதி: ஓ அதுவா.. டேய் கைபுள்ள.. இந்த வாரம் உனக்கு கும்மி என்னுடைய மாங்கா தோப்புல. சரியா சனிக்கிழமை 10 மணிக்கு ஆஜர் ஆகிடு. என் ஒன்னு வீட்டு பாட்டி சீரியஸா படுத்த படுக்கையா இருக்காங்க.. அவங்க கடைசி ஆசை யாரையாவது சாகுற வரைக்கும் (அவங்க சாகுற வரைக்கும்) அடிக்கனுமாம். நீதாண்டா அதுக்கு பொருத்தமானவன்.

கைப்பூ: ஆகா..இப்பவே நம்ம புகழ் எங்கெங்கோ பறவுதுல! இன்னும் கொஞ்ச நாள்ல அகில உலக ரசிகர் மன்றம் ஒருவாக்கி நமக்கு கோவிலெல்லாம் கட்டி கும்பிட ஆரம்பிச்சுடுவானுங்க போலிருக்கே!!!

கைப்பு அன்னாந்து பார்த்து கனவுலகில் மிதக்கிறார்..

புலி: உர்ர்ர்..... உர்ர்ர்...

புலியின் உறுமல் சத்ததில் தன் கனவு கலையாமல் மிதந்து கொண்டிருக்க.. புலி சங்கத்து செலவில் கைப்பு பழம் நறுக்க வாங்கிய கத்தியை தூக்கி கைப்பூவின் முகத்தை நோக்கி எறிய, அது 100மீட்டர் வேகத்துல பறந்து தன்னோட சீட்டுல தூங்கிட்டு இருந்த ராயலின் மேல் பட "அய்யோ அம்மா"ன்னு கத்தி கைப்பூவின் கனவுகளை கலைக்கிறார்..

கைப்பூ: எந்த அப்ப்ராண்டியடா என் கனவுகளை கலைச்சது? ச்சுப்பிட்ட்!!! ராயலு! உனக்கு இதே வேலையா போச்சு! மனுசன் நிம்மதியா கனவு கூட காண முடியலை..

ராயல்: தல.. தல..

ராயல் பவ்வியமாக பம்ம.. கைப்பூ மனசிலகி..

கைப்பூ: என்னடா செல்லம்?

ராயல்: அது அப்புராண்டி இல்ல தல.. அது அப்ரெண்டிஸ்.. A..P... P..R..

கைப்பூ: ஆமாண்டா.. உனக்கும் விவசாயிக்கும் எனக்கு இங்கிபிலீஸு சொல்லிக் கொடுக்கிறதே வேலையா போச்சு. இது அமேரிக்க இங்கிபிலீஸு.. முடிஞ்சா இதை கத்துக்கோடா..

புலி: உர்ர் உர்ர்.. தல.. சீக்கிரமா கேள்விக்கு பதில் சொல்லுங்க.. நான் வீட்டுக்கு போகணும். இல்லைன்னா ஆத்தா வையும்..

கைப்பூ: பார்ர்ரா.. இப்போ எவன் தல எவன் வாலுன்னு தெரியாம போயிருச்ச்சுல.. புலி, உனக்கென்னமோ என் பதில் என்னனு தெரியாத மாதிரி கேக்குற? நான் அடி வாங்குறத நிப்பாட்டினாலும்.. கட்டதுரை அடி கொடுக்குறத நிப்பாட்டினாலும்.. இந்த உலகம் அழிஞ்சிடும்டா.. நான் அடி வாங்குறதுனாலத்தான் கட்டதுரை பாட்டிக்கும் ஆத்மா சாந்தின்னா, அடி வாங்குறதுக்கு நான் தயார்.
(மனசுக்குள்ளே..) யப்பா.. இந்த பயலுங்களை எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு!!! யாராவது என்னை வெளிநாடுக்கு கூப்பிட்டாலும், அங்கே போய் அசினை போல ஒரு பொண்ணோடு சுட்டும் விழி சுடரேன்னாவது பாடிட்டு இருக்கலாமே..

தல தன் தலையை ரைட்டும் லெஃப்ட்டுமா ஆட்டிக்கொண்டிருக்க..

தளபதி: தல.. இங்கே பாருங்க.. மலேசியாவுல இருந்து .:: மை ஃபிரண்ட் ::. டிக்கேட் அனுப்பியிருக்காங்க. நம்மலையெல்லாம் மலேசியாவுக்கு டூருக்கு கூப்பிட்டிருக்காங்க.. போலாமா தல???

தளபதி ஆவலாக கேட்கிறார்..
தல இன்னும் அசினோட டூயட் பாட்டை நினைத்து தலையை லெஃப்ட்டும் ரைட்டும் தலையாட்ட..

புலி எழுத ஆரம்பிச்சுட்டார்:

டியர் .:: மை ஃபிரண்ட் ::.,

மலேசியாவுக்கு போக எனக்கு மனம் இல்லாததால் உங்கள் ஆஃபர் நிராகரிக்கப்படுகிறது.

பி.கு: இதை எழுதியது புலி இல்லை.

இப்படிக்கு,
கைப்புள்ள


ராயலுக்கு இதை பார்த்ததும் கோபம் தலைக்கேறிடுச்சு. தன்னோட நாக்காலியை எட்டி உதைச்சு எழுந்திருச்சு வந்து கைப்புள்ளையை பிடிச்சு ஒரு குலுக்கு குலுக்கி, புலி கையில் பிடித்திருக்கும் எலியை பிடுங்கி எறிஞ்சிட்டு.. தலயை பார்த்து ஒரு டயலோக் விடுறாரு..

ராயல்: லூசாயா நீயி!! நானே எப்படியாவது மலேசியாவை சுத்தி பார்க்கனும்ன்னு ஆசையா இருக்கேன். நீங்க அந்த ஆசையில மண்ணை தூவிடுவீங்க போல.. ஒழுங்கு மரியாதையா இந்த ட்ரீப்புக்கு ஏற்பாடு பண்ணுங்க.. இல்லைன்னா.......

ராயல் பேசுறதை பார்த்து கைப்பு கண்கள் கலங்க ஆரம்பித்தன.

கைப்பூ: டேய்.. நீ வாயில்லா பூச்சியினுல நெனச்சேன்! என் சட்டையை பிடிக்கிற அளவுக்கு வளர்ந்துட்டியா.. நல்ல வேலை சட்டை கிளியலை.. அந்த இஸ்டிரிக்காரனோட கடையில இருந்து ஆட்டையை போட்டு எடுத்த சட்டையாச்சே! சரி, என்னமோ மலேசியா மலேசியான்னு சொன்னியே ராயலு! என்ன மேட்டரு?

தளபதி திரும்பவும் அது என்ன மேட்டர்ன்னு விளக்க..

கைப்பூ: ஃப்ரீன்னா நாங்கதான் முதல் ஆளா நிப்போம்ல.. கூட்டுடா சங்கத்தை.. சிங்கங்களை எல்லாம் வரச்சொல்லுடா...

தளபதி உடனே ஒவ்வொருத்தருக்கா கால் பண்ண ஆரம்பிச்சாரு. வெட்டியாய் இருந்த வெட்டி அடுத்த நிமிடமே ஆஜர். கச்சேரி நடத்திக்கிட்டு இருந்த தேவ், பாதியிலேயே கச்சேறியை கலைச்சிட்டு ஆஜர் ஆயிட்டார். விவசாயி தன்னோட நிலத்தில் உளுது முடிச்சுட்டுதான் வரவேன் என்று அடம் பிடிக்க, புலியும் வெட்டியும்தான் அவரை இளுத்து வந்து சங்கத்தில் சேர்த்தார்கள். ஜொல்லு பாண்டியை மட்டும்தான் தொடர்பு கொள்ள முடியலை.

கைப்பூ: அவன் போன் என்னைக்குதான் ஃப்ரீயா இருந்திருக்கு. ஏதாவது பொண்ணுங்களோட போன்ல தொங்கிட்டேதான் இருப்பான். அவனோட டைம் டேபல் பிரகாரம் இன்னைக்கு க்வீன் மேர்ரீஸ்லதான் இருப்பான். தளபதி, ராயல்... போய் அவனை அள்ளிட்டு வாங்க. ம்ம்.. கிளம்புங்கள்..

சரின்னு சொல்லிட்டு ரெண்டு பேரும் கிளம்பிட்டாங்க. அப்போதுதான் விவசாயி ஒரு அறிவுப் பூர்வமா கேள்வி கேட்கிறார்.

விவா: தல, நாம் மொத்தம் 8 பேர்தானே! ஆனால், எதுக்கு 9 டிக்கேட்?

வெட்டி: அது என் சுமாவுக்குதான். அவங்க என் கூட வரணும்ன்னு பிரியப்படுறாங்க.

ஜொல்லு அப்போதான் சங்கத்துல நுழையுறார்..

ஜொல்லு: இல்லை இல்லை.. அது நான் இன்னைக்கு செட்டப் செய்த என் புது காதலிக்கு. .:: மை ஃபிரண்ட் ::.க்கு இந்த விஷயம் ஏற்கனவே தெரிஞ்சிருச்சு போல. அதான் முன் கூட்டியே டிக்கேட் அனுப்பிட்டாங்க.

கைப்பூ: ம்ம்.. இல்லை.. கைப்பொண்ணுக்காகத்தான் இருக்கும்ன்னு நினைக்கிறேன்.

கைப்பூ தீவிர சிந்தனையில் மிதக்க, தேவ் மலேசியாவுக்கு கால் பண்ணி, என்னிடம் விஷயத்தை சொல்கிறார். நான் அந்த போனை லவுட் ஸ்பீகரில் வைக்கச் சொல்லி பதில் சொல்கிறேன்.

.:: மை ஃபிரண்ட் ::. : அட ஞஞ்ஞஞ்ஞஞ்.... அந்த எக்ஸ்ட்ரா டிக்கேட்டு நம்ம அட்லாஸ் வாலிபர் நாட்டாமைக்குதான். அவர் எத்தனை நாள்தான் ஒரே பூரிக்கட்டையில் அடி வாங்குவார்??? ஒரு ச்சேஞ்சுக்கு மலேசியாவில் வேறு ஏதாவதில் வாங்கட்டுமே!! அவரையும் கூப்பிடுங்க சிங்கங்களா!!!

அதன் பிறகு நாட்டாமையும் சங்கத்தில் ஆஜராக..
கைப்பு மீட்டீங்கை ஸ்டார்ட் பண்ணுகிறார்..

கைப்பூ: எல்லாத்தையும் ப்ளான் பண்ணி செய்யனும்..... தளபதி, ட்ரீப் எத்தனை நாளுக்கு?

தளபதி: அஞ்சு பகல் நாலு ராத்திரி.. எல்லாம் ஒன்பது நாள் தல.

விவா: அடங்கொய்யாலே.... ஒரு நாளுல ஒரு பகல் ஒரு இரவு வரும்டா.. அது அஞ்சே நாளு மட்டும்தான்.

தேவ்: ஒரு பகல் + ஒரு இரவு = ஒரு நாளுன்னா, நாலே இரவுதனே இருக்கு! எப்படி அஞ்சு நாலாகும்???

கைப்பூ: ஆகா ஆகா.. நம்ம பசங்க நம்மளை விட ஸ்மார்ட்டா ஆகிட்டு இருக்கானுங்களே... விடு விடு.. எல்லாம் மலேசியாவுல போய் பார்த்துக்கலாம்.. சரி பசங்களா.. பீ ரெடி ஆன் தர்ச்சுடே. வீ வில் ஃப்லை டூ மலேசியா.. ம்ம்.. கிளம்புங்கள்... டேய் ஜொல்லு! இங்கண வாடா!

ஜொல்லு: எண்ணண்ணே?

கைப்பூ: கைப்பொண்ணுதான் என்னை விட்டுட்டு போச்சு! இப்போ நான் ஒரு ரிப்லேஸ்மண்டு தேடனும்.. மலேசியாவுல ஒரு பொண்ணை நான் மடக்கனும். எங் கூடவே இருந்து அப்பப்போ ஐடியாவை எடுத்துக் கொடுக்கனும்.. சரியா? சரியா?

ஜொல்லு: நோ ப்ராப்லம் மச்சி! ஆனால், பொண்ணுங்க கூட்டமா இருக்கிற இடத்துல என்னை தேடக் கூடாது. நான் என் கடமையில ஐக்கியமாகிடுவேன்.
கைப்பூ: அடேய் அடேய்.. அந்த மாதிரி நேரத்துலதாண்டா நீ எங்கூடவே இருக்கனும்..

ஜொல்லு: வேணும்ன்னா போர்வாலை வச்சிக்கோங்க.. அவந்தான் கல்யாணம் பண்ணி செட்டல் ஆயிட்டானே! இல்லைன்னா நாட்டாமையை வச்சிக்கோங்க.. ஆனா, அவரை போல அடி வாங்குற இடத்துல மாட்டிக்காதீங்க.. இல்லைன்னா இருக்கவே இருக்கான் வெட்டி... அவந்தான் வெட்டியா இருக்கான். எனக்கு கடமைகள் அதிகம்..

ஜொல்லு சொல்லிட்டே இருக்கும்போது அவரு அலார்ம் அடிக்க, இப்போ எத்திராஜ் கேட் வாசல்ல நிக்கனும்ன்னு பறந்து போயிட்டார்..

நம்ம கைப்பூ ஸ்மார்ட்டா உடுத்தி, தோப்பா முடிக்கு கூலிங் க்லாஸு போட்டு பைக்குல ஸ்பீடா பறக்குறார்..

தல எங்க போறார்ன்னு கெஸ் பண்ணுங்க... சரியான கெஸ்க்கு ஆயிரம் பொற்காசுகள் சங்கம் வழங்கும். :-)

60 Comments:

said...

ullen ammani :)

said...

Super ROTFL post :-))

Notaamaiyaiyum gummila setha unga dhaarala manasa ennanu solluven.. avvvvvvvv :-))

Innum ella baagamum idhey pola asathala ezhudha vaazhthukkal :)

said...

//தல எங்க போறார்ன்னு கெஸ் பண்ணுங்க... சரியான கெஸ்க்கு ஆயிரம் பொற்காசுகள் சங்கம் வழங்கும். :-) //

நீங்க தான் கொடுக்கனும்....

said...

G3 said...

ullen ammani :) //

உஞ்சல்ஸ் இன்னும் தூங்கலையா???

ஃபிரண்டு அப்புறமா வந்து கருத்து சொல்லுறேன்'லா :)

said...

@Raam : //உஞ்சல்ஸ் இன்னும் தூங்கலையா???//

night shiftu :-) so raakozhi dhaan innikku :-)

said...

நீங்களும் கலத்துல இறங்கிட்டீங்களா...நானும் நாளைக்கு வந்து கமெண்டரேன்...வூட்டுக்கு போகனும்...தங்கமனி வையும் :-)

said...

போஸ்ட நல்லா வந்து இருக்கு. என் பங்கை ஆட்டத்துக்கு சேர்த்துக்கிட்டீங்க பாருங்க... உங்களுக்கு ரொம்ப பெரிய மனசுங்க...

பங்கு, அங்குட்டு இந்த டக்கீலா ரொம்ப பேமஸ்சாம்... அத்த ஒரு வழி பண்ணுறோம் என்ன?

said...

//Notaamaiyaiyum gummila setha unga dhaarala manasa ennanu solluven.. avvvvvvvv :-)) //

என்ன ஒரு ஒற்றுமை. மக்கா உனக்கும் டக்கீலா ஒரு சாட் உண்டு...

said...

//அங்கேயும் இங்கேயும் தாவிக் கொண்டிருந்த குரங்கு என் முன்னே மூன்றாம் பிறை கமல் மாதிரி ஏதேதோ சாகசம் செய்ய தொடங்கியது. ஐடியா வந்தது.//

குரங்கு சாகசத்தை பார்த்தா உங்களுக்கு ஐடியா வருதா?... ஆகா இது சரி இல்லையே

said...

அம்முட்டு பெரிய வண்டியில் தலை எங்க போவாரு. ஏர் இந்தியாவுக்கு போட்டியா மலேசியாவுக்கு தல இந்தியா அப்படின்னு புது சர்வீஸ் ஆரம்பிக்கத்தான்.

said...

பதிவு கலக்கல் பிரண்டு. போட்டி பலமாத்தான் இருக்கும் போல கலக்குங்க.

said...

//மலேசியாவுக்கு போக எனக்கு மனம் இல்லாததால் உங்கள் ஆஃபர் நிராகரிக்கப்படுகிறது.

பி.கு: இதை எழுதியது புலி இல்லை.

இப்படிக்கு,
கைப்புள்ள//

நம்மள பத்தி ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல... நாம என்ன அம்புட்டு மோசமாகவா போயிட்டோம்.

said...

பாண்டி,

எல்லாம் விசாரிச்சுட்டேன், அங்க UKM, UPM னு இருக்க, ஷிப்ட் போட்டு சார்ட் ரெடி பண்ணு, ஆளுக்கு ஒன்னா போயி நின்னுடுவோம்...

said...

மை பிரண்ட்,

மலேசியா கூப்பிடுறீங்க சரி, அப்படியே புலி பாலுக்கு ஏற்பாடு பண்ணுங்க.... இரண்டு கிரேடு முதல வாங்கி வைங்க... ஒன்னு எனக்கு, மற்றது என் தோழன் பாண்டிக்கு....

said...

வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்!

said...

/அங்கேயும் இங்கேயும் தாவிக் கொண்டிருந்த குரங்கு என் முன்னே மூன்றாம் பிறை கமல் மாதிரி ஏதேதோ சாகசம் செய்ய தொடங்கியது. //

அதென்ன.. குரங்கை பார்த்தவுடன் சங்கத்து நினைப்பு.. இது நல்லா இல்ல மைபிரண்ட்

said...

/வெட்டி: அது என் சுமாவுக்குதான். அவங்க என் கூட வரணும்ன்னு பிரியப்படுறாங்க//

போடுங்க.. வெட்டி, புலி, கைப்பு, ராம் எல்லாருடைய இமேஜும் டோட்டல் டேமேஜ்.. சூப்பர் மை பிரண்ட்

said...

//எக்ஸ்ட்ரா டிக்கேட்டு நம்ம அட்லாஸ் வாலிபர் நாட்டாமைக்குதான்.//

ஆஹா.. கிடச்ச கேப்ல மனுஷன் பூந்துட்டாரே.. நமக்கு படிக்கட்டுல வர்றதுக்காவது வாய்ப்பு கிடைக்குமா

said...

பட்டையை கிளப்பி இருக்கீங்க மை பிரண்ட்..

வெற்றிபெற வாழ்த்துக்கள்!

said...

//போடுங்க.. வெட்டி, புலி, கைப்பு, ராம் எல்லாருடைய இமேஜும் டோட்டல் டேமேஜ்.. சூப்பர் மை பிரண்ட்//

தலைவா,
நம்ம இமேஜ் டேமேஜ் ஆனதுல உங்களுக்கு என்ன சந்தோஷம்??? :@

Anonymous said...

மலேசியாவின் பினாங்கு மாநிலக் கட்டுரை இங்கே.

Anonymous said...

பத்துமலை பற்றிய கட்டுரை இங்கே!

Anonymous said...

பத்துமலை பற்றிய கட்டுரை இங்கே!

Anonymous said...

மலேசியாவின் ஜெண்டிங் சுற்றுலா இங்கே!

Anonymous said...

சிங்கப்பூர் பற்றிய சுற்றுலா இங்கே!

said...

:-) மை ஃபிரண்ட், கலக்குரீங்க.. இந்த பதிவு வவாச போட்டிக்காக எழுதினதா??


//தளபதி: அஞ்சு பகல் நாலு ராத்திரி.. எல்லாம் ஒன்பது நாள் தல.

விவா: அடங்கொய்யாலே.... ஒரு நாளுல ஒரு பகல் ஒரு இரவு வரும்டா.. அது அஞ்சே நாளு மட்டும்தான்.

தேவ்: ஒரு பகல் + ஒரு இரவு = ஒரு நாளுன்னா, நாலே இரவுதனே இருக்கு! எப்படி அஞ்சு நாலாகும்???//

:-))))

said...

யப்பா! சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது. சூப்பரா எழுதி இருக்க மா!

:)

said...

aaha... neengalum aarambitchiteengala.... kalakunga... asathal postu.... pottiyil vetri pera vaazthukkal :)))

said...

ஆஹா..நீங்களுமா....பதிவை படிச்சுட்டு வரேன் ( இப்ப எல்லாம் இப்படி போட்டாதான் ஆட்டத்திலேயே சேர்த்துக்கிறாங்க)

said...

மொத்தத்தையும் படிச்சுட்டேன்....கலக்கியிருக்கீங்க....வாழ்த்துக்கள்

மீதி எங்க? சீக்கிரம் போடுங்க ;-)))))

said...

சூப்பரா எழுதிருக்கே'லா :))

நல்லாயிருக்கு... சங்கப்போட்டி பத்தின அறிவிப்பு பதிவிலே பின்னூட்டம் போட்டாச்சா???

said...

echuus me any kummy going here
!!!

said...

ohhh..no....then i go for post
;)

said...

தல தூங்கப் போறாரு correct aa?

நல்ல கற்பனை படிச்சிட்டு சிரிக்காம யாரும் போகக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டீங்க போல Nice post :)

said...

Attendance mattum dhaanae...

said...

சேம ரகளை.. சூப்பர் ROTFL போங்க..

சங்கத்து சிங்கங்கள வச்சி பதிவு போட்டா முன்னுரிமை-னு வேர சொல்லீர்க்காங்க. இப்பவே போட்டில ஜெயிச்சிட்டீங்க My Friend.

நிஜமாவே மலேசியாக்கு டிக்கெட் போடுங்க எங்க எல்லாருக்கும். நாங்க உங்ககிட்ட ட்ரீட் வாங்க வேண்டாமா...

said...

//
மலேசியாவுக்கு போக எனக்கு மனம் இல்லாததால் உங்கள் ஆஃபர் நிராகரிக்கப்படுகிறது.

பி.கு: இதை எழுதியது புலி இல்லை.

இப்படிக்கு,
கைப்புள்ள
//

இது செம காமெடி :)

said...

//எக்ஸ்ட்ரா டிக்கேட்டு நம்ம அட்லாஸ் வாலிபர் நாட்டாமைக்குதான்.//

உங்க பாசத்துக்கு நாட்டாம அடிமை :)

நாட்ஸ், அங்கனயே செட்டில் ஆயிடாதீங்க.. தம்பிங்க நாங்க எல்லாரும் டக்கீலாவுக்கு வெயிட்டிங்கு.

said...

இது உங்க 175ஆவது பதிவா?
ங்கொக்கமக்க... அவன் அவன் அம்பதுக்கே அல்லாட்றான் :(

வாழ்த்துக்கள் தோழி !!

போட்டியில் வெற்றி பெற மீண்டும் ஒரு வாழ்த்து :-)

said...

ஆத்தா மன்னிச்சிடு தாயி ஏதோ வயசான காலத்துல புத்தி கெட்டு போச்சி.இந்த டோண்டு மாமால்லாம் போட்டியில பேர் குடுக்கவும் நானும் குடுத்தேன்.இப்டி பாகம் பாகமா போட்டுத் தாக்குனா நா எங்கிட்டு போவேன்.டாப்பு அம்மிணி.
இளவட்டம்னா இளவட்டம்தேன்.[நமக்கு சங்கத்தப் பத்தி அதிகம் தெரியாது]
ஆமா அந்த.. அப்பா எப்டி இதுல?[வயோதிக.வாலிப.சங்கம்???]நான் அப்பீட்டு...

said...

175 க்கு வாழ்த்துக்கள்...அருண் சொன்ன மாதிரி நமக்கு எல்லாம் 50 போடுறதுக்குள்ள தாவு தீந்துடுச்சு :-)

said...

ஆரம்ப பாகமே அமர்க்களம்....அசத்திட்டீங்க போங்க...:))

said...

@G3:

//ullen ammani :)
//

அட்டெண்டன்ஸ் மார்க் பண்ணியாச்சு! ;-)

//Super ROTFL post :-))//

நன்றி. :-)

//Notaamaiyaiyum gummila setha unga dhaarala manasa ennanu solluven.. avvvvvvvv :-)) //

அவரை சேர்க்காம எப்படி.. ;-)

//Innum ella baagamum idhey pola asathala ezhudha vaazhthukkal :) //

நன்றிங்க.. :-)

said...

@நாகை சிவா:

//போஸ்ட நல்லா வந்து இருக்கு. என் பங்கை ஆட்டத்துக்கு சேர்த்துக்கிட்டீங்க பாருங்க... உங்களுக்கு ரொம்ப பெரிய மனசுங்க...//

உங்களை சேர்க்காம எப்படி? ;-)

//பங்கு, அங்குட்டு இந்த டக்கீலா ரொம்ப பேமஸ்சாம்... அத்த ஒரு வழி பண்ணுறோம் என்ன?//

நான் உங்களை கூட்டிட்டு போறேன்னா இல்லையான்னு பார்ப்போம்.. ;-)

//குரங்கு சாகசத்தை பார்த்தா உங்களுக்கு ஐடியா வருதா?... ஆகா இது சரி இல்லையே//

குரங்கு சாகசத்தை பார்த்து சங்கம் ஞாபகம் வந்துச்சே! அதுதான் மேட்டர் இங்கே.. :-P

//நம்மள பத்தி ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல... நாம என்ன அம்புட்டு மோசமாகவா போயிட்டோம்.//

உங்களை ரஜினி ரேஞ்சுல வச்சிருக்கேண் பாருங்க.. அதான்.. :-P

//பாண்டி,

எல்லாம் விசாரிச்சுட்டேன், அங்க UKM, UPM னு இருக்க, ஷிப்ட் போட்டு சார்ட் ரெடி பண்ணு, ஆளுக்கு ஒன்னா போயி நின்னுடுவோம்...//

அங்கே நிறையவே இருக்கு.. ஆனா, உங்களுக்குதான் அதெல்லாம் எங்கே இருக்குன்ன்னு தெரியாதே!! :-P

//மலேசியா கூப்பிடுறீங்க சரி, அப்படியே புலி பாலுக்கு ஏற்பாடு பண்ணுங்க.... இரண்டு கிரேடு முதல வாங்கி வைங்க... ஒன்னு எனக்கு, மற்றது என் தோழன் பாண்டிக்கு....//

புலி, பாண்டி மேலே மட்டும் ஏன் இந்த கரிசணம்? :-P

said...

@சந்தோஷ் aka Santhosh:

//அம்முட்டு பெரிய வண்டியில் தலை எங்க போவாரு. ஏர் இந்தியாவுக்கு போட்டியா மலேசியாவுக்கு தல இந்தியா அப்படின்னு புது சர்வீஸ் ஆரம்பிக்கத்தான்.//

:-P ஐடியாவெல்லாம் நல்லாதான் இருக்கு!! ஆனால், தல அங்கே போகலை.. பதில் அடுத்த ஏபிசோட்ல போட்டாசு.. :-)

//பதிவு கலக்கல் பிரண்டு. போட்டி பலமாத்தான் இருக்கும் போல கலக்குங்க.//

நன்றி சந்தோஷ். :-)

said...

@மு.கார்த்திகேயன்:

//வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்!
//

அட்டெண்டண்ஸ் மார்க் பண்ணியாச்சு! வந்த வேலையை கரெக்ட்டா பாருங்க. :-)

//அதென்ன.. குரங்கை பார்த்தவுடன் சங்கத்து நினைப்பு.. இது நல்லா இல்ல மைபிரண்ட்//

என்ன பண்றது? அதுதான் ஞாபகம் வந்தது.. :-P

//அதென்ன.. குரங்கை பார்த்தவுடன் சங்கத்து நினைப்பு.. இது நல்லா இல்ல மைபிரண்ட்//

ஹீஹீஹீ.. நன்றி தல. ;-)

//ஆஹா.. கிடச்ச கேப்ல மனுஷன் பூந்துட்டாரே.. நமக்கு படிக்கட்டுல வர்றதுக்காவது வாய்ப்பு கிடைக்குமா//

அதுக்கென்ன தல.. உங்களுக்கு அடுத்த ட்ரீப்ல ஒரு டிக்கேட் போட்டுடுவோம். :-)

//பட்டையை கிளப்பி இருக்கீங்க மை பிரண்ட்..

வெற்றிபெற வாழ்த்துக்கள்!//

மீண்டும் நன்றி. :-)

said...

வெட்டிப்பயல்:

//தலைவா,
நம்ம இமேஜ் டேமேஜ் ஆனதுல உங்களுக்கு என்ன சந்தோஷம்??? :@//

வெட்டி,

நீங்க கவலைல இருக்கீங்கலா? இல்லை சுமா நெனப்புல இருக்கீங்கலா? :-P

said...

@முத்தமிழ் மன்றம்:

போஸ்ட்டுக்கு ஏற்ற பின்னூட்டங்களாக இல்லையே! நீங்க இந்த பின்னூட்டத்தை ஜில்லென்றூ ஒரு மலேசியா என்று நான் எழுதும் அந்த வலைப்பூவில் இணைத்திருக்கலாம். :-)

படித்தேன். நன்றாகத்தான் இருக்கின்றது.

said...

@மனதின் ஓசை:


//:-) மை ஃபிரண்ட், கலக்குரீங்க.. இந்த பதிவு வவாச போட்டிக்காக எழுதினதா??//

அதே! அதே!

said...

@ambi:

//யப்பா! சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது. சூப்பரா எழுதி இருக்க மா!

:)//

அண்ணா, நீங்களே வாழ்த்திட்டீங்களா? நன்றி நன்றி.. ;-)

said...

@ஜி:

//aaha... neengalum aarambitchiteengala.... kalakunga... asathal postu.... pottiyil vetri pera vaazthukkal :)))//

நன்றி நன்றி ஜி.. :-)

said...

@கோபிநாத்:

//ஆஹா..நீங்களுமா....//

நாமளும் கலந்துதான் பார்க்கலாமேன்னு முயற்சித்ததுதான் கோபி. :-)

//பதிவை படிச்சுட்டு வரேன் ( இப்ப எல்லாம் இப்படி போட்டாதான் ஆட்டத்திலேயே சேர்த்துக்கிறாங்க)//

ஆமா ஆமா.. காலேஜுல அட்டெண்டண்ஸ் போடாம பார் பண்ணிட்டாங்க.. அதான், எல்லாரும் இங்கண வந்து அட்டெண்டண்ஸ் போடூறாங்க. :-)

//மொத்தத்தையும் படிச்சுட்டேன்....கலக்கியிருக்கீங்க....வாழ்த்துக்கள்//

நன்றி

//மீதி எங்க? சீக்கிரம் போடுங்க ;-)))))//

அடுத்த எபிஸொட் போட்டாச்சு.. மத்தது கொஞ்சம் கேப் விட்டுதான். :-)

said...

@இராம்:

//சூப்பரா எழுதிருக்கே'லா :))//

நன்றி ராம்.

//நல்லாயிருக்கு... சங்கப்போட்டி பத்தின அறிவிப்பு பதிவிலே பின்னூட்டம் போட்டாச்சா???//

என்ன ஒரு அக்கறை. இணைச்சாச்சு ராம். :-)

said...

@அய்யனார்:

//echuus me any kummy going here
!!!//

கும்பி இன்னைக்கு இல்லைங்க அய்யனார். ;-)

//ohhh..no....then i go for post
;)//

ஹீஹீ.. ஓகே.. :-)

said...

@சுப.செந்தில்:

/தல தூங்கப் போறாரு correct aa?//

இல்லையே இல்லையே!!! பதில் போட்டச்சு.. அடுத்த பாகத்தை பாருங்க. ;-)

//நல்ல கற்பனை படிச்சிட்டு சிரிக்காம யாரும் போகக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டீங்க போல Nice post :)//

ஹீஹீ.. நன்றி. :-)

said...

@ராஜி :

//Attendance mattum dhaanae...
//

வாங்க ராஜி. :-)

said...

@Arunkumar:

//சேம ரகளை.. சூப்பர் ROTFL போங்க..//

:-)))

//சங்கத்து சிங்கங்கள வச்சி பதிவு போட்டா முன்னுரிமை-னு வேர சொல்லீர்க்காங்க. இப்பவே போட்டில ஜெயிச்சிட்டீங்க My Friend.//

நன்றிங்க அருண். :-)
ஆனால், நிறைய பேர் இன்னும் நல்லா எழுதிருக்காங்க. :-)

//நிஜமாவே மலேசியாக்கு டிக்கெட் போடுங்க எங்க எல்லாருக்கும். நாங்க உங்ககிட்ட ட்ரீட் வாங்க வேண்டாமா...//

டிக்கேட் காசும் நானே போட்டு, ட்ரீட்டும் நானே தரணுமா? அப்போ நான் பேங்க்ராப்ட்தான். :-P

//உங்க பாசத்துக்கு நாட்டாம அடிமை :)//

:-))

//நாட்ஸ், அங்கனயே செட்டில் ஆயிடாதீங்க.. தம்பிங்க நாங்க எல்லாரும் டக்கீலாவுக்கு வெயிட்டிங்கு.//

அதெல்லாம் மறக்காம வாங்கி வந்துடுவார்ன்னு நெனைக்கிறேன். :-)

//இது உங்க 175ஆவது பதிவா?
ங்கொக்கமக்க... அவன் அவன் அம்பதுக்கே அல்லாட்றான் :(//

ஆரம்ப கால போஸ்ட்டு இங்கிலீஷ்ல இருக்கும்.. அதனாலத்தான் 175 வந்துடுச்சு.

//வாழ்த்துக்கள் தோழி !!

போட்டியில் வெற்றி பெற மீண்டும் ஒரு வாழ்த்து :-)//

டபல் வாழ்த்துக்களுக்கு நன்றி :-)

said...

@கண்மணி:

//ஆத்தா மன்னிச்சிடு தாயி ஏதோ வயசான காலத்துல புத்தி கெட்டு போச்சி.இந்த டோண்டு மாமால்லாம் போட்டியில பேர் குடுக்கவும் நானும் குடுத்தேன்.இப்டி பாகம் பாகமா போட்டுத் தாக்குனா நா எங்கிட்டு போவேன்.டாப்பு அம்மிணி.
இளவட்டம்னா இளவட்டம்தேன்.//

யக்கா.. இபப்டி சொல்லி குண்டு போடுறீங்களே! உங்களையெல்லாம் பர்த்துதான் நான் கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிட்டு இருக்கேண்.. இப்படி உசரத்துல எல்லாம் என்னை உட்கர வைக்க கூடாது.. :-P

[நமக்கு சங்கத்தப் பத்தி அதிகம் தெரியாது]

நமக்கும்தான் தெரியாது.. அவங்க போஸ்ட்டை படிச்சு தெரிஞ்சுட்டு எழுதுறதுதான். ;-)

//ஆமா அந்த.. அப்பா எப்டி இதுல?[வயோதிக.வாலிப.சங்கம்???]நான் அப்பீட்டு...//

:-P அவரு வந்துட்டே இருக்கார்.. உங்களுக்கு பதில் போட. ;-)

said...

@Syam:

//175 க்கு வாழ்த்துக்கள்...அருண் சொன்ன மாதிரி நமக்கு எல்லாம் 50 போடுறதுக்குள்ள தாவு தீந்துடுச்சு :-)//

நாட்டமை, நீங்க போட்ட 50மே முத்துங்க..

நான் போட்டதுல எது நல்லா இருக்குன்னு கணக்கு பண்ணா 3 முத்தை தாண்டாது போல.. :-(

said...

@balar:

//ஆரம்ப பாகமே அமர்க்களம்....அசத்திட்டீங்க போங்க...:))//

நன்றி பாலா. :-)