Thursday, November 09, 2006

இளம் நாயர்கள் - ஓர் அலசல்

சினிமாவுக்கு நிறைய பேர் வராங்க.. போராங்க..

இன்னைக்கு நாம் பார்க்க போரது சினிமாவில் இப்போது இருக்கும் இளம் கதாநாயகர்கள்..

இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்களை போல, இன்றைய இளம் நடிகர்கள் நாளைய சினிமாவின் மாஸ்கோட்கள் தானே!!

மொத்தம் 13 பேரை நன்காக இங்கே பிரித்திருக்கிறேன்..
1- பாராட்டுக்கு உரியவர்
2- வளரும் கலைஞர்
3- முயற்சி தேவை
4- தேரவே முடியாது
___________________________________________________________
பாராட்டுக்கு உரியவர்

1- ஜீவா

இப்பொது ஜீவான்னு சொன்னாலே வித்தியாசமான கதை என்று ஒரு நல்ல பெயர் உண்டு. ஆசை ஆசையாய் படத்தில் அறிமுகமாகி வரையிலும் நல்ல கதைகளாய் தேடி தேடி நடித்திருக்கிரார். அமீரின் ராம் ஒரு மைல்கல்லாய் அமைந்தது இவருக்கு. தன் அப்பா ஒரு பெரிய தயாரிப்பாளர் என்ற பந்தா கிடையாது. ஒவ்வொரு படத்துக்கும் கெட்-அப் மாற்றி நடிக்கிறார். அவர் அடுத்த படத்தில்(தமிழ் MA) 3 வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படியே போனால் கூடிய சீக்கிரத்தில் தனக்கென்று ஒரு நிரந்தர இடத்தை பிடித்திடுவார்.

2- சித்தார்த்

5 போய்ஸ்-இல் ஒரு போயாக அறிமுகமான இவர் ஒரு இணை இயக்குனர். தனது இரண்டாவது படத்திலேயே தனது குருவின் படத்தில் மாதவன்-சூர்யா-வோடு நடித்தவர். தெலுங்கில் வாய்ப்பு வர பிரபுதேவா இயக்கத்தில் த்ரிஷாவோடு ஒரு படம் நடித்தார். படம் மெகா ஹிட். தெலுங்கில் இவரது படம் வாய்ப்புக்கள் அதிகரித்தது. அவரது இயக்குனர் ஆசையை விட முடியாமல் தெலுங்கில் இன்னொரு படம் செய்ய அவரே கதை எழுதினார். அவரது நண்பரான, மனிரத்தினத்தின் இன்னொரு இணை இயக்குனரான சிவக்குமாரய் இயக்குனாராக்கினார். சதா சார்மி கூட நடித்த அந்த படமும் ஹிட் ஆனதும், அமீர்கான் தனது ராங் டே பசந்தி ஹிந்தி படத்துக்கு அழைத்தார். அந்த படத்தில் சித்தார்த்தின் நடிப்பாற்றலை பார்த்து அமீர்கானே புகழ்ந்தார். மும்பய் மக்கள் இவரை "தெற்கு இந்திய அமீர்கான்" என்று செல்லமாக அழைக்கின்றனர். இப்போது வெளிவந்து 100 நாட்களையும் தான்டி வெற்றிகரமாக ஓடிக்கொன்டிருக்கிறது பொம்மரில்லு. எல்லா மொழியிலும் நல்ல பெயர் எடுத்திருக்கும் இவர் சீக்கிரமே தமிழில் வந்து சாதிக்க வேண்டும். இவர் சாதிப்பார் என்று எனக்கு பெரிய நம்பிக்கை இருக்கிரறது.

3- ஆர்யா

உள்ளம் கேட்குமே க்ரிக்கெட் வீரர் இமானாக வாழ்ந்து தனக்கென்று தனி ரசிகர் கூட்டத்தை ஏற்படுத்தி கொண்டவர். அறிந்தும் அறியாமலும் படத்தின் குட்டியாக வந்து தனது தனிதிறமையை உணர்த்தியவர். ஒரு ஹீரோவுக்கு தேவையான எல்லாமே இருக்கிறது இவருக்கு. குரலில் கொஞ்சம் மாற்றம் தேவை. விஷ்ணுவர்த்தனின் செல்லமாக இருந்தவர், இப்போது பாலாவின் செல்லமாகிவிட்டார்(நான் கடவுள் படத்தின் ஹீரோ மாற்றப்பட்டுவிட்டார் என்பது புது செய்தி). பல இயக்குனர்கள் ஆர்யா தனது படத்தின் கதாநாயகன் ஆக வேண்டும் என ஆவலாய் இருக்கின்றனர். 7 படங்களில் நடித்த இவர் கைவசம் நிறைய படம் வைத்திருக்கிறார்.

4- பரத்

கதாநாயகன் பேஸ்ட் கதையை விட கதைக்கு முக்கியதுவம் கொடுக்கும் கதைதான் முக்கியம் என்று அறிந்த இளம் நாயகர்களில் ஜீவாவை தவிர்த்து இன்னொருவர் என்றால் பரத்தான் என்று சொல்வது மிகையாகாது. போய்ஸ் தவிர்த்து அவர் நடித்த மற்ற எல்லா படமும் கதைக்கு முக்கியதுவம் கொடுக்கப்பட்டது. அதை சரியாக செய்து தான் ஒரு பாரட்டுக்குரியவர் என்று நிருபித்திருக்கிறார். காதல் முதல் எம்டன் மகன் வரை வெற்றி பெற்றதுக்கு இவரின் முயற்சியும் ஒரு காரணம். இதே வழியின் (தனது தனி வழியில்) இவர் போனால் இவருக்கும் வெற்றி நிச்சயம்.

5- விஷால்

செல்லமேயில் ரீமாவின் செல்லமாக அறிமுகமான இவரும் ஒரு இணை இயக்குனர். எதேச்சய்யாக் நடிகரானவர். தனக்கென்று ஒரு தனி பாணியும் தனக்கேற்ற கதாப்பாத்திரத்தையும் மிக கவனமாக தேர்ந்த்தெடுப்பவர். அதனால், இவர் நடித்த ஒவ்வொரு படமும் வெற்றியை முத்தமிட்டது. தனக்கு ஆக்ஸ்ஷன்தான் ஏற்றது என்று முடிவுபன்னி அதிலே கவனம் ஸெலுத்துகிறார். விஷால், உங்க வெற்றிக்கு பாரட்டுக்கள். ஆனால், குடும்பம், காமெடி என்ற வேறு ட்ராக்கிலும் கவனம் செலுத்துங்கள். அப்போதுதான் என்றும் சினிமாவில் நிழச்சி நிக்கலாம்.

வளரும் கலைஞர்

1- பிரித்திவிராஜ்

கனா கண்டேனில் மிரட்டும் ஆனால் அழகான கனவாக அறிமுகமானவர் இவர். படத்தின் ஹீரோ ஹீரோவினை விட அதிகம் ஜொலித்தவர் இவர்தான். இவர் ஒரு மலையாள உலகின் இறக்குமதி. பாக்யராஜ் தனது மகளய் அறிமுகப்படுத்திய படத்தில் ஒரு ஹீரோவாக் அவதாரம் எடுத்தவர். தனக்கு நடிப்பு, டான்ஸ், காமெடி மற்றும் காதலும் செய்ய தெரியும் என்று நிருபித்தார் பாரிஜாதத்தில். இயக்குனர்கள் பார்வை இவர் மேல் வீச ஆரம்பித்தது. அற்புத தீவு தற்போது அவர் நடித்து வெளிவரபோக இருக்கும் படம். பிரகாஷ்ராஜ் தயாரிப்பில், ஜோதிகவுடன் இணைந்து நடிக்கும் இன்னொரு படம் மொழி. இந்த இரண்டும் வெற்றி பெற்றால், இவரும் மேலே உள்ள பாராட்டுக்குரியவர் லிஸ்டில் சேர்ந்து விடலாம்.

2- பிரசன்னா

சுசிகணேசன் அறிமுகபடுத்தியவர். ஆரம்ப காலத்தில் சினிமா உலகில் ரொம்பவும் கஷ்டப்பட்டவர். 5 ஸ்டார் பிரகு நடித்த மூன்று படங்களும் படு தோல்வி. பிரகாஷ்ராஜ் டூயட் மூவிஸ் மூலமாக நல்ல நடிகர் என்ற வாய்ப்பை பெற உதவினார். அழகிய தீயே படம் நன்றாக ஓடியது. பிரசன்னாவுக்கும் நடிக்க தெறியும் என்று தமிழ் சினிமா புறிந்துகொண்டது. வாய்ப்புக்கள் இவரை தேடி வருகின்றன. அழகிய தீயே, கண்ட நாள் முதல் போன்ற படத்தில் வழங்கிய நடிப்பையும், அதை விட மேலான நடிப்பையும் அவர் வழங்கினால், இவரும் பாரட்டக்கூடியவர் ஆவார்.

முயற்சி தேவை

1- ரவி

நான் ஏன் இவரை இந்த லிஸ்டில் முதல் இடத்தில் எழுதியிருக்கிறேன் என்று நீங்கள் சுலபமாக அறியலாம். ஆம். ரீமேக்.. ரீமேக்.. ரீமேக்.. ரவி = ரீமேக்.
ரவி நடித்த படம் மூன்று அபார வெற்றி பெற்றது. ஜெயம், M குமரன் S/ஓ மஹாலக்ஷ்மி மற்றும் சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும். மூன்றுமே ரீமேக். ரவி தனக்கென்று ஒரு தனி பாணியை வைத்திருக்க வேண்டும். முதல் படத்தில் நிதினையும், இரண்டாவது படத்தில் ரவி தேஜாவையும், மூன்றாவது படத்தில் சித்தார்தையும் காபியடித்திருக்கிறார். ஒரிஜினல் வெர்ஷன் படத்தை பார்க்காதவர்கள், ரவியின் நடிப்பை புகழ்வர். ஆனால், நிதின், ரவிதேஜா, சித்தார்த்தான் அந்த படத்துக்கு மேலும் பொறுந்துவார்கள். ரவி கொஞ்சம் கூட வித்தியாசமான நடிப்பை வழங்கவில்லை. அவர் நடித்த மற்ற படங்கள் (தாஸ், இதயதிருடன்) தோல்வியை தழுவின. இந்த இரண்டு படங்கலும் னேரடி தமிழ் படங்கள். ரவி மற்றவர்களின் நடிப்பை காபியடித்து நடித்தாலும், அவருக்கென்று திறமை இருக்கிறது. இவர் அந்த திறமையை சீக்கிரமே வெளிகொண்டு வரவேண்டும். இல்லையென்றால் இவர் சீக்கிரமே தூக்கியெரியப்படுவார்.

2- தனுஷ்

பரத்தை போலவே இவர் கதைக்கு முக்கியதுவம் கொடுக்கப்படும் படத்தை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும். இவருக்கு ஒரு ஹீரோவுக்கு உள்ள உடல்வாகு இல்லை. துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன் கதைகள் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்ததால், அவை வெற்றி கண்டன. தனுஷ்க்கு திற்மை இருக்கு. ஆனால், தான் ஒரு ஹீரோ என்றும், தான் பத்து தடியர்களை ஒரே நேரத்தில் அடித்து துவைக்க முடியும் என்றும், ஹேய் என்று கத்தினால் மற்றவர்கள் அலறியடிது ஓடுவார்கள் என்று தப்பு கணக்கு போட கூடாது. சரியா? சுள்ளான், புதுகோட்டயிலிருந்து சரவணன் போன்ற படங்கள் தோல்வி கண்டதுக்கு இதுவும் ஒரு காரணம். நல்ல படங்களை தேடி நடித்தால், நல்ல பெயரை நிலை நாட்ட முடியும்.

3- சிலம்பரசன்

சிம்புக்கு திறமையிருக்கு. ஆனால், அதை அழகாக வெளிகாட்ட தெறியவில்லை. நன்றாக கதை எழுதுகிறார். ஆனால், திரைகதை மற்றும் இயக்க தெறியவில்லை. நடிப்பை வெளிகாட்டுவதுக்கு பதிலாய், ஸ்டைல் காட்டுகிறார். ரொம்ப பேசுகிறார். பேச்சை குறைத்து, கையை அடக்கி, இயக்குனர் சொல்லுவதை போல நடித்தால் ஒரு நல்ல நடிகனாய் வரலாம். நல்ல இயக்குனரிடம் இருந்து இன்னும் கொஞ்சம் கற்றுக்கொண்டு பிறகு படம் இயக்குவது நலம். சினிமா உலகில் நல்ல பெயர் எடுப்பது அதை விட முக்கியம் சிம்பு.

தேரவே முடியாது

இது லாஸ்ட் லிஸ்ட்.. இந்த பகுதியில் இருப்பவர்கள்.. வேஸ்ட். தயாரிப்பாளருக்கு ந்ஷ்டம் தந்து, இயக்குனருக்கு கஷ்டம் தந்து, ரசிகர்களை அழ வைப்பவர்கள்.

1- ரவி கிருஷ்ணா

இந்த பிரிவின் லிஸ்டில் முந்தி கொண்டு நிப்பவர் சாட்சாட் ரவியேதான். தயாரிப்பளருக்கு நஷ்டம், இயக்குனருக்கு கஷ்டம், ரசிகர்களுக்கு டென்ஷியன் தவிர்த்து வேரெதுவும் தருவதில்லை. அவர் முக பாவனை, நடிப்பு திரண், நடனமாடும் அழகு, குரல்... எதுவுமே சகிக்க முடியவில்லை.. அய்யோ அய்யோ!!! கேப்ட்டன் தொல்லை தாங்க முடியாமல், எப்போ சினிமாவில் இருந்து விலகுவார் என்று எதிர்பார்த்து காத்திருந்தால், இன்னொரு ஜுனியர் விஜயகாந்த் உருவாகிக்கொண்டே இருக்கிறார். ரவி, அப்பா தயரிப்பாளர் அண்ணா இயக்குனராமே? நீங்கள்நடிப்பை விட்டுவிட்டு வேரேதாவது ஒரு தொழிலய் இப்போது இருந்து தேடுவது நல்லது.

2- ரமேஷ்

இன்னொருவர் ரமேஷ். தம்பி ஜீவா முன்னனையில் இருக்கும் இந்த நேரத்தில் தம்பி பெயரை கெடுப்பதுக்கென்று வந்திருக்கும் அண்ணன். நீங்களே பாருங்கள் பக்கத்தில் உள்ள புகைபடத்தில். யாரிடமாவது இவர் படத்தின் ஹீரோ என்று சொன்னால் நம்புவார்களா? முகத்தில் கொஞ்சம் பொலிவு வேண்டும். தாடியய் வெட்டி முகத்தை க்லீனாக வைத்துக்கொண்டாலாவது பரவாயில்லை. இவருடைய குரலும் இவருக்கு பொருதமாகவே இல்லை. இவர் பின்னனி குரல் கொடுக்க யாரையாவது தேடுவது சாலச்சிறந்தது. இவர் நடித்து பொறுந்திய ஒரே படம் ஜித்தன். நடிப்பிலும் கடினமான உழப்பு தேவை. நடனம் தெறிந்தால் மட்டுமே பத்தாது. இல்லை, வேற வேலை தேடுவது மிகமிக ந்ல்லது.

3- சிபிராஜ்

அப்பா சத்யராஜ் மகன் நாடே போற்றும் கலைஞனாக வரவேண்டும் என்று புகழ்ய்பெற்ற ஒருவரின் பெயரை (சிபி) வைத்தார். ஆனால், மகனுக்கு கிடைத்த போபுலாரிட்டிக்கு சொந்தகாரர் சிபி இல்லை.. அப்பா சத்யராஜ்தான். அவர் தனியாக நடிக்கும் அனைத்து படங்களும் தோல்வி கண்டன. அப்பா கூட நடித்த படம் வெற்றி கண்டன. இதற்கு காரணம் அப்பாவின் நடிப்பும், லொல்லும், ஜொல்லும்தானே தவிர மகனுக்கு 1% கூட சேராது. அப்பாவை போலவே காமெடியும், லொல்லும், ஜொல்லும் பண்ணினாலும் அதை மக்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். கடைசியில் அப்பாவே தன் மகனை வைத்து ஒரு படம் தயாரிக்கிரார். இந்த படமும் ஊத்திக்கொண்டால், மகன் அப்பாவின் பணத்தை வைத்து வேரொரு தொழிலை தொடங்குவது நல்லது.
_____________________________________________________________
என்னடா இன்று நான் ரொம்ப எழுதியிருக்கேன் என்று பார்க்கிறீர்களா? ஒன்றும் இல்லை. இன்று 1ப்ம் வரையிலும் வேலை இல்லமால் இருந்ததால், ஏதாவது கொஞ்சம் நீட்டா எழுதுனும்னு எழுதினேன். :-)

20 Comments:

Anonymous said...

Nice comments, neeeeeeta irunthallum neat a irukku , continue ;)

said...

Thanks for your comment.. neengga elllam support panneengganna, naan innum konjam kooda neeeeddddaaaa eluthuren. anyway, Haniff from France? pm me. we can get to know each other.

said...

வாவ்..ரொம்ப நல்ல அலசல் மை ஃப்ரண்ட்.. தேரவே முடியாது லிஸ்ட் பாத்து எனக்கு சிரிப்பு தன் வந்தது.. ஆனா லீ-ன்னு ஒரு படம் பண்றார் சிபிராஜ். அதுல தேறுவார்னு பாக்குறேன்.. இல்லைனா கஸ்டம்..

சிம்பு கொஞ்சம் அடக்கி வாசிக்கணும்..இல்லைனா சீக்கிரம் காணாமல் போயிடுவார் மை ஃப்ரண்ட்..

இப்படியே பட்டைய கிளப்புங்க..

said...

Karthikeyan Muthurajan said...
வாவ்..ரொம்ப நல்ல அலசல் மை ஃப்ரண்ட்.. தேரவே முடியாது லிஸ்ட் பாத்து எனக்கு சிரிப்பு தன் வந்தது.. ஆனா லீ-ன்னு ஒரு படம் பண்றார் சிபிராஜ். அதுல தேறுவார்னு பாக்குறேன்.. இல்லைனா கஸ்டம்..

சிம்பு கொஞ்சம் அடக்கி வாசிக்கணும்..இல்லைனா சீக்கிரம் காணாமல் போயிடுவார் மை ஃப்ரண்ட்..

இப்படியே பட்டைய கிளப்புங்க..


குருவே பாராட்டியாச்சு. ஹீ ஹீ ஹீ..

அப்பா மகனுக்காற்றும் உதவியில் லீ-தான் கடைசியாய் இருக்கனும். சிபி இந்த படத்துக்காக முயற்சி எடுப்பது தெறியுது. வெற்றி அடைந்தால் வாழ்த்துக்கள். இல்லை மூட்டையை கட்டிக்கிட்டு கிளம்பவேண்டியதுதான்..

பட்டையை கிளப்புனுமா? உங்களைபோல நான் தினமும் பேசுறதுக்கு தலைப்பு கிடைக்க மாட்டேங்குது. அதுக்கு நீங்கதான் ஒரு வழி சொல்லனும்..

Anonymous said...

தலைப்பைப்பார்த்ததுமே நான் ஏதோ நீங்கள் "நாயர்" களைப்பற்றி எழுதப்போவதாக நினைத்தேன்.
நல்ல அலசல்.

said...

@mallu-nair:

//தலைப்பைப்பார்த்ததுமே நான் ஏதோ நீங்கள் "நாயர்" களைப்பற்றி எழுதப்போவதாக நினைத்தேன். //

சாரிங்க.. "க" மிஸ்ஸாயிடுச்சு! இப்போது சரி செய்தாச்சு.. ;) என்னுடைய பழைய இடுகைகளையெல்லாம் அலசியிருக்கீங்க.. நன்றி.. ;-)

said...

வருசா வருசம் இதே மாதிரி ஒரு லிஸ்ட் போடுங்க, நல்லா இருக்கும்.

சித்தார்த் மட்டும் ஸ்பெஷல் கோட்டாவுல உள்ள வந்துட்டார்னு நினைக்கிறேன் . . . . . :-)))))

Anonymous said...

உங்க வலைப்பக்கம் வந்து நாள்கள் பல ஆகிவிட்டது.........

அலசல் சிம்ம கலக்கள்......

சித்தார்த்.....????ரொம்ப இடம் கொடுத்து தூக்கி விட பார்ப்பது போல் தெரிகிறது........

சித்தார்த்............புது முகம் மட்டுமே தமிழில்.....

2 படம் பத்தாது..............


DR.Sintok

said...

மை ஃபிரெண்ட்:

அது!!!

என்னோட ஜொ.. சாரி! கருத்துகளையும் சொல்றேன்.

1. ஜீவா: நீங்க சொல்லியிருக்கிறமாதிரி பாராட்டுக்குரியவர்தான். ராம் படத்தில்தான் இவரைப் பார்த்தேன். அதில பிடிச்சுப்போய், நண்பர்களை உண்டு இல்லைன்னு ஆக்கி இன்னொரு படம் தேடிப்பிடிச்சுப் பாத்து வெறுத்துப்போயிட்டேன். மோகன்லாலோட ஒரு படம் நடிச்சாரே அதைத்தான் சொல்றேன். ஆனாலும் இன்னமும் நம்பிக்கையிருக்கு.

2. சித்தார்த்: எங்க ஏரியா உள்ள வராதேன்னு நீங்க மிரட்டுறது கேக்கிறதால ஒரேயொரு வார்த்தை. பார்த்தது தமிழ்ல வந்த ரெண்டு படம். ஹிந்தில வந்த படம் வாய்ப்புக்கிடைச்சா பார்க்கணும்னு இருக்கேன். பொம்மரில்லு இங்கே பார்க்க வாய்ப்பில்ல. மத்தபடிக்கு நீங்க சொன்ன சரியாத்தான் இருக்கும். ;)

3. ஆர்யா: இந்த இடுகைக்குப் பின்னூட்டம் போடுறேன்னு கிளம்பினதுக்கே காரணம். ஹிஹி. நல்லா பண்ணுவார்னு ஒரு நம்பிக்கை இருக்கு. குரல் கொஞ்சம் மென்மையா இருக்கிறது கஷ்டந்தான். ஆனா, அதையொண்ணும் பண்ண முடியாதில்ல. ஆர்யா படம் வெளிவர்ரப்ப எங்கூர்ல ஒரே வெள்ளக்காடாயிருக்கு யாராவது முறைப்பாடு செஞ்சா கண்டுக்காதீங்க. :) [பி.கு.: ஆர்யா படிச்சது நான் படிச்ச பள்ளிக்கூடத்தில. என் தங்கைக்கும் ஜூனியர் என்பதையெல்லாம் மறந்துடணும். ;) ]

4. பரத்: இளம் நாயகர்களிலேயே நம்பிக்கை கொடுப்பவர் இவர். முதல் படத்தில் பெரிதாக கவனத்தை ஈர்க்காவிட்டாலும் அடுத்தடுத்து வந்த ப்டங்களில் கதையை நம்பி இறங்கிய ஆள். காதல் படம் ரொம்ப பிடிச்சது. அதே மாதிரி 'அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது'வும் பிடிச்சது. எம்டன் மகன் பார்க்கல. வெய்யில் பிடிச்சது.

5. வி்ஷால்: மீரா ஜாஸ்மினோடு நடிச்ச படம் அங்கங்க பார்த்தேன். நல்ல கதைகள் தேர்ந்தெடுத்தால் வரலாம். விஜயெல்லாம் பார்க்கிறதுக்கு வி்ஷாலை உக்கார்ந்து பாப்பேன். ;)

6. பிரித்விராஜ்: ஆர்யாவுக்கு அடுத்தபடியா எங்கூர்ல வெள்ளப்பெருக்கு ஏற்பட வைக்கிற ஆளு. ;) மொழில பிடிச்சிருந்தது. கனா கண்டேன் பாக்கணும்.

7. பிரசன்னா: 5 ஸ்டார் படம் வந்த காலத்தில இருந்து பிடிக்கும். அதுக்கப்புறம் ஆளக்காணாததில வருத்தம். அழகிய தீயேல பிடிச்சிருந்தது. அதே மாதிரி கண்டநாள் முதலும் நைஸ்.

8. ஜெயம் ரவி: என்னோட கசின் பொண்ணு இவனோட பெரிய விசிறி. அவளுக்காக, ஜெயம் ரவியோட ஒவ்வொரு படத்தையும் வாங்கிக் கொடுத்திருக்கேன். ஆனா, எனக்குப் பிடிச்சது அசின்+ நதியாவோட நடிச்ச படந்தான். மத்ததெல்லாம் பாதியிலேயே தூங்கிட்டேன். ஹிஹி.

9. தனுஷ்: காதல் கொண்டேன் பிடிச்சிருந்தது. புதுக்கோட்டை ஓக்கே. மத்ததெதுவும் பார்க்காம தப்பிட்டேன்.

10. சிம்பு: பெயரைத் தட்டச்சாம தாண்டிக் குதிக்கலாமான்னு யோசிச்சேன். காரசாரமா திட்டத்தான் வருது. திட்ட ஆரம்பிச்சா, சிவாஜி த பாஸ் குஞ்சுகுருமான்ல தொடங்கி லூசுப்பய விஜய் வரைக்கும் சண்டைக்கு வரலாம். ஆனா, பொம்பளைங்கள இவங்க படத்தில எப்படிக் காமிக்கிறாங்கன்னு பேசலாம். பேசலாம். பேசிக்கொண்டே போகலாம். பட் வேஸ்ட் ஆஃப் டைம்.

தேறமுடியாது கேஸுங்க நடிச்ச எதையுமே பார்க்கல. அப்பாடி! :)

(என்னடா இடுகையை விட நீளமான பின்னூட்டம்னு பார்க்கிறீங்களா? வெட்டி ஆபீசர் வேலை பண்ணிட்டிருந்தனா. அதான். இன்னொண்ணு, நம்ம வலைப்பதிவில நடிகர்களைப்பத்தி யாருமே கமெண்டு பண்ணுறதில்லையா. நீங்க கம்பனி குடுத்தோடன இதான் சாக்குன்னு என்னோட ஜொள்ளு மழைய ஆரம்பிச்சுட்டேன். ;) நன்றி மை ஃபிரெண்ட்.

-மதி

said...

My Friend: for somereason google reader is displaying this post. vetti officer'a vEra irunthaena, athaan koncham over jollu vittutten. kandukkaatheenga. ;)

-mathy

said...

சரியான ஜொள்ளுப்பதிவு..
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

said...

மதி கந்தசாமி (Mathy):

ஆஹா.. என் பழைய பதிவுகளையும் படித்து, அதுக்கும் இவ்வளவு பெரிய பின்னூட்டம் போட்டதுக்கு முதல்ல என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். :-)

மதி, நீங்க சொன்னது முற்றிலும் உண்மை.. இவர்கள் படங்களை பார்க்கும் போது எனக்கு தோன்றிய கருத்துக்களை categorize பண்ணும்போது இதுதான் தெரிந்தது. :-)

said...

@மதி கந்தசாமி (Mathy) said...

//My Friend: for somereason google reader is displaying this post. vetti officer'a vEra irunthaena, athaan koncham over jollu vittutten. kandukkaatheenga. ;)

-mathy //

இல்லைங்க. நாம விடுறது ஜொல்லே இல்ல.. இந்த பையனுங்க விடுரதை விடவா.. ஹீஹீ..

said...

@ILA(a)இளா:

//
சரியான ஜொள்ளுப்பதிவு..
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் //

வேற பதிவை படிச்சுட்டு கமேண்ட் போட இங்க வந்திட்டீங்களோ விவா? இது எவ்வளவு கஷ்டப்பட்டு யோசிச்சு எழுதுண பதிவு! ஹீஹீஹீ..

said...

என்ன ஆச்சர்யம்!! பாசகா அட்டகாசமான போஸ்ட்

தேறவே முடியாது லிஸ்ட் தூள்!!

said...

தங்கச்சி! இதுல எல்லாருமே மலையாளியா? தலைப்புல இளம் நாயர்கள் ன்னு போட்டிருக்கே...அதான் கேட்டேன்:-)))

said...

ஐயோ...எனக்கு ரொம்ப ஆசை எல்லாம் இல்லை! வளரும் நாயகர்கள் என்னோட பேரு மிஸ்ஸிங்!!...அதான்..

said...

"ரவி கிருஷ்னா" ஹேரே கிருஷ்னா இந்த பையன பார்க்கும்
பொழுது எல்லாம் லொள்ளு சபா சந்தானம் நினைவுக்கு
வருகிறார்..

ராதா மோகன் அன்புடன் பேட்டியில் கூட புரொடீயுசர் பையன்
என்ற ஒரே காரணத்துக்காக சிலர் நடிக்க வருகிறார்கள் அவர்களை
நடிக்க வைக்க படுகிற பாடு எங்களுக்குதான் தெரியும் என்றார்.

அது சரி எங்க என் பேர முதல்ல போட்டு இருப்பீங்கன்னு பார்த்தா
என்ன இந்த ஆட்டத்துல சேர்த்துக்கவே இல்ல...

ம்ம்ம்...நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு புரியுது.

Anonymous said...

இந்த உலகத்துல சித்தார்த்துக்கு ரசிகைன்னு ஒருத்தர் இருந்தா அது நீங்க மட்டும்தான்...

வேற யாராவது இருக்கீங்களா என்ன????

said...

//இந்த உலகத்துல சித்தார்த்துக்கு ரசிகைன்னு ஒருத்தர் இருந்தா அது நீங்க மட்டும்தான்...

வேற யாராவது இருக்கீங்களா என்ன????//

இரண்டாவது ரசிகை நான்! அழகை ரசிக்க பழகுங்கய்யா!!