Sunday, January 15, 2017

கம்போடியா 3: பந்தே ஸ்ரே (Banteay Srei)

பந்தே ஸ்ரே (Banteay Srei) முதலில் அழைக்கப்பட்டது த்ரீபுவணமஹேஸ்வரா. இதை “பெண்களின் கோட்டை” அல்லது “அழகிய கோட்டை” என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோவிலின் சிற்பங்கள் மிகவும் மென்மையானதக இருப்பதால் இது ஒரு பெண்ணின் கைகளால்தான் செதுக்கப்படமுடியும் என்பது யூகம். கோவிலின் சிறபங்கள் அனைத்தும் இந்து மத கதைகளின் காட்சிகளால் சித்தரிக்கின்றன.

967-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட Banteay Srei ராஜாவுக்காக கட்டப்படாத ஒரே பெரிய கோவில் என்ற பெயரும் உண்டு. அரசர் ராஜேன்ரவர்மனின் மந்திரி யஜ்னவஹாராவால் கட்டப்பட்டது. சிவனுக்காக கட்டப்பட்ட இந்த கோவிலின் வடக்கு பகுதியில் விஷ்ணுவுக்கான கோபுரம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் கட்டுமானம் தொன்மையான மற்றும் புதுமையான ஒரு கலவையாக உள்ளது. பெரும்பாலும் இது சிவப்பு மணற்கல்லால் கட்டப்பட்டுள்ளது. உறை சுவர்களில் மட்டும் செங்கல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிவப்பு நிற மணற்கல் இந்த கோவிலுக்கு “பிங்க்” கோவில் என்ற பெயரும் கொடுக்கிறது.

Banteay Srei பார்க்க சிறந்த நேரம் அதிகாலை அல்லது மாலை வேளை. இதன் அமைப்பில் நிழல் விழ வாய்ப்புகள் குறைவு என்பதால், சூரியன் வெப்பத்தில் ஒதுங்க இடம் குறைவு. புகைப்படங்கள் அழகாக இருக்கும். மறக்காமல் உங்கள் கேமராவை எடுத்து செல்லுங்கள்.

இங்கேயும் நீங்கள் நுழைவு சீட்டு வாங்க தேவையில்லை. அங்கோர் நுழைவு சீட்டையே பயன்படுத்தலாம். ஒரு நாள் நுழைவு $20. மூன்று நாள் நுழைவு $40. நீங்கள் இந்த சீட்டை அனைத்து சியம் ரேப் கோவில்களிலும் பயன்படுத்தலாம்.

அங்கோர் வாட்டிலிருந்து இந்த இடம் 20கி.மீ மட்டுமே. கம்போடிய கண்ணிவெடி அருங்காட்சியகம் பக்கத்தில்தான் இருக்கிறது.

கம்போடியா 2: கேபால் ஸ்பியன் (Kbal Spean)




தளம் 2: கேபால் ஸ்பியன் (Kbal Spean)

Kbal Spean ஒரு வியக்கத்தகும் விதமாக செதுப்பட்ட ஆற்றங்கரை. பொதுவாக “1000 லிங்கங்களின் நதி” என ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுகிறது. ஆற்றங்கரையில் லிங்கங்களும், இந்து மத செய்வங்களும் விரிவாக செதுக்கப்பட்டுள்ளன. இந்த இடம் 1969-இல் ஜீன் போல்பெட் (Jean Boulbet) -க்கு ஒரு துறவி மூலம் அறியப்பட்டது.

இத்தளத்துக்கு நீங்கள் செல்ல விரும்பினால் நல்ல காலணிகளை அணைந்து கொள்வது சிறப்பு. சுவாரஸ்யமான் பாறாங்கல் மற்றும் இயற்கை அழகு நிறந்த காட்டில் 1.5கி.மீ மேல்நோக்கி நடக்க வேண்டும். போதுமான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள். இந்த பாதை இறுதியில் இரண்டாக பிரியும்; ஒன்று நீர்வீழ்ச்சி; இன்னொன்று ஆற்றின் சிற்பங்கள். ஆற்றின் மேற்பிரிவில் விஷ்ணு; அதை தொடர்ந்து அவருடைய கதைகள் செதுக்கப்பட்டிருக்கும். அதில் சில கவலைக்கிடமாக அழிந்துள்ளன. இப்போது இந்த இடமும் இந்த செதுக்கலும் பராமரிக்கப்படுகின்றன.

இதனை தொடர்ந்து நகரும் ஆற்றின் வழி நெடுக விஷ்ணு, சிவன் மற்றும் அவரின் துணைவி பார்வதி மற்றும் வித விதமான லிங்கங்களின் அமைப்பு ஆற்றங்கரையோரம் தோன்றுகின்றன. இது நமக்கு ஒரு தேடல் உணர்வை கொடுத்து ஒவ்வொன்றையும் தேட வைக்கிறது. ஒரு ஆயிரம் லிங்கங்களை பற்பல வடிவங்களில் காணலாம். சிவன் அர்த்தநாரீஸ்வர் உருவில் லிங்கத்தில் காட்சியளிக்கிறார் என்று அங்கே இருந்த கம்போடிய பெண்மணி தெரிவித்தார். நீர்வீழ்ச்சியின் மேல் பல மிருகங்களின்  (மாடு, தவளை) வடிவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. அதன் காரணம் நான் அறியேன்.

இதன் கீழே ஒரு மர படிக்கட்டு நீர்வீழ்ச்சிக்கு போக வழியமைத்து கொடுத்தது. இது 1000 லிங்கங்களை கடந்த நீர் என்பதால் இது புனித நீர் என்றும், இதை குடிக்கவும் குளிக்கவும் பயன்படுத்துவது நன்று என்று தெரிவிக்கப்பட்டது. 

இந்த இயற்கை அழகை ரசிக்க  3 மணிநேரம் பொதுமானது. சியம் ரேப்-பில் இருந்து 50கி.மீ வடக்கிழக்கில் / Banteay Sreri-இல் இருந்து 18 கி.மீ; அல்லது 2 மணி நேரம் துக் துக்கில் சவாரி போதுமானது. அங்கோர் நுழைசீட்டு இங்கே பயன்படுத்திகொள்ளலாம். தனியாக நுழைசீட்டு வாங்க அவசியம் இல்லை. மேலே ஏதும் கடைகள் இருக்காது. நுழைவாயில் அருகே உள்ள கடையில் உங்கள் மதிய உணவை உட்கொள்ளவும். 3.30pmக்கு மேல் இங்கே செல்ல முடியாது. துக்துக் வாடகைக்கு எடுத்தால் கண்ணிவெடி அருங்காட்சியகம், Kbal Spean & Banteay Srei சேர்த்து $25-30 தேவைப்படும்.

கம்போடியா 1: கம்போடிய கண்ணிவெடி அருங்காட்சியகம்

4 வருடத்துக்கு பிறகு எழுத்து துறையில் மீண்டும் அடியெடுத்து வைக்கிறேன்.
எல்லா புகழும் நான் கடந்த ஒரு வாரமாக சுற்றி வந்த அந்த கம்போடிய நாட்டுக்கே உறித்தாகுக. ஆம், வருடத்துக்கு 7-10 நாடுகள் சுற்றும் என்னை பலர் “Travel Blog” எழுத சொல்லி நச்சரித்தாலும் எனக்கு எழுதவேண்டும் என தோன்றியதில்லை. இன்று எனக்கே எழுத வேண்டும் என தோன்றுவதுக்கு கம்போடிய எனக்குள் ஏற்ப்படுத்திய தாக்கமேதான் காரணம்..

வல வல கொல கொலன்னு எழுதாமல், நீங்கள் பார்க்க வேண்டிய இடம் என்ன, எங்கே இருக்கிறது, ஏன் பார்க்க வேண்டும், தளம் வரலாறு என்ன என்பதை பார்ப்போம்.

தளம் 1: கம்போடிய கண்ணிவெடி அருங்காட்சியகம் (Cambodian Land Mine Museum)

ஒரு குழந்தைக்கு அழிவை ஏற்ப்படுத்தும் வழிமுறையை சொல்லிக்கொடுக்கபட்டால், அதை சரிசெய்யும் பொறுப்பு ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டும். கேமர் ரூஜ் எப்படி கண்ணிவெடிகள் அமைக்கவேண்டும் என்று கற்ற்கொடுத்தபோது அகி-ரா வுக்கு வயது வெறும் 10. ஒரு சில வருடங்கள் கழித்து வியட்னாம் ராணுவமும் அவரை கம்போடியா-தாய்லாந்து எல்லையில் (மிக பயங்கர எல்லைகளில் ஒன்று) காவலுக்கு வைத்தது.

இதன் விளைவாக 40,000க்கும் மேறப்பட்ட கம்போடிய குடிமக்கள் கண்ணிவெடிகளால் உடல் உறுப்புகளை இழந்தனர். 2012-இல் இன்னமும் வெடிக்காத கண்ணிவெடிகள் 4-6 மில்லியன் இன்னும் இருப்பதாக கணக்கிடப்பட்டது. இது யுத்ததில் வெடிக்காத எச்சங்கள்!!

அகி-ரா
1992-இல் அகி-ரா தனியாக 50,000 கண்ணிவெடிகளை கண்டுபிடித்து நிலைப்படுத்தினார். அதை ஒரு அருங்காடியமாக வடிவமைத்து இதில் வரும் லாபத்தை கண்ணிவெடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்துக்கும் சேர வைத்துள்ளார். இங்கே வெடிகுண்டுகள், துப்பாக்கிகள், பீரங்கிகள் மற்றும் ஆயுதங்கள் பார்வையாளர்கள் பார்க்கும்படி வைப்பட்டள்ளது. 

இந்த கண்ணிவெடி அருங்காட்சியகத்தை 3 காரணங்களுக்காக உள்ளது:
1- அகி-ரா வின் கதை சொல்ல
2- உலகுக்கு கண்ணிவெடிகளின் பயங்கரத்தை விளக்க. போர் என்பது பிரச்சனையின் அரை முடிவுதான். போரின் பின்விளைவு பல வருடத்துக்கு பின் தொடரும்.
3- அருங்காட்சியகத்தில் வாழும் பிள்ளைகளை வளர்க்க

அருங்காட்சியகம்
நுழைவு கட்டணம் $5. நீங்கள் Banteay Srei, Kbal Spean போகும் வழியில் இந்த அருங்காட்சியகத்தை ட்சியபார்வையிடலாம். சியம் ரேப்-இல் இருந்து 30km வடக்கிழக்கில் உள்ளது. குரல் வழிக்காட்டி இலவசமாக கொடுக்கப்படுகிறது. 

திறப்பு நேரம்: 9.00am - 3.00pm